உங்களுக்கு மிக்க நன்றி, கிரிஸ். இங்கு வந்த ஒவ்வொருவரும் அவர்கள் பயந்ததாகச்
சொன்னார்கள். நான் பயந்தேனா என்பது எனக்குத் தெரியாது, ஆனால் இது போன்ற ஒரு
நேயர்களிடம் பேசுவது இது தான் எனக்கு முதன் முறை.
உங்களைப் பார்க்கச் செய்வதற்காக என்னிடம் எவ்வித மதிநுட்பமான தொழிற்நுட்பமும் இல்லை.
எவ்வித ஸ்லைடுகளும் இல்லை, எனவே நீங்கள் என்னோடு கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும்.
(சிரிப்பு).
இந்தக் காலையில் நான் என்ன செய்ய விரும்புகிறேனென்றால் ஓரிரண்டு கதைகளை உங்களுடன்
பகிர்ந்து கொண்டு ஒரு வித்தியாசமான ஆப்ரிக்காவைப் பற்றி உங்களுடன் பேசுவதுதான்.
ஏற்கெனவே இந்தக் காலைப் பொழுதில், நீங்கள் அனைத்து நேரங்களிலும் ஆப்ரிக்காவைப்
பற்றிக் கேள்விப்பட்டதைப் பற்றிய சில பேச்சுக்கள் இருந்தன:
எச்ஐவி/எயிட்ஸின் ஆப்ரிக்கா, மலேரியாவின் ஆப்ரிக்கா,
ஏழ்மையின் ஆப்ரிக்கா, சண்டைகளின் ஆப்ரிக்கா மற்றும் பேரழிவுகளின் ஆப்ரிக்கா.
அவைகள் நடந்து கொண்டுதானிருக்கின்றன என்பது உண்மையாக இருக்கின்ற வேலையில்,
நீங்கள் அந்தளவிற்குக் கேள்விப்பட்டிராத ஒரு ஆப்ரிக்காவும் உள்ளது.
சில நேரங்களில் நான் ஆச்சரியப்பட்டு, என்னையே நான் கேட்டுக் கொள்வேன், அது தான் கிரிஸ் கேள்விப்பட்ட பேச்சும் ஏனென்று.
இது தான் அந்த வாய்ப்புள்ள ஆப்ரிக்கா.
மக்கள் தங்களின் சொந்த எதிர்காலம் மற்றும்
அவர்களது சொந்த இலக்கின் பொறுப்பையும்
ஏற்றுக்கொள்ள விரும்புகிற ஆப்ரிக்கா இது தான்.
மேலும் இதைச் செய்வதற்கு மக்கள் வர்த்தகக் கூட்டுக்களை எதிர்பார்க்கிற ஆப்ரிக்க இதுதான்.
அதைப் பற்றி தான் நான் இன்று பேசவிரும்புகிறேன்.
ஆப்ரிக்காவிலுள்ள அந்த மாற்றத்தைப் பற்றி
ஒரு கதையைச் சொல்லி ஆரம்பிக்க விரும்புகிறேன்.
2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி, திரு டெப்ரியே அலாமியேசேகா, நைஜீரியாவின்
எண்ணை-வளமிக்க மாநிலங்கள் ஒன்றின் ஆளுநர், லண்டனுக்கு வருகை தந்தபோது
லண்டன் மெட்ரோபாலிட்டன் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
அவர் ஏன் கைது செய்யப்பட்டாரென்றால்
அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் சொந்தமான இரகசியக் கணக்குகளுக்குள் $8 மில்லியன்
அளவிற்கான பணப் பரிமாற்றம் இருந்தது.
இந்தக் கைது நேர்ந்ததேனென்றால் லண்டன் மெட்ரோபாலிட்டன் காவல்துறைக்கும்
நைஜீரியாவின் பொருளாதார மற்றும் நிதிக் குற்றங்கள் ஆணையத்திற்குமிடையே
ஒத்துழைப்பு இருந்தது – எங்களின் மிகத் திறமைவாய்ந்த மற்றும்
தைரியமான மக்களால் அது நடத்தப்பட்டது.
திரு. நூஹு ரிபாடு. அலாமெயேசேகா லண்டனில் விசாரிக்கப்பட்டார்.
சில சட்ட ஓட்டைகளின் காரணமாக, அவர் ஒரு பெண் போன்று உடையணிந்து கொண்டு
லண்டனிலிருந்து நைஜீரியாவிற்குத் திரும்பவும் ஓடிப்போகச் சமாளித்துக் கொண்டார்,
எங்களின் சட்டத்திட்டங்களின் படி, ஆளுநர்கள், ஜனாதிபதிகளின் பொறுப்பிலிருப்பவர்கள் –
பல நாடுகளில் இருப்பது போல – தண்டிக்கப்பட
முடியாத அளவிற்கு பாதுகாப்பைக் கொண்டுள்ளார்கள். ஆனால் என்ன நடந்தது:
இந்த நடத்தையினால் மக்கள் மிகவும் உக்கிரமடைந்தார்கள், சட்டமன்ற உறுப்பினர்களால் அவரை
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் பதவியிலிருந்து நீக்குவது சாத்தியமானதாக இருந்தது.
இன்று, அலாம்ஸ் – கொஞ்சகாலத்திலேயே – அவரை நாங்கள் சிறையில் சந்தித்தோம்.
ஆப்ரிக்க மக்கள் இதற்கு மேலும் அவர்கள் தலைவர்களிடமிருந்து ஊழலைத் தாங்கிக்
கொள்ள விருப்பமுள்ளவர்களாக இல்லை என்பதின் உண்மை பற்றியதே இந்தக் கதை.
மக்கள் அவர்களது வளங்களானது அவர்களின் நன்மைக்கென முறையாக நிர்வகிக்கப்படவேண்டும்
என்றும் ஒரு சில முக்கியஸ்தர்களையே பலனடையச் செய்யும் இடங்களுக்கு
அவைகள் எடுத்துச் செல்லப்படக் கூடாது என்பதை மக்கள் விரும்புகிறார்கள் என்பதைப் பற்றியதே இந்தக் கதை.
ஆகையால், நீங்கள் ஊழல் மிகுந்த ஆப்ரிக்காவைப் பற்றிக் கேள்விப்படும் போது,
எப்போதுமிருந்த ஊழல் – சில நாடுகளில் மக்களும் அரசாங்களும் இதை எதிர்த்துப் போராட
கடுமையாக முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள
வேண்டுமென நான் விரும்புகிறேன், மேலும் சில வெற்றிகளும் வந்து கொண்டிருக்கின்றன.
பிரச்சினை முடிந்து விட்டது என்பது அதன் அர்த்தமா? பதில் இல்லையென்பதே.
இன்னும் போகவேண்டியதற்கு வெகு தூரம் உள்ளது, ஆனால் அங்கே மனம் இருக்கிறது.
இந்த மிக முக்கியமான போராட்டத்தில் வெற்றிகள் குவிக்கப்பட்டு வருகின்றன.
எனவே நீங்கள் ஊழலைப் பற்றிக் கேள்விப்படும் போது,
இதைப் பற்றி ஒன்றுமே செய்யப்படுவதில்லை என்று நினைக்காதீர்கள் -
அதிகப்படியான ஊழலின் காரணமாக நீங்கள்
ஆப்ரிக்க நாடுகளில் செயல்பட முடியாது என்பதாக நினைக்காதீர்கள். விஷயம் அதுவல்ல.
போராடுவதற்கான மனது இருக்கிறது, பல நாடுகளில், அந்தப் போராட்டமானது நடந்து
கொண்டிருக்கிறது மேலும் வெற்றியும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. மற்றவைகளில்,
என்னுடையதைப் போன்றவை, நைஜீரியாவில் சர்வாதிக்கத்தின் நெடுநாளைய வரலாறு
இருந்திருக்கிறது, போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது மேலும் நாங்கள் நெடுந் தூரம் போக வேண்டியுள்ளது.
ஆனால் விஷயத்தின் உண்மையென்னவென்றால் இது போய்க்கொண்டேயிருக்கிறது.
முடிவுகள் காண்பிக்கின்றன:
உலக வங்கி மற்றும் மற்ற ஸ்தாபனங்களினால் செய்யப்பட்ட
தனிப்பட்ட கண்கானிப்பானது, அந்தப் போக்கானது ஊழலைப் பொறுத்தவரையில்
குறைவாகவும், ஆட்சிமுறை மேம்பட்டு வருகிறது என்பதையும் பல நிகழ்வுகளில் காண்பிக்கின்றன.
28 ஆப்ரிக்க நாடுகளில் நிர்வாகமானது தெளிவான மேல்நோக்கிய போக்கில் இருப்பதை,
ஆப்ரிக்காவிற்கான பொருளாதார ஆணையத்தின் ஒரு ஆய்வு காண்பித்தது.
நிர்வாகத்தின் இந்தப் பகுதியை விட்டு நான் செல்வதற்கு முன்பாக நான்
இன்னுமொன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.
மக்கள் ஊழல், ஊழலைப்பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
அதைப் பற்றி மக்கள் பேசும்போதெல்லாம் நீங்கள்
உடனே ஆப்ரிக்காவைப் பற்றிதான் நினைக்கிறீர்கள்.
அது தான் அந்த காட்சி: ஆப்ரிக்க நாடுகள். ஆனால் நான் இதைச் செல்லட்டும்:
லண்டனில் உள்ள ஒரு கணக்கிற்குள் அலாம்ஸால் $8 மில்லியனை அனுப்ப முடிந்ததானால் --
மற்ற மக்கள் எடுத்திருந்த வளரும் நாடுகளின்
பணமான 20 முதல் 40 பில்லியன் அளவு வளர்ந்த
நாடுகளில் உட்கார்ந்திருந்தால் – அவர்களால் இதைச் செய்ய முடிந்தால்,
அது என்ன? அது ஊழல் இல்லையா?
இந்த நாட்டில், நீங்கள் திருடப்பட்ட பொருட்களைப் பெற்றுக் கொண்டால், நீங்கள் தண்டிக்கப்படத்தக்கவர்கள் இல்லையா?
எனவே நாம் இது போன்ற வகையான ஊழலைப் பற்றிப் பேசும் போது, உலகத்தின் மற்ற
பகுதிகளில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி நாம் நினைத்துப் பார்ப்போம்
பணம் எங்கே போகிறது அதைத் தடுக்க என்ன செய்யலாம்.
நான் உலக வங்கியோடு கூட, சொத்து மீட்பின் மீதான, ஒரு முன்முயற்சியில் இப்போது
வேலை செய்து கொண்டிருக்கிறேன், வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிற
பணங்களை திரும்பப் பெறுவதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்பதை முயற்சித்துக்
கொண்டு, வளரும் நாடுகளின் பணங்கள் – திரும்ப அனுப்பப் படுவதற்கு.
ஏனென்றால் அங்கே உட்கார்ந்திருக்கிற பணத்தில் $20 பில்லியனை நம்மால் பெற
முடிந்தால், அது சில நாடுகளுக்கு அனைத்து நிதியுதவிகளையும்
ஒன்றாகச் சேர்ப்பதை விட அதிகமானதாக இருக்கக் கூடும்.
(கைதட்டல்).
நான் பேச விரும்புகிற இரண்டாவது காரியம் சீரமைப்பிற்கான மனது.
ஆப்ரிக்கர்கள், - அவர்கள் சோர்வடைந்த பிறகு, ஒவ்வொருவரின் உதவி மற்றும்
கவனிப்பின் பொருளாக இருந்து இருந்து நாங்கள் சோர்வடைந்து விட்டோம்.
நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், ஆனால் நாங்கள் சீரமைப்பதற்கான மனதைக்
கொண்டிருந்தோமானால், எங்களது இலக்கிற்கான பொறுப்பை நாங்கள் எடுத்துக் கொள்ள முடியும் என எங்களுக்குத் தெரிகிறது.
மேலும் பல ஆப்ரிக்க நாடுகளில் இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றால், உணர்ந்து கொள்ளுதல்,
அது வேறு யாரும் செய்ய முடியாது நாங்கள் தான் செய்ய வேண்டும். நாங்கள் அதைச் செய்ய வேண்டியுள்ளது.
எங்களை ஆதரிக்கும் பங்காளர்களை நாங்கள் அழைக்க முடியும், ஆனால் நாங்கள் தான் அதை ஆரம்பிக்க வேண்டும்.
எங்கள் பொருளாதாரங்களை நாங்கள் சீரமைக்க வேண்டும், எங்கள் தலைமைத்துவத்தை மாற்ற வேண்டும்,
பெரிய மாறுதலுள்ளவர்களாக மாற வேண்டும், மாற்றத்திற்கும் தகவல்களுக்கும் மிகவும் திறந்த மனதுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
அந்த கண்டத்திலுள்ள மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான,
நைஜீரியாவில், நாங்கள் செய்ய ஆரம்பித்திருப்பது இது தான்.
உண்மையில், நீங்கள் நைஜீரியாவில் இல்லையென்றல், நீங்கள் ஆப்ரிக்காவிலேயே இல்லை.
நான் அதை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
(சிரிப்பு).
துணை சகாரா ஆப்ரிக்கர்களில் நான்கில் ஒருவர் நைஜீரியாக்காரர், மேலும் அது 140
மில்லியன் சுறுசுறுப்பான மக்களைக் கொண்டுள்ளது – குழப்பமான மக்கள் - ஆனால்
மிகவும் ஆர்வமுடைய மக்கள். உங்களுக்கு அலுப்பாகவே இருக்காது.
(சிரிப்பு).
நாங்கள் என்ன செய்ய ஆரம்பிதோமென்றால் பொறுப்பெடுத்துக் கொண்டு
எங்களை நாங்களே சீரமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்வது தான்.
சீரமைப்புகளைச் செய்வதற்கு அந்த நேரத்தில்
விருப்பமுள்ள ஒரு தலைவரின் ஆதரவோடு,
நாங்களே மேம்படுத்திக் கொண்ட ஒரு
கூட்டு சீரமைப்புத் திட்டத்தை முன் வைத்தோம்.
சர்வதேச நிதியல்ல. நான் 21 ஆண்டுகளாக வேலை
பார்த்து ஒரு துணைத்தலைவராக உயர்ந்த, உலகவங்கியுமல்ல.
யாருமே உங்களுக்காக அதைச் செய்ய முடியாது. உங்களுக்காக நீங்களே அதைச் செய்ய வேண்டும்.
அரசாங்கம் எதையுமே கொண்டிராத வர்த்தகங்களிலிருந்து அதை வெளியில் எடுப்பதைச் செய்யும் ஒரு
திட்டத்தை நாங்களனைவரும் சேர்ந்து வைத்தோம் - அதிலிருந்துகொண்டிருப்பதால் அதற்கு ஒரு வேலையுமில்லை.
பொருட்களையும் சேவைகளையும் உற்பத்தி செய்யும்
வணிகத்தில் அரசு இருக்கக் கூடாது ஏனென்றால்
அது திறனற்றதாகவும் போட்டி போடமுடியாததாகவுமாக இருக்கிறது.
எனவே நாங்கள் எங்களது ஸ்தாபனங்களில் பெரும்பாலானவற்றை தனியார் மயமாக்க முடிவு செய்தோம்.
(கைதட்டல்).
நாங்கள், அதன் விளைவாக, எங்களது சந்தைகளில் பலவற்றை தனியார்மயமாக்க முடிவு செய்தோம்.
2003-ன் இறுதியில் ஆரம்பித்த, இந்தச் சீரமைப்பிற்கு முன்பாக –
நான் வாஷிங்டனை விட்டுப் போய் நிதியமைச்சர் என்ற பதவியை ஏற்றுக் கொள்வதற்கு
முன்பாக – அதன் மொத்த 30-ஆண்டு வரலாற்றிலேயே 4,500 தரைவழி இணைப்புகளை
மட்டுமே உண்டாக்கியிருந்த ஒரு தொலைபேசி நிறுவனத்தை
நாங்கள் கொண்டிருந்தோம், என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?
(சிரிப்பு).
எங்களுடைய நாட்டில் ஒரு தொலைபேசியை வைத்திருப்பது ஒரு பெரிய ஆடம்பரம்.
உங்களால் அதைப் புரிந்து கொள்ள முடியாது. நீங்கள் லஞ்சம் கொடுக்க வேண்டும்.
உங்கள் தொலைபேசியைப் பெறுவதற்காக எல்லாவற்றையும் நீங்கள் செய்ய வேண்டும்.
ஜனாதிபதி ஓபசாஞ்சோ தொலைபேசித் துறையின் தனியார் மயமாக்கலை ஆதரித்து
அதைத் துவக்கி வைத்த போது, நாங்கள் 4,500-ல் இருந்து 32 மில்லியன் ஜிஎஸ்எம்
இணைப்புகளுக்குச் சென்றோம், அது இன்னும் கூடிக்கொண்டேயிருக்கிறது.
சீனாவிற்குப் பிறகு, நைஜீரியா தொலைபேசிச் சந்தைதான் உலகில் இரண்டாவது வேகமாக
வளரும் சந்தையாகும். தொலைத்தொடர்பில் ஆண்டிற்கு சுமார் $1 பில்லியன் முதலீடுகளை
நாங்கள் பெற்றுக் கொண்டிருக்கிறோம். ஒரு சில புத்திசாலி மக்களைத் தவிர, வேறு யாருக்கும் தெரியாது.
(சிரிப்பு).
வந்த முதலாவது புத்திசாலித்தனமான நிறுவனம்
தென் ஆப்ரிக்காவின் எம்டிஎன் நிறுவனம்.
நான் நிதியமைச்சராக இருந்த மூன்று ஆண்டுகளில்,
அவர்கள் ஆண்டிற்கு $360 மில்லியனை சராசரி இலாபமாக கொண்டார்கள்.
ஒரு சந்தையில் 360 மில்லியன் – ஒரு வருடத்திற்கு $500 க்கும் குறைவான
வருட வருமானமுள்ள, ஒரு ஏழை நாடான ஒரு நாட்டில்.
எனவே சந்தையானது அங்கே இருக்கிறது.
அவர்கள் இதைச் சுருட்டிக் கொண்டவுடன், மற்றவர்களுக்கும் அது தெரிந்து விட்டது.
நைஜீரியர்களும் சில தந்தியில்லா தொலைத்தொடர்பு
நிறுவனங்களைத் தொடங்க ஆரம்பித்தார்கள்,
மற்ற மூன்று அல்லது நான்கு பேர்கள் வந்திருக்கிறார்கள்.
ஆனால் அங்கே மிகப்பெரிய சந்தையுள்ளது, மக்களுக்கு அதைப் பற்றித் தெரியாது,
அல்லது அவர்கள் அதைப்பற்றி தெரிந்து கொள்ள விரும்பவில்லை.
எனவே தனியார் மயமாக்கல் நாங்கள் செய்திருக்கிற ஒரு காரியம்.
நாங்கள் செய்திருக்கிற மற்றொரு காரியம் எங்களது நிதிகளை சிறப்பாக நிர்வகிப்பது.
உங்கள் சொந்த நிதிகளை நீங்கள் நன்றாக நிர்வகிக்கவில்லையானால் வேறு யாரும்
உங்களுக்கு உதவவோ அல்லது உங்களை ஆதரிக்கவோ போகிறதில்லை.
மேலும், நைஜீரியா, அதன் எண்ணைத் துறையில், ஊழலோடு இருப்பதற்கும்
அதன் சொந்த பொது நிதிகளை நன்றாக நிர்வகிக்காமல் இருப்பதற்கும் பேர் போனதாகும்.
எனவே நாங்கள் என்ன செய்ய முயற்சித்தோம்? நாங்கள் ஒரு நிதிச் சட்டத்தை அறிமுகப்படுத்தினோம்
அது எங்களது நிதிநிலையறிக்கையை எண்ணை விலையிலிருந்து துண்டித்தது.
அதற்கு முன்பாக நாங்கள் எவ்வளவு எண்ணையைக் கொண்டு வருகிறோமோ அதன் மீது நிதிநிலை அறிக்கையை
அமைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தோம், ஏனென்றால் எண்ணைதான் எங்கள் பொருளாதாரத்தில்
மிகப்பெரிய, அதிகம் வருமானம் சம்பாதிக்கும் துறையாகும். எங்கள் வருமானத்தில் 70% எண்ணையிலிருந்து வருகிறது.
நாங்கள் அதைத் துண்டித்தோம், அதை நாங்கள் செய்தவுடன் எண்ணை விலையிலிருந்து
கொஞ்சம் குறைவான விலையில் நிதிநிலை அறிக்கையைத் தயாரிக்க ஆரம்பித்து அந்த
விலைக்கு மேல் என்ன இருந்ததோ அதைச் சேமிக்க ஆரம்பித்தோம்.
நாங்கள் அதை இழுக்க முடியும் என்று தெரியாது; அது மிகவும் விவாதத்திற்குரியதாக இருந்தது.
ஆனால் அது உடனடியாகச் செய்தது என்னவென்றால், எங்கள் பொருளாதார வளர்ச்சியில்
இருந்து வந்த ஏற்ற இறக்கமானது – எண்ணைவிலை அதிமாக இருந்த போதிலும் கூட,
நாங்கள் மிக விரைவாக வளர்ந்தோம்.
அவைகள் சரியும் போது, நாங்களும் சரிந்தோம்.
பொருளாதாரத்தில், நாங்கள் எதற்கும் பணம் கொடுக்க முடியவில்லை, எந்த சம்பளமும் கொடுக்க முடியவில்லை.
அது சீராக்கப்பட்டு விட்டது. நான் விலகுவதற்கு முன்பாக, எங்களால் $27 பில்லியன் சேமிக்க
முடிந்தது. இது எங்களுடைய சேமிப்பிற்குச் சென்றது – நான் 2003-ல் வந்த போது, நாங்கள்
சேமிப்பில் 7 பில்லியனைக் கொண்டிருந்தோம்.
நான் விலகும் நேரத்தில், நாங்கள் கிட்டத்தட்ட $30 பில்லியனுக்குப் போயிருந்தோம்.
நாம் இப்போது பேசுகிறபோது, எங்கள் நிதியின் முறையான நிர்வாகத்தின் காரணமாக
நாங்கள் சேமிப்பில் $40 பில்லியன்களைக் கொண்டுள்ளோம்.
அது எங்களது பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தி, நிலையானதாக ஆக்குகிறது.
எப்போதுமே ஏறியிறங்குகிற எங்களது பரிமாற்ற வீதமானது, வர்த்தகம் செய்கிற மக்கள்
பொருளாதாரத்தில், விலைகளை முன்னறிவிப்பதைக் கொண்டிருக்கும் வகையில்,
ஓரளவிற்கு நிலையானதாக உள்ளது மேலும் அது நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
நாங்கள் பணவீக்கத்தை 28 சதவீதத்திலிருந்து சுமார் 11 சதவீதத்திற்குக் கொண்டுவந்தோம்.
எங்களது நாட்டின் வளர்ச்சி வீதம் முந்தைய பத்து ஆண்டுகளிலிருந்து 2.3 சதவீதத்தில்
இருந்து சுமார் 6.5 சதவீதத்திற்கு வளரக் கொண்டிருந்தோம்.
எனவே அனைத்து மாற்றங்களும் சீரமைப்புகளும் பொருளாதாரத்தில்
அளவிடக்கூடிய முடிவுகளில் காண்பிக்க ஆரம்பித்தது.
மேலும் எது மிகவும் முக்கியம், ஏனென்றால் எண்ணையிலிருந்து வெளியேறி பரவலாக்கல்
செய்வது – மேலும் இந்த ஒரு பெரிய நாட்டில், ஆப்ரிக்காவிலுள்ள பலநாடுகளைப் போன்று
மிக அநேக வாய்ப்புகள் உள்ளன – குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால்
பெரும்பாலான இந்த வளர்ச்சியானது எண்ணைத் துறையிலிருந்து வரவில்லை,
ஆனால் எண்ணை-சாராத துறையிலிருந்தே என்பதுதான்.
விவசாயம் 8 சதவீதத்தை விட சிறப்பாக வளர்ச்சியடைந்தது.
தொலைதொடர்பு துறை வளர்ந்த போது, வீடு மற்றும் கட்டுமானம், இப்படி நான்
போய்க்கொண்டே இருக்க முடியும். மேலும் நீங்கள் மேக்ரோ-பொருளாதாரத்தை
நேராக்கிவிடும் போது, மற்ற பல்வேறு துறைகளிலான வாய்ப்புகளானது மிகப் பெரிய
அளவில் இருக்கும் என்பதை உங்களுக்குத் தெளிவாக்குவதற்குத் தான் இது.
நான் சொன்னது போலவே, நாங்கள் விவசாயத்திலும் வாய்ப்புகளைக் கொண்டுள்ளோம்.
நாங்கள் திட கனிமங்களிலும் வாய்ப்புக்களைக் கொண்டுள்ளோம். யாருமே முதலீடு கூடச்
செய்திராத அல்லது ஆராய்ச்சி செய்திருக்காத நிறைய கனிமங்களை நாங்கள் கொண்டுள்ளோம்.
அதைச் சாத்தியமாக்குவதற்கு முறையான சட்டம் இல்லாமல்,
அது நடக்காது என்பதை நாங்கள் உணர்ந்தோம்.
எனவே நாங்கள் இப்போது ஒரு சுரங்க நடத்தை விதியைக் கொண்டுள்ளோம் அது உலகின் மிகச்சிறந்த சிலவற்றோடு ஒப்பிடக் கூடியது.
நாங்கள் வீடு மற்றும் வீட்டுமனையிலும் வாய்ப்புகளைக் கொண்டுள்ளோம்.
140 மில்லின் மக்கள் தொகை கொண்ட நாட்டில் ஒன்றுமே இல்லை –
நீங்கள் இங்கே அறிந்திருக்கிறபடி எந்த பெருவணிக வளாகங்களும் இல்லை.
மக்களின் கற்பனாசக்தியை தூண்டிவிட்ட
சிலருக்கு இது ஒரு முதலீட்டு வாய்ப்பு.
இப்போது, இத்தகைய வணிகவளாகங்களில் இருக்கும் வியாபாரங்கள் அவர்கள்
எதிர்பார்த்ததை விட நான்கு மடங்குகள் அதிகமான விற்றுமுதலைக் கொண்டுள்ளன.
எனவே, கட்டுமானத்தில், வீட்டுமனையில், அடகுச் சந்தையில்
பெரிய காரியங்கள் நடந்தன. நிதிசார்ந்த சேவைகள்:
நாங்கள் 89 வங்கிகளைக் கொண்டிருந்தோம். அதில் மிக அதிகமானவை அவர்களது உண்மையான வியாபாரத்தைச் செய்யாமலிருந்தார்கள்.
அவர்களின் மூலதனத்தை அதிகரிக்க வேண்டும் – பங்கு மூலதனம்- என கோரிக்கையை
விடுத்து நாங்கள் அவைகளை 89 –லிருந்து 25 வங்கிகளாக கூட்டிச் சேர்த்தோம்.
மேலும் அது சுமார் $25 மில்லியனிலிருந்து $150 மில்லியனுக்குச் சென்றது.
வங்கிகள் – இத்தகைய வங்கிகள் தற்போது கூட்டிச் சேர்க்கப்பட்டுள்ளன, அப்படி வங்கி
அமைப்புகளைப் பலப்படுத்தியது வெளியிலிருந்து நிறைய மூலதனத்தை கவர்ந்திருக்கிறது.
யூகேயின் பார்க்லேஸ் வங்கி 500 மில்லியன்களைக் கொண்டு வருகிறது.
ஸ்டாண்டர்டு சார்டர்ட் 140 மில்லியனைக் கொண்டு வந்திருக்கிறது.
இப்படி நான் போய்க்கொண்டே இருக்க முடியும். மேலும் மேலும், அந்த அமைப்பிற்குள் டாலர்கள்.
இதையே தான் நாங்கள் காப்பீட்டுத் துறையிலும் செய்தோம்.
எனவே நிதிச் சேவைகளில், ஒரு மிகப்பெரிய வாய்ப்பின் சந்தர்ப்பம்.
சுற்றுலாவில், பல ஆப்ரிக்க நாடுகளில், ஒரு பெரிய வாய்ப்புள்ளது.
கிழக்கு ஆப்ரிக்காவைப் பற்றி பலமக்கள் அறிந்திருப்பது என்னவோ அதுதான்:
வன உயிர்கள், யானைகள், இப்படியாக.
ஆனால் சுற்றுலாச் சந்தையை, அவைகள் மக்களை உண்மையிலேயெ பயனுறச்
செய்யும் வகையில் நிர்வகிப்பது மிகவும் முக்கியமானதாகும்.
எனவே நான் என்ன சொல்ல முயற்சிக்கிறேன்? அந்தக் கண்டத்தின் மீது ஒரு புதிய
அலையிருக்கிறது என்பதை உங்களுக்குச் சொல்லவே விரும்புகிறேன்.
திறப்பு மற்றும் ஜனநாயகமாக்கலின் ஒரு புதிய அலை அதில், 2000-லிருந்து, ஆப்ரிக்க
நாடுகளில் மூன்றில்-இரண்டிற்கு மேலாக பல-கட்சி ஜனநாயக
தேர்தல்களைக் கொண்டிருக்கிறார்கள்.
அனைத்துமே முழுமையானவையாக இல்லை, அல்லது இருக்காது,
ஆனால் போக்கு மிகத் தெளிவாக உள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக, கண்டத்தின் மீதான ஆண்டு சராசரி வளர்ச்சியானது 2.5
சதவீதத்திலிருந்து சுமார் 5 சதவீதமாக உயர்ந்திருக்கிறது என்பதையே நான்
உங்களுக்குச் சொல்ல முயற்சிக்கிறேன்.
இது பல ஓஈசிடி நாடுகள் செய்து காட்டியிருப்பதை விடச் சிறந்தது தான்.
எனவே காரியங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன என்பது தெளிவாகிறது.
கண்டத்தில் சண்டைகள் குறைந்து வருகின்றன; ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பாக சுமார் 12
சண்டைகளில் இருந்து, மூன்று அல்லது நான்காக
குறைந்திருக்கிறோம், அவைகளில்
மிகவும் மோசமானது, உண்மையிலேயே, டார்பர் தான்.
மேலும், பாருங்கள், உங்களிடம் அண்டைப்பக்க பாதிப்பு உள்ளது, அதில் கண்டத்தின் ஒரு
பகுதியில் ஏதாவது நடந்து கொண்டிருந்தால், அந்த முழுக்
கண்டமும் பாதிக்கப்பட்டது போல காணப்படுகிறது.
ஆனால் இந்தக் கண்டம் அப்படியல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் –
இந்தக் கண்டம் ஒரு நாடு அல்ல ஆனால் பல நாடுகளால் ஆனது.
மேலும் மூன்று அல்லது நான்கு சண்டைகளுக்கு குறைந்து வந்திருப்போமானால்,
ஒரு நிலையான, வளர்கிற, ஆச்சரியமூட்டுகிற
நிறைய வாய்ப்புகளுள்ள பொருளாதாரத்தில் முதலீடு செய்வதற்கு
மிக அதிகமான வாய்ப்புகள் உள்ளது என்றே அர்த்தம்.
இந்த முதலீட்டைப் பற்றி ஒரே ஒரு குறிப்பை வைக்க விரும்புகிறேன்.
ஆப்ரிக்கர்களுக்கு உதவும் சிறந்த வழியானது அவர்களின் சொந்தக்
கால்களில் நிற்பதற்கு உதவுவதே.
அதைச் செய்வதற்கான சிறந்த வழியானது வேலைகளை உருவாக்க உதவுவதே.
மலேரியாவை எதிர்த்துப் போராடுவதும் பணத்தை அதில் போடுவதும் குழந்தைகளின் உயிர்களைக்
காப்பாற்றுவதும் ஒரு பிரச்சினையும் இல்லை. நான் சொல்லிக் கொண்டிருப்பது அதுவல்ல. அது நல்லது தான்.
ஆனால் ஒரு குடும்பத்தின் மீதான தாக்கத்தைக் கற்பனை செய்து பாருங்கள். பெற்றோர்கள்
பணியமர்த்தப்பட்டு அவர்களின் குழந்தைகளைப் பள்ளிக்குச் செல்லுமாறு செய்தால்,
நோய்க்கெதிராகப் போராடுவதற்கு அவர்களாகவே மருந்துகளை வாங்க முடிந்ததானால்.
வேலைகளை உருவாக்கி மக்களை அவர்களது சொந்தக் காலில் நிற்கச் செய்ய உதவுகிற அதே வேளையில்,
நீங்களே பணத்தை சம்பாதிக்க முடிகிற இடங்களில் நாம் முதலீடுகளைச் செய்ய முடிந்தால்,
அது ஒரு அற்புதமான வாய்ப்பல்லவா? நாம் போக வேண்டிய வழி அது தானல்லவா?
கண்டத்தில் முதலீடு செய்வதற்கான சிறந்த மக்கள்
பெண்களே என்று நான் சொல்ல விரும்புகிறேன்.
(கைதட்டல்).
இங்கே நான் ஒரு சிடி-யை வைத்திருக்கிறேன். சரியான நேரத்தில் எதையும் சொல்லாததற்கு நான் வருந்துகிறேன்.
மற்றபடி, நீங்கள் இதைப் பார்க்க வேண்டுமென நான் விரும்பியிருப்பேன்.
அது சொல்கிறது, “ஆப்ரிக்கா: வியாபாரத்திற்கு திறந்திருக்கிறது.”
மேலும் இது தான் உண்மையிலேயே ஆண்டின் சிறந்த செய்திப் படமாக
விருதைப் பெற்ற அந்த வீடியோ.
இதைச் செய்த பெண்கள் டான்ஸானியாவில் இருக்கப் போகிறார்கள் என்பதைப் புரிந்து
கொள்ளுங்கள், அங்கு அவர்கள் ஜூனில் அந்த அமர்வினைக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும் இது ஆப்ரிக்கர்களை உங்களுக்குக் காட்டுகிறது, குறிப்பாகப் பெண்களை, அத்தனை பிரச்சினைகளுக்கு
மத்தியிலும் அவர்கள் வியாபாரத்தை வளர்த்திருக்கிறார்கள், அவைகளில் சில உலகத்தரமானவையும் கூட.
இந்த வீடியோவிலுள்ள பெண்களில் ஒருவர், அடெனிக்கே ஓகுன்லேசி, குழந்தைகளின்
ஆடைகளை தயாரித்துக் கொண்டிருக்கிறார் -
அதை அவர் ஒரு பொழுது போக்காக ஆரம்பித்து ஒரு வியாபாரமாக வளர்த்திருக்கிறார்.
ஆப்ரிக்கத் துணி வகைகளை, நாங்கள் கொண்டிருப்பதைப் போன்றது,
வேறெங்கிருந்தும் வரவழைக்கிற துணி வகைகளோடு இணைப்பது.
எனவே, அவர் ஒரு சிறிய ஜோடி டங்காரீக்களை கோர்டுரோய்களோடு உருவாக்குவார்,
ஆப்ரிக்க துணிகளின் கலப்போடு. மிகவும் கற்பனை திறன் மிகுந்த வடிவங்கள்.
வால்-மார்டிடமிருந்து கூட வியாபார ஆணைகளைப் பெறுமளவிற்கு ஒரு நிலையை அடைந்திருக்கிறார்.
(சிரிப்பு).
10:00 ஆடைகளுக்கு.
எனவே இதைச் செய்யும் திறனுள்ள மக்களை நாங்கள் கொண்டிருக்கிறோம் என்பதையே இது உங்களுக்குக் காண்பிக்கிறது.
மேலும் அந்தப் பெண்கள் கருத்துள்ளவர்கள்: அவர்கள் கவனம் செலுத்தி; கடினமாக உழைக்கிறார்கள்.
நான் உதாரணங்களைக் கொடுத்துக் கொண்டே செல்லமுடியும்:
ருவாண்டாவின் பீட்ரைஸ் ககுபா, ஒரு பூ வியாபாரத்தை ஆரம்பித்து தற்போது ஒவ்வொரு காலையிலும்
ஆம்ஸ்டர்டாமிலுள்ள டட்ச் ஏலத்திற்கு ஏற்றுமதி செய்கிறார், மேலும்
அவரோடு பணியாற்றுவதற்கு மற்ற 200 பெண்களையும் ஆண்களையும் அமர்த்தியிருக்கிறார்.
ஆயினும், இத்தகைய பலரும் மூலதனத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்,
ஏனென்றால் எது தேவையோ அதை நாங்கள் செய்ய முடியும் என்பதை எங்கள் நாட்டிற்கு
வெளியேயுள்ள யாரும் நம்புகிறதில்லை. சந்தை முறையில் யாரும் யோசிப்பதில்லை.
வாய்ப்புள்ளது என்பதை யாரும் சிந்திப்பதில்லை.
ஆனால், இப்போது படகை கைநழுவ விடுகிறவர்கள், எப்போதுமே விட்டுவிடுவார்கள்
என்பதைச் சொல்லிக்கொண்டு தான் நான் இங்கே நிற்கிறேன்.
எனவே நீங்கள் ஆப்ரிக்காவில் இருக்க விரும்பினால், மூலதனம் செய்வதைப் பற்றி சிந்தியுங்கள்.
இந்த உலகின் பீட்ரைஸ்களைப் பற்றி நினையுங்கள், அடேனிக்கே-களை நினையுங்கள்,
அவர்கள் தங்களை உலகப் பொருளாதாரத்திற்குள் கொண்டுவரும் நம்பமுடியாதவைகளைச்
செய்து கொண்டிருக்கிறர்கள், தங்கள் உடனிருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும்
வேலைவாய்ப்பை உறுதிசெய்யும் அதே வேளையில், அவர்கள் பெற்றோர்கள்
போதுமான வருமானத்தைச் சம்பாதிப்பதால் அந்த வீடுகளில்
உள்ள குழந்தைகள் கல்வியறிவைப் பெறுகிறார்கள்.
எனவே வாய்ப்புகளை ஆராய்ந்து பார்க்க உங்களை நான் அழைக்கிறேன்.
நீங்கள் டான்ஸானியாவிற்குச் செல்லும் போது, நிதானமாகக் கவனியுங்கள், ஏனென்றால்
நீங்கள் நன்றாகச் செய்யக் கூடிய சில காரியங்களில் நீங்கள் ஈடுபடக்கூடிய பலவிதமான
திறப்புகள் உங்களுக்கு இருப்பதைப் பற்றி நீங்கள் கேள்விப்படுவீர்கள்
என நான் உறுதியாக இருக்கிறேன். கண்டத்திற்கும், மக்களுக்கும், உங்களுக்கும் கூட.
உங்களுக்கு மிக்க நன்றி.
(கைதட்டல்)