ஐநாவை பொருத்த வரை,
விலாசமின்றி கோடிக்கணக்கானவர்கள்
இன்னும் வாழ்கின்றனர்.
பொருளாதார வல்லுனர் ஹெர்னாண்டோ
தே ஸோட்டோ
"விலாசமில்லாதவர்கள்
சட்டத்திற்கு வெளியில் வாழ்பவர்கள்.
அவர்கள் இல்லாதது போன்றே" என்றார்.
நானும் எனது குழுவினரும் இக்கருத்தை
மாற்ற எப்படி முயலுகின்றோம் என கூற வந்துள்ளேன்.
ஒரு இணைய வரைப்படத்தில், பிரேஸிலில் உள்ள
ஒரு குடிசை, அல்லது
தென்னாபிரிக்காவில் உள்ள ஒரு குடியிருப்பை
தேடினால்,
அதிக அளவு வெட்டவெளியின் மத்தியில்
ஒருசில சாலைகள் மட்டும் தான் காண இயலும்.
ஆனால் துணைக்கோள் காட்சிக்கு
மாறினால்,
இந்த பெரிய, விலாசங்களில்லா
இடத்தில்
ஆயிரக்கணக்கன மக்கள், வீடுகள், மற்றும்
நிறுவனங்கள் இருக்கின்றன என தெரியவரும்.
கானா நாட்டின் தலைநகர அக்ராவில்,
முன்மாதிரியான விலாச அமைப்புகளைத் தொடங்கி,
முழுமையாக முடிக்காமல் விட்ட இடங்களில்
சுவர்களின் ஓரங்களில் எண்களும் எழுத்துக்களும்
கிறுக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால், இந்த விலாசமில்லா இடங்களுக்கு
மிக அதிக அளவில் பொருளாதார வளர்ச்சி வாய்ப்பு
உள்ளது.
விலாசம் பற்றிய பிரச்சினையை
நான் தேர்ந்தெடுத்ததன் காரணம்,
நான் 10 ஆண்டுகள் இசைத் துறையில்
இருந்தேன்.
இசையுலகத்தில் நீங்கள் அறியாத
ஒன்று என்னவென்றால்,
தினந்தோறும், விலாசம் குறிப்பிடும் பிரச்சினையினால்
பலர் துன்பப்படுகின்றனர்.
கச்சேரி வாய்ப்புகளை கண்டறியும்
இசைக்கலைஞர்களில் இருந்து
இசைக்கருவிகளைக் கொண்டு வரும்
தயாரிப்பு நிறுவனங்கள் வரை,
அனைவரும் தொலைந்துப் போவார்கள்.
சேர்துவிட்டீர்கள் என நினைத்து, சேரவில்லை
என கண்டறியும் போது அழைக்கும் நபரையும்
எங்களது
அட்டவணைகளில் சேர்க்க அவசியம் இருந்தது.
சில கடுமையான நாட்களும் அனுபவித்திருந்தோம்.
உதாரணத்திற்கு, இத்தாலியில் அனைத்து கருவிகளையும்
ரோமிற்கு ஒரு மணிநேரம் தெற்கில் இறக்காமல்
ஒரு மணிநேரம் வடக்கில்
இறக்கி வைத்திருந்தனர்.
அதைவிட கடுமையானது
ஒரு இசைப்பலகை வாசிப்பவர் என்னை
அழைத்து
"கிறிஸ், பதட்டப்பட வேண்டாம், ஆனால்
தவறான கல்யாணத்திற்கு
வந்துள்ளோம் என நினைக்கிறேன்" என்றார்.
(சிரிப்பொலி)
இத்தலைவிதியுடனானச் சம்பவத்திற்கு துளிநேரம்
பிறகு,
கணிதனாக பணியாற்றுகின்ற எனது
நண்பனுடன்
உரையாடும் பொழுது,
இச்சிக்கலை எங்களால் தீர்க்க இயலும்
என நினைத்தோம்.
பழைய அமைப்பைப் போல் அல்லாத
ஒரு புதிய அமைப்பை
உருவாக்க முடியும் என நினைத்தோம்.
விலாசங்கள் தவறானவை
என ஒப்புக்கொண்டோம்.
மிக துல்லியமான
ஒரு அமைப்பை தேடினோம்
அட்சரேகை, தீர்க்கரேகை,
நிலைப்படுத்தல் ஆள்கூறுகள்
மிக சிக்கலானவை
என அறிந்தோம்.
ஆகவே, உலகத்தை
மும்மீட்டர் சதுரங்களாய் பிரித்தோம்.
57 இலட்சம் கோடி மும்மீட்டர் அளவுகளில்
உலகம் பொருந்துகிறது.
மூன்று அகராதிச் சொற்களை
இணைத்தாலே
போதுமான தாக இருந்தது
உலகின் ஒவ்வொரு மும்மீட்டர் சதுரங்களுக்கும்
தனித்தன்மையான முறையில்
பெயரிட இயலும்.
40,000 சொற்களை பயன்படுத்தினோம்.
இந்த 40,000 என்பதை மூன்றால் அடுக்கேற்றினால்,
64 இலட்சம் கோடி
இணை முச்சொற்கள் கிடைக்கும்
57 இலட்சம் கோடி மும்மீட்டர்
சதுரங்களுக்கு
இதுவே போதுமானவை.
அதனால், அதையே தான் நாம் செய்தோம்.
உலகை மும்மீட்டர் சதுரங்களாய் பிரித்து,
முச்சொல் விலாசம் என நாம் அழைக்கின்ற
முச்சொல் அடையாளத்தை
ஒவ்வொரு சதுரங்கத்திற்கும் அளித்தோம்.
உதாரணத்திற்கு, இந்த இடத்தில்
நான் 'கடுகு.தள்ளுபடிச்சீட்டு.குண்டூசி'
என்ற இடத்தில் நிற்கின்றேன்.
(சிரிப்பொலி)
ஆனால், இந்த இடத்தில்...
நான் 'கிள்ளியது.ஒருமை.பயிற்சி" என்ற
இடத்தில் நிற்கின்றேன்.
இதை ஆங்கிலத்தில் மட்டும் செய்யவில்லை.
இந்த அமைப்பை ஒவ்வொருவரும் அவர்களது
சொந்த மொழியில் பயன்படுத்துவது
அவசியம் என முடிவு செய்தோம்.
இதுவரை, இந்த அமைப்பை ஃபிரெஞ்சு, சுவஹீலி,
அரபி, போன்ற 14 மொழிகளில்
நாம் வடிவமைத்திருக்கிறோம்.
தற்பொழுது, ஹோஸா, ஜூலூ, மற்றும் இந்தி போன்ற
மொழிகளிலும் வடிவமைக்கின்றோம்.
ஆனால், இந்த அமைப்பு இசைக்கலைஞர்களை
தாண்டியும்
மிகவும் உதவியாக இருக்கும்.
துல்லியமான விலாசங்களை சரியாக குறிப்பிடாத
உலகின் 75 விழுக்காடு நாடுகள்
இம்முச்சொல் அமைப்பை பயன்படுத்த தொடங்கினால்,
அதற்கு மிகச்சிறந்த பயன்கள்
உள்ளன.
தென்னாப்பிரிக்காவின் தர்பனில்
கேட்வே ஹெல்த் எனப்படும் ஒரு
இலாப நோக்கற்ற அமைப்பு
அவர்களது சமுதாயத்திற்கு 11,000
முச்சொல் விலாச அறிகுறிகளை
வினியோகித்துள்ளது.
ஆகவே, அங்குள்ள கர்ப்பிணி
தாய்மார்கள் பிள்ளைப்பேற்று வலியை
உணர தொடங்கும் போது, மருத்துவ அவசர ஊர்தியை
அழைத்து,
அவர்கள் எங்கு இருக்கின்றனர் என துல்லியமாக
கூறலாம்.
இது இல்லாவிட்டால், இவ்வூர்திகள் அவர்களைக்
கண்டுபிடிக்க பல மணிநேரம் எடுத்து இருந்திருக்கும்.
மொங்கோலியாவில், தேசிய தபால் சேவையும்
இந்த அமைப்பை அமல்படுத்த தொடங்கி,
பலரின் இல்லங்களுக்கு முதல்முறையாக
நேரடி பட்டுவாடா சேவை
வழங்குகிறது.
பேரழிவு மண்டல புகைப்படங்களைப்
புவிகுறிச்சொல்ல ஐநா இதை பயன்படுத்துகின்றது.
ஆகவே, சரியான இடத்திற்கு உதவியை
அவர்களால் அளிக்க முடியும்.
கரீபிய தீவுகளில், டாமினோஸ் பிட்ஸா நிறுவனமும்
இந்த அமைப்பை பயன்படுத்துகின்றது,
ஏனென்றால் அவர்கள் தங்கள்
நுகர்வோரின் இல்லங்களை தேடி
பிட்ஸாவை சுடச்சுட வழங்குவது
சவாலாக இருந்தது
விரைவில், ஒரு சிற்றுந்திற்குள் ஏறி,
இம்மூசொற்களை கூறினால்,
அச்சிற்றுந்து சரியான இடத்திற்கு
உங்களைக் கொண்டு போகும்.
ஆப்பிரிகாவில், பலர்
தொலைபேசிகளை விஞ்சிவிட்டு
கைபேசிகளை பெறுகின்றனர்,
மற்றும் சாதாரண வங்கிகளை விஞ்சிவிட்டு
நேரடியாக மின்வழங்கீட்டிற்கு மாறுகின்றனர்.
நைஜீரியா, ஜிபூட்டி, மற்றும் கோட் டிலவாய்ர்
ஆகிய நாடுகளின் தபால் சேவைகளைக் கண்டு
நாம் மிக பெருமிதம் கொள்கின்றோம். இந்நாடுகள்
நேரடியாக முச்சொல் விலாசங்களை
பின்பற்றுகின்றனர்.
இதனால், அந்நாடுகளில் குடியுள்ளவர்களுக்கு
அவர்கள் வாழும் இடத்தை கூற ஒரு
மிக எளிதான விதம் இப்பொழுது உள்ளது.
என் வாழ்க்கையில், விலாசமில்லா நிலை
வெறும் ஒரு கோபம் தான்.
ஆனால் கோடிக்கணானவர்களுக்கு
உள்கட்டமைப்பு வளர்ச்சியை தடுத்து,
உயிர்களை பாதிக்கும்
ஒரு மிகப்பெரிய வணிக திறன்
பற்றாக்குறை ஆகும்.
முச்சொற்கள் மூலம் அதை மாற்ற
நாம் எத்தனித்துள்ளோம்.
நன்றி.
(கைத்தட்டல்)