Return to Video

2,3,4,5,6,8,9,10 இந்த எண்களின் வகுதிறனை சோதித்தல்

  • 0:01 - 0:04
    நாம் இந்தக் காணொளியில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள
  • 0:04 - 0:07
    எண்களை இங்குள்ள எண்களால் வகுபடுமா என சோதித்துப் பார்ப்போம்.
  • 0:07 - 0:11
    ஏன் அவை வகுபடும் தன்மையைக் கொண்டவை என்பதில் நான் ஆழ்ந்து கவனம் செலுத்தப் போவதில்லை.
  • 0:11 - 0:16
    2,5,9 அல்லது 10 இவைகளின் வகுபடும் தன்மைகளை
  • 0:16 - 0:19
    எப்படி சோதிப்பது என்பதைப் புரியவைக்கப் போகிறேன்.
  • 0:19 - 0:21
    இப்பொழுது இதை ஆரம்பிக்கலாம்.
  • 0:21 - 0:22
    இந்த எண்கள் 2 ஆல் வகுபடுமா என பார்ப்போம்.
  • 0:22 - 0:25
    முதலில் ஒன்றின் இடத்தைப் பார்க்க வேண்டும்.
  • 0:25 - 0:27
    அந்த எண் 2 ஆல் வகுபடுமா என்று பார்க்க வேண்டும்.
  • 0:27 - 0:31
    இந்த எண் 2 ஆல் வகுபடும்.
  • 0:31 - 0:34
    இந்த எண் 2 ஆல் வகுபடும்
  • 0:34 - 0:36
    பூஜ்யம் என்பது 2 ஆல் வகுபடும் எண்.
  • 0:36 - 0:39
    எனவே இந்த எண் 2 ஆல் வகுபடும்.
  • 0:39 - 0:40
    இதை வேறு வழியிலும் யோசிக்கலாம்.
  • 0:40 - 0:41
    நம்மிடம் இரட்டைப்படை எண் இருந்தால்,
  • 0:41 - 0:43
    மற்றும் பூஜ்யம் ஒரு இரட்டைப்படை எண் தான்.
  • 0:43 - 0:46
    இவை இருந்தால், அந்த எண் இரண்டால் வகுபடும்.
  • 0:46 - 0:47
    அடுத்து,
  • 0:47 - 0:50
    இங்கு 2 ஆல் வகுபடாத எண் உள்ளது.
  • 0:50 - 0:54
    இது ஐந்து, இது 2 ஆல் வகுபடாது.
  • 0:54 - 0:55
    எனவே, இங்கு 2 ஐ எழுதவில்லை.
  • 0:55 - 0:57
    நாம் இரண்டை பற்றி பார்த்து விட்டோம்.
  • 0:57 - 0:59
    இப்பொழுது மூன்றுக்கு செல்வோம்.
  • 0:59 - 1:02
    இப்பொழுது மூன்றால் வகுபடுமா என்று பார்க்க வேண்டும்.
  • 1:02 - 1:03
    கொடுக்கப்பட்டுள்ள எண்ணின் இலக்கங்களைக் கூட்டவேண்டும்.
  • 1:03 - 1:06
    பிறகு, அந்தக் கூட்டுத்தொகை 3 ஆல்
  • 1:06 - 1:07
    வகுபடுமா என்று பார்க்க வேண்டும்.
  • 1:07 - 1:11
    அதை செய்வோம். 2+7+9
  • 1:11 - 1:15
    இதை எழுதுகிறேன். +9+5
  • 1:15 - 1:19
    +8+8. இதன் கூட்டுத்தொகை என்னவாக இருக்கும்?
  • 1:19 - 1:23
    2+7=9, 9+9=18, +9
  • 1:23 - 1:26
    =27,+5=32,
  • 1:26 - 1:32
    +8=40, +8=48
  • 1:32 - 1:34
    48 என்பது 3ஆல் வகுபடும்.
  • 1:34 - 1:35
    உங்களுக்கு நிச்சயமாகத் தெரியாவிட்டால்,
  • 1:35 - 1:38
    இதன் கூட்டுத்தொகை 48.
  • 1:38 - 1:39
    இது 3 ஆல் வகுபடுமா எனத் தெரியாவிட்டால்
  • 1:39 - 1:41
    இந்தத் கூட்டுத் தொகையை மீண்டும் கூட்டவேண்டும்.
  • 1:41 - 1:43
    4+ 8
  • 1:43 - 1:45
    இது 12 ஆகும்.
  • 1:45 - 1:48
    12 கண்டிப்பாக 3 ஆல் வகுபடும்.
  • 1:48 - 1:49
    இதிலும் சந்தேகம் இருந்தால் மீண்டும் இதில் உள்ள
  • 1:49 - 1:50
    2 இலக்கங்களின் கூட்டுத்தொகையை பார்க்க வேண்டும்.
  • 1:50 - 1:52
    1+2 என்பது 3 ஆகும்.
  • 1:52 - 1:56
    எனவே, இந்த எண் 3 ஆல் வகுபடும்.
  • 1:56 - 1:58
    இப்பொழுது இங்குள்ள இலக்கங்களைக் கூட்டுவோம்.
  • 1:58 - 2:02
    5+6=11
  • 2:02 - 2:06
    11+7=18,+0=18
  • 2:06 - 2:10
    18ல் உள்ள இலக்கங்களை கூட்டலாம் 1+8
  • 2:10 - 2:11
    இது 9 ஆகிறது.
  • 2:11 - 2:14
    18ல் உள்ள இரண்டு இலக்கங்களையும்
  • 2:14 - 2:20
    கூட்டும்பொழுது 9 கிடைக்கும்.
  • 2:20 - 2:23
    18, 3 ஆல் வகுபடும்.
  • 2:23 - 2:26
    அதை கூட்டினால் 9 கிடைக்கும்.
  • 2:26 - 2:29
    இதில் முக்கியமானது என்னவென்றால் ஒரு எண்ணின் இலக்கங்களின்
  • 2:29 - 2:31
    கூட்டுத்தொகை 3 ஆல் வகுபடவேண்டும்.
  • 2:31 - 2:37
    எனவே, இது 3 ஆல் வகுபடும்.
  • 2:37 - 2:38
    இப்பொழுது இந்த இலக்கங்களைக் கூட்டுவோம்.
  • 2:38 - 2:42
    1 + 0 + 0 + 7 =8, + 6 = 14
  • 2:42 - 2:48
    + 5 = 19
  • 2:48 - 2:50
    19, 3 ஆல் வகுபடாது.
  • 2:50 - 2:55
    இதை மூன்றால் வகுக்க முடியாது
  • 2:55 - 2:57
    இந்த எண் 3 ஆல் வகுபடாது.
  • 2:57 - 2:58
    அடுத்து 4 ஐ முயற்சிக்கலாம்.
  • 2:58 - 3:01
    4 ஐ எடுத்துக் கொண்டால், கொடுக்கப்பட்ட எண்ணின்
  • 3:01 - 3:02
    கடைசி இரண்டு இலக்கங்களும்,
  • 3:02 - 3:08
    4 ஆல் வகுபட வேண்டும்.
  • 3:08 - 3:10
    நீங்கள் உடனே கூறலாம், இந்த எண்
  • 3:10 - 3:11
    இது ஒற்றைப்படையில் உள்ளது.
  • 3:11 - 3:13
    அது 2 ஆல் வகுபடாது என்றால் கண்டிப்பாக
  • 3:13 - 3:14
    4 ஆலும் வகுபடாது என்று.
  • 3:14 - 3:18
    இந்த எண் முதல் நான்கு எண்களில் எதிலும் வகுபடாது.
  • 3:18 - 3:21
    88, 4 ஆல் வகுபடுமா?
  • 3:21 - 3:26
    இதை நீங்களே செய்யலாம். 4 பெருக்கல் 22 = 88.
  • 3:26 - 3:31
    எனவே, இது 4 ஆல் வகுபடும்.
  • 3:31 - 3:34
    60 ல் 4, 15 முறை செல்லும்.
  • 3:34 - 3:36
    60 ஐ 70 ஆக்க ஒரு 10 -ஐ சேர்க்க வேண்டும்.
  • 3:36 - 3:40
    எனவே இது 4 ஆல் வகுபடாது.
  • 3:40 - 3:42
    வேண்டுமென்றால், நீங்கள் முயற்ச்சி செய்யலாம்.
  • 3:42 - 3:47
    4, 70-ல் ஒரு முறை செல்லும். மீதம் 30 இறக்கும்
  • 3:47 - 3:56
    7 ஆல் பெருக்கினால், பிறகு கழித்தால், மீதம் 2 கிடைக்கும்.
  • 3:56 - 3:59
    எனவே, இது 4 ஆல் வகுபடாது.
  • 3:59 - 4:04
    இப்பொழுது 5 ஐ பார்க்கலாம்.
  • 4:04 - 4:07
    இந்த எண் நமக்கு மிகவும் பழக்கமான எண்.
  • 4:07 - 4:11
    ஒரு எண்ணின் கடைசி இலக்கம் 5 அல்லது 0 வாக
  • 4:11 - 4:13
    இருந்தால், அந்த எண் 5 ஆல் வகுபடும்.
  • 4:13 - 4:17
    இந்த எண் 5 ஆல் வகுபடும்.
  • 4:17 - 4:23
    இந்த எண்ணில் ஒன்றின் இலக்க எண் 5 ஆக இருப்பதால்
  • 4:23 - 4:26
    இது 5 ஆல் வகுபடும் எண்.
  • 4:26 - 4:30
    இப்பொழுது 6 -ன் வகுபடும் தன்மை பற்றிப் பார்ப்போம்.
  • 4:30 - 4:33
    எந்த எண் 2 ஆலும் 3 ஆலும் வகுபடுமோ
  • 4:33 - 4:35
    அந்த எண் 6 ஆலும் வகுபடும்.
  • 4:35 - 4:38
    ஏனெனில் 6 ன் பகாக் காரணிகள் 2 மற்றும் 3.
  • 4:38 - 4:42
    2 x 3 = 6. இந்த எண் 2 ஆலும் 3 ஆலும்
  • 4:42 - 4:47
    வகுபடும். எனவே, 6 ஆலும் வகுபடும்.
  • 4:47 - 4:51
    இந்த எண் 2 மற்றும் 3 ஆல் வகுபடும். எனவே, இது 6 ஆலும் வகுபடும்.
  • 4:51 - 4:53
    ஒரு எண் 2 ஆலும் 3 ஆலும் வகுபட்டால் தான்
  • 4:53 - 4:55
    6 ஆலும் வகுக்கமுடியும். அந்த எண் 2 ஆல் மட்டும்
  • 4:55 - 4:59
    வகுபட்டாலோ அல்லது 3 ஆல் மட்டும்
  • 4:59 - 5:02
    வகுபட்டாலோ 6 ஆல் வகுக்க முடியாது
  • 5:02 - 5:05
    இந்த இரண்டு காரணிகளும் இருக்க வேண்டும்.
  • 5:05 - 5:08
    9-ன் வகுபடும் தன்மையைப் பற்றிப் பார்ப்போம்.
  • 5:08 - 5:10
    9-ன் வகுபடும் தன்மை 3 ஐப் போல தான்.
  • 5:10 - 5:13
    கொடுத்துள்ள எண்ணின் கூட்டுத்தொகை 9 ஆல்
  • 5:13 - 5:15
    வகுபட வேண்டும்.
  • 5:15 - 5:16
    இதை ஏற்கனவே கூட்டி விட்டோம்..
  • 5:16 - 5:19
    48 ஐ 9 ஆல் வகுக்க முடியாது.
  • 5:19 - 5:21
    48-ன் இலக்கங்களை கூட்டினால் 12 கிடைக்கும்
  • 5:21 - 5:25
    கண்டிப்பாக 12 ஐ 9 ஆல் வகுக்க முடியாது.
  • 5:25 - 5:28
    அதனால் இந்த எண்ணை 9 ஆல் வகுக்க முடியாது.
  • 5:28 - 5:31
    அடுத்துள்ள இந்த எண்ணின் கூட்டுத்தொகை 18 வருகிறது.
  • 5:31 - 5:37
    18, 9 ஆல் வகுபடும்.
  • 5:37 - 5:42
    2 முறை 9 என்பது 18 ஆகிறது. எனவே, இது வகுபடும்.
  • 5:42 - 5:44
    இந்த எண்ணைக் கூட்டவே தேவையில்லை. இது 100
  • 5:44 - 5:46
    ஏனென்றால் இதை 3 ஆல் வகுக்க முடியாது என்று நமக்கு தெரியும்.
  • 5:46 - 5:49
    3 ஆல் வகுபடாவிட்டால் 9 ஆலும் வகுபடாது.
  • 5:49 - 5:51
    இந்த எண்ணின் கூட்டுத்தொகை 19 வருவதால்
  • 5:51 - 5:53
    9 ஆல் வகுபடாது.
  • 5:53 - 5:57
    அதனால், இந்த எண்ணும் 9 ஆல் வகுபடாது.
  • 5:57 - 5:59
    கடைசியில் 10 ன் வகுபடும் தன்மையைப் பற்றிப் பார்ப்போம்.
  • 5:59 - 6:00
    எல்லாவற்றைக் காட்டிலும் இது சுலபம்.
  • 6:00 - 6:03
    ஏனென்றால் கொடுத்துள்ள எண்ணின் ஒன்றின் இடத்தில் பூஜ்யம் உள்ளதா
  • 6:03 - 6:04
    என்று மட்டும் பார்க்க வேண்டும்.
  • 6:04 - 6:07
    இந்த எண்ணில் கண்டிப்பாக ஒன்றாம் இடத்தில் பூஜ்யம் இல்லை.
  • 6:07 - 6:10
    இந்த எண்ணில் ஒன்றாம் இடத்தில் பூஜ்யம் இருக்கிறது.
  • 6:10 - 6:13
    எனவே, இந்த எண் 10 ஆல் வகுபடும்.
  • 6:13 - 6:15
    கடைசியாக இந்த எண்ணிலும் பூஜ்யம் இல்லை.
  • 6:15 - 6:18
    அதனால் இந்த எண்ணும் 10 ஆல் வகுபடாது.
  • 6:18 - 6:19
    வேறு வழியிலும் இதை யோசிக்கலாம்.
  • 6:19 - 6:21
    2 மற்றும் 5, இரண்டாலும் வகுபட வேண்டும்.
  • 6:21 - 6:23
    அப்பொழுது தான், அது 10 ஆல் வகுபடும்.
  • 6:23 - 6:27
    இந்த எண் 5 ஆல் வகுபடும். ஆனால், 2 ஆல் வகுபடாது.
  • 6:27 - 6:29
    சுலபமான வழி என்னவென்றால் ஒன்றின் இடத்தில்
  • 6:29 - 6:33
    பூஜ்யம் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
Title:
2,3,4,5,6,8,9,10 இந்த எண்களின் வகுதிறனை சோதித்தல்
Description:

2,3,4,5,6,8,9 இந்த எண்களின் வகுதிறனை எவ்வாறு சோதித்து அறிந்து கொள்ளலாம் என உதாரணத்துடன் விளக்கப்பட்டுள்ளது.

more » « less
Video Language:
English
Duration:
06:33

Tamil subtitles

Revisions