< Return to Video

Introduction to types of quadrilaterals | 3rd grade | Khan Academy

  • 0:00 - 0:04
    நான் இந்த காணொளியில் நான்கு பக்கங்கள் கொண்ட
  • 0:04 - 0:09
    வடிவங்களை பற்றிக் கூறப் போகிறேன்.
  • 0:09 - 0:13
    நான்கு பக்கங்கள் இருக்கும் வடிவங்கள் நாற்கோணம் எனப்படும்.
  • 0:13 - 0:20
    நாற் எனும் சொல்லுக்கு, 4 என்று பொருள்.
  • 0:20 - 0:24
    எனவே, நாற்கோணம் என்பதற்கு நான்கு பக்கங்கள் இருக்கும்.
  • 0:24 - 0:26
    இது ஒரு நாற்கோணம்.
  • 0:26 - 0:30
    இதுவும் ஒரு நாற்கோணம்.
  • 0:30 - 0:34
    இதுவும் ஒரு நாற்கோணம். அனைத்திற்கும் நான்கு பக்கங்கள் உள்ளன.
  • 0:34 - 0:36
    இது ஒரு நாற்கோணம்.
  • 0:36 - 0:46
    இதுவும் கூட ஒரு நாற்கோணம் தான்.
  • 0:46 - 0:48
    எது நாற்கோணம் அல்லாதது?
  • 0:48 - 0:54
    முக்கோணம். இதற்கு மூன்று பக்கங்கள் இருக்கிறது. எனவே, இது இல்லை.
  • 0:54 - 0:57
    ஐங்கோணம். இதற்கு ஐந்து பக்கங்கள் இருக்கும்.
  • 0:57 - 1:01
    இதுவும் நாற்கோணமாக இருக்க முடியாது. 1,2,3,4,5 பக்கங்கள் உள்ளன.
  • 1:01 - 1:03
    ஒரு வட்டம். இதற்கு,
  • 1:03 - 1:07
    பக்கங்களே கிடையாது. இது ஒரே ஒரு வளைவு தான்.
  • 1:07 - 1:10
    எனவே, இதுவும் நாற்கோணம் கிடையாது.
  • 1:10 - 1:15
    நம்மிடம், 6,7 ஏன் 100 பக்கங்கள் இருந்தாலும். அவை நாற்கோணங்கள் கிடையாது.
  • 1:15 - 1:21
    இப்பொழுது, நாற்கோணங்களின் வகைகளை பற்றி பார்க்கலாம்.
  • 1:21 - 1:26
    முதலாவது, இணைகரம்.
  • 1:26 - 1:33
    இது ஒரு நாற்கோணம்.
  • 1:33 - 1:37
    இந்த நாற்கோணத்தின் எதிர் பக்கங்கள் இணையானது.
  • 1:37 - 1:40
    இணையானது, என்றால் அவை ஒரே திசையில் செல்கிறது என்று பொருள்.
  • 1:40 - 1:43
    அப்படியென்றால் என்ன?
  • 1:43 - 1:48
    இவ்வாறு இருப்பது, ஒரு இணைகரம் ஆகும்.
  • 1:48 - 1:49
    ஏன்?
  • 1:49 - 1:54
    ஏனென்றால், இந்த பக்கமும், இந்த பக்கமும் இணையாக இருக்கிறது.
  • 1:54 - 1:56
    மேலும், அவை ஒரே திசையில் செல்கிறது.
  • 1:56 - 2:02
    நான், இதில் அம்புக்குறி வரைகிறேன்.
  • 2:02 - 2:05
    இந்த அம்புக்குறிகள் ஒரே திசையில் இருக்கின்றன.
  • 2:05 - 2:10
    இந்த இரண்டு பக்கங்களும் இணையானது.
  • 2:10 - 2:16
    பிறகு, இந்த இரண்டு பக்கங்களும் இணையாக இருக்கிறது.
  • 2:16 - 2:18
    எனவே, இது ஒரு இணைகரம்.
  • 2:18 - 2:21
    இணைகரத்திற்கு வேறு சில எடுத்துகாட்டுகள்.
  • 2:21 - 2:27
    சதுரம் கூட ஒரு இணைகரம் தான்.
  • 2:27 - 2:30
    இது சிறப்பு வகை இணைகரம்.
  • 2:30 - 2:36
    ஏனென்றால், இந்த பக்கமும் இந்த பக்கமும் ஒரே திசையில் செல்கிறது.
  • 2:36 - 2:41
    பிறகு, இந்த பக்கமும், இந்த பக்கமும், இதை மஞ்சளில் வரைகிறேன்.
  • 2:41 - 2:46
    இந்தப் பக்கம் அந்தப் பக்கத்திற்கு இணையாக உள்ளது.
  • 2:46 - 2:48
    இணைகரம் அல்லாதது எது?
  • 2:48 - 2:55
    இப்படியிருப்பது இணைகரம் இல்லை.
  • 2:55 - 3:00
    நீங்கள் கூறலாம், இதில் இரண்டு பக்கங்கள் இணையாக உள்ளதே?
  • 3:00 - 3:04
    இது இந்தப் பக்கத்திற்கு இணையாக உள்ளது என்று கூறலாம்.
  • 3:04 - 3:07
    ஆனால், இந்த இரண்டு பக்கங்களும் இணையில்லை.
  • 3:07 - 3:10
    இதை எவ்வாறு சிந்திக்கலாம் என்றால்,
  • 3:10 - 3:15
    இணையில்லாத கோடுகள் நீண்டு கொண்டே சென்றால் அவை வெட்டிக் கொள்ளும்.
  • 3:15 - 3:19
    இங்கே, இந்த கோடுகள் வெட்டிக் கொள்ளாது.
  • 3:19 - 3:26
    எனவே, இங்கு இருப்பது இணைகரம் இல்லை. இதில் இரு பக்கங்கள் இணையாக உள்ளன,
  • 3:26 - 3:28
    ஆனால் மற்றொரு பக்கம் இணையாக இல்லை.
  • 3:28 - 3:31
    இணைகரம் அல்லாததற்கு வேறொரு எடுத்துக்காட்டு.
  • 3:31 - 3:33
    இங்கு இருப்பது இணைகரம் இல்லை.
  • 3:33 - 3:35
    ஏனெனில், எந்த இரு பக்கங்களும் இணையாக இல்லை.
  • 3:35 - 3:38
    எனவே, இணைகரத்தில் எதிர் பக்கங்கள் இணையாக இருக்கும்.
  • 3:38 - 3:47
    இப்பொழுது, நாற்கோணத்தின் மற்ற வகைகளை பார்க்கலாம்.
  • 3:47 - 3:51
    அடுத்தது, சாய்சதுரம்.
  • 3:51 - 3:55
    சாய்சதுரம் ஒரு வகையான இணைகரம்.
  • 3:55 - 4:04
    ஏனெனில், இதன் எதிர் பக்கங்களும் இணையாக இருக்க வேண்டும்.
  • 4:04 - 4:09
    மேலும், அனைத்து பக்கங்களும் சமமாக இருக்க வேண்டும்.
  • 4:09 - 4:15
    உதாரணமாக, இது ஒரு இணைகரம்.
  • 4:15 - 4:17
    ஆனால், இது சாய்சதுரம் கிடையாது.
  • 4:17 - 4:22
    இதன் எதிர் பக்கங்கள் இணையாக உள்ளன.
  • 4:22 - 4:27
    இந்த கோடுகள் நீண்டால் இவை மோதாமல் சென்று கொண்டே இருக்கும்.
  • 4:27 - 4:30
    இந்த இரண்டு பக்கங்களும் இணையானது தான்.
  • 4:30 - 4:32
    இது சாய்சதுரம் இல்லை, ஏனென்றால்,
  • 4:32 - 4:34
    இந்த நீல பக்கங்கள் மஞ்சள் பக்கங்களை விட
  • 4:34 - 4:35
    நீளமாக உள்ளது.
  • 4:35 - 4:38
    எனவே, இது சாய்சதுரம் கிடையாது.
  • 4:38 - 4:43
    சாய்சதுரம் என்பது இவ்வாறு இருக்க வேண்டும்.
  • 4:43 - 4:48
    எதிர் பக்கங்கள் இணையானது, மேலும் அனைத்து பக்கங்களும் சம அளவுடையது.
  • 4:48 - 4:52
    நீங்கள் கூறலாம், அப்படியென்றால், சதுரமும் சாய்சதுரம் தானே? என்று,
  • 4:52 - 4:54
    சதுரம் ஒரு சாய்சதுரமா?
  • 4:54 - 4:57
    அனைத்து பக்கங்களும் சமமாக உள்ளது,
  • 4:57 - 5:00
    அனைத்து பக்கங்களும் இணையானது.
  • 5:00 - 5:05
    சதுரம் ஒரு இணைகரம் என்று ஏற்கனவே கூறியிருக்கிறோம்.
  • 5:05 - 5:08
    மேலும், அதன் அனைத்து பக்கங்களும் ஒரே அளவு தான்.
  • 5:08 - 5:14
    சதுரம் ஒரு சாய்சதுரம் தான்.
  • 5:14 - 5:16
    சாய்சதுரம் என்பது, ஒரு சதுரம்
  • 5:16 - 5:29
    சற்று சாய்க்கப்பட்டது என என்னலாம்.
  • 5:29 - 5:32
    இப்பொழுது, செவ்வகம் என்றால் என்ன என்று பார்க்கலாம்.
  • 5:32 - 5:34
    செவ்வகம் என்பதை ஏற்கனவே பார்த்திருப்பீர்கள்.
  • 5:34 - 5:37
    இப்பொழுது சற்று விவராமாக பார்க்கலாம்.
  • 5:37 - 5:43
    செவ்வகம் என்பது ஒரு இணைகரம் தான் அதுமட்டுமில்லை,
  • 5:43 - 5:47
    உதாரணமாக, இது ஒரு செவ்வகம்.
  • 5:47 - 5:52
    இது ஒரு இணைகரம். இதன் எதிர் பக்கங்கள் இணையானது.
  • 5:52 - 5:56
    இவை வெட்டிக்கொள்ளாது. அதேபோல,
  • 5:56 - 6:08
    இந்த இரு பக்கங்களும் இணையானது.
  • 6:08 - 6:10
    ஆனால், இது ஏன் செவ்வகம் எனப்படுகிறது?
  • 6:10 - 6:16
    இது ஒரு இணைகரம் தான், இருந்தபோதிலும், இதை செவ்வகம் என ஏன் அழைக்கிறோம்?
  • 6:16 - 6:19
    அதன், இதன் முனைகளை பொருத்து தான் இருக்கிறது.
  • 6:19 - 6:29
    செவ்வகம் என்பதன் முனைகள், செங்கோணத்தில் இருக்கும்.
  • 6:29 - 6:31
    இவை தான் செவ்வகம் எனப்படும்.
  • 6:31 - 6:34
    இணைகரத்தின் அனைத்து முனைகளும் செங்கோணத்தில் இருந்தால்,
  • 6:34 - 6:36
    அவை செவ்வகம் எனப்படும்.
  • 6:36 - 6:39
    வேண்டுமென்றால், இதன் முனைகளில் ஒரு சதுரம் வரையலாம்.
  • 6:39 - 6:44
    உதாரணத்திற்கு, இங்கு இருப்பது ஒரு செவ்வகம் இல்லை.
  • 6:44 - 6:46
    ஏனென்றால், இதன் முனைகளில் சதுரம் வரைந்தால்,
  • 6:46 - 6:54
    அது இந்த செவ்வகத்தில் இருப்பதைப் போல பொருந்தாது.
  • 6:54 - 6:59
    இது ஒரு இணைகரம். ஆனால், செவ்வகம் இல்லை.
  • 6:59 - 7:03
    செவ்வகம் என்பது, சதுர முனைகளை கொண்ட இணைகரம்.
  • 7:03 - 7:06
    சதுரம் என்பது செவ்வகமா?
  • 7:06 - 7:10
    முயற்சி செய்து பார்க்கலாம்.
  • 7:10 - 7:15
    சதுரம் என்பது ஒரு இணைகரம்.
  • 7:15 - 7:26
    அதன் முனைகள் சதுரமானது. அதனால் தான் இதை சதுரம் என்று கூறுகிறோம்.
  • 7:26 - 7:28
    எனவே, சதுரம் ஒரு செவ்வகம் தான்.
  • 7:28 - 7:31
    சதுரம் என்பது ஒரு சிறப்பு வகை நாற்கோணம்.
  • 7:31 - 7:36
    ஏனென்றால், சதுரம் அனைத்து வகைகளிலும் பொருந்தும்.
  • 7:36 - 7:41
    சதுரம் என்பது ஒரு சாய்சதுரம். அது சாய்சதுரத்தின் வகை.
  • 7:41 - 7:47
    அதன் முனைகள் செங்கோணத்தில் இருக்கின்றன.
  • 7:47 - 7:52
    இது சதுரம் இல்லை. இது சதுரம்.
  • 7:52 - 7:55
    மேலும், இது ஒரு செவ்வகமும் கூட.
  • 7:55 - 8:00
    மேலும் இது முனைகள் செங்கோணத்தில் உள்ள ஒரு இணைகரம்.
  • 8:00 - 8:04
    சதுரம் மற்றும் நாம் பார்த்த அனைத்து வகைகளும்,
  • 8:04 - 8:06
    நாற்கோணங்கள் தான்.
Title:
Introduction to types of quadrilaterals | 3rd grade | Khan Academy
Description:

more » « less
Video Language:
English
Team:
Khan Academy
Duration:
08:07

Tamil subtitles

Revisions