எமி கடி: உங்கள் தோற்ற அமைவு உங்களை உருவாக்குகிறது
-
0:01 - 0:04என் உரையின் மூலம் ஓர் இலவச,
-
0:04 - 0:06தொழில்நுட்ப நுணுக்கங்கள் அற்ற, ஆனால், உங்கள் வாழ்வை மேரூகூட்டக்கூடிய ஓர் இரகசியத்தை தெரிவிக்க இருக்கிறேன்.
-
0:06 - 0:09நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்
-
0:09 - 0:13உங்களது தோற்ற அமைவை இரண்டு நிமிடங்களுக்கு மாற்றி அமைக்க வேண்டும்.
-
0:13 - 0:16அந்த ரகசியத்தை தெரிவிப்பதற்கு முன், முதலில் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும்.
-
0:16 - 0:20இப்பொழுது, உங்கள் தோற்றத்தையும் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதனையும் கண்காணியுங்கள்.
-
0:20 - 0:22உங்களில் எத்தனை பேர் உங்களை சிறுமைப்படுத்தும் வகையில் உடல் தோற்றம் கொண்டுள்ளீர்கள்?
-
0:22 - 0:25கூனியவாரோ, கால்களை குருக்கிட்டவாரோ,
-
0:25 - 0:26கனுக்கால்களை பின்னியவாரோ அமர்ந்திருக்கலாம்.
-
0:26 - 0:30சில சமயம் உங்கள் கைகளை இவ்வாறும் வைத்துக்கொண்டும் இருக்கலாம்.
-
0:30 - 0:33சில சமயங்களில் நாம் கைகளை விரிக்கவும் செய்கிறோம்.
-
0:33 - 0:36நான் உங்களை பார்த்து கொண்டிருக்கிறேன், (சிரிப்பு)
-
0:36 - 0:38எனவே, நீங்கள் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதில் கவனம் செலுத்த சொல்கிறேன்.
-
0:38 - 0:40கொஞ்சம் நேரம் கழித்து மீண்டும் இதை பற்றி பேசுவோம்.
-
0:40 - 0:44இன்னும் கொஞ்சம் நேரத்தில் உங்களது தோற்றத்தை மாற்றி அமைக்க நீங்கள் கற்றுக்கொள்வீர்கள் என நினைக்கிறேன்.
-
0:44 - 0:47அந்த மாற்றம் உங்கள் வாழ்க்கையில் பல மாறுதல்களை ஏற்படுத்தும் திறன் கொண்டது.
-
0:47 - 0:52உடல் தோற்றம் என்பது வியக்கவைக்கும் ஒரு அங்கமாக இருக்கிறது,
-
0:52 - 0:54நாம் முக்கியமாக ஆர்வம் கொண்டிருப்பது
-
0:54 - 0:56மற்றவரின் உடல் தோற்றத்தின்பால்.
-
0:56 - 1:00நம் ஆர்வத்தை தூண்டுவது (சிரிப்பு)
-
1:00 - 1:05ஒரு சங்கடத்தை தரும் செயலெதிர்ச்செயல், ஒரு புன்னகை,
-
1:05 - 1:09இறுமாப்பான பார்வை, அல்லது ஒரு சங்கடம் தரும் கண் சிமிட்டல்,
-
1:09 - 1:12ஒரு கைக்குலுக்கல் கூட.
-
1:12 - 1:15விவரனையாளர்: இவர்கள் பத்தாவது என்னை நெருங்குகிறார்கள். இதை பாருங்கள்.
-
1:15 - 1:17அதிர்ஷ்டசாலி காவல்காரர் அமெரிக்க அதிபருடன் கைகுலுக்குகிறார்.
-
1:17 - 1:20இதனை பாருங்கள்.
-
1:20 - 1:25பிரதம மந்திரி? இல்லை. (சிரிப்பு ) (கைதட்டல்)
-
1:25 - 1:27(சிரிப்பு) (கைத்தட்டல்)
-
1:27 - 1:31எமி கடி: ஒரு கைகுலுக்கல், அல்லது ஒரு கைக்குலுக்கல் இன்மை,
-
1:31 - 1:34நம்மை இந்த நிகழ்வை பற்றி வாரங்களுக்குப் பேச செய்கிறது.
-
1:34 - 1:36பிபிசி மற்றும் தெ நியூ யோர்க் தைம்ஸ்-ஐயும் கூட.
-
1:36 - 1:40எனவே, நாம் மொழியற்ற நடத்தை பற்றியோ
-
1:40 - 1:43உடல் தோற்றத்தை பற்றியோ சிந்திக்கையில் -- மொழியற்ற நடத்தை என்று சமூக அறிவியலாளர்களை பின்தோற்றி கூறுகிறோம். --
-
1:43 - 1:46அது ஒரு மொழி, எனவே, நாம் தொடர்புமுறைகளை பற்றி சிந்திக்கிறோம்.
-
1:46 - 1:48தொடர்புமுறை என்றால், நாம் சிந்திப்பது செயலேதிர்செயலை.
-
1:48 - 1:51ஆகவே, உங்களது தோற்ற அமைவு எனக்கு எதனை புலப்படுத்துகிறது?
-
1:51 - 1:54என்னுடையது உங்களிடம் என்ன சொல்கிறது?
-
1:54 - 1:58உடல் தோற்றம் முக்கிய பங்குவகிக்கும் ஒரு கூறு என்று நம்புவதற்கு காரணங்கள் உண்டு.
-
1:58 - 2:00சமூக அறிவியலாளர்கள் நிறைய நேரம் செலவழித்துள்ளார்கள்,
-
2:00 - 2:04மனிதர்களின் தோற்ற அமைவிற்கும்
-
2:04 - 2:06அதன் காரணமாக தீர்மானிக்கப்படும் கருத்துகளுக்கும் உள்ள தொடர்பை பற்றி அறிவதில்.
-
2:06 - 2:10நாம் ஒருவரின் தோற்ற அமைவை கொண்டு அவரை பற்றிய கருத்துக்களை ஊகிக்கிறோம்.
-
2:10 - 2:14அந்த கருத்துகள் அவரின் வாழ்வில் பல அர்த்தமுள்ள விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
-
2:14 - 2:17யாருக்கு நாம் வேலை தருகிறோம், யாரின்பால் நாம் ஈர்ப்பு கொள்கிறோம்.
-
2:17 - 2:22உதாரணத்திற்கு, நளினி அம்பாடி, தப்த்ஸ் பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியாளர்.
-
2:22 - 2:27முப்பது வினாடிகள் மனிதர்கள்
-
2:27 - 2:30மருத்துவர்க்கும் நோயாளிக்கும் இடையிலான செயலேதிர்செயலை ஒளியற்ற காட்சிகளாக காணும்பொழுது
-
2:30 - 2:32மருத்துவரின் கணிவை பற்றி அவர்கள் கொள்ளும் கருத்து
-
2:32 - 2:35அந்த மருத்துவரின்பால் அவர்கள் வழக்கு தொடுப்பர்களா இல்லையா என்பதை நிர்ணயிக்கிறது என்கிறார்.
-
2:35 - 2:37எனவே, மக்கள் மருத்துவரைப் பற்றி கொள்ளும் கருத்து
-
2:37 - 2:39அவரின் திறமையை சார்ந்தது அல்ல, அவரை மக்களுக்கு பிடித்திருக்கிறதா என்பதையும்,
-
2:39 - 2:42அவர் மக்களுடன் எவ்வாறு நடந்துகொண்டார் என்பதனையும் சார்ந்துள்ளது.
-
2:42 - 2:45இதை விட வியத்தகு செய்தி, அலெக்ஸ் தொடொரோவ்
-
2:45 - 2:49ஒரு வினாடியில் மக்கள் கொள்ளும் அரசியல் வேட்பாளரின் முகம்
-
2:49 - 2:53சார்ந்த கருத்து எழுபது சதவிகித அமெரிக்க சட்டசபை மற்றும்
-
2:53 - 2:57ஆளுநர்களின் தேர்தல் வெற்றி தோல்வியினை நிர்ணயிக்கிறது என்பதுதான்.
-
2:57 - 2:59என்மருவி உலகை பற்றி பார்ப்போம்.
-
2:59 - 3:03இணைய பேச்சுவார்த்தைகளில் உணர்ச்சித்திரங்களைச் சரியாக பயன்படுத்தினால்
-
3:03 - 3:06அந்த பேச்சுவார்த்தையின் மதிப்பு கூடுகிறது.
-
3:06 - 3:09ஆனால், உணர்சித்திரங்களை தவறாய் பயன்படுத்துவது என்பது தவறான திட்டம். உண்மைதானே?
-
3:09 - 3:12ஆகவே, மொழியற்ற நடத்தை எனில், நாம் ஒருவர்பால் கொள்ளும் கருத்து எவ்வாறானது,
-
3:12 - 3:15மற்றவர்கள் நம்பால் எத்தகைய கருத்து கொண்டுள்ளனர் மற்றும் அதன் விளைவுகள் என்ன என்பதை சிந்திக்க தூண்டுகிறது.
-
3:15 - 3:17நமது தோற்ற அமைவு மற்றவர்கள் மட்டுமின்றி
-
3:17 - 3:21நம்மையும் பாதிக்கும் என்பதை மறக்கிறோம்.
-
3:21 - 3:24நமது நடத்தை நம் எண்ணங்களிலும்,
-
3:24 - 3:26உணர்வுகளிலும், உடலியலிலும் தாக்கங்களை ஏற்படுத்துகிறது.
-
3:26 - 3:29எத்தகைய நடத்தையை பற்றி நான் இங்கு பேசுகிறேன்?
-
3:29 - 3:32நான் ஒரு சமூக உளவியலாளர். நான் தவறான எண்ணங்களை பற்றி ஆராய்கிறேன்.
-
3:32 - 3:35ஒரு போட்டித்தன்மையுடைய வர்த்தக பள்ளியில் கற்பிக்கிறேன்.
-
3:35 - 3:39எனவே, அதிகாரத்துவ இயக்கவியலில் நான் ஆர்வம் கொள்வது என்பது தவிர்க்க முடியாத ஒன்று.
-
3:39 - 3:43குறிப்பாக நான் அதிகாரத்துவம் மற்றும் ஆதிக்கவியலின்
-
3:43 - 3:45மொழியற்ற வெளிபாடுகளில் ஆர்வம் கொண்டேன்.
-
3:45 - 3:48அதிகாரத்துவம் மற்றும் ஆதிக்கவியலின் மொழியற்ற வெளிபாடுகள் என்றால் யாவை?
-
3:48 - 3:50இவைதான் அவை.
-
3:50 - 3:53விலங்குகள் அரசில், அவை அரசை விரிவாக்கம் செய்வதில் கவனம் செலுத்தும்.
-
3:53 - 3:56நீங்களும் உங்களை பெரிதாக்குங்கள், உடலை விரியுங்கள்,
-
3:56 - 3:59அதிக இடத்தை ஆகிரமியுங்கள். அடிப்படையில், நீங்கள் உங்களை திறக்கிறீர்கள்.
-
3:59 - 4:02உங்கள் உடலை திறந்தவாறு அமைப்பதுதான், இரகசியமே.
-
4:02 - 4:06விலங்கியல் உலகில் இது முற்றிலும் உண்மை. வெறும் விலங்குகளுக்கு மட்டும் இது பொருந்துவது இல்லை.
-
4:06 - 4:09மனிதர்களும் இதையே செய்கிறார்கள். (சிரிப்பு)
-
4:09 - 4:13மனிதர்களும், விலங்குகளும் அவர்களுக்கு அதிகாரம் கிடைக்கும் தருணங்களிலும்,
-
4:13 - 4:16ஆதிக்க உணர்வுகொள்ளும்போதும் இவ்வாறு நடந்துகொள்கிறார்கள்.
-
4:16 - 4:19இது ஆதிக்கத்தின்
-
4:19 - 4:23உலகளாவிய தன்மையையும், பழைமையையும் தெளிவுறுத்துகிறது.
-
4:23 - 4:25பெருமிதம் என்று அடையாளப்படுத்துகிற இத்தகைய உணர்வின் வெளிப்பாட்டை
-
4:25 - 4:28ஜெசிக்கா த்திரேசி ஆராய்ந்துள்ளார்.
-
4:28 - 4:31அவர் பார்க்கும் திறன் உற்றோர்
-
4:31 - 4:33மற்றும் பிறவி குருடர்கள் ஆகிய இரு சாராரும்
-
4:33 - 4:36உடல் திறனை அளவிடும் போட்டிகளில் வெற்றி பெரும்பொழுது இவ்வாறு செய்கிறார்கள் என்று கூறுகிறார்.
-
4:36 - 4:38முடிவுக்கோட்டை அடைந்து வெற்றி என்பது உறுதியானவுடன்,
-
4:38 - 4:40ஒருவர் முன்பின் மற்றொருவர் இவ்வாறு செய்வதை கண்டிருக்கிறாறோ இல்லையோ,
-
4:40 - 4:41இவ்வாறு செய்கிறார்.
-
4:41 - 4:44கைகளை 'V' வடிவில் மேல் நோக்கியவாறு விரிக்கிறார். அவரின் தாட்டை சற்று உயர்த்தப்படுகிறது.
-
4:44 - 4:47நாம் வலுவின்றி இருக்கையில் என்ன செய்கிறோம்?
-
4:47 - 4:51இதற்கு எதிர்மாறாக செய்கிறோம். நம்மை நாம் மடித்துகொள்கிறோம்.
-
4:51 - 4:54நம்மை நாம் சிறுதாக்குகிறோம்.
-
4:54 - 4:57எனவே, மீண்டும் மனிதர்களும் விலங்குகளும் ஒரேவாறு செயல்படுகின்றனர்.
-
4:57 - 5:01ஆதிகத்தன்மையையும் ஆதிகத்தன்மை இன்மையையும் ஒன்றாய் இணைக்கும்பொழுது இவ்வாறு நடக்கிறது.
-
5:01 - 5:03எனவே, ஆதிக்கதன்மையை பொறுத்தவரையில்
-
5:03 - 5:07நாம் இன்னொருவரின் மொழியற்ற நடத்தையை முழுமையடைய செய்கிறோம்.
-
5:07 - 5:10ஒருவர் நம்மிடம் ஆதிக்கத்துடன் நடக்கையில்
-
5:10 - 5:12நாம் நம்மை சிறிதாக ஆக்கிகொள்கிறோம். நாம் அவரை போல் செய்வதில்லை.
-
5:12 - 5:14அவருக்கு எதிர்மாறாக செயல்படுகிறோம்.
-
5:14 - 5:17நான் இந்த நடத்தையை என் வகுப்பறையில் கண்காணித்தபொழுது
-
5:17 - 5:24என்ன அறிந்தேன்? முதுகலை வணிக மேலாண்மை மாணவர்கள்
-
5:24 - 5:27முழுமையான மொழியற்ற நடைத்தையை வெளிப்படுத்துகிறார்கள்.
-
5:27 - 5:29சிலர் அல்பாகளின் கேளிச்சித்திரங்களை போலிருப்பர்,
-
5:29 - 5:32வகுப்பறைக்குள் வந்தவுடன், அதன் நடுவிற்கு செல்வர்.
-
5:32 - 5:36வகுப்பு ஆரம்பிக்கும் முன்னே, தங்களிற்கான இடத்தை ஆகிரமிப்பர்.
-
5:36 - 5:38அமருகையில், நன்றாய் இடத்தை நிரப்பியவாறு அமர்ந்திருப்பர்.
-
5:38 - 5:40கைகளை தூக்குகையில், இவ்வாறு தூக்குவர்.
-
5:40 - 5:43இதே நேரத்தில், மற்ற சிலர் கிட்டத்தட்ட வீழ்ச்சியடைந்த
-
5:43 - 5:45நிலையில் வகுப்பறைக்குள் நுழைவர். நுழையும்போதே நீங்கள் காண்பீர்கள்.
-
5:45 - 5:48அவரது முகத்தில், உடலில், அவர்கள் உட்காரும் இடத்தில்
-
5:48 - 5:50நாற்காலியில் அவர்கள் தங்களை சிறிதாக ஆக்கியிருப்பர்.
-
5:50 - 5:53கைகளை தூக்கும்பொழுது இவ்வாறு இருப்பர்.
-
5:53 - 5:55இந்த நடத்தைகளை பற்றி நான் சில விஷயங்களை கவனித்துள்ளேன்.
-
5:55 - 5:56ஒன்று, நீங்கள் அறிந்ததே,
-
5:56 - 5:59அவர்களின் பாலைப் பொருத்து இந்த நடத்தை அமைகிறது.
-
5:59 - 6:04பெண்கள் ஆண்களைக் காட்டிலும் இவ்வாறு அதிகமாக செய்கின்றனர்.
-
6:04 - 6:07பெண்கள் ஆண்களைவிட தாங்கள் குறைவான ஆளுமைத்தனம் கொண்டவர்களாக நினைக்கின்றனர்.
-
6:07 - 6:11எனவே, இது ஆச்சரியத்திற்க்கு உரியதல்ல.
-
6:11 - 6:14இத்தகைய நடத்தை
-
6:14 - 6:17அவர்கள் வகுப்பு நடவடிக்கைகளில் பங்கேற்கும் அளவினை பொருத்தும்,அந்த நடவடிக்கைகளில் அவர்களின் அடைவுநிலையை பொருத்தும் கூட அமைகிறது.
-
6:17 - 6:20எனவே இது முதுகலை வணிக மேலாண்மை வகுப்பறைகளில் மிகவும் முக்கியமாகிறது.
-
6:20 - 6:23ஏனெனில், மாணவர்களின் வகுப்பு பங்கேற்பு அவ்வகுப்பிற்கான பாதி மதிப்பெண்களை நிர்ணயிக்கிறது.
-
6:23 - 6:27எனவே, வர்த்தகப்பள்ளிகள் மாணவர்களுக்கிடையிலான இந்த பாலினம் சார்ந்த வேற்றுமையை களைய முயற்சிக்கின்றன.
-
6:27 - 6:30இங்கு சரிசம அளவில் தகுதிவாய்ந்த ஆண்களும் பெண்களும் கற்க வருகின்றனர்.
-
6:30 - 6:32அவர்களது மதிப்பெண்களில் இத்தகைய வித்தியாசங்களை காண்கிறீர்கள்..
-
6:32 - 6:36இந்த வித்தியாசம் அவர்களது வகுப்பு பங்கேற்பின் காரணமாக அமைகிறது.
-
6:36 - 6:39எனவே, என் எண்ணங்கள் உருவெடுத்தன,
-
6:39 - 6:41இத்தகைய நிலையை
-
6:41 - 6:45மாணவர்கள் ஆளுமைத்தனம் கொண்ட தோற்ற அமைவுகளை பாசாங்கு செய்வதின் மூலம் மாற்றமுடியுமா?
-
6:45 - 6:47இந்த மாற்றம் அவர்களின் வகுப்பு பங்கேற்பில் மாற்றம் ஏற்படுத்துமா?
-
6:47 - 6:51எனது முதன்மை கூட்டுபணியாளர் டானா கார்நி, பெர்கெலியில் இருக்கிறார்.
-
6:51 - 6:55பாசாங்கு செய்வதன் மூலம் அனைத்தையும் மாற்ற முடியுமா என்பதை கண்டறிய விரும்பினேன்.
-
6:55 - 6:58சிறிது நாள் பாசாங்கு செய்வது உண்மையில்
-
6:58 - 7:02உங்களை ஓர் ஆளுமைத்தனம் கொண்டவராய் மாற்றுமா?
-
7:02 - 7:05எனவே, நடத்தை என்பது நம்மை மற்றவர்
-
7:05 - 7:07எத்தகையவர் என நினைப்பதற்கு காரணமாகிறது. இந்த கருத்தை நிலைநிறுத்த நிறைய ஆதாரங்களும் உண்டு.
-
7:07 - 7:10ஆனால், நமது கேள்வி, நம் மொழியற்ற நடத்தை
-
7:10 - 7:13நம்மை பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்பதை நிர்ணயிப்பதில் பங்காற்றுகிறதா?
-
7:13 - 7:16சில ஆதாரங்கள் அதனை புலப்படுத்துகின்றன.
-
7:16 - 7:21உதாரணத்திற்கு, நாம் புன்னகைக்கும்பொழுது நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம்..
-
7:21 - 7:23ஆனால், நாம் ஒரு பேனாவை பற்களுக்கு இடையே வைத்து,
-
7:23 - 7:27புன்னகைக்க வற்புறுத்தப்படுகிறபொழுதும், நாம் மகிழ்ச்சியடைகிறோம்.
-
7:27 - 7:30எனவே, இரு வழியும் சாத்தியம். ஆளுமைத்தனமும்
-
7:30 - 7:35இரு வழியிலும் சாத்தியமாகும். நீங்கள் ஆதிக்க உணர்வு பெறும்பொழுது,
-
7:35 - 7:39நீங்கள் இவ்வாறு செய்ய அதிக வாய்ப்பிருக்கிறது. ஆனால், பாசாங்கு செய்வதன் மூலம்
-
7:39 - 7:44ஆதிக்கத்தன்மை கொண்டவராய் வெளிப்படுவீர்.
-
7:44 - 7:47நீங்கள் உண்மையிலேயே ஆளுமை உணர்வை அடைவீர்கள்.
-
7:47 - 7:50எனவே, இரண்டாவது கேள்வி,
-
7:50 - 7:53எண்ணம் உடலில் மாற்றத்தை ஏற்படுத்துகிறபொழுது
-
7:53 - 7:57உடல், எண்ணங்களை மாற்றமுடியுமா?
-
7:57 - 8:00நான் ஆளுமை எண்ணம் என்று கூறுவது
-
8:00 - 8:01எதனை?
-
8:01 - 8:03சிந்தனைகளை, உணர்வுகளை,
-
8:03 - 8:07சிந்தனை மற்றும் எண்ணங்களை உருவாக்கும் உடலியல் கூறுகளைதான்.
-
8:07 - 8:10இந்த பகுதியில், நான் வளரூக்கியை கண்காணிக்கிறேன்
-
8:10 - 8:13ஆளுமை உணர்வு கொண்டவர்களின் எண்ணங்களும் ஆளுமை உணர்வு அற்றவர்களின் எண்ணங்களும்
-
8:13 - 8:14ஒத்தவையா?
-
8:14 - 8:19ஆளுமை உணர்வு உடையவர்கள்
-
8:19 - 8:23உறுதி, நம்பிக்கை மற்றும் தெருள் நோக்குடையவராக இருக்கிறார்கள்.
-
8:23 - 8:26உண்மையில் ஒரு விளையாட்டில் வெற்றிபெற்றுவிடுவோம் என்றே உணர்கிறார்கள்.
-
8:26 - 8:30அருவமான சிந்தனையாளர்களாக இருக்கிறார்கள்.
-
8:30 - 8:33நிறைய வேறுபாடுகள் உண்டு. அவர்கள் அதிகமான சவால்களை ஏற்கின்றனர்.
-
8:33 - 8:35ஆதிக்க உணர்வு கொண்டவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.
-
8:35 - 8:39உடலியக்கவியல் அடிப்படையிலும் இரண்டு
-
8:39 - 8:43முக்கிய வளரூக்கிகள் உள்ளன: டெஸ்ட்டாஸ்ட்டுரோன், மேலாதிக்கயியல் கொண்டது,
-
8:43 - 8:46மற்றும் கார்டிசோல், மன அழுத்தத்திற்கான வளரூக்கி.
-
8:46 - 8:50நாம் கண்டறிந்தது என்னவென்றால்
-
8:50 - 8:54விலங்குகள் அடுக்கதிகாரத்தில் மேலாதிக்க உணர்வு கொண்ட அல்பா ஆண் விலங்குகள்
-
8:54 - 8:57அதிக டெஸ்டோஸ்டிரோனும் குறைந்த கார்டிசோலும் கொண்டுள்ளன.
-
8:57 - 9:00ஆளுமையும் திறனும் கொண்ட தலைவர்களும்
-
9:00 - 9:03அதிக டெஸ்டோஸ்டிரோனும் குறைந்த கார்டிசோலும் கொண்டுள்ளனர்.
-
9:03 - 9:05இதன் பொருள் என்ன? நாம் ஆளுமை என்று சிந்திக்கும்போழுது,
-
9:05 - 9:07டெஸ்டோஸ்டிரோனைப் பற்றி மட்டுமே எண்ணுகிறோம்.
-
9:07 - 9:09ஏனென்றால், டெஸ்டோஸ்டிரோன் ஆதிக்கத்துடன் இயைந்துள்ளது.
-
9:09 - 9:13ஆனால், உண்மையில், ஆளுமை என்பது ஒருவர் மன அழுத்தத்திற்கு எப்படி எதிர்செயலாற்றுகிறார் என்பதை பொருத்தது.
-
9:13 - 9:16எனவே உங்களுக்கு ஆளுமைத்தனம் கொண்ட, ஆதிக்கமுடைய ஒரு தலைவர்,
-
9:16 - 9:18அதிக டெஸ்டோஸ்டிரோனுடன் மன அழுத்தத்திற்கு ஆளாகுபவராகவும் இருப்பவர் வேண்டுமா?
-
9:18 - 9:21இல்லைதானே? உங்களுக்கு
-
9:21 - 9:23ஆளுமை, உறுதி, ஆதிக்கம் கொண்ட,
-
9:23 - 9:27ஆனால், மன அழுத்தம் அடையாத ஒருவர்தானே வேண்டும்.
-
9:27 - 9:33விலங்குகள் அடுக்கதிகாரத்தில், ஒரு அல்பா
-
9:33 - 9:37ஆட்சியை பிடிக்க வேண்டுமேன்றால், ஒருவர் உடனடியாக
-
9:37 - 9:39ஒரு அல்பாவின் பங்கினை ஆற்றவேண்டும் என்றால்,
-
9:39 - 9:42சில நாட்களில், அவரின் டெஸ்டோஸ்டிரோனின் அளவு அதிகரித்து
-
9:42 - 9:46கார்டிசோளின் அளவு குறையும்.
-
9:46 - 9:49நிரூபமானது என்னவென்றால், உடலால்
-
9:49 - 9:51எண்ணங்களை மாற்ற முடியும், முகத்தோற்ற மாற்றத்துடன்,
-
9:51 - 9:55தன் பணியில் ஏற்படும் மாற்றம் எண்ணத்தையும் மாற்றும்.
-
9:55 - 9:58நீங்கள், ஒரு மாற்றத்தை ஏற்பதாக இருப்பின்,
-
9:58 - 10:01சிறிய அளவிலான இத்தகைய
-
10:01 - 10:03தக ஆளுகை, தலையீடு எந்த மாற்றத்தினை ஏற்படுத்தும்?
-
10:03 - 10:06இரு நிமிடங்களுக்கு, இப்படி நில்லுங்கள்.
-
10:06 - 10:09இது உங்களை ஆளுமை உணர்வு உடையவராய் மாற்றும்.
-
10:09 - 10:13இதனைத்தான் நாங்கள் செய்தோம். மனிதர்களை
-
10:13 - 10:17ஆய்வுக்கூடத்திற்கு அழைத்து, ஒரு ஆய்வு நடத்தினோம்.
-
10:17 - 10:22இரு நிமிடங்களுக்கு, ஆளுமைத்தனம் கொண்ட தோரணையை
-
10:22 - 10:24அல்லது ஆளுமைத்தனம் கொண்டிராத தோரணையை செய்தனர்.
-
10:24 - 10:27உங்களிடம் சில தோரணைகளை காட்டுகிறேன்.
-
10:27 - 10:29ஒன்று.
-
10:29 - 10:31மேலும் பல.
-
10:31 - 10:34இது "வண்டர் வுமன்" கதாபாத்திரத்தை போன்றது
-
10:34 - 10:37என ஊடங்கங்கள் கூறின.
-
10:37 - 10:38மேலும் சில.
-
10:38 - 10:40எனவே, நீங்கள் நின்றவாரும், அமர்ந்தவாரும் இருக்கலாம்.
-
10:40 - 10:42இவை ஆதிக்க உணர்வற்ற தோரணைகள்.
-
10:42 - 10:46இதனில் நீங்கள் உடலை குறுக்கி, சிறிதாக ஆக்கியுள்ளீர்கள்.
-
10:46 - 10:48இது மிகவும் ஆதிக்க உணர்வற்ற தோரணை.
-
10:48 - 10:49நீங்கள் உங்கள் கழுத்தை தொட்டவாறு இருக்கும்பொழுது
-
10:49 - 10:52உங்களை நீங்கள் பாதுகாக்கிறீர்கள்.
-
10:52 - 10:55எனவே, இதுதான் நடக்கிறது. ஆராய்ச்சியில் பங்கேற்பவர்கள் வந்தவுடன்
-
10:55 - 10:56ஒரு குப்பியில் அவர்களது எச்சில் சேகரிக்கபட்டது.
-
10:56 - 11:00இரு நிமிடங்களுக்கு "இதனை செய்யுங்கள்" என்று சொன்னோம்.
-
11:00 - 11:01அவர்கள் இந்த படங்களை பார்க்கவில்லை. எங்கள் எண்ணம் அவர்களுக்கு
-
11:01 - 11:05ஆதிக்க உணர்வை ஊட்டக்கூடாது என்பதுதான். அவர்களே அதனை உணர வேண்டும் அல்லவா?
-
11:05 - 11:07எனவே, இவ்வாறு இரண்டு நிமிடங்களுக்கு செய்கிறார்கள்.
-
11:07 - 11:10பின்னர், சில பொருள்களை காட்டி "நீங்கள் எவ்வளவு ஆளுமையை உணர்கிறீர்கள்" என்று கேட்போம்.
-
11:10 - 11:13அதன் பின், அவர்களுக்கு சூதாட வாய்ப்பளிப்போம்.
-
11:13 - 11:16மீண்டும் அவர்களது எச்சிலை சேகரிப்போம்.
-
11:16 - 11:17இதுதான் அந்த ஆய்வு.
-
11:17 - 11:21நாங்கள் கண்டறிந்தது. சாவல்களை சகிப்பது, அதாவது, சூதாடுவது,
-
11:21 - 11:24ஆளுமைத்தனம் கொண்ட தோரணைகளை செய்யும்பொழுது,
-
11:24 - 11:27எண்பத்தாறு சதவிகித மக்கள் சூதாடுகிறார்கள்.
-
11:27 - 11:29ஆளுமைத்தனம் அற்ற தோரணைகளை செய்யும்பொழுது,
-
11:29 - 11:33அறுபது சதவிகித மக்கள் மட்டுமே சூதாடுகிறார்கள். இது பெரிய வேறுபாடு.
-
11:33 - 11:36டெஸ்டோஸ்டிரோனைப் பற்றி நாங்கள் கண்டறிந்தது,
-
11:36 - 11:39ஆளுமைத்தனம் கொண்ட தோரணைகளை செய்த மக்களின் டெஸ்டோஸ்டிரோன் ,
-
11:39 - 11:42அவர்கள் ஆய்வுகூடத்திற்க்கு வந்தபொழுதைவிட இருபது சதவிகிதம் அதிகரித்தது.
-
11:42 - 11:46ஆளுமைத்தனம் அற்ற தோரணைகளை செய்த மக்களின் டெஸ்டோஸ்டிரோன் பத்து சதவிகிதம் குறைந்தது.
-
11:46 - 11:49எனவே, வெறும் இரண்டு நிமிடங்களில் இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன.
-
11:49 - 11:52கார்டிசோல் பற்றி இக்கருத்து. ஆளுமைத்தனம் கொண்ட மக்கள்
-
11:52 - 11:55இருபத்தைந்து சதவிகித குறைவை காண்கின்றனர்.
-
11:55 - 11:59ஆளுமைத்தனம் அற்ற மக்கள் பதினைந்து சதவிகித அதிகரிப்பை காண்கின்றனர்.
-
11:59 - 12:02இரண்டு நிமிடங்களில் இந்த வளரூக்கியில் வேறுபாடு ஏற்பட்டு
-
12:02 - 12:05மூளையை
-
12:05 - 12:08உறுதி, நம்பிக்கை மற்றும் சுற்றுசூழலை ஏற்கும்வாரும்
-
12:08 - 12:12அல்லது மன அழுத்ததிற்கு ஆளாகி
-
12:12 - 12:16முழுமையாய் தோல்வியுருபவராகவும் மாற்றுகிறது.
-
12:16 - 12:19எனவே, மொழியற்ற நடத்தை
-
12:19 - 12:21நமது சிந்தனையையும் உணர்வுகளையும் ஆளுகிறது.
-
12:21 - 12:23இது இன்னொருவரை மட்டும் பாதிப்பதில்லை. நம்மையும்தான்.
-
12:23 - 12:26நமது உடல் எண்ணத்தை மாற்றுகிறது.
-
12:26 - 12:28அடுத்த கேள்வி என்னவேனில்
-
12:28 - 12:30ஆதிக்கத்தன்மை கொண்ட தோரணைகளை ஒரு சில நிமிடங்கள் செய்வது
-
12:30 - 12:32நமது வாழ்வை புரட்டி போடுமா?
-
12:32 - 12:35இது ஓர் ஆய்வுக்கூடம். இது ஒரு சிறிய பயிற்சி.
-
12:35 - 12:37ஒரு சில நிமிடங்கள் மட்டும்தான். நீங்கள் உண்மையில்
-
12:37 - 12:40இதனை எங்கு பயன்கொள்ள முடியும்? இதைதான் நாங்கள் கண்டறிய விரும்பினோம்.
-
12:40 - 12:44முக்கியம் என்னவென்றால்
-
12:44 - 12:47நீங்கள் எத்தகைய மதிப்பீடக்கூடிய சூழல்களில் குறிப்பாக, சமூக அச்சுறுத்தல்கள் கொண்ட நேரங்களில்
-
12:47 - 12:50இதனை பயன்படுத்துவீர்களா என்பதே. எங்கு நீங்கள் உங்கள் நண்பர்களால்
-
12:50 - 12:54மதிப்பீடபடுகிறீர்கள்? பள்ளிமாணவர்கள் பள்ளி சிற்றுண்டிசாலையில் மதிப்பீடபடுவார்கள்.
-
12:54 - 12:56சிலருக்கு பள்ளி ஆலோசக குழுவின்
-
12:56 - 12:59கூட்டங்களில் பேசுவதாக இருக்கும். ஒரு ஆலோசனையை முன்மொழிதலாக இருக்கலாம்.
-
12:59 - 13:02ஒர் உரையாற்றுவதாக இருக்கலாம்.
-
13:02 - 13:05அல்லது, ஒரு வேலைக்கான நேர்முகக்காணலாக இருக்கலாம்.
-
13:05 - 13:07மக்கள் அதிகம் தொடர்புபடுத்தகூடியது,
-
13:07 - 13:08அவர்கள் அதிகம் எதிர்கொள்வது
-
13:08 - 13:10நேர்முகக்காணல்கள்தான்.
-
13:10 - 13:14எனவே, நாங்கள் எங்களது ஆய்வு முடிவினை, ஊடங்கங்களில்
-
13:14 - 13:16பிரசுரித்தோம். நீங்கள் நேர்முகக்காணலுக்கு
-
13:16 - 13:20செல்லும்பொழுது இதை செய்வீர்களா? (சிரிப்பு)
-
13:20 - 13:22நாங்கள் பயந்தோம்.
-
13:22 - 13:24நாங்கள் இவ்வாறு செய்யுங்கள் என்று சொல்லவில்லை.
-
13:24 - 13:27சில காரங்களுக்காக, தயவு செய்து அவ்வாறு செய்து விடாதீர்கள்.
-
13:27 - 13:30இந்த மாற்றம் நீங்கள் மற்றவருடன் பேசுவதால் ஏற்படாது.
-
13:30 - 13:31நீங்கள் உங்களுடனே பேச வேண்டும்.
-
13:31 - 13:34ஒரு நேர்முகக்காணலுக்கு செல்லும் முன் என்ன செய்வீர்கள்? இப்படித்தானே?
-
13:34 - 13:36ஆமாவா? நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். உங்கள் "ஐபோனை"யோ, அன்ரோய்ட்டையோ
-
13:36 - 13:39பார்த்து கொண்டிருப்பீர்.
-
13:39 - 13:41உங்கள் குறிப்புகளைப் பார்த்து கொண்டிருகிறீர்கள்,
-
13:41 - 13:43கூனி, உங்களை சிறிதாக்கி உள்ளீர்கள்.
-
13:43 - 13:45உண்மையில் இதைத்தான் செய்ய வேண்டும்.
-
13:45 - 13:48கழிவறையில் இரு நிமிடங்களுக்கு இவ்வாறு செய்யுங்கள்.
-
13:48 - 13:50இதன் விளைவை நாங்கள் ஆய்வு செய்ய விரும்பினோம்.
-
13:50 - 13:52சிலரை ஆய்வுகூடத்திற்க்கு அழைத்து
-
13:52 - 13:55ஆதிக்கதன்மை கொண்ட அல்லது கொண்டிராத தோரணைகளை செய்ய கூறினோம்.
-
13:55 - 13:58பின்னர், ஒரு கடினமான அவர்கள் நேர்முகக்காணலை எதிர்க்கொண்டார்கள்.
-
13:58 - 14:02அது ஐந்து நிமிடங்களுக்கு நீண்டது. அவர்களை ஒளிப்பதிவு செய்தோம்.
-
14:02 - 14:04அவர்கள் மதிப்பீடப்படுகிறார்கள், மதிப்பீடுபவர்கள்
-
14:04 - 14:08மொழியற்ற நடத்தைகள் வெளிப்படுத்தாதிருக்க பயிற்றுவிக்கப்பட்டவர்கள்.
-
14:08 - 14:10இப்படிதான் தோன்றுவார்கள். கற்பனை செய்யுங்கள்.
-
14:10 - 14:12உங்களை இவர் நேர்முகக்காணல் செய்தால்.
-
14:12 - 14:17ஐந்து நிமிடங்களுக்கு அவர் உங்களிடம் எந்த ஒரு உணர்வையும் வெளிப்படுத்தமாட்டார்.
-
14:17 - 14:20மக்கள் இதனை வெறுப்பர். மேரியேன் லாப்ரன்ஸ் இதைத்தான்
-
14:20 - 14:22"சமூக புதைமணலில் நிற்பது" என்று கூறுவார்.
-
14:22 - 14:24இந்த நிகழ்வு உங்கள் கார்டிசோலை அதிகரிக்கும்.
-
14:24 - 14:26நேர்முகக்காணலில்
-
14:26 - 14:28என்னதான் நடக்கிறது என்பதை நாங்கள் அறிய விரும்பினோம்.
-
14:28 - 14:32நேர்முகக்காணலின் ஒளிப்பதிவை நான்கு குறியீடாக்கிகளைப் பார்க்க செய்தோம்.
-
14:32 - 14:35அவர்களுக்கு இந்த கருதுகோளைப் பற்றி எதுவும் தெரியாது. இந்த மாறிகளைப் பற்றியும் தெரியாது.
-
14:35 - 14:38எவர் எந்த தோரணையை செய்தவர் என்றும் தெரியாது.
-
14:38 - 14:43ஒளிப்பதிவை கண்டதும்,
-
14:43 - 14:45"நாங்கள் இவர்களுக்கு வேலை தருவோம்" என சுட்டினார்கள். அனைவரும் ஆதிக்கத்தன்மை கொண்ட தோரணைகளை செய்தவர்கள்.
-
14:45 - 14:48சிலருக்கு "நாங்கள் வேலை தர மாட்டோம்" என்றும் சுட்டினார்கள்.
-
14:48 - 14:51ஆதிக்கத்தன்மை கொண்ட தோரணைகள் செய்தவர்களை ஆக்கமானவர்களாக மதிப்பீட்டனர்.
-
14:51 - 14:56இதன் காரணம் யாது? நேர்முகக்காணல் பங்கேற்பாளர்களின் பேச்சு அல்ல.
-
14:56 - 14:59அவர்கள் வழங்கும் உளதாம்தன்மையே.
-
14:59 - 15:01நாங்களும் இவர்களை மதிப்பீட்டோம்.
-
15:01 - 15:04திறன், வடிவமைக்கப்பட்ட பேச்சின் திறம்,
-
15:04 - 15:06அவர்களின் தகுதிகள் ஆகிய அடிப்படைகளில்.
-
15:06 - 15:09இந்த மாறிகள் எந்த மாற்றைத்தையும் ஏற்படுத்தவில்லை. மாற்றம் ஏற்படுத்தியது ஆளுமைதிறன் மட்டுமே.
-
15:09 - 15:13மக்கள் தங்களுடன் இந்த தகுதிகளை கொண்டுவருகிறார்கள்.
-
15:13 - 15:15அடிப்படையில், அவர்களையே கொண்டுவருகிறார்கள்.
-
15:15 - 15:17அவர்களின் திட்டங்களை, அவர்களாகவே,
-
15:17 - 15:19எந்த ஒரு பகுதியையும் எங்கும் விட்டுவிட்டு வரவில்லை.
-
15:19 - 15:24எனவே, இதுதான் விளைவுகளை ஏற்படுத்துகிறது.
-
15:24 - 15:28எனவே, நான் மக்களிடம் கூறுவது,
-
15:28 - 15:31நமது உடல் நம் எண்ணங்களை மாற்றுகிறது, நமது எண்ணம் நமது நடத்தையை மாற்றும் என்பதும்தான்.
-
15:31 - 15:34நமது நடத்தை பல நிகழ்வுகளின் வெளிப்பாடுகளை மாற்றும். மக்களோ,
-
15:34 - 15:35"இந்தே மாற்றங்கள், பொய்யானவை" என்று கூறுகிறார்கள். உண்மைதானே?
-
15:35 - 15:39எனவே, நடியுங்கள், இந்த நடிப்பே நீங்களாகும் வரை என்று நான் கூற, அவர்களோ இந்த மாற்றங்கள் நாங்கள் அல்லவே என்றனர்.
-
15:39 - 15:42நான் நானாக இருக்க விரும்புகிறேன். பகடாக வாழ விரும்பவில்லை.
-
15:42 - 15:44நான் ஒர் ஏமாற்றுக்காரராய் உணர விரும்பவில்லை.
-
15:44 - 15:48இந்த மாற்றங்களால் வரும் வாழ்க்கையில், நான் இதற்கு தகுதியானவர் அல்ல என உணர விரும்பவில்லை.
-
15:48 - 15:50இந்த கருத்து என்னை உற்சாகம் செய்தது.
-
15:50 - 15:53ஒரு கதை சொல்கிறேன்
-
15:53 - 15:56எமாற்றுக்காரராய், நான் இங்கிருக்க தகுதி உடையவர் அல்ல என்ற உணர்வுகளை பற்றி.
-
15:56 - 15:59எனது பதின் ஒன்பதாம் வயதில், ஒரு மகிழுந்து விபத்தில் சிக்கினேன்.
-
15:59 - 16:02காரிலிருந்து வெளியே தூக்கி எரியபட்டு, உருண்டேன்.
-
16:02 - 16:06எழுந்து பார்த்தபோது, தலையில் பலத்த அடியுடன் புனர்வாழ்வு மருத்துவகூடத்தில் இருந்தேன்.
-
16:06 - 16:09கல்லூரியிலிருந்து நிறுத்திவிட்டார்கள்.
-
16:09 - 16:15எனது I.Q.-எனும் அறிவுத்திற அளவெண் இரண்டு திட்ட விலக்கம் குறைந்துவிட்டது.
-
16:15 - 16:18இந்த செய்தி மிகவும் வருத்தத்திற்குரியது.
-
16:18 - 16:21எனக்கு என் அறிவுத்திற அளவெண் தெரியும். அதற்கு காரணம், நான் அறிவாளி என அடையாளப்படுத்தப்பட்டவர்.
-
16:21 - 16:23சிறு வயதிலேயே, நான் ஒரு பாக்கியசாலி.
-
16:23 - 16:26கல்லூரிக்குத் திரும்பி போக முயற்சித்தேன்.
-
16:26 - 16:28அனைவரும், "நீ கல்லூரி படிப்பை முடிக்கமாட்டாய்.
-
16:28 - 16:30நீ செய்வதற்கு மற்ற காரியங்கள் உண்டு,
-
16:30 - 16:32கல்லூரி உனக்கு பொருந்தாது" என்றனர்..
-
16:32 - 16:36எனவே, நான் மிகவும் கஷ்டப்பட்டேன்.
-
16:36 - 16:39எனது அடையாளம் என்னிடமிருந்து பறிக்கப்பட்டது.
-
16:39 - 16:41எனது அடையாளம் அறிவாளி என்பது.
-
16:41 - 16:45அது பறிக்கப்பட்டபொழுது, அதனை விட வலுவிழந்த நிலை வேறில்லை.
-
16:45 - 16:48ஆளுமைத்திறனின்றி, நான் உழைத்தேன்.
-
16:48 - 16:51அதிர்ஷ்டவசமாய், எனக்கு வழி பிறந்தது.
-
16:51 - 16:53நான் கல்லூரி படிப்பை முடித்து பட்டம் பெற்றேன்.
-
16:53 - 16:55மற்றவர்களைவிட நான்கு வருடங்கள் அதிகமாக ஆயிற்று.
-
16:55 - 17:00எனது ஆலோசகர், சூசன் பிஸ்கேவை நம்பவைத்தேன்,
-
17:00 - 17:03என்னை அவர் மாணவரை ஏற்க. பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன்.
-
17:03 - 17:06அப்பொழுது, நான் இங்கிருக்க தகுதி உடையவர் அல்ல.
-
17:06 - 17:07நான் எமாற்றுகிறேன் என தோன்றியது.
-
17:07 - 17:08மறுநாள் இரவு முதல் வருட மாணவர்களுக்கான உரை இருந்தது.
-
17:08 - 17:11இருபது நிமிட உரை
-
17:11 - 17:13இருபது பேரின் முன்னிலையில் ஆற்ற வேண்டும். அவ்வளவுதான்.
-
17:13 - 17:16எனக்கு ஒரே பயம். நாளை, என்னை பற்றி அனைவரும் கண்டுபிடித்திடுவார்களோ என்று.
-
17:16 - 17:19எனது ஆலோசகரை தொலைபேசியில் அழைத்து, "நான் படிப்பை கைவிடுகிறேன்" என்றேன்.
-
17:19 - 17:21அவரோ, "நீ இதனை கைவிடுவதில்லை,
-
17:21 - 17:23ஏனெனில் நான் உனக்கு ஒரு வாய்ப்பு தர முயற்சித்திருக்கிறேன், நீ இங்குதான் இருக்க போகிறாய்.
-
17:23 - 17:25இங்கு இருந்து, படிக்கதான் போகிறாய்.
-
17:25 - 17:27நீ பாசாங்கு செய்.
-
17:27 - 17:31உன்னை உரையாற்ற கூறி வரும் ஒவ்வொரு முறையும் நீ உரையாற்றபோகிறாய்.
-
17:31 - 17:32இதையே தொடர்ந்து செய்து கொண்டிரு,
-
17:32 - 17:35நீ பயந்தாலும், செயலிழந்தாலும்,
-
17:35 - 17:38உன் உடலும் ஆத்மாவும் வெவ்வேறாய் தோன்றினாலும்,
-
17:38 - 17:41தொடந்து செய், "நானே இதனை செய்கிறேன்,
-
17:41 - 17:44நான் உரை ஆற்றுகிறேன். உரை ஆற்றுபவராய் மாறியிருக்கிறேன்." என்று நீ உணர்ந்து ஏற்கும் வரையில்.
-
17:44 - 17:46அவர் கூறியவாறு செய்தேன். ஐந்து வருட முதுகலைக்கல்வி,
-
17:46 - 17:48சில வருடங்கள் நோர்த்வெஸ்தெர்ன் பல்கலைக்கழகத்தில்,
-
17:48 - 17:51பின்னர், ஹார்வர்ட்.
-
17:51 - 17:54உண்மையில் இப்பொழுது எனக்கு அத்தகைய எண்ணங்களே இல்லை. ஆனால், நெடுநாட்களுக்கு,
-
17:54 - 17:56"நான் இங்கு இருக்க கூடாது" என்று எண்ணி இருந்தேன்.
-
17:56 - 17:59ஹார்வர்ட் முதல் ஆண்டு இறுதியின் பொழுது,
-
17:59 - 18:04வகுப்பில் ஒரு முறையும் பேசியிராத மாணவரிடம்,
-
18:04 - 18:07"நீ வகுப்பில் பங்கேற்க வேண்டும். இல்லையேல், நீ தேர்ச்சி அடையமாட்டாய்" என்று சொல்லி இருந்தேன் .
-
18:07 - 18:09அந்த மாணவர் என் அலுவலுகத்திற்க்கு வந்தார். எனக்கு அவரை அவ்வளவாக தெரியாது.
-
18:09 - 18:13தோல்வியின் அடையாளமாய் அங்கு வந்த அந்த மாணவி,
-
18:13 - 18:19"நான் இங்கு இருக்க கூடாது" என்றார்.
-
18:19 - 18:23அந்த தருணம் எனக்கே உரித்தானது.
-
18:23 - 18:25ஏனென்றால், இரண்டு நிகழ்வுகள் நடந்தேறின.
-
18:25 - 18:28ஒன்று, நான் இப்பொழுதெல்லாம் அப்படி எண்ணுவதில்லை.
-
18:28 - 18:31ஆனால், அவர் எண்ணுகிறார். எனக்கு அந்த உணர்வு நன்கு புரிகிறது.
-
18:31 - 18:33இரண்டாவது, அவர் இங்கு இருக்க வேண்டியவர்!
-
18:33 - 18:35அவர் பாசாங்கு செய்ய வேண்டும், பாசாங்கு அவராய் ஆகும் வரை.
-
18:35 - 18:39எனவே "நீ இங்கு இருக்க வேண்டியவர்!
-
18:39 - 18:40நாளை நீ நடிக்க போகிறாய்,
-
18:40 - 18:43உன்னை நீ வலுவாக்கபோகிறாய்,
-
18:43 - 18:47நீ (கைத்தட்டல்)
-
18:47 - 18:49(கைத்தட்டல்)
-
18:49 - 18:53"வகுப்பறைக்கு போகிறாய்,
-
18:53 - 18:55வகுப்பிலேயே சிறந்த கருத்தை நீ கூறபோகிறாய்."
-
18:55 - 18:58அதே போல், அவள்தான் மிக சிறந்த கருத்தை கூறினார்.
-
18:58 - 18:59மற்ற மாணவர்கள் அவரை திரும்பி பார்த்து,
-
18:59 - 19:03இறைவா, அவர் வகுப்பில் இருக்கிறார் என்று நான் கவனித்ததில்லையே (சிரிப்பு)
-
19:03 - 19:06சில மாதங்குக்கு பின், அவர் மீண்டும் வந்தார். அப்பொழுது நான் உணர்ந்தேன்
-
19:06 - 19:08அவர் வெற்றி அடையும்வரை நடிக்கவில்லை,
-
19:08 - 19:11நடிப்பே தான என்கிறவரையில் நடித்துள்ளார்.
-
19:11 - 19:12அவர் மாறியிருந்தார்.
-
19:12 - 19:17எனவே, நான் உங்களுடன் சொல்ல விரும்புவது, வெற்றி அடையும்வரை நடிக்காதீர்கள்.
-
19:17 - 19:19அதுவே நீங்களாய் ஆகும்வரை நடியுங்கள்.
-
19:19 - 19:23நீங்கள் அந்த மாற்றத்தை உள்ளுணரும் வரை செய்யுங்கள்.
-
19:23 - 19:26விடைபெறும் முன், கூற விரும்புவது இவை.
-
19:26 - 19:30சிறு மாற்றங்கள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.
-
19:30 - 19:33இரண்டு நிமிடங்கள்.
-
19:33 - 19:34இரண்டு நிமிடங்கள்.
-
19:34 - 19:38அடுத்த கடினமான, உங்களை மதிப்பீடு செய்யும் சூழலுக்கு செல்லும் முன்,
-
19:38 - 19:40இதனை செய்யுங்கள், இரண்டு நிமிடங்களுக்கு. மின்தூக்கியில்,
-
19:40 - 19:44கழிப்பறையில், உங்கள் மேசையில், மூடிய கதவுகளுக்குப் பின்.
-
19:44 - 19:46இதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும். உங்கள் மூளையை வடிவமையுங்கள்,
-
19:46 - 19:48சூழலுடன் சிறப்பாய் ஒருங்கிணைய.
-
19:48 - 19:51உங்கள் டெஸ்டோஸ்டிரோனை அதிகரியுங்கள். உங்கள் கார்டிசோலை குறையுங்கள்.
-
19:51 - 19:55அச்சூழலிருந்து, நீங்கள், தாங்கள் யாரென்று காட்டவில்லை என்ற வருத்தத்துடன் வெளியேராதீர்கள்.
-
19:55 - 19:57வெளியேரும்பொழுது, உண்மையில்
-
19:57 - 19:59நீங்கள் யாரென்று சொல்ல, காட்ட வாய்ப்பு கிடைத்தது என உணருங்கள்.
-
19:59 - 20:01எனவே, உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்.
-
20:01 - 20:05ஆதிக்க உணர்வை ஊட்டும் தோரணைகளை செய்து பாருங்கள்.
-
20:05 - 20:07இன்னொன்று
-
20:07 - 20:10இந்த எளிதான அறிவியலை மற்றவருடன் பகிருங்கள்.
-
20:10 - 20:12இந்த வேண்டுகோளில் எந்த ஒரு இறுமாப்பும் நான் கொண்டிருக்கவில்லை.
-
20:12 - 20:14மற்றவருடன் தாராளமாய்ப் பகிருங்கள்.
-
20:14 - 20:16ஏனென்றால், அதிகம் பயன்பேறக்கூடிய மக்கள்
-
20:16 - 20:20எந்த வளமும், தொழில்நுட்பமும்,
-
20:20 - 20:23தகுதியும், ஆளுமையும் கொண்டிருக்கமாட்டர்கள். அவர்களிடம் தாருங்கள்.
-
20:23 - 20:25ஏனெனில், இதனை அவர்கள் தனிமையில் செய்ய இயலும்.
-
20:25 - 20:27அவர்களுக்கு வேண்டியது உடல், தனிமை மற்றும் இரண்டு நிமிடங்கள்.
-
20:27 - 20:30இந்த செய்தி அவர்களின் வாழ்வை மாற்ற இயலும்.
-
20:30 - 20:35நன்றி. (கைத்தட்டல்)
-
20:35 - 20:42(கைத்தட்டல்)
- Title:
- எமி கடி: உங்கள் தோற்ற அமைவு உங்களை உருவாக்குகிறது
- Speaker:
- Amy Cuddy
- Description:
-
உடல் தோற்ற அமைவு மற்றவர் உங்களை எப்படி பார்க்கிறார் என்பதுடன், நீங்கள் உங்களை எப்படி பார்க்கிறீர்கள் என்பதையும் மாற்றக்கூடியது. சமூக உளவியலாளர் எமி கடி "ஆளுமைத்தனம் கொண்ட தோற்றங்கள்" -- நம்பிக்கையற்று இருக்கும்போழுதும், நம்பிக்கையுடன் நிற்பது போன்ற தோற்ற அமைவு -- உங்களது மூளையின் டெஸ்டோஸ்டிரோன் மற்றும் கார்டிசோல் அளவை மாற்றுவதுடன், உங்கள் வெற்றியிலும் ஒரு பங்காற்ற முடியும் என்று நிரூபிக்கிறார்.
- Video Language:
- English
- Team:
- closed TED
- Project:
- TEDTalks
- Duration:
- 21:02
Dimitra Papageorgiou approved Tamil subtitles for Your body language may shape who you are | ||
Dimitra Papageorgiou edited Tamil subtitles for Your body language may shape who you are | ||
Dimitra Papageorgiou edited Tamil subtitles for Your body language may shape who you are | ||
Dimitra Papageorgiou edited Tamil subtitles for Your body language may shape who you are | ||
Jenisan Kulendiran accepted Tamil subtitles for Your body language may shape who you are | ||
Ambika Sangaran edited Tamil subtitles for Your body language may shape who you are | ||
Ambika Sangaran edited Tamil subtitles for Your body language may shape who you are | ||
Ambika Sangaran added a translation |