< Return to Video

Equivalent fractions with visuals | Fractions | 3rd grade | Khan Academy

  • 0:00 - 0:02
    இந்தக் காணொளியில் பின்னங்களை எப்படிக் காட்சிப்படுத்துவது என்பதைப் பார்க்கலாம்.
  • 0:02 - 0:04
    இங்கு வரைந்துள்ள பட்டையை ஒன்று என்று வைத்துக் கொள்வோம்.
  • 0:04 - 0:07
    இந்தப் பட்டைக்குக் கருஞ்சிவப்பு வண்ணம் கொடுக்கப்பட்டுள்ளது.
  • 0:07 - 0:11
    நம்முன் வைக்கப்படுகிற கேள்வி என்னவென்றால்
  • 0:11 - 0:15
    எந்த அல்லது எத்தனை பட்டைகள் 1/2 என்ற அளவைக் குறிக்கின்றன.
  • 0:15 - 0:20
    எனவே, அந்தப் பட்டைகள் எவை என்பதைக் கண்டறிய முதலில் முயற்சிப்போம்.
  • 0:23 - 0:24
    காணொளியை இடை நிறுத்தம்
  • 0:24 - 0:27
    செய்தும் கூட நாம் முயற்சித்துப் பார்க்கலாம்.
  • 0:27 - 0:30
    காட்சிப்படுத்திப் படுத்த வேண்டும் என்பதால்
  • 0:30 - 0:33
    இங்கே கரும்பலகையிலேயே செய்து பார்ப்போம்.
  • 0:33 - 0:35
    பட்டைகளில் ஒன்று நம்மிடம் இங்கே இருக்கிறது.
  • 0:35 - 0:39
    மேலும் ஒரு பட்டையை வரையலாம்.
  • 0:39 - 0:42
    நாம் வரைவதும் இதுபோன்ற ஒரு பட்டை தான்.
  • 0:42 - 0:43
    மற்ற பட்டைகளுக்குப் பக்கத்திலேயே
  • 0:43 - 0:46
    இதனையும் வரைந்து கொள்வோம்.
  • 0:46 - 0:51
    இதை இரண்டு சம பகுதிகளாக பிரித்துக் கொள்ளலாம்.
  • 0:51 - 0:53
    மேலும் இதன் ஒரு பகுதியை மட்டும்
  • 0:53 - 0:56
    வண்ணம் தீட்டலாம். இது தான் பாதிப்பகுதி.
  • 0:56 - 0:59
    உண்மையில், இது சமமாக இல்லை
  • 0:59 - 1:01
    ஆனாலும் பரவாயில்லை.
  • 1:01 - 1:03
    நமக்கு வேண்டியது கணக்கு தானே.
  • 1:03 - 1:07
    எதற்கும் இன்னும் கொஞ்சம் சரி செய்து கொள்ளலாம்.
  • 1:07 - 1:12
    இதனைப் பாதிப் பகுதி என்று வைத்துக் கொள்வோம்.
  • 1:13 - 1:15
    இந்தப் பட்டைகளில் வேறு எதுவும் பாதியாக பிரிக்கப் படவில்லை.
  • 1:15 - 1:20
    இது நான்கு பகுதியாக பிரிக்கப்பட்டிருக்கிறது.
  • 1:20 - 1:21
    இது ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு
  • 1:21 - 1:25
    ஐந்து.... ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது
  • 1:25 - 1:26
    இது, ஒன்று, இரண்டு, மூன்று,
  • 1:26 - 1:28
    நான்கு, ஐந்து, ஆறு
  • 1:28 - 1:33
    இது ஆறு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது, இது மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
  • 1:33 - 1:36
    நாம் இதில் பாதி எது என்பதைக் கண்டறிய வேண்டும்.
  • 1:36 - 1:40
    இந்த முழு தொகுதியை இரண்டு பகுதிகளாகப் பிரித்தால் போதாது.
  • 1:40 - 1:43
    வெவ்வேறு பகுதிகளாக
  • 1:43 - 1:44
    அதாவது நான்கு சமமான பகுதிகளாகவும்,
  • 1:44 - 1:46
    பிறகு, ஐந்து சமமான பகுதிகளாகவும்.
  • 1:46 - 1:48
    அடுத்து ஆறு சமமான பகுதிகளாகவும் பிரிக்க வேண்டும்.
  • 1:48 - 1:49
    எப்படிப் பிரிப்பது....?
  • 1:49 - 1:50
    இதை செய்ய சுலபமான வழி,
  • 1:50 - 1:53
    முதலில் இதை நான்கு சமமான பகுதிகளாக பிரித்துக் கொள்வது தான்.
  • 1:53 - 1:55
    நான்கு பகுதிகளாக பிரிக்க வேண்டும் என்றால்,
  • 1:55 - 1:56
    இந்த இரண்டு பகுதிகளையும்
  • 1:56 - 1:58
    மேலும் இரண்டு பகுதிகளாக பிரிக்க வேண்டும்.
  • 1:58 - 2:01
    இது ஒரு சம பகுதி, இது மேலும் ஒன்று
  • 2:01 - 2:06
    நாம் நீல நிறத்தை உபயோகித்துக் கொள்வோம்.
  • 2:06 - 2:08
    இது ஒரு சம பகுதி,
  • 2:08 - 2:09
    இது மற்றொரு சம பாகுதி
  • 2:09 - 2:13
    எனவே, இந்தப் பகுதி பாதிக்குச் சமம்
  • 2:13 - 2:15
    நாம் இதன் நிறத்தை மாற்றவில்லை,
  • 2:15 - 2:17
    இதை பல பகுதிகளாக பிரித்திருக்கிறோம்
  • 2:17 - 2:19
    எனவே, ஒன்றின் கீழ் இரண்டு என்பது
  • 2:19 - 2:23
    இங்குள்ள நான்கு பகுதிகளில் இரண்டிற்குச் சமம்.
  • 2:23 - 2:25
    இங்கு எவ்வளவு இருக்கிறது?
  • 2:25 - 2:30
    இதில், ஒன்று, இரண்டு பகுதிகள் உள்ளன.
  • 2:30 - 2:34
    இதிலும் நான்கில் இரண்டு பகுதிகள் உள்ளன.
  • 2:34 - 2:38
    எனவே, 2/4 என்றாலும் 1/2 என்றாலும் இரண்டுமே சமம் தான்.
  • 2:38 - 2:40
    இது சற்று பொருத்தமில்லாததாகத் தோன்றலாம்.
  • 2:40 - 2:42
    ஆனால், இங்குள்ள கருப்புப் பகுதியை எடுத்து
  • 2:42 - 2:45
    இங்கே இடமாற்றி வைத்தால்,
  • 2:45 - 2:47
    இரண்டுமே, ஒன்று போல தோன்றும்.
  • 2:47 - 2:49
    இது வண்ணம் பூசப்பட்டது, பூசப்படாதது
  • 2:49 - 2:54
    இதிலும் 1/2 பகுதிகள் நிரப்பப்பட்டுள்ளன.
  • 2:55 - 2:57
    எனவே, இது 1/2 தான்.
  • 2:57 - 3:02
    இப்பொழுது, ஐந்து பாகங்களாகப் பிரிக்கப்பட்டதைப் பார்க்கலாம்
  • 3:02 - 3:06
    இதை நாம் இரண்டு வழிகளில் செய்யலாம்.
  • 3:06 - 3:10
    நாம், ஐந்து பகுதிகளை வரைந்து கொள்வோம்.
  • 3:10 - 3:12
    இதை 3/5 என்று எழுதிக் கொள்ளலாம்.
  • 3:12 - 3:17
    இது 3/5, இது 3/6, அடுத்து இது 1/3
  • 3:18 - 3:23
    இங்கு ஒரு 3/5 பகுதியை வரைகிறோம்.
  • 3:23 - 3:27
    இதற்கு வேறு நிறத்தை உபயோகிக்கலாம்.
  • 3:27 - 3:30
    புதிதாக இருப்பதால்
  • 3:30 - 3:33
    சற்றுத் தடுமாற்றமாக இருக்கிறது.
  • 3:33 - 3:37
    இதை ஐந்து பகுதிகளாக பிரிக்கலாம்.
  • 3:37 - 3:42
    ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து,
  • 3:42 - 3:43
    இவை அனைத்தும்
  • 3:43 - 3:47
    சம பங்குகள் என்று எடுத்துக் கொள்ளலாம்
  • 3:47 - 3:49
    இது 3/5 என்றால், இதில் எந்த பகுதிகள் வரும்?
  • 3:49 - 3:54
    நமக்கு ஒன்று, இரண்டு, மூன்று கிடைக்கும்.
  • 3:54 - 3:55
    இந்த மூன்றை
  • 3:55 - 3:56
    இதன் இடமாற்றமாக எடுத்துக் கொள்ளலாம்.
  • 3:56 - 3:58
    வண்ணம் நிரப்பப்பட்டுள்ளவற்றை மூன்று பகுதிகளாக எடுத்து,
  • 3:58 - 4:00
    அவற்றை இடது பக்கமாக வைத்துக் கொள்ளலாம்.
  • 4:00 - 4:03
    ஆகவே நம்மிடம், ஒன்று, இரண்டு, மூன்று பகுதிகள் உள்ளன.
  • 4:03 - 4:07
    இந்த 3/5 தொகுதி, 1/2 -ஐ விட பெரிய அளவு உடையது.
  • 4:07 - 4:10
    இந்த 3/5 ஐ இங்கு வைத்தால்
  • 4:10 - 4:13
    அது இங்கிருந்து
  • 4:13 - 4:15
    3/5 வெகு தொலைவிற்குத் தள்ளி இருக்கும்.
  • 4:15 - 4:20
    எனவே, 3/5 -ம் 1/2 -ம் சமமானதல்ல.
  • 4:20 - 4:24
    3/6 இன் நிலை என்ன?
  • 4:24 - 4:26
    இப்பொழுது இதைச் சற்று பார்க்கலாம்
  • 4:26 - 4:31
    இங்கு மேலும் ஒரு பட்டையை வரைந்து கொள்வோம்.
  • 4:34 - 4:37
    நான் மேலும் மேலும் பட்டைகளை தேவைக்கேற்ப வரைந்து கொள்ளலாம்.
  • 4:37 - 4:40
    ஒரு பட்டையை இரண்டாகப் பிரித்து
  • 4:40 - 4:45
    அதன் ஒருபகுதிக்கு வண்ணம் தீட்டினால் அது பாதி என்பது முன்பே தெரிந்தது தான்.
  • 4:45 - 4:49
    எனவே இந்தப் பகுதி, 1/2.
  • 4:49 - 4:51
    இதை எப்படி ஆறு பாகங்களாகப் பிரிப்பது?
  • 4:51 - 4:53
    இந்த இரண்டையும் எடுத்து
  • 4:53 - 4:55
    ஒவ்வொரு பாதியையும் மூன்று துண்டுகளாக பிரித்தால்,
  • 4:55 - 4:59
    நமக்கு ஆறு துண்டுகள் கிடைக்கும். இல்லையா...?
  • 4:59 - 5:04
    நாம் இதற்கு நீல வண்ணம் தீட்டுவோம்.
  • 5:04 - 5:06
    முதலில் இந்த இரண்டு சம பாகங்களையும் எடுத்து
  • 5:06 - 5:08
    ஒவ்வொன்றையும்
  • 5:08 - 5:10
    மூன்று துண்டுகளாகப் பிரித்தால், ஆறு துண்டுகளை எடுத்துக் கொள்வோம்.
  • 5:10 - 5:14
    வண்ணங்கள் அதிகமாகத் தீட்டப்படவில்லை.
  • 5:14 - 5:16
    இப்படி இருந்தால் தான்
  • 5:16 - 5:18
    முழுப்பட்டையை ஆறாகப் பிரிப்பதற்கு ஏதுவாக இருக்கும்.
  • 5:18 - 5:23
    இது ஒன்று, இரண்டு, மூன்று, 3/6 என்பது 1/2 க்கு சமம்.
  • 5:24 - 5:27
    இங்கு, ஒன்று, இரண்டு, மூன்று, பகுதிகள் உள்ளன.
  • 5:27 - 5:29
    இவை இரண்டையும் இங்கே மாற்றி வைத்தால்
  • 5:29 - 5:30
    இப்படித் தோற்றமளிக்கும்.
  • 5:30 - 5:32
  • 5:32 - 5:37
    இங்கு இருப்பது பாதிக்குச் சமமானது தான்.
  • 5:37 - 5:41
    இப்பொழுது 1/3 இன் நிலை என்ன...?
  • 5:41 - 5:43
    அது என்னவாகும் என்பது நமக்குத் தெரிந்தது தான்.
  • 5:43 - 5:45
    அதற்காக நாம் பெரிதாக சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.
  • 5:45 - 5:47
    காணொளியை இடைநிறுத்தம் செய்து முயற்சிக்கலாம்.
  • 5:47 - 5:49
    அல்லது, காணொளியைப் பார்த்தும் தெரிந்து கொள்ளலாம்.
  • 5:49 - 5:51
    சரி நாம் காணொளியிலேயே செய்து விடுவோம்.
  • 5:51 - 5:56
    இதை, மூன்றாக பிரிக்கலாம்.
  • 5:57 - 5:59
    நமக்கு வேண்டியது ஒன்றின் கீழ் மூன்று.
  • 5:59 - 6:04
    நாம் எடுக்கப்போவது இங்கே இருக்கிற ஒன்றின் கீழ் மூன்று.
  • 6:04 - 6:09
    1/3 என்பது 3/6 ஐ விட மிகக் குறைந்த அளவு.
  • 6:10 - 6:12
    அதே சமயம் 3/6 என்பது 1/2 க்கு சமமாகும்.
  • 6:12 - 6:14
    பட்டையில் பாதி என்பது இவ்வளவு பெரியதாக இருக்கும்.
  • 6:14 - 6:18
    1/3 என்பது அதைவிடக் குறைவானது.
  • 6:18 - 6:21
    எனவே, 1/3 என்பது 1/2 -க்கு சமம் இல்லை.
  • 6:21 - 6:24
    இது போன்ற கணக்குகளை நம்மால் விளையாட்டுப் போக்காக செய்து முடித்து விடலாம்.
Title:
Equivalent fractions with visuals | Fractions | 3rd grade | Khan Academy
Description:

more » « less
Video Language:
English
Team:
Khan Academy
Duration:
06:24

Tamil subtitles

Revisions