அல்சைமர் முதுமையின் ஒரு பகுதியல்ல - அதைக் குணப் படுத்த முடியும்
-
0:01 - 0:031901 ஆம் ஆண்டு
-
0:03 - 0:06ஆகஸ்டா என்னும் பெண் சிகிச்சைக்காக
பிராங்க்பர்ட்டிற்கு கொண்டுவரப்பட்டார் -
0:07 - 0:08ஆகஸ்டா மருட்சியடைந்து
காணப்பட்டார் -
0:09 - 0:12அவர் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
கூட அவர் நினைவில் இல்லை -
0:12 - 0:14அல்விஸ், அவரது வைத்தியர்
-
0:16 - 0:18ஆகஸ்டாவை காப்பாற்ற
அவருக்கு வழி தெரியவில்லை -
0:18 - 0:22ஆனால், ஆகஸ்டா 1906 ல் இறக்கும் வரை
அவரைப் பராமரித்தார் -
0:23 - 0:25அவர் இறந்த பின், அல்விஸ்
பிரேத பரிசோதனை செய்தார் -
0:25 - 0:28ஆகஸ்டாவின் மூளையில் வித்தியாசமான
சிக்கல் முடிச்சுக்களை அவதானித்தார் -
0:29 - 0:31அது போல இதற்கு முன் அவர் கண்டதில்லை
-
0:31 - 0:33இன்னொரு அதிர்ச்சியான விடயம்
-
0:34 - 0:37ஆகஸ்டா தற்பொழுது உயிருடன் இருந்தால்
-
0:38 - 0:43114 வருடங்களுக்கு முன் அல்விஸ் செய்ததை
விட மேலதிகமாக எதுவும் எம்மால் முடியாது -
0:44 - 0:48அல்விஸ்; அவர் தான்
டாக்டர் அல்விஸ் அல்சைமர் -
0:49 - 0:51மற்றும் ஆகஸ்டா டீட்டா
-
0:51 - 0:55அல்சைமர் எனப்படும் நோய்
இனங்காணப்பட்ட முதல் நபர் -
0:56 - 0:591901இலும் விட மருத்துவத்துறை
இன்று பெரிதும் முன்னேறியுள்ளது -
0:59 - 1:03நோய்த் தொற்றுக்களைத் தவிர்க்க, தடுப்பு
மருந்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன -
1:03 - 1:07புற்றுநோய்க்கும், எய்ட்சுக்கும்
பல சிகிச்சைகள் உள்ளன -
1:07 - 1:10இருதய நோய்க்கான மருந்துகள் என ஏராளம்
-
1:11 - 1:18ஆனால், அல்சைமருக்கான சிகிச்சை முறையில்
எந்தவொரு முன்னேற்றமும் இல்லை -
1:18 - 1:20ஆராய்ச்சிக்குழுவில்
நானுமொருவன் -
1:20 - 1:2310 வருடங்களாக அல்சைமர் சிகிச்சை முறையை
கண்டறிய முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் -
1:24 - 1:26இதைப் பற்றியே எப்போதும்
சிந்தித்துக் கொண்டிருப்பேன் -
1:26 - 1:30உலகளவில் 40 மில்லியன் பேரை
அல்சைமர் நோய் தாக்குகிறது -
1:30 - 1:362025இல் இது 150 மில்லியனாக அதிகரிக்கும்
-
1:36 - 1:40அதில் உங்களில் பலரும் உள்ளடங்கலாம்
-
1:41 - 1:44நீங்கள் 85 வயதுக்கும் அதிகமாக உயிர்
வாழ்வீர்கள் எனக் கருதினால் -
1:45 - 1:50உங்களை அல்சைமர் நோய் தாக்க
50% வாய்ப்புள்ளது -
1:52 - 1:55அல்லது, உங்களது பெறுமதியான வாழ்நாட்களில்
-
1:55 - 1:57அல்சைமர் நோயினால் துன்பப்படுவீர்கள்
-
1:57 - 2:01அல்லது, அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட
உங்கள் அன்புக்குரியவரைப் பராமரிப்பீர்கள் -
2:02 - 2:04தற்போது அமெரிக்காவில் மட்டும்
-
2:04 - 2:09அல்சைமர் சிகிச்சைக்கான செலவு ஏறத்தாழ
ஆண்டுக்கு 200 பில்லியன் டொலர்கள் ஆகும் -
2:10 - 2:14ஐந்தில் ஒரு மருத்துவ ஒதுக்கீடு
அல்சைமருக்காகவே செலவிடப்படுகிறது -
2:15 - 2:18இன்றைய திகதியில் இதுவே
விலையுயர்ந்த நோயாகும் -
2:18 - 2:212050ல் இதற்கான செலவில் 5 மடங்கு
அதிகரிப்பை எதிர்பார்க்கலாம் -
2:21 - 2:23ஒரு வளர்ந்து வரும் இளைய தலைமுறையாக
-
2:24 - 2:27இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்,
சுருக்கமாக -
2:27 - 2:32அல்சைமர், இத் தலைமுறையின் மருத்துவ
மற்றும் சமூக ரீதியான பெரும் சவாலாகும் -
2:33 - 2:35ஆனால் அதைத் தீர்க்க நாம்
சிறிதளவும் முயலவில்லை -
2:36 - 2:39இன்று உலகளவில் மரணத்துக்கான
முதல் 10 காரணங்களில் -
2:40 - 2:47அல்சைமரை மட்டும் தான் தடுக்கவோ,
குணமாக்கவோ, ஏன் தாமதிக்கக் கூட முடியாது -
2:48 - 2:51அல்சைமரின் பின்னாலுள்ள விஞ்ஞானத்தை
நாம் சரியாக அறிந்து கொள்ளவில்லை -
2:52 - 2:55ஏனெனில், இதை ஆராய அதிக நேரத்தையும்
பணத்தையும் நாம் செலவிடவில்லை -
2:55 - 2:59அமெரிக்க அரசாங்கம் ஒவ்வொரு வருடமும்
அல்சைமர் ஆராய்ச்சியில் 10 மடங்கு அதிகமாக -
2:59 - 3:02புற்று நோய் ஆராய்ச்சிக்குச்
செலவு செய்கிறது -
3:02 - 3:05அல்சைமர் வைத்தியச் செலவு
அதிகம் என்று தெரிந்திருந்தும் -
3:06 - 3:11அது புற்று நோய்க்குச் சமனான அளவு
மரணத்தை ஏற்படுத்தும் என அறிந்திருந்தும் -
3:12 - 3:16வளங்களுக்கான தட்டுப்பாட்டுக்கு அடிப்படைக்
காரணம் உண்டு -
3:16 - 3:17விளிப்புணர்வின்மை
-
3:19 - 3:22காரணம், சிலருக்கு மட்டும் தெரிந்த ஆனால்
அனைவரும் அறிய வேண்டிய ஒரு விடயம் -
3:23 - 3:28அல்சைமர் ஒரு நோய்;
அதைக் குணப்படுத்த முடியும் -
3:28 - 3:31கடந்த 114 வருடங்களில்
-
3:31 - 3:36ஆராய்ச்சியாளர்கள் உட்பட அனைவரும் அல்சைமரை
முதுமையடைதலுடன் சேர்த்துக் குழப்புகிறோம் -
3:36 - 3:38நாம் நினைத்தோம் மறதி என்பது
-
3:38 - 3:40முதுமையின் சாதாரண/
தவிர்க்க முடியாத இயல்பென -
3:41 - 3:43ஆனால் நாம் இப் படத்தைப் பார்க்க வேண்டும்
-
3:43 - 3:47அல்சைமர் நோயாளியின் மூளை மற்றும்
ஆரோக்கியமான ஒருவரின் மூளையின் ஒப்பீடு -
3:47 - 3:50இந்நோய் ஏற்படுத்தியுள்ள
வெளிப்படையான தாக்கத்தைக் காணலாம் -
3:51 - 3:55அத்துடன் நினைவாற்றல் மற்றும் மன
ஆற்றல்களில் கடும் இழப்பை ஏற்ப்படுத்தும் -
3:55 - 3:57அல்சைமரால் மூளைக்கு ஏற்ப்படும் பாதிப்பு
-
3:57 - 4:02எம் வாழ்க்கைக் காலத்தைப் பெருமளவு
குறைப்பதோடு, அபாயகரமானதும் கூட -
4:02 - 4:06ஞாபகமிருக்கட்டும், டாக்டர் அல்சைமர்
ஆகஸ்டாவின் மூளையில் -
4:06 - 4:08100 வருடங்களுக்கு முன் சில சிக்கல்
முடிச்சுக்களை அவதானித்தார் -
4:08 - 4:11ஒரு நூற்றாண்டாகியும் எமக்கு
இதைப்பற்றி பெரிதாகத் தெரியாது -
4:12 - 4:15இன்று, அவை புரத மூலக்கூறுகளால்
ஆனதென்று தெரியும் -
4:16 - 4:17உங்களால் புரத மூலக்கூறை,
-
4:17 - 4:21கடதாசியில் மடிக்கப் பட்ட ஒரிகாமி வடிவமாக
கற்பனை செய்ய முடியும், ஆனால் அதில் -
4:22 - 4:24புள்ளிகள் இருக்கும், ஒட்டும் தன்மையுள்ளது
-
4:25 - 4:30சரியாக மடித்தால் ஒட்டும் பாகம்
உள்ளே சென்றுவிடும் -
4:30 - 4:34ஏதேனும் பிழையாகிப் போனால் ஒட்டும்
பாகம் வெளியே வந்து விடும் -
4:34 - 4:37இது புரத மூலக்கூறுகளை
ஒன்றோடு ஒன்று ஒட்டச்செய்யும் -
4:37 - 4:41பின்னர் அது குவியலாகி காலப்போக்கில்
பெரிய சிக்கல் முடிச்சுகள் உருவாகும் -
4:42 - 4:44அதைத்தான் அல்சைமர் நோயாளியின்
மூளையில் நாம் பார்த்தோம் -
4:45 - 4:48கேம்ப்றிச் பல்கலைக்கழகத்தில்
10 வருடங்களை செலவிட்டுள்ளோம் -
4:48 - 4:51எவ்வாறு இப்பிழை ஏற்படுகிறது
எனப் புரிந்துகொள்ள -
4:52 - 4:56அதில் பல படிகள் உள்ளன; எப் படியில்
தடுப்பது எனத் தீர்மானிப்பது; வெடிகுண்டு -
4:57 - 4:58செயலிழக்கச் செய்வதுபோல
-
4:59 - 5:01ஒரு கம்பியை வெட்டினால் ஒன்றுமாகாது
-
5:01 - 5:03மற்றவற்றை வெட்டினால் குண்டு வெடித்துவிடும்
-
5:04 - 5:06தடுக்க சரியான படியைக் கண்டுபிடிக்க வேண்டும்
-
5:06 - 5:08பின் அதற்கு மருந்து தயாரிக்க வேண்டும்
-
5:09 - 5:11பெரும்பாலான நாம் அண்மைக்காலம் வரை கம்பிகளை
-
5:11 - 5:14வெட்டிவிட்டு நல்லதே
நடக்குமென எதிர்பார்த்திருந்தோம் -
5:14 - 5:16இப்போது நாம் பல்வேறுபட்ட
துறைகளிலிருந்து இணைந்துள்ளோம் -
5:16 - 5:22மருத்துவ, உயிரியல், மரபணு, வேதியியல்,
இயற்பியல், பொறியியல், கணிதவியல் -
5:22 - 5:26வல்லுனர்கள் ஒன்றிணைந்து இச்செயன்
முறையின் முக்கிய படியைக் கண்டறிந்துள்ளோம் -
5:26 - 5:30தற்போது புதிய மருந்தொன்றை சோதித்துக்
கொண்டிருக்கிறோம்; இப்படியை தடுப்பதற்கும் -
5:31 - 5:32நோயை நிறுத்துவதற்கும்
-
5:32 - 5:35இதோ, எமது சில சமீபத்திய முடிவுகள்
-
5:35 - 5:38எமது ஆய்வாளர்களைத் தவிர
யாரும் இதைப் பார்க்கவில்லை -
5:38 - 5:43புதிய மருந்தை புழுக்கள் மீது பரிசோத்தித்த
போது என்ன நடந்ததென காட்சியில் பாருங்கள் -
5:43 - 5:44இவை ஆரோக்கியமான புழுக்கள்
-
5:44 - 5:47அவை சாதாரணமாக நகர்வதை அவதானிக்கலாம்
-
5:48 - 5:50மறுபுறம், இந்தப் புழுக்களினுள்ளே
-
5:50 - 5:54புரத மூலக்கூறுகள் ஒன்றுடன் ஒன்று
ஒட்டியுள்ளது -
5:54 - 5:55அல்சைமர் நோயாளிகளைப் போல
-
5:55 - 5:58அவை துன்பப்படுவதைப் தெளிவாகப் பார்க்கலாம்
-
5:58 - 6:03ஆனால், ஆரம்பத்திலேயே எமது புதிய
மருந்து கொடுக்கப்பட்ட பின்னர் -
6:03 - 6:06ஆரோக்கியமாக உள்ளதைக் காணலாம். அவை இனி
சாதாரண வாழ்க்கை காலம் முழுதும் வாழும் -
6:07 - 6:11இச் சாதமான முடிவு ஒரு ஆரம்ப கட்டம் தான்,
ஆனால் இத்தகைய ஆராய்ச்சி -
6:11 - 6:16அல்சைமர் ஒரு நோய்; அதைக் குணப்படுத்த
முடியும் எனக் காட்டுகிறது -
6:16 - 6:19114 வருடக் காத்திருப்பின் பின்
-
6:19 - 6:21இறுதி அடைவைப் பற்றிய
ஒரு நம்பிக்கை உருவாகியுள்ளது -
6:21 - 6:23அடுத்த 10 அல்லது 20 வருடங்களில்
-
6:24 - 6:28அந்நம்பிக்கை வளர, அல்சைமரைக் குணமாக்க,
எமக்கு உதவி தேவை -
6:29 - 6:31என்னைப் போல் ஆராய்ச்சியாளர்களது அல்ல
-
6:31 - 6:32உங்களது
-
6:33 - 6:36அல்சைமர் ஒரு நோய் என்னும் விழிப்புணர்வை
அதிகரிக்க நீங்கள் உதவ வேண்டும் -
6:36 - 6:39நாங்கள் முயன்றால் அதை வெல்லலாம்
-
6:39 - 6:41மற்றைய நோய்களைப் பொறுத்தவரையில்
-
6:41 - 6:44நோயாளிகளும் அவர்களின் குடும்பமும்
அதிக ஆராய்ச்சிகளை தூண்டினர் -
6:44 - 6:47அரசாங்கம், மருந்துற்பத்தித் துறை,
ஆராய்ச்சியாளர்களுக்கு -
6:47 - 6:49அழுத்தம் கொடுத்தனர்
-
6:49 - 6:541980களின் பிற்பகுதியில் எயிட்ஸ் சிகிச்சை
முன்னேற்றத்துக்கு அது அவசியமாக இருந்தது -
6:54 - 6:58இன்று புற்று நோய்ச் சிகிச்சைக்கு
அத்தகைய ஊக்குவிப்புள்ளதைக் காணலாம் -
6:58 - 7:03ஆனால் அல்சைமர் நோயாளிகளால்
தமக்காகப் பேச முடியாது -
7:03 - 7:07அவர்களது குடும்பங்கள் பாவம்,
தம்மன்புக்குரியவர்களை நாள்தோறும் கவனித்து -
7:07 - 7:10சோர்ந்து போயுள்ளனர். அவர்களால்
எதிர்ப்புக் குரலெழுப்ப முடியாது -
7:11 - 7:14ஆகவே, இது உங்கள் கைகளில் தான் உள்ளது
-
7:16 - 7:19அல்சைமர் பரம்பரை நோய் கிடையாது
-
7:19 - 7:21அனைவரது மூளையும் ஆபத்திலுள்ளது
-
7:22 - 7:27இன்று ஆகஸ்டாவைப் போல 40மில்லியன் நோயாளிகள்
-
7:27 - 7:30தமக்காகக் குரலெழுப்ப முடியாதுள்ளனர்
-
7:30 - 7:31அவர்களுக்காகப் பேசுங்கள்
-
7:32 - 7:34சிகிச்சையைக் கோர உதவுங்கள்
-
7:35 - 7:36நன்றி
-
7:37 - 7:40(கரகோஷம்)
- Title:
- அல்சைமர் முதுமையின் ஒரு பகுதியல்ல - அதைக் குணப் படுத்த முடியும்
- Speaker:
- சாமுவேல் கொஹென்
- Description:
-
more » « less
உலகம் முழுவதும் 40 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் அல்சைமர் நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இது தொடர்ந்து வரும் ஆண்டுகளில் பெருமளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், 100க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக இந்த நோய்க்கான சிகிச்சை முறையில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. விஞ்ஞானி சாமுவேல் கோஹென் அல்சைமர் ஆராய்ச்சியில் நம்பிக்கை தரும் ஒரு புதிய திருப்புமுனையைப் பகிர்ந்துகொள்கிறார். கோஹன் கூறுகிறார், " அல்சைமர் ஒரு நோய்", "அதை நாம் குணப்படுத்த முடியும். "
- Video Language:
- English
- Team:
closed TED
- Project:
- TEDTalks
- Duration:
- 07:53
|
Dimitra Papageorgiou approved Tamil subtitles for Alzheimer's is not normal aging — and we can cure it | |
| Jenisan Kulendiran accepted Tamil subtitles for Alzheimer's is not normal aging — and we can cure it | ||
| Pournima Sridarran edited Tamil subtitles for Alzheimer's is not normal aging — and we can cure it | ||
| Pournima Sridarran edited Tamil subtitles for Alzheimer's is not normal aging — and we can cure it | ||
| Pournima Sridarran edited Tamil subtitles for Alzheimer's is not normal aging — and we can cure it | ||
| Pournima Sridarran edited Tamil subtitles for Alzheimer's is not normal aging — and we can cure it | ||
| Pournima Sridarran edited Tamil subtitles for Alzheimer's is not normal aging — and we can cure it | ||
| Pournima Sridarran edited Tamil subtitles for Alzheimer's is not normal aging — and we can cure it |
