-
இப்பொழுது இதன் இடது பக்கத்தில் கலந்து விட்டோம்.
-
இதில் நமக்கு தெரியாது நிறை x மட்டும் அல்ல,
-
அதனுடன், மூன்று நீல பொருள்களும் உள்ளன,
-
நம்மிடம் 1 kg நிறைகளும் உள்ளன,
-
நம்மிடம், அவை இரண்டு உள்ளன.
-
இப்பொழுது இதில் x என்றால் என்ன என்று கண்டறியலாம்.
-
இதனை செய்வதற்கு முன், கணித சமன்பாடு ஒன்றை பற்றி சிந்திக்கலாம்.
-
அது இங்கு நடப்பதைப் பற்றிய ஒரு குறிப்பைத் தரும்;
-
அது இடது பக்கத்தில் உள்ளதையும் வலது பக்கத்தில் உள்ளதையும் சமன்படுத்தும்.
-
இதைப்பற்றி யோசிக்க உங்களுக்குச் சில வினாடிகள் தருகிறேன்.
-
ஆகையால், இடதுபக்கத்தில் என்ன உள்ளது என்று பார்ப்போம்.
-
அதில் x நிறை கொண்ட 3 நிறைகள் உள்ளன. அதை 3x என்று வைத்துக் கொள்வோம்.
-
அதனுடன் இரு 1 கிலோ நிறைகள் உள்ளன. ஆகவே, இந்த 2 கிலோ என்பது அதனுடன்
-
சேரவேண்டும். ஆகையால், இடது தட்டில் இருக்கும் மொத்த நிறை 3x + 2.
-
x நிறை கொண்ட 3 நிறைகள் கூட்டல் 2 கிலோ உள்ளன.
-
இவைதான் நமது இடது தட்டில் உள்ளன.
-
இப்பொழுது வலது பக்கத் தட்டில் என்ன இருக்கிறது என்று பார்ப்போம்.
-
அவற்றை அப்படியே எண்ணலாம்.
-
(14 வரை எண்ணுதல்)
-
ஒவ்வொன்றும் 1 கிலோவாக 14 தொகுதிகள் உள்ளன. மொத்த நிறை 14 கிலோ.
-
இப்பொழுது தராசின் தட்டுகள் சமச்சீர் நிலையில் இருப்பதை பார்க்கிறோம்.
-
ஆகவே, இந்த தட்டில் உள்ள நிறை அந்த தட்டில் உள்ள மொத்த நிறைக்கு சமம்.
-
தராசு நிலையாக இருக்கிறது. ஆகவே சமநிலை குறியை இடலாம்.
-
(இதை வெள்ளை நிறத்தில் செய்கிறேன். நான் காவி நிறத்தை விரும்பவில்லை.)
-
இப்பொழுது, நீங்கள் எதைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்றால்,
-
இந்த குறியீடு அல்லது அளவுகோலின் படி சிந்திக்கலாம்,
-
இதை வைத்து எவ்வாறு கண்டறிவீர்கள்,
-
இப்பொழுது 1 கிலோ நிறையுள்ள தொகுதிகளை எப்படி நீக்கலாம்?
-
அதைப் பற்றி நீங்கள் ஒரு வினாடி சிந்தியுங்கள்.
-
இதில் எளிமையான விஷயம் என்னவென்றால்
-
இடது பக்கத்தில் 1 கிலோ நிறையுள்ள தொகுதியை நீங்கள் எடுக்க முடியும்.
-
ஆனால், நீங்கள் தொகுதிகளை இடதுபக்கத்தில் இருந்து எடுத்தால்
-
முன்பிருந்த சமநிலை மாறி இடதுபக்கம் சற்று இலகுவாகிறது.
-
அதனால் சற்று மேலே போகிறது. ஆனால் நாம் தட்டுகளை சமநிலையில்
-
வைக்கவேண்டும், அப்பொழுதுதான் நிறைகள் சம நிறையில் உள்ளது என்று கூறலாம்.
-
ஆகவே, நாம் இப்பொழுது 2-ஐ இடது பக்கத்தில் இருந்து நகர்த்தினால் வலது பக்கமும் 2
-
நகர்த்த வேண்டும். ஆகவே, இங்கு 2-ஐ நகர்த்திவிட்டு அதிலும் 2 -ஐ நகர்த்துவோம்.
-
கணிதப்படி நாம் என்ன செய்கிறோம் என்றால் 2 பக்கங்களிலும் 2 -ஐ கழிக்கிறோம்.
-
நாம் இடதுபக்கத்தில் இருந்து 2 ஐ கழிக்கிறோம்.
-
ஆகவே இடதுபக்கத்தில் உள்ளது 3x + 2-2 உள்ளது.
-
ஆக நம்மிடம் இடதுபக்கம் 3x மட்டும் உள்ளது.
-
வலதுபக்கம் 14 இருந்ததில் 2 ஐ எடுத்துவிட்டோம்
-
இங்கு நாம் 2 ஐ எடுத்துவிட்டதால் இப்பொழுது நம்மிடம் 12 தொகுதிகள் மட்டுமே உள்ளது.
-
மீதம் 12 தொகுதிகள் உள்ளன.
-
x தொகுதியில் 3 உள்ளன.
-
இரண்டு பக்கங்களில் இருந்தும் ஒரே அளவை நீக்கியதால்
-
தராசுத் தட்டுகள் சமநிலையிலேயே இருக்கிறது. ஆக, இங்கு நம் சமன்பாடு 3x =12.
-
இது நாம் கடந்த காணொளியில் பார்த்த பிரச்சனை போன்று உள்ளது.
-
ஆகவே, நான் இப்பொழுது உங்களிடம் கேட்கிறேன் ,
-
x தராசின் இடது பக்கத்தில் உள்ளது, அதே சமயத்தில் தட்டுகளின் சமநிலை
-
மாறாமல் ஒரு x ஐ தனியாக்க நாம் என்ன செய்யவேண்டும் ?
-
இதற்கு மிகவும் சுலபமான வழி என்னவென்றால்
-
இடதுபக்கத்தில் இருந்து 1 x எனக்கு வேண்டுமென்றால், அது மொத்த xல் 3 ல் ஒன்று.
-
ஆகவே, நான் இடதுபக்கத்தை மூன்றில் ஒன்றால் பெருக்குகிறேன்.
-
ஆனால், தட்டுகள் சமநிலையில் இருக்க வலதுபக்கத்தையும் மூன்றில் ஒன்றால்
-
பெருக்குகிறேன், கணிதமுறையில் செய்யும்பொழுது இவ்வாறு செய்யலாம்.
-
இடதுபக்கத்தில் உள்ளதை 1/3 ஆல் பெருக்குகிறேன்.
-
தராசு சமநிலையில் இருக்க வலது பக்கத்தையும் 1/3 ஆல் பெருக்க வேண்டும்.
-
இங்கு பெருக்குதலின் அர்த்தம் என்றவென்றால் முதலில்
-
இருந்த மூன்றில் ஒன்றை எடுத்துக் கொண்டு இரண்டை விட்டுவிட வேண்டும்.
-
மூன்றில் ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும்.
-
வலது பக்கத்தில் 2 ஐ நீக்கியவுடன் 12 கட்டைகள் உள்ளன.
-
1 கிலோ கொண்ட 12 கட்டைகளின் 1/3 பகுதி எவ்வளவு என்றால் 4.
-
4 ஐ வைத்துக் கொண்டு மீதியை நீக்கிவிடுகிறேன்.
-
ஆகவே, என்னிடம் இங்கு 4 உள்ளது.
-
ஆகவே, உங்களிடம் மீதம் உள்ளது,
-
இந்த x மட்டும் மீதம் இருக்கும் - இதற்கு வண்ணம் கொடுக்கிறேன்.
-
பிறகு நம்மிடம் 1 கிலோ நிறைகள் உள்ளன.
-
கணிதமுறையில் இதைப் பார்க்கும்போது 1/3 * 3x
-
அல்லது 3x ஐ 3 ஆல் வகுத்தல் என்றும் கூறலாம்.
-
இதில் இரண்டு மூன்றுகளும் நீங்கிவிடுகிறது.
-
இதில் வலதுபக்கத்தில் இருப்பது 12 * 1/3. இது 12/3 = 4 என்பதற்கு சமம்.
-
இரண்டு பக்கத்திலும் ஒரே மாதிரி செய்வதால் தட்டுகள் சமநிலையில் உள்ளன.
-
ஆகையால் மீதமுள்ள இந்த 4-ன் நிறைகள் இதற்கு சமமாக இருப்பதை பார்க்கிறீர்கள்.
-
x என்பது 4 கிலோகிராமிற்கு சமம்.