< Return to Video

Viruses

  • 0:00 - 0:06
    எனக்குத் தற்போது சளி பிடித்திருந்ததால் இந்தக் காணொளியில்
  • 0:06 - 0:07
    விவரிக்க வைரசுகள்தான் பொருத்தமான
  • 0:09 - 0:09
    தலைப்பாகப்பட்டது.
  • 0:10 - 0:11
    கிருமி அல்லது கிருமிகள்.
  • 0:14 - 0:17
    கிருமிகள்.
  • 0:17 - 0:19
    என்னைப் பொருத்தவரை இந்தக் கிருமிகள் சிலநிலையில்
  • 0:19 - 0:21
    உயிரியலில் மிகவும் கவர்ச்சியான விசயங்களாக உள்ளன.
  • 0:21 - 0:26
    ஏனெனில் அவைகள் உயிரற்றது உயிருள்ளது இவ்விரண்டிற்கும்
  • 0:26 - 0:27
    இடையேயுள்ள எல்லைக் கோட்டை தெளிவற்றதாக்கிவிடுகிறது.
  • 0:30 - 0:33
    நம்மையும் எடுத்துக்கொள்வோம்.
  • 0:33 - 0:35
    அவைகளையும் எடுத்துக் கொள்வோம்.
  • 0:35 - 0:39
    ஒன்று பிறந்தால் அதற்கு வளர்ச்சி உண்டு, தொடர்ந்து மாற்றம் உண்டு.
  • 0:39 - 0:40
    இதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.
  • 0:40 - 0:42
    இயக்கம் கூட இருக்கலாம்.
  • 0:42 - 0:42
    இயக்கம் இல்லாமலும் இருக்கலாம்.
  • 0:42 - 0:44
    அவை தன்னில் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
  • 0:44 - 0:46
    இனப்பெருக்கம் செய்கிறது.பிறகு இறந்து விடுகிறது.
  • 0:46 - 0:48
    வாழ்க்கையின் சாத்தியக் கூறுகள் இவைதான்.
  • 0:48 - 0:51
    இதில் நிறைய விசயங்களைப் பார்க்கிறோம்.
  • 0:51 - 0:53
    அல்லது இதில் கொண்டு வருகிறோம்.
  • 0:53 - 0:55
    இதில் பாக்டீரியாக்களைக் கொண்டுவருகிறோம்.
  • 0:55 - 0:57
    தாவரங்களைக் கொண்டுவருகிறோம்.
  • 0:57 - 1:01
    வகைப்பாட்டியலை நான் சிதைப்பது போல் தோன்றுகிறது.
  • 1:01 - 1:03
    ஒன்று உயிரினமா என்று நாம் ஒன்றைப் பார்த்தவுடன் தெரிந்து கொள்வோம்
  • 1:03 - 1:07
    எல்லாக் கிருமிகளும் புரதத்துக்குள் மரபணு
  • 1:07 - 1:10
    தகவல்களைத்தான் கொண்டிருக்கும்.
  • 1:10 - 1:11
    புரத உறைக்குள்
  • 1:11 - 1:13
    இதை இங்கு வரைகிறேன்.
  • 1:13 - 1:16
    மரபணுத் தகவல்கள் எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரமுடியும்.
  • 1:16 - 1:22
    அது ரைபோகரு அமிலமாக இருக்கலாம் ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலமாக இருக்கலாம்
  • 1:22 - 1:25
    தனி இழைகளைக் கொண்ட ரைபோகரு அமிலமாக இருக்கலாம் அல்லது இரு இழைகளைக் கொண்ட
  • 1:25 - 1:27
    ரைபோகரு அமிலமாக இருக்கலாம்.தனி இழைகளைக் கொண்ட ரைபோகரு அமிலத்திற்கு
  • 1:27 - 1:29
    இரண்டு சிறிய S's களை அதன் முன் போடுவர்.
  • 1:29 - 1:31
    இருஇழைகளைக் கொண்ட ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலமாக இருந்தால் அதற்கு
  • 1:31 - 1:33
    ds ஐ அதன் முன் போடுவர்.
  • 1:33 - 1:35
    பொதுவான கருத்து இங்கு என்னவென்றால் கிருமிகள் இந்த எல்லா ரூபத்திலும் வரலாம்.
  • 1:35 - 1:38
    அவைகள் எல்லாமும் மரபணுத் தகவல்களைக் கொண்டுள்ளது.
  • 1:38 - 1:41
    சில கருவமிலங்களின் சங்கிலிகள்.
  • 1:41 - 1:44
    தனி இழை அல்லது இருஇழைகளைக் கொண்ட ரைபோகரு அமிலம் அல்லது
  • 1:44 - 1:45
    இருஇழைகளைக் கொண்ட ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலம் இதில் ஏதாவதொன்றாக இருக்கலாம்.
  • 1:45 - 1:48
    இவை ஏதாவது ஒரு புரதஅமைப்பினுள் இருக்கும்.
  • 1:48 - 1:50
    இவ்வாறு புரதத்தால் சூழப்பட்ட இதை காப்ஃசிட் என்பர்.
  • 1:50 - 1:53
    இதன் வரைபடம் இருபதுமுகங்களைக்
  • 1:53 - 1:57
    கொண்டதைப் போல் உள்ளது.
  • 1:57 - 1:58
    சரியாகச் செய்திருக்கிறேனா எனப் பார்க்கிறேன்.
  • 1:58 - 2:01
    இப்படித்தான் இது பார்வைக்கு இருக்கும்.
  • 2:01 - 2:03
    ஆனால் எல்லாக் கிருமிகளும் பார்வைக்கு இவ்வாறு இருக்காது.
  • 2:03 - 2:05
    கிருமிகளில் ஆயிரக்கணக்கான வகைகள் உள்ளன.
  • 2:05 - 2:07
    நாம் மேலோட்டமாகத்தான் இதுபற்றிப் பார்த்துக் கொண்டுள்ளோம்.
  • 2:07 - 2:10
    இந்தக் கிருமிகள் என்றால் என்ன அவை எவ்வாறு
  • 2:10 - 2:15
    விருத்தி செய்துகொள்கிறது என்பதைத்தான்
  • 2:15 - 2:15
    பார்க்கப்போகிறோம்.
  • 2:15 - 2:17
    மேலும் இதைப்பற்றி நிறைய அடுத்து வரும் காணொளிகளிலும் பார்ப்போம்.
  • 2:17 - 2:19
    கிருமிகள் உலகில், அவைகள் பெருக்கமடைய
  • 2:19 - 2:22
    சாதகமான வழிகள் இருக்கின்றன என
  • 2:22 - 2:23
    நான் சந்தேகிக்கிறேன்.
  • 2:23 - 2:25
    ஆனால் இதற்கு உண்மையான காரணம் புரதம்தான்.
  • 2:25 - 2:27
    இந்த புரத காப்ஃசிட், புரதங்கள்
  • 2:27 - 2:29
    சேர்ந்துதான் உண்டாகிறது.
  • 2:29 - 2:31
    உள்ளே இருப்பது மரபணுப் பொருள். ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலம்
  • 2:31 - 2:34
    அல்லது ரைபோகரு அமிலம்
  • 2:34 - 2:36
    இப்பொழுது அந்த மரபணுப் பொருளை வரைகிறேன்.
  • 2:36 - 2:38
    புரதம் வெளிப்படையாகத் தெரியாது.அப்படித் தெரிந்தால்
  • 2:38 - 2:43
    அதனுள் இருக்கும் மரபணுப் பொருள்களைப் பார்க்கமுடியும்.
  • 2:43 - 2:48
    கேள்வி என்னவென்றால் இவற்றிற்கு உயிர் உண்டா?
  • 2:48 - 2:50
    பார்க்கப் போனால் உயிரற்றதாகத்தான் தெரிகிறது.
  • 2:50 - 2:51
    இதற்கு வளர்ச்சி இல்லை
  • 2:51 - 2:52
    .மாற்றம் இல்லை.
  • 2:52 - 2:53
    எந்த வளர்ச்சிதைவு மாற்றமும் இல்லை.
  • 2:53 - 2:55
    அதன் வழியில் இருந்து
  • 2:55 - 2:56
    கொள்கிறது.இது எப்படி என்றால் மேசைமேல்
  • 2:56 - 3:00
    வைக்கப்பட்ட ஒரு புத்தகம் எப்படி அதே இடத்தில் அப்படியே இருக்கிறதோ
  • 3:00 - 3:01
    அப்படி இருந்து கொள்கிறது
  • 3:01 - 3:02
    எதையும் மாற்றுவது இல்லை.
  • 3:02 - 3:07
    இப்படி இதைப்பற்றிக் கூறுவதால் சர்ச்சை எழுகிறது.
  • 3:07 - 3:08
    நான் என்ன சொல்கிறேனென்றால்,சால் ,நீங்கள் இம்முறையில்
  • 3:08 - 3:11
    இதை வரையறை செய்யும்பொழுது என்ன புரிகிறது என்றால் சில கொத்தான மூலக்கூறுகள்
  • 3:11 - 3:12
    ஒன்றாகச் சேர்வதால் அவற்றிற்கு உயிர்வடிவம் கிடையாது என்பது.
  • 3:12 - 3:14
    ஆனால், நாம் உயிர்வடிவம் என்று கருதுவதின் மீது அது தொடர்பு
  • 3:14 - 3:17
    கொள்ளும்போது அதற்கு திடீரென்று
  • 3:17 - 3:18
    உயிர்வந்துவிடுவது போல் தோன்றுகிறது.
  • 3:18 - 3:22
    ஆகையால்,கிருமிகள் என்ன செய்கிறது என்றால்
  • 3:22 - 3:25
    ஒரு அணுவுடன் ஒட்டிக்கொள்கிறது.
  • 3:25 - 3:29
    இதைக் கொஞ்சம் சிறியதாக வரைகிறேன்.
  • 3:29 - 3:30
    இதுதான் நான் வரைந்துள்ள கிருமி.
  • 3:30 - 3:33
    இதை ஒரு அறுகோணத்தைப் போன்று வரைகிறேன்.
  • 3:33 - 3:35
    இது என்ன செய்கிறது என்றால் ஒரு செல்லுடன் ஒட்டிக்கொள்கிறது.
  • 3:35 - 3:36
    எம்மாதிரியான செல்லுடனும் ஒட்டிக்கொள்கிறது.
  • 3:36 - 3:39
    பாக்டிரியாவின் செல்லாக இருக்கலாம்,ஒரு மரத்தின் செல்லாக இருக்கலாம்
  • 3:39 - 3:41
    மனிதனின் செல்லாகக் கூட இருக்கலாம்.
  • 3:41 - 3:44
    ஒரு செல்லின் படத்தை இங்கு வரைகிறேன்.
  • 3:44 - 3:49
    செல்கள் கிருமிகளைவிடப் பெரியதாகவே இருக்கும்.
  • 3:49 - 3:52
    மென்மையான சவ்வுகளைக் கொண்ட செல்களில்
  • 3:52 - 3:54
    உள்ளே நுழைய கிருமிகள் வழி கண்டுபிடிக்கும்.
  • 3:54 - 3:59
    சிலநேரங்களில் செல்களுடன் அப்படியே ஒன்று சேர்ந்துவிடும்.
  • 3:59 - 4:01
    ஆனால்,நான் இந்தப் பிரச்சனையைச் சிக்கலாக்க விரும்பவில்லை.
  • 4:01 - 4:02
    சிலநேரங்களில் அவைகளைச் சுற்றி மென்மையான சவ்வுகள் உண்டாகிறது.
  • 4:02 - 4:04
    ஒரு வினாடி நேரம் இவைகளுக்கு இந்தச் சவ்வுகளை
  • 4:04 - 4:05
    எப்படிப் பெறுகின்றன எனப் பார்ப்போம்.
  • 4:05 - 4:08
    கிருமிகளுக்கு அவைகளின் சவ்வுகளே இருக்கிறது.
  • 4:08 - 4:11
    அந்தக் கேப்ஃசிட்டைச் சுற்றி
  • 4:11 - 4:13
    இந்தச் சவ்வுகள் செல்களில் ஒட்டி இணைகிறது.
  • 4:13 - 4:17
    அதன்பின் கிருமிகள் செல்களுக்குள் நுழைகிறது.
  • 4:17 - 4:18
    இது ஒரு முறை.
  • 4:18 - 4:20
    வேறொரு முறை ஆனால் எப்பொழுதும்
  • 4:20 - 4:21
    இதே வழியில் நடக்காது.
  • 4:21 - 4:24
    வேறொரு வழி என்னவென்றால்
  • 4:24 - 4:27
    கிருமிகள்,செல்களில் உள்ள புரத உணர்பொறிகளை
  • 4:27 - 4:30
    சரிகட்டி சமாதானப்படுத்திவிடுகிறது.
  • 4:30 - 4:32
    ட்ரோஜன் குதிரை வகை விசயமாகிவிடுகிறது.
  • 4:32 - 4:34
    செல்களுக்கு இந்தக் கிருமிகள் தேவையில்லை.
  • 4:34 - 4:36
    எப்படியோ இந்தக் கிருமிகள் செல்களை அவைகள் அயல்துகள்கள் இல்லை
  • 4:36 - 4:38
    என்று சரிகட்டி சமாதானப்படுத்துகிறது.
  • 4:38 - 4:42
    கிருமிகள் வேலை செய்யும்விதத்தைப்பற்றி நூற்றுக்கணக்கான காணொளிகளை நம்மால்
  • 4:42 - 4:43
    தயாரிக்க முடியும்.அவைகளைப் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டே உள்ளன.
  • 4:43 - 4:48
    சில நேரங்களில் கிருமிகள் செல்களால்
  • 4:48 - 4:48
    உட்கொள்ளப்படுகின்றன.
  • 4:48 - 4:50
    அப்பொழுது அந்த செல் இவை உட்கொள்ளக்கூடியவை
  • 4:50 - 4:51
    என எண்ணியிருக்கலாம்.
  • 4:51 - 4:53
    இவ்வாறு செல் அதை மூடிக்கொள்கிறது.
  • 4:57 - 4:59
    பின், பக்கங்கள் ஒன்றாகிவிடுகிறது.
  • 4:59 - 5:02
    கிருமிகள் இப்பொழுது உள்ளே நுழைந்து விடுகிறது.
  • 5:02 - 5:03
    இதற்கு உயிரணு உள்வாங்கல் என்று பெயர்.
  • 5:03 - 5:04
    இதைப்பற்றி இப்பொழுது கூறுகிறேன்.
  • 5:04 - 5:07
    குழியமுதலுருவிற்குள் இது செல்கிறது.
  • 5:07 - 5:11
    கிருமிகளுக்கு மட்டும் இது ஏற்படாது.
  • 5:11 - 5:13
    செல்லினுள் நுழைவதற்கு இது ஒரு முறை.
  • 5:13 - 5:17
    செல்லைப்பற்றிப் பார்க்கும்பொழுது உதாரணத்திற்கு
  • 5:17 - 5:20
    பாக்டீரியாக்களை எடுத்துக் கொள்வோம்.
  • 5:20 - 5:26
    இந்தச் செல்லுக்கு கடினமான சவ்வு இருப்பதால்,
  • 5:26 - 5:29
    இதற்கு நல்ல நிறம் கொடுக்கிறேன்.
  • 5:29 - 5:31
    இங்கிருப்பது பாக்டீரியா.இதற்குக் கெட்டியான மேல் ஒடு இருக்கிறது.
  • 5:31 - 5:33
    கிருமிகளால் இதற்குள் நுழையவே முடியாது.
  • 5:33 - 5:36
    செல்லின் வெளிப்பாகத்தில் இப்படித்தான் தொங்கிக் கொண்டிருக்க வேண்டும்.
  • 5:36 - 5:38
    தோராயமாக , அளவெடுக்காமல் வரைந்தது.
  • 5:38 - 5:41
    ஆனாலும் அவைகளின் மரபுப்பொருளை அதனுள் செலுத்துகிறது.
  • 5:41 - 5:44
    ஆகவே,கிருமிகள் , செல்லினுள் நுழைவதற்கு பலவிதமான
  • 5:44 - 5:46
    வழிகள் உள்ளன என்பது தெளிவாகத் தெரிகிறது.
  • 5:46 - 5:47
    ஆனால்,இது இங்கு முக்கியமான விசயம் இல்லை.
  • 5:47 - 5:49
    இதில் சுவாரஸ்யமான விசயம் என்னவென்றால் கிருமிகள் செல்லினுள் நுழைகிறது.
  • 5:49 - 5:52
    செல்லினுள் நுழைந்தவுடன் அவைகள் தங்களின்
  • 5:52 - 5:55
    மரபுப்பொருளை வெளிவிடுகிறது.
  • 5:55 - 5:57
    ஆக,அதன் மரபுப்பொருள் செல்லினுள் மிதந்து கொண்டிருக்கிறது.
  • 5:57 - 6:01
    அவைகளின் மரபுப்பொருள் ரைபோகருஅமிலத்தைப் போல் இருந்தால்
  • 6:01 - 6:06
    அவைகள் இயற்கையாகவே பிழைத்திருக்க பலவிதமான
  • 6:06 - 6:08
    சாத்தியக்கூறுகள் இருப்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது
  • 6:08 - 6:09
    நாம் இன்னும் அதைக் கண்டுபிடிக்கவில்லை.
  • 6:09 - 6:12
    ஆனால் ,நாம் முன்பே கண்டுபிடித்தவை இவ்வாறுதான்
  • 6:12 - 6:14
    சாத்தியமான வழியில் போய்க்கொண்டிருக்கிறது.
  • 6:14 - 6:21
    ஆகவே,அவைகளுக்கு ரைபோகருஅமிலம்
  • 6:21 - 6:23
    இருந்தால்,அவை உடனே செயலில் இறங்குகிறது.
  • 6:23 - 6:26
    இது செல்லின் உட்கரு.
  • 6:26 - 6:29
    இது செல்லின் உட்கரு.இதில் சாதாரணமாக
  • 6:29 - 6:29
    ஆக்ஸிஜனற்ற ரைபோ அமிலம் இருக்கும்.
  • 6:29 - 6:31
    ஆக்ஸிஜனற்ற ரைபோ அமிலத்திற்கு வேறு நிறம் கொடுக்கிறேன்.
  • 6:31 - 6:37
    ஆக்ஸிஜனற்ற ரைபோ அமிலத்தின் வேறுபிரதிதான் ரைபோகரு அமிலம்.
  • 6:37 - 6:40
    இது சாதாரணமாக வேலை செய்யக் கூடிய செல்.
  • 6:40 - 6:44
    கருவில் உள்ள ரைபோகரு அமிலம் அங்கிருந்து
  • 6:44 - 6:47
    ரைபோசோம்களுக்குச் செல்கிறது. அங்கு அவை
  • 6:47 - 6:49
    புரதங்களைத் தயார் செய்கிறது.
  • 6:49 - 6:51
    ரைபோகரு அமிலத்தில் வெவ்வேறு புரதங்களுக்கான குறியீடுகள் உள்ளன.
  • 6:51 - 6:54
    வேறொரு காணொளியில் இதைப்பற்றிக் கூறுகிறேன்.
  • 6:54 - 6:57
    இவ்வாறு இந்தப் புரதங்கள் உண்டாகி பலவிதமான
  • 6:57 - 6:59
    அமைப்புக்களில் செல்லினுள் இருக்கின்றன.
  • 6:59 - 7:03
    இப்பொழுது இந்தக் கிருமிகள் என்ன செய்கிறது என்றால்
  • 7:03 - 7:04
    இந்தச் செயல்முறையை அப்படியே தனதாக்கிக் கொள்கிறது.
  • 7:04 - 7:09
    கிருமிகளில் இருக்கும் ரைபோகருஅமிலம் செல்லினுள்
  • 7:09 - 7:09
    இருந்த ரைபோகருஅமிலம் செய்வதைப் போல் செய்ய ஆரம்பிக்கிறது.
  • 7:09 - 7:11
    அதன் சொந்தப் புரதங்களுக்கு குறியீடுகளை தயார் செய்கிறது.
  • 7:11 - 7:12
    ஆனால்,இவைகள் அதே குறியீடுகளை
  • 7:12 - 7:13
    உண்டாக்காது.மாறாக இவைகள் உண்டாக்கும்
  • 7:13 - 7:16
    முதல் புரதங்களில் அதன் குறியீடுகள் ஆக்ஸிஜனற்ற
  • 7:16 - 7:20
    கருஅமிலத்தையும் ரைபோகரு அமிலத்தையும் அழிப்பவையாக இருக்கும்.
  • 7:20 - 7:20
    இல்லாவிடில் இவைகளுடன் போட்டியிடவேண்டியிருக்கும்.
  • 7:20 - 7:22
    தங்களுடைய புரதங்களை அவைகளே குறியீடிட்டுக் கொள்கின்றன.
  • 7:22 - 7:27
    இந்த புரதங்கள் தங்கள் வேலையை ஆரம்பிக்கின்றன.
  • 7:27 - 7:32
    இந்தப் புரதங்கள் நிறைய அளவில் வைரஸ்களை
  • 7:32 - 7:34
    உண்டாக்குகிறது. அதே சமயம் கிருமியில் உள்ள
  • 7:34 - 7:36
    ரைபோகரு அமிலம் நகலுருவாக்கலை தொடருகிறது.
  • 7:36 - 7:40
    இதில் உள்நுழைந்த செல்லின் செயல்முறையைத்
  • 7:40 - 7:41
    தனதாக்கி வேலையைத் தொடர்கிறது.
  • 7:41 - 7:44
    ஒரு முறை செல்லுக்குள் நுழைந்தால் அங்கிருக்கும்
  • 7:44 - 7:47
    செயல்முறையை பிரதியெடுத்து அதைத் தன்வழியில் பயன்படுத்திக் கொள்கிறது.
  • 7:47 - 7:51
    இவற்றின் உயிர்வேதியல் திகைப்பாக உள்ளது.
  • 7:51 - 7:55
    பிறகு இந்த ரைபோகரு அமிலங்கள்
  • 7:55 - 7:57
    கேப்சிட்டுக்குள் வருகிறது.
  • 7:57 - 8:00
    இவை நிறைய வந்து சேர்ந்தவுடன் செல்லின்
  • 8:00 - 8:06
    ஆதாரங்கள் குறைந்து விடுகிறது.
  • 8:06 - 8:10
    செல்லின் செயல்முறையை பிரதியெடுத்துப்
  • 8:10 - 8:15
    பெருகிய இந்த சுதந்திரமான கிருமிகள்
  • 8:15 - 8:17
    செல்லைவிட்டு வெளியேற வழி கண்டுபிடிக்கிறது.
  • 8:17 - 8:21
    இதை நான் குறிப்பாகச் சொல்லவில்லை
  • 8:21 - 8:23
    .ஏனெனில் இன்னும் கண்டுபிடிக்காத கிருமிகள் நிறைய உள்ளன.
  • 8:23 - 8:27
    ஆனால் இவை பற்றி அதிகம் பேசப்படுவது என்னவென்றால்
  • 8:27 - 8:29
    இவைகள் அதிகமானவுடன் புரதங்களை
  • 8:29 - 8:31
    வெளிவிடும் அல்லது அமைக்கும்.
  • 8:31 - 8:32
    தாங்களே சொந்தமாக உருவாக்காது.
  • 8:32 - 8:36
    இதன் காரணமாக ஒன்று செல்கள் தாங்களாகவே மடிந்து விடும்
  • 8:36 - 8:37
    அல்லது அதன் சவ்வு உறைகள் கரைந்துவிடும்.
  • 8:37 - 8:39
    ஆகையால் அதன் சவ்வு உறைகள் கரைந்துவிடும்.
  • 8:39 - 8:41
    அடிப்படையில் செல்கள் சிதைந்துவிடும்.
  • 8:41 - 8:42
    இதை இங்கு எழுதுகிறேன்.
  • 8:42 - 8:44
    செல் சிதைவுகள்.
  • 8:44 - 8:46
    சிதைவு என்றால் அந்த செல்லின் சவ்வுகள்
  • 8:46 - 8:47
    மறைந்துவிடும்.
  • 8:47 - 8:50
    உள்வந்த கிருமிகள் இப்பொழுது தங்களை வெளிப்படுத்துகின்றன.
  • 8:50 - 8:53
    நான் முன்பு கூறியதுபோல் சிலவற்றிற்கு அவைகளைச்
  • 8:53 - 8:55
    சுற்றி அவைகளின் சவ்வே இருக்கும்.
  • 8:55 - 8:57
    ஆனால்,இம்மாதிரியான சவ்வுகளை அவைகள்
  • 8:57 - 8:58
    எங்கிருந்து பெற்றன?
  • 8:58 - 9:01
    சில என்ன செய்கின்றன என்றால் செல்லினுள் நுழைந்து பிரதியெடுத்தல்
  • 9:01 - 9:07
    முடிந்ததும் செல்களை மாய்க்காமல் செல்சிதைவைக்கூட
  • 9:07 - 9:09
    ஏற்படுத்தாமல் செல்லில் இருந்து வெளியேறிவிடுகின்றன.
  • 9:09 - 9:12
    நான் கூறியவையெல்லாம் ஒரு வைரஸ் எப்டியெல்லாம்
  • 9:12 - 9:12
    உள்நுழைந்து வேலை செய்கிறது என்பது பற்றி.
  • 9:12 - 9:16
    வைரஸ்கள் ஆராயும் தன்மை கொண்டதாக உள்ளது.
  • 9:16 - 9:18
    பலவிதமான வைரஸ்கள் பலவிதமான கலப்பில்
  • 9:18 - 9:23
    நகல்எடுத்து ,புரதங்களுக்கும் குறையீடிகளை உருவாக்கி பின்
  • 9:23 - 9:23
    செல்லில் இருந்து தப்பிவிடுகிறது.
  • 9:23 - 9:25
    இவற்றில் சில வெறும் துளிர்தான்.
  • 9:25 - 9:27
    அவைகள் பின் எப்படி செல்லின் சவ்வுகளைத்
  • 9:27 - 9:28
    தள்ளிக்கொண்டிருக்கும் என்பதை உங்களால்
  • 9:28 - 9:30
    கற்பனை செய்யமுடியும் என நினைக்கிறேன்.
  • 9:30 - 9:31
    நான் செல் சுவர் என்று சொல்லக்கூடாது.
  • 9:31 - 9:33
    செல்லின் வெளிப்புறச் சவ்வு.
  • 9:33 - 9:36
    அவைகள் சவ்வுகளை வெளித்தள்ளும்போது சவ்வுகளைக்
  • 9:36 - 9:38
    கொஞ்சம் அவைகளுடன் எடுத்துக் கொள்கிறது.
  • 9:38 - 9:41
    செல்களைவிட்டு வெளியேறும்போது
  • 9:41 - 9:44
    அவைகளுக்கு உறைபோல்
  • 9:44 - 9:45
    அந்த ச் சவ்வு இருக்கிறது.
  • 9:45 - 9:47
    அந்தச் சவ்வு அதனுடன் ஒட்டியிருப்பது ஏன்
  • 9:47 - 9:49
    அவைகளுக்கு உபயோகமாக இருக்கிறது என்றால்
  • 9:49 - 9:51
    செல்களின் சவ்வை அவை கொண்டுள்ளதால் செல்களின்
  • 9:51 - 9:53
    உருவத்தைக் கொண்டுள்ளதுபோல் ஒரு தோற்றம்.
  • 9:53 - 9:55
    ஆகவே,அது வேறொரு செல்லைத் தாக்கும்பொழுது
  • 9:55 - 9:59
    அது அயல்பொருளாகத் தெரியாது.
  • 9:59 - 10:03
    அதன் உண்மைத் தோற்றத்தில் இல்லாமல் வேறொன்றாக இருப்பது
  • 10:03 - 10:03
    அதற்குச் சாதகமாக உள்ளது.
  • 10:03 - 10:07
    இது உங்களுக்கு அசுவாரஸ்யமான விசயமாக இருக்காது .
  • 10:07 - 10:11
    அது இன்னொரு உயிரினத்தின் ஆக்ஸிஜனற்ற கருஅமிலத்தை தனதாக்கிக் கொண்டு அந்த
  • 10:11 - 10:15
    உயிரினத்தின் ஆக்ஸிஜனற்ற கருஅமிலத்தையே மாற்றிவிடுகிறது.
  • 10:15 - 10:19
    இதற்குப் பொதுவான உதாரணம் எச் ஐ வி வைரஸ்.
  • 10:19 - 10:21
    இதை இங்கு எழுதுகிறேன்.
  • 10:21 - 10:27
    எச் ஐ வி வைரஸ்என்பது மீள்ஊட்டு நச்சு உயிரி ஆகும்
  • 10:27 - 10:28
    .இதைப்பற்றியதும் சுவாரஸ்யமாக இருக்கும்.
  • 10:28 - 10:32
    அவைகள் என்ன செய்கிறது என்றால் அவைகளிலும் ரைபோகரு அமிலம் இருக்கும்.
  • 10:36 - 10:38
    அவை செல்லுக்குள்
  • 10:38 - 10:39
    நுழைகிறது.
  • 10:39 - 10:43
    செல்லுக்குள் அவை இப்படி இருக்கிறது.
  • 10:43 - 10:47
    அவை அப்பொழுது ஒரு புரதத்துடன் உள் நுழைகிறது.
  • 10:47 - 10:50
    ஒவ்வொரு முறையும் நீ சொல்கிறாய்
  • 10:50 - 10:51
    இந்தப் புரதத்தை அவைகள் எங்கிருந்து பெறுகின்றன?
  • 10:51 - 10:54
    மற்ற செல்களிடமிருந்து அமினோஅமிலங்கள்,ரைபோசோம்.கருஅமிலம்
  • 10:54 - 10:57
    இவற்றைப் பெற்று அவைகளே புரதங்களை தயாரிக்கின்றன.
  • 10:57 - 10:59
    ஆகவே,எந்தப் புரதங்கள் அவைகளிடம் இருந்தாலும் அவைகளை மற்ற
  • 10:59 - 11:00
    செல்களிடமிருந்துதான் பெறுகிறது.
  • 11:00 - 11:05
    ஆனால் அவை புரதத்தை ரிவேர்சு ட்ரன்ஸ்கரிப்டாகக் கொண்டுவருகிறது.
  • 11:05 - 11:08
    அவைகளின் ரைபோகரு அமிலத்தை எடுத்து கட்டளைகளைக் கொடுத்து
  • 11:08 - 11:11
    ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலத்தில் வைக்கிறது.
  • 11:11 - 11:15
    ரைபோகரு அமிலம் ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலமாகிறது.
  • 11:15 - 11:17
    முதன் முதலில் இதைக் கண்டுபிடித்தபொழுது
  • 11:17 - 11:20
    ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலத்தில் இருந்து ரைபோகரு அமிலத்திற்குச் செல்வதாக நினைத்தனர்.
  • 11:20 - 11:22
    ஆனால் இது அந்த முன்உதாரணத்தை மாற்றுகிறது ஆனால் கட்டளைகள் ரைபோகரு.
  • 11:22 - 11:24
    அமிலத்திலிருந்து ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலத்திற்குச் செல்கிறது.
  • 11:24 - 11:29
    ஒருவேளை அது தவறில்லையென்றால் அந்த ஆக்ஸிஜனற்ற ரைபோகரு
  • 11:29 - 11:31
    அமிலத்தை அதுஉள் நுழைந்த செல்லின் ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலத்துடன் இணைந்துவிடும்.
  • 11:31 - 11:34
    ஆகவே,அந்த ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலமானது விருந்துவழங்கி உயிரணுவின்
  • 11:34 - 11:35
    ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலத்துடன் சேர்ந்துவிடும்.
  • 11:35 - 11:38
    இங்கு மஞ்சள் நிறம் விருந்து வழங்கி செல்லின் ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலம்.
  • 11:38 - 11:41
    இது அதன் உட்கரு.
  • 11:41 - 11:44
    எங்கெல்லாம் வைரஸ் தொற்றுகிறதோ அங்கெல்லாம்
  • 11:44 - 11:46
    அவைகள் மரபணுவை குழப்புகிறது.
  • 11:46 - 11:52
    ஒவ்வொரு மனிதசெல்லிலும் 20பாக்டீரியா செல்கள் இருக்கின்றன
  • 11:52 - 11:54
    என்று பாக்டீரியா பற்றிய காணொளியில் நான் கூறினேன்
  • 11:54 - 11:56
    அவை நம்முடன் வாழ்கின்றன.நமக்கு உபயோகமாக இருக்கின்றன.
  • 11:56 - 12:00
    நம்மில் ஒரு சிறு பகுதியாக இருக்கின்றன.
  • 12:00 - 12:02
    இவ்வாறு அவை நம்மில் கலந்துள்ளன
  • 12:02 - 12:04
    நம்மை அவைகள் மாற்றாது.
  • 12:04 - 12:07
    ஆனால் இந்த மீள் ஊட்டு நச்சுயிரிகள் நம் மரபணு
  • 12:07 - 12:08
    அமைப்பையே மாற்றிவிடுகின்றன.
  • 12:08 - 12:11
    மரபணுக்கள் எனக்கு முக்கியமானவை.ஏனெனில்
  • 12:11 - 12:12
    அவை நான் யாரென்று வரையறுக்கிறது.
  • 12:12 - 12:15
    இந்த மீள் ஊட்டு நச்சுயிரிகள் உடலினுள் சென்று என்னுடைய
  • 12:15 - 12:16
    மரபணுவின் அமைப்பையே அழிக்கப்பார்க்கிறது.
  • 12:16 - 12:19
    அவைகள் ஆக்ஸிஜனற்ற ரைபோகருஅமிலத்துடன் சேர்ந்து அதன் பகுதியாக மாறுகிறது.
  • 12:19 - 12:25
    பின் எப்பொழுதும்போல் இயற்கையாக உள்ள ஆக்ஸிஜனற்ற ரைபோகருஅமிலம்
  • 12:25 - 12:27
    ரைபோகருஅமிலமாகி உண்மையான புரதத்தைத் தயாரித்து அதற்கான
  • 12:27 - 12:30
    கட்டளைகளை தயாரிக்கிறது.சில நேரங்களில்
  • 12:30 - 12:31
    செயலற்று எதுவும் செய்யாமல் இருக்கும்.
  • 12:31 - 12:34
    சில வேளைகளில் சுற்றுச்சூழல் தூண்டுதலால்
  • 12:34 - 12:36
    தூண்டப்பட்டு தன்னுடைய மரபுக்குறியீடுகளை
  • 12:36 - 12:37
    உருவாக்க ஆரம்பித்துவிடும்.
  • 12:37 - 12:39
    நிறைய உற்பத்தி செய்ய ஆரம்பித்துவிடும்.
  • 12:39 - 12:42
    அந்த உயிரினத்தின் ஆக்ஸிஜனற்ற கருஅமிலத்திலிருந்தே
  • 12:42 - 12:43
    அவற்றை உண்டாக்கும்.
  • 12:43 - 12:45
    அவை அந்த உயிரினத்தின் ஒரு பகுதியாகவே மாறிவிடுகிறது.
  • 12:45 - 12:49
    ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலத்தின் பகுதியாக இருப்பதைவிட
  • 12:49 - 12:52
    அந்த உயிரினத்தின் பகுதியாக இருப்பது நெருக்கமான வழி என நினைக்கிறேன்.
  • 12:52 - 12:53
    ஒரு உயிரினத்தை வரையறுக்க இதைவிட
  • 12:53 - 12:56
    வேறுவழியைக் கற்பனைசெய்யமுடியவில்லை.
  • 12:56 - 13:01
    இங்கு என்ன கருத்து என்றால் ஆக்ஸிஜனற்ற
  • 13:01 - 13:07
    ரைபோகரு அமிலத்தின் ஒரு பகுதி ஆகி அதற்குச்
  • 13:07 - 13:09
    சார்பான ஒரு வைரசாக இருக்கிறது.
  • 13:13 - 13:17
    இம்மாதிரி அவை இல்லாவிட்டால் என்னுடைய
  • 13:17 - 13:24
    மூக்கில் உள்ள செல்களை தாக்கும்.கையில் உள்ள
  • 13:24 - 13:27
    செல்களைத் தொற்றும்.ஏன் அணுப்பிளவுகளையே உண்டாக்கும்.
  • 13:27 - 13:29
    ஆனால் அவர்களின் குழந்தைகளும் அந்த கிருமிகள் கலந்த
  • 13:29 - 13:31
    ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலத்தைத்தான் கொண்டிருக்கும்.
  • 13:31 - 13:32
    இது பரவாயில்லை.ஏனெனில் குழந்தைகளுக்கு
  • 13:32 - 13:33
    எந்த பாதிப்பும் வராது.
  • 13:33 - 13:36
    நல்லவேளையாக இனங்களின் பகுதியாக மாறாது.
  • 13:36 - 13:39
    உடலியலுக்குரிய உயிரணுக்களைத்தான் தொற்றவேண்டும் என்றில்லை.
  • 13:39 - 13:41
    கருவணுவைக் கூடத் தொற்றும்.
  • 13:41 - 13:45
    ஆகையால் ,இது கருவணுவுக்குள் செல்கிறது.
  • 13:45 - 13:47
    கருவணுக்கள்தான் பாலணுவை உற்பத்தி செய்கிறது.
  • 13:47 - 13:49
    என்பதுபற்றி நமக்கு முன்பே தெரியும். ஆணைப் பொருத்தவரை விந்து,
  • 13:49 - 13:53
    பெண்ணைப் பொருத்தவரை முட்டையையும் உற்பத்திசெய்கிறது.
  • 13:53 - 13:55
    ஒருமுறை கருவணுவை அது தொற்றினால்
  • 13:55 - 13:59
    கருவணுவின் ஆக்ஸிஜனற்ற ரைபோஅமிலத்தின் ஒரு பகுதியாகி
  • 13:59 - 14:03
    பின் பிள்ளைகளுக்கும் அது போய்ச் சேரும்.
  • 14:03 - 14:06
    பிள்ளைகள் எதிர்காலத்தில் தன் பிள்ளைகளுக்கு அதை மாற்றம் செய்வார்கள்.
  • 14:06 - 14:10
    இந்தக் கருத்து என் மனத்தில்
  • 14:10 - 14:12
    கொஞ்சம் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
  • 14:12 - 14:16
    பொதுவாக என்ன மதிப்பீடு செய்கிறார்கள்
  • 14:16 - 14:19
    என்றால் நம் உடலில் 5-8% கிருமிகள் உள்ளதாகக்
  • 14:19 - 14:27
    கணக்கிடுகிறார்கள்.
  • 14:27 - 14:30
    நமது உடலில் எவ்வாறு பாக்டீரியாக்கள் இருந்து கொண்டுள்ளன
  • 14:30 - 14:31
    என்பது பற்றி முன்பே கூறியுள்ளேன்.
  • 14:31 - 14:33
    சமீபத்திய இந்தக் கணக்கீட்டை நான் பலமுறைப் பார்த்துள்ளேன்.
  • 14:33 - 14:35
    சில இடங்களில் 5% சில இடங்களில் 8%
  • 14:35 - 14:36
    என யூகிக்கிறேன்.எதை ஆதாரமாகக் கொண்டு இதைத் தீர்மானிக்கிறார்கள் என்றால்
  • 14:36 - 14:38
    ஆக்ஸிஜனற்ற ரைபோ கருஅமிலத்தை எடுத்து மற்ற உயிரினங்களில்
  • 14:38 - 14:41
    உள்ள ஆக்ஸிஜனற்ற ரைபோ கருஅமிலத்துடன் ஒப்பிடுகிறார்கள்.
  • 14:41 - 14:47
    மனிதமரபணுவில் 5-8% கிருமிகளிடமிருந்து வந்தவை எனக் கணக்கிட்டுள்ளார்கள்.
  • 14:47 - 14:52
    இந்தக் கிருமிகள் ஆரம்பகாலத்தில் மீள்ஊட்டு நச்சுயிரிகளிலிருந்து
  • 14:52 - 14:54
    வந்தவை.மனித உடலில் ஐக்கியமாகி
  • 14:54 - 14:56
    அவனுடைய ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலத்துடன் சேர்ந்து கொண்டது.
  • 14:56 - 14:58
    இவைகள் உட்புறமீள்ஊட்டு நச்சுயிரிகள்.
  • 15:05 - 15:07
    இந்த விசயங்கள் பிரமிக்க வைக்கின்றன.ஏனெனில் இவைகள் நம் உடலுக்குள்ளேயே இருக்கின்றன.
  • 15:07 - 15:09
    வெறுமனே இருக்கலாம்.நமக்கு உதவலாம்.
  • 15:09 - 15:10
    தீங்கும் செய்யலாம்.
  • 15:10 - 15:14
    ஆக்ஸிஜனற்ற ரைபோ கருஅமிலத்த்தில் 5-8% இந்தக் கிருமிகள்தான்
  • 15:14 - 15:16
    இருக்கின்றன என்று கூறப்படுகிறது.
  • 15:16 - 15:18
    வேறொரு விசயம் இங்கு பேசப்படுவது
  • 15:18 - 15:20
    என்னவென்றால் மரபணு மாற்றம் பற்றியது.
  • 15:20 - 15:24
    கிருமிகள் என்ன செய்கிறது என்றால் ஆக்ஸிஜனற்ற ரைபோ கருஅமிலத்த்தில்
  • 15:24 - 15:28
    கிடைமட்ட பரிமாற்றத்தை ஏற்படுத்துகிறது.
  • 15:28 - 15:30
    கிருமிகள் ஒரு இனத்தில் இருந்து இன்னொரு இனத்திற்கு செல்வதைப் பற்றி
  • 15:30 - 15:37
    நீ கற்பனை செய்யலாம். இனம் A ல் இருந்து . இனம் B க்குச் செல்வதைப் போல்
  • 15:37 - 15:41
    இப்பொழுது அது மாற்றம் அடைந்து செல்லுக்குள் ஊடுருவுகிறது.
  • 15:41 - 15:44
    இந்தச் செயல்முறையின்போது அதனிடம் முன்பே உள்ள ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலத்துடன்
  • 15:44 - 15:45
    மேலும் கொஞ்சம் எடுத்துக் கொள்கிறது அல்லது தயாரிக்கிறது.
  • 15:45 - 15:48
    சில நேரங்களில் மற்றவைகளுக்காக இவை மரபணுக்கட்டளைகளை தயாரிக்கிறது.
  • 15:48 - 15:53
    இங்கு உள்ளவை ஆதரவான கிருமிகள்.
  • 15:53 - 15:56
    ஊதா நிறத்தில் இருப்பவை உண்மையான கிருமிகள்.
  • 15:56 - 16:01
    மஞ்சள் நிறத்தில் இருப்பவை உயிரினத்தின் ஆரம்ப அல்லது வரலாற்று ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலம்.
  • 16:01 - 16:04
    இது மரபணுக் குறியீடுகளை மற்ற உயிரினங்களின் ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலத்திலிருந்து
  • 16:04 - 16:07
    கொஞ்சம் பகிர்ந்து கொள்கிறது.
  • 16:07 - 16:12
    ஆனால் இதில் நிறைய பாகம் கிருமிகளின் ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலம்தான் இருக்கும்.
  • 16:12 - 16:14
    ஆனால் அதை பிரதி எடுத்து மாற்றும்பொழுது
  • 16:14 - 16:17
    முன்பு உயிரினத்தில் இருந்து பகிர்ந்து கொண்ட
  • 16:17 - 16:18
    அச்சிறு பகுதி ஆக்ஸிஜனற்ற ரைபோகரு
  • 16:18 - 16:21
    அமிலத்தையும் பிரதியெடுத்து மாற்றுகிறது.
  • 16:21 - 16:24
    ஒரு உயிரினத்தின் ஆக்ஸிஜனற்ற ரைபோகரு
  • 16:24 - 16:25
    அமிலத்தை வேறொரு உயிரினத்தில் சேர்க்கிறது.
  • 16:25 - 16:27
    ஒரு இனத்தில் உள்ள உறுப்பினருடையதை எடுத்து இன்னொரு
  • 16:27 - 16:28
    இனத்தில் உள்ள ஒரு உறுப்பினருக்கு சேர்த்துகிறது.
  • 16:28 - 16:30
    அப்பொழுது இதில் கலப்பை உண்டாக்குகிறது.
  • 16:30 - 16:33
    கிருமிகள் ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலத்தில் ஒரு இனத்தில்
  • 16:33 - 16:34
    இருந்து இன்னொரு இனத்திற்குத் தாவுகிறது என்ற செய்தியைத் தெரிந்து கொண்டாய்.
  • 16:34 - 16:36
    இனங்களில் ஒன்றோடொன்றுடன் தொடர்பு கொண்டுள்ளது
  • 16:36 - 16:40
    .இந்த விசயத்தில் இதை நான் பாராட்ட வேண்டியதுதான்.
  • 16:40 - 16:42
    இதை நாம் கற்பனை செய்து பார்க்க வேண்டும்.
  • 16:42 - 16:45
    நம்மில் இனப்பெருக்கம் நடைபெறுகிறது.மரபணு
  • 16:45 - 16:46
    மாற்றங்கள் மக்களிடையே ஏற்படுகிறது.
  • 16:46 - 16:50
    ஆனால், கிருமிகள் இந்தக் கிடை மாற்றத்தை நச்சுயிரியூடு
  • 16:50 - 16:53
    பண்பக மாற்றம் மூலம் ஏற்படுத்துகிறது.
  • 16:53 - 16:58
    கிருமிகளின் கிடை மாற்ற நச்சுயிரியூடு பண்பக
  • 16:58 - 17:01
    மாற்றத்தின் போது அது சேர்ந்திருக்கும் உயிரினத்தின்
  • 17:01 - 17:04
    ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலத்தின் ஒரு சிறு
  • 17:04 - 17:06
    பகுதியையும் சேர்த்து அதன் பிரதியாகிறது.
  • 17:06 - 17:09
    அதை அடுத்த உயிரினத்தில் தொற்ற வைக்கிறது.
  • 17:09 - 17:11
    ஆக இந்த ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலம்
  • 17:11 - 17:13
    ஓர் உயிரினத்திலிருந்து இன்னொரு உயிரினத்திற்குத் தாவுகிறது.
  • 17:13 - 17:17
    ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலத்தை ஆதாரமாகக் கொண்ட அனைத்து உயிரினங்களையும்
  • 17:17 - 17:21
    இந்தக் கிரகத்தில் ஒன்றாகச் சேர்த்துகிறது.
  • 17:21 - 17:25
    இந்த விசயங்கள் எல்லாம் எரிச்சல் ஊட்டுபவையாக
  • 17:25 - 17:29
    இருந்தால் இதை பின் வைத்துக் கொள்கிறேன்.
  • 17:29 - 17:31
    ஆனால்,கிருமிகளின் வகைகளைப் பற்றிப்
  • 17:31 - 17:32
    பேசுவதற்கு நிறைய உள்ளது.
  • 17:32 - 17:34
    அதில் உனக்கு சில கலைச்சொற்கள் தெரிந்திருக்க வேண்டும்.
  • 17:34 - 17:38
    பாக்டீரியாக்களை கிருமிகள் அடிக்கடித் தாக்கும்.
  • 17:38 - 17:41
    இவைகளைப் பற்றி நாம் நிறையப் படித்துள்ளோம்.
  • 17:41 - 17:43
    இவைகள் நுண்ணுயிர்க்கொல்லிகளுக்கு ஒரு நல்ல மாற்று.
  • 17:43 - 17:45
    கிருமிகள் தாக்கும் பாக்டீரியாக்கள் சில நேரங்களில்
  • 17:45 - 17:48
    கிருமிகளைவிட வலுவிழந்து இருக்கும்.
  • 17:48 - 17:49
    .அவற்றை கிருமிகள் விழுங்கிவிடும்.
  • 17:53 - 17:55
    இவைகளின் ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலத்தைப் பற்றி முன்பே உங்களிடம் கூறியுள்ளேன்.
  • 17:55 - 17:58
    பாக்டீரியாக்களுக்கு மொத்தமான சுவர்கள் இருப்பதால்
  • 17:58 - 18:01
    ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலத்தை உட்புகுத்திவிடும்.
  • 18:01 - 18:07
    ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலத்தில் எந்த மாற்றத்தையும் உண்டாக்காமல் இருக்கும்
  • 18:07 - 18:09
    கிருமிகளைப் பற்றியும் பேசினோம்.ஆனால் கிருமிகள் அழிக்க ஆரம்பித்தால்
  • 18:09 - 18:11
    அது சிதை சுழற்சி ஆகிறது.
  • 18:11 - 18:14
    உயிரியலில் ஏதாவது தேர்வு எழுதும்பொழுது
  • 18:14 - 18:16
    உனக்கு இந்தத் துறைச்சொல் தேவைப்படலாம்.
  • 18:16 - 18:19
    அந்தக் கிருமிகள் விருந்தாளியின் ஆக்ஸிஜனற்ற
  • 18:19 - 18:22
    ரைபோகரு அமிலத்துடன் சேர்கிறது.அவ்வாறு
  • 18:22 - 18:25
    சேர்ந்து சிறிது காலம் செயலற்று இருக்கிறது.
  • 18:25 - 18:28
    இது நோய் தொற்றும் சுழற்சிக் காலம் ஆகும்.
  • 18:28 - 18:32
    விருந்தாளியின் ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலத்துடன் சேர்ந்த கிருமிகளின்
  • 18:32 - 18:36
    இனப்பெருக்கமும் விருந்தாளியின் இனப்பெருக்கத்துடன் தொடருகிறது.
  • 18:36 - 18:38
    இவை இருக்கும் இந்த உயிரினங்களின் செல்களுக்கு சவ்வு உறை உண்டு.
  • 18:38 - 18:41
    பொதுவாக நோய்தொற்றும் சுழற்சியில்
  • 18:41 - 18:45
    கிருமியின் ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலம்
  • 18:45 - 18:46
    பாக்டீரியாவின் ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலத்தில் செயலற்று இருக்கும்.
  • 18:46 - 18:49
    அல்லது பாக்டீரியாக்களைக் கொல்லும் வைரல் ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலம்
  • 18:49 - 18:51
    பாக்டீரியாவின் ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலத்தில் செயலற்று இருக்கும்.
  • 18:51 - 18:53
    இதைப்பற்றிய ஒரு கருத்தைத் தரவேண்டி நான்
  • 18:53 - 18:59
    விக்கிபீடியாவில் இருந்து இந்த இரண்டு
  • 18:59 - 19:02
    படங்களையும் எடுத்து இங்குப் போட்டுள்ளேன்.
  • 19:02 - 19:03
    ஒன்று சி டி சி யில் இருந்து எடுக்கப்பட்டது.
  • 19:11 - 19:14
    இந்தப் பரப்பின் மேல் பச்சைநிறப் புள்ளிகளைப் பார்க்கிறாய்.
  • 19:14 - 19:18
    இதில் பெரியதாகத் தெரிவது இரத்தத்தின்
  • 19:18 - 19:20
    வெள்ளை அணுக்கள்.
  • 19:20 - 19:22
    இது மனிதனின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் ஒரு பகுதி.
  • 19:22 - 19:23
    இது இரத்தத்தின் வெள்ளை அணு.
  • 19:28 - 19:31
    இரத்தத்தின் வெள்ளை அணுவின் மேற்பரப்பில்
  • 19:31 - 19:35
    இருந்து அரும்பிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறாய்.
  • 19:35 - 19:36
    இது உனக்கு ஒரு அபிப்பிராயத்தைத் தரும்.
  • 19:36 - 19:40
    இவை ஹெச்ஐவி -1 ன் வைரசுகள்.
  • 19:40 - 19:47
    இந்தத்துறைச்சொல் உனக்கு பழக்கப்பட்டவை.ஹெச்ஐவி -1 ன் வைரசுகள்
  • 19:47 - 19:52
    இரத்தத்தின் வெள்ளை அணுக்களைத் தாக்கக்கூடியவை.
  • 19:52 - 19:55
    இவை நோய் எதிர்ப்பு அமைப்பைத் தாக்கி வலுவிழக்கச் செய்யும்போது
  • 19:55 - 19:56
    ஒரு கட்டத்தில் உடலில் இவை உண்டாகும் நோய், எய்ட்ஸ்.
  • 19:56 - 19:59
    இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் துன்பப்படுவார்கள்.
  • 19:59 - 20:01
    நோய்எதிர்ப்பு அமைப்பு வலுவாக உள்ளவர்கள் அதிகம் கஷ்டப்பட மாட்டார்கள்.
  • 20:01 - 20:03
    இவை வெறுப்புண்டாக்கக் கூடியவை.
  • 20:03 - 20:06
    அவை இந்த பெரிய செல்களின் உள்ளே நுழைந்து செல்களின் செயல்முறைகளை தன்னுடைய
  • 20:06 - 20:12
    ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலத்தை தயாரிக்கப் பயன்படுத்துகிறது.
  • 20:12 - 20:14
    அல்லது அதனுடைய ரைபோகரு அமிலம் மற்றும் புரத உறைகளையும் தயாரிக்கிறது.
  • 20:14 - 20:16
    பின் அவை செல்லில் இருந்து அரும்பி அதனுடன் செல்லின்
  • 20:16 - 20:17
    மென்படலத்தையும் கொஞ்சம் சேர்த்துக்கொள்கிறது.
  • 20:17 - 20:21
    தன்னுடைய ஆக்ஸிஜனற்ற ரைபோ கரு அமிலத்தையும்
  • 20:21 - 20:22
    இந்த செல்களின் ஆக்ஸிஜனற்ற ரைபோ கரு அமிலத்துடன் விட்டுச் செல்கிறது.
  • 20:22 - 20:25
    இவ்வாறு செல்லையே மாற்றிவிடுகிறது.
  • 20:25 - 20:27
    இதுவும் ஒரு வெறுப்பூட்டக்கூடிய படம்.
  • 20:27 - 20:28
    இவைகள் பாக்டீரியா விழுங்கிகள்.
  • 20:34 - 20:36
    நான் முன்பு கூறியவற்றை இங்கு நீ பார்க்கிறாய்.
  • 20:36 - 20:38
    இங்கிருப்பது பாக்டீரியா.
  • 20:38 - 20:41
    இது அதனுடைய செல் சுவர்.
  • 20:41 - 20:42
    இது கொஞ்சம் கடினமாக இருக்கும்
  • 20:42 - 20:45
    அதிலிருந்து வெளிவருவதும் கடினம்.
  • 20:45 - 20:47
    அல்லது சவ்வுகளுடன் சேர்ந்து ஒன்றாகவும் முடியாது.
  • 20:47 - 20:52
    ஆகவே,அவை பாக்டீரியாவின் வெளிப்புறம் தொங்கிக்கொண்டிருக்கும்.
  • 20:52 - 20:55
    பின் அவை பாக்டீரியாவின் உட்புறம் நேரிடையாகவே தனது மரபுப்பொருளை உட்செலுத்துகிறது.
  • 20:55 - 20:58
    மரபுப்பொருளை உட்செலுத்துகிறது.
  • 20:58 - 21:00
    அவைகளின் உருவஅமைப்பை வைத்து இதை
  • 21:00 - 21:01
    நீயே கற்பனை செய்து கொள்ளலாம்.
  • 21:01 - 21:02
    இதன் விளக்கம் என்னவென்றால் இது ஒரு செல்.
  • 21:02 - 21:04
    இங்கு இது ஒரு கோள் போன்ற தோற்றத்தைக் கொடுக்கிறது.
  • 21:04 - 21:06
    அல்லது இது பாக்டீரியா.
  • 21:06 - 21:07
    இதனுடன் ஒப்பிடும்போது இவைகள் மிகச் சிறியவை.
  • 21:07 - 21:08
    ஒவ்வொன்றும் பாக்டீரியாவில் 100ல் ஒரு பங்குதான் இருக்கும்.
  • 21:08 - 21:11
    செல்லில் நூறில் ஒரு பங்கு உள்ள விசயத்தைப்
  • 21:11 - 21:11
    பற்றித்தான் இங்கு பேசுகிறோம்.
  • 21:11 - 21:16
    அவைகளை வடிகட்டி நீக்குவது
  • 21:16 - 21:17
    என்பது மிகமிகக் கடினம்.
  • 21:17 - 21:21
    ஏனெனில் அவைகள் மிகமிகச் சிறியவை
  • 21:21 - 21:23
    இவைகள் அயற்பண்புடைய பொருட்கள்.
  • 21:23 - 21:31
    எய்ட்ஸ்,எபோலா,நுரையீரல் அழற்சி நோய் போன்றவற்றை உருவாக்கவே
  • 21:31 - 21:32
    வந்தவை என நீ நினைத்தால் அது சரியே.
  • 21:32 - 21:34
    ஆனால்,இவைகள் பொதுவான விசயங்கள்.
  • 21:34 - 21:35
    எப்படியென்றால் எனக்குச் ஜலதோசம் உள்ளது என்று
  • 21:35 - 21:36
    இந்தக் காணொளியின் ஆரம்பத்தில் கூறினேன்.
  • 21:36 - 21:40
    இதற்குக் காரணம் என்னுடைய நாசியின்யின் திசுக்கள் கிருமிகளால் தாக்கப்பட்டதால்தான்
  • 21:40 - 21:43
    எனக்கு ஜலதோசம் பிடித்தது
  • 21:43 - 21:46
    இதன் காரணமாக எனக்கு மூக்கு ஒழுகிக் கொண்டிருந்தது.இன்னும் சில தொந்தரவுகள்.
  • 21:46 - 21:49
    கிருமிகள் சின்னம்மையை உண்டாக்கும்.
  • 21:49 - 21:51
    ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் என்ற அக்கி நோயை உண்டாக்கும்.
  • 21:51 - 21:52
    சளிகளை உண்டாக்கும்.
  • 21:52 - 21:53
    கிருமிகள் எப்பொழுதும் நம்மைச் சுற்றி இருந்துகொண்டே இருக்கின்றன.
  • 21:53 - 21:56
    நீங்கள் பேசும்பொழுது கண்டிப்பாக கிருமிகள்
  • 21:56 - 21:58
    வெளிவரும் என்பதை உறுதியாகக் கூறுகிறேன்.
  • 21:58 - 21:59
    அவை உன்னைச் சுற்றிலும் இருக்கின்றன.
  • 21:59 - 22:04
    ஆனால்,இது உண்மையில் தத்துவரீதியான
  • 22:04 - 22:06
    ஒரு குழப்பமான கேள்வி. ஏனெனில் நான் ஆரம்பத்தில் ஒரு கேள்வியைக்
  • 22:06 - 22:09
    கேட்டிருந்தேன்.இவைகளெல்லாம் உயிரினத்தைச் சேர்ந்தவைகளா?
  • 22:09 - 22:11
    ஆரம்பத்தில் நான் உங்களிடம் இங்கே
  • 22:11 - 22:14
    பாருங்கள்,இவை கருஅமில மூலக்கூறுகள் சேர்ந்த
  • 22:14 - 22:15
    புரதங்கள் என்று கூறினேன்.
  • 22:15 - 22:16
    எந்தச் செயல்பாடுகளும் இன்றி இருந்தன.
  • 22:16 - 22:18
    அதனால் அவைகளுக்கு உயிர் இருந்ததுபோல் தெரியவில்லை.
  • 22:18 - 22:19
    இயக்கமும் இல்லை.
  • 22:19 - 22:20
    வளர்சிதை மாற்றமும் இல்லை.
  • 22:20 - 22:20
    உணவு எடுத்துக் கொள்வதில்லை.
  • 22:20 - 22:22
    இனப்பெருக்கம் செய்வதில்லை.
  • 22:22 - 22:23
    கிருமிகள் ஒரு உயிரணுவிற்கு என்னவெல்லாம் செய்கிறது.பின் அதை வைத்தே தன் பெருக்கத்தைச்
  • 22:23 - 22:27
    செய்துகொள்கிறது என்ற விசயம் இப்பொழுது உனக்கு திடீரென்று ஞாபகத்திற்கு வரும்
  • 22:27 - 22:30
    வணிக அடிப்படையில் கூறும்பொழுது இதன் முதலீடு குறைவு.
  • 22:30 - 22:32
    இதன் செயல்முறை இதற்குத் தேவையில்லை. ஏனென்றால் இவை தங்களை
  • 22:32 - 22:36
    வெளிப்படுத்திக்கொள்ள அடுத்தவர்களின் செயல்முறைகளை பயன்படுத்திக் கொள்கிறது.
  • 22:36 - 22:38
    இவைகள் சாதுர்யமான வாழ்க்கை
  • 22:38 - 22:40
    முறையைத்தான் வாழ்கின்றன
  • 22:40 - 22:42
    மற்ற உயிரினங்கள் அவைகளின் வாழ்க்கையில் அனுபவிக்கும்
  • 22:42 - 22:44
    கஷ்டங்களை இவைகள் தங்கள் வாழ்வில் அனுபவிப்பதில்லை.
  • 22:44 - 22:48
    வாழ்க்கை என்றால் என்ன?நாம் யார்? என்ற கேள்விகள் உன் மனத்தில் தோன்றலாம்.
  • 22:48 - 22:52
    நாம் இவைகளின் ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமலத்திற்காகவா
  • 22:52 - 22:54
    அல்லது அவைகளின் இடமாற்றுக்காகவா?
  • 22:54 - 22:56
    இவை மிகவும் முக்கியமான விசயங்கள்.
  • 22:56 - 23:00
    இந்தக் கிருமிகளின் தொற்று, பல வடிவங்களையுடைய ஆக்ஸிஜனற்ற ரைபோகரு
  • 23:00 - 23:02
    அமிலம் , ரைபோகரு அமிலம் இவைகளுக்கிடையே உண்டாகும் போர் ஆகும்.
  • 23:03 - 23:04
    ஆனாலும் இதைப்பற்றிய தர்க்கத்திற்கு நான் வரவில்லை.
  • 23:04 - 23:09
    இப்பொழுது கிருமிகள் என்றால் என்ன என்ற கருத்தை உனக்கு ஏற்படுத்தியிருக்கும்.
  • 23:09 - 23:13
    ஏன் அவைகள் இருக்கின்றன என்பதும் தெரிந்திருக்கும்.என்னைப் பொருத்தவரை
  • 23:13 - 23:16
    அவைகள் உயிரியலில் உள்ள கவர்ச்சியான போலி உயிரினங்கள்.
  • 6000:00 - 6000:00
    \\
  • 6000:00 - 6000:00
    7
Title:
Viruses
Description:

more » « less
Video Language:
English
Team:
Khan Academy
Duration:
23:17
Amara Bot edited Tamil subtitles for Viruses

Tamil subtitles

Revisions