-
கணினிகள் உண்மையில் மிகச் சிறப்பாகச் செய்கின்ற ஒரு விஷயம் கட்டளைகளை மீண்டும் நிகழ்த்துவது.
-
ஒரு மனிதராக, ஒரே விஷயத்தை நீங்கள் தொடர்ந்து பல முறை செய்ய வேண்டியிருந்தால் உண்மையிலேயே நீங்கள் சலிப்படைந்து விடுவீர்கள்.
-
ஆனால் ஒரு கணினி ஒரே விஷயத்தை இலட்சக்கணக்கான அல்லது கோடிக்கணக்கான முறைகள் கூட மீண்டும் செய்ய முடியும்,
-
அதை உண்மையிலேயே சிறப்பாகச் செய்ய அவை ஒருபோதும் சலிப்படைவதில்லை.
-
உதாரணமாக, Facebook-இல் உள்ள ஒவ்வொருவருக்கும்
-
மின்னஞ்சல் அனுப்பி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வேண்டும் என நான் விரும்பினால்,
-
அந்த மின்னஞ்சல்கள் அனைத்தையும் உண்மையில் நான் எழுத நினைத்தால் அதற்கு ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிடும்.
-
ஆனால் ஒரு சில வரிகள் கொண்ட குறியீட்டின் மூலம், Facebook-இல் உள்ள
-
ஒவ்வொருவருக்கும் கணினி வாயிலாக நான் பிறந்த நாள் வாழ்த்து அனுப்பிவிட முடியும்.
-
லூப்கள் இதற்கு உதவுகின்றன, இதனால் அவை மதிப்புமிக்கவையாக இருக்கின்றன,
-
இவை கணினிகள் மிகச் சிறப்பாகச் செய்யக்கூடிய ஒன்றும் கூட.
-
இந்த உதாரணத்தில் உங்கள் இலக்கு பன்றியைப் பெற பறவையை
-
நகர்த்துவதாக இருக்கும். இப்போது இதை மிக எளிதாகச் செய்ய
-
”மீண்டும் செய்க” தொகுதியை நாம் பயன்படுத்தப் போகிறோம். பறவையை ஒவ்வொரு முறை பன்றியை
-
நோக்கி ஓர் அடி எடுத்துவைக்கச் செய்வதற்கு கணினிக்கு “முன்னோக்கி நகர்த்து” என்ற கட்டளையை
-
ஐந்து முறை கொடுப்பதன் மூலம் நீங்கள் இதைச் செய்ய முடியும்.
-
அல்லது எளிய முறையில் கணினியிடம் “முன்னோக்கி நகர்த்து” என்ற கட்டளையை ஒரு முறை சொல்லிவிட்டு,
-
அதை 5 முறை “மீண்டும் செய்யுமாறு” சொன்னால், அதே விஷயத்தை அது செய்துவிடும்.
-
இதைச் செய்வதற்கு, உங்களுடைய “முன்னோக்கி நகர்த்து” கட்டளையை இழுத்து வந்து,
-
“மீண்டும் செய்” தொகுதிக்கு உள்ளே அதை வைக்க வேண்டும்.
-
எத்தனை அடிகள் அது முன்னோக்கி வைக்க வேண்டும் எனச் சொல்ல, அதன் மீது கிளிக் செய்து அந்தத்
-
தொகுதியை நீங்கள் எத்தனை முறை மீண்டும் செய்ய விரும்புகிறீர்கள் என்பதை உள்ளிட வேண்டும். இப்போது மேலும் ஒரு விஷயம் என்னவென்றால்,
-
“மீண்டும் செய்” தொகுதிக்குள் உங்கள் விருப்பத்திற்கேற்ப எத்தனை கட்டளைகள் வேண்டுமானாலும் நீங்கள் கொடுக்கலாம்.
-
எனவே இந்த உதாரணத்தில் முன்னோக்கி நகர்ந்து இடது புறம் திரும்புமாறு நீங்கள் சொல்கிறீர்கள்,
-
இதையே அது ஐந்து முறை செய்யும். சரி, சிறப்பான வேலை, மகிழ்ச்சியாக இருங்கள் :-)