-
-
காலன் ஒன்றுக்கு $2.70 என்ற விலையில் 14.6 காலன்
-
பெட்ரோலின் விலை என்ன?
-
நம்மிடம் 14.6 காலன் உள்ளது, ஒரு காலன்
-
விலை $2.70.
-
அல்லது $2.70 என்பதை 2.7 டாலர் என்று கூட நாம் எடுத்துக்கொள்ளலாம்.
-
நாம் 2.7 ஆல் பெருக்குவோம்.
-
இது கணக்கினை சற்று எளிமையாக்குகின்றது.
-
$2.70 என்பது காலன் ஒன்றுக்கு 2.7 டாலர் என்பதைப் போன்றதே
-
என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன்.
-
நாம் இதைப் பெருக்குவோம்.
-
முதலில் நம்மிடம் இருப்பது, ஒரு மீதியைப் போல, நீங்கள்
-
தசம எண்களைப் பெருக்கும்போது, அந்த எண்களை நீங்கள் முழு எண்களைப் போலவே கருதிக்கொள்ள வேண்டும்,
-
தசம இலக்கங்களைப் பற்றி பிறகு பார்த்துக்கொள்ளலாம்.
-
இப்பொழுதிருந்து, இதை நாம் 146 பெருக்கல் 27 எனப் பார்க்கலாம்,
-
தசம இலக்கங்கள் குறித்து பின்னர் நாம் கவலைப்பட்டுக் கொள்ளலாம்.
-
எனவே, முதலில் நம்மிடம் இருப்பது 7 பெருக்கல் 6.
-
7 பெருக்கல் 6 சமம் 42.
-
4 ஐச் சேர்க்கவும்.
-
7 பெருக்கல் 4 சமம் 28, கூட்டல் 4 சமம் 32.
-
3 ஐச் சேர்க்கவும்.
-
7 பெருக்கல் 1 சமம் 7, கூட்டல் 3 சமம் 10.
-
எனவே நமக்குக் கிடைப்பது, 7 பெருக்கல் 146 சமம் 1,022.
-
இப்பொழுது நாம் 2 ஆல் பெருக்கப் போகிறோம்.
-
ஆனால் இந்த 2, தசமப் புள்ளியை நாம் கருதுவதற்கு முன்பு,
-
உண்மையில் 20 ஆகும்.
-
எனவே, நாம் இங்கே ஒரு 0 சேர்க்கப் போகிறோம்.
-
இதை நாம் வழக்கமான ஒரு பெருக்கல் கணக்கைச் செய்யும் அதே வழியில்
-
செய்யப் போகிறோம்.
-
இப்பொழுது நாம் தசமப் புள்ளியை நிராகரிக்கப் போகிறோம்.
-
2 பெருக்கல் 6 சமம் 12.
-
1 ஐ எடுத்துச் செல்லவும், அல்லது 1 ஐ அடுத்த வரிசையில் சேர்க்கவும்.
-
இந்த எண்களை நாம் இப்பொழுது நிராகரித்துவிடலாம்.
-
2 பெருக்கல் 4 சமம் 8, கூட்டல் 1 சமம் 9.
-
2 பெருக்கல் 1 சமம் 2, இப்பொழுது நாம் கூட்டலாம்.
-
-
நமக்குக் கிடைப்பது, 2 கூட்டல் 0 சமம் 2.
-
2 கூட்டல் 2 சமம் 4.
-
0 கூட்டல் 9 சமம் 9.
-
1 கூட்டல் 2 சமம் 3.
-
இப்பொழுது நாம் 146 பெருக்கல் 27 இன் விடை எவ்வளவு எனக் கண்டுபிடித்து விட்டோம்.
-
அது 3,942 ஆகும்.
-
ஆனால் இது 146 பெருக்கல் 27 அல்ல.
-
இது 14.6 பெருக்கல் 2.7 ஆகும்.
-
எனவே இப்பொழுது நாம் தசம இலக்கங்களைப் பற்றிப் பார்க்க வேண்டும்.
-
தசமப் புள்ளிக்குப் பின்னால் எத்தனை இலக்கங்கள் இருக்கின்றன என நாம் எண்ணுவோம்.
-
வலது பக்கத்தில் ஒன்று அங்கே உள்ளது, மேலும் இரண்டாவது அங்கே உள்ளது.
-
எனவே நம்முடைய பெருக்கலில் தசமப் புள்ளிக்கு வலது பக்கத்தில்
-
இரண்டு இலக்கங்கள் இருக்க வேண்டும்.
-
ஒன்று, இரண்டு, புள்ளியை இங்கே வைக்கவும்.
-
எனவே காலன் ஒன்றுக்கு $2.70 வீதம் 14.6 காலன் எரிபொருளின் விலை,
-
$39.42 ஆகும்.
-