[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:06.07,0:00:07.12,Default,,0000,0000,0000,,ஹாய், என் பெயர் ஜான். Dialogue: 0,0:00:07.51,0:00:10.14,Default,,0000,0000,0000,,நான் Google-இல் தேடல் மற்றும் இயந்திரக் கற்றல் குழுக்களின் தலைவர். Dialogue: 0,0:00:12.13,0:00:14.23,Default,,0000,0000,0000,,உலகம் முழுவதும் உள்ள மக்கள் சாதாரணமான Dialogue: 0,0:00:14.23,0:00:16.21,Default,,0000,0000,0000,,கேள்விகளைக் கேட்கவும், நம்ப முடியாத அளவுக்கு Dialogue: 0,0:00:16.22,0:00:19.16,Default,,0000,0000,0000,,முக்கியமான கேள்விகளைக் கேட்கவும் தேடுபொறிகளைப் பயன்படுத்துகிறார்கள் என்பது Dialogue: 0,0:00:19.16,0:00:20.93,Default,,0000,0000,0000,,எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது. Dialogue: 0,0:00:20.93,0:00:23.45,Default,,0000,0000,0000,,என்னால் இயன்ற சிறப்பான பதில்களை அவர்களுக்குக் Dialogue: 0,0:00:23.45,0:00:24.86,Default,,0000,0000,0000,,கொடுப்பது என்பது ஒரு பெரிய பொறுப்பு. Dialogue: 0,0:00:26.71,0:00:30.61,Default,,0000,0000,0000,,ஹாய், எனது பெயர் அக்‌ஷயா. நான் Bing தேடல் குழுவில் பணிபுரிகிறேன். Dialogue: 0,0:00:30.91,0:00:33.19,Default,,0000,0000,0000,,செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் பற்றி Dialogue: 0,0:00:33.19,0:00:35.80,Default,,0000,0000,0000,,நாங்கள் பல முறை ஆராயத் தொடங்குவோம், Dialogue: 0,0:00:35.83,0:00:39.01,Default,,0000,0000,0000,,ஆனால் பயனர்கள் இதை எப்படி பயன்படுத்தப் போகிறார்கள் என்பதை நாங்கள் சொல்லியாக வேண்டும், Dialogue: 0,0:00:39.14,0:00:42.39,Default,,0000,0000,0000,,ஏனெனில் ஒவ்வொரு நாளின் முடிவிலும் நாங்கள் சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறோம். Dialogue: 0,0:00:43.78,0:00:45.40,Default,,0000,0000,0000,,நாங்கள் ஒரு எளிமையான கேள்வி கேட்கிறோம். Dialogue: 0,0:00:45.82,0:00:48.07,Default,,0000,0000,0000,,செவ்வாய் கிரகத்திற்குச் செல்ல எவ்வளவு நேரம் ஆகும்? Dialogue: 0,0:00:49.33,0:00:50.95,Default,,0000,0000,0000,,இந்த முடிவுகள் எங்கிருந்து வருகின்றன, Dialogue: 0,0:00:51.37,0:00:54.10,Default,,0000,0000,0000,,மற்றும் இது ஏன் இதற்கு முன்னதாக உள்ளது? Dialogue: 0,0:00:55.70,0:00:58.15,Default,,0000,0000,0000,,சரி, இதைப் பற்றி நாம் விரிவாகப் பார்க்கலாம், உங்கள் கோரிக்கையை Dialogue: 0,0:00:58.15,0:00:59.86,Default,,0000,0000,0000,,தேடுபொறி எப்படி ஒரு முடிவாக மாற்றுகிறது என்பதைப் பார்க்கலாம். Dialogue: 0,0:01:00.69,0:01:03.36,Default,,0000,0000,0000,,ஒரு தேடலை மேற்கொள்ளும்போது நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முதல் விஷயம், Dialogue: 0,0:01:03.43,0:01:06.48,Default,,0000,0000,0000,,நிகழ் நேரத்தில் உங்கள் தேடலை இயக்க தேடுபொறி உண்மையில் Dialogue: 0,0:01:06.48,0:01:08.01,Default,,0000,0000,0000,,உலகலாவிய வலைக்குச் செல்வதில்லை. Dialogue: 0,0:01:08.14,0:01:10.61,Default,,0000,0000,0000,,ஏனென்றால் இணையதளத்தில் கோடிக்கணக்கான வலைத்தளங்கள் இருக்கின்றன மற்றும் ஒவ்வொரு Dialogue: 0,0:01:10.61,0:01:14.14,Default,,0000,0000,0000,,நிமிடத்திலும் நூற்றுக்கணக்கான வலைத்தளங்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. Dialogue: 0,0:01:14.14,0:01:16.21,Default,,0000,0000,0000,,எனவே நீங்கள் விரும்பும் ஒரு வலைத்தளத்தைக் கண்டுபிடிக்க Dialogue: 0,0:01:16.24,0:01:18.69,Default,,0000,0000,0000,,ஒவ்வொரு வலைத்தளமாக தேடுபொறி பார்க்க வேண்டியிருந்தால், Dialogue: 0,0:01:18.69,0:01:20.12,Default,,0000,0000,0000,,அது எப்போதும் தேடிக்கொண்டே தான் இருக்க வேண்டும். Dialogue: 0,0:01:20.50,0:01:21.94,Default,,0000,0000,0000,,எனவே உங்கள் தேடலை விரைவுபடுத்த, Dialogue: 0,0:01:21.97,0:01:24.94,Default,,0000,0000,0000,,தேடுபொறிகள் எதிர்காலத்தில் உங்கள் தேடலுக்கு உதவக்கூடிய தகவல்களைப் பதிவு செய்வதற்காக Dialogue: 0,0:01:25.42,0:01:28.56,Default,,0000,0000,0000,,முன்கூட்டியே வலைத்தளத்தை தொடர்ந்து ஆராய்ந்துகொண்டே இருக்கின்றன. Dialogue: 0,0:01:28.93,0:01:31.27,Default,,0000,0000,0000,,இவ்விதமாக, செவ்வாய் கிரகத்திற்கு பயணம் செய்வது பற்றி நீங்கள் தேடும்போது, Dialogue: 0,0:01:31.63,0:01:33.70,Default,,0000,0000,0000,,உடனடியாக உங்களுக்கான பதிலைக் கொடுப்பதற்குத் தேவைப்படும் விஷயங்களை Dialogue: 0,0:01:33.70,0:01:35.73,Default,,0000,0000,0000,,தேடுபொறி ஏற்கனவே தன்னிடம் வைத்துள்ளது. Dialogue: 0,0:01:36.25,0:01:37.54,Default,,0000,0000,0000,,அது எப்படி வேலை செய்கிறது எனப் பார்க்கலாம். Dialogue: 0,0:01:37.90,0:01:42.01,Default,,0000,0000,0000,,இணையதளம் என்பது ஒன்றோடொன்று ஹைப்பர்லிங்க்குகள் மூலம் இணைக்கப்பட்ட பக்கங்களின் வலை ஆகும். Dialogue: 0,0:01:42.40,0:01:44.68,Default,,0000,0000,0000,,தேடுபொறிகள் ஸ்பைடர் எனப்படும் ஒரு நிரலை தொடர்ச்சியாக இயக்குகின்றன, Dialogue: 0,0:01:44.68,0:01:47.38,Default,,0000,0000,0000,,இது அவற்றைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க இந்த Dialogue: 0,0:01:47.38,0:01:49.04,Default,,0000,0000,0000,,வலைப் பக்கங்கள் அனைத்தையும் கடந்து செல்கிறது. Dialogue: 0,0:01:49.78,0:01:51.55,Default,,0000,0000,0000,,ஒவ்வொரு முறையும் ஒரு ஹைப்பர்லிங்கை கண்டுபிடிக்கும்போது, Dialogue: 0,0:01:52.09,0:01:55.00,Default,,0000,0000,0000,,முழு இணையதளத்திலும் காணக்கூடிய ஒவ்வொரு பக்கத்தையும் Dialogue: 0,0:01:55.03,0:01:57.24,Default,,0000,0000,0000,,பார்வையிடும் வரை அதைப் பின்தொடர்கிறது. Dialogue: 0,0:01:57.34,0:01:59.17,Default,,0000,0000,0000,,ஸ்பைடர் பார்வையிடுகின்ற ஒவ்வொரு பக்கத்திற்கும், Dialogue: 0,0:01:59.20,0:02:02.32,Default,,0000,0000,0000,,தேடலுக்குத் தேவைப்படுகின்ற எந்தவொரு தகவலையும் தேடல் அட்டவணை என Dialogue: 0,0:02:02.50,0:02:05.65,Default,,0000,0000,0000,,அழைக்கப்படுகின்ற சிறப்பு தரவுத்தளத்தில் சேர்ப்பதன் மூலம் பதிவு செய்கிறது. Dialogue: 0,0:02:07.17,0:02:09.53,Default,,0000,0000,0000,,இப்போது, முந்தையதில் இருந்து அந்தத் தேடலுக்கு திரும்பிச் சென்று, Dialogue: 0,0:02:09.59,0:02:11.99,Default,,0000,0000,0000,,தேடுபொறி முடிவுகளை எப்படிக் கண்டறிகிறது Dialogue: 0,0:02:11.99,0:02:13.33,Default,,0000,0000,0000,,என்பதை நாம் கண்டுபிடிக்கலாம். Dialogue: 0,0:02:13.64,0:02:16.46,Default,,0000,0000,0000,,செவ்வாய் கிரகத்திற்குச் செல்ல எவ்வளவு நேரமாகும் என நீங்கள் கேட்கும்போது, Dialogue: 0,0:02:16.64,0:02:18.86,Default,,0000,0000,0000,,இணையதளத்தில் அந்த வார்த்தைகளைக் கொண்ட அனைத்துப் பக்கங்களின் Dialogue: 0,0:02:18.92,0:02:21.41,Default,,0000,0000,0000,,பட்டியலையும் உடனடியாகப் பெறுவதற்கு தேடல் அட்டவணையில் Dialogue: 0,0:02:21.41,0:02:24.50,Default,,0000,0000,0000,,இந்த வார்த்தைகள் ஒவ்வொன்றையும் தேடுபொறி தேடுகிறது. Dialogue: 0,0:02:24.89,0:02:26.87,Default,,0000,0000,0000,,ஆனால் இந்தத் தேடல் வார்த்தைகளை வெறுமனே Dialogue: 0,0:02:26.87,0:02:28.76,Default,,0000,0000,0000,,தேடினால் அது கோடிக்கணக்கான பக்கங்களைக் காண்பிக்கும், Dialogue: 0,0:02:28.76,0:02:31.11,Default,,0000,0000,0000,,எனவே உங்களுக்கு எதை முதலில் காண்பித்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் Dialogue: 0,0:02:31.11,0:02:33.12,Default,,0000,0000,0000,,என்பதை தேடுபொறி தீர்மானிக்க வேண்டும். Dialogue: 0,0:02:33.34,0:02:36.01,Default,,0000,0000,0000,,இங்கு தான் அது ஒரு தந்திரம் செய்கிறது, ஏனெனில் நீங்கள் எதைத் Dialogue: 0,0:02:36.01,0:02:38.04,Default,,0000,0000,0000,,தேடுகிறீர்கள் என்பதை தேடுபொறி ஊகிக்க வேண்டியிருக்கிறது. Dialogue: 0,0:02:38.93,0:02:41.36,Default,,0000,0000,0000,,ஒவ்வொரு தேடுபொறியும் நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என அது நினைப்பதன் அடிப்படையில் பக்கங்களை Dialogue: 0,0:02:41.36,0:02:44.23,Default,,0000,0000,0000,,தரவரிசைப்படுத்த தனது பிரத்தியேகமான நிரல் நெறிமுறையைப் பயன்படுத்துகிறது. Dialogue: 0,0:02:44.93,0:02:47.66,Default,,0000,0000,0000,,உங்கள் தேடல் வார்த்தை பக்கத் தலைப்பில் காண்பிக்கப்படுகிறதா Dialogue: 0,0:02:47.99,0:02:50.36,Default,,0000,0000,0000,,என்பதை தேடுபொறியின் தரவரிசை நிரல் நெறிமுறை பரிசோதிக்கும், Dialogue: 0,0:02:50.90,0:02:53.82,Default,,0000,0000,0000,,எல்லாச் சொற்களும் அடுத்தடுத்து காண்பிக்கப்படுகிறதா, Dialogue: 0,0:02:54.52,0:02:57.02,Default,,0000,0000,0000,,அல்லது நீங்கள் எந்தப் பக்கங்களைப் பார்க்க விரும்புகிறீர்கள், Dialogue: 0,0:02:57.02,0:02:58.61,Default,,0000,0000,0000,,எதை நீங்கள் பார்க்க விரும்பவில்லை என்பதையும் தெளிவாகத் தீர்மானிக்க Dialogue: 0,0:02:58.67,0:03:01.42,Default,,0000,0000,0000,,உங்களுக்கு உதவக்கூடிய மற்ற கணக்கீடுகளையும் அது பரிசோதிக்கும். Dialogue: 0,0:03:02.96,0:03:04.96,Default,,0000,0000,0000,,கொடுக்கப்பட்ட பக்கத்துடன் எத்தனை பிற வலைப் பக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன Dialogue: 0,0:03:04.96,0:03:08.53,Default,,0000,0000,0000,,என்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்வதன் மூலம் ஒரு தேடலுக்கான மிகப் பொருத்தமான முடிவுகளைத் Dialogue: 0,0:03:08.56,0:03:11.23,Default,,0000,0000,0000,,தேர்ந்தெடுப்பதற்கான மிகப் புகழ்பெற்ற நிரல் நெறிமுறையை Google அறிமுகப்படுத்தியது. Dialogue: 0,0:03:11.83,0:03:14.14,Default,,0000,0000,0000,,ஒரு வலைப் பக்கம் சுவாரசியமானது என நிறைய Dialogue: 0,0:03:14.14,0:03:15.66,Default,,0000,0000,0000,,வலைத்தளங்கள் நினைத்தால், Dialogue: 0,0:03:15.66,0:03:17.94,Default,,0000,0000,0000,,அநேகமாக அது நீங்கள் தேடுகின்ற ஒன்றாகத் தான் இருக்கும் என்பதே இதில் உள்ள சூட்சுமம். Dialogue: 0,0:03:18.19,0:03:20.02,Default,,0000,0000,0000,,இந்த நிரல் நெறிமுறை பேஜ் தரநிலை எனப்படுகிறது, Dialogue: 0,0:03:20.59,0:03:22.33,Default,,0000,0000,0000,,இது வலைப் பக்கங்களைக் கொண்டு கொடுக்கப்பட்ட பெயர் அல்ல, Dialogue: 0,0:03:22.57,0:03:25.21,Default,,0000,0000,0000,,இதன் கண்டுபிடிப்பாளரான Google-இன் நிறுவனர்களில் ஒருவரான லாரி பேஜ் Dialogue: 0,0:03:25.48,0:03:27.33,Default,,0000,0000,0000,,பெயரைக் கொண்டு அழைக்கப்படுகிறது. Dialogue: 0,0:03:27.94,0:03:30.52,Default,,0000,0000,0000,,பெரும்பாலும் நீங்கள் ஒரு வலைத்தளத்தைப் பார்வையிடும்போது அதனால் பணம் கிடைக்கிறது என்பதால், Dialogue: 0,0:03:30.82,0:03:32.95,Default,,0000,0000,0000,,ஸ்பாமர்கள் தங்களுடைய பக்கங்கள் முடிவுகளில் அதிகமாக காண்பிக்கப்படும் Dialogue: 0,0:03:32.95,0:03:35.74,Default,,0000,0000,0000,,விதமாக தேடல் நிரல் நெறிமுறையை மாற்றியமைப்பதற்கான வழிகளைக் Dialogue: 0,0:03:35.74,0:03:37.93,Default,,0000,0000,0000,,கண்டறிய தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள். Dialogue: 0,0:03:38.26,0:03:40.75,Default,,0000,0000,0000,,போலித்தனமான அல்லது நம்பகமில்லாத தளங்கள் முதல் நிலைக்கு வராமலிருக்குமாறு தடுக்க Dialogue: 0,0:03:40.75,0:03:44.30,Default,,0000,0000,0000,,தேடுபொறிகள் தங்கள் நிரல் நெறிமுறைகளை தொடர்ந்து புதுப்பித்து வருகின்றன. Dialogue: 0,0:03:44.68,0:03:47.35,Default,,0000,0000,0000,,இறுதியில், வலை முகவரியைப் பார்த்து அது நம்பகமான Dialogue: 0,0:03:47.50,0:03:49.45,Default,,0000,0000,0000,,ஆதாரம் தான் என்பதை உறுதிசெய்வதன் மூலம் Dialogue: 0,0:03:49.69,0:03:52.99,Default,,0000,0000,0000,,நம்பத்தகாத இந்தப் பக்கங்களை கண்காணிப்பது உங்களுடைய வேலையாகும். Dialogue: 0,0:03:53.68,0:03:55.39,Default,,0000,0000,0000,,தேடல் நிரல்கள் எப்போதுமே நிரல் Dialogue: 0,0:03:55.42,0:03:58.42,Default,,0000,0000,0000,,நெறிமுறைகளை மேம்படுத்துவதற்கென்றே உருவாக்கப்படுகின்றன, Dialogue: 0,0:03:58.54,0:04:00.46,Default,,0000,0000,0000,,எனவே அவை தனது போட்டியாளர்களை விட சிறந்த முடிவுகளை விரைவான முடிவுகளை வழங்குகின்றன. Dialogue: 0,0:04:01.00,0:04:03.10,Default,,0000,0000,0000,,உங்கள் தேடலைக் குறைக்க உதவுவதற்கு இன்றைய தேடுபொறிகள் Dialogue: 0,0:04:03.10,0:04:06.82,Default,,0000,0000,0000,,நீங்கள் வெளிப்படையாகத் தெரிவிக்காத தகவல்களையும் பயன்படுத்துகின்றன. Dialogue: 0,0:04:07.15,0:04:10.12,Default,,0000,0000,0000,,எனவே, உதாரணமாக, நீங்கள் நாய் பூங்காக்களைத் தேடினால், Dialogue: 0,0:04:10.24,0:04:12.19,Default,,0000,0000,0000,,நீங்கள் உங்கள் இருப்பிடத்தை தட்டச்சு செய்யாவிட்டாலும் Dialogue: 0,0:04:12.19,0:04:13.84,Default,,0000,0000,0000,,கூட பல தேடுபொறிகள் அருகிலுள்ள நாய் பூங்காக்கள் Dialogue: 0,0:04:14.08,0:04:16.26,Default,,0000,0000,0000,,அனைத்தையும் உங்களுக்குக் காண்பிக்கின்றன. Dialogue: 0,0:04:17.80,0:04:20.53,Default,,0000,0000,0000,,நவீன தேடுபொறிகளும் கூட ஒரு பக்கத்தில் உள்ள வார்த்தைகளை Dialogue: 0,0:04:20.53,0:04:22.06,Default,,0000,0000,0000,,விட சற்றுக் கூடுதலாகவே புரிந்துகொள்கின்றன, Dialogue: 0,0:04:22.30,0:04:24.97,Default,,0000,0000,0000,,ஆனால் நீங்கள் தேடுகின்ற விஷயத்துடன் மிகச் சிறப்பாகப் பொருந்துகின்ற ஒன்றைக் Dialogue: 0,0:04:24.97,0:04:26.75,Default,,0000,0000,0000,,கண்டுபிடிப்பது தான் உண்மையிலேயே அவற்றின் நோக்கமாக உள்ளது. Dialogue: 0,0:04:27.13,0:04:29.98,Default,,0000,0000,0000,,உதாரணமாக, fast pitcher என்ற வார்த்தையை நீங்கள் தேடினால், Dialogue: 0,0:04:30.28,0:04:32.30,Default,,0000,0000,0000,,நீங்கள் ஒரு விளையாட்டு வீரரைத் தேடுகிறீர்கள் என்பதை அறிந்துகொள்ளும். Dialogue: 0,0:04:32.50,0:04:34.45,Default,,0000,0000,0000,,ஆனால் large pitcher என்ற வார்த்தையை நீங்கள் தேடினால், Dialogue: 0,0:04:34.45,0:04:36.73,Default,,0000,0000,0000,,அது உங்கள் சமையலறைக்கான தேர்வுகளைக் காண்பிக்கும். Dialogue: 0,0:04:38.42,0:04:41.91,Default,,0000,0000,0000,,வார்த்தைகளை நன்கு புரிந்துகொள்ள, ஒரு வகையான செயற்கை நுண்ணறிவாகிய இயந்திரக் Dialogue: 0,0:04:41.91,0:04:43.98,Default,,0000,0000,0000,,கற்றல் என்ற வார்த்தையை நாங்கள் பயன்படுத்துகிறோம். Dialogue: 0,0:04:43.98,0:04:46.05,Default,,0000,0000,0000,,இது ஒரு பக்கத்தில் உள்ள எழுத்துக்களை அல்லது வார்த்தைகளைத் தேடுவதற்கு மட்டுமே Dialogue: 0,0:04:46.09,0:04:48.40,Default,,0000,0000,0000,,தேடல் நிரல் நெறிமுறைகளைச் செயல்படுத்துவதில்லை, அந்த Dialogue: 0,0:04:48.40,0:04:51.28,Default,,0000,0000,0000,,வார்த்தைகளின் அடிப்படை அர்த்தத்தையும் புரிந்துகொள்கிறது. Dialogue: 0,0:04:53.69,0:04:55.85,Default,,0000,0000,0000,,இணையதளம் அதிவேகமாக வளர்ந்து வருகிறது, ஆனால் தேடுபொறிகளை Dialogue: 0,0:04:56.21,0:04:59.81,Default,,0000,0000,0000,,வடிவமைக்கின்ற குழுக்கள் வேலைகளை சரியாகச் செய்தால், நீங்கள் விரும்பும் தகவல் எப்போதும் Dialogue: 0,0:05:00.08,0:05:04.09,Default,,0000,0000,0000,,ஒரு சில எழுத்துக்களைத் தட்டச்சு செய்யும்போதே உங்களுக்குக் கிடைத்துவிடும்.