[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:05.00,0:00:08.00,Default,,0000,0000,0000,,உங்களுக்கு மிக்க நன்றி, கிரிஸ். இங்கு வந்த ஒவ்வொருவரும் அவர்கள் பயந்ததாகச் Dialogue: 0,0:00:08.00,0:00:12.00,Default,,0000,0000,0000,,சொன்னார்கள். நான் பயந்தேனா என்பது எனக்குத் தெரியாது, ஆனால் இது போன்ற ஒரு Dialogue: 0,0:00:12.00,0:00:16.00,Default,,0000,0000,0000,,நேயர்களிடம் பேசுவது இது தான் எனக்கு முதன் முறை. Dialogue: 0,0:00:16.00,0:00:20.00,Default,,0000,0000,0000,,உங்களைப் பார்க்கச் செய்வதற்காக என்னிடம் எவ்வித மதிநுட்பமான தொழிற்நுட்பமும் இல்லை. Dialogue: 0,0:00:20.00,0:00:23.00,Default,,0000,0000,0000,,எவ்வித ஸ்லைடுகளும் இல்லை, எனவே நீங்கள் என்னோடு கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். Dialogue: 0,0:00:23.00,0:00:26.00,Default,,0000,0000,0000,,(சிரிப்பு). Dialogue: 0,0:00:26.00,0:00:32.00,Default,,0000,0000,0000,,இந்தக் காலையில் நான் என்ன செய்ய விரும்புகிறேனென்றால் ஓரிரண்டு கதைகளை உங்களுடன் Dialogue: 0,0:00:32.00,0:00:35.00,Default,,0000,0000,0000,,பகிர்ந்து கொண்டு ஒரு வித்தியாசமான ஆப்ரிக்காவைப் பற்றி உங்களுடன் பேசுவதுதான். Dialogue: 0,0:00:35.00,0:00:39.00,Default,,0000,0000,0000,,ஏற்கெனவே இந்தக் காலைப் பொழுதில், நீங்கள் அனைத்து நேரங்களிலும் ஆப்ரிக்காவைப் Dialogue: 0,0:00:39.00,0:00:44.00,Default,,0000,0000,0000,,பற்றிக் கேள்விப்பட்டதைப் பற்றிய சில பேச்சுக்கள் இருந்தன: Dialogue: 0,0:00:44.00,0:00:50.00,Default,,0000,0000,0000,,எச்ஐவி/எயிட்ஸின் ஆப்ரிக்கா, மலேரியாவின் ஆப்ரிக்கா, Dialogue: 0,0:00:50.00,0:00:53.00,Default,,0000,0000,0000,,ஏழ்மையின் ஆப்ரிக்கா, சண்டைகளின் ஆப்ரிக்கா மற்றும் பேரழிவுகளின் ஆப்ரிக்கா. Dialogue: 0,0:00:53.00,0:00:57.00,Default,,0000,0000,0000,,அவைகள் நடந்து கொண்டுதானிருக்கின்றன என்பது உண்மையாக இருக்கின்ற வேலையில், Dialogue: 0,0:00:57.00,0:01:01.00,Default,,0000,0000,0000,,நீங்கள் அந்தளவிற்குக் கேள்விப்பட்டிராத ஒரு ஆப்ரிக்காவும் உள்ளது. Dialogue: 0,0:01:01.00,0:01:05.00,Default,,0000,0000,0000,,சில நேரங்களில் நான் ஆச்சரியப்பட்டு, என்னையே நான் கேட்டுக் கொள்வேன், அது தான் கிரிஸ் கேள்விப்பட்ட பேச்சும் ஏனென்று. Dialogue: 0,0:01:05.00,0:01:09.00,Default,,0000,0000,0000,,இது தான் அந்த வாய்ப்புள்ள ஆப்ரிக்கா. Dialogue: 0,0:01:09.00,0:01:11.00,Default,,0000,0000,0000,,மக்கள் தங்களின் சொந்த எதிர்காலம் மற்றும் Dialogue: 0,0:01:11.00,0:01:14.00,Default,,0000,0000,0000,,அவர்களது சொந்த இலக்கின் பொறுப்பையும் Dialogue: 0,0:01:14.00,0:01:16.00,Default,,0000,0000,0000,,ஏற்றுக்கொள்ள விரும்புகிற ஆப்ரிக்கா இது தான். Dialogue: 0,0:01:16.00,0:01:19.00,Default,,0000,0000,0000,,மேலும் இதைச் செய்வதற்கு மக்கள் வர்த்தகக் கூட்டுக்களை எதிர்பார்க்கிற ஆப்ரிக்க இதுதான். Dialogue: 0,0:01:19.00,0:01:23.00,Default,,0000,0000,0000,,அதைப் பற்றி தான் நான் இன்று பேசவிரும்புகிறேன். Dialogue: 0,0:01:23.00,0:01:25.00,Default,,0000,0000,0000,,ஆப்ரிக்காவிலுள்ள அந்த மாற்றத்தைப் பற்றி Dialogue: 0,0:01:25.00,0:01:27.00,Default,,0000,0000,0000,,ஒரு கதையைச் சொல்லி ஆரம்பிக்க விரும்புகிறேன். Dialogue: 0,0:01:28.00,0:01:33.00,Default,,0000,0000,0000,,2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி, திரு டெப்ரியே அலாமியேசேகா, நைஜீரியாவின் Dialogue: 0,0:01:33.00,0:01:37.00,Default,,0000,0000,0000,,எண்ணை-வளமிக்க மாநிலங்கள் ஒன்றின் ஆளுநர், லண்டனுக்கு வருகை தந்தபோது Dialogue: 0,0:01:37.00,0:01:44.00,Default,,0000,0000,0000,,லண்டன் மெட்ரோபாலிட்டன் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். Dialogue: 0,0:01:44.00,0:01:49.00,Default,,0000,0000,0000,,அவர் ஏன் கைது செய்யப்பட்டாரென்றால் Dialogue: 0,0:01:49.00,0:01:52.00,Default,,0000,0000,0000,,அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் சொந்தமான இரகசியக் கணக்குகளுக்குள் $8 மில்லியன் Dialogue: 0,0:01:52.00,0:01:55.00,Default,,0000,0000,0000,,அளவிற்கான பணப் பரிமாற்றம் இருந்தது. Dialogue: 0,0:01:56.00,0:01:58.00,Default,,0000,0000,0000,,இந்தக் கைது நேர்ந்ததேனென்றால் லண்டன் மெட்ரோபாலிட்டன் காவல்துறைக்கும் Dialogue: 0,0:01:58.00,0:02:01.00,Default,,0000,0000,0000,,நைஜீரியாவின் பொருளாதார மற்றும் நிதிக் குற்றங்கள் ஆணையத்திற்குமிடையே Dialogue: 0,0:02:01.00,0:02:04.00,Default,,0000,0000,0000,,ஒத்துழைப்பு இருந்தது – எங்களின் மிகத் திறமைவாய்ந்த மற்றும் Dialogue: 0,0:02:04.00,0:02:11.00,Default,,0000,0000,0000,,தைரியமான மக்களால் அது நடத்தப்பட்டது. Dialogue: 0,0:02:11.00,0:02:14.00,Default,,0000,0000,0000,,திரு. நூஹு ரிபாடு. அலாமெயேசேகா லண்டனில் விசாரிக்கப்பட்டார். Dialogue: 0,0:02:14.00,0:02:18.00,Default,,0000,0000,0000,,சில சட்ட ஓட்டைகளின் காரணமாக, அவர் ஒரு பெண் போன்று உடையணிந்து கொண்டு Dialogue: 0,0:02:18.00,0:02:21.00,Default,,0000,0000,0000,,லண்டனிலிருந்து நைஜீரியாவிற்குத் திரும்பவும் ஓடிப்போகச் சமாளித்துக் கொண்டார், Dialogue: 0,0:02:21.00,0:02:25.00,Default,,0000,0000,0000,,எங்களின் சட்டத்திட்டங்களின் படி, ஆளுநர்கள், ஜனாதிபதிகளின் பொறுப்பிலிருப்பவர்கள் – Dialogue: 0,0:02:25.00,0:02:27.00,Default,,0000,0000,0000,,பல நாடுகளில் இருப்பது போல – தண்டிக்கப்பட Dialogue: 0,0:02:27.00,0:02:32.00,Default,,0000,0000,0000,,முடியாத அளவிற்கு பாதுகாப்பைக் கொண்டுள்ளார்கள். ஆனால் என்ன நடந்தது: Dialogue: 0,0:02:32.00,0:02:36.00,Default,,0000,0000,0000,,இந்த நடத்தையினால் மக்கள் மிகவும் உக்கிரமடைந்தார்கள், சட்டமன்ற உறுப்பினர்களால் அவரை Dialogue: 0,0:02:36.00,0:02:42.00,Default,,0000,0000,0000,,நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் பதவியிலிருந்து நீக்குவது சாத்தியமானதாக இருந்தது. Dialogue: 0,0:02:43.00,0:02:45.00,Default,,0000,0000,0000,,இன்று, அலாம்ஸ் – கொஞ்சகாலத்திலேயே – அவரை நாங்கள் சிறையில் சந்தித்தோம். Dialogue: 0,0:02:46.00,0:02:51.00,Default,,0000,0000,0000,,ஆப்ரிக்க மக்கள் இதற்கு மேலும் அவர்கள் தலைவர்களிடமிருந்து ஊழலைத் தாங்கிக் Dialogue: 0,0:02:51.00,0:02:56.00,Default,,0000,0000,0000,,கொள்ள விருப்பமுள்ளவர்களாக இல்லை என்பதின் உண்மை பற்றியதே இந்தக் கதை. Dialogue: 0,0:02:57.00,0:03:02.00,Default,,0000,0000,0000,,மக்கள் அவர்களது வளங்களானது அவர்களின் நன்மைக்கென முறையாக நிர்வகிக்கப்படவேண்டும் Dialogue: 0,0:03:02.00,0:03:07.00,Default,,0000,0000,0000,,என்றும் ஒரு சில முக்கியஸ்தர்களையே பலனடையச் செய்யும் இடங்களுக்கு Dialogue: 0,0:03:07.00,0:03:10.00,Default,,0000,0000,0000,,அவைகள் எடுத்துச் செல்லப்படக் கூடாது என்பதை மக்கள் விரும்புகிறார்கள் என்பதைப் பற்றியதே இந்தக் கதை. Dialogue: 0,0:03:10.00,0:03:14.00,Default,,0000,0000,0000,,ஆகையால், நீங்கள் ஊழல் மிகுந்த ஆப்ரிக்காவைப் பற்றிக் கேள்விப்படும் போது, Dialogue: 0,0:03:14.00,0:03:18.00,Default,,0000,0000,0000,,எப்போதுமிருந்த ஊழல் – சில நாடுகளில் மக்களும் அரசாங்களும் இதை எதிர்த்துப் போராட Dialogue: 0,0:03:18.00,0:03:21.00,Default,,0000,0000,0000,,கடுமையாக முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள Dialogue: 0,0:03:21.00,0:03:25.00,Default,,0000,0000,0000,,வேண்டுமென நான் விரும்புகிறேன், மேலும் சில வெற்றிகளும் வந்து கொண்டிருக்கின்றன. Dialogue: 0,0:03:25.00,0:03:28.00,Default,,0000,0000,0000,,பிரச்சினை முடிந்து விட்டது என்பது அதன் அர்த்தமா? பதில் இல்லையென்பதே. Dialogue: 0,0:03:28.00,0:03:32.00,Default,,0000,0000,0000,,இன்னும் போகவேண்டியதற்கு வெகு தூரம் உள்ளது, ஆனால் அங்கே மனம் இருக்கிறது. Dialogue: 0,0:03:32.00,0:03:36.00,Default,,0000,0000,0000,,இந்த மிக முக்கியமான போராட்டத்தில் வெற்றிகள் குவிக்கப்பட்டு வருகின்றன. Dialogue: 0,0:03:36.00,0:03:38.00,Default,,0000,0000,0000,,எனவே நீங்கள் ஊழலைப் பற்றிக் கேள்விப்படும் போது, Dialogue: 0,0:03:38.00,0:03:41.00,Default,,0000,0000,0000,,இதைப் பற்றி ஒன்றுமே செய்யப்படுவதில்லை என்று நினைக்காதீர்கள் - Dialogue: 0,0:03:41.00,0:03:44.00,Default,,0000,0000,0000,,அதிகப்படியான ஊழலின் காரணமாக நீங்கள் Dialogue: 0,0:03:44.00,0:03:47.00,Default,,0000,0000,0000,,ஆப்ரிக்க நாடுகளில் செயல்பட முடியாது என்பதாக நினைக்காதீர்கள். விஷயம் அதுவல்ல. Dialogue: 0,0:03:47.00,0:03:53.00,Default,,0000,0000,0000,,போராடுவதற்கான மனது இருக்கிறது, பல நாடுகளில், அந்தப் போராட்டமானது நடந்து Dialogue: 0,0:03:53.00,0:03:57.00,Default,,0000,0000,0000,,கொண்டிருக்கிறது மேலும் வெற்றியும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. மற்றவைகளில், Dialogue: 0,0:03:57.00,0:04:00.00,Default,,0000,0000,0000,,என்னுடையதைப் போன்றவை, நைஜீரியாவில் சர்வாதிக்கத்தின் நெடுநாளைய வரலாறு Dialogue: 0,0:04:00.00,0:04:04.00,Default,,0000,0000,0000,,இருந்திருக்கிறது, போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது மேலும் நாங்கள் நெடுந் தூரம் போக வேண்டியுள்ளது. Dialogue: 0,0:04:04.00,0:04:08.00,Default,,0000,0000,0000,,ஆனால் விஷயத்தின் உண்மையென்னவென்றால் இது போய்க்கொண்டேயிருக்கிறது. Dialogue: 0,0:04:09.00,0:04:11.00,Default,,0000,0000,0000,,முடிவுகள் காண்பிக்கின்றன: Dialogue: 0,0:04:11.00,0:04:15.00,Default,,0000,0000,0000,,உலக வங்கி மற்றும் மற்ற ஸ்தாபனங்களினால் செய்யப்பட்ட Dialogue: 0,0:04:15.00,0:04:19.00,Default,,0000,0000,0000,,தனிப்பட்ட கண்கானிப்பானது, அந்தப் போக்கானது ஊழலைப் பொறுத்தவரையில் Dialogue: 0,0:04:19.00,0:04:22.00,Default,,0000,0000,0000,,குறைவாகவும், ஆட்சிமுறை மேம்பட்டு வருகிறது என்பதையும் பல நிகழ்வுகளில் காண்பிக்கின்றன. Dialogue: 0,0:04:22.00,0:04:26.00,Default,,0000,0000,0000,,28 ஆப்ரிக்க நாடுகளில் நிர்வாகமானது தெளிவான மேல்நோக்கிய போக்கில் இருப்பதை, Dialogue: 0,0:04:26.00,0:04:30.00,Default,,0000,0000,0000,,ஆப்ரிக்காவிற்கான பொருளாதார ஆணையத்தின் ஒரு ஆய்வு காண்பித்தது. Dialogue: 0,0:04:30.00,0:04:32.00,Default,,0000,0000,0000,,நிர்வாகத்தின் இந்தப் பகுதியை விட்டு நான் செல்வதற்கு முன்பாக நான் Dialogue: 0,0:04:32.00,0:04:34.00,Default,,0000,0000,0000,,இன்னுமொன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். Dialogue: 0,0:04:34.00,0:04:37.00,Default,,0000,0000,0000,,மக்கள் ஊழல், ஊழலைப்பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார்கள். Dialogue: 0,0:04:37.00,0:04:39.00,Default,,0000,0000,0000,,அதைப் பற்றி மக்கள் பேசும்போதெல்லாம் நீங்கள் Dialogue: 0,0:04:39.00,0:04:41.00,Default,,0000,0000,0000,,உடனே ஆப்ரிக்காவைப் பற்றிதான் நினைக்கிறீர்கள். Dialogue: 0,0:04:41.00,0:04:45.00,Default,,0000,0000,0000,,அது தான் அந்த காட்சி: ஆப்ரிக்க நாடுகள். ஆனால் நான் இதைச் செல்லட்டும்: Dialogue: 0,0:04:45.00,0:04:51.00,Default,,0000,0000,0000,,லண்டனில் உள்ள ஒரு கணக்கிற்குள் அலாம்ஸால் $8 மில்லியனை அனுப்ப முடிந்ததானால் -- Dialogue: 0,0:04:53.00,0:04:57.00,Default,,0000,0000,0000,,மற்ற மக்கள் எடுத்திருந்த வளரும் நாடுகளின் Dialogue: 0,0:04:57.00,0:05:01.00,Default,,0000,0000,0000,,பணமான 20 முதல் 40 பில்லியன் அளவு வளர்ந்த Dialogue: 0,0:05:01.00,0:05:04.00,Default,,0000,0000,0000,,நாடுகளில் உட்கார்ந்திருந்தால் – அவர்களால் இதைச் செய்ய முடிந்தால், Dialogue: 0,0:05:04.00,0:05:07.00,Default,,0000,0000,0000,,அது என்ன? அது ஊழல் இல்லையா? Dialogue: 0,0:05:08.00,0:05:12.00,Default,,0000,0000,0000,,இந்த நாட்டில், நீங்கள் திருடப்பட்ட பொருட்களைப் பெற்றுக் கொண்டால், நீங்கள் தண்டிக்கப்படத்தக்கவர்கள் இல்லையா? Dialogue: 0,0:05:13.00,0:05:16.00,Default,,0000,0000,0000,,எனவே நாம் இது போன்ற வகையான ஊழலைப் பற்றிப் பேசும் போது, உலகத்தின் மற்ற Dialogue: 0,0:05:16.00,0:05:19.00,Default,,0000,0000,0000,,பகுதிகளில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி நாம் நினைத்துப் பார்ப்போம் Dialogue: 0,0:05:19.00,0:05:23.00,Default,,0000,0000,0000,,பணம் எங்கே போகிறது அதைத் தடுக்க என்ன செய்யலாம். Dialogue: 0,0:05:23.00,0:05:26.00,Default,,0000,0000,0000,,நான் உலக வங்கியோடு கூட, சொத்து மீட்பின் மீதான, ஒரு முன்முயற்சியில் இப்போது Dialogue: 0,0:05:26.00,0:05:29.00,Default,,0000,0000,0000,,வேலை செய்து கொண்டிருக்கிறேன், வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிற Dialogue: 0,0:05:29.00,0:05:32.00,Default,,0000,0000,0000,,பணங்களை திரும்பப் பெறுவதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்பதை முயற்சித்துக் Dialogue: 0,0:05:32.00,0:05:35.00,Default,,0000,0000,0000,,கொண்டு, வளரும் நாடுகளின் பணங்கள் – திரும்ப அனுப்பப் படுவதற்கு. Dialogue: 0,0:05:35.00,0:05:38.00,Default,,0000,0000,0000,,ஏனென்றால் அங்கே உட்கார்ந்திருக்கிற பணத்தில் $20 பில்லியனை நம்மால் பெற Dialogue: 0,0:05:38.00,0:05:41.00,Default,,0000,0000,0000,,முடிந்தால், அது சில நாடுகளுக்கு அனைத்து நிதியுதவிகளையும் Dialogue: 0,0:05:41.00,0:05:44.00,Default,,0000,0000,0000,,ஒன்றாகச் சேர்ப்பதை விட அதிகமானதாக இருக்கக் கூடும். Dialogue: 0,0:05:44.00,0:05:51.00,Default,,0000,0000,0000,,(கைதட்டல்). Dialogue: 0,0:05:51.00,0:05:55.00,Default,,0000,0000,0000,,நான் பேச விரும்புகிற இரண்டாவது காரியம் சீரமைப்பிற்கான மனது. Dialogue: 0,0:05:55.00,0:05:59.00,Default,,0000,0000,0000,,ஆப்ரிக்கர்கள், - அவர்கள் சோர்வடைந்த பிறகு, ஒவ்வொருவரின் உதவி மற்றும் Dialogue: 0,0:05:59.00,0:06:04.00,Default,,0000,0000,0000,,கவனிப்பின் பொருளாக இருந்து இருந்து நாங்கள் சோர்வடைந்து விட்டோம். Dialogue: 0,0:06:04.00,0:06:08.00,Default,,0000,0000,0000,,நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், ஆனால் நாங்கள் சீரமைப்பதற்கான மனதைக் Dialogue: 0,0:06:08.00,0:06:12.00,Default,,0000,0000,0000,,கொண்டிருந்தோமானால், எங்களது இலக்கிற்கான பொறுப்பை நாங்கள் எடுத்துக் கொள்ள முடியும் என எங்களுக்குத் தெரிகிறது. Dialogue: 0,0:06:13.00,0:06:17.00,Default,,0000,0000,0000,,மேலும் பல ஆப்ரிக்க நாடுகளில் இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றால், உணர்ந்து கொள்ளுதல், Dialogue: 0,0:06:17.00,0:06:21.00,Default,,0000,0000,0000,,அது வேறு யாரும் செய்ய முடியாது நாங்கள் தான் செய்ய வேண்டும். நாங்கள் அதைச் செய்ய வேண்டியுள்ளது. Dialogue: 0,0:06:21.00,0:06:25.00,Default,,0000,0000,0000,,எங்களை ஆதரிக்கும் பங்காளர்களை நாங்கள் அழைக்க முடியும், ஆனால் நாங்கள் தான் அதை ஆரம்பிக்க வேண்டும். Dialogue: 0,0:06:25.00,0:06:28.00,Default,,0000,0000,0000,,எங்கள் பொருளாதாரங்களை நாங்கள் சீரமைக்க வேண்டும், எங்கள் தலைமைத்துவத்தை மாற்ற வேண்டும், Dialogue: 0,0:06:28.00,0:06:34.00,Default,,0000,0000,0000,,பெரிய மாறுதலுள்ளவர்களாக மாற வேண்டும், மாற்றத்திற்கும் தகவல்களுக்கும் மிகவும் திறந்த மனதுள்ளவர்களாக இருக்க வேண்டும். Dialogue: 0,0:06:34.00,0:06:36.00,Default,,0000,0000,0000,,அந்த கண்டத்திலுள்ள மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான, Dialogue: 0,0:06:36.00,0:06:39.00,Default,,0000,0000,0000,,நைஜீரியாவில், நாங்கள் செய்ய ஆரம்பித்திருப்பது இது தான். Dialogue: 0,0:06:39.00,0:06:42.00,Default,,0000,0000,0000,,உண்மையில், நீங்கள் நைஜீரியாவில் இல்லையென்றல், நீங்கள் ஆப்ரிக்காவிலேயே இல்லை. Dialogue: 0,0:06:42.00,0:06:43.00,Default,,0000,0000,0000,,நான் அதை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். Dialogue: 0,0:06:43.00,0:06:44.00,Default,,0000,0000,0000,,(சிரிப்பு). Dialogue: 0,0:06:44.00,0:06:46.00,Default,,0000,0000,0000,,துணை சகாரா ஆப்ரிக்கர்களில் நான்கில் ஒருவர் நைஜீரியாக்காரர், மேலும் அது 140 Dialogue: 0,0:06:48.00,0:06:53.00,Default,,0000,0000,0000,,மில்லியன் சுறுசுறுப்பான மக்களைக் கொண்டுள்ளது – குழப்பமான மக்கள் - ஆனால் Dialogue: 0,0:06:54.00,0:06:58.00,Default,,0000,0000,0000,,மிகவும் ஆர்வமுடைய மக்கள். உங்களுக்கு அலுப்பாகவே இருக்காது. Dialogue: 0,0:06:58.00,0:06:59.00,Default,,0000,0000,0000,,(சிரிப்பு). Dialogue: 0,0:06:59.00,0:07:01.00,Default,,0000,0000,0000,,நாங்கள் என்ன செய்ய ஆரம்பிதோமென்றால் பொறுப்பெடுத்துக் கொண்டு Dialogue: 0,0:07:01.00,0:07:03.00,Default,,0000,0000,0000,,எங்களை நாங்களே சீரமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்வது தான். Dialogue: 0,0:07:04.00,0:07:06.00,Default,,0000,0000,0000,,சீரமைப்புகளைச் செய்வதற்கு அந்த நேரத்தில் Dialogue: 0,0:07:06.00,0:07:09.00,Default,,0000,0000,0000,,விருப்பமுள்ள ஒரு தலைவரின் ஆதரவோடு, Dialogue: 0,0:07:09.00,0:07:11.00,Default,,0000,0000,0000,,நாங்களே மேம்படுத்திக் கொண்ட ஒரு Dialogue: 0,0:07:11.00,0:07:13.00,Default,,0000,0000,0000,,கூட்டு சீரமைப்புத் திட்டத்தை முன் வைத்தோம். Dialogue: 0,0:07:13.00,0:07:16.00,Default,,0000,0000,0000,,சர்வதேச நிதியல்ல. நான் 21 ஆண்டுகளாக வேலை Dialogue: 0,0:07:16.00,0:07:19.00,Default,,0000,0000,0000,,பார்த்து ஒரு துணைத்தலைவராக உயர்ந்த, உலகவங்கியுமல்ல. Dialogue: 0,0:07:20.00,0:07:22.00,Default,,0000,0000,0000,,யாருமே உங்களுக்காக அதைச் செய்ய முடியாது. உங்களுக்காக நீங்களே அதைச் செய்ய வேண்டும். Dialogue: 0,0:07:22.00,0:07:26.00,Default,,0000,0000,0000,,அரசாங்கம் எதையுமே கொண்டிராத வர்த்தகங்களிலிருந்து அதை வெளியில் எடுப்பதைச் செய்யும் ஒரு Dialogue: 0,0:07:26.00,0:07:30.00,Default,,0000,0000,0000,,திட்டத்தை நாங்களனைவரும் சேர்ந்து வைத்தோம் - அதிலிருந்துகொண்டிருப்பதால் அதற்கு ஒரு வேலையுமில்லை. Dialogue: 0,0:07:30.00,0:07:32.00,Default,,0000,0000,0000,,பொருட்களையும் சேவைகளையும் உற்பத்தி செய்யும் Dialogue: 0,0:07:32.00,0:07:33.00,Default,,0000,0000,0000,,வணிகத்தில் அரசு இருக்கக் கூடாது ஏனென்றால் Dialogue: 0,0:07:33.00,0:07:36.00,Default,,0000,0000,0000,,அது திறனற்றதாகவும் போட்டி போடமுடியாததாகவுமாக இருக்கிறது. Dialogue: 0,0:07:36.00,0:07:40.00,Default,,0000,0000,0000,,எனவே நாங்கள் எங்களது ஸ்தாபனங்களில் பெரும்பாலானவற்றை தனியார் மயமாக்க முடிவு செய்தோம். Dialogue: 0,0:07:40.00,0:07:44.00,Default,,0000,0000,0000,,(கைதட்டல்). Dialogue: 0,0:07:45.00,0:07:49.00,Default,,0000,0000,0000,,நாங்கள், அதன் விளைவாக, எங்களது சந்தைகளில் பலவற்றை தனியார்மயமாக்க முடிவு செய்தோம். Dialogue: 0,0:07:49.00,0:07:52.00,Default,,0000,0000,0000,,2003-ன் இறுதியில் ஆரம்பித்த, இந்தச் சீரமைப்பிற்கு முன்பாக – Dialogue: 0,0:07:52.00,0:07:56.00,Default,,0000,0000,0000,,நான் வாஷிங்டனை விட்டுப் போய் நிதியமைச்சர் என்ற பதவியை ஏற்றுக் கொள்வதற்கு Dialogue: 0,0:07:56.00,0:07:58.00,Default,,0000,0000,0000,,முன்பாக – அதன் மொத்த 30-ஆண்டு வரலாற்றிலேயே 4,500 தரைவழி இணைப்புகளை Dialogue: 0,0:08:00.00,0:08:04.00,Default,,0000,0000,0000,,மட்டுமே உண்டாக்கியிருந்த ஒரு தொலைபேசி நிறுவனத்தை Dialogue: 0,0:08:04.00,0:08:09.00,Default,,0000,0000,0000,,நாங்கள் கொண்டிருந்தோம், என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? Dialogue: 0,0:08:09.00,0:08:11.00,Default,,0000,0000,0000,,(சிரிப்பு). Dialogue: 0,0:08:11.00,0:08:14.00,Default,,0000,0000,0000,,எங்களுடைய நாட்டில் ஒரு தொலைபேசியை வைத்திருப்பது ஒரு பெரிய ஆடம்பரம். Dialogue: 0,0:08:14.00,0:08:16.00,Default,,0000,0000,0000,,உங்களால் அதைப் புரிந்து கொள்ள முடியாது. நீங்கள் லஞ்சம் கொடுக்க வேண்டும். Dialogue: 0,0:08:16.00,0:08:18.00,Default,,0000,0000,0000,,உங்கள் தொலைபேசியைப் பெறுவதற்காக எல்லாவற்றையும் நீங்கள் செய்ய வேண்டும். Dialogue: 0,0:08:18.00,0:08:21.00,Default,,0000,0000,0000,,ஜனாதிபதி ஓபசாஞ்சோ தொலைபேசித் துறையின் தனியார் மயமாக்கலை ஆதரித்து Dialogue: 0,0:08:21.00,0:08:25.00,Default,,0000,0000,0000,,அதைத் துவக்கி வைத்த போது, நாங்கள் 4,500-ல் இருந்து 32 மில்லியன் ஜிஎஸ்எம் Dialogue: 0,0:08:26.00,0:08:34.00,Default,,0000,0000,0000,,இணைப்புகளுக்குச் சென்றோம், அது இன்னும் கூடிக்கொண்டேயிருக்கிறது. Dialogue: 0,0:08:34.00,0:08:39.00,Default,,0000,0000,0000,,சீனாவிற்குப் பிறகு, நைஜீரியா தொலைபேசிச் சந்தைதான் உலகில் இரண்டாவது வேகமாக Dialogue: 0,0:08:39.00,0:08:44.00,Default,,0000,0000,0000,,வளரும் சந்தையாகும். தொலைத்தொடர்பில் ஆண்டிற்கு சுமார் $1 பில்லியன் முதலீடுகளை Dialogue: 0,0:08:44.00,0:08:50.00,Default,,0000,0000,0000,,நாங்கள் பெற்றுக் கொண்டிருக்கிறோம். ஒரு சில புத்திசாலி மக்களைத் தவிர, வேறு யாருக்கும் தெரியாது. Dialogue: 0,0:08:50.00,0:08:53.00,Default,,0000,0000,0000,,(சிரிப்பு). Dialogue: 0,0:08:53.00,0:08:57.00,Default,,0000,0000,0000,,வந்த முதலாவது புத்திசாலித்தனமான நிறுவனம் Dialogue: 0,0:08:57.00,0:08:59.00,Default,,0000,0000,0000,,தென் ஆப்ரிக்காவின் எம்டிஎன் நிறுவனம். Dialogue: 0,0:08:59.00,0:09:03.00,Default,,0000,0000,0000,,நான் நிதியமைச்சராக இருந்த மூன்று ஆண்டுகளில், Dialogue: 0,0:09:03.00,0:09:06.00,Default,,0000,0000,0000,,அவர்கள் ஆண்டிற்கு $360 மில்லியனை சராசரி இலாபமாக கொண்டார்கள். Dialogue: 0,0:09:08.00,0:09:14.00,Default,,0000,0000,0000,,ஒரு சந்தையில் 360 மில்லியன் – ஒரு வருடத்திற்கு $500 க்கும் குறைவான Dialogue: 0,0:09:14.00,0:09:18.00,Default,,0000,0000,0000,,வருட வருமானமுள்ள, ஒரு ஏழை நாடான ஒரு நாட்டில். Dialogue: 0,0:09:19.00,0:09:21.00,Default,,0000,0000,0000,,எனவே சந்தையானது அங்கே இருக்கிறது. Dialogue: 0,0:09:21.00,0:09:24.00,Default,,0000,0000,0000,,அவர்கள் இதைச் சுருட்டிக் கொண்டவுடன், மற்றவர்களுக்கும் அது தெரிந்து விட்டது. Dialogue: 0,0:09:25.00,0:09:28.00,Default,,0000,0000,0000,,நைஜீரியர்களும் சில தந்தியில்லா தொலைத்தொடர்பு Dialogue: 0,0:09:28.00,0:09:30.00,Default,,0000,0000,0000,,நிறுவனங்களைத் தொடங்க ஆரம்பித்தார்கள், Dialogue: 0,0:09:30.00,0:09:32.00,Default,,0000,0000,0000,,மற்ற மூன்று அல்லது நான்கு பேர்கள் வந்திருக்கிறார்கள். Dialogue: 0,0:09:32.00,0:09:35.00,Default,,0000,0000,0000,,ஆனால் அங்கே மிகப்பெரிய சந்தையுள்ளது, மக்களுக்கு அதைப் பற்றித் தெரியாது, Dialogue: 0,0:09:35.00,0:09:38.00,Default,,0000,0000,0000,,அல்லது அவர்கள் அதைப்பற்றி தெரிந்து கொள்ள விரும்பவில்லை. Dialogue: 0,0:09:40.00,0:09:42.00,Default,,0000,0000,0000,,எனவே தனியார் மயமாக்கல் நாங்கள் செய்திருக்கிற ஒரு காரியம். Dialogue: 0,0:09:43.00,0:09:49.00,Default,,0000,0000,0000,,நாங்கள் செய்திருக்கிற மற்றொரு காரியம் எங்களது நிதிகளை சிறப்பாக நிர்வகிப்பது. Dialogue: 0,0:09:50.00,0:09:52.00,Default,,0000,0000,0000,,உங்கள் சொந்த நிதிகளை நீங்கள் நன்றாக நிர்வகிக்கவில்லையானால் வேறு யாரும் Dialogue: 0,0:09:53.00,0:09:56.00,Default,,0000,0000,0000,,உங்களுக்கு உதவவோ அல்லது உங்களை ஆதரிக்கவோ போகிறதில்லை. Dialogue: 0,0:09:56.00,0:10:00.00,Default,,0000,0000,0000,,மேலும், நைஜீரியா, அதன் எண்ணைத் துறையில், ஊழலோடு இருப்பதற்கும் Dialogue: 0,0:10:00.00,0:10:05.00,Default,,0000,0000,0000,,அதன் சொந்த பொது நிதிகளை நன்றாக நிர்வகிக்காமல் இருப்பதற்கும் பேர் போனதாகும். Dialogue: 0,0:10:05.00,0:10:09.00,Default,,0000,0000,0000,,எனவே நாங்கள் என்ன செய்ய முயற்சித்தோம்? நாங்கள் ஒரு நிதிச் சட்டத்தை அறிமுகப்படுத்தினோம் Dialogue: 0,0:10:10.00,0:10:12.00,Default,,0000,0000,0000,,அது எங்களது நிதிநிலையறிக்கையை எண்ணை விலையிலிருந்து துண்டித்தது. Dialogue: 0,0:10:12.00,0:10:16.00,Default,,0000,0000,0000,,அதற்கு முன்பாக நாங்கள் எவ்வளவு எண்ணையைக் கொண்டு வருகிறோமோ அதன் மீது நிதிநிலை அறிக்கையை Dialogue: 0,0:10:16.00,0:10:21.00,Default,,0000,0000,0000,,அமைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தோம், ஏனென்றால் எண்ணைதான் எங்கள் பொருளாதாரத்தில் Dialogue: 0,0:10:21.00,0:10:24.00,Default,,0000,0000,0000,,மிகப்பெரிய, அதிகம் வருமானம் சம்பாதிக்கும் துறையாகும். எங்கள் வருமானத்தில் 70% எண்ணையிலிருந்து வருகிறது. Dialogue: 0,0:10:24.00,0:10:28.00,Default,,0000,0000,0000,,நாங்கள் அதைத் துண்டித்தோம், அதை நாங்கள் செய்தவுடன் எண்ணை விலையிலிருந்து Dialogue: 0,0:10:28.00,0:10:31.00,Default,,0000,0000,0000,,கொஞ்சம் குறைவான விலையில் நிதிநிலை அறிக்கையைத் தயாரிக்க ஆரம்பித்து அந்த Dialogue: 0,0:10:31.00,0:10:35.00,Default,,0000,0000,0000,,விலைக்கு மேல் என்ன இருந்ததோ அதைச் சேமிக்க ஆரம்பித்தோம். Dialogue: 0,0:10:36.00,0:10:39.00,Default,,0000,0000,0000,,நாங்கள் அதை இழுக்க முடியும் என்று தெரியாது; அது மிகவும் விவாதத்திற்குரியதாக இருந்தது. Dialogue: 0,0:10:39.00,0:10:42.00,Default,,0000,0000,0000,,ஆனால் அது உடனடியாகச் செய்தது என்னவென்றால், எங்கள் பொருளாதார வளர்ச்சியில் Dialogue: 0,0:10:42.00,0:10:45.00,Default,,0000,0000,0000,,இருந்து வந்த ஏற்ற இறக்கமானது – எண்ணைவிலை அதிமாக இருந்த போதிலும் கூட, Dialogue: 0,0:10:45.00,0:10:49.00,Default,,0000,0000,0000,,நாங்கள் மிக விரைவாக வளர்ந்தோம். Dialogue: 0,0:10:49.00,0:10:51.00,Default,,0000,0000,0000,,அவைகள் சரியும் போது, நாங்களும் சரிந்தோம். Dialogue: 0,0:10:51.00,0:10:55.00,Default,,0000,0000,0000,,பொருளாதாரத்தில், நாங்கள் எதற்கும் பணம் கொடுக்க முடியவில்லை, எந்த சம்பளமும் கொடுக்க முடியவில்லை. Dialogue: 0,0:10:56.00,0:11:00.00,Default,,0000,0000,0000,,அது சீராக்கப்பட்டு விட்டது. நான் விலகுவதற்கு முன்பாக, எங்களால் $27 பில்லியன் சேமிக்க Dialogue: 0,0:11:00.00,0:11:06.00,Default,,0000,0000,0000,,முடிந்தது. இது எங்களுடைய சேமிப்பிற்குச் சென்றது – நான் 2003-ல் வந்த போது, நாங்கள் Dialogue: 0,0:11:06.00,0:11:10.00,Default,,0000,0000,0000,,சேமிப்பில் 7 பில்லியனைக் கொண்டிருந்தோம். Dialogue: 0,0:11:11.00,0:11:14.00,Default,,0000,0000,0000,,நான் விலகும் நேரத்தில், நாங்கள் கிட்டத்தட்ட $30 பில்லியனுக்குப் போயிருந்தோம். Dialogue: 0,0:11:14.00,0:11:17.00,Default,,0000,0000,0000,,நாம் இப்போது பேசுகிறபோது, எங்கள் நிதியின் முறையான நிர்வாகத்தின் காரணமாக Dialogue: 0,0:11:18.00,0:11:22.00,Default,,0000,0000,0000,,நாங்கள் சேமிப்பில் $40 பில்லியன்களைக் கொண்டுள்ளோம். Dialogue: 0,0:11:23.00,0:11:26.00,Default,,0000,0000,0000,,அது எங்களது பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தி, நிலையானதாக ஆக்குகிறது. Dialogue: 0,0:11:26.00,0:11:29.00,Default,,0000,0000,0000,,எப்போதுமே ஏறியிறங்குகிற எங்களது பரிமாற்ற வீதமானது, வர்த்தகம் செய்கிற மக்கள் Dialogue: 0,0:11:29.00,0:11:33.00,Default,,0000,0000,0000,,பொருளாதாரத்தில், விலைகளை முன்னறிவிப்பதைக் கொண்டிருக்கும் வகையில், Dialogue: 0,0:11:33.00,0:11:38.00,Default,,0000,0000,0000,,ஓரளவிற்கு நிலையானதாக உள்ளது மேலும் அது நிர்வகிக்கப்பட்டு வருகிறது. Dialogue: 0,0:11:40.00,0:11:44.00,Default,,0000,0000,0000,,நாங்கள் பணவீக்கத்தை 28 சதவீதத்திலிருந்து சுமார் 11 சதவீதத்திற்குக் கொண்டுவந்தோம். Dialogue: 0,0:11:46.00,0:11:52.00,Default,,0000,0000,0000,,எங்களது நாட்டின் வளர்ச்சி வீதம் முந்தைய பத்து ஆண்டுகளிலிருந்து 2.3 சதவீதத்தில் Dialogue: 0,0:11:52.00,0:11:55.00,Default,,0000,0000,0000,,இருந்து சுமார் 6.5 சதவீதத்திற்கு வளரக் கொண்டிருந்தோம். Dialogue: 0,0:11:56.00,0:11:59.00,Default,,0000,0000,0000,,எனவே அனைத்து மாற்றங்களும் சீரமைப்புகளும் பொருளாதாரத்தில் Dialogue: 0,0:11:59.00,0:12:02.00,Default,,0000,0000,0000,,அளவிடக்கூடிய முடிவுகளில் காண்பிக்க ஆரம்பித்தது. Dialogue: 0,0:12:02.00,0:12:06.00,Default,,0000,0000,0000,,மேலும் எது மிகவும் முக்கியம், ஏனென்றால் எண்ணையிலிருந்து வெளியேறி பரவலாக்கல் Dialogue: 0,0:12:06.00,0:12:08.00,Default,,0000,0000,0000,,செய்வது – மேலும் இந்த ஒரு பெரிய நாட்டில், ஆப்ரிக்காவிலுள்ள பலநாடுகளைப் போன்று Dialogue: 0,0:12:08.00,0:12:11.00,Default,,0000,0000,0000,,மிக அநேக வாய்ப்புகள் உள்ளன – குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் Dialogue: 0,0:12:13.00,0:12:16.00,Default,,0000,0000,0000,,பெரும்பாலான இந்த வளர்ச்சியானது எண்ணைத் துறையிலிருந்து வரவில்லை, Dialogue: 0,0:12:16.00,0:12:19.00,Default,,0000,0000,0000,,ஆனால் எண்ணை-சாராத துறையிலிருந்தே என்பதுதான். Dialogue: 0,0:12:19.00,0:12:22.00,Default,,0000,0000,0000,,விவசாயம் 8 சதவீதத்தை விட சிறப்பாக வளர்ச்சியடைந்தது. Dialogue: 0,0:12:22.00,0:12:26.00,Default,,0000,0000,0000,,தொலைதொடர்பு துறை வளர்ந்த போது, வீடு மற்றும் கட்டுமானம், இப்படி நான் Dialogue: 0,0:12:26.00,0:12:31.00,Default,,0000,0000,0000,,போய்க்கொண்டே இருக்க முடியும். மேலும் நீங்கள் மேக்ரோ-பொருளாதாரத்தை Dialogue: 0,0:12:31.00,0:12:33.00,Default,,0000,0000,0000,,நேராக்கிவிடும் போது, மற்ற பல்வேறு துறைகளிலான வாய்ப்புகளானது மிகப் பெரிய Dialogue: 0,0:12:33.00,0:12:37.00,Default,,0000,0000,0000,,அளவில் இருக்கும் என்பதை உங்களுக்குத் தெளிவாக்குவதற்குத் தான் இது. Dialogue: 0,0:12:38.00,0:12:41.00,Default,,0000,0000,0000,,நான் சொன்னது போலவே, நாங்கள் விவசாயத்திலும் வாய்ப்புகளைக் கொண்டுள்ளோம். Dialogue: 0,0:12:41.00,0:12:45.00,Default,,0000,0000,0000,,நாங்கள் திட கனிமங்களிலும் வாய்ப்புக்களைக் கொண்டுள்ளோம். யாருமே முதலீடு கூடச் Dialogue: 0,0:12:45.00,0:12:48.00,Default,,0000,0000,0000,,செய்திராத அல்லது ஆராய்ச்சி செய்திருக்காத நிறைய கனிமங்களை நாங்கள் கொண்டுள்ளோம். Dialogue: 0,0:12:48.00,0:12:51.00,Default,,0000,0000,0000,,அதைச் சாத்தியமாக்குவதற்கு முறையான சட்டம் இல்லாமல், Dialogue: 0,0:12:51.00,0:12:54.00,Default,,0000,0000,0000,,அது நடக்காது என்பதை நாங்கள் உணர்ந்தோம். Dialogue: 0,0:12:54.00,0:12:57.00,Default,,0000,0000,0000,,எனவே நாங்கள் இப்போது ஒரு சுரங்க நடத்தை விதியைக் கொண்டுள்ளோம் அது உலகின் மிகச்சிறந்த சிலவற்றோடு ஒப்பிடக் கூடியது. Dialogue: 0,0:12:58.00,0:13:00.00,Default,,0000,0000,0000,,நாங்கள் வீடு மற்றும் வீட்டுமனையிலும் வாய்ப்புகளைக் கொண்டுள்ளோம். Dialogue: 0,0:13:00.00,0:13:03.00,Default,,0000,0000,0000,,140 மில்லின் மக்கள் தொகை கொண்ட நாட்டில் ஒன்றுமே இல்லை – Dialogue: 0,0:13:04.00,0:13:09.00,Default,,0000,0000,0000,,நீங்கள் இங்கே அறிந்திருக்கிறபடி எந்த பெருவணிக வளாகங்களும் இல்லை. Dialogue: 0,0:13:10.00,0:13:13.00,Default,,0000,0000,0000,,மக்களின் கற்பனாசக்தியை தூண்டிவிட்ட Dialogue: 0,0:13:13.00,0:13:15.00,Default,,0000,0000,0000,,சிலருக்கு இது ஒரு முதலீட்டு வாய்ப்பு. Dialogue: 0,0:13:16.00,0:13:19.00,Default,,0000,0000,0000,,இப்போது, இத்தகைய வணிகவளாகங்களில் இருக்கும் வியாபாரங்கள் அவர்கள் Dialogue: 0,0:13:19.00,0:13:22.00,Default,,0000,0000,0000,,எதிர்பார்த்ததை விட நான்கு மடங்குகள் அதிகமான விற்றுமுதலைக் கொண்டுள்ளன. Dialogue: 0,0:13:23.00,0:13:26.00,Default,,0000,0000,0000,,எனவே, கட்டுமானத்தில், வீட்டுமனையில், அடகுச் சந்தையில் Dialogue: 0,0:13:26.00,0:13:28.00,Default,,0000,0000,0000,,பெரிய காரியங்கள் நடந்தன. நிதிசார்ந்த சேவைகள்: Dialogue: 0,0:13:29.00,0:13:33.00,Default,,0000,0000,0000,,நாங்கள் 89 வங்கிகளைக் கொண்டிருந்தோம். அதில் மிக அதிகமானவை அவர்களது உண்மையான வியாபாரத்தைச் செய்யாமலிருந்தார்கள். Dialogue: 0,0:13:33.00,0:13:37.00,Default,,0000,0000,0000,,அவர்களின் மூலதனத்தை அதிகரிக்க வேண்டும் – பங்கு மூலதனம்- என கோரிக்கையை Dialogue: 0,0:13:37.00,0:13:42.00,Default,,0000,0000,0000,,விடுத்து நாங்கள் அவைகளை 89 –லிருந்து 25 வங்கிகளாக கூட்டிச் சேர்த்தோம். Dialogue: 0,0:13:42.00,0:13:47.00,Default,,0000,0000,0000,,மேலும் அது சுமார் $25 மில்லியனிலிருந்து $150 மில்லியனுக்குச் சென்றது. Dialogue: 0,0:13:47.00,0:13:51.00,Default,,0000,0000,0000,,வங்கிகள் – இத்தகைய வங்கிகள் தற்போது கூட்டிச் சேர்க்கப்பட்டுள்ளன, அப்படி வங்கி Dialogue: 0,0:13:51.00,0:13:55.00,Default,,0000,0000,0000,,அமைப்புகளைப் பலப்படுத்தியது வெளியிலிருந்து நிறைய மூலதனத்தை கவர்ந்திருக்கிறது. Dialogue: 0,0:13:55.00,0:13:59.00,Default,,0000,0000,0000,,யூகேயின் பார்க்லேஸ் வங்கி 500 மில்லியன்களைக் கொண்டு வருகிறது. Dialogue: 0,0:13:59.00,0:14:03.00,Default,,0000,0000,0000,,ஸ்டாண்டர்டு சார்டர்ட் 140 மில்லியனைக் கொண்டு வந்திருக்கிறது. Dialogue: 0,0:14:03.00,0:14:06.00,Default,,0000,0000,0000,,இப்படி நான் போய்க்கொண்டே இருக்க முடியும். மேலும் மேலும், அந்த அமைப்பிற்குள் டாலர்கள். Dialogue: 0,0:14:06.00,0:14:08.00,Default,,0000,0000,0000,,இதையே தான் நாங்கள் காப்பீட்டுத் துறையிலும் செய்தோம். Dialogue: 0,0:14:08.00,0:14:11.00,Default,,0000,0000,0000,,எனவே நிதிச் சேவைகளில், ஒரு மிகப்பெரிய வாய்ப்பின் சந்தர்ப்பம். Dialogue: 0,0:14:11.00,0:14:17.00,Default,,0000,0000,0000,,சுற்றுலாவில், பல ஆப்ரிக்க நாடுகளில், ஒரு பெரிய வாய்ப்புள்ளது. Dialogue: 0,0:14:17.00,0:14:20.00,Default,,0000,0000,0000,,கிழக்கு ஆப்ரிக்காவைப் பற்றி பலமக்கள் அறிந்திருப்பது என்னவோ அதுதான்: Dialogue: 0,0:14:21.00,0:14:24.00,Default,,0000,0000,0000,,வன உயிர்கள், யானைகள், இப்படியாக. Dialogue: 0,0:14:24.00,0:14:26.00,Default,,0000,0000,0000,,ஆனால் சுற்றுலாச் சந்தையை, அவைகள் மக்களை உண்மையிலேயெ பயனுறச் Dialogue: 0,0:14:26.00,0:14:29.00,Default,,0000,0000,0000,,செய்யும் வகையில் நிர்வகிப்பது மிகவும் முக்கியமானதாகும். Dialogue: 0,0:14:30.00,0:14:33.00,Default,,0000,0000,0000,,எனவே நான் என்ன சொல்ல முயற்சிக்கிறேன்? அந்தக் கண்டத்தின் மீது ஒரு புதிய Dialogue: 0,0:14:33.00,0:14:36.00,Default,,0000,0000,0000,,அலையிருக்கிறது என்பதை உங்களுக்குச் சொல்லவே விரும்புகிறேன். Dialogue: 0,0:14:36.00,0:14:41.00,Default,,0000,0000,0000,,திறப்பு மற்றும் ஜனநாயகமாக்கலின் ஒரு புதிய அலை அதில், 2000-லிருந்து, ஆப்ரிக்க Dialogue: 0,0:14:41.00,0:14:43.00,Default,,0000,0000,0000,,நாடுகளில் மூன்றில்-இரண்டிற்கு மேலாக பல-கட்சி ஜனநாயக Dialogue: 0,0:14:43.00,0:14:45.00,Default,,0000,0000,0000,,தேர்தல்களைக் கொண்டிருக்கிறார்கள். Dialogue: 0,0:14:46.00,0:14:49.00,Default,,0000,0000,0000,,அனைத்துமே முழுமையானவையாக இல்லை, அல்லது இருக்காது, Dialogue: 0,0:14:49.00,0:14:51.00,Default,,0000,0000,0000,,ஆனால் போக்கு மிகத் தெளிவாக உள்ளது. Dialogue: 0,0:14:51.00,0:14:55.00,Default,,0000,0000,0000,,கடந்த மூன்று ஆண்டுகளாக, கண்டத்தின் மீதான ஆண்டு சராசரி வளர்ச்சியானது 2.5 Dialogue: 0,0:14:55.00,0:14:58.00,Default,,0000,0000,0000,,சதவீதத்திலிருந்து சுமார் 5 சதவீதமாக உயர்ந்திருக்கிறது என்பதையே நான் Dialogue: 0,0:14:58.00,0:15:02.00,Default,,0000,0000,0000,,உங்களுக்குச் சொல்ல முயற்சிக்கிறேன். Dialogue: 0,0:15:02.00,0:15:06.00,Default,,0000,0000,0000,,இது பல ஓஈசிடி நாடுகள் செய்து காட்டியிருப்பதை விடச் சிறந்தது தான். Dialogue: 0,0:15:07.00,0:15:11.00,Default,,0000,0000,0000,,எனவே காரியங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன என்பது தெளிவாகிறது. Dialogue: 0,0:15:11.00,0:15:13.00,Default,,0000,0000,0000,,கண்டத்தில் சண்டைகள் குறைந்து வருகின்றன; ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பாக சுமார் 12 Dialogue: 0,0:15:14.00,0:15:16.00,Default,,0000,0000,0000,,சண்டைகளில் இருந்து, மூன்று அல்லது நான்காக Dialogue: 0,0:15:16.00,0:15:18.00,Default,,0000,0000,0000,,குறைந்திருக்கிறோம், அவைகளில் Dialogue: 0,0:15:18.00,0:15:21.00,Default,,0000,0000,0000,,மிகவும் மோசமானது, உண்மையிலேயே, டார்பர் தான். Dialogue: 0,0:15:21.00,0:15:24.00,Default,,0000,0000,0000,,மேலும், பாருங்கள், உங்களிடம் அண்டைப்பக்க பாதிப்பு உள்ளது, அதில் கண்டத்தின் ஒரு Dialogue: 0,0:15:24.00,0:15:26.00,Default,,0000,0000,0000,,பகுதியில் ஏதாவது நடந்து கொண்டிருந்தால், அந்த முழுக் Dialogue: 0,0:15:26.00,0:15:29.00,Default,,0000,0000,0000,,கண்டமும் பாதிக்கப்பட்டது போல காணப்படுகிறது. Dialogue: 0,0:15:29.00,0:15:32.00,Default,,0000,0000,0000,,ஆனால் இந்தக் கண்டம் அப்படியல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் – Dialogue: 0,0:15:32.00,0:15:38.00,Default,,0000,0000,0000,,இந்தக் கண்டம் ஒரு நாடு அல்ல ஆனால் பல நாடுகளால் ஆனது. Dialogue: 0,0:15:38.00,0:15:40.00,Default,,0000,0000,0000,,மேலும் மூன்று அல்லது நான்கு சண்டைகளுக்கு குறைந்து வந்திருப்போமானால், Dialogue: 0,0:15:40.00,0:15:43.00,Default,,0000,0000,0000,,ஒரு நிலையான, வளர்கிற, ஆச்சரியமூட்டுகிற Dialogue: 0,0:15:43.00,0:15:50.00,Default,,0000,0000,0000,,நிறைய வாய்ப்புகளுள்ள பொருளாதாரத்தில் முதலீடு செய்வதற்கு Dialogue: 0,0:15:50.00,0:15:53.00,Default,,0000,0000,0000,,மிக அதிகமான வாய்ப்புகள் உள்ளது என்றே அர்த்தம். Dialogue: 0,0:15:54.00,0:15:58.00,Default,,0000,0000,0000,,இந்த முதலீட்டைப் பற்றி ஒரே ஒரு குறிப்பை வைக்க விரும்புகிறேன். Dialogue: 0,0:15:59.00,0:16:01.00,Default,,0000,0000,0000,,ஆப்ரிக்கர்களுக்கு உதவும் சிறந்த வழியானது அவர்களின் சொந்தக் Dialogue: 0,0:16:02.00,0:16:05.00,Default,,0000,0000,0000,,கால்களில் நிற்பதற்கு உதவுவதே. Dialogue: 0,0:16:05.00,0:16:09.00,Default,,0000,0000,0000,,அதைச் செய்வதற்கான சிறந்த வழியானது வேலைகளை உருவாக்க உதவுவதே. Dialogue: 0,0:16:10.00,0:16:14.00,Default,,0000,0000,0000,,மலேரியாவை எதிர்த்துப் போராடுவதும் பணத்தை அதில் போடுவதும் குழந்தைகளின் உயிர்களைக் Dialogue: 0,0:16:14.00,0:16:18.00,Default,,0000,0000,0000,,காப்பாற்றுவதும் ஒரு பிரச்சினையும் இல்லை. நான் சொல்லிக் கொண்டிருப்பது அதுவல்ல. அது நல்லது தான். Dialogue: 0,0:16:19.00,0:16:23.00,Default,,0000,0000,0000,,ஆனால் ஒரு குடும்பத்தின் மீதான தாக்கத்தைக் கற்பனை செய்து பாருங்கள். பெற்றோர்கள் Dialogue: 0,0:16:23.00,0:16:25.00,Default,,0000,0000,0000,,பணியமர்த்தப்பட்டு அவர்களின் குழந்தைகளைப் பள்ளிக்குச் செல்லுமாறு செய்தால், Dialogue: 0,0:16:25.00,0:16:28.00,Default,,0000,0000,0000,,நோய்க்கெதிராகப் போராடுவதற்கு அவர்களாகவே மருந்துகளை வாங்க முடிந்ததானால். Dialogue: 0,0:16:28.00,0:16:32.00,Default,,0000,0000,0000,,வேலைகளை உருவாக்கி மக்களை அவர்களது சொந்தக் காலில் நிற்கச் செய்ய உதவுகிற அதே வேளையில், Dialogue: 0,0:16:32.00,0:16:37.00,Default,,0000,0000,0000,,நீங்களே பணத்தை சம்பாதிக்க முடிகிற இடங்களில் நாம் முதலீடுகளைச் செய்ய முடிந்தால், Dialogue: 0,0:16:37.00,0:16:42.00,Default,,0000,0000,0000,,அது ஒரு அற்புதமான வாய்ப்பல்லவா? நாம் போக வேண்டிய வழி அது தானல்லவா? Dialogue: 0,0:16:42.00,0:16:45.00,Default,,0000,0000,0000,,கண்டத்தில் முதலீடு செய்வதற்கான சிறந்த மக்கள் Dialogue: 0,0:16:45.00,0:16:47.00,Default,,0000,0000,0000,,பெண்களே என்று நான் சொல்ல விரும்புகிறேன். Dialogue: 0,0:16:48.00,0:16:55.00,Default,,0000,0000,0000,,(கைதட்டல்). Dialogue: 0,0:16:55.00,0:17:00.00,Default,,0000,0000,0000,,இங்கே நான் ஒரு சிடி-யை வைத்திருக்கிறேன். சரியான நேரத்தில் எதையும் சொல்லாததற்கு நான் வருந்துகிறேன். Dialogue: 0,0:17:00.00,0:17:02.00,Default,,0000,0000,0000,,மற்றபடி, நீங்கள் இதைப் பார்க்க வேண்டுமென நான் விரும்பியிருப்பேன். Dialogue: 0,0:17:02.00,0:17:05.00,Default,,0000,0000,0000,,அது சொல்கிறது, “ஆப்ரிக்கா: வியாபாரத்திற்கு திறந்திருக்கிறது.” Dialogue: 0,0:17:06.00,0:17:09.00,Default,,0000,0000,0000,,மேலும் இது தான் உண்மையிலேயே ஆண்டின் சிறந்த செய்திப் படமாக Dialogue: 0,0:17:09.00,0:17:11.00,Default,,0000,0000,0000,,விருதைப் பெற்ற அந்த வீடியோ. Dialogue: 0,0:17:11.00,0:17:13.00,Default,,0000,0000,0000,,இதைச் செய்த பெண்கள் டான்ஸானியாவில் இருக்கப் போகிறார்கள் என்பதைப் புரிந்து Dialogue: 0,0:17:13.00,0:17:18.00,Default,,0000,0000,0000,,கொள்ளுங்கள், அங்கு அவர்கள் ஜூனில் அந்த அமர்வினைக் கொண்டிருக்கிறார்கள். Dialogue: 0,0:17:19.00,0:17:24.00,Default,,0000,0000,0000,,மேலும் இது ஆப்ரிக்கர்களை உங்களுக்குக் காட்டுகிறது, குறிப்பாகப் பெண்களை, அத்தனை பிரச்சினைகளுக்கு Dialogue: 0,0:17:24.00,0:17:29.00,Default,,0000,0000,0000,,மத்தியிலும் அவர்கள் வியாபாரத்தை வளர்த்திருக்கிறார்கள், அவைகளில் சில உலகத்தரமானவையும் கூட. Dialogue: 0,0:17:29.00,0:17:32.00,Default,,0000,0000,0000,,இந்த வீடியோவிலுள்ள பெண்களில் ஒருவர், அடெனிக்கே ஓகுன்லேசி, குழந்தைகளின் Dialogue: 0,0:17:32.00,0:17:34.00,Default,,0000,0000,0000,,ஆடைகளை தயாரித்துக் கொண்டிருக்கிறார் - Dialogue: 0,0:17:34.00,0:17:39.00,Default,,0000,0000,0000,,அதை அவர் ஒரு பொழுது போக்காக ஆரம்பித்து ஒரு வியாபாரமாக வளர்த்திருக்கிறார். Dialogue: 0,0:17:39.00,0:17:42.00,Default,,0000,0000,0000,,ஆப்ரிக்கத் துணி வகைகளை, நாங்கள் கொண்டிருப்பதைப் போன்றது, Dialogue: 0,0:17:43.00,0:17:44.00,Default,,0000,0000,0000,,வேறெங்கிருந்தும் வரவழைக்கிற துணி வகைகளோடு இணைப்பது. Dialogue: 0,0:17:44.00,0:17:49.00,Default,,0000,0000,0000,,எனவே, அவர் ஒரு சிறிய ஜோடி டங்காரீக்களை கோர்டுரோய்களோடு உருவாக்குவார், Dialogue: 0,0:17:49.00,0:17:53.00,Default,,0000,0000,0000,,ஆப்ரிக்க துணிகளின் கலப்போடு. மிகவும் கற்பனை திறன் மிகுந்த வடிவங்கள். Dialogue: 0,0:17:55.00,0:17:58.00,Default,,0000,0000,0000,,வால்-மார்டிடமிருந்து கூட வியாபார ஆணைகளைப் பெறுமளவிற்கு ஒரு நிலையை அடைந்திருக்கிறார். Dialogue: 0,0:17:59.00,0:18:00.00,Default,,0000,0000,0000,,(சிரிப்பு). Dialogue: 0,0:18:01.00,0:18:03.00,Default,,0000,0000,0000,,10:00 ஆடைகளுக்கு. Dialogue: 0,0:18:04.00,0:18:08.00,Default,,0000,0000,0000,,எனவே இதைச் செய்யும் திறனுள்ள மக்களை நாங்கள் கொண்டிருக்கிறோம் என்பதையே இது உங்களுக்குக் காண்பிக்கிறது. Dialogue: 0,0:18:08.00,0:18:13.00,Default,,0000,0000,0000,,மேலும் அந்தப் பெண்கள் கருத்துள்ளவர்கள்: அவர்கள் கவனம் செலுத்தி; கடினமாக உழைக்கிறார்கள். Dialogue: 0,0:18:13.00,0:18:15.00,Default,,0000,0000,0000,,நான் உதாரணங்களைக் கொடுத்துக் கொண்டே செல்லமுடியும்: Dialogue: 0,0:18:15.00,0:18:19.00,Default,,0000,0000,0000,,ருவாண்டாவின் பீட்ரைஸ் ககுபா, ஒரு பூ வியாபாரத்தை ஆரம்பித்து தற்போது ஒவ்வொரு காலையிலும் Dialogue: 0,0:18:19.00,0:18:24.00,Default,,0000,0000,0000,,ஆம்ஸ்டர்டாமிலுள்ள டட்ச் ஏலத்திற்கு ஏற்றுமதி செய்கிறார், மேலும் Dialogue: 0,0:18:24.00,0:18:28.00,Default,,0000,0000,0000,,அவரோடு பணியாற்றுவதற்கு மற்ற 200 பெண்களையும் ஆண்களையும் அமர்த்தியிருக்கிறார். Dialogue: 0,0:18:29.00,0:18:33.00,Default,,0000,0000,0000,,ஆயினும், இத்தகைய பலரும் மூலதனத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள், Dialogue: 0,0:18:34.00,0:18:37.00,Default,,0000,0000,0000,,ஏனென்றால் எது தேவையோ அதை நாங்கள் செய்ய முடியும் என்பதை எங்கள் நாட்டிற்கு Dialogue: 0,0:18:37.00,0:18:42.00,Default,,0000,0000,0000,,வெளியேயுள்ள யாரும் நம்புகிறதில்லை. சந்தை முறையில் யாரும் யோசிப்பதில்லை. Dialogue: 0,0:18:42.00,0:18:45.00,Default,,0000,0000,0000,,வாய்ப்புள்ளது என்பதை யாரும் சிந்திப்பதில்லை. Dialogue: 0,0:18:45.00,0:18:48.00,Default,,0000,0000,0000,,ஆனால், இப்போது படகை கைநழுவ விடுகிறவர்கள், எப்போதுமே விட்டுவிடுவார்கள் Dialogue: 0,0:18:48.00,0:18:50.00,Default,,0000,0000,0000,,என்பதைச் சொல்லிக்கொண்டு தான் நான் இங்கே நிற்கிறேன். Dialogue: 0,0:18:50.00,0:18:56.00,Default,,0000,0000,0000,,எனவே நீங்கள் ஆப்ரிக்காவில் இருக்க விரும்பினால், மூலதனம் செய்வதைப் பற்றி சிந்தியுங்கள். Dialogue: 0,0:18:57.00,0:19:03.00,Default,,0000,0000,0000,,இந்த உலகின் பீட்ரைஸ்களைப் பற்றி நினையுங்கள், அடேனிக்கே-களை நினையுங்கள், Dialogue: 0,0:19:03.00,0:19:06.00,Default,,0000,0000,0000,,அவர்கள் தங்களை உலகப் பொருளாதாரத்திற்குள் கொண்டுவரும் நம்பமுடியாதவைகளைச் Dialogue: 0,0:19:06.00,0:19:09.00,Default,,0000,0000,0000,,செய்து கொண்டிருக்கிறர்கள், தங்கள் உடனிருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் Dialogue: 0,0:19:09.00,0:19:12.00,Default,,0000,0000,0000,,வேலைவாய்ப்பை உறுதிசெய்யும் அதே வேளையில், அவர்கள் பெற்றோர்கள் Dialogue: 0,0:19:12.00,0:19:14.00,Default,,0000,0000,0000,,போதுமான வருமானத்தைச் சம்பாதிப்பதால் அந்த வீடுகளில் Dialogue: 0,0:19:14.00,0:19:17.00,Default,,0000,0000,0000,,உள்ள குழந்தைகள் கல்வியறிவைப் பெறுகிறார்கள். Dialogue: 0,0:19:18.00,0:19:22.00,Default,,0000,0000,0000,,எனவே வாய்ப்புகளை ஆராய்ந்து பார்க்க உங்களை நான் அழைக்கிறேன். Dialogue: 0,0:19:23.00,0:19:27.00,Default,,0000,0000,0000,,நீங்கள் டான்ஸானியாவிற்குச் செல்லும் போது, நிதானமாகக் கவனியுங்கள், ஏனென்றால் Dialogue: 0,0:19:27.00,0:19:31.00,Default,,0000,0000,0000,,நீங்கள் நன்றாகச் செய்யக் கூடிய சில காரியங்களில் நீங்கள் ஈடுபடக்கூடிய பலவிதமான Dialogue: 0,0:19:31.00,0:19:36.00,Default,,0000,0000,0000,,திறப்புகள் உங்களுக்கு இருப்பதைப் பற்றி நீங்கள் கேள்விப்படுவீர்கள் Dialogue: 0,0:19:36.00,0:19:41.00,Default,,0000,0000,0000,,என நான் உறுதியாக இருக்கிறேன். கண்டத்திற்கும், மக்களுக்கும், உங்களுக்கும் கூட. Dialogue: 0,0:19:41.00,0:19:42.00,Default,,0000,0000,0000,,உங்களுக்கு மிக்க நன்றி. Dialogue: 0,0:19:42.00,0:19:50.00,Default,,0000,0000,0000,,(கைதட்டல்)