-
எண்கணிதத்தில் உள்ள சமன் குறியீடு (=) உங்களுக்கு தெரிந்திருக்கும்.
-
நீங்கள் 1+1 = 2, என்று பார்த்திருக்கலாம்.
-
சிலர் கூறுவர்,
-
இது போல இருந்தால் விடை அளிக்க வேண்டுமென்று அர்த்தம்.
-
1+1 என்பது கேள்வி, = என்றால் பதிலளிக்கவும் என்று அர்த்தம்.
-
ஆனால் சமன் (=) என்றால் அதல்ல.
-
அது இரண்டு அளவுகளை ஒப்பிடுவதாகும்.
-
1 + 1 = 2, என்றால்
-
இடது பக்கம் உள்ள அளவும்
-
வலது பக்கம் உள்ள அளவும் ஒன்று
-
என்று பொருள்.
-
இதை 2 = 1 + 1 எனலாம்.
-
இவை இரண்டும் ஒன்று.
-
இதை 2 = 2 என்றும் கூறலாம்.
-
இது சரியான கூற்று. இவை அனைத்தும் சமம்.
-
நாம் இதை 1+1 = 1+1 எனலாம்.
-
இதை 1+1-1 = 3-2 எனலாம்.
-
இவை இரண்டும் சம அளவு தான்.
-
இடது பக்கம் 1+1-1,
-
அதாவது 1, வலது பக்கம் 1, இவை இரண்டும் சமம் தான்.
-
இப்பொழுது ஒப்பிடுவதற்கு வேறு சில குறிகளை காண்பிக்கிறேன்.
-
இரு புறமும் சமமாக இருந்தால் சமன் (=) குறி.
-
இப்பொழுது இரு புறமும் வெவ்வேறாக இருந்தால்
-
என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.
-
என்னிடம் எண் 3 உள்ளது,
-
என்னிடம் எண் 1 உள்ளது, இரண்டையும் ஒப்பிட வேண்டும்.
-
3 மற்றும் 1, சமன் இல்லை.
-
எனவே, இங்கு சமன் குறி வர இயலாது.
-
3 மற்றும் 1 சமன் இல்லை.
-
இதில் எது பெரியது, எது சிறியது என்று கண்டறிய வேண்டும்.
-
எனவே, இரண்டையும் ஒப்பிட்டு பெரியது எது,
-
என்று கூற நமக்கு ஒரு குறியீடு தேவை.
-
எனவே, அதற்கான குறி
-
> குறி, விட மிகு குறியாகும்.
-
எனவே, 3, ஒன்றை விட பெரியது
-
இதை நினைவில் கொள்ள சற்று கடினமாக இருந்தால்
-
பெரிய எண்ணின் பக்கம்,
-
இந்த குறியின் திறப்பு இருக்க வேண்டும்.
-
இந்த பெரிய எண்ணின் பக்கத்தில்,
-
இது ஒரு அம்பு போன்று தோற்றமளிக்கிறது.
-
இது தான் பெரிய பக்கம்.
-
இங்கு இந்த சிறிய புள்ளி இருக்கும்,
-
பெரிய எண்ணின் பக்கத்தில், பெரிய குறி இருக்கும்.
-
இதை மூன்று, ஒன்றை விட மிகு என்று படிக்க வேண்டும்.
-
மூன்று, ஒன்றை விட மிகு.
-
மேலும், இது வெறும்
-
எண்களுக்கு மட்டும் இல்லை, இதை ஒரு வெளிப்பாட்டிற்கும் கூறலாம்.
-
1+1+1 >
-
1+1+1 > 1.
-
இது ஒப்பிடுதல் ஆகும்.
-
ஆனால், வேறு வழியில் இருந்தால் என்ன செய்வது?
-
அதாவது 5 மற்றும் 19 ஐ ஒப்பிட வேண்டும்.
-
இங்கு மிகு குறி செல்லாது.
-
ஏனெனில் 5, 19 ஐ விட சிறியது.
-
5 மற்றும் 19, சம அளவு இல்லை.
-
எனவே, இதனை,
-
இந்த கூற்றை, எது
-
பெரியது, எது சிறியது என்று எழுதலாம்.
-
அப்படியானால், 5
-
19 ஐ விட சிறியது ஆகும்.
-
எனவே, 5 குறைவானது.
-
5, 19 ஐ விட குறைவானது.
-
அவ்வளவுதான், இதனை
-
எவ்வாறு குறியீட்டில் எழுத வேண்டும் என்றால்,
-
விட மிகு குறியை
-
மறு பக்கம் திருப்பி எழுத வேண்டும்.
-
அதாவது, சிறிய பகுதி சிறிய எண்ணையும்,
-
பெரிய பகுதி, பெரிய எண்ணையும் குறிக்க வேண்டும்.
-
எனவே, 5 சிறிய அளவு. எனவே, சிறிய பகுதி
-
இதை குறிக்கிறது. 19 பெரிய அளவு, இது இதனை குறிக்கிறது.
-
எனவே, இது 5 < 19 ஆகும்.
-
இதனை 1+1 < 1+1+1 என்றும் எழுதலாம்.
-
அப்படியென்றால், 1+1 என்பது
-
1+1+1 ஐ விட சிறியது என்று பொருள்.