WEBVTT 00:00:00.000 --> 00:00:04.000 இப்பொழுது, அமெரிக்காவில் ஏதாவதொரு தெருவில் நீங்கள் நிற்பதாகக் கற்பனை செய்துக்கொள்ளுங்கள். 00:00:04.000 --> 00:00:07.000 அங்கு நீங்கள் ஒரு ஜப்பானியரைக் காண்கிறீர்கள். அவர் உங்களிடம் வழி கேட்கிறார் என்று வைத்துக்கொள்வோம். NOTE Paragraph 00:00:07.000 --> 00:00:09.000 "வணக்கம் ஐயா. இடையூறு செய்வதற்கு மன்னியுங்கள். இந்த கட்டடத்தின் பெயர் என்ன என அறியலாமா?" NOTE Paragraph 00:00:09.000 --> 00:00:13.000 நீங்கள் உடனே இது ஓக் தெரு, அது எல்ம் தெரு என பதிலளிக்கிறீர். 00:00:13.000 --> 00:00:15.000 மேலும், இது இருபத்து ஆறாவது தெரு, அது இருபத்து ஏழாவது தெரு எனவும் கூறுகிறீர்கள். NOTE Paragraph 00:00:15.000 --> 00:00:17.000 அவரோ "அது சரி. இந்த கட்டத்தின் பெயர்?" என்ன என கேட்கிறார். NOTE Paragraph 00:00:17.000 --> 00:00:20.000 நீங்கள் கட்டடத்துக்கு ஏது பெயர்கள் என்பதுடன் 00:00:20.000 --> 00:00:22.000 தெருக்களுக்குப் பெயர்கள் உண்டு; கட்டங்கள் 00:00:22.000 --> 00:00:24.000 தெருக்களுக்கு இடையே உள்ள பெயரிடப்படாத இடங்கள் என விளக்குகிறீர்கள். NOTE Paragraph 00:00:24.000 --> 00:00:28.000 அவர் கொஞ்சம் குழப்பத்துடனும், கொஞ்சம் ஏமாற்றத்துடனும் உங்களிடம் இருந்து விடைபெறுகிறார். NOTE Paragraph 00:00:28.000 --> 00:00:31.000 சரி, இப்பொழுது நீங்கள் ஜப்பானில் எதாவது ஒரு தெருவில் நிற்பதாக பாவித்துக்கொள்ளுங்கள். 00:00:31.000 --> 00:00:33.000 நீங்கள் உங்கள் அருகிலுள்ள ஒரு நபரை அணுகி, NOTE Paragraph 00:00:33.000 --> 00:00:35.000 "இடையூருக்கு மன்னிக்கவும், இந்த தெருவின் பெயர் என்ன?" என வினவுகிறீர்கள். NOTE Paragraph 00:00:35.000 --> 00:00:39.000 அவர் உடனே, அதோ அது பதினேழாவது கட்டம், இது பதினாறாவது கட்டம் என பதிலளிக்கிறார். NOTE Paragraph 00:00:39.000 --> 00:00:42.000 நீங்களோ "அது சரி. இந்த தெருவின் பெயர் என்ன?" என கேட்கிறீர்கள். NOTE Paragraph 00:00:42.000 --> 00:00:44.000 அவரோ தெருக்களுக்குப் பெயர்கள் இல்லை. 00:00:44.000 --> 00:00:46.000 கட்டங்களுக்குத்தான் பெயர்கள் உண்டு என்கிறார். 00:00:46.000 --> 00:00:50.000 இந்த கூகள் வரைப்படங்களைப் பாருங்கள். கட்டம் பதினான்கு, பதினைந்து, பதினாறு, பதினேழு, பதினெட்டு , பத்தொன்பது எனத்தானே உள்ளது. 00:00:50.000 --> 00:00:52.000 இந்த கட்டங்களுக்கெல்லாம் பெயர்கள் உண்டு. 00:00:52.000 --> 00:00:56.000 தெருக்கள் கட்டங்களுக்கு இடையே இருக்கும் வெற்றிடங்கள் மட்டும்தான் எனவும் தெரிவிக்கிறார் NOTE Paragraph 00:00:56.000 --> 00:00:59.000 நீங்களோ அப்படியென்றால் உங்களுது வீட்டு முகவரியை எப்படி அறீவீர்கள் என்கிறீர்கள். NOTE Paragraph 00:00:59.000 --> 00:01:02.000 அவரோ "அது எளிதே. இது எட்டாவது மாவட்டம். 00:01:02.000 --> 00:01:05.000 பதினேழாவது கட்டம், இல்ல எண் ஒன்று". NOTE Paragraph 00:01:05.000 --> 00:01:07.000 மேலும், நீங்கள் இந்த ஊரில் உலாவியபோது 00:01:07.000 --> 00:01:09.000 வீட்டு எங்கள் வரிசைக்கிரமமாக இல்லாததை அறிந்ததாக கூறுகிறீர்கள் NOTE Paragraph 00:01:09.000 --> 00:01:12.000 அவரோ "அவை வரிசைகிரமமாகதானே உள்ளன. அவை கட்டப்பட்ட காலத்தின் அடிப்படையில் அமைந்துள்ளன. 00:01:12.000 --> 00:01:15.000 இந்த கட்டத்தில் முதன் முதலில் கட்டப்பட்ட இல்லத்தின் எண் ஒன்று. 00:01:15.000 --> 00:01:18.000 இரண்டாவதாக கட்டப்பட்ட மனையின் இலக்கம் இரண்டு. 00:01:18.000 --> 00:01:20.000 மூன்றாவதாக கட்டப்பட்ட வீடு மூன்றாம் எண்ணைக் கொண்டுள்ளது. அத்துனை எளிதானது. இது வெள்ளிடைமலையும் கூட. NOTE Paragraph 00:01:20.000 --> 00:01:23.000 எனவே, சில சமயங்களில் நாம் 00:01:23.000 --> 00:01:25.000 உலகின் மற்ற மூலைகளுக்குச் செல்வதன் மூலம் 00:01:25.000 --> 00:01:27.000 நாம் அறியாமலே நம்முள் கொண்டிருக்கும் எண்ணங்களை அறிவதுடன் 00:01:27.000 --> 00:01:30.000 நமது எண்ணங்களுக்கு எதிர்மாறான எண்ணங்களும் வாய்மையே என அறிய இயலுகிறது. NOTE Paragraph 00:01:30.000 --> 00:01:32.000 சரி, ஓர் உதாரணம். சீனாவில் உள்ள சில மருத்துவர்கள் 00:01:32.000 --> 00:01:35.000 தங்களது தொழில் பிறரின் உடல் நலத்தைக் காப்பது என கருதுகின்றனர். 00:01:35.000 --> 00:01:37.000 எனவே, நீங்கள் உடல் நலத்துடன் இருக்கும் மாதங்களில் அந்த மருத்துவர்களுக்குப் பணம் செலுத்த வேண்டும். 00:01:37.000 --> 00:01:39.000 ஆனால், நீங்கள் உடல் நலமில்லா காலங்களில் பணம் செலுத்த வேண்டியதில்லை. ஏனென்றால், அந்த மருத்துவர்கள் 00:01:39.000 --> 00:01:41.000 தங்கள் கடமைகளிலிருந்து தவறிவிட்டதாகக் கருதுகின்றனர். இந்த மருத்துவர்கள் நீங்கள் நலமுடன் இருக்கும் காலங்களில் செல்வம் சேர்க்கின்றனர்; நீங்கள் நோய்வாய்ப்படும்போதல்ல. 00:01:41.000 --> 00:01:44.000 (கைதட்டல்) NOTE Paragraph 00:01:44.000 --> 00:01:46.000 பெரும்பாலும் இசையை எடுத்துக்கொண்டால், நாம் 'ஒன்று' என்பதை 00:01:46.000 --> 00:01:50.000 முதலாம் இசையழுத்தமாகவும், இசைத் தொடரின் ஆரம்பமாகவும் கருதுகிறோம். ஒன்று, இரண்டு மூன்று நான்கு. 00:01:50.000 --> 00:01:52.000 ஆனால், மேற்கு ஆப்பிரிக்க இசையைப் பார்ப்போமானால் 'ஒன்று' என்பது 00:01:52.000 --> 00:01:54.000 ஓர் இசைத்தொடரின் இறுதி இசையழுத்தமாகும்; 00:01:54.000 --> 00:01:56.000 ஒரு வாக்கியத்தின் இறுதியில் வைக்கப்படும் முற்றுப்புள்ளியைப் போன்று. 00:01:56.000 --> 00:01:58.000 எனவே, இந்த வித்தியாசத்தை நீங்கள் மேற்கு ஆப்பிரிக்கர்களின் இசைத் தொடரில் மட்டும் செவிமடுப்பதில்லை; அவர்கள் இசையழுத்தத்தைக் கணக்கிடும் முறையிலும் இவ்வித்தியாசம் காணப்படுகிறது. 00:01:58.000 --> 00:02:01.000 இரண்டு, மூன்று, நான்கு, ஒன்று. NOTE Paragraph 00:02:01.000 --> 00:02:04.000 இதோ இந்த வரைப்படமும் துல்லியமானது. 00:02:04.000 --> 00:02:06.000 (சிரிப்பொலி) NOTE Paragraph 00:02:06.000 --> 00:02:09.000 ஒரு கூற்று உள்ளது. இந்தியாவைப் பற்றி நீங்கள் எந்த ஒரு சரியான கூற்றை கூறினும், 00:02:09.000 --> 00:02:11.000 அதன் எதிர்மறைக் கூற்றும் உண்மை என்று. 00:02:11.000 --> 00:02:13.000 எனவே, இதனை மறவாதீர். 'TED'ட்டிலோ அல்லது வேறு எங்கினும் 00:02:13.000 --> 00:02:16.000 நீங்கள் எந்த ஒரு அறிவார்ந்தத் தகவலை அறிந்திருந்தாலும் அல்லது கேள்வியுரினும், 00:02:16.000 --> 00:02:18.000 அதன் எதிர்மறைக் கூற்றும் மெய்யாக இருக்கலாம். 00:02:18.000 --> 00:02:20.000 டோமோ அறிகாதோ கோசைமஷித (நன்றி).