டேரேக் சிவேர்ஸ்: அபூர்வமா அல்லது சிற்சில வேற்றுமைகள் மட்டுமா?
-
0:00 - 0:04இப்பொழுது, அமெரிக்காவில் ஏதாவதொரு தெருவில் நீங்கள் நிற்பதாகக் கற்பனை செய்துக்கொள்ளுங்கள்.
-
0:04 - 0:07அங்கு நீங்கள் ஒரு ஜப்பானியரைக் காண்கிறீர்கள். அவர் உங்களிடம் வழி கேட்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.
-
0:07 - 0:09"வணக்கம் ஐயா. இடையூறு செய்வதற்கு மன்னியுங்கள். இந்த கட்டடத்தின் பெயர் என்ன என அறியலாமா?"
-
0:09 - 0:13நீங்கள் உடனே இது ஓக் தெரு, அது எல்ம் தெரு என பதிலளிக்கிறீர்.
-
0:13 - 0:15மேலும், இது இருபத்து ஆறாவது தெரு, அது இருபத்து ஏழாவது தெரு எனவும் கூறுகிறீர்கள்.
-
0:15 - 0:17அவரோ "அது சரி. இந்த கட்டத்தின் பெயர்?" என்ன என கேட்கிறார்.
-
0:17 - 0:20நீங்கள் கட்டடத்துக்கு ஏது பெயர்கள் என்பதுடன்
-
0:20 - 0:22தெருக்களுக்குப் பெயர்கள் உண்டு; கட்டங்கள்
-
0:22 - 0:24தெருக்களுக்கு இடையே உள்ள பெயரிடப்படாத இடங்கள் என விளக்குகிறீர்கள்.
-
0:24 - 0:28அவர் கொஞ்சம் குழப்பத்துடனும், கொஞ்சம் ஏமாற்றத்துடனும் உங்களிடம் இருந்து விடைபெறுகிறார்.
-
0:28 - 0:31சரி, இப்பொழுது நீங்கள் ஜப்பானில் எதாவது ஒரு தெருவில் நிற்பதாக பாவித்துக்கொள்ளுங்கள்.
-
0:31 - 0:33நீங்கள் உங்கள் அருகிலுள்ள ஒரு நபரை அணுகி,
-
0:33 - 0:35"இடையூருக்கு மன்னிக்கவும், இந்த தெருவின் பெயர் என்ன?" என வினவுகிறீர்கள்.
-
0:35 - 0:39அவர் உடனே, அதோ அது பதினேழாவது கட்டம், இது பதினாறாவது கட்டம் என பதிலளிக்கிறார்.
-
0:39 - 0:42நீங்களோ "அது சரி. இந்த தெருவின் பெயர் என்ன?" என கேட்கிறீர்கள்.
-
0:42 - 0:44அவரோ தெருக்களுக்குப் பெயர்கள் இல்லை.
-
0:44 - 0:46கட்டங்களுக்குத்தான் பெயர்கள் உண்டு என்கிறார்.
-
0:46 - 0:50இந்த கூகள் வரைப்படங்களைப் பாருங்கள். கட்டம் பதினான்கு, பதினைந்து, பதினாறு, பதினேழு, பதினெட்டு , பத்தொன்பது எனத்தானே உள்ளது.
-
0:50 - 0:52இந்த கட்டங்களுக்கெல்லாம் பெயர்கள் உண்டு.
-
0:52 - 0:56தெருக்கள் கட்டங்களுக்கு இடையே இருக்கும் வெற்றிடங்கள் மட்டும்தான் எனவும் தெரிவிக்கிறார்
-
0:56 - 0:59நீங்களோ அப்படியென்றால் உங்களுது வீட்டு முகவரியை எப்படி அறீவீர்கள் என்கிறீர்கள்.
-
0:59 - 1:02அவரோ "அது எளிதே. இது எட்டாவது மாவட்டம்.
-
1:02 - 1:05பதினேழாவது கட்டம், இல்ல எண் ஒன்று".
-
1:05 - 1:07மேலும், நீங்கள் இந்த ஊரில் உலாவியபோது
-
1:07 - 1:09வீட்டு எங்கள் வரிசைக்கிரமமாக இல்லாததை அறிந்ததாக கூறுகிறீர்கள்
-
1:09 - 1:12அவரோ "அவை வரிசைகிரமமாகதானே உள்ளன. அவை கட்டப்பட்ட காலத்தின் அடிப்படையில் அமைந்துள்ளன.
-
1:12 - 1:15இந்த கட்டத்தில் முதன் முதலில் கட்டப்பட்ட இல்லத்தின் எண் ஒன்று.
-
1:15 - 1:18இரண்டாவதாக கட்டப்பட்ட மனையின் இலக்கம் இரண்டு.
-
1:18 - 1:20மூன்றாவதாக கட்டப்பட்ட வீடு மூன்றாம் எண்ணைக் கொண்டுள்ளது. அத்துனை எளிதானது. இது வெள்ளிடைமலையும் கூட.
-
1:20 - 1:23எனவே, சில சமயங்களில் நாம்
-
1:23 - 1:25உலகின் மற்ற மூலைகளுக்குச் செல்வதன் மூலம்
-
1:25 - 1:27நாம் அறியாமலே நம்முள் கொண்டிருக்கும் எண்ணங்களை அறிவதுடன்
-
1:27 - 1:30நமது எண்ணங்களுக்கு எதிர்மாறான எண்ணங்களும் வாய்மையே என அறிய இயலுகிறது.
-
1:30 - 1:32சரி, ஓர் உதாரணம். சீனாவில் உள்ள சில மருத்துவர்கள்
-
1:32 - 1:35தங்களது தொழில் பிறரின் உடல் நலத்தைக் காப்பது என கருதுகின்றனர்.
-
1:35 - 1:37எனவே, நீங்கள் உடல் நலத்துடன் இருக்கும் மாதங்களில் அந்த மருத்துவர்களுக்குப் பணம் செலுத்த வேண்டும்.
-
1:37 - 1:39ஆனால், நீங்கள் உடல் நலமில்லா காலங்களில் பணம் செலுத்த வேண்டியதில்லை. ஏனென்றால், அந்த மருத்துவர்கள்
-
1:39 - 1:41தங்கள் கடமைகளிலிருந்து தவறிவிட்டதாகக் கருதுகின்றனர். இந்த மருத்துவர்கள் நீங்கள் நலமுடன் இருக்கும் காலங்களில் செல்வம் சேர்க்கின்றனர்; நீங்கள் நோய்வாய்ப்படும்போதல்ல.
-
1:41 - 1:44(கைதட்டல்)
-
1:44 - 1:46பெரும்பாலும் இசையை எடுத்துக்கொண்டால், நாம் 'ஒன்று' என்பதை
-
1:46 - 1:50முதலாம் இசையழுத்தமாகவும், இசைத் தொடரின் ஆரம்பமாகவும் கருதுகிறோம். ஒன்று, இரண்டு மூன்று நான்கு.
-
1:50 - 1:52ஆனால், மேற்கு ஆப்பிரிக்க இசையைப் பார்ப்போமானால் 'ஒன்று' என்பது
-
1:52 - 1:54ஓர் இசைத்தொடரின் இறுதி இசையழுத்தமாகும்;
-
1:54 - 1:56ஒரு வாக்கியத்தின் இறுதியில் வைக்கப்படும் முற்றுப்புள்ளியைப் போன்று.
-
1:56 - 1:58எனவே, இந்த வித்தியாசத்தை நீங்கள் மேற்கு ஆப்பிரிக்கர்களின் இசைத் தொடரில் மட்டும் செவிமடுப்பதில்லை; அவர்கள் இசையழுத்தத்தைக் கணக்கிடும் முறையிலும் இவ்வித்தியாசம் காணப்படுகிறது.
-
1:58 - 2:01இரண்டு, மூன்று, நான்கு, ஒன்று.
-
2:01 - 2:04இதோ இந்த வரைப்படமும் துல்லியமானது.
-
2:04 - 2:06(சிரிப்பொலி)
-
2:06 - 2:09ஒரு கூற்று உள்ளது. இந்தியாவைப் பற்றி நீங்கள் எந்த ஒரு சரியான கூற்றை கூறினும்,
-
2:09 - 2:11அதன் எதிர்மறைக் கூற்றும் உண்மை என்று.
-
2:11 - 2:13எனவே, இதனை மறவாதீர். 'TED'ட்டிலோ அல்லது வேறு எங்கினும்
-
2:13 - 2:16நீங்கள் எந்த ஒரு அறிவார்ந்தத் தகவலை அறிந்திருந்தாலும் அல்லது கேள்வியுரினும்,
-
2:16 - 2:18அதன் எதிர்மறைக் கூற்றும் மெய்யாக இருக்கலாம்.
-
2:18 - 2:20டோமோ அறிகாதோ கோசைமஷித (நன்றி).
- Title:
- டேரேக் சிவேர்ஸ்: அபூர்வமா அல்லது சிற்சில வேற்றுமைகள் மட்டுமா?
- Speaker:
- Derek Sivers
- Description:
-
ஒவ்வொன்றுக்கும் இரு பக்கங்கள் உண்டு. நீங்கள் சற்றும் எதிர்பாரா விடயங்களைப் பயன்கொண்டு இரண்டே நிமிடங்களில் இக்கூற்றினை மெய்பிக்கிறார் டேரேக் சிவேர்ஸ்.
- Video Language:
- English
- Team:
- closed TED
- Project:
- TEDTalks
- Duration:
- 02:21