Return to Video

The Internet: How Search Works

  • 0:06 - 0:07
    ஹாய், என் பெயர் ஜான்.
  • 0:08 - 0:10
    நான் Google-இல் தேடல் மற்றும் இயந்திரக் கற்றல் குழுக்களின் தலைவர்.
  • 0:12 - 0:14
    உலகம் முழுவதும் உள்ள மக்கள் சாதாரணமான
  • 0:14 - 0:16
    கேள்விகளைக் கேட்கவும், நம்ப முடியாத அளவுக்கு
  • 0:16 - 0:19
    முக்கியமான கேள்விகளைக் கேட்கவும் தேடுபொறிகளைப் பயன்படுத்துகிறார்கள் என்பது
  • 0:19 - 0:21
    எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது.
  • 0:21 - 0:23
    என்னால் இயன்ற சிறப்பான பதில்களை அவர்களுக்குக்
  • 0:23 - 0:25
    கொடுப்பது என்பது ஒரு பெரிய பொறுப்பு.
  • 0:27 - 0:31
    ஹாய், எனது பெயர் அக்‌ஷயா. நான் Bing தேடல் குழுவில் பணிபுரிகிறேன்.
  • 0:31 - 0:33
    செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் பற்றி
  • 0:33 - 0:36
    நாங்கள் பல முறை ஆராயத் தொடங்குவோம்,
  • 0:36 - 0:39
    ஆனால் பயனர்கள் இதை எப்படி பயன்படுத்தப் போகிறார்கள் என்பதை நாங்கள் சொல்லியாக வேண்டும்,
  • 0:39 - 0:42
    ஏனெனில் ஒவ்வொரு நாளின் முடிவிலும் நாங்கள் சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறோம்.
  • 0:44 - 0:45
    நாங்கள் ஒரு எளிமையான கேள்வி கேட்கிறோம்.
  • 0:46 - 0:48
    செவ்வாய் கிரகத்திற்குச் செல்ல எவ்வளவு நேரம் ஆகும்?
  • 0:49 - 0:51
    இந்த முடிவுகள் எங்கிருந்து வருகின்றன,
  • 0:51 - 0:54
    மற்றும் இது ஏன் இதற்கு முன்னதாக உள்ளது?
  • 0:56 - 0:58
    சரி, இதைப் பற்றி நாம் விரிவாகப் பார்க்கலாம், உங்கள் கோரிக்கையை
  • 0:58 - 1:00
    தேடுபொறி எப்படி ஒரு முடிவாக மாற்றுகிறது என்பதைப் பார்க்கலாம்.
  • 1:01 - 1:03
    ஒரு தேடலை மேற்கொள்ளும்போது நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முதல் விஷயம்,
  • 1:03 - 1:06
    நிகழ் நேரத்தில் உங்கள் தேடலை இயக்க தேடுபொறி உண்மையில்
  • 1:06 - 1:08
    உலகலாவிய வலைக்குச் செல்வதில்லை.
  • 1:08 - 1:11
    ஏனென்றால் இணையதளத்தில் கோடிக்கணக்கான வலைத்தளங்கள் இருக்கின்றன மற்றும் ஒவ்வொரு
  • 1:11 - 1:14
    நிமிடத்திலும் நூற்றுக்கணக்கான வலைத்தளங்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
  • 1:14 - 1:16
    எனவே நீங்கள் விரும்பும் ஒரு வலைத்தளத்தைக் கண்டுபிடிக்க
  • 1:16 - 1:19
    ஒவ்வொரு வலைத்தளமாக தேடுபொறி பார்க்க வேண்டியிருந்தால்,
  • 1:19 - 1:20
    அது எப்போதும் தேடிக்கொண்டே தான் இருக்க வேண்டும்.
  • 1:20 - 1:22
    எனவே உங்கள் தேடலை விரைவுபடுத்த,
  • 1:22 - 1:25
    தேடுபொறிகள் எதிர்காலத்தில் உங்கள் தேடலுக்கு உதவக்கூடிய தகவல்களைப் பதிவு செய்வதற்காக
  • 1:25 - 1:29
    முன்கூட்டியே வலைத்தளத்தை தொடர்ந்து ஆராய்ந்துகொண்டே இருக்கின்றன.
  • 1:29 - 1:31
    இவ்விதமாக, செவ்வாய் கிரகத்திற்கு பயணம் செய்வது பற்றி நீங்கள் தேடும்போது,
  • 1:32 - 1:34
    உடனடியாக உங்களுக்கான பதிலைக் கொடுப்பதற்குத் தேவைப்படும் விஷயங்களை
  • 1:34 - 1:36
    தேடுபொறி ஏற்கனவே தன்னிடம் வைத்துள்ளது.
  • 1:36 - 1:38
    அது எப்படி வேலை செய்கிறது எனப் பார்க்கலாம்.
  • 1:38 - 1:42
    இணையதளம் என்பது ஒன்றோடொன்று ஹைப்பர்லிங்க்குகள் மூலம் இணைக்கப்பட்ட பக்கங்களின் வலை ஆகும்.
  • 1:42 - 1:45
    தேடுபொறிகள் ஸ்பைடர் எனப்படும் ஒரு நிரலை தொடர்ச்சியாக இயக்குகின்றன,
  • 1:45 - 1:47
    இது அவற்றைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க இந்த
  • 1:47 - 1:49
    வலைப் பக்கங்கள் அனைத்தையும் கடந்து செல்கிறது.
  • 1:50 - 1:52
    ஒவ்வொரு முறையும் ஒரு ஹைப்பர்லிங்கை கண்டுபிடிக்கும்போது,
  • 1:52 - 1:55
    முழு இணையதளத்திலும் காணக்கூடிய ஒவ்வொரு பக்கத்தையும்
  • 1:55 - 1:57
    பார்வையிடும் வரை அதைப் பின்தொடர்கிறது.
  • 1:57 - 1:59
    ஸ்பைடர் பார்வையிடுகின்ற ஒவ்வொரு பக்கத்திற்கும்,
  • 1:59 - 2:02
    தேடலுக்குத் தேவைப்படுகின்ற எந்தவொரு தகவலையும் தேடல் அட்டவணை என
  • 2:02 - 2:06
    அழைக்கப்படுகின்ற சிறப்பு தரவுத்தளத்தில் சேர்ப்பதன் மூலம் பதிவு செய்கிறது.
  • 2:07 - 2:10
    இப்போது, முந்தையதில் இருந்து அந்தத் தேடலுக்கு திரும்பிச் சென்று,
  • 2:10 - 2:12
    தேடுபொறி முடிவுகளை எப்படிக் கண்டறிகிறது
  • 2:12 - 2:13
    என்பதை நாம் கண்டுபிடிக்கலாம்.
  • 2:14 - 2:16
    செவ்வாய் கிரகத்திற்குச் செல்ல எவ்வளவு நேரமாகும் என நீங்கள் கேட்கும்போது,
  • 2:17 - 2:19
    இணையதளத்தில் அந்த வார்த்தைகளைக் கொண்ட அனைத்துப் பக்கங்களின்
  • 2:19 - 2:21
    பட்டியலையும் உடனடியாகப் பெறுவதற்கு தேடல் அட்டவணையில்
  • 2:21 - 2:24
    இந்த வார்த்தைகள் ஒவ்வொன்றையும் தேடுபொறி தேடுகிறது.
  • 2:25 - 2:27
    ஆனால் இந்தத் தேடல் வார்த்தைகளை வெறுமனே
  • 2:27 - 2:29
    தேடினால் அது கோடிக்கணக்கான பக்கங்களைக் காண்பிக்கும்,
  • 2:29 - 2:31
    எனவே உங்களுக்கு எதை முதலில் காண்பித்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும்
  • 2:31 - 2:33
    என்பதை தேடுபொறி தீர்மானிக்க வேண்டும்.
  • 2:33 - 2:36
    இங்கு தான் அது ஒரு தந்திரம் செய்கிறது, ஏனெனில் நீங்கள் எதைத்
  • 2:36 - 2:38
    தேடுகிறீர்கள் என்பதை தேடுபொறி ஊகிக்க வேண்டியிருக்கிறது.
  • 2:39 - 2:41
    ஒவ்வொரு தேடுபொறியும் நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என அது நினைப்பதன் அடிப்படையில் பக்கங்களை
  • 2:41 - 2:44
    தரவரிசைப்படுத்த தனது பிரத்தியேகமான நிரல் நெறிமுறையைப் பயன்படுத்துகிறது.
  • 2:45 - 2:48
    உங்கள் தேடல் வார்த்தை பக்கத் தலைப்பில் காண்பிக்கப்படுகிறதா
  • 2:48 - 2:50
    என்பதை தேடுபொறியின் தரவரிசை நிரல் நெறிமுறை பரிசோதிக்கும்,
  • 2:51 - 2:54
    எல்லாச் சொற்களும் அடுத்தடுத்து காண்பிக்கப்படுகிறதா,
  • 2:55 - 2:57
    அல்லது நீங்கள் எந்தப் பக்கங்களைப் பார்க்க விரும்புகிறீர்கள்,
  • 2:57 - 2:59
    எதை நீங்கள் பார்க்க விரும்பவில்லை என்பதையும் தெளிவாகத் தீர்மானிக்க
  • 2:59 - 3:01
    உங்களுக்கு உதவக்கூடிய மற்ற கணக்கீடுகளையும் அது பரிசோதிக்கும்.
  • 3:03 - 3:05
    கொடுக்கப்பட்ட பக்கத்துடன் எத்தனை பிற வலைப் பக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன
  • 3:05 - 3:09
    என்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்வதன் மூலம் ஒரு தேடலுக்கான மிகப் பொருத்தமான முடிவுகளைத்
  • 3:09 - 3:11
    தேர்ந்தெடுப்பதற்கான மிகப் புகழ்பெற்ற நிரல் நெறிமுறையை Google அறிமுகப்படுத்தியது.
  • 3:12 - 3:14
    ஒரு வலைப் பக்கம் சுவாரசியமானது என நிறைய
  • 3:14 - 3:16
    வலைத்தளங்கள் நினைத்தால்,
  • 3:16 - 3:18
    அநேகமாக அது நீங்கள் தேடுகின்ற ஒன்றாகத் தான் இருக்கும் என்பதே இதில் உள்ள சூட்சுமம்.
  • 3:18 - 3:20
    இந்த நிரல் நெறிமுறை பேஜ் தரநிலை எனப்படுகிறது,
  • 3:21 - 3:22
    இது வலைப் பக்கங்களைக் கொண்டு கொடுக்கப்பட்ட பெயர் அல்ல,
  • 3:23 - 3:25
    இதன் கண்டுபிடிப்பாளரான Google-இன் நிறுவனர்களில் ஒருவரான லாரி பேஜ்
  • 3:25 - 3:27
    பெயரைக் கொண்டு அழைக்கப்படுகிறது.
  • 3:28 - 3:31
    பெரும்பாலும் நீங்கள் ஒரு வலைத்தளத்தைப் பார்வையிடும்போது அதனால் பணம் கிடைக்கிறது என்பதால்,
  • 3:31 - 3:33
    ஸ்பாமர்கள் தங்களுடைய பக்கங்கள் முடிவுகளில் அதிகமாக காண்பிக்கப்படும்
  • 3:33 - 3:36
    விதமாக தேடல் நிரல் நெறிமுறையை மாற்றியமைப்பதற்கான வழிகளைக்
  • 3:36 - 3:38
    கண்டறிய தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள்.
  • 3:38 - 3:41
    போலித்தனமான அல்லது நம்பகமில்லாத தளங்கள் முதல் நிலைக்கு வராமலிருக்குமாறு தடுக்க
  • 3:41 - 3:44
    தேடுபொறிகள் தங்கள் நிரல் நெறிமுறைகளை தொடர்ந்து புதுப்பித்து வருகின்றன.
  • 3:45 - 3:47
    இறுதியில், வலை முகவரியைப் பார்த்து அது நம்பகமான
  • 3:48 - 3:49
    ஆதாரம் தான் என்பதை உறுதிசெய்வதன் மூலம்
  • 3:50 - 3:53
    நம்பத்தகாத இந்தப் பக்கங்களை கண்காணிப்பது உங்களுடைய வேலையாகும்.
  • 3:54 - 3:55
    தேடல் நிரல்கள் எப்போதுமே நிரல்
  • 3:55 - 3:58
    நெறிமுறைகளை மேம்படுத்துவதற்கென்றே உருவாக்கப்படுகின்றன,
  • 3:59 - 4:00
    எனவே அவை தனது போட்டியாளர்களை விட சிறந்த முடிவுகளை விரைவான முடிவுகளை வழங்குகின்றன.
  • 4:01 - 4:03
    உங்கள் தேடலைக் குறைக்க உதவுவதற்கு இன்றைய தேடுபொறிகள்
  • 4:03 - 4:07
    நீங்கள் வெளிப்படையாகத் தெரிவிக்காத தகவல்களையும் பயன்படுத்துகின்றன.
  • 4:07 - 4:10
    எனவே, உதாரணமாக, நீங்கள் நாய் பூங்காக்களைத் தேடினால்,
  • 4:10 - 4:12
    நீங்கள் உங்கள் இருப்பிடத்தை தட்டச்சு செய்யாவிட்டாலும்
  • 4:12 - 4:14
    கூட பல தேடுபொறிகள் அருகிலுள்ள நாய் பூங்காக்கள்
  • 4:14 - 4:16
    அனைத்தையும் உங்களுக்குக் காண்பிக்கின்றன.
  • 4:18 - 4:21
    நவீன தேடுபொறிகளும் கூட ஒரு பக்கத்தில் உள்ள வார்த்தைகளை
  • 4:21 - 4:22
    விட சற்றுக் கூடுதலாகவே புரிந்துகொள்கின்றன,
  • 4:22 - 4:25
    ஆனால் நீங்கள் தேடுகின்ற விஷயத்துடன் மிகச் சிறப்பாகப் பொருந்துகின்ற ஒன்றைக்
  • 4:25 - 4:27
    கண்டுபிடிப்பது தான் உண்மையிலேயே அவற்றின் நோக்கமாக உள்ளது.
  • 4:27 - 4:30
    உதாரணமாக, fast pitcher என்ற வார்த்தையை நீங்கள் தேடினால்,
  • 4:30 - 4:32
    நீங்கள் ஒரு விளையாட்டு வீரரைத் தேடுகிறீர்கள் என்பதை அறிந்துகொள்ளும்.
  • 4:32 - 4:34
    ஆனால் large pitcher என்ற வார்த்தையை நீங்கள் தேடினால்,
  • 4:34 - 4:37
    அது உங்கள் சமையலறைக்கான தேர்வுகளைக் காண்பிக்கும்.
  • 4:38 - 4:42
    வார்த்தைகளை நன்கு புரிந்துகொள்ள, ஒரு வகையான செயற்கை நுண்ணறிவாகிய இயந்திரக்
  • 4:42 - 4:44
    கற்றல் என்ற வார்த்தையை நாங்கள் பயன்படுத்துகிறோம்.
  • 4:44 - 4:46
    இது ஒரு பக்கத்தில் உள்ள எழுத்துக்களை அல்லது வார்த்தைகளைத் தேடுவதற்கு மட்டுமே
  • 4:46 - 4:48
    தேடல் நிரல் நெறிமுறைகளைச் செயல்படுத்துவதில்லை, அந்த
  • 4:48 - 4:51
    வார்த்தைகளின் அடிப்படை அர்த்தத்தையும் புரிந்துகொள்கிறது.
  • 4:54 - 4:56
    இணையதளம் அதிவேகமாக வளர்ந்து வருகிறது, ஆனால் தேடுபொறிகளை
  • 4:56 - 5:00
    வடிவமைக்கின்ற குழுக்கள் வேலைகளை சரியாகச் செய்தால், நீங்கள் விரும்பும் தகவல் எப்போதும்
  • 5:00 - 5:04
    ஒரு சில எழுத்துக்களைத் தட்டச்சு செய்யும்போதே உங்களுக்குக் கிடைத்துவிடும்.
Title:
The Internet: How Search Works
Description:

more » « less
Video Language:
English
Team:
Code.org
Project:
How Internet Works
Duration:
05:13

Tamil subtitles

Revisions Compare revisions