0:00:05.000,0:00:08.000 உங்களுக்கு மிக்க நன்றி, கிரிஸ். இங்கு வந்த ஒவ்வொருவரும் அவர்கள் பயந்ததாகச் 0:00:08.000,0:00:12.000 சொன்னார்கள். நான் பயந்தேனா என்பது எனக்குத் தெரியாது, ஆனால் இது போன்ற ஒரு 0:00:12.000,0:00:16.000 நேயர்களிடம் பேசுவது இது தான் எனக்கு முதன் முறை. 0:00:16.000,0:00:20.000 உங்களைப் பார்க்கச் செய்வதற்காக என்னிடம் எவ்வித மதிநுட்பமான தொழிற்நுட்பமும் இல்லை. 0:00:20.000,0:00:23.000 எவ்வித ஸ்லைடுகளும் இல்லை, எனவே நீங்கள் என்னோடு கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். 0:00:23.000,0:00:26.000 (சிரிப்பு). 0:00:26.000,0:00:32.000 இந்தக் காலையில் நான் என்ன செய்ய விரும்புகிறேனென்றால் ஓரிரண்டு கதைகளை உங்களுடன் 0:00:32.000,0:00:35.000 பகிர்ந்து கொண்டு ஒரு வித்தியாசமான ஆப்ரிக்காவைப் பற்றி உங்களுடன் பேசுவதுதான். 0:00:35.000,0:00:39.000 ஏற்கெனவே இந்தக் காலைப் பொழுதில், நீங்கள் அனைத்து நேரங்களிலும் ஆப்ரிக்காவைப் 0:00:39.000,0:00:44.000 பற்றிக் கேள்விப்பட்டதைப் பற்றிய சில பேச்சுக்கள் இருந்தன: 0:00:44.000,0:00:50.000 எச்ஐவி/எயிட்ஸின் ஆப்ரிக்கா, மலேரியாவின் ஆப்ரிக்கா, 0:00:50.000,0:00:53.000 ஏழ்மையின் ஆப்ரிக்கா, சண்டைகளின் ஆப்ரிக்கா மற்றும் பேரழிவுகளின் ஆப்ரிக்கா. 0:00:53.000,0:00:57.000 அவைகள் நடந்து கொண்டுதானிருக்கின்றன என்பது உண்மையாக இருக்கின்ற வேலையில், 0:00:57.000,0:01:01.000 நீங்கள் அந்தளவிற்குக் கேள்விப்பட்டிராத ஒரு ஆப்ரிக்காவும் உள்ளது. 0:01:01.000,0:01:05.000 சில நேரங்களில் நான் ஆச்சரியப்பட்டு, என்னையே நான் கேட்டுக் கொள்வேன், அது தான் கிரிஸ் கேள்விப்பட்ட பேச்சும் ஏனென்று. 0:01:05.000,0:01:09.000 இது தான் அந்த வாய்ப்புள்ள ஆப்ரிக்கா. 0:01:09.000,0:01:11.000 மக்கள் தங்களின் சொந்த எதிர்காலம் மற்றும் 0:01:11.000,0:01:14.000 அவர்களது சொந்த இலக்கின் பொறுப்பையும் 0:01:14.000,0:01:16.000 ஏற்றுக்கொள்ள விரும்புகிற ஆப்ரிக்கா இது தான். 0:01:16.000,0:01:19.000 மேலும் இதைச் செய்வதற்கு மக்கள் வர்த்தகக் கூட்டுக்களை எதிர்பார்க்கிற ஆப்ரிக்க இதுதான். 0:01:19.000,0:01:23.000 அதைப் பற்றி தான் நான் இன்று பேசவிரும்புகிறேன். 0:01:23.000,0:01:25.000 ஆப்ரிக்காவிலுள்ள அந்த மாற்றத்தைப் பற்றி 0:01:25.000,0:01:27.000 ஒரு கதையைச் சொல்லி ஆரம்பிக்க விரும்புகிறேன். 0:01:28.000,0:01:33.000 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி, திரு டெப்ரியே அலாமியேசேகா, நைஜீரியாவின் 0:01:33.000,0:01:37.000 எண்ணை-வளமிக்க மாநிலங்கள் ஒன்றின் ஆளுநர், லண்டனுக்கு வருகை தந்தபோது 0:01:37.000,0:01:44.000 லண்டன் மெட்ரோபாலிட்டன் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். 0:01:44.000,0:01:49.000 அவர் ஏன் கைது செய்யப்பட்டாரென்றால் 0:01:49.000,0:01:52.000 அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் சொந்தமான இரகசியக் கணக்குகளுக்குள் $8 மில்லியன் 0:01:52.000,0:01:55.000 அளவிற்கான பணப் பரிமாற்றம் இருந்தது. 0:01:56.000,0:01:58.000 இந்தக் கைது நேர்ந்ததேனென்றால் லண்டன் மெட்ரோபாலிட்டன் காவல்துறைக்கும் 0:01:58.000,0:02:01.000 நைஜீரியாவின் பொருளாதார மற்றும் நிதிக் குற்றங்கள் ஆணையத்திற்குமிடையே 0:02:01.000,0:02:04.000 ஒத்துழைப்பு இருந்தது – எங்களின் மிகத் திறமைவாய்ந்த மற்றும் 0:02:04.000,0:02:11.000 தைரியமான மக்களால் அது நடத்தப்பட்டது. 0:02:11.000,0:02:14.000 திரு. நூஹு ரிபாடு. அலாமெயேசேகா லண்டனில் விசாரிக்கப்பட்டார். 0:02:14.000,0:02:18.000 சில சட்ட ஓட்டைகளின் காரணமாக, அவர் ஒரு பெண் போன்று உடையணிந்து கொண்டு 0:02:18.000,0:02:21.000 லண்டனிலிருந்து நைஜீரியாவிற்குத் திரும்பவும் ஓடிப்போகச் சமாளித்துக் கொண்டார், 0:02:21.000,0:02:25.000 எங்களின் சட்டத்திட்டங்களின் படி, ஆளுநர்கள், ஜனாதிபதிகளின் பொறுப்பிலிருப்பவர்கள் – 0:02:25.000,0:02:27.000 பல நாடுகளில் இருப்பது போல – தண்டிக்கப்பட 0:02:27.000,0:02:32.000 முடியாத அளவிற்கு பாதுகாப்பைக் கொண்டுள்ளார்கள். ஆனால் என்ன நடந்தது: 0:02:32.000,0:02:36.000 இந்த நடத்தையினால் மக்கள் மிகவும் உக்கிரமடைந்தார்கள், சட்டமன்ற உறுப்பினர்களால் அவரை 0:02:36.000,0:02:42.000 நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் பதவியிலிருந்து நீக்குவது சாத்தியமானதாக இருந்தது. 0:02:43.000,0:02:45.000 இன்று, அலாம்ஸ் – கொஞ்சகாலத்திலேயே – அவரை நாங்கள் சிறையில் சந்தித்தோம். 0:02:46.000,0:02:51.000 ஆப்ரிக்க மக்கள் இதற்கு மேலும் அவர்கள் தலைவர்களிடமிருந்து ஊழலைத் தாங்கிக் 0:02:51.000,0:02:56.000 கொள்ள விருப்பமுள்ளவர்களாக இல்லை என்பதின் உண்மை பற்றியதே இந்தக் கதை. 0:02:57.000,0:03:02.000 மக்கள் அவர்களது வளங்களானது அவர்களின் நன்மைக்கென முறையாக நிர்வகிக்கப்படவேண்டும் 0:03:02.000,0:03:07.000 என்றும் ஒரு சில முக்கியஸ்தர்களையே பலனடையச் செய்யும் இடங்களுக்கு 0:03:07.000,0:03:10.000 அவைகள் எடுத்துச் செல்லப்படக் கூடாது என்பதை மக்கள் விரும்புகிறார்கள் என்பதைப் பற்றியதே இந்தக் கதை. 0:03:10.000,0:03:14.000 ஆகையால், நீங்கள் ஊழல் மிகுந்த ஆப்ரிக்காவைப் பற்றிக் கேள்விப்படும் போது, 0:03:14.000,0:03:18.000 எப்போதுமிருந்த ஊழல் – சில நாடுகளில் மக்களும் அரசாங்களும் இதை எதிர்த்துப் போராட 0:03:18.000,0:03:21.000 கடுமையாக முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள 0:03:21.000,0:03:25.000 வேண்டுமென நான் விரும்புகிறேன், மேலும் சில வெற்றிகளும் வந்து கொண்டிருக்கின்றன. 0:03:25.000,0:03:28.000 பிரச்சினை முடிந்து விட்டது என்பது அதன் அர்த்தமா? பதில் இல்லையென்பதே. 0:03:28.000,0:03:32.000 இன்னும் போகவேண்டியதற்கு வெகு தூரம் உள்ளது, ஆனால் அங்கே மனம் இருக்கிறது. 0:03:32.000,0:03:36.000 இந்த மிக முக்கியமான போராட்டத்தில் வெற்றிகள் குவிக்கப்பட்டு வருகின்றன. 0:03:36.000,0:03:38.000 எனவே நீங்கள் ஊழலைப் பற்றிக் கேள்விப்படும் போது, 0:03:38.000,0:03:41.000 இதைப் பற்றி ஒன்றுமே செய்யப்படுவதில்லை என்று நினைக்காதீர்கள் - 0:03:41.000,0:03:44.000 அதிகப்படியான ஊழலின் காரணமாக நீங்கள் 0:03:44.000,0:03:47.000 ஆப்ரிக்க நாடுகளில் செயல்பட முடியாது என்பதாக நினைக்காதீர்கள். விஷயம் அதுவல்ல. 0:03:47.000,0:03:53.000 போராடுவதற்கான மனது இருக்கிறது, பல நாடுகளில், அந்தப் போராட்டமானது நடந்து 0:03:53.000,0:03:57.000 கொண்டிருக்கிறது மேலும் வெற்றியும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. மற்றவைகளில், 0:03:57.000,0:04:00.000 என்னுடையதைப் போன்றவை, நைஜீரியாவில் சர்வாதிக்கத்தின் நெடுநாளைய வரலாறு 0:04:00.000,0:04:04.000 இருந்திருக்கிறது, போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது மேலும் நாங்கள் நெடுந் தூரம் போக வேண்டியுள்ளது. 0:04:04.000,0:04:08.000 ஆனால் விஷயத்தின் உண்மையென்னவென்றால் இது போய்க்கொண்டேயிருக்கிறது. 0:04:09.000,0:04:11.000 முடிவுகள் காண்பிக்கின்றன: 0:04:11.000,0:04:15.000 உலக வங்கி மற்றும் மற்ற ஸ்தாபனங்களினால் செய்யப்பட்ட 0:04:15.000,0:04:19.000 தனிப்பட்ட கண்கானிப்பானது, அந்தப் போக்கானது ஊழலைப் பொறுத்தவரையில் 0:04:19.000,0:04:22.000 குறைவாகவும், ஆட்சிமுறை மேம்பட்டு வருகிறது என்பதையும் பல நிகழ்வுகளில் காண்பிக்கின்றன. 0:04:22.000,0:04:26.000 28 ஆப்ரிக்க நாடுகளில் நிர்வாகமானது தெளிவான மேல்நோக்கிய போக்கில் இருப்பதை, 0:04:26.000,0:04:30.000 ஆப்ரிக்காவிற்கான பொருளாதார ஆணையத்தின் ஒரு ஆய்வு காண்பித்தது. 0:04:30.000,0:04:32.000 நிர்வாகத்தின் இந்தப் பகுதியை விட்டு நான் செல்வதற்கு முன்பாக நான் 0:04:32.000,0:04:34.000 இன்னுமொன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். 0:04:34.000,0:04:37.000 மக்கள் ஊழல், ஊழலைப்பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார்கள். 0:04:37.000,0:04:39.000 அதைப் பற்றி மக்கள் பேசும்போதெல்லாம் நீங்கள் 0:04:39.000,0:04:41.000 உடனே ஆப்ரிக்காவைப் பற்றிதான் நினைக்கிறீர்கள். 0:04:41.000,0:04:45.000 அது தான் அந்த காட்சி: ஆப்ரிக்க நாடுகள். ஆனால் நான் இதைச் செல்லட்டும்: 0:04:45.000,0:04:51.000 லண்டனில் உள்ள ஒரு கணக்கிற்குள் அலாம்ஸால் $8 மில்லியனை அனுப்ப முடிந்ததானால் -- 0:04:53.000,0:04:57.000 மற்ற மக்கள் எடுத்திருந்த வளரும் நாடுகளின் 0:04:57.000,0:05:01.000 பணமான 20 முதல் 40 பில்லியன் அளவு வளர்ந்த 0:05:01.000,0:05:04.000 நாடுகளில் உட்கார்ந்திருந்தால் – அவர்களால் இதைச் செய்ய முடிந்தால், 0:05:04.000,0:05:07.000 அது என்ன? அது ஊழல் இல்லையா? 0:05:08.000,0:05:12.000 இந்த நாட்டில், நீங்கள் திருடப்பட்ட பொருட்களைப் பெற்றுக் கொண்டால், நீங்கள் தண்டிக்கப்படத்தக்கவர்கள் இல்லையா? 0:05:13.000,0:05:16.000 எனவே நாம் இது போன்ற வகையான ஊழலைப் பற்றிப் பேசும் போது, உலகத்தின் மற்ற 0:05:16.000,0:05:19.000 பகுதிகளில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி நாம் நினைத்துப் பார்ப்போம் 0:05:19.000,0:05:23.000 பணம் எங்கே போகிறது அதைத் தடுக்க என்ன செய்யலாம். 0:05:23.000,0:05:26.000 நான் உலக வங்கியோடு கூட, சொத்து மீட்பின் மீதான, ஒரு முன்முயற்சியில் இப்போது 0:05:26.000,0:05:29.000 வேலை செய்து கொண்டிருக்கிறேன், வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிற 0:05:29.000,0:05:32.000 பணங்களை திரும்பப் பெறுவதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்பதை முயற்சித்துக் 0:05:32.000,0:05:35.000 கொண்டு, வளரும் நாடுகளின் பணங்கள் – திரும்ப அனுப்பப் படுவதற்கு. 0:05:35.000,0:05:38.000 ஏனென்றால் அங்கே உட்கார்ந்திருக்கிற பணத்தில் $20 பில்லியனை நம்மால் பெற 0:05:38.000,0:05:41.000 முடிந்தால், அது சில நாடுகளுக்கு அனைத்து நிதியுதவிகளையும் 0:05:41.000,0:05:44.000 ஒன்றாகச் சேர்ப்பதை விட அதிகமானதாக இருக்கக் கூடும். 0:05:44.000,0:05:51.000 (கைதட்டல்). 0:05:51.000,0:05:55.000 நான் பேச விரும்புகிற இரண்டாவது காரியம் சீரமைப்பிற்கான மனது. 0:05:55.000,0:05:59.000 ஆப்ரிக்கர்கள், - அவர்கள் சோர்வடைந்த பிறகு, ஒவ்வொருவரின் உதவி மற்றும் 0:05:59.000,0:06:04.000 கவனிப்பின் பொருளாக இருந்து இருந்து நாங்கள் சோர்வடைந்து விட்டோம். 0:06:04.000,0:06:08.000 நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், ஆனால் நாங்கள் சீரமைப்பதற்கான மனதைக் 0:06:08.000,0:06:12.000 கொண்டிருந்தோமானால், எங்களது இலக்கிற்கான பொறுப்பை நாங்கள் எடுத்துக் கொள்ள முடியும் என எங்களுக்குத் தெரிகிறது. 0:06:13.000,0:06:17.000 மேலும் பல ஆப்ரிக்க நாடுகளில் இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றால், உணர்ந்து கொள்ளுதல், 0:06:17.000,0:06:21.000 அது வேறு யாரும் செய்ய முடியாது நாங்கள் தான் செய்ய வேண்டும். நாங்கள் அதைச் செய்ய வேண்டியுள்ளது. 0:06:21.000,0:06:25.000 எங்களை ஆதரிக்கும் பங்காளர்களை நாங்கள் அழைக்க முடியும், ஆனால் நாங்கள் தான் அதை ஆரம்பிக்க வேண்டும். 0:06:25.000,0:06:28.000 எங்கள் பொருளாதாரங்களை நாங்கள் சீரமைக்க வேண்டும், எங்கள் தலைமைத்துவத்தை மாற்ற வேண்டும், 0:06:28.000,0:06:34.000 பெரிய மாறுதலுள்ளவர்களாக மாற வேண்டும், மாற்றத்திற்கும் தகவல்களுக்கும் மிகவும் திறந்த மனதுள்ளவர்களாக இருக்க வேண்டும். 0:06:34.000,0:06:36.000 அந்த கண்டத்திலுள்ள மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான, 0:06:36.000,0:06:39.000 நைஜீரியாவில், நாங்கள் செய்ய ஆரம்பித்திருப்பது இது தான். 0:06:39.000,0:06:42.000 உண்மையில், நீங்கள் நைஜீரியாவில் இல்லையென்றல், நீங்கள் ஆப்ரிக்காவிலேயே இல்லை. 0:06:42.000,0:06:43.000 நான் அதை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். 0:06:43.000,0:06:44.000 (சிரிப்பு). 0:06:44.000,0:06:46.000 துணை சகாரா ஆப்ரிக்கர்களில் நான்கில் ஒருவர் நைஜீரியாக்காரர், மேலும் அது 140 0:06:48.000,0:06:53.000 மில்லியன் சுறுசுறுப்பான மக்களைக் கொண்டுள்ளது – குழப்பமான மக்கள் - ஆனால் 0:06:54.000,0:06:58.000 மிகவும் ஆர்வமுடைய மக்கள். உங்களுக்கு அலுப்பாகவே இருக்காது. 0:06:58.000,0:06:59.000 (சிரிப்பு). 0:06:59.000,0:07:01.000 நாங்கள் என்ன செய்ய ஆரம்பிதோமென்றால் பொறுப்பெடுத்துக் கொண்டு 0:07:01.000,0:07:03.000 எங்களை நாங்களே சீரமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்வது தான். 0:07:04.000,0:07:06.000 சீரமைப்புகளைச் செய்வதற்கு அந்த நேரத்தில் 0:07:06.000,0:07:09.000 விருப்பமுள்ள ஒரு தலைவரின் ஆதரவோடு, 0:07:09.000,0:07:11.000 நாங்களே மேம்படுத்திக் கொண்ட ஒரு 0:07:11.000,0:07:13.000 கூட்டு சீரமைப்புத் திட்டத்தை முன் வைத்தோம். 0:07:13.000,0:07:16.000 சர்வதேச நிதியல்ல. நான் 21 ஆண்டுகளாக வேலை 0:07:16.000,0:07:19.000 பார்த்து ஒரு துணைத்தலைவராக உயர்ந்த, உலகவங்கியுமல்ல. 0:07:20.000,0:07:22.000 யாருமே உங்களுக்காக அதைச் செய்ய முடியாது. உங்களுக்காக நீங்களே அதைச் செய்ய வேண்டும். 0:07:22.000,0:07:26.000 அரசாங்கம் எதையுமே கொண்டிராத வர்த்தகங்களிலிருந்து அதை வெளியில் எடுப்பதைச் செய்யும் ஒரு 0:07:26.000,0:07:30.000 திட்டத்தை நாங்களனைவரும் சேர்ந்து வைத்தோம் - அதிலிருந்துகொண்டிருப்பதால் அதற்கு ஒரு வேலையுமில்லை. 0:07:30.000,0:07:32.000 பொருட்களையும் சேவைகளையும் உற்பத்தி செய்யும் 0:07:32.000,0:07:33.000 வணிகத்தில் அரசு இருக்கக் கூடாது ஏனென்றால் 0:07:33.000,0:07:36.000 அது திறனற்றதாகவும் போட்டி போடமுடியாததாகவுமாக இருக்கிறது. 0:07:36.000,0:07:40.000 எனவே நாங்கள் எங்களது ஸ்தாபனங்களில் பெரும்பாலானவற்றை தனியார் மயமாக்க முடிவு செய்தோம். 0:07:40.000,0:07:44.000 (கைதட்டல்). 0:07:45.000,0:07:49.000 நாங்கள், அதன் விளைவாக, எங்களது சந்தைகளில் பலவற்றை தனியார்மயமாக்க முடிவு செய்தோம். 0:07:49.000,0:07:52.000 2003-ன் இறுதியில் ஆரம்பித்த, இந்தச் சீரமைப்பிற்கு முன்பாக – 0:07:52.000,0:07:56.000 நான் வாஷிங்டனை விட்டுப் போய் நிதியமைச்சர் என்ற பதவியை ஏற்றுக் கொள்வதற்கு 0:07:56.000,0:07:58.000 முன்பாக – அதன் மொத்த 30-ஆண்டு வரலாற்றிலேயே 4,500 தரைவழி இணைப்புகளை 0:08:00.000,0:08:04.000 மட்டுமே உண்டாக்கியிருந்த ஒரு தொலைபேசி நிறுவனத்தை 0:08:04.000,0:08:09.000 நாங்கள் கொண்டிருந்தோம், என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? 0:08:09.000,0:08:11.000 (சிரிப்பு). 0:08:11.000,0:08:14.000 எங்களுடைய நாட்டில் ஒரு தொலைபேசியை வைத்திருப்பது ஒரு பெரிய ஆடம்பரம். 0:08:14.000,0:08:16.000 உங்களால் அதைப் புரிந்து கொள்ள முடியாது. நீங்கள் லஞ்சம் கொடுக்க வேண்டும். 0:08:16.000,0:08:18.000 உங்கள் தொலைபேசியைப் பெறுவதற்காக எல்லாவற்றையும் நீங்கள் செய்ய வேண்டும். 0:08:18.000,0:08:21.000 ஜனாதிபதி ஓபசாஞ்சோ தொலைபேசித் துறையின் தனியார் மயமாக்கலை ஆதரித்து 0:08:21.000,0:08:25.000 அதைத் துவக்கி வைத்த போது, நாங்கள் 4,500-ல் இருந்து 32 மில்லியன் ஜிஎஸ்எம் 0:08:26.000,0:08:34.000 இணைப்புகளுக்குச் சென்றோம், அது இன்னும் கூடிக்கொண்டேயிருக்கிறது. 0:08:34.000,0:08:39.000 சீனாவிற்குப் பிறகு, நைஜீரியா தொலைபேசிச் சந்தைதான் உலகில் இரண்டாவது வேகமாக 0:08:39.000,0:08:44.000 வளரும் சந்தையாகும். தொலைத்தொடர்பில் ஆண்டிற்கு சுமார் $1 பில்லியன் முதலீடுகளை 0:08:44.000,0:08:50.000 நாங்கள் பெற்றுக் கொண்டிருக்கிறோம். ஒரு சில புத்திசாலி மக்களைத் தவிர, வேறு யாருக்கும் தெரியாது. 0:08:50.000,0:08:53.000 (சிரிப்பு). 0:08:53.000,0:08:57.000 வந்த முதலாவது புத்திசாலித்தனமான நிறுவனம் 0:08:57.000,0:08:59.000 தென் ஆப்ரிக்காவின் எம்டிஎன் நிறுவனம். 0:08:59.000,0:09:03.000 நான் நிதியமைச்சராக இருந்த மூன்று ஆண்டுகளில், 0:09:03.000,0:09:06.000 அவர்கள் ஆண்டிற்கு $360 மில்லியனை சராசரி இலாபமாக கொண்டார்கள். 0:09:08.000,0:09:14.000 ஒரு சந்தையில் 360 மில்லியன் – ஒரு வருடத்திற்கு $500 க்கும் குறைவான 0:09:14.000,0:09:18.000 வருட வருமானமுள்ள, ஒரு ஏழை நாடான ஒரு நாட்டில். 0:09:19.000,0:09:21.000 எனவே சந்தையானது அங்கே இருக்கிறது. 0:09:21.000,0:09:24.000 அவர்கள் இதைச் சுருட்டிக் கொண்டவுடன், மற்றவர்களுக்கும் அது தெரிந்து விட்டது. 0:09:25.000,0:09:28.000 நைஜீரியர்களும் சில தந்தியில்லா தொலைத்தொடர்பு 0:09:28.000,0:09:30.000 நிறுவனங்களைத் தொடங்க ஆரம்பித்தார்கள், 0:09:30.000,0:09:32.000 மற்ற மூன்று அல்லது நான்கு பேர்கள் வந்திருக்கிறார்கள். 0:09:32.000,0:09:35.000 ஆனால் அங்கே மிகப்பெரிய சந்தையுள்ளது, மக்களுக்கு அதைப் பற்றித் தெரியாது, 0:09:35.000,0:09:38.000 அல்லது அவர்கள் அதைப்பற்றி தெரிந்து கொள்ள விரும்பவில்லை. 0:09:40.000,0:09:42.000 எனவே தனியார் மயமாக்கல் நாங்கள் செய்திருக்கிற ஒரு காரியம். 0:09:43.000,0:09:49.000 நாங்கள் செய்திருக்கிற மற்றொரு காரியம் எங்களது நிதிகளை சிறப்பாக நிர்வகிப்பது. 0:09:50.000,0:09:52.000 உங்கள் சொந்த நிதிகளை நீங்கள் நன்றாக நிர்வகிக்கவில்லையானால் வேறு யாரும் 0:09:53.000,0:09:56.000 உங்களுக்கு உதவவோ அல்லது உங்களை ஆதரிக்கவோ போகிறதில்லை. 0:09:56.000,0:10:00.000 மேலும், நைஜீரியா, அதன் எண்ணைத் துறையில், ஊழலோடு இருப்பதற்கும் 0:10:00.000,0:10:05.000 அதன் சொந்த பொது நிதிகளை நன்றாக நிர்வகிக்காமல் இருப்பதற்கும் பேர் போனதாகும். 0:10:05.000,0:10:09.000 எனவே நாங்கள் என்ன செய்ய முயற்சித்தோம்? நாங்கள் ஒரு நிதிச் சட்டத்தை அறிமுகப்படுத்தினோம் 0:10:10.000,0:10:12.000 அது எங்களது நிதிநிலையறிக்கையை எண்ணை விலையிலிருந்து துண்டித்தது. 0:10:12.000,0:10:16.000 அதற்கு முன்பாக நாங்கள் எவ்வளவு எண்ணையைக் கொண்டு வருகிறோமோ அதன் மீது நிதிநிலை அறிக்கையை 0:10:16.000,0:10:21.000 அமைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தோம், ஏனென்றால் எண்ணைதான் எங்கள் பொருளாதாரத்தில் 0:10:21.000,0:10:24.000 மிகப்பெரிய, அதிகம் வருமானம் சம்பாதிக்கும் துறையாகும். எங்கள் வருமானத்தில் 70% எண்ணையிலிருந்து வருகிறது. 0:10:24.000,0:10:28.000 நாங்கள் அதைத் துண்டித்தோம், அதை நாங்கள் செய்தவுடன் எண்ணை விலையிலிருந்து 0:10:28.000,0:10:31.000 கொஞ்சம் குறைவான விலையில் நிதிநிலை அறிக்கையைத் தயாரிக்க ஆரம்பித்து அந்த 0:10:31.000,0:10:35.000 விலைக்கு மேல் என்ன இருந்ததோ அதைச் சேமிக்க ஆரம்பித்தோம். 0:10:36.000,0:10:39.000 நாங்கள் அதை இழுக்க முடியும் என்று தெரியாது; அது மிகவும் விவாதத்திற்குரியதாக இருந்தது. 0:10:39.000,0:10:42.000 ஆனால் அது உடனடியாகச் செய்தது என்னவென்றால், எங்கள் பொருளாதார வளர்ச்சியில் 0:10:42.000,0:10:45.000 இருந்து வந்த ஏற்ற இறக்கமானது – எண்ணைவிலை அதிமாக இருந்த போதிலும் கூட, 0:10:45.000,0:10:49.000 நாங்கள் மிக விரைவாக வளர்ந்தோம். 0:10:49.000,0:10:51.000 அவைகள் சரியும் போது, நாங்களும் சரிந்தோம். 0:10:51.000,0:10:55.000 பொருளாதாரத்தில், நாங்கள் எதற்கும் பணம் கொடுக்க முடியவில்லை, எந்த சம்பளமும் கொடுக்க முடியவில்லை. 0:10:56.000,0:11:00.000 அது சீராக்கப்பட்டு விட்டது. நான் விலகுவதற்கு முன்பாக, எங்களால் $27 பில்லியன் சேமிக்க 0:11:00.000,0:11:06.000 முடிந்தது. இது எங்களுடைய சேமிப்பிற்குச் சென்றது – நான் 2003-ல் வந்த போது, நாங்கள் 0:11:06.000,0:11:10.000 சேமிப்பில் 7 பில்லியனைக் கொண்டிருந்தோம். 0:11:11.000,0:11:14.000 நான் விலகும் நேரத்தில், நாங்கள் கிட்டத்தட்ட $30 பில்லியனுக்குப் போயிருந்தோம். 0:11:14.000,0:11:17.000 நாம் இப்போது பேசுகிறபோது, எங்கள் நிதியின் முறையான நிர்வாகத்தின் காரணமாக 0:11:18.000,0:11:22.000 நாங்கள் சேமிப்பில் $40 பில்லியன்களைக் கொண்டுள்ளோம். 0:11:23.000,0:11:26.000 அது எங்களது பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தி, நிலையானதாக ஆக்குகிறது. 0:11:26.000,0:11:29.000 எப்போதுமே ஏறியிறங்குகிற எங்களது பரிமாற்ற வீதமானது, வர்த்தகம் செய்கிற மக்கள் 0:11:29.000,0:11:33.000 பொருளாதாரத்தில், விலைகளை முன்னறிவிப்பதைக் கொண்டிருக்கும் வகையில், 0:11:33.000,0:11:38.000 ஓரளவிற்கு நிலையானதாக உள்ளது மேலும் அது நிர்வகிக்கப்பட்டு வருகிறது. 0:11:40.000,0:11:44.000 நாங்கள் பணவீக்கத்தை 28 சதவீதத்திலிருந்து சுமார் 11 சதவீதத்திற்குக் கொண்டுவந்தோம். 0:11:46.000,0:11:52.000 எங்களது நாட்டின் வளர்ச்சி வீதம் முந்தைய பத்து ஆண்டுகளிலிருந்து 2.3 சதவீதத்தில் 0:11:52.000,0:11:55.000 இருந்து சுமார் 6.5 சதவீதத்திற்கு வளரக் கொண்டிருந்தோம். 0:11:56.000,0:11:59.000 எனவே அனைத்து மாற்றங்களும் சீரமைப்புகளும் பொருளாதாரத்தில் 0:11:59.000,0:12:02.000 அளவிடக்கூடிய முடிவுகளில் காண்பிக்க ஆரம்பித்தது. 0:12:02.000,0:12:06.000 மேலும் எது மிகவும் முக்கியம், ஏனென்றால் எண்ணையிலிருந்து வெளியேறி பரவலாக்கல் 0:12:06.000,0:12:08.000 செய்வது – மேலும் இந்த ஒரு பெரிய நாட்டில், ஆப்ரிக்காவிலுள்ள பலநாடுகளைப் போன்று 0:12:08.000,0:12:11.000 மிக அநேக வாய்ப்புகள் உள்ளன – குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் 0:12:13.000,0:12:16.000 பெரும்பாலான இந்த வளர்ச்சியானது எண்ணைத் துறையிலிருந்து வரவில்லை, 0:12:16.000,0:12:19.000 ஆனால் எண்ணை-சாராத துறையிலிருந்தே என்பதுதான். 0:12:19.000,0:12:22.000 விவசாயம் 8 சதவீதத்தை விட சிறப்பாக வளர்ச்சியடைந்தது. 0:12:22.000,0:12:26.000 தொலைதொடர்பு துறை வளர்ந்த போது, வீடு மற்றும் கட்டுமானம், இப்படி நான் 0:12:26.000,0:12:31.000 போய்க்கொண்டே இருக்க முடியும். மேலும் நீங்கள் மேக்ரோ-பொருளாதாரத்தை 0:12:31.000,0:12:33.000 நேராக்கிவிடும் போது, மற்ற பல்வேறு துறைகளிலான வாய்ப்புகளானது மிகப் பெரிய 0:12:33.000,0:12:37.000 அளவில் இருக்கும் என்பதை உங்களுக்குத் தெளிவாக்குவதற்குத் தான் இது. 0:12:38.000,0:12:41.000 நான் சொன்னது போலவே, நாங்கள் விவசாயத்திலும் வாய்ப்புகளைக் கொண்டுள்ளோம். 0:12:41.000,0:12:45.000 நாங்கள் திட கனிமங்களிலும் வாய்ப்புக்களைக் கொண்டுள்ளோம். யாருமே முதலீடு கூடச் 0:12:45.000,0:12:48.000 செய்திராத அல்லது ஆராய்ச்சி செய்திருக்காத நிறைய கனிமங்களை நாங்கள் கொண்டுள்ளோம். 0:12:48.000,0:12:51.000 அதைச் சாத்தியமாக்குவதற்கு முறையான சட்டம் இல்லாமல், 0:12:51.000,0:12:54.000 அது நடக்காது என்பதை நாங்கள் உணர்ந்தோம். 0:12:54.000,0:12:57.000 எனவே நாங்கள் இப்போது ஒரு சுரங்க நடத்தை விதியைக் கொண்டுள்ளோம் அது உலகின் மிகச்சிறந்த சிலவற்றோடு ஒப்பிடக் கூடியது. 0:12:58.000,0:13:00.000 நாங்கள் வீடு மற்றும் வீட்டுமனையிலும் வாய்ப்புகளைக் கொண்டுள்ளோம். 0:13:00.000,0:13:03.000 140 மில்லின் மக்கள் தொகை கொண்ட நாட்டில் ஒன்றுமே இல்லை – 0:13:04.000,0:13:09.000 நீங்கள் இங்கே அறிந்திருக்கிறபடி எந்த பெருவணிக வளாகங்களும் இல்லை. 0:13:10.000,0:13:13.000 மக்களின் கற்பனாசக்தியை தூண்டிவிட்ட 0:13:13.000,0:13:15.000 சிலருக்கு இது ஒரு முதலீட்டு வாய்ப்பு. 0:13:16.000,0:13:19.000 இப்போது, இத்தகைய வணிகவளாகங்களில் இருக்கும் வியாபாரங்கள் அவர்கள் 0:13:19.000,0:13:22.000 எதிர்பார்த்ததை விட நான்கு மடங்குகள் அதிகமான விற்றுமுதலைக் கொண்டுள்ளன. 0:13:23.000,0:13:26.000 எனவே, கட்டுமானத்தில், வீட்டுமனையில், அடகுச் சந்தையில் 0:13:26.000,0:13:28.000 பெரிய காரியங்கள் நடந்தன. நிதிசார்ந்த சேவைகள்: 0:13:29.000,0:13:33.000 நாங்கள் 89 வங்கிகளைக் கொண்டிருந்தோம். அதில் மிக அதிகமானவை அவர்களது உண்மையான வியாபாரத்தைச் செய்யாமலிருந்தார்கள். 0:13:33.000,0:13:37.000 அவர்களின் மூலதனத்தை அதிகரிக்க வேண்டும் – பங்கு மூலதனம்- என கோரிக்கையை 0:13:37.000,0:13:42.000 விடுத்து நாங்கள் அவைகளை 89 –லிருந்து 25 வங்கிகளாக கூட்டிச் சேர்த்தோம். 0:13:42.000,0:13:47.000 மேலும் அது சுமார் $25 மில்லியனிலிருந்து $150 மில்லியனுக்குச் சென்றது. 0:13:47.000,0:13:51.000 வங்கிகள் – இத்தகைய வங்கிகள் தற்போது கூட்டிச் சேர்க்கப்பட்டுள்ளன, அப்படி வங்கி 0:13:51.000,0:13:55.000 அமைப்புகளைப் பலப்படுத்தியது வெளியிலிருந்து நிறைய மூலதனத்தை கவர்ந்திருக்கிறது. 0:13:55.000,0:13:59.000 யூகேயின் பார்க்லேஸ் வங்கி 500 மில்லியன்களைக் கொண்டு வருகிறது. 0:13:59.000,0:14:03.000 ஸ்டாண்டர்டு சார்டர்ட் 140 மில்லியனைக் கொண்டு வந்திருக்கிறது. 0:14:03.000,0:14:06.000 இப்படி நான் போய்க்கொண்டே இருக்க முடியும். மேலும் மேலும், அந்த அமைப்பிற்குள் டாலர்கள். 0:14:06.000,0:14:08.000 இதையே தான் நாங்கள் காப்பீட்டுத் துறையிலும் செய்தோம். 0:14:08.000,0:14:11.000 எனவே நிதிச் சேவைகளில், ஒரு மிகப்பெரிய வாய்ப்பின் சந்தர்ப்பம். 0:14:11.000,0:14:17.000 சுற்றுலாவில், பல ஆப்ரிக்க நாடுகளில், ஒரு பெரிய வாய்ப்புள்ளது. 0:14:17.000,0:14:20.000 கிழக்கு ஆப்ரிக்காவைப் பற்றி பலமக்கள் அறிந்திருப்பது என்னவோ அதுதான்: 0:14:21.000,0:14:24.000 வன உயிர்கள், யானைகள், இப்படியாக. 0:14:24.000,0:14:26.000 ஆனால் சுற்றுலாச் சந்தையை, அவைகள் மக்களை உண்மையிலேயெ பயனுறச் 0:14:26.000,0:14:29.000 செய்யும் வகையில் நிர்வகிப்பது மிகவும் முக்கியமானதாகும். 0:14:30.000,0:14:33.000 எனவே நான் என்ன சொல்ல முயற்சிக்கிறேன்? அந்தக் கண்டத்தின் மீது ஒரு புதிய 0:14:33.000,0:14:36.000 அலையிருக்கிறது என்பதை உங்களுக்குச் சொல்லவே விரும்புகிறேன். 0:14:36.000,0:14:41.000 திறப்பு மற்றும் ஜனநாயகமாக்கலின் ஒரு புதிய அலை அதில், 2000-லிருந்து, ஆப்ரிக்க 0:14:41.000,0:14:43.000 நாடுகளில் மூன்றில்-இரண்டிற்கு மேலாக பல-கட்சி ஜனநாயக 0:14:43.000,0:14:45.000 தேர்தல்களைக் கொண்டிருக்கிறார்கள். 0:14:46.000,0:14:49.000 அனைத்துமே முழுமையானவையாக இல்லை, அல்லது இருக்காது, 0:14:49.000,0:14:51.000 ஆனால் போக்கு மிகத் தெளிவாக உள்ளது. 0:14:51.000,0:14:55.000 கடந்த மூன்று ஆண்டுகளாக, கண்டத்தின் மீதான ஆண்டு சராசரி வளர்ச்சியானது 2.5 0:14:55.000,0:14:58.000 சதவீதத்திலிருந்து சுமார் 5 சதவீதமாக உயர்ந்திருக்கிறது என்பதையே நான் 0:14:58.000,0:15:02.000 உங்களுக்குச் சொல்ல முயற்சிக்கிறேன். 0:15:02.000,0:15:06.000 இது பல ஓஈசிடி நாடுகள் செய்து காட்டியிருப்பதை விடச் சிறந்தது தான். 0:15:07.000,0:15:11.000 எனவே காரியங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன என்பது தெளிவாகிறது. 0:15:11.000,0:15:13.000 கண்டத்தில் சண்டைகள் குறைந்து வருகின்றன; ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பாக சுமார் 12 0:15:14.000,0:15:16.000 சண்டைகளில் இருந்து, மூன்று அல்லது நான்காக 0:15:16.000,0:15:18.000 குறைந்திருக்கிறோம், அவைகளில் 0:15:18.000,0:15:21.000 மிகவும் மோசமானது, உண்மையிலேயே, டார்பர் தான். 0:15:21.000,0:15:24.000 மேலும், பாருங்கள், உங்களிடம் அண்டைப்பக்க பாதிப்பு உள்ளது, அதில் கண்டத்தின் ஒரு 0:15:24.000,0:15:26.000 பகுதியில் ஏதாவது நடந்து கொண்டிருந்தால், அந்த முழுக் 0:15:26.000,0:15:29.000 கண்டமும் பாதிக்கப்பட்டது போல காணப்படுகிறது. 0:15:29.000,0:15:32.000 ஆனால் இந்தக் கண்டம் அப்படியல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் – 0:15:32.000,0:15:38.000 இந்தக் கண்டம் ஒரு நாடு அல்ல ஆனால் பல நாடுகளால் ஆனது. 0:15:38.000,0:15:40.000 மேலும் மூன்று அல்லது நான்கு சண்டைகளுக்கு குறைந்து வந்திருப்போமானால், 0:15:40.000,0:15:43.000 ஒரு நிலையான, வளர்கிற, ஆச்சரியமூட்டுகிற 0:15:43.000,0:15:50.000 நிறைய வாய்ப்புகளுள்ள பொருளாதாரத்தில் முதலீடு செய்வதற்கு 0:15:50.000,0:15:53.000 மிக அதிகமான வாய்ப்புகள் உள்ளது என்றே அர்த்தம். 0:15:54.000,0:15:58.000 இந்த முதலீட்டைப் பற்றி ஒரே ஒரு குறிப்பை வைக்க விரும்புகிறேன். 0:15:59.000,0:16:01.000 ஆப்ரிக்கர்களுக்கு உதவும் சிறந்த வழியானது அவர்களின் சொந்தக் 0:16:02.000,0:16:05.000 கால்களில் நிற்பதற்கு உதவுவதே. 0:16:05.000,0:16:09.000 அதைச் செய்வதற்கான சிறந்த வழியானது வேலைகளை உருவாக்க உதவுவதே. 0:16:10.000,0:16:14.000 மலேரியாவை எதிர்த்துப் போராடுவதும் பணத்தை அதில் போடுவதும் குழந்தைகளின் உயிர்களைக் 0:16:14.000,0:16:18.000 காப்பாற்றுவதும் ஒரு பிரச்சினையும் இல்லை. நான் சொல்லிக் கொண்டிருப்பது அதுவல்ல. அது நல்லது தான். 0:16:19.000,0:16:23.000 ஆனால் ஒரு குடும்பத்தின் மீதான தாக்கத்தைக் கற்பனை செய்து பாருங்கள். பெற்றோர்கள் 0:16:23.000,0:16:25.000 பணியமர்த்தப்பட்டு அவர்களின் குழந்தைகளைப் பள்ளிக்குச் செல்லுமாறு செய்தால், 0:16:25.000,0:16:28.000 நோய்க்கெதிராகப் போராடுவதற்கு அவர்களாகவே மருந்துகளை வாங்க முடிந்ததானால். 0:16:28.000,0:16:32.000 வேலைகளை உருவாக்கி மக்களை அவர்களது சொந்தக் காலில் நிற்கச் செய்ய உதவுகிற அதே வேளையில், 0:16:32.000,0:16:37.000 நீங்களே பணத்தை சம்பாதிக்க முடிகிற இடங்களில் நாம் முதலீடுகளைச் செய்ய முடிந்தால், 0:16:37.000,0:16:42.000 அது ஒரு அற்புதமான வாய்ப்பல்லவா? நாம் போக வேண்டிய வழி அது தானல்லவா? 0:16:42.000,0:16:45.000 கண்டத்தில் முதலீடு செய்வதற்கான சிறந்த மக்கள் 0:16:45.000,0:16:47.000 பெண்களே என்று நான் சொல்ல விரும்புகிறேன். 0:16:48.000,0:16:55.000 (கைதட்டல்). 0:16:55.000,0:17:00.000 இங்கே நான் ஒரு சிடி-யை வைத்திருக்கிறேன். சரியான நேரத்தில் எதையும் சொல்லாததற்கு நான் வருந்துகிறேன். 0:17:00.000,0:17:02.000 மற்றபடி, நீங்கள் இதைப் பார்க்க வேண்டுமென நான் விரும்பியிருப்பேன். 0:17:02.000,0:17:05.000 அது சொல்கிறது, “ஆப்ரிக்கா: வியாபாரத்திற்கு திறந்திருக்கிறது.” 0:17:06.000,0:17:09.000 மேலும் இது தான் உண்மையிலேயே ஆண்டின் சிறந்த செய்திப் படமாக 0:17:09.000,0:17:11.000 விருதைப் பெற்ற அந்த வீடியோ. 0:17:11.000,0:17:13.000 இதைச் செய்த பெண்கள் டான்ஸானியாவில் இருக்கப் போகிறார்கள் என்பதைப் புரிந்து 0:17:13.000,0:17:18.000 கொள்ளுங்கள், அங்கு அவர்கள் ஜூனில் அந்த அமர்வினைக் கொண்டிருக்கிறார்கள். 0:17:19.000,0:17:24.000 மேலும் இது ஆப்ரிக்கர்களை உங்களுக்குக் காட்டுகிறது, குறிப்பாகப் பெண்களை, அத்தனை பிரச்சினைகளுக்கு 0:17:24.000,0:17:29.000 மத்தியிலும் அவர்கள் வியாபாரத்தை வளர்த்திருக்கிறார்கள், அவைகளில் சில உலகத்தரமானவையும் கூட. 0:17:29.000,0:17:32.000 இந்த வீடியோவிலுள்ள பெண்களில் ஒருவர், அடெனிக்கே ஓகுன்லேசி, குழந்தைகளின் 0:17:32.000,0:17:34.000 ஆடைகளை தயாரித்துக் கொண்டிருக்கிறார் - 0:17:34.000,0:17:39.000 அதை அவர் ஒரு பொழுது போக்காக ஆரம்பித்து ஒரு வியாபாரமாக வளர்த்திருக்கிறார். 0:17:39.000,0:17:42.000 ஆப்ரிக்கத் துணி வகைகளை, நாங்கள் கொண்டிருப்பதைப் போன்றது, 0:17:43.000,0:17:44.000 வேறெங்கிருந்தும் வரவழைக்கிற துணி வகைகளோடு இணைப்பது. 0:17:44.000,0:17:49.000 எனவே, அவர் ஒரு சிறிய ஜோடி டங்காரீக்களை கோர்டுரோய்களோடு உருவாக்குவார், 0:17:49.000,0:17:53.000 ஆப்ரிக்க துணிகளின் கலப்போடு. மிகவும் கற்பனை திறன் மிகுந்த வடிவங்கள். 0:17:55.000,0:17:58.000 வால்-மார்டிடமிருந்து கூட வியாபார ஆணைகளைப் பெறுமளவிற்கு ஒரு நிலையை அடைந்திருக்கிறார். 0:17:59.000,0:18:00.000 (சிரிப்பு). 0:18:01.000,0:18:03.000 10:00 ஆடைகளுக்கு. 0:18:04.000,0:18:08.000 எனவே இதைச் செய்யும் திறனுள்ள மக்களை நாங்கள் கொண்டிருக்கிறோம் என்பதையே இது உங்களுக்குக் காண்பிக்கிறது. 0:18:08.000,0:18:13.000 மேலும் அந்தப் பெண்கள் கருத்துள்ளவர்கள்: அவர்கள் கவனம் செலுத்தி; கடினமாக உழைக்கிறார்கள். 0:18:13.000,0:18:15.000 நான் உதாரணங்களைக் கொடுத்துக் கொண்டே செல்லமுடியும்: 0:18:15.000,0:18:19.000 ருவாண்டாவின் பீட்ரைஸ் ககுபா, ஒரு பூ வியாபாரத்தை ஆரம்பித்து தற்போது ஒவ்வொரு காலையிலும் 0:18:19.000,0:18:24.000 ஆம்ஸ்டர்டாமிலுள்ள டட்ச் ஏலத்திற்கு ஏற்றுமதி செய்கிறார், மேலும் 0:18:24.000,0:18:28.000 அவரோடு பணியாற்றுவதற்கு மற்ற 200 பெண்களையும் ஆண்களையும் அமர்த்தியிருக்கிறார். 0:18:29.000,0:18:33.000 ஆயினும், இத்தகைய பலரும் மூலதனத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள், 0:18:34.000,0:18:37.000 ஏனென்றால் எது தேவையோ அதை நாங்கள் செய்ய முடியும் என்பதை எங்கள் நாட்டிற்கு 0:18:37.000,0:18:42.000 வெளியேயுள்ள யாரும் நம்புகிறதில்லை. சந்தை முறையில் யாரும் யோசிப்பதில்லை. 0:18:42.000,0:18:45.000 வாய்ப்புள்ளது என்பதை யாரும் சிந்திப்பதில்லை. 0:18:45.000,0:18:48.000 ஆனால், இப்போது படகை கைநழுவ விடுகிறவர்கள், எப்போதுமே விட்டுவிடுவார்கள் 0:18:48.000,0:18:50.000 என்பதைச் சொல்லிக்கொண்டு தான் நான் இங்கே நிற்கிறேன். 0:18:50.000,0:18:56.000 எனவே நீங்கள் ஆப்ரிக்காவில் இருக்க விரும்பினால், மூலதனம் செய்வதைப் பற்றி சிந்தியுங்கள். 0:18:57.000,0:19:03.000 இந்த உலகின் பீட்ரைஸ்களைப் பற்றி நினையுங்கள், அடேனிக்கே-களை நினையுங்கள், 0:19:03.000,0:19:06.000 அவர்கள் தங்களை உலகப் பொருளாதாரத்திற்குள் கொண்டுவரும் நம்பமுடியாதவைகளைச் 0:19:06.000,0:19:09.000 செய்து கொண்டிருக்கிறர்கள், தங்கள் உடனிருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் 0:19:09.000,0:19:12.000 வேலைவாய்ப்பை உறுதிசெய்யும் அதே வேளையில், அவர்கள் பெற்றோர்கள் 0:19:12.000,0:19:14.000 போதுமான வருமானத்தைச் சம்பாதிப்பதால் அந்த வீடுகளில் 0:19:14.000,0:19:17.000 உள்ள குழந்தைகள் கல்வியறிவைப் பெறுகிறார்கள். 0:19:18.000,0:19:22.000 எனவே வாய்ப்புகளை ஆராய்ந்து பார்க்க உங்களை நான் அழைக்கிறேன். 0:19:23.000,0:19:27.000 நீங்கள் டான்ஸானியாவிற்குச் செல்லும் போது, நிதானமாகக் கவனியுங்கள், ஏனென்றால் 0:19:27.000,0:19:31.000 நீங்கள் நன்றாகச் செய்யக் கூடிய சில காரியங்களில் நீங்கள் ஈடுபடக்கூடிய பலவிதமான 0:19:31.000,0:19:36.000 திறப்புகள் உங்களுக்கு இருப்பதைப் பற்றி நீங்கள் கேள்விப்படுவீர்கள் 0:19:36.000,0:19:41.000 என நான் உறுதியாக இருக்கிறேன். கண்டத்திற்கும், மக்களுக்கும், உங்களுக்கும் கூட. 0:19:41.000,0:19:42.000 உங்களுக்கு மிக்க நன்றி. 0:19:42.000,0:19:50.000 (கைதட்டல்)