< Return to Video

அலகுகளை இயற்கணிதத்தில் மாற்றுவது மற்றும் பரிமான ஆய்வுமுறை

  • 0:00 - 0:03
    நாம் பலமுறை நமது வாழ்வில்
  • 0:03 - 0:08
    தூரம் என்பதை வீதம் பெருக்கல் நேரம் என்று பார்த்திருக்கலாம்.
  • 0:08 - 0:11
    நான் இந்த காணொளியில் என்ன செய்ய போகிறேன் என்றால்
  • 0:11 - 0:16
    ஒரு எளிய சூத்திரம் தருகிறேன், இதன் மூலம்
  • 0:16 - 0:20
    அலகுகள் என்பதை இயற்கணித பொருள்களாக பார்க்கலாம்.
  • 0:20 - 0:24
    அவைகளை இந்த சமன்பாட்டின் மூலம் மாறிலிகலாக பார்க்கலாம்.
  • 0:24 - 0:27
    இது நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,
  • 0:27 - 0:33
    நமது விடை சரியான அலகில் இருக்கிறதா என்பதையும் சரி பார்க்க வேண்டும்.
  • 0:33 - 0:38
    எடுத்துக்காட்டிற்கு, யாரேனும் ஒருவர் ஒரு வீதம் தருகிறார் என்றால்,
  • 0:38 - 0:43
    உதாரணமாக ஒரு நொடிக்கு 5 மீட்டர் எனலாம்,
  • 0:43 - 0:49
    பிறகு அதன் நேரம், 10 நொடிகள் எனலாம்.
  • 0:49 - 0:53
    நாம் நேரடியாக இந்த சூத்திரத்தை உபயோகிக்கலாம்.
  • 0:53 - 0:58
    தூரம் என்பது வீதம், நொடிக்கு 5 மீட்டர்
  • 0:58 - 1:03
    பெருக்கல் நேரம், அதாவது 10 நொடிகள்.
  • 1:03 - 1:07
    பிறகு, நாம் இதன் அலகுகளை
  • 1:07 - 1:11
    இயற்கணித மாறிலிகளாக மாற்றலாம்.
  • 1:11 - 1:14
    எனவே, இது
  • 1:14 - 1:16
    பெருக்கலில் வரிசை முக்கியம் இல்லை
  • 1:16 - 1:18
    எனவே, இதன் வரிசையை மாற்றலாம்.
  • 1:18 - 1:21
    இது 5 பெருக்கல் 10 ஆகும்.
  • 1:21 - 1:31
    நொடிக்கு 5 பெருக்கல் 10 மீட்டர் பெருக்கல் மீட்டர்/நொடி பெருக்கல் நொடிகள்.
  • 1:31 - 1:33
    நாம் இந்த அலகுகளை இயற்கணிதமாக
  • 1:33 - 1:35
    மாற்ற வேண்டும் என்றால்,
  • 1:35 - 1:37
    நம்மிடம் நொடி வகுத்தல் நொடி உள்ளது,
  • 1:37 - 1:41
    இதன் பகுதி மற்றும் தொகுதியில் நொடி உள்ளது.
  • 1:41 - 1:43
    எனவே, இவை நீங்கி விடும்.
  • 1:43 - 1:47
    பிறகு 5 பெருக்கல் 10, என்பது 50.
  • 1:47 - 1:51
    எனவே, மீதம் 50 இருக்கும்,
  • 1:51 - 1:55
    மீதம் உள்ள அலகுகள், மீட்டர் மட்டும் தான், 50 மீட்டர்.
  • 1:55 - 1:56
    அவ்வளவுதான்.
  • 1:56 - 1:57
    அலகுகள் சரியாக உள்ளது.
  • 1:57 - 2:01
    அலகுகளை நாம் இயற்கணித பொருள்களாக்கினால்,
  • 2:01 - 2:06
    இறுதியாக தூரம் மீட்டரில் கிடைக்கும்.
  • 2:06 - 2:08
    நீங்கள் இது நன்றாக உள்ளது என்று கூறலாம்,
  • 2:08 - 2:09
    ஆனாலும், இது சற்று அதிகப்படியாக
  • 2:09 - 2:14
    குழப்பத்தை ஏற்படுத்தலாம். நான் ஒரு எளிதான சூத்திரத்தை எடுத்தேன்,
  • 2:14 - 2:18
    ஆனாலும், எளிதான சூத்திரத்தின் மூலம்,
  • 2:18 - 2:22
    தூரம் என்பது வீதம் பெருக்கல் நேரம் என்பதை காண முடியும்.
  • 2:22 - 2:26
    நான் என்ன செய்தேன் என்றால், இது பரிமான ஆய்வுமுறை.
  • 2:26 - 2:27
    இது மிக எளிமையனா, அதாவது
  • 2:27 - 2:29
    தூரம் = வீதம் பெருக்கல் நேரம், போன்றவைகளுக்கு உதவியாக இருக்கும்,
  • 2:29 - 2:32
    ஆனால், இயற்பியல், வேதியல், பொறியியல்,
  • 2:32 - 2:36
    போன்றவைகளில் மிக மிக கடினமான சூத்திரங்கள் இருக்கும்.
  • 2:36 - 2:38
    பரிமான ஆய்வு மேற்க்கொண்டால்
  • 2:38 - 2:41
    இது மிக சரியாக இருக்கும்.
  • 2:41 - 2:43
    மேலும், இது சரியான அலகுகளை வழங்கும்.
  • 2:43 - 2:46
    இதனை வைத்து சிறிது கடினமான கணக்கை முயற்சிக்கலாம்.
  • 2:46 - 2:49
    நாமது வீதம்,
  • 2:49 - 2:53
    நொடிக்கு 5 மீட்டர் எனலாம்.
  • 2:53 - 2:56
    ஒருவர் நமக்கு நேரத்தை தருகிறார் எனலாம்.
  • 2:56 - 2:58
    அதனை நொடியில் தருவதற்கு பதில், மணி நேரமாக தருகிறார்.
  • 2:58 - 3:02
    நேரம் என்பது 1 மணி நேரம்
  • 3:02 - 3:04
    இதன் சூத்திரத்தை பயன்படுத்தலாம்.
  • 3:04 - 3:10
    எனவே, நாமது தூரம் நொடிக்கு 5 மீட்டர்,
  • 3:10 - 3:16
    நொடிக்கு 5 மீட்டர், பெருக்கல் நேரம், அதாவது 1 மணி நேரம் பெருக்கல் 1 மணி நேரம்.
  • 3:16 - 3:17
    இது என்ன தரும்?
  • 3:17 - 3:20
    5 பெருக்கல் 1,
  • 3:20 - 3:23
    இதனை பெருக்கினால், இது 5 ஆகும்.
  • 3:23 - 3:26
    இதன் அலகுகளை நாம் இயற்கணிதமாக மாற்ற வேண்டும்.
  • 3:26 - 3:28
    ஆக, நாம் பரிமான ஆய்வை மேற்கொள்கிறோம்.
  • 3:28 - 3:36
    இது 5, பிறகு மீட்டர்/நொடி, பெருக்கல் மணி, பெருக்கல் மணி.
  • 3:36 - 3:39
    அல்லது நொடிக்கு 5 மீட்டர் மணிகள் எனலாம்.
  • 3:39 - 3:41
    இது பார்ப்பதற்கு,
  • 3:41 - 3:43
    இது நமக்கு தெரிந்த அலகுகள் இல்லை,
  • 3:43 - 3:45
    இது நமது மரபான அலகுகள் இல்லை,
  • 3:45 - 3:48
    எனவே, இதனை நீக்க வேண்டும்.
  • 3:48 - 3:50
    உங்களுக்கு தோன்றலாம், நாம் இந்த
  • 3:50 - 3:52
    மணிகளை நீக்கிவிட்டு, சுலபமாக
  • 3:52 - 3:55
    நொடிகளில் குறிப்பிடலாமே என்று, அப்படியென்றால்,
  • 3:55 - 3:59
    இவை நீங்கி, மீதம் மீட்டர்கள் இருக்கும், இது தூரத்திற்கான அலகு.
  • 3:59 - 4:00
    இதனை எவ்வாறு செய்வது?
  • 4:00 - 4:05
    நாம் இதனை பகுதியில் மணி இருக்குமாறு
  • 4:05 - 4:07
    பெருக்க வேண்டும், பிறகு தொகுதியில்
  • 4:07 - 4:10
    நொடிகள் இருக்கும், பெருக்கல், நொடி/மணி.
  • 4:10 - 4:13
    ஒரு மணி நேரத்தில் எத்தனை நொடிகள் உள்ளன?
  • 4:13 - 4:20
    3600 நொடிகள் உள்ளன, இதனை வண்ணத்தில் எழுதலாம்.
  • 4:20 - 4:28
    ஒரு மணி நேரத்திற்கு 3600 நொடிகள் இருக்கும்..
  • 4:28 - 4:31
    எனவே, இதனை பெருக்கினால்,
  • 4:31 - 4:36
    மணிகள் நீங்கி விடும், நொடிகள் நீங்கி விடும்,
  • 4:36 - 4:38
    பிறகு மீதம் 5 பெருக்கல்
  • 4:38 - 4:43
    3600, இது 5 பெருக்கல் 3000 என்பது 15000 ஆகும்.
  • 4:43 - 4:46
    5 பெருக்கல் 600 என்பது 3000.
  • 4:46 - 4:52
    எனவே, இது 18000, பிறகு
  • 4:52 - 4:58
    இதன் அலகு மீட்டர் ஆகும்.
  • 4:58 - 5:03
    இது 18000 மீட்டர் சரியா?
  • 5:03 - 5:05
    அவ்வளவுதான் நாம் முடித்து விட்டோம்.
  • 5:05 - 5:08
    நமது தூரத்தை நமக்கு தெரிந்த அலகில் விளக்கியுள்ளோம்.
  • 5:08 - 5:14
    ஒரு நொடிக்கு 5 மீட்டர் வீதம் 1 மணி நேரங்கள் சென்றால், 18000 மீட்டர் ஆகும்.
  • 5:14 - 5:17
    ஆனாலும், நமது பரிமான ஆய்வை சிறிது பயன்படுத்தலாம்.
  • 5:17 - 5:19
    இந்த விடையை மீட்டரில் அளிக்காமல்
  • 5:19 - 5:21
    அதற்கு பதில், கிலோமீட்டரில் அளித்தால் என்ன?
  • 5:21 - 5:22
    இதனை என்ன செய்வது?
  • 5:22 - 5:28
    நாம் இந்த 18000 மீட்டரை எடுத்து,
  • 5:28 - 5:31
    இதனை பகுதியில் மீட்டர் இருக்குமாறு
  • 5:31 - 5:36
    மற்றும் தொகுதில் கிலோமீட்டர் இருக்குமாறு பெருக்க வேண்டும்.
  • 5:36 - 5:40
    பிறகு, இந்த மீட்டர்கள் நீங்கி, கிலோமீட்டர் இருக்கும்.
  • 5:40 - 5:43
    இதன் மதிப்பை மாற்றாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
  • 5:43 - 5:45
    இதனை 1 ஆல் பெருக்க வேண்டும்,
  • 5:45 - 5:49
    நாம் பகுதி மற்றும் தொகுதியில் ஒன்றாக எழுத வேண்டும்.
  • 5:49 - 5:56
    1 கிலோமீட்டர் என்பது 1000 மீட்டர் ஆகும்.
  • 5:56 - 5:59
    இதனை ஒரு வழியில், நாம் 1 ஆல் பெருக்குகிறோம்.
  • 5:59 - 6:02
    ஒரு கிலோமீட்டர் என்பது 1000 மீட்டர்.
  • 6:02 - 6:03
    ஒரு கிலோமீட்டர் என்பது 1000 மீட்டர்.
  • 6:03 - 6:06
    எனவே, இது 1 ஆகும்.
  • 6:06 - 6:08
    ஆனால், நமக்கு தேவை என்னவென்றால்,
  • 6:08 - 6:12
    இதனை பெருக்கும் பொழுது, மீட்டர்கள் நீங்கி விடும்,
  • 6:12 - 6:17
    18000 வகுத்தல் 1000 என்பது 18 ஆகும்,
  • 6:17 - 6:20
    இதன் அலகு கிலோமீட்டர்.
  • 6:20 - 6:23
    அவ்வளவுதான், நமது தூரத்தை
  • 6:23 - 6:27
    மீட்டருக்கு பதில் கிலோமீட்டரில் கூறியுள்ளோம்.
Title:
அலகுகளை இயற்கணிதத்தில் மாற்றுவது மற்றும் பரிமான ஆய்வுமுறை
Description:

அலகுகளை இயற்கணிதத்தில் மாற்றுவது மற்றும் பரிமான ஆய்வுமுறை

more » « less
Video Language:
English
Duration:
06:29

Tamil subtitles

Revisions