1 00:00:05,000 --> 00:00:08,000 உங்களுக்கு மிக்க நன்றி, கிரிஸ். இங்கு வந்த ஒவ்வொருவரும் அவர்கள் பயந்ததாகச் 2 00:00:08,000 --> 00:00:12,000 சொன்னார்கள். நான் பயந்தேனா என்பது எனக்குத் தெரியாது, ஆனால் இது போன்ற ஒரு 3 00:00:12,000 --> 00:00:16,000 நேயர்களிடம் பேசுவது இது தான் எனக்கு முதன் முறை. 4 00:00:16,000 --> 00:00:20,000 உங்களைப் பார்க்கச் செய்வதற்காக என்னிடம் எவ்வித மதிநுட்பமான தொழிற்நுட்பமும் இல்லை. 5 00:00:20,000 --> 00:00:23,000 எவ்வித ஸ்லைடுகளும் இல்லை, எனவே நீங்கள் என்னோடு கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். 6 00:00:23,000 --> 00:00:26,000 (சிரிப்பு). 7 00:00:26,000 --> 00:00:32,000 இந்தக் காலையில் நான் என்ன செய்ய விரும்புகிறேனென்றால் ஓரிரண்டு கதைகளை உங்களுடன் 8 00:00:32,000 --> 00:00:35,000 பகிர்ந்து கொண்டு ஒரு வித்தியாசமான ஆப்ரிக்காவைப் பற்றி உங்களுடன் பேசுவதுதான். 9 00:00:35,000 --> 00:00:39,000 ஏற்கெனவே இந்தக் காலைப் பொழுதில், நீங்கள் அனைத்து நேரங்களிலும் ஆப்ரிக்காவைப் 10 00:00:39,000 --> 00:00:44,000 பற்றிக் கேள்விப்பட்டதைப் பற்றிய சில பேச்சுக்கள் இருந்தன: 11 00:00:44,000 --> 00:00:50,000 எச்ஐவி/எயிட்ஸின் ஆப்ரிக்கா, மலேரியாவின் ஆப்ரிக்கா, 12 00:00:50,000 --> 00:00:53,000 ஏழ்மையின் ஆப்ரிக்கா, சண்டைகளின் ஆப்ரிக்கா மற்றும் பேரழிவுகளின் ஆப்ரிக்கா. 13 00:00:53,000 --> 00:00:57,000 அவைகள் நடந்து கொண்டுதானிருக்கின்றன என்பது உண்மையாக இருக்கின்ற வேலையில், 14 00:00:57,000 --> 00:01:01,000 நீங்கள் அந்தளவிற்குக் கேள்விப்பட்டிராத ஒரு ஆப்ரிக்காவும் உள்ளது. 15 00:01:01,000 --> 00:01:05,000 சில நேரங்களில் நான் ஆச்சரியப்பட்டு, என்னையே நான் கேட்டுக் கொள்வேன், அது தான் கிரிஸ் கேள்விப்பட்ட பேச்சும் ஏனென்று. 16 00:01:05,000 --> 00:01:09,000 இது தான் அந்த வாய்ப்புள்ள ஆப்ரிக்கா. 17 00:01:09,000 --> 00:01:11,000 மக்கள் தங்களின் சொந்த எதிர்காலம் மற்றும் 18 00:01:11,000 --> 00:01:14,000 அவர்களது சொந்த இலக்கின் பொறுப்பையும் 19 00:01:14,000 --> 00:01:16,000 ஏற்றுக்கொள்ள விரும்புகிற ஆப்ரிக்கா இது தான். 20 00:01:16,000 --> 00:01:19,000 மேலும் இதைச் செய்வதற்கு மக்கள் வர்த்தகக் கூட்டுக்களை எதிர்பார்க்கிற ஆப்ரிக்க இதுதான். 21 00:01:19,000 --> 00:01:23,000 அதைப் பற்றி தான் நான் இன்று பேசவிரும்புகிறேன். 22 00:01:23,000 --> 00:01:25,000 ஆப்ரிக்காவிலுள்ள அந்த மாற்றத்தைப் பற்றி 23 00:01:25,000 --> 00:01:27,000 ஒரு கதையைச் சொல்லி ஆரம்பிக்க விரும்புகிறேன். 24 00:01:28,000 --> 00:01:33,000 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி, திரு டெப்ரியே அலாமியேசேகா, நைஜீரியாவின் 25 00:01:33,000 --> 00:01:37,000 எண்ணை-வளமிக்க மாநிலங்கள் ஒன்றின் ஆளுநர், லண்டனுக்கு வருகை தந்தபோது 26 00:01:37,000 --> 00:01:44,000 லண்டன் மெட்ரோபாலிட்டன் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். 27 00:01:44,000 --> 00:01:49,000 அவர் ஏன் கைது செய்யப்பட்டாரென்றால் 28 00:01:49,000 --> 00:01:52,000 அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் சொந்தமான இரகசியக் கணக்குகளுக்குள் $8 மில்லியன் 29 00:01:52,000 --> 00:01:55,000 அளவிற்கான பணப் பரிமாற்றம் இருந்தது. 30 00:01:56,000 --> 00:01:58,000 இந்தக் கைது நேர்ந்ததேனென்றால் லண்டன் மெட்ரோபாலிட்டன் காவல்துறைக்கும் 31 00:01:58,000 --> 00:02:01,000 நைஜீரியாவின் பொருளாதார மற்றும் நிதிக் குற்றங்கள் ஆணையத்திற்குமிடையே 32 00:02:01,000 --> 00:02:04,000 ஒத்துழைப்பு இருந்தது – எங்களின் மிகத் திறமைவாய்ந்த மற்றும் 33 00:02:04,000 --> 00:02:11,000 தைரியமான மக்களால் அது நடத்தப்பட்டது. 34 00:02:11,000 --> 00:02:14,000 திரு. நூஹு ரிபாடு. அலாமெயேசேகா லண்டனில் விசாரிக்கப்பட்டார். 35 00:02:14,000 --> 00:02:18,000 சில சட்ட ஓட்டைகளின் காரணமாக, அவர் ஒரு பெண் போன்று உடையணிந்து கொண்டு 36 00:02:18,000 --> 00:02:21,000 லண்டனிலிருந்து நைஜீரியாவிற்குத் திரும்பவும் ஓடிப்போகச் சமாளித்துக் கொண்டார், 37 00:02:21,000 --> 00:02:25,000 எங்களின் சட்டத்திட்டங்களின் படி, ஆளுநர்கள், ஜனாதிபதிகளின் பொறுப்பிலிருப்பவர்கள் – 38 00:02:25,000 --> 00:02:27,000 பல நாடுகளில் இருப்பது போல – தண்டிக்கப்பட 39 00:02:27,000 --> 00:02:32,000 முடியாத அளவிற்கு பாதுகாப்பைக் கொண்டுள்ளார்கள். ஆனால் என்ன நடந்தது: 40 00:02:32,000 --> 00:02:36,000 இந்த நடத்தையினால் மக்கள் மிகவும் உக்கிரமடைந்தார்கள், சட்டமன்ற உறுப்பினர்களால் அவரை 41 00:02:36,000 --> 00:02:42,000 நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் பதவியிலிருந்து நீக்குவது சாத்தியமானதாக இருந்தது. 42 00:02:43,000 --> 00:02:45,000 இன்று, அலாம்ஸ் – கொஞ்சகாலத்திலேயே – அவரை நாங்கள் சிறையில் சந்தித்தோம். 43 00:02:46,000 --> 00:02:51,000 ஆப்ரிக்க மக்கள் இதற்கு மேலும் அவர்கள் தலைவர்களிடமிருந்து ஊழலைத் தாங்கிக் 44 00:02:51,000 --> 00:02:56,000 கொள்ள விருப்பமுள்ளவர்களாக இல்லை என்பதின் உண்மை பற்றியதே இந்தக் கதை. 45 00:02:57,000 --> 00:03:02,000 மக்கள் அவர்களது வளங்களானது அவர்களின் நன்மைக்கென முறையாக நிர்வகிக்கப்படவேண்டும் 46 00:03:02,000 --> 00:03:07,000 என்றும் ஒரு சில முக்கியஸ்தர்களையே பலனடையச் செய்யும் இடங்களுக்கு 47 00:03:07,000 --> 00:03:10,000 அவைகள் எடுத்துச் செல்லப்படக் கூடாது என்பதை மக்கள் விரும்புகிறார்கள் என்பதைப் பற்றியதே இந்தக் கதை. 48 00:03:10,000 --> 00:03:14,000 ஆகையால், நீங்கள் ஊழல் மிகுந்த ஆப்ரிக்காவைப் பற்றிக் கேள்விப்படும் போது, 49 00:03:14,000 --> 00:03:18,000 எப்போதுமிருந்த ஊழல் – சில நாடுகளில் மக்களும் அரசாங்களும் இதை எதிர்த்துப் போராட 50 00:03:18,000 --> 00:03:21,000 கடுமையாக முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள 51 00:03:21,000 --> 00:03:25,000 வேண்டுமென நான் விரும்புகிறேன், மேலும் சில வெற்றிகளும் வந்து கொண்டிருக்கின்றன. 52 00:03:25,000 --> 00:03:28,000 பிரச்சினை முடிந்து விட்டது என்பது அதன் அர்த்தமா? பதில் இல்லையென்பதே. 53 00:03:28,000 --> 00:03:32,000 இன்னும் போகவேண்டியதற்கு வெகு தூரம் உள்ளது, ஆனால் அங்கே மனம் இருக்கிறது. 54 00:03:32,000 --> 00:03:36,000 இந்த மிக முக்கியமான போராட்டத்தில் வெற்றிகள் குவிக்கப்பட்டு வருகின்றன. 55 00:03:36,000 --> 00:03:38,000 எனவே நீங்கள் ஊழலைப் பற்றிக் கேள்விப்படும் போது, 56 00:03:38,000 --> 00:03:41,000 இதைப் பற்றி ஒன்றுமே செய்யப்படுவதில்லை என்று நினைக்காதீர்கள் - 57 00:03:41,000 --> 00:03:44,000 அதிகப்படியான ஊழலின் காரணமாக நீங்கள் 58 00:03:44,000 --> 00:03:47,000 ஆப்ரிக்க நாடுகளில் செயல்பட முடியாது என்பதாக நினைக்காதீர்கள். விஷயம் அதுவல்ல. 59 00:03:47,000 --> 00:03:53,000 போராடுவதற்கான மனது இருக்கிறது, பல நாடுகளில், அந்தப் போராட்டமானது நடந்து 60 00:03:53,000 --> 00:03:57,000 கொண்டிருக்கிறது மேலும் வெற்றியும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. மற்றவைகளில், 61 00:03:57,000 --> 00:04:00,000 என்னுடையதைப் போன்றவை, நைஜீரியாவில் சர்வாதிக்கத்தின் நெடுநாளைய வரலாறு 62 00:04:00,000 --> 00:04:04,000 இருந்திருக்கிறது, போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது மேலும் நாங்கள் நெடுந் தூரம் போக வேண்டியுள்ளது. 63 00:04:04,000 --> 00:04:08,000 ஆனால் விஷயத்தின் உண்மையென்னவென்றால் இது போய்க்கொண்டேயிருக்கிறது. 64 00:04:09,000 --> 00:04:11,000 முடிவுகள் காண்பிக்கின்றன: 65 00:04:11,000 --> 00:04:15,000 உலக வங்கி மற்றும் மற்ற ஸ்தாபனங்களினால் செய்யப்பட்ட 66 00:04:15,000 --> 00:04:19,000 தனிப்பட்ட கண்கானிப்பானது, அந்தப் போக்கானது ஊழலைப் பொறுத்தவரையில் 67 00:04:19,000 --> 00:04:22,000 குறைவாகவும், ஆட்சிமுறை மேம்பட்டு வருகிறது என்பதையும் பல நிகழ்வுகளில் காண்பிக்கின்றன. 68 00:04:22,000 --> 00:04:26,000 28 ஆப்ரிக்க நாடுகளில் நிர்வாகமானது தெளிவான மேல்நோக்கிய போக்கில் இருப்பதை, 69 00:04:26,000 --> 00:04:30,000 ஆப்ரிக்காவிற்கான பொருளாதார ஆணையத்தின் ஒரு ஆய்வு காண்பித்தது. 70 00:04:30,000 --> 00:04:32,000 நிர்வாகத்தின் இந்தப் பகுதியை விட்டு நான் செல்வதற்கு முன்பாக நான் 71 00:04:32,000 --> 00:04:34,000 இன்னுமொன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். 72 00:04:34,000 --> 00:04:37,000 மக்கள் ஊழல், ஊழலைப்பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார்கள். 73 00:04:37,000 --> 00:04:39,000 அதைப் பற்றி மக்கள் பேசும்போதெல்லாம் நீங்கள் 74 00:04:39,000 --> 00:04:41,000 உடனே ஆப்ரிக்காவைப் பற்றிதான் நினைக்கிறீர்கள். 75 00:04:41,000 --> 00:04:45,000 அது தான் அந்த காட்சி: ஆப்ரிக்க நாடுகள். ஆனால் நான் இதைச் செல்லட்டும்: 76 00:04:45,000 --> 00:04:51,000 லண்டனில் உள்ள ஒரு கணக்கிற்குள் அலாம்ஸால் $8 மில்லியனை அனுப்ப முடிந்ததானால் -- 77 00:04:53,000 --> 00:04:57,000 மற்ற மக்கள் எடுத்திருந்த வளரும் நாடுகளின் 78 00:04:57,000 --> 00:05:01,000 பணமான 20 முதல் 40 பில்லியன் அளவு வளர்ந்த 79 00:05:01,000 --> 00:05:04,000 நாடுகளில் உட்கார்ந்திருந்தால் – அவர்களால் இதைச் செய்ய முடிந்தால், 80 00:05:04,000 --> 00:05:07,000 அது என்ன? அது ஊழல் இல்லையா? 81 00:05:08,000 --> 00:05:12,000 இந்த நாட்டில், நீங்கள் திருடப்பட்ட பொருட்களைப் பெற்றுக் கொண்டால், நீங்கள் தண்டிக்கப்படத்தக்கவர்கள் இல்லையா? 82 00:05:13,000 --> 00:05:16,000 எனவே நாம் இது போன்ற வகையான ஊழலைப் பற்றிப் பேசும் போது, உலகத்தின் மற்ற 83 00:05:16,000 --> 00:05:19,000 பகுதிகளில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி நாம் நினைத்துப் பார்ப்போம் 84 00:05:19,000 --> 00:05:23,000 பணம் எங்கே போகிறது அதைத் தடுக்க என்ன செய்யலாம். 85 00:05:23,000 --> 00:05:26,000 நான் உலக வங்கியோடு கூட, சொத்து மீட்பின் மீதான, ஒரு முன்முயற்சியில் இப்போது 86 00:05:26,000 --> 00:05:29,000 வேலை செய்து கொண்டிருக்கிறேன், வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிற 87 00:05:29,000 --> 00:05:32,000 பணங்களை திரும்பப் பெறுவதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்பதை முயற்சித்துக் 88 00:05:32,000 --> 00:05:35,000 கொண்டு, வளரும் நாடுகளின் பணங்கள் – திரும்ப அனுப்பப் படுவதற்கு. 89 00:05:35,000 --> 00:05:38,000 ஏனென்றால் அங்கே உட்கார்ந்திருக்கிற பணத்தில் $20 பில்லியனை நம்மால் பெற 90 00:05:38,000 --> 00:05:41,000 முடிந்தால், அது சில நாடுகளுக்கு அனைத்து நிதியுதவிகளையும் 91 00:05:41,000 --> 00:05:44,000 ஒன்றாகச் சேர்ப்பதை விட அதிகமானதாக இருக்கக் கூடும். 92 00:05:44,000 --> 00:05:51,000 (கைதட்டல்). 93 00:05:51,000 --> 00:05:55,000 நான் பேச விரும்புகிற இரண்டாவது காரியம் சீரமைப்பிற்கான மனது. 94 00:05:55,000 --> 00:05:59,000 ஆப்ரிக்கர்கள், - அவர்கள் சோர்வடைந்த பிறகு, ஒவ்வொருவரின் உதவி மற்றும் 95 00:05:59,000 --> 00:06:04,000 கவனிப்பின் பொருளாக இருந்து இருந்து நாங்கள் சோர்வடைந்து விட்டோம். 96 00:06:04,000 --> 00:06:08,000 நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், ஆனால் நாங்கள் சீரமைப்பதற்கான மனதைக் 97 00:06:08,000 --> 00:06:12,000 கொண்டிருந்தோமானால், எங்களது இலக்கிற்கான பொறுப்பை நாங்கள் எடுத்துக் கொள்ள முடியும் என எங்களுக்குத் தெரிகிறது. 98 00:06:13,000 --> 00:06:17,000 மேலும் பல ஆப்ரிக்க நாடுகளில் இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றால், உணர்ந்து கொள்ளுதல், 99 00:06:17,000 --> 00:06:21,000 அது வேறு யாரும் செய்ய முடியாது நாங்கள் தான் செய்ய வேண்டும். நாங்கள் அதைச் செய்ய வேண்டியுள்ளது. 100 00:06:21,000 --> 00:06:25,000 எங்களை ஆதரிக்கும் பங்காளர்களை நாங்கள் அழைக்க முடியும், ஆனால் நாங்கள் தான் அதை ஆரம்பிக்க வேண்டும். 101 00:06:25,000 --> 00:06:28,000 எங்கள் பொருளாதாரங்களை நாங்கள் சீரமைக்க வேண்டும், எங்கள் தலைமைத்துவத்தை மாற்ற வேண்டும், 102 00:06:28,000 --> 00:06:34,000 பெரிய மாறுதலுள்ளவர்களாக மாற வேண்டும், மாற்றத்திற்கும் தகவல்களுக்கும் மிகவும் திறந்த மனதுள்ளவர்களாக இருக்க வேண்டும். 103 00:06:34,000 --> 00:06:36,000 அந்த கண்டத்திலுள்ள மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான, 104 00:06:36,000 --> 00:06:39,000 நைஜீரியாவில், நாங்கள் செய்ய ஆரம்பித்திருப்பது இது தான். 105 00:06:39,000 --> 00:06:42,000 உண்மையில், நீங்கள் நைஜீரியாவில் இல்லையென்றல், நீங்கள் ஆப்ரிக்காவிலேயே இல்லை. 106 00:06:42,000 --> 00:06:43,000 நான் அதை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். 107 00:06:43,000 --> 00:06:44,000 (சிரிப்பு). 108 00:06:44,000 --> 00:06:46,000 துணை சகாரா ஆப்ரிக்கர்களில் நான்கில் ஒருவர் நைஜீரியாக்காரர், மேலும் அது 140 109 00:06:48,000 --> 00:06:53,000 மில்லியன் சுறுசுறுப்பான மக்களைக் கொண்டுள்ளது – குழப்பமான மக்கள் - ஆனால் 110 00:06:54,000 --> 00:06:58,000 மிகவும் ஆர்வமுடைய மக்கள். உங்களுக்கு அலுப்பாகவே இருக்காது. 111 00:06:58,000 --> 00:06:59,000 (சிரிப்பு). 112 00:06:59,000 --> 00:07:01,000 நாங்கள் என்ன செய்ய ஆரம்பிதோமென்றால் பொறுப்பெடுத்துக் கொண்டு 113 00:07:01,000 --> 00:07:03,000 எங்களை நாங்களே சீரமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்வது தான். 114 00:07:04,000 --> 00:07:06,000 சீரமைப்புகளைச் செய்வதற்கு அந்த நேரத்தில் 115 00:07:06,000 --> 00:07:09,000 விருப்பமுள்ள ஒரு தலைவரின் ஆதரவோடு, 116 00:07:09,000 --> 00:07:11,000 நாங்களே மேம்படுத்திக் கொண்ட ஒரு 117 00:07:11,000 --> 00:07:13,000 கூட்டு சீரமைப்புத் திட்டத்தை முன் வைத்தோம். 118 00:07:13,000 --> 00:07:16,000 சர்வதேச நிதியல்ல. நான் 21 ஆண்டுகளாக வேலை 119 00:07:16,000 --> 00:07:19,000 பார்த்து ஒரு துணைத்தலைவராக உயர்ந்த, உலகவங்கியுமல்ல. 120 00:07:20,000 --> 00:07:22,000 யாருமே உங்களுக்காக அதைச் செய்ய முடியாது. உங்களுக்காக நீங்களே அதைச் செய்ய வேண்டும். 121 00:07:22,000 --> 00:07:26,000 அரசாங்கம் எதையுமே கொண்டிராத வர்த்தகங்களிலிருந்து அதை வெளியில் எடுப்பதைச் செய்யும் ஒரு 122 00:07:26,000 --> 00:07:30,000 திட்டத்தை நாங்களனைவரும் சேர்ந்து வைத்தோம் - அதிலிருந்துகொண்டிருப்பதால் அதற்கு ஒரு வேலையுமில்லை. 123 00:07:30,000 --> 00:07:32,000 பொருட்களையும் சேவைகளையும் உற்பத்தி செய்யும் 124 00:07:32,000 --> 00:07:33,000 வணிகத்தில் அரசு இருக்கக் கூடாது ஏனென்றால் 125 00:07:33,000 --> 00:07:36,000 அது திறனற்றதாகவும் போட்டி போடமுடியாததாகவுமாக இருக்கிறது. 126 00:07:36,000 --> 00:07:40,000 எனவே நாங்கள் எங்களது ஸ்தாபனங்களில் பெரும்பாலானவற்றை தனியார் மயமாக்க முடிவு செய்தோம். 127 00:07:40,000 --> 00:07:44,000 (கைதட்டல்). 128 00:07:45,000 --> 00:07:49,000 நாங்கள், அதன் விளைவாக, எங்களது சந்தைகளில் பலவற்றை தனியார்மயமாக்க முடிவு செய்தோம். 129 00:07:49,000 --> 00:07:52,000 2003-ன் இறுதியில் ஆரம்பித்த, இந்தச் சீரமைப்பிற்கு முன்பாக – 130 00:07:52,000 --> 00:07:56,000 நான் வாஷிங்டனை விட்டுப் போய் நிதியமைச்சர் என்ற பதவியை ஏற்றுக் கொள்வதற்கு 131 00:07:56,000 --> 00:07:58,000 முன்பாக – அதன் மொத்த 30-ஆண்டு வரலாற்றிலேயே 4,500 தரைவழி இணைப்புகளை 132 00:08:00,000 --> 00:08:04,000 மட்டுமே உண்டாக்கியிருந்த ஒரு தொலைபேசி நிறுவனத்தை 133 00:08:04,000 --> 00:08:09,000 நாங்கள் கொண்டிருந்தோம், என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? 134 00:08:09,000 --> 00:08:11,000 (சிரிப்பு). 135 00:08:11,000 --> 00:08:14,000 எங்களுடைய நாட்டில் ஒரு தொலைபேசியை வைத்திருப்பது ஒரு பெரிய ஆடம்பரம். 136 00:08:14,000 --> 00:08:16,000 உங்களால் அதைப் புரிந்து கொள்ள முடியாது. நீங்கள் லஞ்சம் கொடுக்க வேண்டும். 137 00:08:16,000 --> 00:08:18,000 உங்கள் தொலைபேசியைப் பெறுவதற்காக எல்லாவற்றையும் நீங்கள் செய்ய வேண்டும். 138 00:08:18,000 --> 00:08:21,000 ஜனாதிபதி ஓபசாஞ்சோ தொலைபேசித் துறையின் தனியார் மயமாக்கலை ஆதரித்து 139 00:08:21,000 --> 00:08:25,000 அதைத் துவக்கி வைத்த போது, நாங்கள் 4,500-ல் இருந்து 32 மில்லியன் ஜிஎஸ்எம் 140 00:08:26,000 --> 00:08:34,000 இணைப்புகளுக்குச் சென்றோம், அது இன்னும் கூடிக்கொண்டேயிருக்கிறது. 141 00:08:34,000 --> 00:08:39,000 சீனாவிற்குப் பிறகு, நைஜீரியா தொலைபேசிச் சந்தைதான் உலகில் இரண்டாவது வேகமாக 142 00:08:39,000 --> 00:08:44,000 வளரும் சந்தையாகும். தொலைத்தொடர்பில் ஆண்டிற்கு சுமார் $1 பில்லியன் முதலீடுகளை 143 00:08:44,000 --> 00:08:50,000 நாங்கள் பெற்றுக் கொண்டிருக்கிறோம். ஒரு சில புத்திசாலி மக்களைத் தவிர, வேறு யாருக்கும் தெரியாது. 144 00:08:50,000 --> 00:08:53,000 (சிரிப்பு). 145 00:08:53,000 --> 00:08:57,000 வந்த முதலாவது புத்திசாலித்தனமான நிறுவனம் 146 00:08:57,000 --> 00:08:59,000 தென் ஆப்ரிக்காவின் எம்டிஎன் நிறுவனம். 147 00:08:59,000 --> 00:09:03,000 நான் நிதியமைச்சராக இருந்த மூன்று ஆண்டுகளில், 148 00:09:03,000 --> 00:09:06,000 அவர்கள் ஆண்டிற்கு $360 மில்லியனை சராசரி இலாபமாக கொண்டார்கள். 149 00:09:08,000 --> 00:09:14,000 ஒரு சந்தையில் 360 மில்லியன் – ஒரு வருடத்திற்கு $500 க்கும் குறைவான 150 00:09:14,000 --> 00:09:18,000 வருட வருமானமுள்ள, ஒரு ஏழை நாடான ஒரு நாட்டில். 151 00:09:19,000 --> 00:09:21,000 எனவே சந்தையானது அங்கே இருக்கிறது. 152 00:09:21,000 --> 00:09:24,000 அவர்கள் இதைச் சுருட்டிக் கொண்டவுடன், மற்றவர்களுக்கும் அது தெரிந்து விட்டது. 153 00:09:25,000 --> 00:09:28,000 நைஜீரியர்களும் சில தந்தியில்லா தொலைத்தொடர்பு 154 00:09:28,000 --> 00:09:30,000 நிறுவனங்களைத் தொடங்க ஆரம்பித்தார்கள், 155 00:09:30,000 --> 00:09:32,000 மற்ற மூன்று அல்லது நான்கு பேர்கள் வந்திருக்கிறார்கள். 156 00:09:32,000 --> 00:09:35,000 ஆனால் அங்கே மிகப்பெரிய சந்தையுள்ளது, மக்களுக்கு அதைப் பற்றித் தெரியாது, 157 00:09:35,000 --> 00:09:38,000 அல்லது அவர்கள் அதைப்பற்றி தெரிந்து கொள்ள விரும்பவில்லை. 158 00:09:40,000 --> 00:09:42,000 எனவே தனியார் மயமாக்கல் நாங்கள் செய்திருக்கிற ஒரு காரியம். 159 00:09:43,000 --> 00:09:49,000 நாங்கள் செய்திருக்கிற மற்றொரு காரியம் எங்களது நிதிகளை சிறப்பாக நிர்வகிப்பது. 160 00:09:50,000 --> 00:09:52,000 உங்கள் சொந்த நிதிகளை நீங்கள் நன்றாக நிர்வகிக்கவில்லையானால் வேறு யாரும் 161 00:09:53,000 --> 00:09:56,000 உங்களுக்கு உதவவோ அல்லது உங்களை ஆதரிக்கவோ போகிறதில்லை. 162 00:09:56,000 --> 00:10:00,000 மேலும், நைஜீரியா, அதன் எண்ணைத் துறையில், ஊழலோடு இருப்பதற்கும் 163 00:10:00,000 --> 00:10:05,000 அதன் சொந்த பொது நிதிகளை நன்றாக நிர்வகிக்காமல் இருப்பதற்கும் பேர் போனதாகும். 164 00:10:05,000 --> 00:10:09,000 எனவே நாங்கள் என்ன செய்ய முயற்சித்தோம்? நாங்கள் ஒரு நிதிச் சட்டத்தை அறிமுகப்படுத்தினோம் 165 00:10:10,000 --> 00:10:12,000 அது எங்களது நிதிநிலையறிக்கையை எண்ணை விலையிலிருந்து துண்டித்தது. 166 00:10:12,000 --> 00:10:16,000 அதற்கு முன்பாக நாங்கள் எவ்வளவு எண்ணையைக் கொண்டு வருகிறோமோ அதன் மீது நிதிநிலை அறிக்கையை 167 00:10:16,000 --> 00:10:21,000 அமைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தோம், ஏனென்றால் எண்ணைதான் எங்கள் பொருளாதாரத்தில் 168 00:10:21,000 --> 00:10:24,000 மிகப்பெரிய, அதிகம் வருமானம் சம்பாதிக்கும் துறையாகும். எங்கள் வருமானத்தில் 70% எண்ணையிலிருந்து வருகிறது. 169 00:10:24,000 --> 00:10:28,000 நாங்கள் அதைத் துண்டித்தோம், அதை நாங்கள் செய்தவுடன் எண்ணை விலையிலிருந்து 170 00:10:28,000 --> 00:10:31,000 கொஞ்சம் குறைவான விலையில் நிதிநிலை அறிக்கையைத் தயாரிக்க ஆரம்பித்து அந்த 171 00:10:31,000 --> 00:10:35,000 விலைக்கு மேல் என்ன இருந்ததோ அதைச் சேமிக்க ஆரம்பித்தோம். 172 00:10:36,000 --> 00:10:39,000 நாங்கள் அதை இழுக்க முடியும் என்று தெரியாது; அது மிகவும் விவாதத்திற்குரியதாக இருந்தது. 173 00:10:39,000 --> 00:10:42,000 ஆனால் அது உடனடியாகச் செய்தது என்னவென்றால், எங்கள் பொருளாதார வளர்ச்சியில் 174 00:10:42,000 --> 00:10:45,000 இருந்து வந்த ஏற்ற இறக்கமானது – எண்ணைவிலை அதிமாக இருந்த போதிலும் கூட, 175 00:10:45,000 --> 00:10:49,000 நாங்கள் மிக விரைவாக வளர்ந்தோம். 176 00:10:49,000 --> 00:10:51,000 அவைகள் சரியும் போது, நாங்களும் சரிந்தோம். 177 00:10:51,000 --> 00:10:55,000 பொருளாதாரத்தில், நாங்கள் எதற்கும் பணம் கொடுக்க முடியவில்லை, எந்த சம்பளமும் கொடுக்க முடியவில்லை. 178 00:10:56,000 --> 00:11:00,000 அது சீராக்கப்பட்டு விட்டது. நான் விலகுவதற்கு முன்பாக, எங்களால் $27 பில்லியன் சேமிக்க 179 00:11:00,000 --> 00:11:06,000 முடிந்தது. இது எங்களுடைய சேமிப்பிற்குச் சென்றது – நான் 2003-ல் வந்த போது, நாங்கள் 180 00:11:06,000 --> 00:11:10,000 சேமிப்பில் 7 பில்லியனைக் கொண்டிருந்தோம். 181 00:11:11,000 --> 00:11:14,000 நான் விலகும் நேரத்தில், நாங்கள் கிட்டத்தட்ட $30 பில்லியனுக்குப் போயிருந்தோம். 182 00:11:14,000 --> 00:11:17,000 நாம் இப்போது பேசுகிறபோது, எங்கள் நிதியின் முறையான நிர்வாகத்தின் காரணமாக 183 00:11:18,000 --> 00:11:22,000 நாங்கள் சேமிப்பில் $40 பில்லியன்களைக் கொண்டுள்ளோம். 184 00:11:23,000 --> 00:11:26,000 அது எங்களது பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தி, நிலையானதாக ஆக்குகிறது. 185 00:11:26,000 --> 00:11:29,000 எப்போதுமே ஏறியிறங்குகிற எங்களது பரிமாற்ற வீதமானது, வர்த்தகம் செய்கிற மக்கள் 186 00:11:29,000 --> 00:11:33,000 பொருளாதாரத்தில், விலைகளை முன்னறிவிப்பதைக் கொண்டிருக்கும் வகையில், 187 00:11:33,000 --> 00:11:38,000 ஓரளவிற்கு நிலையானதாக உள்ளது மேலும் அது நிர்வகிக்கப்பட்டு வருகிறது. 188 00:11:40,000 --> 00:11:44,000 நாங்கள் பணவீக்கத்தை 28 சதவீதத்திலிருந்து சுமார் 11 சதவீதத்திற்குக் கொண்டுவந்தோம். 189 00:11:46,000 --> 00:11:52,000 எங்களது நாட்டின் வளர்ச்சி வீதம் முந்தைய பத்து ஆண்டுகளிலிருந்து 2.3 சதவீதத்தில் 190 00:11:52,000 --> 00:11:55,000 இருந்து சுமார் 6.5 சதவீதத்திற்கு வளரக் கொண்டிருந்தோம். 191 00:11:56,000 --> 00:11:59,000 எனவே அனைத்து மாற்றங்களும் சீரமைப்புகளும் பொருளாதாரத்தில் 192 00:11:59,000 --> 00:12:02,000 அளவிடக்கூடிய முடிவுகளில் காண்பிக்க ஆரம்பித்தது. 193 00:12:02,000 --> 00:12:06,000 மேலும் எது மிகவும் முக்கியம், ஏனென்றால் எண்ணையிலிருந்து வெளியேறி பரவலாக்கல் 194 00:12:06,000 --> 00:12:08,000 செய்வது – மேலும் இந்த ஒரு பெரிய நாட்டில், ஆப்ரிக்காவிலுள்ள பலநாடுகளைப் போன்று 195 00:12:08,000 --> 00:12:11,000 மிக அநேக வாய்ப்புகள் உள்ளன – குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் 196 00:12:13,000 --> 00:12:16,000 பெரும்பாலான இந்த வளர்ச்சியானது எண்ணைத் துறையிலிருந்து வரவில்லை, 197 00:12:16,000 --> 00:12:19,000 ஆனால் எண்ணை-சாராத துறையிலிருந்தே என்பதுதான். 198 00:12:19,000 --> 00:12:22,000 விவசாயம் 8 சதவீதத்தை விட சிறப்பாக வளர்ச்சியடைந்தது. 199 00:12:22,000 --> 00:12:26,000 தொலைதொடர்பு துறை வளர்ந்த போது, வீடு மற்றும் கட்டுமானம், இப்படி நான் 200 00:12:26,000 --> 00:12:31,000 போய்க்கொண்டே இருக்க முடியும். மேலும் நீங்கள் மேக்ரோ-பொருளாதாரத்தை 201 00:12:31,000 --> 00:12:33,000 நேராக்கிவிடும் போது, மற்ற பல்வேறு துறைகளிலான வாய்ப்புகளானது மிகப் பெரிய 202 00:12:33,000 --> 00:12:37,000 அளவில் இருக்கும் என்பதை உங்களுக்குத் தெளிவாக்குவதற்குத் தான் இது. 203 00:12:38,000 --> 00:12:41,000 நான் சொன்னது போலவே, நாங்கள் விவசாயத்திலும் வாய்ப்புகளைக் கொண்டுள்ளோம். 204 00:12:41,000 --> 00:12:45,000 நாங்கள் திட கனிமங்களிலும் வாய்ப்புக்களைக் கொண்டுள்ளோம். யாருமே முதலீடு கூடச் 205 00:12:45,000 --> 00:12:48,000 செய்திராத அல்லது ஆராய்ச்சி செய்திருக்காத நிறைய கனிமங்களை நாங்கள் கொண்டுள்ளோம். 206 00:12:48,000 --> 00:12:51,000 அதைச் சாத்தியமாக்குவதற்கு முறையான சட்டம் இல்லாமல், 207 00:12:51,000 --> 00:12:54,000 அது நடக்காது என்பதை நாங்கள் உணர்ந்தோம். 208 00:12:54,000 --> 00:12:57,000 எனவே நாங்கள் இப்போது ஒரு சுரங்க நடத்தை விதியைக் கொண்டுள்ளோம் அது உலகின் மிகச்சிறந்த சிலவற்றோடு ஒப்பிடக் கூடியது. 209 00:12:58,000 --> 00:13:00,000 நாங்கள் வீடு மற்றும் வீட்டுமனையிலும் வாய்ப்புகளைக் கொண்டுள்ளோம். 210 00:13:00,000 --> 00:13:03,000 140 மில்லின் மக்கள் தொகை கொண்ட நாட்டில் ஒன்றுமே இல்லை – 211 00:13:04,000 --> 00:13:09,000 நீங்கள் இங்கே அறிந்திருக்கிறபடி எந்த பெருவணிக வளாகங்களும் இல்லை. 212 00:13:10,000 --> 00:13:13,000 மக்களின் கற்பனாசக்தியை தூண்டிவிட்ட 213 00:13:13,000 --> 00:13:15,000 சிலருக்கு இது ஒரு முதலீட்டு வாய்ப்பு. 214 00:13:16,000 --> 00:13:19,000 இப்போது, இத்தகைய வணிகவளாகங்களில் இருக்கும் வியாபாரங்கள் அவர்கள் 215 00:13:19,000 --> 00:13:22,000 எதிர்பார்த்ததை விட நான்கு மடங்குகள் அதிகமான விற்றுமுதலைக் கொண்டுள்ளன. 216 00:13:23,000 --> 00:13:26,000 எனவே, கட்டுமானத்தில், வீட்டுமனையில், அடகுச் சந்தையில் 217 00:13:26,000 --> 00:13:28,000 பெரிய காரியங்கள் நடந்தன. நிதிசார்ந்த சேவைகள்: 218 00:13:29,000 --> 00:13:33,000 நாங்கள் 89 வங்கிகளைக் கொண்டிருந்தோம். அதில் மிக அதிகமானவை அவர்களது உண்மையான வியாபாரத்தைச் செய்யாமலிருந்தார்கள். 219 00:13:33,000 --> 00:13:37,000 அவர்களின் மூலதனத்தை அதிகரிக்க வேண்டும் – பங்கு மூலதனம்- என கோரிக்கையை 220 00:13:37,000 --> 00:13:42,000 விடுத்து நாங்கள் அவைகளை 89 –லிருந்து 25 வங்கிகளாக கூட்டிச் சேர்த்தோம். 221 00:13:42,000 --> 00:13:47,000 மேலும் அது சுமார் $25 மில்லியனிலிருந்து $150 மில்லியனுக்குச் சென்றது. 222 00:13:47,000 --> 00:13:51,000 வங்கிகள் – இத்தகைய வங்கிகள் தற்போது கூட்டிச் சேர்க்கப்பட்டுள்ளன, அப்படி வங்கி 223 00:13:51,000 --> 00:13:55,000 அமைப்புகளைப் பலப்படுத்தியது வெளியிலிருந்து நிறைய மூலதனத்தை கவர்ந்திருக்கிறது. 224 00:13:55,000 --> 00:13:59,000 யூகேயின் பார்க்லேஸ் வங்கி 500 மில்லியன்களைக் கொண்டு வருகிறது. 225 00:13:59,000 --> 00:14:03,000 ஸ்டாண்டர்டு சார்டர்ட் 140 மில்லியனைக் கொண்டு வந்திருக்கிறது. 226 00:14:03,000 --> 00:14:06,000 இப்படி நான் போய்க்கொண்டே இருக்க முடியும். மேலும் மேலும், அந்த அமைப்பிற்குள் டாலர்கள். 227 00:14:06,000 --> 00:14:08,000 இதையே தான் நாங்கள் காப்பீட்டுத் துறையிலும் செய்தோம். 228 00:14:08,000 --> 00:14:11,000 எனவே நிதிச் சேவைகளில், ஒரு மிகப்பெரிய வாய்ப்பின் சந்தர்ப்பம். 229 00:14:11,000 --> 00:14:17,000 சுற்றுலாவில், பல ஆப்ரிக்க நாடுகளில், ஒரு பெரிய வாய்ப்புள்ளது. 230 00:14:17,000 --> 00:14:20,000 கிழக்கு ஆப்ரிக்காவைப் பற்றி பலமக்கள் அறிந்திருப்பது என்னவோ அதுதான்: 231 00:14:21,000 --> 00:14:24,000 வன உயிர்கள், யானைகள், இப்படியாக. 232 00:14:24,000 --> 00:14:26,000 ஆனால் சுற்றுலாச் சந்தையை, அவைகள் மக்களை உண்மையிலேயெ பயனுறச் 233 00:14:26,000 --> 00:14:29,000 செய்யும் வகையில் நிர்வகிப்பது மிகவும் முக்கியமானதாகும். 234 00:14:30,000 --> 00:14:33,000 எனவே நான் என்ன சொல்ல முயற்சிக்கிறேன்? அந்தக் கண்டத்தின் மீது ஒரு புதிய 235 00:14:33,000 --> 00:14:36,000 அலையிருக்கிறது என்பதை உங்களுக்குச் சொல்லவே விரும்புகிறேன். 236 00:14:36,000 --> 00:14:41,000 திறப்பு மற்றும் ஜனநாயகமாக்கலின் ஒரு புதிய அலை அதில், 2000-லிருந்து, ஆப்ரிக்க 237 00:14:41,000 --> 00:14:43,000 நாடுகளில் மூன்றில்-இரண்டிற்கு மேலாக பல-கட்சி ஜனநாயக 238 00:14:43,000 --> 00:14:45,000 தேர்தல்களைக் கொண்டிருக்கிறார்கள். 239 00:14:46,000 --> 00:14:49,000 அனைத்துமே முழுமையானவையாக இல்லை, அல்லது இருக்காது, 240 00:14:49,000 --> 00:14:51,000 ஆனால் போக்கு மிகத் தெளிவாக உள்ளது. 241 00:14:51,000 --> 00:14:55,000 கடந்த மூன்று ஆண்டுகளாக, கண்டத்தின் மீதான ஆண்டு சராசரி வளர்ச்சியானது 2.5 242 00:14:55,000 --> 00:14:58,000 சதவீதத்திலிருந்து சுமார் 5 சதவீதமாக உயர்ந்திருக்கிறது என்பதையே நான் 243 00:14:58,000 --> 00:15:02,000 உங்களுக்குச் சொல்ல முயற்சிக்கிறேன். 244 00:15:02,000 --> 00:15:06,000 இது பல ஓஈசிடி நாடுகள் செய்து காட்டியிருப்பதை விடச் சிறந்தது தான். 245 00:15:07,000 --> 00:15:11,000 எனவே காரியங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன என்பது தெளிவாகிறது. 246 00:15:11,000 --> 00:15:13,000 கண்டத்தில் சண்டைகள் குறைந்து வருகின்றன; ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பாக சுமார் 12 247 00:15:14,000 --> 00:15:16,000 சண்டைகளில் இருந்து, மூன்று அல்லது நான்காக 248 00:15:16,000 --> 00:15:18,000 குறைந்திருக்கிறோம், அவைகளில் 249 00:15:18,000 --> 00:15:21,000 மிகவும் மோசமானது, உண்மையிலேயே, டார்பர் தான். 250 00:15:21,000 --> 00:15:24,000 மேலும், பாருங்கள், உங்களிடம் அண்டைப்பக்க பாதிப்பு உள்ளது, அதில் கண்டத்தின் ஒரு 251 00:15:24,000 --> 00:15:26,000 பகுதியில் ஏதாவது நடந்து கொண்டிருந்தால், அந்த முழுக் 252 00:15:26,000 --> 00:15:29,000 கண்டமும் பாதிக்கப்பட்டது போல காணப்படுகிறது. 253 00:15:29,000 --> 00:15:32,000 ஆனால் இந்தக் கண்டம் அப்படியல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் – 254 00:15:32,000 --> 00:15:38,000 இந்தக் கண்டம் ஒரு நாடு அல்ல ஆனால் பல நாடுகளால் ஆனது. 255 00:15:38,000 --> 00:15:40,000 மேலும் மூன்று அல்லது நான்கு சண்டைகளுக்கு குறைந்து வந்திருப்போமானால், 256 00:15:40,000 --> 00:15:43,000 ஒரு நிலையான, வளர்கிற, ஆச்சரியமூட்டுகிற 257 00:15:43,000 --> 00:15:50,000 நிறைய வாய்ப்புகளுள்ள பொருளாதாரத்தில் முதலீடு செய்வதற்கு 258 00:15:50,000 --> 00:15:53,000 மிக அதிகமான வாய்ப்புகள் உள்ளது என்றே அர்த்தம். 259 00:15:54,000 --> 00:15:58,000 இந்த முதலீட்டைப் பற்றி ஒரே ஒரு குறிப்பை வைக்க விரும்புகிறேன். 260 00:15:59,000 --> 00:16:01,000 ஆப்ரிக்கர்களுக்கு உதவும் சிறந்த வழியானது அவர்களின் சொந்தக் 261 00:16:02,000 --> 00:16:05,000 கால்களில் நிற்பதற்கு உதவுவதே. 262 00:16:05,000 --> 00:16:09,000 அதைச் செய்வதற்கான சிறந்த வழியானது வேலைகளை உருவாக்க உதவுவதே. 263 00:16:10,000 --> 00:16:14,000 மலேரியாவை எதிர்த்துப் போராடுவதும் பணத்தை அதில் போடுவதும் குழந்தைகளின் உயிர்களைக் 264 00:16:14,000 --> 00:16:18,000 காப்பாற்றுவதும் ஒரு பிரச்சினையும் இல்லை. நான் சொல்லிக் கொண்டிருப்பது அதுவல்ல. அது நல்லது தான். 265 00:16:19,000 --> 00:16:23,000 ஆனால் ஒரு குடும்பத்தின் மீதான தாக்கத்தைக் கற்பனை செய்து பாருங்கள். பெற்றோர்கள் 266 00:16:23,000 --> 00:16:25,000 பணியமர்த்தப்பட்டு அவர்களின் குழந்தைகளைப் பள்ளிக்குச் செல்லுமாறு செய்தால், 267 00:16:25,000 --> 00:16:28,000 நோய்க்கெதிராகப் போராடுவதற்கு அவர்களாகவே மருந்துகளை வாங்க முடிந்ததானால். 268 00:16:28,000 --> 00:16:32,000 வேலைகளை உருவாக்கி மக்களை அவர்களது சொந்தக் காலில் நிற்கச் செய்ய உதவுகிற அதே வேளையில், 269 00:16:32,000 --> 00:16:37,000 நீங்களே பணத்தை சம்பாதிக்க முடிகிற இடங்களில் நாம் முதலீடுகளைச் செய்ய முடிந்தால், 270 00:16:37,000 --> 00:16:42,000 அது ஒரு அற்புதமான வாய்ப்பல்லவா? நாம் போக வேண்டிய வழி அது தானல்லவா? 271 00:16:42,000 --> 00:16:45,000 கண்டத்தில் முதலீடு செய்வதற்கான சிறந்த மக்கள் 272 00:16:45,000 --> 00:16:47,000 பெண்களே என்று நான் சொல்ல விரும்புகிறேன். 273 00:16:48,000 --> 00:16:55,000 (கைதட்டல்). 274 00:16:55,000 --> 00:17:00,000 இங்கே நான் ஒரு சிடி-யை வைத்திருக்கிறேன். சரியான நேரத்தில் எதையும் சொல்லாததற்கு நான் வருந்துகிறேன். 275 00:17:00,000 --> 00:17:02,000 மற்றபடி, நீங்கள் இதைப் பார்க்க வேண்டுமென நான் விரும்பியிருப்பேன். 276 00:17:02,000 --> 00:17:05,000 அது சொல்கிறது, “ஆப்ரிக்கா: வியாபாரத்திற்கு திறந்திருக்கிறது.” 277 00:17:06,000 --> 00:17:09,000 மேலும் இது தான் உண்மையிலேயே ஆண்டின் சிறந்த செய்திப் படமாக 278 00:17:09,000 --> 00:17:11,000 விருதைப் பெற்ற அந்த வீடியோ. 279 00:17:11,000 --> 00:17:13,000 இதைச் செய்த பெண்கள் டான்ஸானியாவில் இருக்கப் போகிறார்கள் என்பதைப் புரிந்து 280 00:17:13,000 --> 00:17:18,000 கொள்ளுங்கள், அங்கு அவர்கள் ஜூனில் அந்த அமர்வினைக் கொண்டிருக்கிறார்கள். 281 00:17:19,000 --> 00:17:24,000 மேலும் இது ஆப்ரிக்கர்களை உங்களுக்குக் காட்டுகிறது, குறிப்பாகப் பெண்களை, அத்தனை பிரச்சினைகளுக்கு 282 00:17:24,000 --> 00:17:29,000 மத்தியிலும் அவர்கள் வியாபாரத்தை வளர்த்திருக்கிறார்கள், அவைகளில் சில உலகத்தரமானவையும் கூட. 283 00:17:29,000 --> 00:17:32,000 இந்த வீடியோவிலுள்ள பெண்களில் ஒருவர், அடெனிக்கே ஓகுன்லேசி, குழந்தைகளின் 284 00:17:32,000 --> 00:17:34,000 ஆடைகளை தயாரித்துக் கொண்டிருக்கிறார் - 285 00:17:34,000 --> 00:17:39,000 அதை அவர் ஒரு பொழுது போக்காக ஆரம்பித்து ஒரு வியாபாரமாக வளர்த்திருக்கிறார். 286 00:17:39,000 --> 00:17:42,000 ஆப்ரிக்கத் துணி வகைகளை, நாங்கள் கொண்டிருப்பதைப் போன்றது, 287 00:17:43,000 --> 00:17:44,000 வேறெங்கிருந்தும் வரவழைக்கிற துணி வகைகளோடு இணைப்பது. 288 00:17:44,000 --> 00:17:49,000 எனவே, அவர் ஒரு சிறிய ஜோடி டங்காரீக்களை கோர்டுரோய்களோடு உருவாக்குவார், 289 00:17:49,000 --> 00:17:53,000 ஆப்ரிக்க துணிகளின் கலப்போடு. மிகவும் கற்பனை திறன் மிகுந்த வடிவங்கள். 290 00:17:55,000 --> 00:17:58,000 வால்-மார்டிடமிருந்து கூட வியாபார ஆணைகளைப் பெறுமளவிற்கு ஒரு நிலையை அடைந்திருக்கிறார். 291 00:17:59,000 --> 00:18:00,000 (சிரிப்பு). 292 00:18:01,000 --> 00:18:03,000 10:00 ஆடைகளுக்கு. 293 00:18:04,000 --> 00:18:08,000 எனவே இதைச் செய்யும் திறனுள்ள மக்களை நாங்கள் கொண்டிருக்கிறோம் என்பதையே இது உங்களுக்குக் காண்பிக்கிறது. 294 00:18:08,000 --> 00:18:13,000 மேலும் அந்தப் பெண்கள் கருத்துள்ளவர்கள்: அவர்கள் கவனம் செலுத்தி; கடினமாக உழைக்கிறார்கள். 295 00:18:13,000 --> 00:18:15,000 நான் உதாரணங்களைக் கொடுத்துக் கொண்டே செல்லமுடியும்: 296 00:18:15,000 --> 00:18:19,000 ருவாண்டாவின் பீட்ரைஸ் ககுபா, ஒரு பூ வியாபாரத்தை ஆரம்பித்து தற்போது ஒவ்வொரு காலையிலும் 297 00:18:19,000 --> 00:18:24,000 ஆம்ஸ்டர்டாமிலுள்ள டட்ச் ஏலத்திற்கு ஏற்றுமதி செய்கிறார், மேலும் 298 00:18:24,000 --> 00:18:28,000 அவரோடு பணியாற்றுவதற்கு மற்ற 200 பெண்களையும் ஆண்களையும் அமர்த்தியிருக்கிறார். 299 00:18:29,000 --> 00:18:33,000 ஆயினும், இத்தகைய பலரும் மூலதனத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள், 300 00:18:34,000 --> 00:18:37,000 ஏனென்றால் எது தேவையோ அதை நாங்கள் செய்ய முடியும் என்பதை எங்கள் நாட்டிற்கு 301 00:18:37,000 --> 00:18:42,000 வெளியேயுள்ள யாரும் நம்புகிறதில்லை. சந்தை முறையில் யாரும் யோசிப்பதில்லை. 302 00:18:42,000 --> 00:18:45,000 வாய்ப்புள்ளது என்பதை யாரும் சிந்திப்பதில்லை. 303 00:18:45,000 --> 00:18:48,000 ஆனால், இப்போது படகை கைநழுவ விடுகிறவர்கள், எப்போதுமே விட்டுவிடுவார்கள் 304 00:18:48,000 --> 00:18:50,000 என்பதைச் சொல்லிக்கொண்டு தான் நான் இங்கே நிற்கிறேன். 305 00:18:50,000 --> 00:18:56,000 எனவே நீங்கள் ஆப்ரிக்காவில் இருக்க விரும்பினால், மூலதனம் செய்வதைப் பற்றி சிந்தியுங்கள். 306 00:18:57,000 --> 00:19:03,000 இந்த உலகின் பீட்ரைஸ்களைப் பற்றி நினையுங்கள், அடேனிக்கே-களை நினையுங்கள், 307 00:19:03,000 --> 00:19:06,000 அவர்கள் தங்களை உலகப் பொருளாதாரத்திற்குள் கொண்டுவரும் நம்பமுடியாதவைகளைச் 308 00:19:06,000 --> 00:19:09,000 செய்து கொண்டிருக்கிறர்கள், தங்கள் உடனிருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் 309 00:19:09,000 --> 00:19:12,000 வேலைவாய்ப்பை உறுதிசெய்யும் அதே வேளையில், அவர்கள் பெற்றோர்கள் 310 00:19:12,000 --> 00:19:14,000 போதுமான வருமானத்தைச் சம்பாதிப்பதால் அந்த வீடுகளில் 311 00:19:14,000 --> 00:19:17,000 உள்ள குழந்தைகள் கல்வியறிவைப் பெறுகிறார்கள். 312 00:19:18,000 --> 00:19:22,000 எனவே வாய்ப்புகளை ஆராய்ந்து பார்க்க உங்களை நான் அழைக்கிறேன். 313 00:19:23,000 --> 00:19:27,000 நீங்கள் டான்ஸானியாவிற்குச் செல்லும் போது, நிதானமாகக் கவனியுங்கள், ஏனென்றால் 314 00:19:27,000 --> 00:19:31,000 நீங்கள் நன்றாகச் செய்யக் கூடிய சில காரியங்களில் நீங்கள் ஈடுபடக்கூடிய பலவிதமான 315 00:19:31,000 --> 00:19:36,000 திறப்புகள் உங்களுக்கு இருப்பதைப் பற்றி நீங்கள் கேள்விப்படுவீர்கள் 316 00:19:36,000 --> 00:19:41,000 என நான் உறுதியாக இருக்கிறேன். கண்டத்திற்கும், மக்களுக்கும், உங்களுக்கும் கூட. 317 00:19:41,000 --> 00:19:42,000 உங்களுக்கு மிக்க நன்றி. 318 00:19:42,000 --> 00:19:50,000 (கைதட்டல்)