< Return to Video

சதவிகிதம், தொகை மற்றும் அடிப்படை எண்களை கண்டறிதல்

  • 0:00 - 0:08
    சதவிகிதம், தொகை, அடிப்படை எண் ஆகியவற்றை கண்டறியவும்.
  • 0:08 - 0:12
    150, எந்த அடிப்படை எண்ணின் 25%?
  • 0:12 - 0:20
    இது 25% பெருக்கல் ஒரு எண், எனவே 25% ஐ மஞ்சள் நிறத்தில்
  • 0:20 - 0:35
    எழுதுகிறேன். 25% பெருக்கல் ஒரு எண் என்பது 150 ஆகும்.
  • 0:35 - 0:40
    சதவிகிதத்தை கண்டுபிடிப்பது மிகவும் சுலபம். இது 25% .
  • 0:40 - 0:45
    இது தான் இதன் சதவிகிதம்.
  • 0:45 - 0:50
    சதவிகிதத்தை அடிப்படை எண்ணுடன் பெருக்குகிறோம்.
  • 0:50 - 0:57
    அடிப்படை எண்ணின் சதவிகிதம் என்பது தொகை ஆகும்.
  • 0:57 - 1:06
    இதை நீங்கள் மனக்கணக்கிடலாம்.
  • 1:06 - 1:11
    ஒரு எண்ணின் 25% = 150 ஆகும்.
  • 1:11 - 1:19
    25% ஐ 0.25 என்றும் எழுதலாம். இரண்டும் ஒன்று தான்.
  • 1:19 - 1:27
    0.25ஐ எந்த எண்ணுடன் பெருக்கினால் 150 கிடைக்கும்.
  • 1:27 - 1:32
    அந்த எண் 150 ஐ விட பெரியதா இல்லை சிறியதா?
  • 1:32 - 1:35
    அந்த எண்ணில் 25% தான் எடுத்துக்கொள்கிறோம், 25/100 தான் எடுக்கிறோம்.
  • 1:35 - 1:46
    ஒரு முழு எண்ணில் 1/4 தான் எடுக்கிறோம். எனவே அந்த எண் 150 ஐ விட பெரியது.
  • 1:46 - 1:50
    அந்த எண், 150 ஐ விட நான்கு மடங்கு பெரியதாக இருக்க வேண்டும்.
  • 1:50 - 1:52
    இப்பொழுது அந்த எண்ணை கண்டுபிடிக்க வேண்டும்.
  • 1:52 - 1:57
    அதற்கு ஒரே எண்ணால் இடது பக்கத்தையும் வலது
  • 1:57 - 2:01
    பக்கத்தையும் பெருக்கினால் சமமான விடையை வரும்.
  • 2:01 - 2:05
    எனவே, நம்மிடம் ஒரு எண் இருக்கிறது அதை
  • 2:05 - 2:08
    4 ஆல் பெருக்குகிறோம். அப்பொழுதுதான் அது
  • 2:08 - 2:09
    4 பெருக்கல் 150 ஆகும்.
  • 2:09 - 2:16
    4 x 0.25 (4 x 25% அல்லது 1/4 ), இதன் விடை 1 தான்.
  • 2:16 - 2:21
    150 ஐ 4 ஆல் பெருக்கினால் நமது விடை கிடைக்கும்.
  • 2:21 - 2:24
    அதன் விடை, 600.
  • 2:24 - 2:28
    150 என்பது 600-ல் 25%
  • 2:28 - 2:31
    600-ல் 1/4 பகுதி, 150 ஆகும்.
Title:
சதவிகிதம், தொகை மற்றும் அடிப்படை எண்களை கண்டறிதல்
Description:

சதவிகிதம், தொகை மற்றும் அடிப்படை எண்களை எவ்வாறு கண்டறிவது என்று விளக்கப்பட்டுள்ளது.

more » « less
Video Language:
English
Duration:
02:32
Karuppiah Senthil edited Tamil subtitles for Identifying Percent Amount and Base
Om Prakaash Pandiyaraju edited Tamil subtitles for Identifying Percent Amount and Base
Om Prakaash Pandiyaraju edited Tamil subtitles for Identifying Percent Amount and Base

Tamil subtitles

Revisions