ஆப்ரிக்காவில் வர்த்தகம் செய்வது பற்றி நோஜி ஓகோன்ஜோ-ஐவேலா
-
0:05 - 0:08உங்களுக்கு மிக்க நன்றி, கிரிஸ். இங்கு வந்த ஒவ்வொருவரும் அவர்கள் பயந்ததாகச்
-
0:08 - 0:12சொன்னார்கள். நான் பயந்தேனா என்பது எனக்குத் தெரியாது, ஆனால் இது போன்ற ஒரு
-
0:12 - 0:16நேயர்களிடம் பேசுவது இது தான் எனக்கு முதன் முறை.
-
0:16 - 0:20உங்களைப் பார்க்கச் செய்வதற்காக என்னிடம் எவ்வித மதிநுட்பமான தொழிற்நுட்பமும் இல்லை.
-
0:20 - 0:23எவ்வித ஸ்லைடுகளும் இல்லை, எனவே நீங்கள் என்னோடு கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும்.
-
0:23 - 0:26(சிரிப்பு).
-
0:26 - 0:32இந்தக் காலையில் நான் என்ன செய்ய விரும்புகிறேனென்றால் ஓரிரண்டு கதைகளை உங்களுடன்
-
0:32 - 0:35பகிர்ந்து கொண்டு ஒரு வித்தியாசமான ஆப்ரிக்காவைப் பற்றி உங்களுடன் பேசுவதுதான்.
-
0:35 - 0:39ஏற்கெனவே இந்தக் காலைப் பொழுதில், நீங்கள் அனைத்து நேரங்களிலும் ஆப்ரிக்காவைப்
-
0:39 - 0:44பற்றிக் கேள்விப்பட்டதைப் பற்றிய சில பேச்சுக்கள் இருந்தன:
-
0:44 - 0:50எச்ஐவி/எயிட்ஸின் ஆப்ரிக்கா, மலேரியாவின் ஆப்ரிக்கா,
-
0:50 - 0:53ஏழ்மையின் ஆப்ரிக்கா, சண்டைகளின் ஆப்ரிக்கா மற்றும் பேரழிவுகளின் ஆப்ரிக்கா.
-
0:53 - 0:57அவைகள் நடந்து கொண்டுதானிருக்கின்றன என்பது உண்மையாக இருக்கின்ற வேலையில்,
-
0:57 - 1:01நீங்கள் அந்தளவிற்குக் கேள்விப்பட்டிராத ஒரு ஆப்ரிக்காவும் உள்ளது.
-
1:01 - 1:05சில நேரங்களில் நான் ஆச்சரியப்பட்டு, என்னையே நான் கேட்டுக் கொள்வேன், அது தான் கிரிஸ் கேள்விப்பட்ட பேச்சும் ஏனென்று.
-
1:05 - 1:09இது தான் அந்த வாய்ப்புள்ள ஆப்ரிக்கா.
-
1:09 - 1:11மக்கள் தங்களின் சொந்த எதிர்காலம் மற்றும்
-
1:11 - 1:14அவர்களது சொந்த இலக்கின் பொறுப்பையும்
-
1:14 - 1:16ஏற்றுக்கொள்ள விரும்புகிற ஆப்ரிக்கா இது தான்.
-
1:16 - 1:19மேலும் இதைச் செய்வதற்கு மக்கள் வர்த்தகக் கூட்டுக்களை எதிர்பார்க்கிற ஆப்ரிக்க இதுதான்.
-
1:19 - 1:23அதைப் பற்றி தான் நான் இன்று பேசவிரும்புகிறேன்.
-
1:23 - 1:25ஆப்ரிக்காவிலுள்ள அந்த மாற்றத்தைப் பற்றி
-
1:25 - 1:27ஒரு கதையைச் சொல்லி ஆரம்பிக்க விரும்புகிறேன்.
-
1:28 - 1:332005 ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி, திரு டெப்ரியே அலாமியேசேகா, நைஜீரியாவின்
-
1:33 - 1:37எண்ணை-வளமிக்க மாநிலங்கள் ஒன்றின் ஆளுநர், லண்டனுக்கு வருகை தந்தபோது
-
1:37 - 1:44லண்டன் மெட்ரோபாலிட்டன் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
-
1:44 - 1:49அவர் ஏன் கைது செய்யப்பட்டாரென்றால்
-
1:49 - 1:52அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் சொந்தமான இரகசியக் கணக்குகளுக்குள் $8 மில்லியன்
-
1:52 - 1:55அளவிற்கான பணப் பரிமாற்றம் இருந்தது.
-
1:56 - 1:58இந்தக் கைது நேர்ந்ததேனென்றால் லண்டன் மெட்ரோபாலிட்டன் காவல்துறைக்கும்
-
1:58 - 2:01நைஜீரியாவின் பொருளாதார மற்றும் நிதிக் குற்றங்கள் ஆணையத்திற்குமிடையே
-
2:01 - 2:04ஒத்துழைப்பு இருந்தது – எங்களின் மிகத் திறமைவாய்ந்த மற்றும்
-
2:04 - 2:11தைரியமான மக்களால் அது நடத்தப்பட்டது.
-
2:11 - 2:14திரு. நூஹு ரிபாடு. அலாமெயேசேகா லண்டனில் விசாரிக்கப்பட்டார்.
-
2:14 - 2:18சில சட்ட ஓட்டைகளின் காரணமாக, அவர் ஒரு பெண் போன்று உடையணிந்து கொண்டு
-
2:18 - 2:21லண்டனிலிருந்து நைஜீரியாவிற்குத் திரும்பவும் ஓடிப்போகச் சமாளித்துக் கொண்டார்,
-
2:21 - 2:25எங்களின் சட்டத்திட்டங்களின் படி, ஆளுநர்கள், ஜனாதிபதிகளின் பொறுப்பிலிருப்பவர்கள் –
-
2:25 - 2:27பல நாடுகளில் இருப்பது போல – தண்டிக்கப்பட
-
2:27 - 2:32முடியாத அளவிற்கு பாதுகாப்பைக் கொண்டுள்ளார்கள். ஆனால் என்ன நடந்தது:
-
2:32 - 2:36இந்த நடத்தையினால் மக்கள் மிகவும் உக்கிரமடைந்தார்கள், சட்டமன்ற உறுப்பினர்களால் அவரை
-
2:36 - 2:42நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் பதவியிலிருந்து நீக்குவது சாத்தியமானதாக இருந்தது.
-
2:43 - 2:45இன்று, அலாம்ஸ் – கொஞ்சகாலத்திலேயே – அவரை நாங்கள் சிறையில் சந்தித்தோம்.
-
2:46 - 2:51ஆப்ரிக்க மக்கள் இதற்கு மேலும் அவர்கள் தலைவர்களிடமிருந்து ஊழலைத் தாங்கிக்
-
2:51 - 2:56கொள்ள விருப்பமுள்ளவர்களாக இல்லை என்பதின் உண்மை பற்றியதே இந்தக் கதை.
-
2:57 - 3:02மக்கள் அவர்களது வளங்களானது அவர்களின் நன்மைக்கென முறையாக நிர்வகிக்கப்படவேண்டும்
-
3:02 - 3:07என்றும் ஒரு சில முக்கியஸ்தர்களையே பலனடையச் செய்யும் இடங்களுக்கு
-
3:07 - 3:10அவைகள் எடுத்துச் செல்லப்படக் கூடாது என்பதை மக்கள் விரும்புகிறார்கள் என்பதைப் பற்றியதே இந்தக் கதை.
-
3:10 - 3:14ஆகையால், நீங்கள் ஊழல் மிகுந்த ஆப்ரிக்காவைப் பற்றிக் கேள்விப்படும் போது,
-
3:14 - 3:18எப்போதுமிருந்த ஊழல் – சில நாடுகளில் மக்களும் அரசாங்களும் இதை எதிர்த்துப் போராட
-
3:18 - 3:21கடுமையாக முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள
-
3:21 - 3:25வேண்டுமென நான் விரும்புகிறேன், மேலும் சில வெற்றிகளும் வந்து கொண்டிருக்கின்றன.
-
3:25 - 3:28பிரச்சினை முடிந்து விட்டது என்பது அதன் அர்த்தமா? பதில் இல்லையென்பதே.
-
3:28 - 3:32இன்னும் போகவேண்டியதற்கு வெகு தூரம் உள்ளது, ஆனால் அங்கே மனம் இருக்கிறது.
-
3:32 - 3:36இந்த மிக முக்கியமான போராட்டத்தில் வெற்றிகள் குவிக்கப்பட்டு வருகின்றன.
-
3:36 - 3:38எனவே நீங்கள் ஊழலைப் பற்றிக் கேள்விப்படும் போது,
-
3:38 - 3:41இதைப் பற்றி ஒன்றுமே செய்யப்படுவதில்லை என்று நினைக்காதீர்கள் -
-
3:41 - 3:44அதிகப்படியான ஊழலின் காரணமாக நீங்கள்
-
3:44 - 3:47ஆப்ரிக்க நாடுகளில் செயல்பட முடியாது என்பதாக நினைக்காதீர்கள். விஷயம் அதுவல்ல.
-
3:47 - 3:53போராடுவதற்கான மனது இருக்கிறது, பல நாடுகளில், அந்தப் போராட்டமானது நடந்து
-
3:53 - 3:57கொண்டிருக்கிறது மேலும் வெற்றியும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. மற்றவைகளில்,
-
3:57 - 4:00என்னுடையதைப் போன்றவை, நைஜீரியாவில் சர்வாதிக்கத்தின் நெடுநாளைய வரலாறு
-
4:00 - 4:04இருந்திருக்கிறது, போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது மேலும் நாங்கள் நெடுந் தூரம் போக வேண்டியுள்ளது.
-
4:04 - 4:08ஆனால் விஷயத்தின் உண்மையென்னவென்றால் இது போய்க்கொண்டேயிருக்கிறது.
-
4:09 - 4:11முடிவுகள் காண்பிக்கின்றன:
-
4:11 - 4:15உலக வங்கி மற்றும் மற்ற ஸ்தாபனங்களினால் செய்யப்பட்ட
-
4:15 - 4:19தனிப்பட்ட கண்கானிப்பானது, அந்தப் போக்கானது ஊழலைப் பொறுத்தவரையில்
-
4:19 - 4:22குறைவாகவும், ஆட்சிமுறை மேம்பட்டு வருகிறது என்பதையும் பல நிகழ்வுகளில் காண்பிக்கின்றன.
-
4:22 - 4:2628 ஆப்ரிக்க நாடுகளில் நிர்வாகமானது தெளிவான மேல்நோக்கிய போக்கில் இருப்பதை,
-
4:26 - 4:30ஆப்ரிக்காவிற்கான பொருளாதார ஆணையத்தின் ஒரு ஆய்வு காண்பித்தது.
-
4:30 - 4:32நிர்வாகத்தின் இந்தப் பகுதியை விட்டு நான் செல்வதற்கு முன்பாக நான்
-
4:32 - 4:34இன்னுமொன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.
-
4:34 - 4:37மக்கள் ஊழல், ஊழலைப்பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
-
4:37 - 4:39அதைப் பற்றி மக்கள் பேசும்போதெல்லாம் நீங்கள்
-
4:39 - 4:41உடனே ஆப்ரிக்காவைப் பற்றிதான் நினைக்கிறீர்கள்.
-
4:41 - 4:45அது தான் அந்த காட்சி: ஆப்ரிக்க நாடுகள். ஆனால் நான் இதைச் செல்லட்டும்:
-
4:45 - 4:51லண்டனில் உள்ள ஒரு கணக்கிற்குள் அலாம்ஸால் $8 மில்லியனை அனுப்ப முடிந்ததானால் --
-
4:53 - 4:57மற்ற மக்கள் எடுத்திருந்த வளரும் நாடுகளின்
-
4:57 - 5:01பணமான 20 முதல் 40 பில்லியன் அளவு வளர்ந்த
-
5:01 - 5:04நாடுகளில் உட்கார்ந்திருந்தால் – அவர்களால் இதைச் செய்ய முடிந்தால்,
-
5:04 - 5:07அது என்ன? அது ஊழல் இல்லையா?
-
5:08 - 5:12இந்த நாட்டில், நீங்கள் திருடப்பட்ட பொருட்களைப் பெற்றுக் கொண்டால், நீங்கள் தண்டிக்கப்படத்தக்கவர்கள் இல்லையா?
-
5:13 - 5:16எனவே நாம் இது போன்ற வகையான ஊழலைப் பற்றிப் பேசும் போது, உலகத்தின் மற்ற
-
5:16 - 5:19பகுதிகளில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி நாம் நினைத்துப் பார்ப்போம்
-
5:19 - 5:23பணம் எங்கே போகிறது அதைத் தடுக்க என்ன செய்யலாம்.
-
5:23 - 5:26நான் உலக வங்கியோடு கூட, சொத்து மீட்பின் மீதான, ஒரு முன்முயற்சியில் இப்போது
-
5:26 - 5:29வேலை செய்து கொண்டிருக்கிறேன், வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிற
-
5:29 - 5:32பணங்களை திரும்பப் பெறுவதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்பதை முயற்சித்துக்
-
5:32 - 5:35கொண்டு, வளரும் நாடுகளின் பணங்கள் – திரும்ப அனுப்பப் படுவதற்கு.
-
5:35 - 5:38ஏனென்றால் அங்கே உட்கார்ந்திருக்கிற பணத்தில் $20 பில்லியனை நம்மால் பெற
-
5:38 - 5:41முடிந்தால், அது சில நாடுகளுக்கு அனைத்து நிதியுதவிகளையும்
-
5:41 - 5:44ஒன்றாகச் சேர்ப்பதை விட அதிகமானதாக இருக்கக் கூடும்.
-
5:44 - 5:51(கைதட்டல்).
-
5:51 - 5:55நான் பேச விரும்புகிற இரண்டாவது காரியம் சீரமைப்பிற்கான மனது.
-
5:55 - 5:59ஆப்ரிக்கர்கள், - அவர்கள் சோர்வடைந்த பிறகு, ஒவ்வொருவரின் உதவி மற்றும்
-
5:59 - 6:04கவனிப்பின் பொருளாக இருந்து இருந்து நாங்கள் சோர்வடைந்து விட்டோம்.
-
6:04 - 6:08நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், ஆனால் நாங்கள் சீரமைப்பதற்கான மனதைக்
-
6:08 - 6:12கொண்டிருந்தோமானால், எங்களது இலக்கிற்கான பொறுப்பை நாங்கள் எடுத்துக் கொள்ள முடியும் என எங்களுக்குத் தெரிகிறது.
-
6:13 - 6:17மேலும் பல ஆப்ரிக்க நாடுகளில் இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றால், உணர்ந்து கொள்ளுதல்,
-
6:17 - 6:21அது வேறு யாரும் செய்ய முடியாது நாங்கள் தான் செய்ய வேண்டும். நாங்கள் அதைச் செய்ய வேண்டியுள்ளது.
-
6:21 - 6:25எங்களை ஆதரிக்கும் பங்காளர்களை நாங்கள் அழைக்க முடியும், ஆனால் நாங்கள் தான் அதை ஆரம்பிக்க வேண்டும்.
-
6:25 - 6:28எங்கள் பொருளாதாரங்களை நாங்கள் சீரமைக்க வேண்டும், எங்கள் தலைமைத்துவத்தை மாற்ற வேண்டும்,
-
6:28 - 6:34பெரிய மாறுதலுள்ளவர்களாக மாற வேண்டும், மாற்றத்திற்கும் தகவல்களுக்கும் மிகவும் திறந்த மனதுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
-
6:34 - 6:36அந்த கண்டத்திலுள்ள மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான,
-
6:36 - 6:39நைஜீரியாவில், நாங்கள் செய்ய ஆரம்பித்திருப்பது இது தான்.
-
6:39 - 6:42உண்மையில், நீங்கள் நைஜீரியாவில் இல்லையென்றல், நீங்கள் ஆப்ரிக்காவிலேயே இல்லை.
-
6:42 - 6:43நான் அதை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
-
6:43 - 6:44(சிரிப்பு).
-
6:44 - 6:46துணை சகாரா ஆப்ரிக்கர்களில் நான்கில் ஒருவர் நைஜீரியாக்காரர், மேலும் அது 140
-
6:48 - 6:53மில்லியன் சுறுசுறுப்பான மக்களைக் கொண்டுள்ளது – குழப்பமான மக்கள் - ஆனால்
-
6:54 - 6:58மிகவும் ஆர்வமுடைய மக்கள். உங்களுக்கு அலுப்பாகவே இருக்காது.
-
6:58 - 6:59(சிரிப்பு).
-
6:59 - 7:01நாங்கள் என்ன செய்ய ஆரம்பிதோமென்றால் பொறுப்பெடுத்துக் கொண்டு
-
7:01 - 7:03எங்களை நாங்களே சீரமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்வது தான்.
-
7:04 - 7:06சீரமைப்புகளைச் செய்வதற்கு அந்த நேரத்தில்
-
7:06 - 7:09விருப்பமுள்ள ஒரு தலைவரின் ஆதரவோடு,
-
7:09 - 7:11நாங்களே மேம்படுத்திக் கொண்ட ஒரு
-
7:11 - 7:13கூட்டு சீரமைப்புத் திட்டத்தை முன் வைத்தோம்.
-
7:13 - 7:16சர்வதேச நிதியல்ல. நான் 21 ஆண்டுகளாக வேலை
-
7:16 - 7:19பார்த்து ஒரு துணைத்தலைவராக உயர்ந்த, உலகவங்கியுமல்ல.
-
7:20 - 7:22யாருமே உங்களுக்காக அதைச் செய்ய முடியாது. உங்களுக்காக நீங்களே அதைச் செய்ய வேண்டும்.
-
7:22 - 7:26அரசாங்கம் எதையுமே கொண்டிராத வர்த்தகங்களிலிருந்து அதை வெளியில் எடுப்பதைச் செய்யும் ஒரு
-
7:26 - 7:30திட்டத்தை நாங்களனைவரும் சேர்ந்து வைத்தோம் - அதிலிருந்துகொண்டிருப்பதால் அதற்கு ஒரு வேலையுமில்லை.
-
7:30 - 7:32பொருட்களையும் சேவைகளையும் உற்பத்தி செய்யும்
-
7:32 - 7:33வணிகத்தில் அரசு இருக்கக் கூடாது ஏனென்றால்
-
7:33 - 7:36அது திறனற்றதாகவும் போட்டி போடமுடியாததாகவுமாக இருக்கிறது.
-
7:36 - 7:40எனவே நாங்கள் எங்களது ஸ்தாபனங்களில் பெரும்பாலானவற்றை தனியார் மயமாக்க முடிவு செய்தோம்.
-
7:40 - 7:44(கைதட்டல்).
-
7:45 - 7:49நாங்கள், அதன் விளைவாக, எங்களது சந்தைகளில் பலவற்றை தனியார்மயமாக்க முடிவு செய்தோம்.
-
7:49 - 7:522003-ன் இறுதியில் ஆரம்பித்த, இந்தச் சீரமைப்பிற்கு முன்பாக –
-
7:52 - 7:56நான் வாஷிங்டனை விட்டுப் போய் நிதியமைச்சர் என்ற பதவியை ஏற்றுக் கொள்வதற்கு
-
7:56 - 7:58முன்பாக – அதன் மொத்த 30-ஆண்டு வரலாற்றிலேயே 4,500 தரைவழி இணைப்புகளை
-
8:00 - 8:04மட்டுமே உண்டாக்கியிருந்த ஒரு தொலைபேசி நிறுவனத்தை
-
8:04 - 8:09நாங்கள் கொண்டிருந்தோம், என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?
-
8:09 - 8:11(சிரிப்பு).
-
8:11 - 8:14எங்களுடைய நாட்டில் ஒரு தொலைபேசியை வைத்திருப்பது ஒரு பெரிய ஆடம்பரம்.
-
8:14 - 8:16உங்களால் அதைப் புரிந்து கொள்ள முடியாது. நீங்கள் லஞ்சம் கொடுக்க வேண்டும்.
-
8:16 - 8:18உங்கள் தொலைபேசியைப் பெறுவதற்காக எல்லாவற்றையும் நீங்கள் செய்ய வேண்டும்.
-
8:18 - 8:21ஜனாதிபதி ஓபசாஞ்சோ தொலைபேசித் துறையின் தனியார் மயமாக்கலை ஆதரித்து
-
8:21 - 8:25அதைத் துவக்கி வைத்த போது, நாங்கள் 4,500-ல் இருந்து 32 மில்லியன் ஜிஎஸ்எம்
-
8:26 - 8:34இணைப்புகளுக்குச் சென்றோம், அது இன்னும் கூடிக்கொண்டேயிருக்கிறது.
-
8:34 - 8:39சீனாவிற்குப் பிறகு, நைஜீரியா தொலைபேசிச் சந்தைதான் உலகில் இரண்டாவது வேகமாக
-
8:39 - 8:44வளரும் சந்தையாகும். தொலைத்தொடர்பில் ஆண்டிற்கு சுமார் $1 பில்லியன் முதலீடுகளை
-
8:44 - 8:50நாங்கள் பெற்றுக் கொண்டிருக்கிறோம். ஒரு சில புத்திசாலி மக்களைத் தவிர, வேறு யாருக்கும் தெரியாது.
-
8:50 - 8:53(சிரிப்பு).
-
8:53 - 8:57வந்த முதலாவது புத்திசாலித்தனமான நிறுவனம்
-
8:57 - 8:59தென் ஆப்ரிக்காவின் எம்டிஎன் நிறுவனம்.
-
8:59 - 9:03நான் நிதியமைச்சராக இருந்த மூன்று ஆண்டுகளில்,
-
9:03 - 9:06அவர்கள் ஆண்டிற்கு $360 மில்லியனை சராசரி இலாபமாக கொண்டார்கள்.
-
9:08 - 9:14ஒரு சந்தையில் 360 மில்லியன் – ஒரு வருடத்திற்கு $500 க்கும் குறைவான
-
9:14 - 9:18வருட வருமானமுள்ள, ஒரு ஏழை நாடான ஒரு நாட்டில்.
-
9:19 - 9:21எனவே சந்தையானது அங்கே இருக்கிறது.
-
9:21 - 9:24அவர்கள் இதைச் சுருட்டிக் கொண்டவுடன், மற்றவர்களுக்கும் அது தெரிந்து விட்டது.
-
9:25 - 9:28நைஜீரியர்களும் சில தந்தியில்லா தொலைத்தொடர்பு
-
9:28 - 9:30நிறுவனங்களைத் தொடங்க ஆரம்பித்தார்கள்,
-
9:30 - 9:32மற்ற மூன்று அல்லது நான்கு பேர்கள் வந்திருக்கிறார்கள்.
-
9:32 - 9:35ஆனால் அங்கே மிகப்பெரிய சந்தையுள்ளது, மக்களுக்கு அதைப் பற்றித் தெரியாது,
-
9:35 - 9:38அல்லது அவர்கள் அதைப்பற்றி தெரிந்து கொள்ள விரும்பவில்லை.
-
9:40 - 9:42எனவே தனியார் மயமாக்கல் நாங்கள் செய்திருக்கிற ஒரு காரியம்.
-
9:43 - 9:49நாங்கள் செய்திருக்கிற மற்றொரு காரியம் எங்களது நிதிகளை சிறப்பாக நிர்வகிப்பது.
-
9:50 - 9:52உங்கள் சொந்த நிதிகளை நீங்கள் நன்றாக நிர்வகிக்கவில்லையானால் வேறு யாரும்
-
9:53 - 9:56உங்களுக்கு உதவவோ அல்லது உங்களை ஆதரிக்கவோ போகிறதில்லை.
-
9:56 - 10:00மேலும், நைஜீரியா, அதன் எண்ணைத் துறையில், ஊழலோடு இருப்பதற்கும்
-
10:00 - 10:05அதன் சொந்த பொது நிதிகளை நன்றாக நிர்வகிக்காமல் இருப்பதற்கும் பேர் போனதாகும்.
-
10:05 - 10:09எனவே நாங்கள் என்ன செய்ய முயற்சித்தோம்? நாங்கள் ஒரு நிதிச் சட்டத்தை அறிமுகப்படுத்தினோம்
-
10:10 - 10:12அது எங்களது நிதிநிலையறிக்கையை எண்ணை விலையிலிருந்து துண்டித்தது.
-
10:12 - 10:16அதற்கு முன்பாக நாங்கள் எவ்வளவு எண்ணையைக் கொண்டு வருகிறோமோ அதன் மீது நிதிநிலை அறிக்கையை
-
10:16 - 10:21அமைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தோம், ஏனென்றால் எண்ணைதான் எங்கள் பொருளாதாரத்தில்
-
10:21 - 10:24மிகப்பெரிய, அதிகம் வருமானம் சம்பாதிக்கும் துறையாகும். எங்கள் வருமானத்தில் 70% எண்ணையிலிருந்து வருகிறது.
-
10:24 - 10:28நாங்கள் அதைத் துண்டித்தோம், அதை நாங்கள் செய்தவுடன் எண்ணை விலையிலிருந்து
-
10:28 - 10:31கொஞ்சம் குறைவான விலையில் நிதிநிலை அறிக்கையைத் தயாரிக்க ஆரம்பித்து அந்த
-
10:31 - 10:35விலைக்கு மேல் என்ன இருந்ததோ அதைச் சேமிக்க ஆரம்பித்தோம்.
-
10:36 - 10:39நாங்கள் அதை இழுக்க முடியும் என்று தெரியாது; அது மிகவும் விவாதத்திற்குரியதாக இருந்தது.
-
10:39 - 10:42ஆனால் அது உடனடியாகச் செய்தது என்னவென்றால், எங்கள் பொருளாதார வளர்ச்சியில்
-
10:42 - 10:45இருந்து வந்த ஏற்ற இறக்கமானது – எண்ணைவிலை அதிமாக இருந்த போதிலும் கூட,
-
10:45 - 10:49நாங்கள் மிக விரைவாக வளர்ந்தோம்.
-
10:49 - 10:51அவைகள் சரியும் போது, நாங்களும் சரிந்தோம்.
-
10:51 - 10:55பொருளாதாரத்தில், நாங்கள் எதற்கும் பணம் கொடுக்க முடியவில்லை, எந்த சம்பளமும் கொடுக்க முடியவில்லை.
-
10:56 - 11:00அது சீராக்கப்பட்டு விட்டது. நான் விலகுவதற்கு முன்பாக, எங்களால் $27 பில்லியன் சேமிக்க
-
11:00 - 11:06முடிந்தது. இது எங்களுடைய சேமிப்பிற்குச் சென்றது – நான் 2003-ல் வந்த போது, நாங்கள்
-
11:06 - 11:10சேமிப்பில் 7 பில்லியனைக் கொண்டிருந்தோம்.
-
11:11 - 11:14நான் விலகும் நேரத்தில், நாங்கள் கிட்டத்தட்ட $30 பில்லியனுக்குப் போயிருந்தோம்.
-
11:14 - 11:17நாம் இப்போது பேசுகிறபோது, எங்கள் நிதியின் முறையான நிர்வாகத்தின் காரணமாக
-
11:18 - 11:22நாங்கள் சேமிப்பில் $40 பில்லியன்களைக் கொண்டுள்ளோம்.
-
11:23 - 11:26அது எங்களது பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தி, நிலையானதாக ஆக்குகிறது.
-
11:26 - 11:29எப்போதுமே ஏறியிறங்குகிற எங்களது பரிமாற்ற வீதமானது, வர்த்தகம் செய்கிற மக்கள்
-
11:29 - 11:33பொருளாதாரத்தில், விலைகளை முன்னறிவிப்பதைக் கொண்டிருக்கும் வகையில்,
-
11:33 - 11:38ஓரளவிற்கு நிலையானதாக உள்ளது மேலும் அது நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
-
11:40 - 11:44நாங்கள் பணவீக்கத்தை 28 சதவீதத்திலிருந்து சுமார் 11 சதவீதத்திற்குக் கொண்டுவந்தோம்.
-
11:46 - 11:52எங்களது நாட்டின் வளர்ச்சி வீதம் முந்தைய பத்து ஆண்டுகளிலிருந்து 2.3 சதவீதத்தில்
-
11:52 - 11:55இருந்து சுமார் 6.5 சதவீதத்திற்கு வளரக் கொண்டிருந்தோம்.
-
11:56 - 11:59எனவே அனைத்து மாற்றங்களும் சீரமைப்புகளும் பொருளாதாரத்தில்
-
11:59 - 12:02அளவிடக்கூடிய முடிவுகளில் காண்பிக்க ஆரம்பித்தது.
-
12:02 - 12:06மேலும் எது மிகவும் முக்கியம், ஏனென்றால் எண்ணையிலிருந்து வெளியேறி பரவலாக்கல்
-
12:06 - 12:08செய்வது – மேலும் இந்த ஒரு பெரிய நாட்டில், ஆப்ரிக்காவிலுள்ள பலநாடுகளைப் போன்று
-
12:08 - 12:11மிக அநேக வாய்ப்புகள் உள்ளன – குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால்
-
12:13 - 12:16பெரும்பாலான இந்த வளர்ச்சியானது எண்ணைத் துறையிலிருந்து வரவில்லை,
-
12:16 - 12:19ஆனால் எண்ணை-சாராத துறையிலிருந்தே என்பதுதான்.
-
12:19 - 12:22விவசாயம் 8 சதவீதத்தை விட சிறப்பாக வளர்ச்சியடைந்தது.
-
12:22 - 12:26தொலைதொடர்பு துறை வளர்ந்த போது, வீடு மற்றும் கட்டுமானம், இப்படி நான்
-
12:26 - 12:31போய்க்கொண்டே இருக்க முடியும். மேலும் நீங்கள் மேக்ரோ-பொருளாதாரத்தை
-
12:31 - 12:33நேராக்கிவிடும் போது, மற்ற பல்வேறு துறைகளிலான வாய்ப்புகளானது மிகப் பெரிய
-
12:33 - 12:37அளவில் இருக்கும் என்பதை உங்களுக்குத் தெளிவாக்குவதற்குத் தான் இது.
-
12:38 - 12:41நான் சொன்னது போலவே, நாங்கள் விவசாயத்திலும் வாய்ப்புகளைக் கொண்டுள்ளோம்.
-
12:41 - 12:45நாங்கள் திட கனிமங்களிலும் வாய்ப்புக்களைக் கொண்டுள்ளோம். யாருமே முதலீடு கூடச்
-
12:45 - 12:48செய்திராத அல்லது ஆராய்ச்சி செய்திருக்காத நிறைய கனிமங்களை நாங்கள் கொண்டுள்ளோம்.
-
12:48 - 12:51அதைச் சாத்தியமாக்குவதற்கு முறையான சட்டம் இல்லாமல்,
-
12:51 - 12:54அது நடக்காது என்பதை நாங்கள் உணர்ந்தோம்.
-
12:54 - 12:57எனவே நாங்கள் இப்போது ஒரு சுரங்க நடத்தை விதியைக் கொண்டுள்ளோம் அது உலகின் மிகச்சிறந்த சிலவற்றோடு ஒப்பிடக் கூடியது.
-
12:58 - 13:00நாங்கள் வீடு மற்றும் வீட்டுமனையிலும் வாய்ப்புகளைக் கொண்டுள்ளோம்.
-
13:00 - 13:03140 மில்லின் மக்கள் தொகை கொண்ட நாட்டில் ஒன்றுமே இல்லை –
-
13:04 - 13:09நீங்கள் இங்கே அறிந்திருக்கிறபடி எந்த பெருவணிக வளாகங்களும் இல்லை.
-
13:10 - 13:13மக்களின் கற்பனாசக்தியை தூண்டிவிட்ட
-
13:13 - 13:15சிலருக்கு இது ஒரு முதலீட்டு வாய்ப்பு.
-
13:16 - 13:19இப்போது, இத்தகைய வணிகவளாகங்களில் இருக்கும் வியாபாரங்கள் அவர்கள்
-
13:19 - 13:22எதிர்பார்த்ததை விட நான்கு மடங்குகள் அதிகமான விற்றுமுதலைக் கொண்டுள்ளன.
-
13:23 - 13:26எனவே, கட்டுமானத்தில், வீட்டுமனையில், அடகுச் சந்தையில்
-
13:26 - 13:28பெரிய காரியங்கள் நடந்தன. நிதிசார்ந்த சேவைகள்:
-
13:29 - 13:33நாங்கள் 89 வங்கிகளைக் கொண்டிருந்தோம். அதில் மிக அதிகமானவை அவர்களது உண்மையான வியாபாரத்தைச் செய்யாமலிருந்தார்கள்.
-
13:33 - 13:37அவர்களின் மூலதனத்தை அதிகரிக்க வேண்டும் – பங்கு மூலதனம்- என கோரிக்கையை
-
13:37 - 13:42விடுத்து நாங்கள் அவைகளை 89 –லிருந்து 25 வங்கிகளாக கூட்டிச் சேர்த்தோம்.
-
13:42 - 13:47மேலும் அது சுமார் $25 மில்லியனிலிருந்து $150 மில்லியனுக்குச் சென்றது.
-
13:47 - 13:51வங்கிகள் – இத்தகைய வங்கிகள் தற்போது கூட்டிச் சேர்க்கப்பட்டுள்ளன, அப்படி வங்கி
-
13:51 - 13:55அமைப்புகளைப் பலப்படுத்தியது வெளியிலிருந்து நிறைய மூலதனத்தை கவர்ந்திருக்கிறது.
-
13:55 - 13:59யூகேயின் பார்க்லேஸ் வங்கி 500 மில்லியன்களைக் கொண்டு வருகிறது.
-
13:59 - 14:03ஸ்டாண்டர்டு சார்டர்ட் 140 மில்லியனைக் கொண்டு வந்திருக்கிறது.
-
14:03 - 14:06இப்படி நான் போய்க்கொண்டே இருக்க முடியும். மேலும் மேலும், அந்த அமைப்பிற்குள் டாலர்கள்.
-
14:06 - 14:08இதையே தான் நாங்கள் காப்பீட்டுத் துறையிலும் செய்தோம்.
-
14:08 - 14:11எனவே நிதிச் சேவைகளில், ஒரு மிகப்பெரிய வாய்ப்பின் சந்தர்ப்பம்.
-
14:11 - 14:17சுற்றுலாவில், பல ஆப்ரிக்க நாடுகளில், ஒரு பெரிய வாய்ப்புள்ளது.
-
14:17 - 14:20கிழக்கு ஆப்ரிக்காவைப் பற்றி பலமக்கள் அறிந்திருப்பது என்னவோ அதுதான்:
-
14:21 - 14:24வன உயிர்கள், யானைகள், இப்படியாக.
-
14:24 - 14:26ஆனால் சுற்றுலாச் சந்தையை, அவைகள் மக்களை உண்மையிலேயெ பயனுறச்
-
14:26 - 14:29செய்யும் வகையில் நிர்வகிப்பது மிகவும் முக்கியமானதாகும்.
-
14:30 - 14:33எனவே நான் என்ன சொல்ல முயற்சிக்கிறேன்? அந்தக் கண்டத்தின் மீது ஒரு புதிய
-
14:33 - 14:36அலையிருக்கிறது என்பதை உங்களுக்குச் சொல்லவே விரும்புகிறேன்.
-
14:36 - 14:41திறப்பு மற்றும் ஜனநாயகமாக்கலின் ஒரு புதிய அலை அதில், 2000-லிருந்து, ஆப்ரிக்க
-
14:41 - 14:43நாடுகளில் மூன்றில்-இரண்டிற்கு மேலாக பல-கட்சி ஜனநாயக
-
14:43 - 14:45தேர்தல்களைக் கொண்டிருக்கிறார்கள்.
-
14:46 - 14:49அனைத்துமே முழுமையானவையாக இல்லை, அல்லது இருக்காது,
-
14:49 - 14:51ஆனால் போக்கு மிகத் தெளிவாக உள்ளது.
-
14:51 - 14:55கடந்த மூன்று ஆண்டுகளாக, கண்டத்தின் மீதான ஆண்டு சராசரி வளர்ச்சியானது 2.5
-
14:55 - 14:58சதவீதத்திலிருந்து சுமார் 5 சதவீதமாக உயர்ந்திருக்கிறது என்பதையே நான்
-
14:58 - 15:02உங்களுக்குச் சொல்ல முயற்சிக்கிறேன்.
-
15:02 - 15:06இது பல ஓஈசிடி நாடுகள் செய்து காட்டியிருப்பதை விடச் சிறந்தது தான்.
-
15:07 - 15:11எனவே காரியங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன என்பது தெளிவாகிறது.
-
15:11 - 15:13கண்டத்தில் சண்டைகள் குறைந்து வருகின்றன; ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பாக சுமார் 12
-
15:14 - 15:16சண்டைகளில் இருந்து, மூன்று அல்லது நான்காக
-
15:16 - 15:18குறைந்திருக்கிறோம், அவைகளில்
-
15:18 - 15:21மிகவும் மோசமானது, உண்மையிலேயே, டார்பர் தான்.
-
15:21 - 15:24மேலும், பாருங்கள், உங்களிடம் அண்டைப்பக்க பாதிப்பு உள்ளது, அதில் கண்டத்தின் ஒரு
-
15:24 - 15:26பகுதியில் ஏதாவது நடந்து கொண்டிருந்தால், அந்த முழுக்
-
15:26 - 15:29கண்டமும் பாதிக்கப்பட்டது போல காணப்படுகிறது.
-
15:29 - 15:32ஆனால் இந்தக் கண்டம் அப்படியல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் –
-
15:32 - 15:38இந்தக் கண்டம் ஒரு நாடு அல்ல ஆனால் பல நாடுகளால் ஆனது.
-
15:38 - 15:40மேலும் மூன்று அல்லது நான்கு சண்டைகளுக்கு குறைந்து வந்திருப்போமானால்,
-
15:40 - 15:43ஒரு நிலையான, வளர்கிற, ஆச்சரியமூட்டுகிற
-
15:43 - 15:50நிறைய வாய்ப்புகளுள்ள பொருளாதாரத்தில் முதலீடு செய்வதற்கு
-
15:50 - 15:53மிக அதிகமான வாய்ப்புகள் உள்ளது என்றே அர்த்தம்.
-
15:54 - 15:58இந்த முதலீட்டைப் பற்றி ஒரே ஒரு குறிப்பை வைக்க விரும்புகிறேன்.
-
15:59 - 16:01ஆப்ரிக்கர்களுக்கு உதவும் சிறந்த வழியானது அவர்களின் சொந்தக்
-
16:02 - 16:05கால்களில் நிற்பதற்கு உதவுவதே.
-
16:05 - 16:09அதைச் செய்வதற்கான சிறந்த வழியானது வேலைகளை உருவாக்க உதவுவதே.
-
16:10 - 16:14மலேரியாவை எதிர்த்துப் போராடுவதும் பணத்தை அதில் போடுவதும் குழந்தைகளின் உயிர்களைக்
-
16:14 - 16:18காப்பாற்றுவதும் ஒரு பிரச்சினையும் இல்லை. நான் சொல்லிக் கொண்டிருப்பது அதுவல்ல. அது நல்லது தான்.
-
16:19 - 16:23ஆனால் ஒரு குடும்பத்தின் மீதான தாக்கத்தைக் கற்பனை செய்து பாருங்கள். பெற்றோர்கள்
-
16:23 - 16:25பணியமர்த்தப்பட்டு அவர்களின் குழந்தைகளைப் பள்ளிக்குச் செல்லுமாறு செய்தால்,
-
16:25 - 16:28நோய்க்கெதிராகப் போராடுவதற்கு அவர்களாகவே மருந்துகளை வாங்க முடிந்ததானால்.
-
16:28 - 16:32வேலைகளை உருவாக்கி மக்களை அவர்களது சொந்தக் காலில் நிற்கச் செய்ய உதவுகிற அதே வேளையில்,
-
16:32 - 16:37நீங்களே பணத்தை சம்பாதிக்க முடிகிற இடங்களில் நாம் முதலீடுகளைச் செய்ய முடிந்தால்,
-
16:37 - 16:42அது ஒரு அற்புதமான வாய்ப்பல்லவா? நாம் போக வேண்டிய வழி அது தானல்லவா?
-
16:42 - 16:45கண்டத்தில் முதலீடு செய்வதற்கான சிறந்த மக்கள்
-
16:45 - 16:47பெண்களே என்று நான் சொல்ல விரும்புகிறேன்.
-
16:48 - 16:55(கைதட்டல்).
-
16:55 - 17:00இங்கே நான் ஒரு சிடி-யை வைத்திருக்கிறேன். சரியான நேரத்தில் எதையும் சொல்லாததற்கு நான் வருந்துகிறேன்.
-
17:00 - 17:02மற்றபடி, நீங்கள் இதைப் பார்க்க வேண்டுமென நான் விரும்பியிருப்பேன்.
-
17:02 - 17:05அது சொல்கிறது, “ஆப்ரிக்கா: வியாபாரத்திற்கு திறந்திருக்கிறது.”
-
17:06 - 17:09மேலும் இது தான் உண்மையிலேயே ஆண்டின் சிறந்த செய்திப் படமாக
-
17:09 - 17:11விருதைப் பெற்ற அந்த வீடியோ.
-
17:11 - 17:13இதைச் செய்த பெண்கள் டான்ஸானியாவில் இருக்கப் போகிறார்கள் என்பதைப் புரிந்து
-
17:13 - 17:18கொள்ளுங்கள், அங்கு அவர்கள் ஜூனில் அந்த அமர்வினைக் கொண்டிருக்கிறார்கள்.
-
17:19 - 17:24மேலும் இது ஆப்ரிக்கர்களை உங்களுக்குக் காட்டுகிறது, குறிப்பாகப் பெண்களை, அத்தனை பிரச்சினைகளுக்கு
-
17:24 - 17:29மத்தியிலும் அவர்கள் வியாபாரத்தை வளர்த்திருக்கிறார்கள், அவைகளில் சில உலகத்தரமானவையும் கூட.
-
17:29 - 17:32இந்த வீடியோவிலுள்ள பெண்களில் ஒருவர், அடெனிக்கே ஓகுன்லேசி, குழந்தைகளின்
-
17:32 - 17:34ஆடைகளை தயாரித்துக் கொண்டிருக்கிறார் -
-
17:34 - 17:39அதை அவர் ஒரு பொழுது போக்காக ஆரம்பித்து ஒரு வியாபாரமாக வளர்த்திருக்கிறார்.
-
17:39 - 17:42ஆப்ரிக்கத் துணி வகைகளை, நாங்கள் கொண்டிருப்பதைப் போன்றது,
-
17:43 - 17:44வேறெங்கிருந்தும் வரவழைக்கிற துணி வகைகளோடு இணைப்பது.
-
17:44 - 17:49எனவே, அவர் ஒரு சிறிய ஜோடி டங்காரீக்களை கோர்டுரோய்களோடு உருவாக்குவார்,
-
17:49 - 17:53ஆப்ரிக்க துணிகளின் கலப்போடு. மிகவும் கற்பனை திறன் மிகுந்த வடிவங்கள்.
-
17:55 - 17:58வால்-மார்டிடமிருந்து கூட வியாபார ஆணைகளைப் பெறுமளவிற்கு ஒரு நிலையை அடைந்திருக்கிறார்.
-
17:59 - 18:00(சிரிப்பு).
-
18:01 - 18:0310:00 ஆடைகளுக்கு.
-
18:04 - 18:08எனவே இதைச் செய்யும் திறனுள்ள மக்களை நாங்கள் கொண்டிருக்கிறோம் என்பதையே இது உங்களுக்குக் காண்பிக்கிறது.
-
18:08 - 18:13மேலும் அந்தப் பெண்கள் கருத்துள்ளவர்கள்: அவர்கள் கவனம் செலுத்தி; கடினமாக உழைக்கிறார்கள்.
-
18:13 - 18:15நான் உதாரணங்களைக் கொடுத்துக் கொண்டே செல்லமுடியும்:
-
18:15 - 18:19ருவாண்டாவின் பீட்ரைஸ் ககுபா, ஒரு பூ வியாபாரத்தை ஆரம்பித்து தற்போது ஒவ்வொரு காலையிலும்
-
18:19 - 18:24ஆம்ஸ்டர்டாமிலுள்ள டட்ச் ஏலத்திற்கு ஏற்றுமதி செய்கிறார், மேலும்
-
18:24 - 18:28அவரோடு பணியாற்றுவதற்கு மற்ற 200 பெண்களையும் ஆண்களையும் அமர்த்தியிருக்கிறார்.
-
18:29 - 18:33ஆயினும், இத்தகைய பலரும் மூலதனத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்,
-
18:34 - 18:37ஏனென்றால் எது தேவையோ அதை நாங்கள் செய்ய முடியும் என்பதை எங்கள் நாட்டிற்கு
-
18:37 - 18:42வெளியேயுள்ள யாரும் நம்புகிறதில்லை. சந்தை முறையில் யாரும் யோசிப்பதில்லை.
-
18:42 - 18:45வாய்ப்புள்ளது என்பதை யாரும் சிந்திப்பதில்லை.
-
18:45 - 18:48ஆனால், இப்போது படகை கைநழுவ விடுகிறவர்கள், எப்போதுமே விட்டுவிடுவார்கள்
-
18:48 - 18:50என்பதைச் சொல்லிக்கொண்டு தான் நான் இங்கே நிற்கிறேன்.
-
18:50 - 18:56எனவே நீங்கள் ஆப்ரிக்காவில் இருக்க விரும்பினால், மூலதனம் செய்வதைப் பற்றி சிந்தியுங்கள்.
-
18:57 - 19:03இந்த உலகின் பீட்ரைஸ்களைப் பற்றி நினையுங்கள், அடேனிக்கே-களை நினையுங்கள்,
-
19:03 - 19:06அவர்கள் தங்களை உலகப் பொருளாதாரத்திற்குள் கொண்டுவரும் நம்பமுடியாதவைகளைச்
-
19:06 - 19:09செய்து கொண்டிருக்கிறர்கள், தங்கள் உடனிருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும்
-
19:09 - 19:12வேலைவாய்ப்பை உறுதிசெய்யும் அதே வேளையில், அவர்கள் பெற்றோர்கள்
-
19:12 - 19:14போதுமான வருமானத்தைச் சம்பாதிப்பதால் அந்த வீடுகளில்
-
19:14 - 19:17உள்ள குழந்தைகள் கல்வியறிவைப் பெறுகிறார்கள்.
-
19:18 - 19:22எனவே வாய்ப்புகளை ஆராய்ந்து பார்க்க உங்களை நான் அழைக்கிறேன்.
-
19:23 - 19:27நீங்கள் டான்ஸானியாவிற்குச் செல்லும் போது, நிதானமாகக் கவனியுங்கள், ஏனென்றால்
-
19:27 - 19:31நீங்கள் நன்றாகச் செய்யக் கூடிய சில காரியங்களில் நீங்கள் ஈடுபடக்கூடிய பலவிதமான
-
19:31 - 19:36திறப்புகள் உங்களுக்கு இருப்பதைப் பற்றி நீங்கள் கேள்விப்படுவீர்கள்
-
19:36 - 19:41என நான் உறுதியாக இருக்கிறேன். கண்டத்திற்கும், மக்களுக்கும், உங்களுக்கும் கூட.
-
19:41 - 19:42உங்களுக்கு மிக்க நன்றி.
-
19:42 - 19:50(கைதட்டல்)
- Title:
- ஆப்ரிக்காவில் வர்த்தகம் செய்வது பற்றி நோஜி ஓகோன்ஜோ-ஐவேலா
- Speaker:
- Ngozi Okonjo-Iweala
- Description:
-
பஞ்சம் மற்றும் நோய், சண்டை மற்றும் ஊழல் போன்ற -- ஆப்ரிக்கா பற்றிய எதிர்மறையான கருத்துக்கள் பற்றி நமக்குத் தெரியும். ஆனால், அங்கே பல ஆப்ரிக்க நாடுகளில்: சீர்திருத்தங்கள், பொருளாதார வளர்ச்சி மற்றும் வர்த்தக வாய்ப்புகள் பற்றி, குறைவாக அறிவிக்கப்பட்ட ஒரு கதையும் நடந்து கொண்டு தான் இருக்கிறது என்பதாக நோஜி ஒகோன்ஜோ-ஐவேலா அவர்கள் சொல்கிறார்கள்:
- Video Language:
- English
- Team:
- closed TED
- Project:
- TEDTalks
- Duration:
- 19:49