-
இழையுருப்பிரிவின் நிலைகளைப் பற்றிக் கூறும்போது
-
பொதுவாக இருமடிய உயிரணுக்களைப் பற்றித்தான் சொல்வார்கள்.
-
இருமடிய நிலை என்பதில் மரபுத்திரிகள் 2n
-
எண்ணிக்கையில் உள்ளது.
-
இது அணுவின் உட்கரு.
-
இது ஒரு முழு செல்லின் படம்.
-
இதைப் பற்றி நிறைய பேர் என்ன சொல்கிறார்கள் என்றால்
-
ஒரு செல் தன் நகலெடுத்தலில் இரண்டு மடிய
-
செல்களை உண்டாக்குகிறது.அதன் ஒவ்வொன்றிலும்
-
2N எண்ணிக்கையில் மரபுத்திரிகள் உள்ளது.
-
இழையுருப்பிரிவுகள் என்று கூறும்பொழுது சாதாரணமாக
-
இதைத்தான் குறித்துச் சொல்கிறார்கள்.
-
இதில் ஒரு சிறிய தெளிவாக்கம் செய்ய விரும்புகிறேன்.
-
மரபணுப்பொருளுக்கும் உட்கருவிற்கும்தான் இழையுருபிரிவின் போது
-
அதன் நகல் உண்டாகிறது.
-
உதாரணமாக நான் இந்தச் செல்லை வரையும்போது
-
அதில் 2 உட்கருக்கள் ஒவ்வொன்றும் இருமடிய
-
மரபுத்திரிகளைக் கொண்டுள்ளது.
-
இதில் இழையுருப்பிரிவு நடந்துள்ளது.
-
-
உயிரணுச் சாறு இங்கு பிரியவில்லை.இதைப்
-
பற்றிப் பின் கூறுகிறேன்.
-
ஆனால் இழையுருப்பிரிவில் இரண்டுவெவ்வேறு
-
செல்கள் உயிரணுச்சாறுவுடன் உண்டாகிறது.
-
இங்கு ஒன்றைத் தெளிவாக்குகிறேன்.
-
உயிரணுச் சாறு என்பது உட்கருவின் வெளியில் இருப்பது
-
சிறிது சமயத்தில் இதைப் பற்றிக் கூறுகிறேன்.
-
அன்றாட வழக்கில் இழையுருப்பிரிவு பற்றிக் கூறும்பொழுது
-
இவ்வாறுதான் இதைப்பற்றிச் சொல்வார்கள்.
-
இழையுருப்பிரிவு என்ன என்பதை உனக்கு ஒரு
-
ஆசிரியர் இவ்வாறுதான் விளக்குவார்.
-
இழையுருப்பிரிவின் போது உட்கரு இரண்டாகப் பிரிகிறது
-
அல்லது உட்கருவின் நகல் ஒன்று உருவாகிறது.
-
அதைத் தொடர்ந்து உயிர்அணுச் சாறு பிரிகிறது.
-
செல்லின் உயிரணுச் சாறுவும் பிரிகிறது.
-
இழையுருப்பிரிவின் இயக்கவியல் பற்றி இனிப்பார்ப்போம்.
-
இழையுருப்பிரிவு நடப்பதற்குத் தேவையான முதல் படி,
-
இழையுருப்பிரிவின் வெளியில்தான் நடக்கிறது.செல்கள் அதனதன் அன்றாட
-
வேலைகளைச் செய்யும்போது அதாவது இடை நிலையின்போது.
-
-
இடைநிலை என்பது இழையுருப் பிரிவைச் சேர்ந்தது கிடையாது.
-
ஆனால் இதில் சில புதிய
-
செல்கள் உண்டாகின்றன.
-
இதற்கு பச்சை நிறம் கொடுக்கிறேன்.
-
இது ஒரு புதிய செல்.
-
இது அதன் உட்கரு.
-
அதில் 2n எண்ணிக்கையில் மரபுத்திரிகள் உள்ளன.அவை வளர்ச்சி அடைகின்றன.
-
சத்துக்களை வெளியில் இருந்து பெறுகிறது.
-
புரதங்களை உண்டாக்குவதோடு வளர்ச்சியும் அடைகிறது.
-
மரபுத்திரியின் வளர்ச்சி இங்கு நிறைவாகிறது.
-
வாழ்க்கைச் சுழற்சியின் சில நிலைகளை
-
இங்குக் குறிக்கிறேன்.இடைநிலையில் வரும் இந்த நிலையை
-
உயிரியல் வகுப்பில்கூட இதைப் பற்றிக் கூறியிருக்க மாட்டார்கள்
-
ஆனால்,இது இங்கு குறிக்கப்பட்டுள்ளது.
-
இதை G1 என்று குறித்துள்ளார்கள்.
-
இது அதன் வளரும் பருவத்தைக் குறிக்கிறது.
-
இது வளர்கிறது,பொருட்களை
-
சேர்த்துகிறது,தன்னை உருவாக்கிக் கொண்டு
-
மரபுத்திரிகளின் நகல் உண்டாக்குகிறது.
-
இப்பொழுதும் இருமய எண்ணில்தான் மரபுத்திரிகள் உள்ளன.
-
இதைக் கொஞ்சம் பெரிது பண்ணுகிறேன்.
-
இப்பொழுது இதை வரைகிறேன்.
-
இடைநிலையில் இது S நிலை.
-
இதில் உண்மையான மரபுத்திரிகளின் நகல்
-
எடுத்தல் நடைபெறுகிறது.
-
நாம் இன்னும் இழையுருபிரிவிற்குச் செல்லவில்லை.
-
ஆக S நிலையில் மரபுத்திரிகளின் நகலெடுத்தல் நடைபெறுகிறது.
-
S நிலையில் உட்கருவை கொஞ்சம் பெரிதாக்கினால்
-
இரண்டு மரபுத்திரிகளை மட்டும் கொண்டுள்ள உயிரினங்களில்
-
இருந்து ஒருவேளை நான் ஆரம்பித்தால்
-
நான் இங்கு என்ன சொல்லப் போகிறேனென்றால் S நிலையில்
-
மரபுத்திரிகளின் நகல்கள் உண்டாகிறது.இதைப் படம் வரைந்து
-
எவ்வாறு அவைகளின் நகல்கள் வருகிறது என்பதை விளக்குகிறேன்.
-
இங்கு ஒரு மரபுத்திரி உள்ளது.
-
மேலும் இங்கு ஒரு மரபுத்திரி உள்ளது.
-
S நிலையில் இந்த மரபுத்திரிகளின் நகல் உண்டாகிறது.
-
இங்கு நான் உட்கருவை வரைந்துள்ளேன்.
-
இந்தப் பகுதியை நான் கொஞ்சம் பெரிதாக்கியுள்ளேன்.இங்குN ன் மதிப்பு 1.
-
இருமடிய நிலையில் மரபுத்திரியின் எண்ணிக்கை 2.
-
S நிலையில் மரபுத்திரியின் நகல் உண்டாகிறது.
-
அப்பொழுது பச்சை நிறத்தில் இருக்கும் மரபுத்திரி ஒத்தவடிவமுள்ள
-
இன்னொரு மரபுத்திரியை உண்டாகிறது.
-
நாம் முன்பே இதைப்பற்றிக் கொஞ்சம் தெரிந்துள்ளோம்.
-
இரண்டு மரபுத்திரிகளும் மத்தியில் இணைந்துள்ளன.
-
கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் மரபுத்திரியும் இப்படித்தான் செய்கிறது.
-
ஒவ்வொரு மரபுத்திரிக்கும் ஒரு மரபுஇழை உள்ளது.
-
இப்பொழுது நான்கு மரபு இழைகள் உள்ளன.ஒவ்வொரு மரபுத்திரியும் இரண்டு மரபு
-
இழைகளாக இருந்தாலும் இரண்டு மரபுத்திரிகள் என்றுதான் கூறுகிறோம்.
-
இது மரபுத்திரியின் மையம்.
-
இது S நிலையில் உண்டாகிறது.அதற்குப்பின்
-
செல் வளர்ச்சி தொடருகிறது.
-
இப்பொழுது செல் கொஞ்சம் பெரியதாகிவிட்டது அதைப்பற்றிப் பார்ப்போம்.
-
செல் முன்பே பெரியதாக இருந்தது.இப்பொழுது மேலும் கொஞ்சம் பெரியதாகிவிட்டது.
-
இது G நிலை.இந்த நிலையில் செல் மேலும்
-
கொஞ்சம் பெரியதாகும்.
-
இப்பொழுது செல்லின் ஒரு சிறிய பகுதி இங்குள்ளது.
-
இதைப்பற்றி இதுவரை நாம் எதுவும் இதைப்பற்றிப் பேசவில்லை.
-
அதைப்பற்றிச் சிறிது கூறுகிறேன்.
-
இது மிக மிக முக்கியம் இல்லை.
-
ஆனால் இதைத் துணைக்கரு என்பர்.
-
செல்பிரிவின்போது இவை மிக முக்கியமானவை
-
.ஏனெனில் அப்பொழுது அவைகளின் நகல்களும் உண்டாகும்.
-
இங்கு துணைக்கரு உள்ளது.
-
-
இதில் துணைக்கருமணி உள்ளது.
-
அதைப்பற்றி அதிகம் கவலை கொள்ளவேண்டாம்.
-
உருளை வடிவத்தில் இருப்பவைகள்தான் அவைகள்.
-
நான் என்ன சொல்ல விரும்புகிறேனென்றால் துணைக்கரு,
-
துணைக்கருமணி இந்த இரண்டின் பெயரையும் குழப்பிக்கொள்ளவேண்டாம்.
-
திரிமையம்,மரபு இழை இந்த இரண்டின் பெயருக்கும் குழப்பம் வேண்டாம்.
-
இதில் அந்த இரண்டு மரபுஇழைகள் இணையும் இடம்தான் நடுமையம்.
-
துரதிஷ்டவசமாக இந்தச் செயல்முறையில் இப்படித்தான்
-
பெயர்கள் உள்ளன.செல்லின் பல பகுதிகளுக்குக்
-
கூட இப்படித்தான் பெயர்கள் உள்ளன.
-
இந்தத் துணைக்கருக்கள் வெகு விரைவில்
-
நம் பகுதியில் வரப்போகிறது.
-
இது உட்கருவின் வெளிபாகத்தில் உள்ளது.இதுவும் தன்னை நகலாக்கம் செய்யும்.
-
இடைநிலையிலும் அவைகளின் நகலாக்கம் நடக்கும்.
-
ஆகையால், முதலில் ஒன்று இருந்தது இப்பொழுது இரண்டாகிறது.
-
அவைகளின் உள்ளே இரண்டு துணைக்கருமணிகள் உள்ளன.
-
ஆனால், அவைகளைப் பற்றி இப்பொழுது அதிகம்
-
கவனம் செலுத்தப்போவதில்லை.
-
இதுதான் இடைநிலையில் உண்டாகிறது.
-
இவ்வாறுதான் செல்களின் வாழ்க்கைச் சுழற்சி அமைகிறது.
-
செல்கள் வளர்ச்சியடைந்து செய்ய வேண்டியவற்றைச் செய்கிறது
-
நான் இங்கு ஒரு கருத்தைக் கூறவேண்டும்.
-
மரபணு இழைகளை வரையும்பொழுது அவைகளை நிறப்புரிகளாக வரைந்தேன்.
-
ஆனால், உண்மை என்னவென்றால் நாம் இடைநிலையில் இருக்கும்பொழுது
-
மரபுநூலிழை இவ்வாறு தோற்றமளிக்காது.
-
அதை நான் வரைந்தால் உண்மையில் மரபுக்கூறான
-
குரோமேட்டின் வடிவத்தில்தான் இருக்கும்.
-
நான் வரைந்தது போல் மிக நெருக்கமாகச் சுற்றியிருக்காது.
-
நான் இதில் நெருக்கமாகச் சுற்றியுள்ளது போல் வரைந்துள்ளேன்.
-
ஏனெனில் அதில் அவைகளின் நகல்களையும் பார்க்கமுடியும். ஆனால்,பச்சை வண்ணம்
-
கொடுத்து வரையப்பட்டுள்ள நிறப்புரிகள் உண்மையில் சுற்றாமல் உள்ளது.
-
அதை நுண்நோக்கியில் நீ பார்ப்பது கூடக் கடினம்.
-
இது மரபுக்கூறான குரோமேடின் தோற்றம்.
-
குரோமேடின் நிலையிலிருந்து மாறி எவ்வாறு நிறப்புரி
-
ஆகிறது என்பதைப் பற்றிச் சிறிது பேசுவோம்.ஆனால்,அது குரோமேட்டின் நிலையில்
-
மரபு இழைகளும் புரோதமும் சேர்ந்ததாக உள்ளது.
-
மரபு இழைகள் கொஞ்சம் அதைச் சுற்றியுள்ளன.
-
கொஞ்சம் புரதங்கள் உள்ளன.பின் மரபு இழைகள் அதனைச் சுற்றியுள்ளன.
-
அதை நீ நுண்நோக்கியின் மூலம் பார்க்கும்பொழுது
-
மரபுநூலிழையும் புரதமும் சேர்ந்து தெளிவற்றதாகத் தெரியும்.
-
கருஞ்சிவப்பில் உள்ள மூலக்கூறும் இதே போல்தான்.
-
மரபுநூலிழை சம்பந்தப்பட்டதில் இவ்வாறுதான்
-
நடக்கும்.
-
குறிப்பேந்தி ஆர்.என்.ஏ மற்றும் அதற்கு உதவும்
-
புரதங்களுடன் செயல்படுவதற்காக டி.என்.ஏ
-
தன் சூழலில் திறந்தே இருக்கும்.
-
தன்னை நகல் எடுக்கும் இந்த வேலைக்காக
-
சுருண்ட தன் உருவில் இருந்து நீளும்.
-
பிறகு மீண்டும் தன்னை நெருக்கமாகச் சுற்றிக் கொள்ளும்.
-
இதை இம்மாதிரி வரைந்துள்ளேன். இதில் பச்சைநிறத்தில் ஒன்று உள்ளது.
-
இது அதேபோல் இன்னொரு பச்சை நிறத்தில் இன்னொன்றைப் பிரதியெடுக்கும்.
-
இரண்டும் ஒரு புள்ளியில் ஒட்டிக்கொண்டிருக்கும்.
-
கருஞ்சிவப்பில் இருப்பதும் தன்னை அதே கருஞ்சிவப்பில்
-
நகலெடுத்து ஒரு புள்ளியில் இரண்டும் ஒட்டிக்கொண்டிருக்கும்.
-
ஆனால்,அது தெளிவாக இல்லை.
-
என்ன நடந்துள்ளது என்பதை இங்கு படம் போட்டுக் காட்டுகிறேன்.
-
இது உண்மை.
-
இப்பொழுது மரபுக்கூறாக அதாவது குரோமேட்டின் ரூபத்தில் உள்ளது.
-
-
இழையுருப்பிரிவு என்ற செயல்பாட்டின் கீழ் நடக்கும் உயிரணுப்பிரிவு பற்றிப் பார்ப்போம்.
-
இந்தச் செயல்பாட்டில் நடக்கும் முதல் நிலையை
-
இங்கு வரைகிறேன்.
-
இந்தச் செல்லை பச்சை நிறத்தில் வரைகிறேன்.
-
செல்லினுள் இருக்கும் உட்கருவை எப்பொழுதும் செல்லினுள்
-
இருக்கும் உருவத்தைவிட சற்று பெரிதாக இங்கு வரைகிறேன்.
-
ஏனெனில் உட்கருவிற்குள் நிறைய செயல்பாடுகள் நடக்கப்போகிறது.
-
ப்ரோபேஸ் என்பது உயிரணுப்பிளவின் முதல்நிலை.(முன்னவத்தை)
-
-
இந்தப் பெயர்கள் தன்னிச்சையான பெயர்கள்.
-
இந்த நிலையை நாம் நுண்ணோக்கியின் மூலம் பார்க்கமுடியும்.
-
இது ஒரு நிலை.செல் பிரிவில் இந்த முதல்
-
நிலையை ப்ரோபேஸ் என்கிறோம்.
-
இந்த முதல் நிலையில் என்ன நடக்கிறது என்றால் இந்தக் குரோமேட்டின்
-
நிறமிகள் இந்த ரூபத்தில் மாறுகிறது.
-
இடைநிலையில் என்ன நடக்கிறது என்றால்
-
மரபு நூலிழை பிரிந்து,நீண்டு மாறுகிறது.
-
மீண்டும் அது தன்னைச் சுற்றிக் கொள்ள ஆரம்பிக்கிறது.
-
இங்குதான் அது தன்னை முன்பே
-
நகலெடுத்துள்ளது.
-
செல்பிரிவுக்கு முன்பேஇந்த நகலெடுப்பு நடந்துள்ளது
-
அதனால்தான் இங்கு ஒரு நிறப்புரி உள்ளது.
-
இன்னொன்று இங்குள்ளது.
-
ஒவ்வொன்றுக்கும் இரண்டு பிரதிகள் அரைநிறவுருக்கள் உள்ளன.
-
அவைகள் தனித்தனியாக இழுத்துக் கொண்டுள்ளது.
-
இந்த அரைநிறவுருக்கள்,மையப்படி என்னும் குறிப்பிட்ட இடத்தில் இணைந்திருக்கும்.இதைப்
-
பற்றி செல்பிரிவின் முதல்நிலையில் கூறியுள்ளேன்.
-
இப்பொழுது இவைகள் அந்த நுண்குழலிகளுக்கு
-
வேண்டிய வசதியைச் செய்து தருகிறது.
-
செல் பிரிவின் போது அதனுள் உள்ளவைகளின்
-
இயக்கத்திற்கு உதவுகிறது.
-
இவையெல்லாம் மிகவும் வியப்பாக உள்ளது.
-
நான் இங்கு என்ன கூறுகிறேனென்றால் நீ செல் என்று நினைக்கும் பொழுது இயல்பாகவே
-
அவைகள் மிகவும் சாதாரணமானவை என்று நினைப்பாய்.ஆனால் அப்படி அல்ல.
-
உயிரியலில் இது மிகவும் அடிப்படையான அமைப்பு.
-
இதை முற்றிலும் புரிந்து கொள்ள முடியாத
-
அளவிற்கு சில சிக்கலான செயல்கள் உண்டு.
-
இங்கு என்னுடைய கருத்து என்னவென்றால்
-
அணு நிலையில் அல்லது புரதநிலையில் என்ன நடக்கிறது
-
என்பது நமக்குத் தெரியாது. ஏனெனில் செயல்களை
-
அழகாக இயக்கி வைக்கிறது.
-
இப்பொழுதும்கூட இது ஆராய்ச்சி நிலையில்தான் உள்ளது.
-
சிலவற்றை புரிந்து கொள்ளமுடிந்தது.சிலவற்றை புரிந்து கொள்ள முடியவில்லை.
-
இந்த இரண்டு துணைக்கருவும் நுண்குழாய்களின்
-
வளர்ச்சிக்கு வசதி செய்கிறது.
-
மிகவும் நுண்அமைப்புகளைக் கொண்டது நுண்குழாய்கள்.
-
ஒருவகையான கயிறு அல்லது குழாய் வடிவம் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.
-
அணுப்பிளவின் முதல்நிலை முன்னேறும்பொழுது இறுதியில் அது ஒரு நிலையில்
-
அதை இங்குச் செய்கிறேன்.
-
இங்கு நகல்எடுத்தல் என்ற வார்த்தையை பயன்படுத்த விரும்பவில்லை.
-
ஏனெனில் இது குழப்பத்தை உண்டாக்கும்.
-
அதனால் இந்த வார்த்தையை அழிக்கிறேன்.
-
ஆகவே,இந்த வார்த்தையை விட்டுவிடுகிறேன்.
-
-
அணுப்பிளவின் முன் நிலையில் கருவின் உறை
-
உண்மையில் மறைந்து விடுகிறது.
-
இதை இங்கு வரைகிறேன்.
-
முதலில் நான் செய்ததை நகல் எடுத்து இங்கு ஒட்டுகிறேன்.
-
-
இதை இங்கு வைக்கிறேன்.
-
ஆகையால் முன் நிலை வளர்ச்சியடையும் பொழுது
-
கருவின் உறை பிரியத்தொடங்குகிறது.
-
இது கரைந்து பின் பிரிய ஆரம்பிக்கிறது.
-
நிறப்புரிகள் வளர்ச்சியடைந்து மையனில்
-
இணைந்து கொள்கிறது.
-
இதை இங்கு வரைகிறேன்.
-
இது முன்நிலையின் போது நடக்கிறது.
-
-
இவையெல்லாம் முன்அவத்தையில் நடக்கிறது.
-
அதற்குப்பின் நடப்பவையெல்லாம் பின் அவத்தையில் நடக்கிறது.
-
இதை முன் அனுவவத்தை என்று கூறுகிறார்கள்.
-
-
இந்த வார்த்தையின் இடையில் சிறிய கோடு வருகிறதா என்பது
-
எனக்குச் சந்தேகமாக உள்ளது.
-
-
இந்த நிலையை இழையுருப்பிரிவில் வேறொரு நிலை என்று
-
கருதப்படுகிறது.நான் பள்ளியில் படிக்கும்பொழுது
-
இதைப்பற்றி அதிக விளக்கம் யாரும் கொடுக்கவில்லை.
-
உயிரணுப்பிளவின் முதல்நிலை என்றுதான் கூறப்பட்டது.
-
முன்னவத்தையின் முடிவில் அல்லது முன் அனுவவத்தையின்
-
முடிவில் இதில் நீ எந்தக் கண்ணோட்டத்தில்
-
பார்த்தாலும் சூழ்நிலை இப்படித்தான் இருக்கும்.
-
முழுசெல்லும் இதுதான்.
-
கருவின் உறை பிரிந்துள்ளது.
-
பிரிந்தது பிரிந்ததுதான்.
-
ஆனால் புரதங்கள் உண்டானது இன்னும் அதில்தான் உள்ளது.
-
அவைகள் பின்பு பயன்படும்.
-
இதில் இரண்டு நிறப்புரிகள் உள்ளன.
-
மனிதனைப் பொருத்தவரை 46 நிறப்புரிகள் இருக்கும்.
-
இந்த இரண்டு நிறப்புரிகளும் அதனதன்
-
அரைநிறவுருக்களுடன் காணப்படுகின்றன.
-
இரண்டு நிறப்புரிகள்.
-
இவைகளின் மையப்படி இங்குள்ளது.
-
இப்பொழுது துணைக்கருக்கள் இரண்டும் தோராயமாக
-
உட்கரு இருந்த இடத்திற்கு எதிர்புறமாக இடம் மாறுகிறது.
-
பின் இவைகள் பிரிந்து செல்கிறது.இங்கு உண்மையில்
-
நுண்குழாய்கள் இரண்டு வேலைகளைச் செய்கின்றன..
-
இந்த நிலையில் இரு துணைக்கருவும் தூர
-
தள்ளப்படுகின்றன.
-
இங்கு இவையெல்லாம் எதை இணைக்கிறது என்று பார்ப்போம்.
-
சில இந்தத்துணைக் கருவில் இருந்து வந்தவை.
-
மேலும் சில, இந்தத்துணைக் கருவில்'
-
இருந்து வந்தவை.
-
பின் இந்த நுண்குழாய்கள் அல்லது கயிறுகள்
-
போன்ற தோற்றமுடைய இந்தக் குழாய்கள்
-
நிறப்புரியின் மையன்களுடன் இணைந்து கொள்கின்றன.
-
அவற்றை மையத்துடன் இணைக்கும் புரத அமைப்பின்
-
பெயர் கைனட்டோகோர் ஆகும்.
-
அது கைனட்டோகோராக இருக்கலாம் அல்லது
-
இல்லாமல் இருக்கலாம்.
-
ஆனால் அது புரோட்டின் அமைப்பு ஆகும்.
-
ஆனால் சுவாரஸ்யமாக இருக்கிறது.
-
அந்த நுண்குழாய்கள் எவ்வாறு புரதஅமைப்புகளுடன் இணைந்துள்ளது என்பது
-
இப்பொழுதும் கூட ஆராய்ச்சிக்குரிய விசயமாக உள்ளது.
-
ஒரு வினாடியில் நாம் இதைப் பார்க்கப் போகிறோம்.
-
இந்த கைனட்டோகோரில் இணைந்துள்ள நுண்குழாய்கள்
-
இப்பிரதிகள் அரைநிறவுருக்களை தனித்தனியாக
-
தன்பால் இழுக்கிறது. உண்மையில் இந்தச்
-
செயல்பாடு இதுவரை புரிபடவில்லை.
-
ஆனால் இவ்வாறு நடப்பதை கண்டறியப்பட்டுள்ளது.
-
அணுப்பிளவின் முதல்நிலை முடிந்ததும் நிறப்புரிகள்
-
வரிசைப்படுத்தப் பட்டுள்ளதை செல் தெளிவுபடுத்திக் கொள்கிறது.
-
வரிசைப்படுத்தப்பட்டு அமைந்துள்ள நிறப்புரிகளை இங்கு வரைகிறேன்.
-
மையநிலையில் இது முறையாக நடைபெறுகிறது.
-
முதல் நிலைக்கு அடுத்த நிலை மையநிலை.(அனுவவத்தை)
-
முதல்நிலை முன்னவத்தை எனப்படும்.
-
நாம் இப்பொழுது இடை நிலையில் உள்ளோம்.
-
இந்த இடைநிலையில் நிறப்புரிகள் வரிசைப்படுத்தப்படுகின்றன.
-
எல்லா நிறப்புரிகளும் செல்லின் நடுவில் வரிசைப்படுத்தப்படுகின்றன.
-
கருஞ்சிவப்பு நிறத்தில் உள்ள அரைநிறவுரு இங்கொன்றுள்ளது
-
.இங்கொன்றுள்ளது.பச்சைநிறத்தில் இருக்கும் நிறப்புரிகள் இங்குள்ளன.
-
துணைக்கருவுகள்,அதிலிருந்து வரும் நுண்சுழல்கள்
-
முதலியன இருக்கின்றன.
-
கைனட்டோகோர் நுண்சுழல்கள் நிறப்புரிகளின்
-
மையன்களில் இணைந்துள்ளது.
-
இவைகள் உண்மையான நிறப்புரிகள்.
-
குழப்பமாக இருக்கிறது இல்லையா?
-
துணைகருவுகள் என்ன செய்கிறது என்றால் நுண்குழாய்களில்
-
நடப்பதற்கு வழிகாட்டியாய் உதவுகிறது.
-
கலன் வடிவத்தில் இருக்கும் துணைக்கருமணிகள்
-
துணைக் கருவிற்குள் உள்ளன.
-
மையன்கள் என்பது நடுப்பகுதி.
-
இதில் நிறப்புரியில் உள்ள மரபிழைகள் இரண்டும் இணைந்துள்ளன.
-
இது ஒரு மரபிழை.இது இன்னொரு மரபிழை.
-
இரண்டும் மையனில் இணைந்துள்ளது.
-
இந்த நிலை அனுவவத்தை அல்லது இடைநிலை ஆகும்.
-
இது மிகவும் எளிதானது.
-
இந்த நிலையில் செல்களின் சீரமைப்பு நடைபெறுகிறது.
-
உண்மையில் இதுபற்றிய சில கொள்கைகள் இருக்கிறது. என்னவென்றால் இந்த நிலையில்
-
இருந்து முன்னேறும் வழியை செல் எப்படித் தெரிந்து கொள்கிறது?
-
ஒவ்வொன்றும் சீரான முறையில் அமைந்து ஒன்றுடனொன்று
-
இணைந்துள்ளது என்பதை எப்படித் தெரிந்து கொள்கிறது?
-
சில கோட்பாடுகள் என்ன சொல்கிறது என்றால்
-
சில சமிக்ஞை பொறிமுறைகளைச் செல் பயன்படுத்துகிறது.
-
இந்த சமிக்ஞையை வைத்து கைனட்டோகோர் புரதங்களில்
-
ஒன்று அந்த கயிறு போன்ற நுண்குழாயில் இணையவில்லையென்றால்
-
செல் பிரிவு தொடராது.
-
ஆகையால் இந்த இடத்தில் இது ஒரு சிக்கலான செயல்முறையாகத் தோன்றுகிறது.
-
இதை கற்பனை செய்துகொள்.உனக்கு 46 நிறப்புரிகள் உள்ளன.
-
செல்லினுள் இதுவரை பார்த்த விசயங்கள் அவ்வளவும் நடந்துகொண்டுள்ளன.
-
தனியொன்று இதனையெல்லாம் செய்யவைக்கவில்லை.
-
அல்லது வேறு கணினி எதுவும் இதில் இல்லை.
-
இவற்றையெல்லாம் வழி காட்டுவது வேதியலும்
-
வெப்ப இயக்கவியலும்தான்.
-
ஆனால் இந்தச் செயல்கள் சிக்கலாகவும் இருக்கிறது அதே சமயத்தில் நேர்த்தியாகவும் உள்ளது.
-
தன்னிச்சையாகவும் அதே சமயத்தில் சரிபார்ப்புடனும்
-
சமநிலையுடனும் செயல்கள் நடத்தப்படுகின்றன.நிறைய நேரங்களில் தவறானதாக
-
எதுவும் நடப்பதில்லை. இவையெல்லாம் மிகவும் ஆச்சர்யமாக உள்ளது.
-
பகுப்புமையநிலையைத் தொடர்ந்து வருவது பிரிநிலை ஆகும்.
-
இதனுள் உள்ளவை இப்பொழுது பிரிவதற்குத் தயாராகிறது.
-
-
பிரிநிலையில் நடப்பதை இங்கு எழுதுகிறேன்.
-
செல்லின் நிறத்தை மாற்றிவிட்டேன்.
-
இவைகள் தனித்தனியாகப் பிரிக்கப்படுகின்றன
-
இவைகள் இவ்வாறு பிரிக்கப்பட்டவுடன்
-
ஒவ்வொன்றும் ஒரு திசையில் இழுக்கப்படுகிறது.
-
இதை பச்சை வண்ணத்தில் செய்கிறேன்.
-
அரைநிற உருக்களி்ல்.இல்லை,இது பச்சைவண்ணத்தில் இல்லை.
-
ஒன்று இந்தப் பக்கம் இழுக்கப்படுகிறது
-
இன்னொன்று இந்தப் பக்கம் இழுக்கப்படுகிறது.
-
கருஞ்சிவப்பில் இருப்பதற்கும் இதேபோல்தான் நடக்கிறது.
-
ஒன்று இந்தப் பக்கம் இழுக்கப்படுகிறது.
-
இன்னொன்று இந்தப்பக்கம் இழுக்கப்படுகிறது.
-
துணைக்கருவுகள் இங்கே உள்ளன.
-
அவைகள் இங்குள்ள கைனட்டோகோருடன் இணைந்துள்ளது.
-
இவைகள்தான் அவற்றை இழுக்கின்றன.
-
இந்த முழு நுண்குழாய்களும் உண்மையான
-
நிறப்புரிகளுடன் சேர்ந்துள்ளன.s
-
இவைகள் துணைக்கருவுகள் தனித்தனியே செல்ல உதவுகின்றன.
-
அப்பொழுதுதான் ஒவ்வொன்றும் செல்லின் எதிர்திசையில் செல்லும்.
-
விரைவில் மரபிழைகள் இரண்டும் பிரிகிறது.
-
டிஎன்ஏ சொல்லகராதி பற்றிக் கூறுவதற்குமுன்
-
இதைப் பற்றி நான் கொஞ்சம் பேசியுள்ளேன்.
-
இவை ஒவ்வொன்றும் நிறப்புரிகள் அல்லது குரோமோசோம்கள்.
-
ஒரு செல்லினுள் என்னவெல்லாம் இருக்க வேண்டுமோ
-
அவையெல்லாம் இதில் வந்துவிட்டது என இப்பொழுது நீ கூறலாம்.
-
இதில் இரண்டு நிறப்புரிகள் உள்ளன.
-
ஆனால்,இப்பொழுது இதில் நான்கு நிறப்புரிகள் உள்ளன.
-
ஏனெனில் மரபு இழைகள் அரைநிறவுருக்களுடன் சேராமல்
-
இருக்கும் பொழுது அதுவும் அரைநிறவுருக்களாகிறது.
-
வழக்கத்தில் அதை ஆங்கிலத்தில் சிஸ்டர் குரோமோசோம்கள் என்பார்கள்.
-
நான் இங்கு என்ன சொல்கிறேன் என்றால் இவைகள் முன்பும் இருந்தது.இப்பொழுதும் இருக்கின்றது.
-
முன்பு இணைந்திருந்தது.
-
இப்பொழுது இணைந்திருக்கவில்லை.
-
அவைகளின் தனிப்பட்ட செயல்களாக நீ இதை எடுத்துக் கொள்ளலாம்.
-
இதுவரை நாம் முடித்துவிட்டோம்.
-
இதில் கடைசி நிலை ஈற்றவத்தை ஆகும்.
-
-
செல்லை இப்பொழுது கொஞ்சம் வித்தியாசமாக
-
Vவரைகிறேன்.ஏனெனில் ஒரே சமயத்தில் சில
-
விசயங்கள் இந்த ஈற்றவத்தையில் நடக்கும்.
-
ஈற்றவத்தையில் கலத்தை நான் இப்பொழுது 90
-
டிகிரி கோணத்தில் சுழற்றி வைக்கிறேன்.
-
இப்பொழுது இது ஒரு மையப்படி.
-
இது இன்னொரு மையப்படி.
-
முக்கியமாக இந்த இடத்தில்தான் மரபணுக்கள்
-
இழுத்துக் கொள்ளப்படுகின்றன.
-
ஒரு நிறப்புரியின் நகலை இது இங்கு இழுத்துக்கொள்கிறது.
-
இன்னொரு நிறப்புரியின் நகலை இதன் பக்கம் இழுத்துக் கொள்கிறது.
-
இதுவும் இப்படித்தான் செய்கிறது.
-
ஒவ்வொன்றின் நகலில் இருந்தும் ஒன்றை எடுத்துக் கொள்கிறது.
-
நிறப்புரியின் ஒரு நகலை எடுத்துக் கொள்கிறது.
-
இதை இப்படி வரைகிறேன்.
-
இரண்டின் முடிவிலும் செல் உறைகள் உண்டாக
-
ஆரம்பிக்கின்றன.
-
இப்பொழுது இரண்டைச் சுற்றிலும் கருவின்
-
மென்படலம் உண்டாகிறது.
-
ஆகையால் ஈற்றவத்தையின் முடிவில்
-
இழையுருப்பிரிவு முடிந்துவிடுகிறது.
-
அசல் கருவின் இரு நகல்கள் மரபணுக்களுடன்
-
உள்ளடங்கியுள்ளது
-
ஈற்றவத்தை நடக்கும்பொழுதே குழியவுருப்பிரிவும் நடைபெறுகிறது.
-
குழியவுருப் பிரிவின்போது
-
சிறிய பிளவு உண்டாகிறது.
-
ஈற்றவத்தையின் போது அவைகள் நுண்குழாய்களால்
-
மேலும் கொஞ்சம் தள்ளப்படுகின்றன.
-
இதில் செல்கூழ்மம் உள்ளது.
-
இவையெல்லாம் ஒரு பக்கமாக தள்ளப்படுவதால் செல்லை
-
நீ பார்க்கும்போது கொஞ்சம் நீளமான வடிவத்தில் தெரியும்.
-
இப்பொழுது இந்தப் பிளவு உண்டாகி உள்தள்ளப்பட்டது போன்ற
-
வடிவத்தில் இருக்கிறது.
-
இழையுருப் பிரிவின் ஈற்றவத்தையில்
-
இந்தக் குழியுருப் பிரிவின் செயல்பாடு நடக்கிறது.
-
இந்தக் குழியவுருப் பிரிவில் அந்தப் பிளவு அதிகமாகி அதிகமாகி செல்கூழ்மம்
-
இரண்டாகப் பிரிந்து இரு அணுக்கள் உண்டாகின்றன.
-
இந்தக் குழியவுருப் பிரிவு என்பது இழையுருப் பிரிவில் ஒரு பகுதியாக இல்லாவிட்டாலும்
-
ஈற்றவத்தையில் அந்தச் செயல்பாடு முறையாக நடக்கிறது.
-
ஆக,இழையுருப்பிரிவின் முடிவில்
-
இரண்டு ஒரே மாதிரியான செல்கள் உண்டாகின்றன.
-
ஒருமுறை இவ்வாறு இரண்டு செல்களும் உண்டானவுடன்
-
ஒவ்வொன்றும் தனித்தனியாக இடையவத்தைக்குச் செல்கிறது.
-
ஒவ்வொன்றும் தனியாக ,இதை நாம் எடுத்துக் கொண்டால்
-
இது அதன் G1 நிலையில் இருக்கிறது.
-
ஒரு கட்டத்தில் இவை இரண்டும் தங்கள் பிரதியை உண்டாக்கப் போகிறது.
-
இது S நிலை. நீ G2 நிலைக்குச் செல்லும்பொழுது
-
மீண்டும் இது ஒரு இழையுருப் பிரிவிற்கு உள்ளாகும்.