-
இந்த காணொளியில் என்ன செய்ய விரும்புகிறேன் என்றால்
-
இயற்கணிதத்தின் ஆதி மூலம் பற்றி சிந்திக்கிறேன்.
-
இயற்கணிதத்தின் தோற்றம்.
-
இந்த வார்த்தை மற்றும்
-
இந்த இயற்கணிதத்தை குறிக்கும்
-
இதன் உட்கருத்துகள்
-
இந்த புத்தகத்தில் இருந்து தான் வந்தது.
-
அல்லது இந்த புத்தகத்தின் இந்த பக்கம் எனலாம்.
-
ஆங்கிலத்தில் அந்தப் புத்தகத்தின் பெயர்
-
"The Compendious book on Calculation by Completion and Balancing."
-
இந்த புத்தகம் பெர்சிய கணிதவியரால் எழுதப்பட்டுள்ளது.
-
இவர் பாக்தாத் நகரில் இருந்துள்ளார்.
-
8 அல்லது 9ஆம் நூற்றாண்டு என்று நினைக்கிறேன்.
-
இந்த புத்தகத்தை எழுதும்பொழுது
-
அது கி.பி. 820 என்று நினைக்கிறேன்.
-
கி.பி.
-
அல்ஜீப்ரா என்பது அரபிய வார்த்தை.
-
ஆனால், உண்மையில் அவர் அரபிய மொழியில்
-
இதற்கு கொடுத்துள்ள தலைப்பு இயற்கணிதம் என்றால்
-
"சீரமைப்பு அல்லது நிறைவு" என்று பொருள்.
-
சீரமைப்பு....சீரமைப்பு அல்லது நிறைவு....நிறைவு
-
அவர் தன் புத்தகத்தில் குறிப்பிட்ட செயல்முறைகளை கொடுத்துள்ளார்
-
சமன்பாட்டின் ஒரு பக்கத்தில் இருந்து
-
அடுத்த இடத்திற்கு சென்று தீர்வு காண்பது பற்றி விளக்கியுள்ளார்.
-
அது இங்கு உள்ளது. எனக்கு அரபு மொழி தெரியாது.
-
ஆனால், அரபிய மொழியில் இருந்து கலந்துள்ள
-
சில மொழிகளைப் பற்றித் தெரியும்.
-
இதில் 'அல் கிதாப்' என்று உள்ளது. இந்திய திரைப்படத்தை
-
புரிந்துகொள்ளும் அளவிற்கு எனக்கு உருது அல்லது ஹிந்தி தெரியும்.
-
'அல் கிதாப்' "கிதாப்" என்றால் " புத்தகம்".
-
இந்தப் பகுதி "புத்தகம்"
-
அல்-முக்தசார் என்பது "சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது" என நினைக்கிறேன்.
-
compendious இந்த வார்த்தையின் அர்த்தம் தெரியவில்லை.
-
அடுத்து ஹிசாப் என்பது உருது அல்லது இந்தியில் கணக்கிடுதல் என்பது அர்த்தம்.
-
Al-Gabr இதுதான் மூலம்.
-
பலரும் அறிந்த இயல்கணிதம் இதுதான்.
-
இதற்கு "நிறைவு" என்று பொருள்.
-
இதை நிறைவு என்றே கொள்ளலாம்.
-
அடுத்து இந்த வார்த்தைக்கு
-
"சமன் செய்தல்" என்று பொருள்.
-
நிறைவு செய்தல், சமன் செய்தல்
-
இதை நாம் மொழிபெயர்க்க விரும்பினால்
-
இந்த காணொளி அரபு மொழியை மொழிபெயர்ப்பதற்காக இல்லை.
-
சமன் செய்தல், நிறைவு செய்தல் இவற்றை,
-
பயன்படுத்தி சுருக்கமாகக் கணக்கிடுதல் ஆகும்.
-
இது தோராயமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
-
இயற்கணிதம் என்பதன் கருத்து இதுதான்.
-
இது மிக மிக மிக முக்கியமான புத்தகம்.
-
முதலில் அல்ஜீப்ரா என்ற வார்த்தையை உபயோகப்படுத்தியதால் அல்ல.
-
முதன்முதலில் அல்ஜீப்ரா தற்கால சிந்தனைகளை
-
கொண்டு உருவானதாக பலர் கருதுகின்றனர்.
-
சமநிலை, சமன்பாடு
-
நுண் செயல்முறைகள் இவற்றைப்பற்றி இருந்தாலும்
-
இதைப் பற்றிய செயல்கள் அதிகம் இல்லை.
-
அல் க்வாரிஸ்மி என்பவர் முதல் நபர் இல்லை.
-
அவர் இதைப்பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள
-
பாக்தாத்தில் இருந்து கொண்டிருந்துள்ளார்.
-
அல்ஜீப்ராவின் வரலாற்றைப் பொருத்தவரை உலகின்
-
இந்தப் பகுதியில் இருந்து நிறைய வந்துள்ளது.
-
8 அல்லது 9 ஆம் நூற்றாண்டில் அவர் அங்கு இருந்துள்ளார்.
-
காலவரிசையை இங்கு வரைகிறேன்.
-
அப்பொழுது அதை நாம் நன்கு பாராட்ட முடியும்.
-
இது காலவரிசை.
-
நீங்கள் மதச்சார்பான ஆளா அல்லது மதச்சார்பற்ற ஆளா என்பதில்லை.
-
நவீன தேதிகள் ஏசுவின் பிறப்பை வைத்துத்தான் கணக்கிடப்படுகிறது.
-
அதை இங்கு குறிக்கிறேன்.
-
அந்த இடத்தில் சிலுவை ஒன்றை போடுகிறேன்.
-
நாம் மத சார்பில்லாமல் இருந்தால்
-
இதனை "பொது ஊழி" அல்லது "பொதுஊழிக்கு முன்" என்று சொல்லலாம்.
-
மதச்சார்புடன் இருந்தால்
-
கி.பி என்று சொல்லலாம்.
-
'இறைவனின் காலம்' என்று அர்த்தமாகும்.
-
"அனொ டொமினி" என்ற லத்தீன் வார்த்தைக்கு எனக்குப் பொருள் தெரியாது
-
"நம் இறைவனின் ஆண்டு" என நினைக்கிறேன்
-
மதச்சூழலில் சொல்வதாய் இருந்தால்
-
"பொதுவருடத்திற்கு முன்" என்று சொல்வதற்கு பதில்
-
"கிறிஸ்துவுக்கு முன்" கி.மு என்று கூறுகிறோம்.
-
எப்படிக் கூறினாலும் இது
-
பொது வருடத்தில் 1000 மாவது வருடம்.
-
இப்பொழுது நடப்பது பொதுவருடத்தில் 2000 மாவது வருடம்.
-
நான் இந்த காணொளியை செய்யும் பொழுது
-
இந்த வருடங்களில் தான் செய்து கொண்டு இருக்கிறேன்.
-
இது பொதுவான காலத்திற்கு 1000 வருடங்கள் முந்தையது.
-
இது பொதுவான காலத்திற்கு 2000 வருடங்கள் முந்தையது.
-
இவைகள்தான் அல்ஜீப்ராவின் முதல் தடயங்கள்.
-
இதைத்தான் நம்மால் கண்டுபிடிக்க முடிந்தது.
-
இன்னும் நம்மால் இதில் தீவிரமாகப் போகமுடியும்.
-
அப்படி தீவிரமாக நாம் இதில் இறங்கியதில் வேறு
-
சிலரும் அல்ஜீப்ரா பற்றி ஆய்ந்து அதற்கு நிறைய
-
கருத்துக்களைச் சேர்த்துள்ளதற்கான தடயங்கள் கிடைத்துள்ளன.
-
நமக்குக் கிடைத்த பதிவுகளின்படி
-
பாபிலோனைச் சேர்ந்தவர்களின் கருத்துக்கள் தான்
-
சிறப்பாக உள்ளது எனத் தெரிகிறது.
-
இது பொதுவருடத்திற்கு 2000 வருடங்களுக்கு முன்,
-
கிறிஸ்துவிற்கு முன்.
-
எழுதவதற்குத் தேவையான வசதியில்லாத அந்தக்
-
காலத்தில் அல்ஜீப்ராவிற்குத் தேவையான அடிப்படைக்
-
கருத்துக்களைக் கண்டுபிடித்திருக்க வேண்டும்.
-
அவர்கள் இதில் உள்ள அடையாளக் குறிகளை உபயோகப்படுத்தவில்லை.
-
எண்களைக் குறிக்க அதே வழியைப் பின்பற்றவில்லை.
-
ஆனாலும் இப்போதுள்ள அல்ஜீப்ராவை அந்தக் கால
-
கணிதவியல் அறிஞர்கள் ஆய்ந்துள்ளார்கள்.
-
பாபிலோன், வரைபடத்தில் இங்குள்ளது.
-
பாபிலோன் ஏறக்குறைய சுமேரியாவின் மரபைக் கொண்டுள்ளது.
-
இந்த நிலப்பரப்பு முழுவதும் மெசபடோமியா ஆகும்.
-
இரண்டு ஆறுகளின் இடையில் உள்ளது.
-
இந்த இடங்களில் தான் மக்கள் ஆரம்பத்தில் இருந்துள்ளார்கள்
-
என்ற தடயங்கள் உள்ளது. இவர்கள் தான்
-
ஆரம்பத்தில் அல்ஜீப்ராவை ஆரம்பித்துள்ளார்கள்.
-
பிறகு முன்னோக்கிச் சென்றால்.
-
நம் வரலாற்று அறிஞர்களால் கூட எந்தெந்த காலநிலையில் அல்ஜீப்ரா
-
பயன்பட்டது என்பதை சரியாகக் கூறமுடியாது என நான் நம்புகிறேன்
-
2000 வருடங்களுக்கு முன் பாபிலோனில் வாழ்ந்த கணிதவியலாரின்
-
பங்கு அல்ஜீப்ராவைப் பொருத்தவரை அதிகமே.
-
இப்பொழுது முன்நோக்கி கி.பி 200 - 300 ஆண்டுகளுக்குச் செல்வோம்.
-
இங்குள்ளது.
-
அலக்ஸாண்டிரியாவில் கிரேக்கக் குடிமகன் ஒருவர் இருந்தார்.
-
கிரீஸ் இங்குள்ளது. ஆனால் அவர் அலக்ஸாண்டிரியாவில் வாழ்ந்து வந்தார்.
-
அந்த நேரத்தில் அந்தப் பகுதி ரோமப் பேரரசரின் ஆதிக்கத்தில் இருந்தது.
-
அலக்ஸாண்டிரியா இங்குள்ளது.
-
அவரின் பெயர்
-
டயோபதான்துஸ் அல்லது டயாபதான்துஸ்
-
அதை எப்படி உச்சரிப்பது என எனக்குத் தெரியவில்லை.
-
டயோ .... டயோபதான்துஸ்.
-
இவர் சில நேரங்களில் அல்ஜீப்ராவின் தந்தை எனப் புகழப்பட்டவர்.
-
டயோபதான்துஸ் அல்லது அல்-குவாரச்மியா என்பது விவாதத்திற்கு உரியது.
-
அல்-க்வாரிஸ்மி அல்ஜீப்ரா சம்பந்தப்பட்ட தொகுதிகளை சமன்பாடுகளை
-
சமநிலைபடுத்தலில் உபயோகப்படுத்தியுள்ளார்.
-
டயோபதான்துஸ், சில சிக்கல்களில் தீர்வு கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தியுள்ளார்.
-
அவரவர் வழிகளில் அல்ஜீப்ராவிற்கு பங்காற்றி
-
பாபிலோனியர்களை இந்த விசயத்தில் முந்திவிட்டனர்.
-
அவர்கள் பாபிலோனியர்கள் செய்ததைப் பார்த்து செய்யவில்லை
-
அவர்களின் பங்களிப்புகள் தனித்துவம் வாய்ந்ததாக இருந்தது.
-
நாம் இன்று அதை அல்ஜீப்ரா என ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு இருந்தது.
-
குறிப்பாக மேற்கு வரலாற்றாசிரியர்கள்,
-
டயோபதான்துஸை அல்ஜீப்ராவின் தந்தை எனக் கூறுகின்றனர்.
-
அல்-க்வாரிஸ்மியை மற்றவர்கள் சிலநேரங்களில் .
-
அல்ஜீப்ராவின் தந்தை என வாதிடுகின்றனர்.
-
இவருடைய பங்களிப்பும் மிகவும் முக்கியமானது.
-
கி.பி 600
-
வருடங்களுக்கு சென்றால்.
-
அந்த நூற்றாண்டில் இந்தியாவைச் சேர்ந்த
-
பிரம்மா குப்தா என்ற கணிதவியலாளர் அல்ஜீப்ராவின்
-
வரலாற்றில் இருந்துள்ளார்.
-
ஆனால், அவர் இந்தியாவின் எந்தப் பகுதியில் வாழ்ந்துள்ளார்
-
என்ற விபரங்கள் எனக்குத் தெரியாது. பின் இதுபற்றி பார்க்கவேண்டும்.
-
அவர் இந்தியாவில் தான் இருந்துள்ளார். அவரும் அல்ஜீப்ராவுக்கு
-
குறிப்பிட்டுச் சொல்லும்படியான பங்களிப்பை அளித்துள்ளார்.
-
அதன் பிறகு அல்-க்வாரிஸ்மி
-
இருந்துள்ளார்.
-
அல்-க்வாரிஸ்மி என்பவர்
-
அல்ஜீப்ராவில் அவர் ஆற்றிய பங்கிற்கு அவரை கண்டிப்பாக நாம் கௌரவிக்க வேண்டும்.
-
இந்த அராபிய வார்த்தைக்கு அர்த்தம் 'மறுமலர்ச்சி'.
-
அல்ஜிப்ராவின் தந்தை
-
என்று சிலர் அவரைக் கூறுகின்றனர். சிலர் அதை ஒத்துக்கொள்வதில்லை.
-
"அல்ஜிப்ராவின் தந்தைகளில்" அவரும் ஒருவர் என்கின்றனர்.
-
ஏனெனில் அவருடைய பங்கில் அல்ஜீப்ராவைப் பொருத்தவரை
-
குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கு அதில் தீர்வு கண்டுபிடிக்கவில்லை.
-
ஆனால், தற்கால கணிதவியலாளர்கள் அதற்கு பல
-
வழிகளைக் கண்டுபிடித்துள்ளனர்.