Return to Video

ஒரு தத்தெடுக்கப்பட்டவராக, அன்பு மற்றும் இழப்பு பற்றிய என் கதை

  • 0:01 - 0:02
    எனக்கு மூன்று வயதாக இருந்தபோது,
  • 0:02 - 0:05
    உட்டாவின் சால்ட் லேக் சிட்டியில்
    ஒரு வெள்ளை குடும்பத்தால்
  • 0:06 - 0:09
    தென் கொரியாவிலிருந்து
    நான் நாடுகடத்தப்பட்டேன்
  • 0:10 - 0:14
    பச்சை குத்தியிருந்த இடது முன்கையுடன்
    நான் அமெரிக்கா வந்தேன்
  • 0:14 - 0:17
    பச்சை குத்தியிருந்தது பெரியதாக
    கவனிக்கத்தக்கதாக இருந்தது
  • 0:17 - 0:20
    அதனால என் வளர்ப்பு பெற்றோர்
    அதை உடனே அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்
  • 0:21 - 0:24
    மற்ற குழந்தைகள் கேலி செய்வர் என்று
    அவர்கள் கவலைப்பட்டார்கள்
  • 0:24 - 0:27
    இன்று, பச்சை குத்தப்பட்ட இடத்தில்,
    சிறு வடு மட்டுமே உள்ளது
  • 0:27 - 0:31
    அது எப்படி இருந்தது என்பதை நீங்கள் அறிய
    பேனாவில் மீண்டும் வரைந்துள்ளேன்
  • 0:32 - 0:37
    1976 இல் கொரிய தத்தெடுப்பு பதிவுகள்
    மோசமாக முழுமையடையாதிருந்தன
  • 0:37 - 0:40
    எனது பின்னணி பற்றியோ
    எனது பிறந்த குடும்பம் பற்றியோ
  • 0:40 - 0:41
    என்னிடம் எந்த தகவலும் இல்லை
  • 0:42 - 0:46
    என் பெயர் மற்றும் பிறந்த தேதி
    உண்மையானதா என்று கூட தெரியாது
  • 0:46 - 0:48
    நியமித்ததாக கூட இருக்கலாம்.
  • 0:48 - 0:51
    என் பச்சைக்கு என்ன அர்த்தம் என்றும்
    யாருக்கும் தெரியாது.
  • 0:52 - 0:56
    கலப்பு தத்தெடுப்பில்
    ஒரு இனத்தின் குழந்தை
  • 0:56 - 1:00
    வேறு இனத்தின் பெற்றோரால்
    ஏற்றுக்கொள்ளப்படுகிறது
  • 1:01 - 1:04
    கொரியாவிலிருந்து தத்தெடுக்கப்பட்ட
    குழந்தைகள்
  • 1:04 - 1:08
    என் தலைமுறையில், வளர்ப்பு பெற்றோர்
    கலாச்சாரத்தில் இணைக்கப்படுவர்
  • 1:08 - 1:10
    அதனால் நான் வெள்ளை இனத்தவராகவே
    வளர்க்கப்பட்டேன்.
  • 1:11 - 1:14
    வளரும்போது, எப்போதாவது என் குடும்பம்
    கொரிய உணவகத்தில் சாப்பிடுவார்,
  • 1:14 - 1:16
    அல்லது ஆசிய திருவிழாவிற்கு செல்வோம்.
  • 1:17 - 1:20
    ஆனால் நான் ஆசியராக
    அடையாளம் காணப்படவில்லை.
  • 1:21 - 1:23
    இப்போது திரும்பிப் பார்க்கும்போது,
  • 1:23 - 1:27
    எனது பச்சை அகற்றப்பட்டிருப்பது
    என் இனம் மற்றும் கலாச்சாரத்துடன்
  • 1:27 - 1:30
    இருந்த இணைப்பை இழந்த குறியீடாகும்
  • 1:31 - 1:32
    ஆனால் நான் தனியாக இல்லை.
  • 1:32 - 1:37
    1950 களில் இருந்து உலகம் முழுவதும்,
    கிட்டத்தட்ட 200,000 கொரிய குழந்தைகள்
  • 1:37 - 1:39
    தத்தெடுக்கப்பட்டுள்ளனர்
  • 1:40 - 1:44
    வளர்ந்து வரும் ஆராய்ச்சி படி
    அவர்களது குடும்பங்களிலிருந்து பிரிந்தவுடன்
  • 1:44 - 1:46
    குழந்தைகள் அதிர்ச்சியை அனுபவிக்கிறார்கள்
  • 1:47 - 1:50
    என் கதையிலும் இதுபோன்ற
    குழந்தை பருவ அதிர்ச்சி அடங்கும்.
  • 1:51 - 1:53
    என் தாய்
    நான் பிறந்த சிறிது நேரத்திலேயே
  • 1:53 - 1:56
    குடும்பத்தை விட்டு வெளியேறியுதாக
    சமீபத்தில் அறிந்தேன்
  • 1:57 - 2:00
    எனக்கு இரண்டு வயதாக இருந்தபோது,
    என் பிறந்த தந்தை காயமடைந்தார்
  • 2:00 - 2:02
    சகோதரர்களையும் என்னையும்
    பராமரிக்க முடியவில்லை
  • 2:03 - 2:07
    அதனால் என் இரண்டு சகோதரர்களும் நானும்
    குழந்தைகள் நல சேவைகளுக்கு அனுப்பப்பட்டோம்.
  • 2:08 - 2:13
    அங்கே, நான் சிறுமியாக இருந்ததால்,
  • 2:14 - 2:16
    தத்தெடுக்க தகுதியானவள்
    என முடிவு செய்தனர்.
  • 2:17 - 2:20
    அதனால், என்னை கவனித்துக்கொண்ட
    சகோதரர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு
  • 2:20 - 2:23
    ஒரு தனி அனாதை இல்லத்திற்கு
    நான் அனுப்பப்பட்டேன்
  • 2:25 - 2:27
    எனது தத்தெடுப்பு பதிவுகளில்
    அனாதை இல்லத்தில்
  • 2:27 - 2:30
    நான் மற்ற குழந்தைகளுடன்
    விளையாட மாட்டேன் என்று கூறுகின்றன
  • 2:30 - 2:32
    அது ஏன் என்று இப்போது புரிகிறது
  • 2:32 - 2:39
    எனது தத்தெடுப்பு புகைப்படங்களில்
    பயந்த, சோர்ந்த சிறுமியாக உள்ளேன்
  • 2:39 - 2:44
    நான் அமெரிக்கா வந்தபோது,
    அந்த குறுகிய தனித்த ஒன்பது மாத பிரிவினால்
  • 2:44 - 2:45
    கலாச்சார அதிர்ச்சி இருந்தது.
  • 2:46 - 2:48
    எல்லாம் வித்தியாசமாக இருந்தது:
  • 2:48 - 2:50
    மக்கள்,
  • 2:50 - 2:51
    கட்டிடங்கள்,
  • 2:51 - 2:53
    உணவு
  • 2:53 - 2:54
    மற்றும் ஆடை.
  • 2:55 - 2:57
    மூன்று வயது குழந்தையாக,
    நான் கண்டுபிடித்தது
  • 2:58 - 3:01
    நான் பேசிய கொரிய மொழி,
    யாரும் பேசவில்லை என்பதே
  • 3:01 - 3:05
    அதனால் ஆறு மாதங்களுக்கு
    நான் பேசுவதையே நிறுத்தினேன்.
  • 3:05 - 3:08
    நான் மீண்டும் பேச ஆரம்பித்தபோது,
    அது முழு ஆங்கிலத்தில் இருந்தது.
  • 3:09 - 3:11
    அனாதை இல்ல
    புகைப்படங்கள் காட்டியபோது
  • 3:11 - 3:14
    என் பெற்றோரிடம் நான் சொன்ன
    முதல் சொற்றொடர்களில் ஒன்று
  • 3:14 - 3:17
    "சாரா சோகம்" என்பதே
  • 3:19 - 3:22
    தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள்
    மீண்டும் காயப்படாமல் இருக்க
  • 3:22 - 3:25
    பெரும்பாலும் தங்கள்
    உணர்ச்சியை அடக்குகின்றனர்
  • 3:25 - 3:27
    நான் நிச்சயமாக இதைச் செய்தேன்,
  • 3:27 - 3:29
    கலப்பு தத்தெடுக்கப்பட்ட
    மற்ற குழந்தைகள் போல
  • 3:29 - 3:32
    சுற்றியுள்ள மற்ற வெள்ளை குழந்தைகளைக் போல
    வெள்ளையராகவே இருந்திருக்கலாமே
  • 3:32 - 3:34
    என ஆசைபட்ட பல தருணங்கள் உண்டு
  • 3:35 - 3:38
    மற்ற குழந்தைகள் என் கண்களையும் மூக்கையும் கேலி செய்தனர்.
  • 3:38 - 3:41
    அதுவும், 80களின் பாணிகள் எனக்கு
    இன்னும் கொடுமையாக இருந்தன
  • 3:41 - 3:43
    சரியாக பொருந்தாத கண்ணாடிகள்,
  • 3:43 - 3:45
    சிகை அலங்காரங்கள் --
  • 3:45 - 3:46
    (நகைப்பொலி)
  • 3:46 - 3:49
    அது என்னை கேலிக்குரியதாக ஆக்கியது
  • 3:49 - 3:50
    (நகைப்பொலி)
  • 3:51 - 3:56
    தத்தெடுப்பின் இந்த கதை
    கேட்க சங்கடமாக இருக்கலாம்
  • 3:57 - 4:01
    நாம் வழக்கமாக கேட்கும் கதை
    ஒரு புதிய பெற்றோரின் பார்வையில்
  • 4:01 - 4:04
    குழந்தைக்காக பல காலமாக
    ஆவலுடன் காத்திருந்தவர்களின் கதை
  • 4:06 - 4:09
    பெற்றோரின் கதை அன்பு, மகிழ்ச்சி
    மற்றும் உற்சாகத்துடன் கூறப்படுகிறது,
  • 4:09 - 4:12
    அவர்கள் தங்கள் வீட்டிற்கு,
    புதிய குழந்தை கொண்டு வருகிறார்கள்
  • 4:12 - 4:16
    குடும்பங்கள், நண்பர்கள், அவர்களின் முடிவை
    போற்றி கொண்டாடுகின்றனர்.
  • 4:16 - 4:18
    அவர்களுக்கு வாழ்த்து மழை பொழிகின்றனர்
  • 4:20 - 4:24
    என் பெற்றோரின் தத்தெடுப்பு கதை,
    ஒரு அழகான போர்வை போல கதகதப்பானது
  • 4:26 - 4:30
    ஆனால் சில காலம் கழித்து, கவனம்
    போர்வையில் அதிகமாக இருப்பதை உணர்ந்தேன்
  • 4:30 - 4:33
    அது என்னையும் எனது பார்வையையும்
    முழுவதுமாக மறைத்தது
  • 4:33 - 4:35
    என் உணர்வுகளை வெளிக்காட முடியவில்லை.
  • 4:36 - 4:39
    என் பெற்றோர் என்னிடம்
    சில விஷயங்களைச் சொல்வார்கள்,
  • 4:39 - 4:43
    "உன் புகைப்படத்தை முதன்முறை பார்த்த போதே
    உன்னை விரும்பினேன்
  • 4:43 - 4:45
    எங்கள் இதயத்தை கவர்ந்தாய்"
  • 4:46 - 4:50
    அவர்கள் என்னை நேசிக்கிறார்கள்,
    என எனக்கு தெரியும்
  • 4:52 - 4:56
    ஆனால் நான் பிறப்பு கதை வருத்தமாக,
    மனிதாபிமான அடிப்படையில் இல்லாமல்
  • 4:56 - 4:58
    இருந்திருக்கலாம் என விரும்பினேன்.
  • 4:59 - 5:01
    நான் அடிக்கடி அன்பை
    நன்றியுடன் குழப்புவேன்,
  • 5:01 - 5:05
    குறிப்பாக மற்றவர்கள்
    என்னிடம் விஷயங்களைச் சொல்லும்போது,
  • 5:05 - 5:08
    "நீங்கள் அமெரிக்காவில்
    ஏற்றுக்கொள்ளப்பட்டது, பெரிய அதிர்ஷ்டம்"
  • 5:08 - 5:12
    அல்லது, "உன்னை தத்தெடுத்த
    உங்கள் பெற்றோர் தெய்வங்கள்" என்பர்
  • 5:13 - 5:17
    ஒரு குழந்தைக்கு, இக்கருத்துகள்,
    என் பெற்றோரின் தொண்டுக்கு
  • 5:17 - 5:19
    நன்றியின் நினைவூட்டகாலவே தோன்றும்
  • 5:19 - 5:22
    என்னால் இவர்களூக்கு
    பதில் சொல்ல முடியாது கோபத்தை தந்தது
  • 5:22 - 5:25
    "என் தத்தெடுப்பை எந்நேரமும் நினைவூட்டுவது
    எனக்குப் பிடிக்கவில்லை
  • 5:25 - 5:28
    சாதாரண குழந்தையாக
    நன்றியற்றவளாகவும் சில நேரம்
  • 5:28 - 5:32
    இயல்பாக இருக்க விரும்புகிறேன்,
  • 5:32 - 5:33
    (நகைப்பொலி)
  • 5:34 - 5:38
    ஆனால் நான் உண்மையில் சிரிக்காமல்,
    சிரிக்க கற்றுக்கொண்டேன்
  • 5:38 - 5:40
    பெரியவளானாலும் என கூற விரும்பியது
  • 5:40 - 5:43
    "சாரா, இன்னும்
    சோகமாக இருக்கிறாள்"
  • 5:44 - 5:47
    ஆனால் நான் என் உணர்வுகளை புதைத்தேன்,
    என் சொந்த தத்தெடுப்பின் துக்கத்தை
  • 5:47 - 5:51
    நான் அணுசரிக்க வில்லை
    என பிற்காலத்தில் உணர்ந்தேன்
  • 5:52 - 5:54
    வேறுபட்ட இனம், கலாச்சாரத்திலிருந்து
    ஒரு குழந்தையை தத்தெடுப்பது
  • 5:54 - 5:58
    ஒருபோதும் எளிதானது அல்ல,
    என நம்மில் பலருக்கு புரியும் போது
  • 5:58 - 6:00
    ஆனால் தத்தெடுக்கப்பட்ட
    குழந்தைகளின் உணர்வுகளை
  • 6:00 - 6:03
    நாங்கள் அரிதாகவே ஒப்புக்கொள்கிறோம்
  • 6:03 - 6:07
    அவர்கள் அனுபவிப்பது இழப்பின் வலிகள்
  • 6:07 - 6:09
    நிராகரிப்பு உணர்வுகள்,
  • 6:09 - 6:10
    துக்கம்,
  • 6:10 - 6:12
    அவமானம்,
  • 6:12 - 6:13
    குற்றம்,
  • 6:13 - 6:15
    அடையாளத்துடனான சவால்கள்,
  • 6:15 - 6:17
    நெருக்கத்தின் சிரமம்
  • 6:17 - 6:18
    மற்றும் கட்டுப்பாட்டு சிக்கல்கள்.
  • 6:18 - 6:21
    என் குழந்தைகளிடம் கேளுங்கள்.
  • 6:21 - 6:22
    (நகைப்பொலி)
  • 6:22 - 6:28
    தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள்
    வளர்ப்பு பெற்றோரை நேசிக்ககின்றனர்
  • 6:28 - 6:31
    அதே நேரத்தில் இந்த சிக்கலான உணர்வுகளை
    அனுபவிக்கின்றனர்
  • 6:31 - 6:35
    நம்மில் பலர் ஆச்சரியப்படுகிறார்கள்:
    ஒருவேளை சிறு வயதில்
  • 6:35 - 6:39
    எங்கள் சொந்த கதைகளின்
    உணர்வுளுக்கு இடம் இருந்திருந்தால்
  • 6:39 - 6:43
    பெரியவர்களாகும் போது
    தத்தெடுக்க போராடியிருப்போமா?
  • 6:44 - 6:49
    சொந்த கதைகளுக்கான
    உணர்வு சுவாசங்களை நாம் எங்கே காண்பது?
  • 6:52 - 6:55
    1990 முடிய மற்றும்
    2000இன் முற்பகுதியிலிருந்து,
  • 6:55 - 6:59
    டாக்டர் ரிச்சர்ட் லீ போன்ற ஆராய்ச்சியாளர்கள்
    கலப்பு தத்தெடுப்பின் வெவ்வேறு நுட்பங்களில்
  • 6:59 - 7:01
    கவனம் செலுத்தி வருகின்றனர்.
  • 7:01 - 7:04
    குழந்தைகளுக்கு மற்றும்
    அவர்களின் வளர்ப்பு பெற்றோருக்கு
  • 7:04 - 7:08
    அந்த இன சூழலின் தனித்துவத்திற்கு ஏற்றவாறு
    உதவுவதே இவர்களது நம்பிக்கை
  • 7:08 - 7:10
    இதற்கு பல இணைத்தல்கள் ஊக்குவிக்கப்படுகிறது
  • 7:10 - 7:13
    இது குழந்தைகளை
    அவர்களின் பிறந்த குடும்ப மக்கள்,
  • 7:13 - 7:17
    இடம், மொழி மற்றும்
    கலாச்சாரத்திற்கு வெளிப்படுத்துகிறது
  • 7:17 - 7:20
    சில பெற்றோர்கள் இன ரீதியான
    இணைப்பை தூண்டுகின்றனர்
  • 7:20 - 7:24
    குறிப்பாக வீட்டிற்கு வெளியே
    உலகில் அவர்கள் அனுபவிக்கும்
  • 7:24 - 7:27
    இனவாதம் மற்றும் பாகுபாடு குறித்து
    உணர்த்துகின்றனர்
  • 7:27 - 7:31
    மேலும் சில பெற்றோர்கள் குழந்தைகளை
    அவர்கள் வயதாகும்போது தேர்வு செய்ய
  • 7:31 - 7:34
    அவர்களின் பிறந்த குடும்ப கலாச்சாரத்தின்
    வெளிப்பாடை உணர அனுமதிக்கின்றனர்
  • 7:35 - 7:37
    இந்த அறிகுறிகளில் வைத்து
    கலப்பு தத்தெடுப்பை
  • 7:37 - 7:41
    நாம் முற்றிலும் அறிந்து விட்டோம்
    என்று நினைக்கிறோம்
  • 7:42 - 7:47
    சர்வதேச தத்தெடுப்புகளில் முதன்மை வகிப்பது
    கொரிய குழந்தை தத்தெடுப்புகளே
  • 7:47 - 7:51
    மற்ற நாடுகளை விட, கிட்டத்தட்ட
    30 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இருப்பதால்
  • 7:51 - 7:55
    ஒரு முழு தலைமுறை கொரிய குழந்தைகள்
    தத்தெடுக்கபாட்டுள்ளனர்
  • 7:55 - 7:59
    குழந்தைகள் முதல்
    70 களில் உள்ள பெரியவர்கள் என
  • 7:59 - 8:02
    இந்த தாக்கத்தை
    அனைவரும் கையாள்கின்றனர்
  • 8:02 - 8:05
    எனினும் நாடுகடந்த
    கலப்பு தத்தெடுப்பாளர்கள் வாழ்க்கையை
  • 8:05 - 8:08
    தொடரும் ஆய்வுகள் சிலவே உள்ளன
  • 8:10 - 8:14
    என் வலியை எனை சுற்றியிருந்தவர்கள்
    புரிந்து கொள்ளவில்லை என எனக்குத் தெரியும்
  • 8:15 - 8:18
    ரேச்சல் ரோஸ்டாட், தத்தெடுக்கப்பட்ட
    மற்ற கொரியரும் இதை உணர்ந்ததை
  • 8:18 - 8:19
    அவள் சொன்னபோது,
  • 8:20 - 8:23
    "நான் எதையும் இழக்கவில்லை
    என தோன்றும் போது
  • 8:23 - 8:27
    இழப்பு அளவிட குழப்பமாக இருக்கிறது".
  • 8:28 - 8:30
    இது ஒரு விடுபட்ட உறுப்பு போன்றதல்ல.
  • 8:30 - 8:34
    காலை வெளிச்சத்தில்
    நீங்கள் விழித்திருக்கும் போது
  • 8:34 - 8:36
    காணாமல் போகும் கனவு போன்றது"
  • 8:37 - 8:40
    நூற்றுக்கணக்கான தத்தெடுக்கப்பட்ட
    தென்கொரிய குழந்தைகள்
  • 8:40 - 8:41
    தங்கள் குடும்பங்களை
    தேடுகின்றனர்
  • 8:42 - 8:47
    கொரிய முகவர் அறிக்கை படி வெற்றி விகிதம்
    15 சதவீதத்திற்கும் குறைவே.
  • 8:48 - 8:52
    கடந்த ஆண்டு, என் கொரிய குடும்பத்தைக்
    மூன்று மாதங்களில் கண்டேன்
  • 8:53 - 8:57
    எனது பச்சை குத்தின் புகைப்படத்தை
    சமூக ஊடகங்களில் வெளியிட்டேன்,
  • 8:57 - 9:00
    கொரிய குழுக்கள் இதை தாராளமாக பகிர்ந்தனர்.
  • 9:01 - 9:03
    என் சகோதரனின் நண்பர் புகைப்படத்தைப் பார்த்தார்,
  • 9:03 - 9:07
    அவர் உடனடியாக அந்த பச்சை குத்தின்
    அர்த்தம் அறிந்திருந்தார்
  • 9:09 - 9:12
    என் தந்தை குழந்தைகள் நல சேவைகளுக்கு,
    எங்களை அனுப்ப முடிவு செய்தபோது
  • 9:12 - 9:17
    நாங்கள் பிரிந்து வெளிநாடுகளுக்கு
    சென்றுவிடுவோம் என்ற கவலையில்
  • 9:18 - 9:22
    அசாதாரண இந்த பெரிய
    வடிவத்தை பச்சை குத்தினார்
  • 9:22 - 9:24
    எங்கள் ஒவ்வொரு கைகள் மட்டுமல்லாமல்
  • 9:24 - 9:27
    அவரது கையிலும் குத்தினார்,
  • 9:27 - 9:29
    பின்னாளில் அடையாளம் காணவே.
  • 9:31 - 9:33
    அவர் என்னைத் தேட முயன்றார்.
  • 9:34 - 9:35
    அவரது எண்ணம் சரிதான்:
  • 9:36 - 9:41
    அந்த பச்சை இறுதியில் என்னை
    என் இழந்த குடும்பத்துடன் இணைத்தது.
  • 9:43 - 9:47
    துரதிர்ஷ்டவசமாக, நாங்கள் இணையும்
    ஒன்பது ஆண்டுகளுக்கு முன் காலமானார்
  • 9:48 - 9:53
    ஆனால் கடந்த ஆண்டு, நான் கொரியா சென்றேன்
    என் இரண்டு மூத்த சகோதரர்கள்
  • 9:53 - 9:55
    என் அத்தை மற்றும் மாமாவை சந்தித்தேன்
  • 9:55 - 9:57
    என்னைப் பற்றிய பல புது
    விஷயங்கள் அறிந்தேன்
  • 9:57 - 9:59
    எனது உண்மையான பிறந்த தேதி உட்பட,
  • 9:59 - 10:02
    உண்மையில் நான்
    ஏழு மாதம் பெரியவள்
  • 10:02 - 10:04
    (நகைப்பொலி)
  • 10:04 - 10:07
    இந்த நடுத்தர வயது பெண்
    அவள் வயதாகிவிட்டதைக் கேட்டு விரும்பவில்லை.
  • 10:07 - 10:09
    (நகைப்பொலி)
  • 10:09 - 10:13
    பள்ளியில் நான் திறமையாக திகழ்ந்ததற்கான
    ஆரணம் இப்போது புரிகிறது
  • 10:13 - 10:16
    (நகைப்பொலி)
  • 10:18 - 10:20
    ஆனால் மிக முக்கியமாக
    நான் கற்றுக்கொண்ட விஷயம்
  • 10:21 - 10:24
    எனக்கு கொரியாவில்
    ஒரு அன்பான குடும்பம் இருந்தது
  • 10:24 - 10:28
    ஒரு சிறிய குழந்தையாக
    என்னை நினைவு கூர்கின்றனர்
  • 10:28 - 10:30
    என்னை ஒருபோதும் மறக்கவில்லை.
  • 10:31 - 10:34
    நான் கைவிடப்படவில்லை,
    எனது தத்தெடுப்பு பதிவுகள் சொன்னது போல.
  • 10:36 - 10:37
    நான் விரும்ப பட்டேன்
  • 10:39 - 10:43
    தத்தெடுப்பு பற்றிய நம் பார்வையை
    மாற்றும் நேரம் இது
  • 10:43 - 10:47
    வளர்ப்பு மற்றும் பிறப்பு குடும்பங்கள்
  • 10:47 - 10:51
    தங்களின் தனித்துவமான கதைகளை பாதுகாப்பதே
  • 10:51 - 10:53
    ஒரு ஆரோக்கியமான
    தத்தெடுப்பு சுற்றுச்சூழலாக அமைகிறது
  • 10:53 - 10:57
    இந்த விவரிப்புகள் போது
    அருகருகே வைக்கப்படுகின்றன,
  • 10:57 - 11:02
    தத்தெடுப்பின் தாக்கத்தை
    இந்த பச்சதாபம் மற்றும் கொள்கை அரவணைக்கும்
  • 11:03 - 11:05
    தத்தெடுக்கப்பட்ட
    குழந்தைகளின் கதைகளை பாதுகாக்க
  • 11:05 - 11:08
    பெரியவர்கள்
    இந்த இரண்டு விஷயங்கள் செய்யவேண்டும்
  • 11:09 - 11:14
    முதலில், நேர்மறை மற்றும் எதிர்மறை
    உணர்ச்சிகளை வெளிப்படுத்த
  • 11:14 - 11:16
    குழந்தைகளுக்கு இடம் கொடுக்க வேண்டும்
  • 11:18 - 11:21
    "இன்னும் சொல்லுங்கள்" போன்ற சொற்றொடர்கள்
  • 11:21 - 11:23
    "நீங்கள் எதை விரும்புகிறீர்கள்?"
  • 11:23 - 11:25
    மற்றும் "அந்த உணர்வுகள் இயல்பானவை"
  • 11:25 - 11:30
    போன்ற கேள்விகள், குழந்தைகளின்
    உணர்வுகளை வெளிக்கொணர முடியும்
  • 11:31 - 11:35
    இரண்டாவதாக, குழந்தையின் தத்தெடுப்பு
    கதையை சரிபார்க்கவும்.
  • 11:36 - 11:39
    குழந்தைகள் உணர்ச்சிகள்,
    வளர்ப்பு பெற்றோரைப்
  • 11:39 - 11:42
    புண்படுத்தலாம் அல்லது
    கவலைப்பட வைக்கலாம்
  • 11:42 - 11:45
    ஒரு பெற்றோராக, தனித்து
    உங்கள் அச்சங்களை
  • 11:45 - 11:48
    நிர்வகிக்க கற்று கொள்ளுங்கள்
  • 11:48 - 11:53
    உங்கள் குழந்தையின் கதைக்கு
    முக்கியத்துவம் கொடுங்கள்
  • 11:54 - 11:57
    இப்போது, உங்கள் குழந்தைகளைப்
    வலியை அனுபவிப்பதில் இருந்து
  • 11:57 - 11:59
    பாதுகாக்க விரும்புவது இயல்பானது
  • 12:00 - 12:06
    ஆனால் என் பச்சை தத்தெடுப்பின்
    இழப்பை நினைவூட்டுகிறது
  • 12:06 - 12:08
    ஒவ்வொரு குழந்தையும்
    வித்தியாசமாக பாதிக்கப்படுகின்றனர்
  • 12:09 - 12:13
    இந்த தனித்துவமான கட்டமைப்பை
    ஏற்றுகொண்டால்
  • 12:13 - 12:18
    எங்கள் கதைகளுக்கு, பச்சாத்தாபத்துடன்
    உரிய முக்கியத்துவம் கொடுத்தால்
  • 12:19 - 12:21
    எங்களால்
    வளமான வாழ்க்கை வாழ முடியும்,
  • 12:21 - 12:23
    நீங்கள் மற்ற விஷயங்களையும் கேட்பீர்கள்:
  • 12:25 - 12:27
    குழந்தை போன்ற ஆர்வம்,
  • 12:27 - 12:29
    நயம்
  • 12:29 - 12:31
    வலிமை
  • 12:31 - 12:32
    தைரியம்,
  • 12:33 - 12:34
    காதல்
  • 12:35 - 12:38
    ஆம், நன்றியுணர்வு கூட.
  • 12:38 - 12:40
    நன்றி.
  • 12:40 - 12:43
    (கரகோஷம்)
Title:
ஒரு தத்தெடுக்கப்பட்டவராக, அன்பு மற்றும் இழப்பு பற்றிய என் கதை
Speaker:
சாரா ஜோன்ஸ்
Description:

அவரது கையில் இருந்த ஒரு மர்மமான பச்சை குத்து மட்டுமே, வெள்ளை பெற்றோரால் குழந்தையாக தத்தெடுக்கப்பட்ட சாரா ஜோன்ஸை அவரது தென் கொரிய பூர்விகத்துடன் இணைத்தது. அவரது பிறந்த குடும்பத்தைத் தேடுயது, அவருக்கு பெரும்பாலான கலப்பு தத்தெடுப்பு கதைகள் முடிவற்ற நன்றியுணர்வைக் புதிய வாழ்க்கையை அதிர்ஷ்டத்தின் பக்கங்களாக கோருவதையும், இவை மிகவும் சிக்கலான யதார்த்தத்தை மறைப்பதையும் கண்டார். இழப்பு மற்றும் கண்டுபிடிப்பு பற்றிய தனது சொந்த அனுபவத்தின் மூலம், வளர்ப்பு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் தனித்துவமான கலாச்சார மற்றும் தனிப்பட்ட கதைகளைப் எவ்வாறு பாதுகாக்க முடியும் என வழிகாட்டுகிறார்.

more » « less
Video Language:
English
Team:
closed TED
Project:
TEDTalks
Duration:
12:56

Tamil subtitles

Revisions