-
டான்ஸ் பார்ட்டி - வாம் அப்
-
ஹாய்!
-
என் பெயர் மிரால் காட்பி டான்ஸர், சாப்ட்வேர் டெவலப்பர் மற்றும் iLuminate ன் படைப்பாளி!
-
கம்ப்யூட்டர் சயின்ஸ் படைப்பாற்றலுடன் தொடர்புடையது
-
அது அளப்பரிய வாய்ப்புக்களை கொண்டுள்ளது.
-
நீங்கள் சாப்ட்வேர் எழுதக் கற்றுக்கொண்டால் பிறகு உங்கள் ஐடியாக்கள் எப்படி வேண்டுமானாலும் செயல்படுத்தலாம்
-
என் கருத்து என்னவென்றால்
-
சாப்ட்வேர் எழுத தேவையான கருவிகள் கிடைத்தால் நீங்கள் பலதும் செய்யலாம்
-
பிறகு சாத்தியக்கூறுகளுக்கு எல்லையே இருக்காது
-
அடுத்த ஒரு மணி நேரத்தில் நீங்க கம்ப்யூட்டர் சயின்ஸ் கற்க தொடங்குவீங்க
-
உங்க சொந்த டான்ஸ் பார்ட்டியை புரோக்கிராம் செய்வீங்க
-
உங்களுக்கு விளையாட ஹிட் மியூசிக் சாம்பிள்கள்
மற்றும் ஒரு பிரேக் டான்ஸ் குழுவும் வழங்கப்படும்
-
ஆடுவோரின் ஸ்டெப்ஸ் தேர்ந்தெடுக்க நீங்கள்
பல்வேறு Code Blocks -ஐ பயன்படுத்துவீங்க, உங்கள் டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்-ஐ மாற்றலாம்
-
அடுவோரின் அசைவுகளை இசைக்கேற்ப மாற்றலாம், அவர்களை இண்டர் ஆக்டீவ் ஆக மாற்றலாம்
-
திரையில் மூன்று முக்கிய பகுதிகள் உள்ளதைக் காணலாம்
-
இடது பக்கம் உள்ளது Play Space
-
உங்கள் டான்ஸர்ஸ் இங்கே இருப்பாங்க
-
நடுப்பகுதியில் உள்ளது Tool Box
-
நீங்கள் அத்தியாயங்களை பூர்த்தி செய்யும்போது புதிய Code Blocks இங்கே தென்படும்
-
வலது பக்கம் உள்ளது Work Space
-
புரோக்கிராம் அமைக்க நீங்கள் Tool Box-ல் இருந்து Blocks -ஐ Work Space க்கு இழுக்கலாம்
-
ஒவ்வொரு லெவலுக்குமான அறிவுறுத்தல்கள்
திரையின் மேல் பகுதியில் காணலாம்
-
உங்களுக்கு ஹிண்ட் வேண்டுமானால்
இந்த லைட் பல்பு மீது கிளிக் செய்யுங்கள்
-
இந்த சிவப்பு பிளாக் பயன்படுத்தி புதிய டான்ஸரை உருவாக்குவோம்
-
முதலில் Tool Box-ல் இருந்து வெளியே இழுக்கவும் பிறகு இந்த ஆரஞ்சு நிற செட் அப் பாக்ஸுடன் இணைக்கவும்
-
இந்த டான்ஸர் ஒரு பூனை பூனையின் பெயர் "my_first_dancer".
-
பூனையின் பெயர் உங்கள் விருப்பப்படி இங்கே கிளிக் செய்து மாற்றலாம்
-
டான்ஸர் Play Space-ல் எங்கே இருக்க வேண்டும் என்பதையும் மாற்றலாம்
-
Play Space-க்கு மேல் பகுதியில்
மியூசிக் தேர்ந்தெடுப்பதற்கான மெனு உள்ளது
-
தேர்ந்தெடுக்க டண் கணக்கிலான மியூசிக் இருக்கிறதே உங்களுக்கு பிரியமான இசையை தேர்ந்தெடுங்கள்!
-
Run பொத்தான் Play Space-க்கு கீழே இருக்கிறது
-
Run அழுத்தும்போது உங்கள் புரோக்கிராமில் உள்ள டான்ஸர்கள் Play Space பகுதியில் தென்படும்
-
அத்துடன் இசையும் தொடங்கிவிடும்!
-
(மியூசிக்)
-
நீங்களும் இதை முயற்சித்துப் பாருங்கள்
-
மாட்டிக்கிட்டீங்களா... பரவாயில்லை!
-
சும்மா எழுந்து ஆடத்தொடங்குங்க!
-
நீங்கள் உங்க சொந்த டான்ஸ் பார்ட்டி சுலபமா தொடங்குவீங்க!
-
நீங்க என்ன உருவாக்கப்போறீங்க?!