பயங்ரகரவாதத் தாக்குதலிலிருந்து நான் பிழைத்ததும், அதிலிருந்து கற்றதும்.
-
0:01 - 0:03நான் நினைத்து பார்த்ததில்லை,
-
0:03 - 0:0719 வயதேயான தற்கொலைப்படைத் தீவிரவாதி ஒருவன்
-
0:07 - 0:11மிகவும் முக்கியமான பாடம் ஒன்றை
எனக்குக் கற்பிப்பான் என்று. -
0:13 - 0:14ஆனால் அவன் செய்தான்.
-
0:15 - 0:18நமக்கு அறிமுகமில்லாத
எவரைப் பற்றியும் -
0:18 - 0:22கருத்துகள் ஏதும் கொள்ளக் கூடாது என்று
அவன் எனக்கு கற்பித்தான். -
0:24 - 0:29ஜூலை 2005, ஒரு வியாழக்கிழமை காலை,
-
0:29 - 0:32முன்பின் அறிந்திராத அந்த
தீவிரவாதியும் நானும், -
0:32 - 0:36ஒரே ரயில் பெட்டியில் ஒரே நேரத்தில்
பயணம் செய்வதற்காக ஏறினோம், -
0:36 - 0:41ஒருசில அடிகளேயான இடைவெளியில்
நின்று கொண்டிருந்திருப்போம். -
0:42 - 0:43அவனை நான் கவனிக்கவில்லை.
-
0:44 - 0:46எவரையுமே நான் கவனிக்கவில்லை.
-
0:46 - 0:49சுரங்க இரயிலில் நாம்
எவரையும் கவனிப்பதில்லையே. -
0:49 - 0:52ஆனால் அவன் என்னை கவனித்திருப்பான்.
-
0:53 - 0:56அந்த வெடியை வெடிக்கவைக்கும்
பொத்தானை அமுக்கச் செல்கையில் -
0:56 - 1:01எங்கள் அனைவரையும் அவன் கவனித்திருப்பான்.
-
1:02 - 1:07அவன் என்ன தான் நினைத்துக் கொண்டிருந்தான்
என்று அடிக்கடி யோசித்திருக்கிறேன். -
1:07 - 1:10குறிப்பாக அந்த கடைசி விநாடிகளில்.
-
1:12 - 1:15தனிப்பட்ட பகை ஏதும் இதில் இல்லை
என்று எனக்குத் தெரியும். -
1:15 - 1:19அவன் ஜில் ஹிக்ஸ் எனும் இந்தப் பெண்ணைக்
கொல்வதற்காகக் கிளம்பவில்லை. -
1:19 - 1:21அவனுக்கு என்னைத் தெரிந்திருக்காது.
-
1:22 - 1:23வாய்ப்பேயில்லை.
-
1:24 - 1:27ஆனால் அவன் எனக்கு அளித்தது
-
1:27 - 1:31சற்றும் பொருத்தமற்ற, தேவையற்றற
அடையாளம் ஒன்றினை. -
1:32 - 1:36"எதிரி" என்ற அடையாளமே அது.
-
1:37 - 1:41அவனைப் பொறுத்தவரை
நான் ஒரு "அன்னியன்," -
1:41 - 1:44"எங்கள்" மக்களுக்கு எதிரான "அவர்கள்."
-
1:46 - 1:51எங்களை எதிரிகளாகப் பார்த்த அவனால்
மனிதர்களாகப் பார்க்க முடியவில்லை. -
1:52 - 1:54அந்த வெடியின் பொத்தானை
அவன் அமுக்கச் செய்தது அதுவே. -
1:55 - 1:58அவன் எவரையும் குறிவைக்கவும் இல்லை.
-
1:59 - 2:04பெட்டியிலிருந்த இருபத்தாறுபேர் தம்
விலைமதிப்பற்ற உயிரை இழந்தனர், -
2:05 - 2:07நானும் கூட உயிரிழந்திருப்பேன்.
-
2:09 - 2:12ஒரு உள்மூச்சு எடுக்கும் தருணத்திற்குள்
-
2:12 - 2:15ஒரு கரிய இருள் எங்களை ஆட்கொண்டது
-
2:15 - 2:18மிக அடர்த்தியான இருள் அது;
-
2:18 - 2:22கரிய அடர்ந்த தாரில்
நீந்துவது போலிருந்தது. -
2:23 - 2:25நாங்கள் எதிரிகள் என்று
நாங்கள் அறியவில்லை. -
2:25 - 2:30எங்கள் மட்டில், நாங்கள் வெறும் பயணிகள்,
ஒருசில நிமிடங்களுக்கு முன்புவரை, -
2:30 - 2:33சுரங்க இரயில் வழக்கங்களை
கடைபிடித்த பயணிகள்: -
2:33 - 2:35கண்ணோடு கண் நாங்கள் பார்க்கவில்லை,
-
2:35 - 2:36பேசிக்கொள்ளவில்லை,
-
2:37 - 2:40எந்த ஒரு உரையாடலும் இல்லவே இல்லை.
-
2:42 - 2:45ஆனால், அந்த காரிருள் எங்களை நீங்கியபோது,
-
2:46 - 2:47நாங்கள் ஒருவரையொருவர்
தொடர்பு கொண்டோம் -
2:48 - 2:50ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டோம்.
-
2:51 - 2:53ஒவ்வொருவரும் தம் பெயரை
உரக்கக் கூறினோம், -
2:53 - 2:55வருகைப் பதிவு உரைப்பது போல,
-
2:56 - 2:59பதில் ஏதும் வருமா என
எதிர்பார்த்து உரைத்தோம். -
3:01 - 3:03"நான் ஜில், இங்கே உள்ளேன்.
-
3:05 - 3:06உயிருடன் உள்ளேன்.
-
3:08 - 3:09ஓகே."
-
3:12 - 3:13"நான் ஜில்.
-
3:14 - 3:15இங்கே.
-
3:16 - 3:18உயிருடன் உள்ளேன்.
-
3:19 - 3:21ஓகே."
-
3:23 - 3:26அலிசன் எனும் பெண்ணை
அதற்கு முன்பு எனக்குத் தெரியாது. -
3:26 - 3:31ஆனால், சில நிமிடங்களுக்கு ஒருமுறை
அவள் குரலெழுப்பும்போதும் அதை கவனித்தேன். -
3:31 - 3:33ரிச்சர்டை எனக்குத் தெரியாது.
-
3:34 - 3:37ஆனால் அவர் உயிர்பிழைப்பது
எனக்கு முக்கியமாயிருந்தது. -
3:39 - 3:41அவர்களுடன் என்னைப் பற்றி
பகிர்ந்துகொண்டதெல்லாம் -
3:41 - 3:42என் முதற்பெயர் மட்டுமே.
-
3:43 - 3:44டிசைன் கவுன்சிலில்
-
3:44 - 3:48நான் ஒரு துறைத் தலைவர் என்று
அவர்களுக்குத் தெரியாது. -
3:49 - 3:53இதோ, இதுதான் என்னருமை பை,
-
3:53 - 3:55அன்று இதுவும் மீட்கப்பட்டது.
-
3:56 - 4:00கட்டமைப்பு மற்றும் வடிவமைப்பு ஆய்விதழ்களில்
நான் எழுதியுள்ளேன் என்று அவர்களுக்குத் தெரியாது, -
4:00 - 4:04ராயல் சொசைட்டி ஆஃப் ஆர்ட்ஸில்
நான் ஆய்வாளர் என்றும் தெரியாது, -
4:04 - 4:06கருநிற உடைகளை அணிவேன் என்றும் --
-
4:07 - 4:08இப்போதும் அணிகிறேன் --
-
4:09 - 4:11நான் புகைபிடிப்பேன் என்றும்
அவர்களுக்குத் தெரியாது. -
4:12 - 4:14இப்போதெல்லாம் நான் புகைபிடிப்பதில்லை.
-
4:14 - 4:18ஜின் குடித்து TED உரைகளைப் பார்ப்பேன்,
-
4:18 - 4:25அப்போது கற்பனையும் செய்ததில்லை,
ஒருநாள் இவ்வாறு -
4:26 - 4:28செயற்கைக் கால்களில் நின்றுகொண்டு
-
4:28 - 4:30உரை நிகழ்த்துவேன் என்று.
-
4:31 - 4:36இலண்டன் நகரில்
செயற்கரிய காரியங்கள் செய்துகொண்டிருந்த
ஆஸ்திரேலிய இளம்பெண் நான். -
4:36 - 4:39அவை எல்லாமே முடிந்துவிடும்
என்பதை என்னால் ஏற்க முடியவில்லை. -
4:41 - 4:44எப்படியாவது பிழைக்கவேண்டும்
என்பதில் உறுதியாயிருந்தேன், -
4:44 - 4:49என் கால்களில் மேல்பகுதியச் சுற்றி
குருதியடக்கும் கட்டு கட்டினேன், -
4:49 - 4:55வெளியில் எதையும் எவரையும் கவனிக்காமல்
-
4:55 - 4:59என்னுள்ளே கவனம் செலுத்தினேன்,
-
4:59 - 5:02என் உள்ளுணர்வால் மட்டுமே
வழிநடத்தப்பட்டேன். -
5:03 - 5:05மூச்சு விடும் வேகத்தைக் குறைத்தேன்.
-
5:06 - 5:08தொடைகளை உயர்த்தினேன்.
-
5:08 - 5:09நிமிர்ந்து நேராக அமர்ந்தேன்,
-
5:09 - 5:13கண்ணிமைகள் மூடிக்கொள்வதைத்
தடுக்கப் போராடினேன். -
5:15 - 5:18கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தை
இப்படியே கடத்தினேன், -
5:19 - 5:23அந்த ஒரு மணி நேரத்தில்,
அதுவரையிலான என் வாழ்க்கை முழுவதையும் -
5:23 - 5:25திரும்பிப் பார்த்தேன்.
-
5:27 - 5:30அதுவரை நான் செய்தவற்றை விட
அதிகமாகச் செய்திருக்கலாம். -
5:31 - 5:34அதிகமாக வாழ்ந்திருக்கலாம்,
அதிக இடங்களைப் பார்த்திருக்கலாம். -
5:34 - 5:39ஓட்டப்பயிற்சி செய்திருக்கலாம்,
நடனமோ யோகமோ பழகியிருக்கலாம். -
5:40 - 5:45ஆனால் என் கவனம், குறிக்கோள் எல்லாமே
என் பணியிலேயே இருந்தது. -
5:45 - 5:47பணி செய்வதற்காகவே வாழ்ந்தேன்.
-
5:48 - 5:51தொழிலட்டையில் என் பெயரும் பணிநிலையுமே
-
5:51 - 5:52எனக்கு முக்கியமாயிருந்தது.
-
5:54 - 5:57ஆனால் அந்தச் சுரங்கத்தினுள்
அது முக்கியமாகத் தெரியவில்லை. -
5:59 - 6:04எங்களை மீட்க வந்த மீட்பாளர் ஒருவரின் கை
முதன்முறையாக -
6:04 - 6:06என்னைத் தொடுவதை நான் உணர்ந்த போது,
-
6:06 - 6:09என்னால் எதுவும் பேச இயலவில்லை,
-
6:09 - 6:14"ஜில்" என்ற ஒரு சிறு சொல்லையும்
என்னால் சொல்ல இயலவில்லை. -
6:15 - 6:18என் உடலுடன் முற்றிலுமாக
அவர்களிடம் சரணடைந்தேன். -
6:18 - 6:21அதுவரை இயன்றதெல்லாம் செய்த நான்
-
6:21 - 6:25இப்போது அவர்கள் கையில்.
-
6:27 - 6:28எனக்கு ஒரு புரிதல் வந்தது,
-
6:29 - 6:35மனித நேயம் என்றால் உணமையில் யார் என்ன என்று,
-
6:36 - 6:39மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்டபோது
எனக்கு அளிக்கப்பட்ட -
6:39 - 6:42அடையாள அட்டையை முதன் முதலில்
பார்த்த போது புரிந்தது. -
6:42 - 6:44அதில் எழுதியிருந்தது:
-
6:44 - 6:49"அடையாளம் காணப்படாத,
பெண் எனக் கருதப்படும் ஒருவர்." -
6:51 - 6:55அடையாளம் காணப்படாத,
பெண் எனக் கருதப்படும் ஒருவர். -
6:57 - 7:00அவ்வார்த்தைகள் எனக்குக் கிடைத்த
பரிசு என நான் கருதுகிறேன். -
7:01 - 7:04அவ்வார்த்தைகள் எனக்குத் தெளிவாய்ச்
சொன்னது இது தான்: -
7:04 - 7:07என் வாழ்க்கை காப்பாற்றப்பட்டதற்கு
ஒரே காரணம் -
7:07 - 7:10நான் ஒரு மனிதர் என்பது மட்டுமே.
-
7:11 - 7:15வேறெந்த வேறுபாடுகளும் அங்கே முக்கியமில்லை,
-
7:15 - 7:19மீட்பாளர்கள் மேற்கொண்ட
அனைத்து அரிய முயற்சிகளுக்கும், -
7:20 - 7:22என் உயிரைக் காப்பதற்காக,
-
7:22 - 7:25முடிந்தளவு அத்தனை உயிர்களையும்
காப்பாற்றுவதற்காக -
7:25 - 7:28உயிரையும் பணயம் வைத்த அவர்களுக்கு
முக்கியமேயில்லை. -
7:28 - 7:33நான் ஏழையா அல்லது வசதி படைத்தவளா என்பது
அவர்களுக்கு முக்கியமில்லை, -
7:33 - 7:35என் தோலின் நிறம் முக்கியமில்லை,
-
7:35 - 7:37நான் ஆணா அல்லது பெண்ணா,
-
7:37 - 7:39என் பாலியல் உணர்வுகள் எப்படிப்பட்டவை,
-
7:40 - 7:41நான் யாருக்கு வாக்களித்தேன்,
-
7:41 - 7:43நான் கல்வி கற்றவளா,
-
7:43 - 7:46நான் இறை நம்பிக்கை கொண்டவளா அல்லது கொண்டிராதவளா.
-
7:47 - 7:49எதுவுமே அவர்களுக்கு முக்கியமில்லை,
-
7:49 - 7:54நான் ஒரு விலைமதிப்பற்ற மனித உயிர்
என்பதனைத் தவிர. -
7:56 - 7:59நான் இன்று வாழ்வதே இதற்கு சான்று.
-
8:00 - 8:02நிபந்தனையற்ற அன்பும் மதிப்பும்
-
8:02 - 8:09உயிரைக் காப்பது மட்டுமல்ல,
வாழ்வையே மாற்றும் என்பதற்கு -
8:09 - 8:12என் அனுபவமே சான்று.
-
8:13 - 8:18இதோ, என்னை மீட்டவர்களுள் ஒருவரான
ஆண்டியும், நானும், -
8:18 - 8:20சென்ற வருடம் எடுத்த படம்.
-
8:20 - 8:23அந்நிகழ்வு நிகழ்ந்து
பத்து வருடங்கள் கழித்து -
8:23 - 8:25இதோ, நாங்கள் தோளோடு தோள் நிற்கிறோம்.
-
8:27 - 8:30அந்நிகழ்வின்போது,
அந்தக் குழப்பமான தருணங்களில் -
8:30 - 8:33என் கை இறுகப் பிடிக்கப்பட்டிருந்தது.
-
8:33 - 8:36என் முகம் இதமாக வருடப்பட்டது.
-
8:37 - 8:39நான் உணர்ந்தது என்ன?
-
8:40 - 8:41நான் உணர்ந்தது அன்பினை.
-
8:42 - 8:47பழி தீர்க்கும் எண்ணம் ஏதும்
என்னுள் வராமல் பாதுகாத்தது, -
8:47 - 8:50'இது என்னுடனே முடியட்டும்' என்று
-
8:50 - 8:52நான் சொல்லுவதற்குத் துணிவைக் கொடுத்தது,
-
8:54 - 8:55அன்பு மட்டுமே.
-
8:57 - 8:59நான் உணர்ந்த அந்த அன்பு.
-
9:01 - 9:06ஆக்கப்பூர்வமான மாற்றங்களை பரவலான முறையில்
செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் -
9:06 - 9:09மாபெரும் அளவில் உள்ளது
என்பது என் நம்பிக்கை. -
9:09 - 9:12ஏனென்றால், நம்முடைய ஆற்றல்
என்ன என்பது எனக்குத் தெரியும். -
9:12 - 9:15மனித இனத்தின் சக்தி
என்னவென்பதை நான் அறிவேன். -
9:16 - 9:20என்னுள் பல பெரிய சிந்தனைகளை
இது எழுப்புகிறது, -
9:20 - 9:23நமக்குள் நாமே கெட்டுக்கொள்ள வேண்டிய
சில கேள்விகளையும் எழுப்புகிறது: -
9:25 - 9:30நம்மை இணைக்கும் இந்த ஒற்றுமை
நம்மிடையே உள்ள எந்தத வேற்றுமையையும் விட
மிகப் பெரியது அல்லவா? -
9:32 - 9:35ஒரு பேரிடரோ, துன்ப நிகழ்வோ
நிகழ்ந்தால் மட்டுமே -
9:35 - 9:40நாம் ஒன்றுபடுவோமா?
ஒரே இனம் என ஆழமாக உணர்வோமா? -
9:41 - 9:43நாம் அனைவரும் மனிதர் என்று உணர்வோமா?
-
9:44 - 9:49காலம் உணர்த்தும் அறிவை
ஏற்றுக் கொண்டு -
9:50 - 9:53சகிப்புத்தன்மை எனும் நிலையையும் தாண்டி
-
9:54 - 9:57நமக்கு அறிமுகமில்லாதவர்களும் மனிதர்களே
-
9:57 - 10:02எனும் இந்த ஒற்றுமையை நாம்
முழுமையாக ஏற்றுக்கொள்வது எப்போது? -
10:04 - 10:05நன்றி.
-
10:05 - 10:12(கரவொலி)
- Title:
- பயங்ரகரவாதத் தாக்குதலிலிருந்து நான் பிழைத்ததும், அதிலிருந்து கற்றதும்.
- Speaker:
- ஜில் ஹிக்ஸ்
- Description:
-
கலவரமும் வெறுப்புணர்வும் மூட்டிய தீயின் சாம்பலிலிருந்து மீண்டெழுந்த கருணை, மனிதம் ஆகியவற்றின் கதையே ஜில் ஹிக்ஸ் அவர்களின் கதை. ஜூலை 7, 2005, அன்று லண்டன் நகரில் பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டு உயிர்பிழைத்த அவர், அந்நாளின் நிகழ்வுகள் பற்றியும், மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புகையில் தான் கற்ற பாடங்கள் பற்றியும் பகிர்ந்துகொள்கிறார்.
- Video Language:
- English
- Team:
closed TED
- Project:
- TEDTalks
- Duration:
- 10:37
![]() |
Tharique Azeez approved Tamil subtitles for I survived a terrorist attack. Here's what I learned | |
![]() |
Tharique Azeez edited Tamil subtitles for I survived a terrorist attack. Here's what I learned | |
![]() |
Vijaya Sankar N accepted Tamil subtitles for I survived a terrorist attack. Here's what I learned | |
![]() |
Vijaya Sankar N edited Tamil subtitles for I survived a terrorist attack. Here's what I learned | |
![]() |
Srinivasan G edited Tamil subtitles for I survived a terrorist attack. Here's what I learned | |
![]() |
Srinivasan G edited Tamil subtitles for I survived a terrorist attack. Here's what I learned | |
![]() |
Srinivasan G edited Tamil subtitles for I survived a terrorist attack. Here's what I learned | |
![]() |
Srinivasan G edited Tamil subtitles for I survived a terrorist attack. Here's what I learned |