உலகின் ஒவ்வொரு மூலைக்கும் ஒரு துல்லியமான முச்சொல் விலாசம்
-
0:01 - 0:03ஐநாவை பொருத்த வரை,
-
0:03 - 0:06விலாசமின்றி கோடிக்கணக்கானவர்கள்
இன்னும் வாழ்கின்றனர். -
0:07 - 0:09பொருளாதார வல்லுனர் ஹெர்னாண்டோ
தே ஸோட்டோ -
0:09 - 0:11"விலாசமில்லாதவர்கள்
-
0:11 - 0:13சட்டத்திற்கு வெளியில் வாழ்பவர்கள்.
-
0:13 - 0:14அவர்கள் இல்லாதது போன்றே" என்றார்.
-
0:16 - 0:19நானும் எனது குழுவினரும் இக்கருத்தை
மாற்ற எப்படி முயலுகின்றோம் என கூற வந்துள்ளேன். -
0:20 - 0:23ஒரு இணைய வரைப்படத்தில், பிரேஸிலில் உள்ள
ஒரு குடிசை, அல்லது -
0:23 - 0:25தென்னாபிரிக்காவில் உள்ள ஒரு குடியிருப்பை
தேடினால், -
0:25 - 0:28அதிக அளவு வெட்டவெளியின் மத்தியில்
ஒருசில சாலைகள் மட்டும் தான் காண இயலும். -
0:29 - 0:31ஆனால் துணைக்கோள் காட்சிக்கு
மாறினால், -
0:31 - 0:34இந்த பெரிய, விலாசங்களில்லா
இடத்தில் -
0:34 - 0:37ஆயிரக்கணக்கன மக்கள், வீடுகள், மற்றும்
நிறுவனங்கள் இருக்கின்றன என தெரியவரும். -
0:38 - 0:39கானா நாட்டின் தலைநகர அக்ராவில்,
-
0:39 - 0:44முன்மாதிரியான விலாச அமைப்புகளைத் தொடங்கி,
முழுமையாக முடிக்காமல் விட்ட இடங்களில் -
0:44 - 0:47சுவர்களின் ஓரங்களில் எண்களும் எழுத்துக்களும்
கிறுக்கப்பட்டிருக்கின்றன. -
0:48 - 0:51ஆனால், இந்த விலாசமில்லா இடங்களுக்கு
-
0:51 - 0:53மிக அதிக அளவில் பொருளாதார வளர்ச்சி வாய்ப்பு
உள்ளது. -
0:55 - 0:58விலாசம் பற்றிய பிரச்சினையை
நான் தேர்ந்தெடுத்ததன் காரணம், -
0:58 - 1:01நான் 10 ஆண்டுகள் இசைத் துறையில்
இருந்தேன். -
1:01 - 1:03இசையுலகத்தில் நீங்கள் அறியாத
ஒன்று என்னவென்றால், -
1:03 - 1:06தினந்தோறும், விலாசம் குறிப்பிடும் பிரச்சினையினால்
பலர் துன்பப்படுகின்றனர். -
1:06 - 1:09கச்சேரி வாய்ப்புகளை கண்டறியும்
இசைக்கலைஞர்களில் இருந்து -
1:09 - 1:12இசைக்கருவிகளைக் கொண்டு வரும்
தயாரிப்பு நிறுவனங்கள் வரை, -
1:12 - 1:14அனைவரும் தொலைந்துப் போவார்கள்.
-
1:14 - 1:16சேர்துவிட்டீர்கள் என நினைத்து, சேரவில்லை
-
1:16 - 1:19என கண்டறியும் போது அழைக்கும் நபரையும்
எங்களது -
1:19 - 1:20அட்டவணைகளில் சேர்க்க அவசியம் இருந்தது.
-
1:20 - 1:22சில கடுமையான நாட்களும் அனுபவித்திருந்தோம்.
-
1:23 - 1:26உதாரணத்திற்கு, இத்தாலியில் அனைத்து கருவிகளையும்
ரோமிற்கு ஒரு மணிநேரம் தெற்கில் இறக்காமல் -
1:26 - 1:28ஒரு மணிநேரம் வடக்கில்
இறக்கி வைத்திருந்தனர். -
1:28 - 1:30அதைவிட கடுமையானது
-
1:30 - 1:32ஒரு இசைப்பலகை வாசிப்பவர் என்னை
அழைத்து -
1:32 - 1:35"கிறிஸ், பதட்டப்பட வேண்டாம், ஆனால்
தவறான கல்யாணத்திற்கு -
1:35 - 1:36வந்துள்ளோம் என நினைக்கிறேன்" என்றார்.
-
1:36 - 1:38(சிரிப்பொலி)
-
1:38 - 1:40இத்தலைவிதியுடனானச் சம்பவத்திற்கு துளிநேரம்
பிறகு, -
1:40 - 1:43கணிதனாக பணியாற்றுகின்ற எனது
நண்பனுடன் -
1:43 - 1:44உரையாடும் பொழுது,
-
1:44 - 1:47இச்சிக்கலை எங்களால் தீர்க்க இயலும்
என நினைத்தோம். -
1:47 - 1:49பழைய அமைப்பைப் போல் அல்லாத
ஒரு புதிய அமைப்பை -
1:49 - 1:51உருவாக்க முடியும் என நினைத்தோம்.
-
1:52 - 1:54விலாசங்கள் தவறானவை
என ஒப்புக்கொண்டோம். -
1:54 - 1:56மிக துல்லியமான
ஒரு அமைப்பை தேடினோம் -
1:57 - 1:59அட்சரேகை, தீர்க்கரேகை,
நிலைப்படுத்தல் ஆள்கூறுகள் -
1:59 - 2:00மிக சிக்கலானவை
என அறிந்தோம். -
2:01 - 2:04ஆகவே, உலகத்தை
மும்மீட்டர் சதுரங்களாய் பிரித்தோம். -
2:05 - 2:0957 இலட்சம் கோடி மும்மீட்டர் அளவுகளில்
உலகம் பொருந்துகிறது. -
2:09 - 2:11மூன்று அகராதிச் சொற்களை
இணைத்தாலே -
2:11 - 2:13போதுமான தாக இருந்தது
-
2:13 - 2:16உலகின் ஒவ்வொரு மும்மீட்டர் சதுரங்களுக்கும்
தனித்தன்மையான முறையில் -
2:16 - 2:18பெயரிட இயலும்.
-
2:19 - 2:2040,000 சொற்களை பயன்படுத்தினோம்.
-
2:20 - 2:22இந்த 40,000 என்பதை மூன்றால் அடுக்கேற்றினால்,
-
2:22 - 2:2564 இலட்சம் கோடி
இணை முச்சொற்கள் கிடைக்கும் -
2:25 - 2:2957 இலட்சம் கோடி மும்மீட்டர்
சதுரங்களுக்கு -
2:29 - 2:30இதுவே போதுமானவை.
-
2:31 - 2:33அதனால், அதையே தான் நாம் செய்தோம்.
-
2:33 - 2:36உலகை மும்மீட்டர் சதுரங்களாய் பிரித்து,
-
2:36 - 2:39முச்சொல் விலாசம் என நாம் அழைக்கின்ற
முச்சொல் அடையாளத்தை -
2:39 - 2:41ஒவ்வொரு சதுரங்கத்திற்கும் அளித்தோம்.
-
2:41 - 2:44உதாரணத்திற்கு, இந்த இடத்தில்
-
2:44 - 2:47நான் 'கடுகு.தள்ளுபடிச்சீட்டு.குண்டூசி'
என்ற இடத்தில் நிற்கின்றேன். -
2:47 - 2:48(சிரிப்பொலி)
-
2:48 - 2:50ஆனால், இந்த இடத்தில்...
-
2:51 - 2:54நான் 'கிள்ளியது.ஒருமை.பயிற்சி" என்ற
இடத்தில் நிற்கின்றேன். -
2:57 - 2:59இதை ஆங்கிலத்தில் மட்டும் செய்யவில்லை.
-
2:59 - 3:03இந்த அமைப்பை ஒவ்வொருவரும் அவர்களது
சொந்த மொழியில் பயன்படுத்துவது -
3:03 - 3:04அவசியம் என முடிவு செய்தோம்.
-
3:04 - 3:06இதுவரை, இந்த அமைப்பை ஃபிரெஞ்சு, சுவஹீலி,
அரபி, போன்ற 14 மொழிகளில் -
3:06 - 3:09நாம் வடிவமைத்திருக்கிறோம்.
-
3:09 - 3:11தற்பொழுது, ஹோஸா, ஜூலூ, மற்றும் இந்தி போன்ற
மொழிகளிலும் வடிவமைக்கின்றோம். -
3:13 - 3:15ஆனால், இந்த அமைப்பு இசைக்கலைஞர்களை
தாண்டியும் -
3:15 - 3:18மிகவும் உதவியாக இருக்கும்.
-
3:18 - 3:22துல்லியமான விலாசங்களை சரியாக குறிப்பிடாத
உலகின் 75 விழுக்காடு நாடுகள் -
3:22 - 3:24இம்முச்சொல் அமைப்பை பயன்படுத்த தொடங்கினால்,
-
3:24 - 3:27அதற்கு மிகச்சிறந்த பயன்கள்
உள்ளன. -
3:28 - 3:30தென்னாப்பிரிக்காவின் தர்பனில்
-
3:30 - 3:32கேட்வே ஹெல்த் எனப்படும் ஒரு
இலாப நோக்கற்ற அமைப்பு -
3:32 - 3:35அவர்களது சமுதாயத்திற்கு 11,000
முச்சொல் விலாச அறிகுறிகளை -
3:35 - 3:37வினியோகித்துள்ளது.
-
3:37 - 3:39ஆகவே, அங்குள்ள கர்ப்பிணி
தாய்மார்கள் பிள்ளைப்பேற்று வலியை -
3:39 - 3:41உணர தொடங்கும் போது, மருத்துவ அவசர ஊர்தியை
அழைத்து, -
3:41 - 3:43அவர்கள் எங்கு இருக்கின்றனர் என துல்லியமாக
கூறலாம். -
3:43 - 3:47இது இல்லாவிட்டால், இவ்வூர்திகள் அவர்களைக்
கண்டுபிடிக்க பல மணிநேரம் எடுத்து இருந்திருக்கும். -
3:47 - 3:50மொங்கோலியாவில், தேசிய தபால் சேவையும்
இந்த அமைப்பை அமல்படுத்த தொடங்கி, -
3:50 - 3:53பலரின் இல்லங்களுக்கு முதல்முறையாக
நேரடி பட்டுவாடா சேவை -
3:53 - 3:54வழங்குகிறது.
-
3:54 - 3:58பேரழிவு மண்டல புகைப்படங்களைப்
புவிகுறிச்சொல்ல ஐநா இதை பயன்படுத்துகின்றது. -
3:58 - 4:01ஆகவே, சரியான இடத்திற்கு உதவியை
அவர்களால் அளிக்க முடியும். -
4:01 - 4:03கரீபிய தீவுகளில், டாமினோஸ் பிட்ஸா நிறுவனமும்
இந்த அமைப்பை பயன்படுத்துகின்றது, -
4:03 - 4:06ஏனென்றால் அவர்கள் தங்கள்
நுகர்வோரின் இல்லங்களை தேடி -
4:06 - 4:09பிட்ஸாவை சுடச்சுட வழங்குவது
சவாலாக இருந்தது -
4:10 - 4:12விரைவில், ஒரு சிற்றுந்திற்குள் ஏறி,
-
4:12 - 4:14இம்மூசொற்களை கூறினால்,
-
4:14 - 4:16அச்சிற்றுந்து சரியான இடத்திற்கு
உங்களைக் கொண்டு போகும். -
4:18 - 4:21ஆப்பிரிகாவில், பலர்
தொலைபேசிகளை விஞ்சிவிட்டு -
4:21 - 4:23கைபேசிகளை பெறுகின்றனர்,
-
4:23 - 4:26மற்றும் சாதாரண வங்கிகளை விஞ்சிவிட்டு
நேரடியாக மின்வழங்கீட்டிற்கு மாறுகின்றனர். -
4:27 - 4:31நைஜீரியா, ஜிபூட்டி, மற்றும் கோட் டிலவாய்ர்
ஆகிய நாடுகளின் தபால் சேவைகளைக் கண்டு -
4:31 - 4:34நாம் மிக பெருமிதம் கொள்கின்றோம். இந்நாடுகள்
-
4:34 - 4:37நேரடியாக முச்சொல் விலாசங்களை
பின்பற்றுகின்றனர். -
4:37 - 4:39இதனால், அந்நாடுகளில் குடியுள்ளவர்களுக்கு
-
4:39 - 4:42அவர்கள் வாழும் இடத்தை கூற ஒரு
மிக எளிதான விதம் இப்பொழுது உள்ளது. -
4:43 - 4:47என் வாழ்க்கையில், விலாசமில்லா நிலை
வெறும் ஒரு கோபம் தான். -
4:47 - 4:49ஆனால் கோடிக்கணானவர்களுக்கு
-
4:49 - 4:52உள்கட்டமைப்பு வளர்ச்சியை தடுத்து,
-
4:52 - 4:55உயிர்களை பாதிக்கும்
-
4:55 - 4:56ஒரு மிகப்பெரிய வணிக திறன்
பற்றாக்குறை ஆகும். -
4:57 - 4:58முச்சொற்கள் மூலம் அதை மாற்ற
-
4:58 - 5:00நாம் எத்தனித்துள்ளோம்.
-
5:00 - 5:01நன்றி.
-
5:01 - 5:05(கைத்தட்டல்)
- Title:
- உலகின் ஒவ்வொரு மூலைக்கும் ஒரு துல்லியமான முச்சொல் விலாசம்
- Speaker:
- கிறிஸ் ஷெல்ட்ரிக்
- Description:
-
என்ன3சொற்கள் அமைப்புடன், கிறிஸ் ஷெல்ட்ரிக்கும் அவர்களது குழுவினரும் முழு உலகத்தை மும்மீட்டர் சதுரங்களாய் பிரித்து, ஒவ்வொரு சதுரங்கத்திற்கும் 'பிரபலம்.பிளவு.எழுத்தாளர்கள்' அல்லது 'தொகுதிகள்.சமதளம்.இனம்' போன்ற தனிப்பட்ட முச்சொல் அடையாளங்களை விலாசங்களில்லா உலகத்தின் கோடிக்கணக்கானவர்களுக்கு தந்துள்ளனர். ஒரு பெரிய கருத்தை சுருக்கமான விதத்தில் விரித்துரைக்கின்ற இவ்விரைவுப் பேச்சில், அனைவருக்கும் ஒரு துல்லியமான விலாசத்தை வழங்குவதின் பொருளாதார மற்றும் அரசியல் சார்ந்த விளைவுகளை — உதாரணத்திற்கு, கட்டிட உள்கட்டமைப்பு, பேரழிவு மண்டலங்களுக்கு உதவி அனுப்புதல், மற்றும் சூடு வேகப்பத்தை வழங்குவது —பற்றி ஷெல்ட்ரிக் பேசுகின்றார்.
- Video Language:
- English
- Team:
- closed TED
- Project:
- TEDTalks
- Duration:
- 05:18
TED Translators admin approved Tamil subtitles for A precise, three-word address for every place on earth | ||
Ahamed Shyam F accepted Tamil subtitles for A precise, three-word address for every place on earth | ||
Ahamed Shyam F edited Tamil subtitles for A precise, three-word address for every place on earth | ||
Ahamed Shyam F edited Tamil subtitles for A precise, three-word address for every place on earth | ||
Ahamed Shyam F edited Tamil subtitles for A precise, three-word address for every place on earth | ||
Ahamed Shyam F edited Tamil subtitles for A precise, three-word address for every place on earth | ||
Ahamed Shyam F edited Tamil subtitles for A precise, three-word address for every place on earth | ||
Ahamed Shyam F edited Tamil subtitles for A precise, three-word address for every place on earth |