0:00:06.070,0:00:07.120 ஹாய், என் பெயர் ஜான். 0:00:07.510,0:00:10.140 நான் Google-இல் தேடல் மற்றும் இயந்திரக் கற்றல் குழுக்களின் தலைவர். 0:00:12.130,0:00:14.230 உலகம் முழுவதும் உள்ள மக்கள் சாதாரணமான 0:00:14.230,0:00:16.214 கேள்விகளைக் கேட்கவும், நம்ப முடியாத அளவுக்கு 0:00:16.215,0:00:19.160 முக்கியமான கேள்விகளைக் கேட்கவும் தேடுபொறிகளைப் பயன்படுத்துகிறார்கள் என்பது 0:00:19.160,0:00:20.930 எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது. 0:00:20.930,0:00:23.450 என்னால் இயன்ற சிறப்பான பதில்களை அவர்களுக்குக் 0:00:23.450,0:00:24.864 கொடுப்பது என்பது ஒரு பெரிய பொறுப்பு. 0:00:26.710,0:00:30.610 ஹாய், எனது பெயர் அக்‌ஷயா. நான் Bing தேடல் குழுவில் பணிபுரிகிறேன். 0:00:30.910,0:00:33.190 செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் பற்றி 0:00:33.190,0:00:35.800 நாங்கள் பல முறை ஆராயத் தொடங்குவோம், 0:00:35.830,0:00:39.010 ஆனால் பயனர்கள் இதை எப்படி பயன்படுத்தப் போகிறார்கள் என்பதை நாங்கள் சொல்லியாக வேண்டும், 0:00:39.140,0:00:42.390 ஏனெனில் ஒவ்வொரு நாளின் முடிவிலும் நாங்கள் சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறோம். 0:00:43.780,0:00:45.400 நாங்கள் ஒரு எளிமையான கேள்வி கேட்கிறோம். 0:00:45.820,0:00:48.070 செவ்வாய் கிரகத்திற்குச் செல்ல எவ்வளவு நேரம் ஆகும்? 0:00:49.330,0:00:50.950 இந்த முடிவுகள் எங்கிருந்து வருகின்றன, 0:00:51.370,0:00:54.100 மற்றும் இது ஏன் இதற்கு முன்னதாக உள்ளது? 0:00:55.700,0:00:58.150 சரி, இதைப் பற்றி நாம் விரிவாகப் பார்க்கலாம், உங்கள் கோரிக்கையை 0:00:58.150,0:00:59.860 தேடுபொறி எப்படி ஒரு முடிவாக மாற்றுகிறது என்பதைப் பார்க்கலாம். 0:01:00.690,0:01:03.360 ஒரு தேடலை மேற்கொள்ளும்போது நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முதல் விஷயம், 0:01:03.430,0:01:06.480 நிகழ் நேரத்தில் உங்கள் தேடலை இயக்க தேடுபொறி உண்மையில் 0:01:06.480,0:01:08.010 உலகலாவிய வலைக்குச் செல்வதில்லை. 0:01:08.140,0:01:10.610 ஏனென்றால் இணையதளத்தில் கோடிக்கணக்கான வலைத்தளங்கள் இருக்கின்றன மற்றும் ஒவ்வொரு 0:01:10.610,0:01:14.140 நிமிடத்திலும் நூற்றுக்கணக்கான வலைத்தளங்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 0:01:14.140,0:01:16.210 எனவே நீங்கள் விரும்பும் ஒரு வலைத்தளத்தைக் கண்டுபிடிக்க 0:01:16.240,0:01:18.690 ஒவ்வொரு வலைத்தளமாக தேடுபொறி பார்க்க வேண்டியிருந்தால், 0:01:18.690,0:01:20.120 அது எப்போதும் தேடிக்கொண்டே தான் இருக்க வேண்டும். 0:01:20.500,0:01:21.940 எனவே உங்கள் தேடலை விரைவுபடுத்த, 0:01:21.970,0:01:24.940 தேடுபொறிகள் எதிர்காலத்தில் உங்கள் தேடலுக்கு உதவக்கூடிய தகவல்களைப் பதிவு செய்வதற்காக 0:01:25.420,0:01:28.560 முன்கூட்டியே வலைத்தளத்தை தொடர்ந்து ஆராய்ந்துகொண்டே இருக்கின்றன. 0:01:28.930,0:01:31.270 இவ்விதமாக, செவ்வாய் கிரகத்திற்கு பயணம் செய்வது பற்றி நீங்கள் தேடும்போது, 0:01:31.630,0:01:33.700 உடனடியாக உங்களுக்கான பதிலைக் கொடுப்பதற்குத் தேவைப்படும் விஷயங்களை 0:01:33.700,0:01:35.728 தேடுபொறி ஏற்கனவே தன்னிடம் வைத்துள்ளது. 0:01:36.250,0:01:37.540 அது எப்படி வேலை செய்கிறது எனப் பார்க்கலாம். 0:01:37.900,0:01:42.010 இணையதளம் என்பது ஒன்றோடொன்று ஹைப்பர்லிங்க்குகள் மூலம் இணைக்கப்பட்ட பக்கங்களின் வலை ஆகும். 0:01:42.400,0:01:44.680 தேடுபொறிகள் ஸ்பைடர் எனப்படும் ஒரு நிரலை தொடர்ச்சியாக இயக்குகின்றன, 0:01:44.680,0:01:47.380 இது அவற்றைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க இந்த 0:01:47.380,0:01:49.040 வலைப் பக்கங்கள் அனைத்தையும் கடந்து செல்கிறது. 0:01:49.780,0:01:51.550 ஒவ்வொரு முறையும் ஒரு ஹைப்பர்லிங்கை கண்டுபிடிக்கும்போது, 0:01:52.090,0:01:55.000 முழு இணையதளத்திலும் காணக்கூடிய ஒவ்வொரு பக்கத்தையும் 0:01:55.030,0:01:57.240 பார்வையிடும் வரை அதைப் பின்தொடர்கிறது. 0:01:57.335,0:01:59.170 ஸ்பைடர் பார்வையிடுகின்ற ஒவ்வொரு பக்கத்திற்கும், 0:01:59.200,0:02:02.320 தேடலுக்குத் தேவைப்படுகின்ற எந்தவொரு தகவலையும் தேடல் அட்டவணை என 0:02:02.500,0:02:05.650 அழைக்கப்படுகின்ற சிறப்பு தரவுத்தளத்தில் சேர்ப்பதன் மூலம் பதிவு செய்கிறது. 0:02:07.166,0:02:09.530 இப்போது, முந்தையதில் இருந்து அந்தத் தேடலுக்கு திரும்பிச் சென்று, 0:02:09.590,0:02:11.990 தேடுபொறி முடிவுகளை எப்படிக் கண்டறிகிறது 0:02:11.990,0:02:13.333 என்பதை நாம் கண்டுபிடிக்கலாம். 0:02:13.640,0:02:16.460 செவ்வாய் கிரகத்திற்குச் செல்ல எவ்வளவு நேரமாகும் என நீங்கள் கேட்கும்போது, 0:02:16.640,0:02:18.860 இணையதளத்தில் அந்த வார்த்தைகளைக் கொண்ட அனைத்துப் பக்கங்களின் 0:02:18.920,0:02:21.410 பட்டியலையும் உடனடியாகப் பெறுவதற்கு தேடல் அட்டவணையில் 0:02:21.410,0:02:24.500 இந்த வார்த்தைகள் ஒவ்வொன்றையும் தேடுபொறி தேடுகிறது. 0:02:24.890,0:02:26.870 ஆனால் இந்தத் தேடல் வார்த்தைகளை வெறுமனே 0:02:26.870,0:02:28.760 தேடினால் அது கோடிக்கணக்கான பக்கங்களைக் காண்பிக்கும், 0:02:28.760,0:02:31.110 எனவே உங்களுக்கு எதை முதலில் காண்பித்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் 0:02:31.110,0:02:33.120 என்பதை தேடுபொறி தீர்மானிக்க வேண்டும். 0:02:33.340,0:02:36.010 இங்கு தான் அது ஒரு தந்திரம் செய்கிறது, ஏனெனில் நீங்கள் எதைத் 0:02:36.010,0:02:38.040 தேடுகிறீர்கள் என்பதை தேடுபொறி ஊகிக்க வேண்டியிருக்கிறது. 0:02:38.930,0:02:41.360 ஒவ்வொரு தேடுபொறியும் நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என அது நினைப்பதன் அடிப்படையில் பக்கங்களை 0:02:41.360,0:02:44.230 தரவரிசைப்படுத்த தனது பிரத்தியேகமான நிரல் நெறிமுறையைப் பயன்படுத்துகிறது. 0:02:44.930,0:02:47.660 உங்கள் தேடல் வார்த்தை பக்கத் தலைப்பில் காண்பிக்கப்படுகிறதா 0:02:47.990,0:02:50.360 என்பதை தேடுபொறியின் தரவரிசை நிரல் நெறிமுறை பரிசோதிக்கும், 0:02:50.900,0:02:53.820 எல்லாச் சொற்களும் அடுத்தடுத்து காண்பிக்கப்படுகிறதா, 0:02:54.520,0:02:57.020 அல்லது நீங்கள் எந்தப் பக்கங்களைப் பார்க்க விரும்புகிறீர்கள், 0:02:57.020,0:02:58.610 எதை நீங்கள் பார்க்க விரும்பவில்லை என்பதையும் தெளிவாகத் தீர்மானிக்க 0:02:58.670,0:03:01.420 உங்களுக்கு உதவக்கூடிய மற்ற கணக்கீடுகளையும் அது பரிசோதிக்கும். 0:03:02.960,0:03:04.960 கொடுக்கப்பட்ட பக்கத்துடன் எத்தனை பிற வலைப் பக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன 0:03:04.960,0:03:08.530 என்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்வதன் மூலம் ஒரு தேடலுக்கான மிகப் பொருத்தமான முடிவுகளைத் 0:03:08.560,0:03:11.230 தேர்ந்தெடுப்பதற்கான மிகப் புகழ்பெற்ற நிரல் நெறிமுறையை Google அறிமுகப்படுத்தியது. 0:03:11.830,0:03:14.140 ஒரு வலைப் பக்கம் சுவாரசியமானது என நிறைய 0:03:14.140,0:03:15.660 வலைத்தளங்கள் நினைத்தால், 0:03:15.660,0:03:17.940 அநேகமாக அது நீங்கள் தேடுகின்ற ஒன்றாகத் தான் இருக்கும் என்பதே இதில் உள்ள சூட்சுமம். 0:03:18.190,0:03:20.020 இந்த நிரல் நெறிமுறை பேஜ் தரநிலை எனப்படுகிறது, 0:03:20.590,0:03:22.330 இது வலைப் பக்கங்களைக் கொண்டு கொடுக்கப்பட்ட பெயர் அல்ல, 0:03:22.570,0:03:25.210 இதன் கண்டுபிடிப்பாளரான Google-இன் நிறுவனர்களில் ஒருவரான லாரி பேஜ் 0:03:25.480,0:03:27.333 பெயரைக் கொண்டு அழைக்கப்படுகிறது. 0:03:27.940,0:03:30.520 பெரும்பாலும் நீங்கள் ஒரு வலைத்தளத்தைப் பார்வையிடும்போது அதனால் பணம் கிடைக்கிறது என்பதால், 0:03:30.820,0:03:32.950 ஸ்பாமர்கள் தங்களுடைய பக்கங்கள் முடிவுகளில் அதிகமாக காண்பிக்கப்படும் 0:03:32.950,0:03:35.741 விதமாக தேடல் நிரல் நெறிமுறையை மாற்றியமைப்பதற்கான வழிகளைக் 0:03:35.742,0:03:37.931 கண்டறிய தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள். 0:03:38.260,0:03:40.750 போலித்தனமான அல்லது நம்பகமில்லாத தளங்கள் முதல் நிலைக்கு வராமலிருக்குமாறு தடுக்க 0:03:40.750,0:03:44.296 தேடுபொறிகள் தங்கள் நிரல் நெறிமுறைகளை தொடர்ந்து புதுப்பித்து வருகின்றன. 0:03:44.680,0:03:47.350 இறுதியில், வலை முகவரியைப் பார்த்து அது நம்பகமான 0:03:47.500,0:03:49.450 ஆதாரம் தான் என்பதை உறுதிசெய்வதன் மூலம் 0:03:49.690,0:03:52.990 நம்பத்தகாத இந்தப் பக்கங்களை கண்காணிப்பது உங்களுடைய வேலையாகும். 0:03:53.680,0:03:55.390 தேடல் நிரல்கள் எப்போதுமே நிரல் 0:03:55.420,0:03:58.420 நெறிமுறைகளை மேம்படுத்துவதற்கென்றே உருவாக்கப்படுகின்றன, 0:03:58.540,0:04:00.460 எனவே அவை தனது போட்டியாளர்களை விட சிறந்த முடிவுகளை விரைவான முடிவுகளை வழங்குகின்றன. 0:04:01.000,0:04:03.100 உங்கள் தேடலைக் குறைக்க உதவுவதற்கு இன்றைய தேடுபொறிகள் 0:04:03.100,0:04:06.820 நீங்கள் வெளிப்படையாகத் தெரிவிக்காத தகவல்களையும் பயன்படுத்துகின்றன. 0:04:07.150,0:04:10.120 எனவே, உதாரணமாக, நீங்கள் நாய் பூங்காக்களைத் தேடினால், 0:04:10.240,0:04:12.190 நீங்கள் உங்கள் இருப்பிடத்தை தட்டச்சு செய்யாவிட்டாலும் 0:04:12.190,0:04:13.840 கூட பல தேடுபொறிகள் அருகிலுள்ள நாய் பூங்காக்கள் 0:04:14.080,0:04:16.260 அனைத்தையும் உங்களுக்குக் காண்பிக்கின்றன. 0:04:17.800,0:04:20.530 நவீன தேடுபொறிகளும் கூட ஒரு பக்கத்தில் உள்ள வார்த்தைகளை 0:04:20.530,0:04:22.060 விட சற்றுக் கூடுதலாகவே புரிந்துகொள்கின்றன, 0:04:22.300,0:04:24.970 ஆனால் நீங்கள் தேடுகின்ற விஷயத்துடன் மிகச் சிறப்பாகப் பொருந்துகின்ற ஒன்றைக் 0:04:24.970,0:04:26.750 கண்டுபிடிப்பது தான் உண்மையிலேயே அவற்றின் நோக்கமாக உள்ளது. 0:04:27.130,0:04:29.980 உதாரணமாக, fast pitcher என்ற வார்த்தையை நீங்கள் தேடினால், 0:04:30.280,0:04:32.300 நீங்கள் ஒரு விளையாட்டு வீரரைத் தேடுகிறீர்கள் என்பதை அறிந்துகொள்ளும். 0:04:32.500,0:04:34.450 ஆனால் large pitcher என்ற வார்த்தையை நீங்கள் தேடினால், 0:04:34.450,0:04:36.730 அது உங்கள் சமையலறைக்கான தேர்வுகளைக் காண்பிக்கும். 0:04:38.420,0:04:41.910 வார்த்தைகளை நன்கு புரிந்துகொள்ள, ஒரு வகையான செயற்கை நுண்ணறிவாகிய இயந்திரக் 0:04:41.910,0:04:43.985 கற்றல் என்ற வார்த்தையை நாங்கள் பயன்படுத்துகிறோம். 0:04:43.985,0:04:46.050 இது ஒரு பக்கத்தில் உள்ள எழுத்துக்களை அல்லது வார்த்தைகளைத் தேடுவதற்கு மட்டுமே 0:04:46.090,0:04:48.400 தேடல் நிரல் நெறிமுறைகளைச் செயல்படுத்துவதில்லை, அந்த 0:04:48.400,0:04:51.280 வார்த்தைகளின் அடிப்படை அர்த்தத்தையும் புரிந்துகொள்கிறது. 0:04:53.690,0:04:55.850 இணையதளம் அதிவேகமாக வளர்ந்து வருகிறது, ஆனால் தேடுபொறிகளை 0:04:56.210,0:04:59.810 வடிவமைக்கின்ற குழுக்கள் வேலைகளை சரியாகச் செய்தால், நீங்கள் விரும்பும் தகவல் எப்போதும் 0:05:00.080,0:05:04.090 ஒரு சில எழுத்துக்களைத் தட்டச்சு செய்யும்போதே உங்களுக்குக் கிடைத்துவிடும்.