-
75-ஐ பகாக்காரணி படுத்தி
எழுதவும்.
-
உங்களுடைய பதிலை
அடுக்குக்குறி எண்மானத்தில் எழுதவும்.
-
ஆகவே நமக்கு இங்கே ஒரு சில
சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கின்றன.
-
பகாக் காரணிப்படுத்துதல், பிறகு
அடுக்குக்குறி எண்மானம் என்கிறார்கள்.
-
அடுக்குக்குறி எண்மானத்தை பற்றி
நாம் பின்னர் பார்க்கலாம்.
-
ஆகவே நாம் முதலில் பார்க்க வேண்டியது என்னவென்றால்,
-
பகா எண் என்றால் என்ன?
-
ஒரு பகா எண் என்பது தன்னால் மற்றும்
-
ஒன்றால் மட்டுமே வகுபடும் எண், பகா எண்களின்
-
எடுத்துக்காட்டுகள் – நான் சில
எண்களை எழுதுகிறேன்.
-
பகா எண்கள்...... பகா எண் அல்லாதது.
-
2 ஒரு பகா எண்.
-
அது 1 மற்றும் 2 ஆல்
மட்டுமே வகுபடும்.
-
3 இன்னொரு பகா எண்.
-
4 பகா எண் அல்ல,
ஏனெனில் அது
-
1, 2 மற்றும் 4 ஆல் வகுபடும்.
-
இப்படியே செல்லலாம்.
-
5, இது 1 மற்றும் 5ஆல் மட்டுமே வகுபடும்,
எனவே 5 பகா எண்.
-
6 பகா எண் அல்ல, ஏனெனில் அது
2 மற்றும் 3ஆல் வகுபடும்.
-
உங்களுக்கு ஒரு பொதுவான எண்ணம் கிடைத்திருக்கும்
-
7க்கு செல்லுங்கள், 7 பகா எண்.
-
அது 1 மற்றும் 7ஆல்
மட்டுமே வகுபடும்.
-
8 பகா எண் அல்ல.
-
9 பகா எண் என்று சொல்ல ஆர்வமாக இருக்கலாம், ஆனால், அது
-
3ஆலும் வகுபடும் என்பதை நினைவில் கொள்ளவும்,
எனவே 9 பகா எண் அல்ல
-
பகா எண் ஒற்றைப்படை எண்கள் போல இல்லை
-
பிறகு நீங்கள் 10க்கு நகர்ந்தால்,
10ம் பகா எண் அல்ல,
-
2 மற்றும் 5ஆல் வகுபடும்.
-
11, 1 மற்றும் 11ஆல் மட்டுமே வகுபடும்,
அப்படி என்றால்
-
11 ஒரு பகா எண்.
-
மேலும் நாம் இப்படியே
சென்று கொண்டிருக்கலாம்.
-
மக்கள் பகா எண்களை அறிவதற்காக
-
கணிணி நிரல்கள் எழுதி உள்ளனர்.
-
எனவே இப்பொழுது ஒரு பகா எண் என்றால் என்ன
என்பது நமக்கு தெரியும்,
-
ஆகவே, ஒரு பகாக் காரணிப்படுத்தல் என்பது 75
போன்ற ஒரு எண்ணை
-
பகா எண்களின் பெருக்கலாக பிரித்தல்.
-
நாம் அதை செய்ய முயற்சிக்கலாம்.
-
நாம் 75உடன் ஆரம்பிக்கப் போகிறோம்,
மற்றும் நான்
-
காரணி கிளைத்தலை பயன்படுத்தி
அதை செய்யப் போகிறேன்.
-
75ல் போகும், மிகச்சிறிய
பகா எண்ணை கண்டு பிடிக்க
-
நாம் முயற்சி செய்ய வேண்டும்.
-
மிகச்சிறிய பகா எண் 2.
-
2, 75ல் போகுமா?
-
75 ஒற்றை எண், அல்லது
ஒற்றை இடத்தில் இருக்கும் எண்ணாகிய
-
இந்த 5, ஒரு ஒற்றை எண்.
-
5, 2ஆல் வகுபடாது, எனவே
2, 75ல் அடங்கும்.
-
எனவே நாம் 3ஐ முயற்சிக்கலாம்.
-
3, 75ல் அடங்குமா?
-
7 கூட்டல் 5, 12 ஆகும்.
-
12, 3ஆல் வகுபட முடியும், எனவே
3 அதற்குள் அடங்கும்.
-
எனவே 75 என்பது 3 மடங்கு வேறு ஒரு எண்.
-
நீங்கள் சில்லரையை கையாண்டிருந்தால்,
உங்களுக்கு தெரியும்
-
உங்களிடம் மூன்று கால் ரூபாய்கள் இருந்தால், உங்களிடம் 75 பைசாக்கள் உள்ளன,
-
அல்லது உங்களிடம் 3 முறை 25 இருந்தால், உங்களிடம் 75 இருக்கிறது.
-
இது தான் 3 முறை 25.
-
நீங்கள் என்னை நம்பவில்லை என்றால்
இதை பெருக்கிப் பார்க்கலாம்.
-
25ஐ 3 ஆல் பெருக்கவும்.
-
இப்பொழுது, 25ஐ வகுப்பதற்கு-
நீங்கள் 2ஐ விட்டு விடலாம்.
-
75, 2ஆல் வகுபட முடியாவிட்டால்,
25ம்
-
2ஆல் வகுபட முடியாது.
-
ஆனால் ஒருவேளை 25
3ஆல் வகுபடலாம்.
-
இலக்கங்களை எடுத்துக் கொண்டால்,
2 கூட்டல் 5, 7 கிடைக்கிறது.
-
7, 3ஆல் வகுபட முடியாது, எனவே
25ம் 3ஆல் வகுபட முடியாது.
-
இப்போது நாம் முன்னே செல்வொம்: 5.
-
25, 5ஆல் வகுபட முடியுமா?
-
நிச்சயமாக.
-
அது 5 முறை 5.
-
எனவே 25 என்பது 5 முறை 5.
-
நாம் பகாக் காரணிபடுத்தலை முடித்து விட்டோம்
ஏனெனில் இப்போது நமக்கு
-
எல்லா பகா எண்களும் இங்கே உள்ளன.
-
எனவே நாம் இப்பொழுது75ஐ
3 முறை 5 முறை 5 என எழுதலாம்.
-
எனவே 75 என்பது 3 முறை
5 முறை 5க்கு சமம்.
-
அதனை 3 முறை 25 என நாம் கூறலாம்.
-
25 என்பது 5 முறை 5.
-
3 முறை 25, 25 என்பது 5 முறை 5.
-
எனவே இது பகாக் காரணிப்படுத்தல்,
ஆனால் நம்முடைய பதிலை
-
அடுக்குக்குறி எண்மானத்தில் எழுதவேண்டும்
-
அதாவது, ஒரே மாதிரி பகா எண்கள் இருந்தால்,
அவற்றை ஒரு
-
அடுக்குக்குறியாக எழுத முடியும்.
-
5 முறை 5 என்பது என்ன?
-
5 முறை 5 என்பது 5 தன்னைத் தானே
இரண்டு முறை பெருக்கிக் கொள்ளுதல் ஆகும்.
-
இது 5க்கு இரண்டாம் அடுக்கு
என்பதை போல.
-
எனவே நமது பதிலை
அடுக்குக்குறி எண்மானத்தை பயன்படுத்தி
-
எழுத வேண்டும் என்றால், நாம் இதை
3 முறை 5க்கு இரண்டாம் அடுக்கு
-
என கூறலாம், அதாவது
5 முறை 5 ஆகும்.