1 00:00:06,070 --> 00:00:07,120 ஹாய், என் பெயர் ஜான். 2 00:00:07,510 --> 00:00:10,140 நான் Google-இல் தேடல் மற்றும் இயந்திரக் கற்றல் குழுக்களின் தலைவர். 3 00:00:12,130 --> 00:00:14,230 உலகம் முழுவதும் உள்ள மக்கள் சாதாரணமான 4 00:00:14,230 --> 00:00:16,214 கேள்விகளைக் கேட்கவும், நம்ப முடியாத அளவுக்கு 5 00:00:16,215 --> 00:00:19,160 முக்கியமான கேள்விகளைக் கேட்கவும் தேடுபொறிகளைப் பயன்படுத்துகிறார்கள் என்பது 6 00:00:19,160 --> 00:00:20,930 எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது. 7 00:00:20,930 --> 00:00:23,450 என்னால் இயன்ற சிறப்பான பதில்களை அவர்களுக்குக் 8 00:00:23,450 --> 00:00:24,864 கொடுப்பது என்பது ஒரு பெரிய பொறுப்பு. 9 00:00:26,710 --> 00:00:30,610 ஹாய், எனது பெயர் அக்‌ஷயா. நான் Bing தேடல் குழுவில் பணிபுரிகிறேன். 10 00:00:30,910 --> 00:00:33,190 செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் பற்றி 11 00:00:33,190 --> 00:00:35,800 நாங்கள் பல முறை ஆராயத் தொடங்குவோம், 12 00:00:35,830 --> 00:00:39,010 ஆனால் பயனர்கள் இதை எப்படி பயன்படுத்தப் போகிறார்கள் என்பதை நாங்கள் சொல்லியாக வேண்டும், 13 00:00:39,140 --> 00:00:42,390 ஏனெனில் ஒவ்வொரு நாளின் முடிவிலும் நாங்கள் சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறோம். 14 00:00:43,780 --> 00:00:45,400 நாங்கள் ஒரு எளிமையான கேள்வி கேட்கிறோம். 15 00:00:45,820 --> 00:00:48,070 செவ்வாய் கிரகத்திற்குச் செல்ல எவ்வளவு நேரம் ஆகும்? 16 00:00:49,330 --> 00:00:50,950 இந்த முடிவுகள் எங்கிருந்து வருகின்றன, 17 00:00:51,370 --> 00:00:54,100 மற்றும் இது ஏன் இதற்கு முன்னதாக உள்ளது? 18 00:00:55,700 --> 00:00:58,150 சரி, இதைப் பற்றி நாம் விரிவாகப் பார்க்கலாம், உங்கள் கோரிக்கையை 19 00:00:58,150 --> 00:00:59,860 தேடுபொறி எப்படி ஒரு முடிவாக மாற்றுகிறது என்பதைப் பார்க்கலாம். 20 00:01:00,690 --> 00:01:03,360 ஒரு தேடலை மேற்கொள்ளும்போது நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முதல் விஷயம், 21 00:01:03,430 --> 00:01:06,480 நிகழ் நேரத்தில் உங்கள் தேடலை இயக்க தேடுபொறி உண்மையில் 22 00:01:06,480 --> 00:01:08,010 உலகலாவிய வலைக்குச் செல்வதில்லை. 23 00:01:08,140 --> 00:01:10,610 ஏனென்றால் இணையதளத்தில் கோடிக்கணக்கான வலைத்தளங்கள் இருக்கின்றன மற்றும் ஒவ்வொரு 24 00:01:10,610 --> 00:01:14,140 நிமிடத்திலும் நூற்றுக்கணக்கான வலைத்தளங்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 25 00:01:14,140 --> 00:01:16,210 எனவே நீங்கள் விரும்பும் ஒரு வலைத்தளத்தைக் கண்டுபிடிக்க 26 00:01:16,240 --> 00:01:18,690 ஒவ்வொரு வலைத்தளமாக தேடுபொறி பார்க்க வேண்டியிருந்தால், 27 00:01:18,690 --> 00:01:20,120 அது எப்போதும் தேடிக்கொண்டே தான் இருக்க வேண்டும். 28 00:01:20,500 --> 00:01:21,940 எனவே உங்கள் தேடலை விரைவுபடுத்த, 29 00:01:21,970 --> 00:01:24,940 தேடுபொறிகள் எதிர்காலத்தில் உங்கள் தேடலுக்கு உதவக்கூடிய தகவல்களைப் பதிவு செய்வதற்காக 30 00:01:25,420 --> 00:01:28,560 முன்கூட்டியே வலைத்தளத்தை தொடர்ந்து ஆராய்ந்துகொண்டே இருக்கின்றன. 31 00:01:28,930 --> 00:01:31,270 இவ்விதமாக, செவ்வாய் கிரகத்திற்கு பயணம் செய்வது பற்றி நீங்கள் தேடும்போது, 32 00:01:31,630 --> 00:01:33,700 உடனடியாக உங்களுக்கான பதிலைக் கொடுப்பதற்குத் தேவைப்படும் விஷயங்களை 33 00:01:33,700 --> 00:01:35,728 தேடுபொறி ஏற்கனவே தன்னிடம் வைத்துள்ளது. 34 00:01:36,250 --> 00:01:37,540 அது எப்படி வேலை செய்கிறது எனப் பார்க்கலாம். 35 00:01:37,900 --> 00:01:42,010 இணையதளம் என்பது ஒன்றோடொன்று ஹைப்பர்லிங்க்குகள் மூலம் இணைக்கப்பட்ட பக்கங்களின் வலை ஆகும். 36 00:01:42,400 --> 00:01:44,680 தேடுபொறிகள் ஸ்பைடர் எனப்படும் ஒரு நிரலை தொடர்ச்சியாக இயக்குகின்றன, 37 00:01:44,680 --> 00:01:47,380 இது அவற்றைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க இந்த 38 00:01:47,380 --> 00:01:49,040 வலைப் பக்கங்கள் அனைத்தையும் கடந்து செல்கிறது. 39 00:01:49,780 --> 00:01:51,550 ஒவ்வொரு முறையும் ஒரு ஹைப்பர்லிங்கை கண்டுபிடிக்கும்போது, 40 00:01:52,090 --> 00:01:55,000 முழு இணையதளத்திலும் காணக்கூடிய ஒவ்வொரு பக்கத்தையும் 41 00:01:55,030 --> 00:01:57,240 பார்வையிடும் வரை அதைப் பின்தொடர்கிறது. 42 00:01:57,335 --> 00:01:59,170 ஸ்பைடர் பார்வையிடுகின்ற ஒவ்வொரு பக்கத்திற்கும், 43 00:01:59,200 --> 00:02:02,320 தேடலுக்குத் தேவைப்படுகின்ற எந்தவொரு தகவலையும் தேடல் அட்டவணை என 44 00:02:02,500 --> 00:02:05,650 அழைக்கப்படுகின்ற சிறப்பு தரவுத்தளத்தில் சேர்ப்பதன் மூலம் பதிவு செய்கிறது. 45 00:02:07,166 --> 00:02:09,530 இப்போது, முந்தையதில் இருந்து அந்தத் தேடலுக்கு திரும்பிச் சென்று, 46 00:02:09,590 --> 00:02:11,990 தேடுபொறி முடிவுகளை எப்படிக் கண்டறிகிறது 47 00:02:11,990 --> 00:02:13,333 என்பதை நாம் கண்டுபிடிக்கலாம். 48 00:02:13,640 --> 00:02:16,460 செவ்வாய் கிரகத்திற்குச் செல்ல எவ்வளவு நேரமாகும் என நீங்கள் கேட்கும்போது, 49 00:02:16,640 --> 00:02:18,860 இணையதளத்தில் அந்த வார்த்தைகளைக் கொண்ட அனைத்துப் பக்கங்களின் 50 00:02:18,920 --> 00:02:21,410 பட்டியலையும் உடனடியாகப் பெறுவதற்கு தேடல் அட்டவணையில் 51 00:02:21,410 --> 00:02:24,500 இந்த வார்த்தைகள் ஒவ்வொன்றையும் தேடுபொறி தேடுகிறது. 52 00:02:24,890 --> 00:02:26,870 ஆனால் இந்தத் தேடல் வார்த்தைகளை வெறுமனே 53 00:02:26,870 --> 00:02:28,760 தேடினால் அது கோடிக்கணக்கான பக்கங்களைக் காண்பிக்கும், 54 00:02:28,760 --> 00:02:31,110 எனவே உங்களுக்கு எதை முதலில் காண்பித்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் 55 00:02:31,110 --> 00:02:33,120 என்பதை தேடுபொறி தீர்மானிக்க வேண்டும். 56 00:02:33,340 --> 00:02:36,010 இங்கு தான் அது ஒரு தந்திரம் செய்கிறது, ஏனெனில் நீங்கள் எதைத் 57 00:02:36,010 --> 00:02:38,040 தேடுகிறீர்கள் என்பதை தேடுபொறி ஊகிக்க வேண்டியிருக்கிறது. 58 00:02:38,930 --> 00:02:41,360 ஒவ்வொரு தேடுபொறியும் நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என அது நினைப்பதன் அடிப்படையில் பக்கங்களை 59 00:02:41,360 --> 00:02:44,230 தரவரிசைப்படுத்த தனது பிரத்தியேகமான நிரல் நெறிமுறையைப் பயன்படுத்துகிறது. 60 00:02:44,930 --> 00:02:47,660 உங்கள் தேடல் வார்த்தை பக்கத் தலைப்பில் காண்பிக்கப்படுகிறதா 61 00:02:47,990 --> 00:02:50,360 என்பதை தேடுபொறியின் தரவரிசை நிரல் நெறிமுறை பரிசோதிக்கும், 62 00:02:50,900 --> 00:02:53,820 எல்லாச் சொற்களும் அடுத்தடுத்து காண்பிக்கப்படுகிறதா, 63 00:02:54,520 --> 00:02:57,020 அல்லது நீங்கள் எந்தப் பக்கங்களைப் பார்க்க விரும்புகிறீர்கள், 64 00:02:57,020 --> 00:02:58,610 எதை நீங்கள் பார்க்க விரும்பவில்லை என்பதையும் தெளிவாகத் தீர்மானிக்க 65 00:02:58,670 --> 00:03:01,420 உங்களுக்கு உதவக்கூடிய மற்ற கணக்கீடுகளையும் அது பரிசோதிக்கும். 66 00:03:02,960 --> 00:03:04,960 கொடுக்கப்பட்ட பக்கத்துடன் எத்தனை பிற வலைப் பக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன 67 00:03:04,960 --> 00:03:08,530 என்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்வதன் மூலம் ஒரு தேடலுக்கான மிகப் பொருத்தமான முடிவுகளைத் 68 00:03:08,560 --> 00:03:11,230 தேர்ந்தெடுப்பதற்கான மிகப் புகழ்பெற்ற நிரல் நெறிமுறையை Google அறிமுகப்படுத்தியது. 69 00:03:11,830 --> 00:03:14,140 ஒரு வலைப் பக்கம் சுவாரசியமானது என நிறைய 70 00:03:14,140 --> 00:03:15,660 வலைத்தளங்கள் நினைத்தால், 71 00:03:15,660 --> 00:03:17,940 அநேகமாக அது நீங்கள் தேடுகின்ற ஒன்றாகத் தான் இருக்கும் என்பதே இதில் உள்ள சூட்சுமம். 72 00:03:18,190 --> 00:03:20,020 இந்த நிரல் நெறிமுறை பேஜ் தரநிலை எனப்படுகிறது, 73 00:03:20,590 --> 00:03:22,330 இது வலைப் பக்கங்களைக் கொண்டு கொடுக்கப்பட்ட பெயர் அல்ல, 74 00:03:22,570 --> 00:03:25,210 இதன் கண்டுபிடிப்பாளரான Google-இன் நிறுவனர்களில் ஒருவரான லாரி பேஜ் 75 00:03:25,480 --> 00:03:27,333 பெயரைக் கொண்டு அழைக்கப்படுகிறது. 76 00:03:27,940 --> 00:03:30,520 பெரும்பாலும் நீங்கள் ஒரு வலைத்தளத்தைப் பார்வையிடும்போது அதனால் பணம் கிடைக்கிறது என்பதால், 77 00:03:30,820 --> 00:03:32,950 ஸ்பாமர்கள் தங்களுடைய பக்கங்கள் முடிவுகளில் அதிகமாக காண்பிக்கப்படும் 78 00:03:32,950 --> 00:03:35,741 விதமாக தேடல் நிரல் நெறிமுறையை மாற்றியமைப்பதற்கான வழிகளைக் 79 00:03:35,742 --> 00:03:37,931 கண்டறிய தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள். 80 00:03:38,260 --> 00:03:40,750 போலித்தனமான அல்லது நம்பகமில்லாத தளங்கள் முதல் நிலைக்கு வராமலிருக்குமாறு தடுக்க 81 00:03:40,750 --> 00:03:44,296 தேடுபொறிகள் தங்கள் நிரல் நெறிமுறைகளை தொடர்ந்து புதுப்பித்து வருகின்றன. 82 00:03:44,680 --> 00:03:47,350 இறுதியில், வலை முகவரியைப் பார்த்து அது நம்பகமான 83 00:03:47,500 --> 00:03:49,450 ஆதாரம் தான் என்பதை உறுதிசெய்வதன் மூலம் 84 00:03:49,690 --> 00:03:52,990 நம்பத்தகாத இந்தப் பக்கங்களை கண்காணிப்பது உங்களுடைய வேலையாகும். 85 00:03:53,680 --> 00:03:55,390 தேடல் நிரல்கள் எப்போதுமே நிரல் 86 00:03:55,420 --> 00:03:58,420 நெறிமுறைகளை மேம்படுத்துவதற்கென்றே உருவாக்கப்படுகின்றன, 87 00:03:58,540 --> 00:04:00,460 எனவே அவை தனது போட்டியாளர்களை விட சிறந்த முடிவுகளை விரைவான முடிவுகளை வழங்குகின்றன. 88 00:04:01,000 --> 00:04:03,100 உங்கள் தேடலைக் குறைக்க உதவுவதற்கு இன்றைய தேடுபொறிகள் 89 00:04:03,100 --> 00:04:06,820 நீங்கள் வெளிப்படையாகத் தெரிவிக்காத தகவல்களையும் பயன்படுத்துகின்றன. 90 00:04:07,150 --> 00:04:10,120 எனவே, உதாரணமாக, நீங்கள் நாய் பூங்காக்களைத் தேடினால், 91 00:04:10,240 --> 00:04:12,190 நீங்கள் உங்கள் இருப்பிடத்தை தட்டச்சு செய்யாவிட்டாலும் 92 00:04:12,190 --> 00:04:13,840 கூட பல தேடுபொறிகள் அருகிலுள்ள நாய் பூங்காக்கள் 93 00:04:14,080 --> 00:04:16,260 அனைத்தையும் உங்களுக்குக் காண்பிக்கின்றன. 94 00:04:17,800 --> 00:04:20,530 நவீன தேடுபொறிகளும் கூட ஒரு பக்கத்தில் உள்ள வார்த்தைகளை 95 00:04:20,530 --> 00:04:22,060 விட சற்றுக் கூடுதலாகவே புரிந்துகொள்கின்றன, 96 00:04:22,300 --> 00:04:24,970 ஆனால் நீங்கள் தேடுகின்ற விஷயத்துடன் மிகச் சிறப்பாகப் பொருந்துகின்ற ஒன்றைக் 97 00:04:24,970 --> 00:04:26,750 கண்டுபிடிப்பது தான் உண்மையிலேயே அவற்றின் நோக்கமாக உள்ளது. 98 00:04:27,130 --> 00:04:29,980 உதாரணமாக, fast pitcher என்ற வார்த்தையை நீங்கள் தேடினால், 99 00:04:30,280 --> 00:04:32,300 நீங்கள் ஒரு விளையாட்டு வீரரைத் தேடுகிறீர்கள் என்பதை அறிந்துகொள்ளும். 100 00:04:32,500 --> 00:04:34,450 ஆனால் large pitcher என்ற வார்த்தையை நீங்கள் தேடினால், 101 00:04:34,450 --> 00:04:36,730 அது உங்கள் சமையலறைக்கான தேர்வுகளைக் காண்பிக்கும். 102 00:04:38,420 --> 00:04:41,910 வார்த்தைகளை நன்கு புரிந்துகொள்ள, ஒரு வகையான செயற்கை நுண்ணறிவாகிய இயந்திரக் 103 00:04:41,910 --> 00:04:43,985 கற்றல் என்ற வார்த்தையை நாங்கள் பயன்படுத்துகிறோம். 104 00:04:43,985 --> 00:04:46,050 இது ஒரு பக்கத்தில் உள்ள எழுத்துக்களை அல்லது வார்த்தைகளைத் தேடுவதற்கு மட்டுமே 105 00:04:46,090 --> 00:04:48,400 தேடல் நிரல் நெறிமுறைகளைச் செயல்படுத்துவதில்லை, அந்த 106 00:04:48,400 --> 00:04:51,280 வார்த்தைகளின் அடிப்படை அர்த்தத்தையும் புரிந்துகொள்கிறது. 107 00:04:53,690 --> 00:04:55,850 இணையதளம் அதிவேகமாக வளர்ந்து வருகிறது, ஆனால் தேடுபொறிகளை 108 00:04:56,210 --> 00:04:59,810 வடிவமைக்கின்ற குழுக்கள் வேலைகளை சரியாகச் செய்தால், நீங்கள் விரும்பும் தகவல் எப்போதும் 109 00:05:00,080 --> 00:05:04,090 ஒரு சில எழுத்துக்களைத் தட்டச்சு செய்யும்போதே உங்களுக்குக் கிடைத்துவிடும்.