< Return to Video

வில் செய்வதற்கான கலை

  • 0:01 - 0:05
    இக்கரை மாட்டுக்கு
  • 0:05 - 0:08
    அக்கரைப் பச்சை என்று கூறுவர்,
  • 0:08 - 0:11
    நான் அதை உண்மை என்று நினைக்கின்றேன்
  • 0:11 - 0:13
    குறிப்பாக அதிபர் ஒபாமா சொன்னப்பிறகு
  • 0:13 - 0:16
    அவர் எப்பொழுதும் கொரிய கல்வித் திட்டத்தைப் பற்றி
  • 0:16 - 0:19
    வெற்றியின் படிக்கல்லாக கூறுகின்றார்.
  • 0:19 - 0:22
    சரி ,ஒன்றை நான் சொல்லமுடியும்,
  • 0:22 - 0:25
    கடுமையான உயர் போட்டி நிறைந்த சூழலில் உருவானது
  • 0:25 - 0:28
    கொரியாவின் கல்வி திட்டம்
  • 0:28 - 0:30
    'பிரெஷ்ர் குக்கர்' என்றும் அழைக்கப்படும்,
  • 0:30 - 0:36
    இந்த சூழலில் அனைவராலும் சிறப்பாக செய்யமுடியாது.
  • 0:36 - 0:38
    எங்களது கல்வி முறையைப் பற்றி
  • 0:38 - 0:41
    பலர் பலவிதமான கருத்துக்களை கூறுகிறார்கள்
  • 0:41 - 0:45
    மிகவும் அழுத்தமான சூழலுக்கு என்னுடைய பதில்
  • 0:45 - 0:48
    வில்லினை உருவாக்கலாம் என நினைக்கின்றேன்
  • 0:48 - 0:50
    என் வீட்டிற்கு அருகில் இருக்கும் விறகுகளை கொண்டு
  • 0:50 - 0:53
    ஏன் வில்?
  • 0:53 - 0:56
    எனக்கே சரியாகத் தெரியவில்லை.
  • 0:56 - 0:59
    தொடர் அழுத்தத்தின் காரணமாக இருக்கலாம்,
  • 0:59 - 1:02
    என்னுள் இருக்கும் குகை மனிதனின் தொடர் வாழ்விற்கான அம்சம்
  • 1:02 - 1:06
    வில்லுடன் தொடர்பு கொண்டிருக்கலாம்,
  • 1:06 - 1:08
    நீங்கள் அதைப் பற்றி சிந்தித்தால்,
  • 1:08 - 1:11
    வராலாற்றிற்கு முன்பிருந்தே வில்
  • 1:11 - 1:14
    மனிதனின் தொடர் வாழ்விற்கு அதிகம் பங்காற்றியுள்ளது.
  • 1:14 - 1:17
    என் வீட்டிலிருந்து 3 கி.மீ தூரத்தில்
  • 1:17 - 1:19
    மெல்பெரி மரக்காடு உள்ளது
  • 1:19 - 1:22
    ஜோசியன் சாம்ராஜ்ஜியத்தின்போது,
  • 1:22 - 1:26
    பட்டுப்புழுக்களுக்கு இந்த மெல்பெரி இலைகள்தான் உணவு.
  • 1:26 - 1:31
    இந்த வரலாற்றினை விழிப்புணர்வு வழி வெளிப்படுத்த
  • 1:31 - 1:35
    அரசு மெல்பெரி மரங்களை நடவு செய்தது.
  • 1:35 - 1:37
    இம்மரங்களின் விதைகள்
  • 1:37 - 1:40
    பறவைகளின் மூலம் பரவலாக்கப்படுகின்றது
  • 1:40 - 1:43
    நகரில் ஓசைபுகா சுவர்களுக்கு அருகில்
  • 1:43 - 1:48
    1988-இல் ஒலிம்பிக் காலக்கட்டத்தில்
  • 1:48 - 1:50
    கட்டப்பட்ட இடத்தின் அருகில்,
  • 1:50 - 1:53
    யாரும் கவனம் செலுத்தாத,
  • 1:53 - 1:56
    பெரிய மேம்பாடு காணாத,
  • 1:56 - 2:02
    இந்த இடத்தில்தான் என் பொக்கிஷத்தைக் கண்டுபிடித்தேன்.
  • 2:02 - 2:05
    எனக்கு வில் செய்வதில் ஆழமான ஆர்வம் வந்தது,
  • 2:05 - 2:10
    என் வீட்டின் சுற்றுப்புறத்தையும் தாண்டி தேடிப்பார்த்தேன்.
  • 2:10 - 2:12
    நான் பள்ளி சுற்றுலா செல்லும்போதும்,
  • 2:12 - 2:15
    குடும்ப சுற்றுலா அல்லது வீடு நோக்கி வரும்பொழுதும்
  • 2:15 - 2:18
    கூடுதல் வகுப்பிற்கு செல்லும்பொழுதும்
  • 2:18 - 2:20
    மரங்கள் நிறைந்த இடத்திற்கு செல்வேன்
  • 2:20 - 2:22
    மரக்கிளைகளைச் சேமித்து வைத்துக்கொள்வேன்
  • 2:22 - 2:26
    என்னுடைய பள்ளிப்பையில் உள்ள கருவிகளான
  • 2:26 - 2:29
    இரம்பம், கத்தி,
  • 2:29 - 2:32
    வளைவு கத்தி, மற்றும் கோடரி
  • 2:32 - 2:36
    ஆகியவற்றை ஒரு துண்டில் மறைத்து வைத்திருப்பேன்
  • 2:36 - 2:38
    நான் அந்த மரக்கிளைகளை வீட்டிற்கு கொண்டு வருவேன்
  • 2:38 - 2:40
    பேருந்திலும் பாதாள இரயிலிலும்
  • 2:40 - 2:43
    வெறுங்கையில் பிடித்து வருவேன்.
  • 2:43 - 2:47
    இங்கு நான் அதனைக் கொண்டு வரவில்லை காரணம்
  • 2:47 - 2:49
    விமான பாதுகாப்பினருக்கு பயந்து
  • 2:49 - 2:51
    (சிரிப்பொலி)
  • 2:51 - 2:55
    என் அறை இரம்ப பயன்பாட்டினால் தூசிகள் நிறைந்து இருக்கும்,
  • 2:55 - 2:59
    நான் இரவு முழுவதும் இரம்பத்தைப் பயன்படுத்தி ஒரு வில் தயாராகும் வரை
  • 2:59 - 3:01
    அறுத்துக்கொண்டு, செதுக்கிக்கொண்டு தூய்மைப்படுத்திக்கொண்டிருப்பேன்
  • 3:01 - 3:06
    ஒரு நாள், நான் அந்த வில்லின் வடிவத்தை மாற்றினேன்
  • 3:06 - 3:10
    அந்த இடத்திற்கே நெருப்பு வைத்துவிட்டேன்
  • 3:10 - 3:15
    எங்கு? என் அடுக்குமாடி வீட்டின் கூரைக்கு,
  • 3:15 - 3:19
    அங்கு 96 குடும்பங்கள் வாழ்கின்றன
  • 3:19 - 3:21
    என் வீட்டின் அருகில் இருக்கும் மளிகை கடையில் இருந்த வாடிக்கையாளர்
  • 3:21 - 3:23
    911க்கு அழைத்துவிட்டார்,
  • 3:23 - 3:25
    என்னுடைய பாதி முடி எரிந்த நிலையில்
  • 3:25 - 3:30
    என் அம்மாவிடம் சொல்ல கீழே ஓடினேன்.
  • 3:30 - 3:32
    இந்த தருணத்தை பயன்படுத்தி
  • 3:32 - 3:36
    சபையில் என் அம்மாவிடம் ஒன்றை சொல்ல ஆசைப்படுகிறேன்:
  • 3:36 - 3:38
    அம்மா என்னை மன்னித்திவிடுங்கள்,
  • 3:38 - 3:42
    இனி திறந்த நெருப்பு எனறால் கவனமாக இருக்கின்றேன்
  • 3:42 - 3:45
    என் அம்மா நிறைய விளக்கங்களைச் சொல்ல வேண்டி இருந்தது,
  • 3:45 - 3:47
    இது திட்டமிட்டு செய்யப்பட்ட தீவைப்பு அல்ல
  • 3:47 - 3:50
    என்று விளக்கினார்.
  • 3:53 - 3:57
    நான் உலகில் உள்ள பல விற்களைப் பற்றி ஆய்வு நடத்தினேன்
  • 3:57 - 3:59
    அப்படியே பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு இடங்களில்
  • 3:59 - 4:02
    செய்யப்பட்ட விற்களை ஒன்றிணைத்தேன்
  • 4:02 - 4:06
    ஒரு மிகச்சிறந்த வில் செய்வதற்கு.
  • 4:06 - 4:08
    நான் மேப்பல், யிவ் மெல்பெரி போன்ற
  • 4:08 - 4:11
    வெவ்வேறு வகையான மரங்களிலும் வில் செய்து
  • 4:11 - 4:13
    அதனை பயன்படுத்தி பார்த்தேன்
  • 4:13 - 4:16
    முன்பு நான் குறிப்பிட்ட பாதாள இரயில் தடத்தின்
  • 4:16 - 4:19
    அருகே இருக்கும் மரங்கள் நிறைந்த பகுதியில்தான்
  • 4:19 - 4:21
    என் வில் பயிற்சி நடக்கும்
  • 4:21 - 4:23
    மிகச்சிறந்த வில் இப்படிதான் இருக்கும்
  • 4:23 - 4:28
    ஒன்று: படத்தில் உள்ளதுபோல வளைந்த நிலை
  • 4:28 - 4:31
    வில்லின் பாய்திறத்தை உச்ச வரம்பிற்கு அதிகரிக்கும்
  • 4:31 - 4:36
    இரண்டு: உட்புறமாக வரையப்பட்டுள்ளது அதிக கனத்தை ஆட்கொள்ளும்
  • 4:36 - 4:40
    இது அதிக சக்தியை கொடுக்கும்
  • 4:40 - 4:44
    மூன்றாவது: வெளி இழை நரம்பு
  • 4:44 - 4:47
    உச்ச வரம்பு அழுத்தத்தை கொடுக்கும்
  • 4:47 - 4:55
    நான்காவது: அழுத்தத்தில் ஆற்றலை நிலைநிறுத்த கொம்பினை போன்ற வடிவத்தைப் பயன்படுத்தவேண்டும்
  • 4:55 - 4:58
    வில் செய்ய விறகினை பலமுறை உடைத்து, மறுவடிவமைப்பு செய்து
  • 4:58 - 5:01
    ஒட்டி, வளைத்து மாற்றங்களைச் செய்து
  • 5:01 - 5:04
    நான் எதிர்பார்த்த வில்லின் வடிவம் உருவாகியது
  • 5:04 - 5:08
    இறுதியாக வில்
  • 5:08 - 5:12
    இப்படிதான் காட்சியளிக்கும்.
  • 5:13 - 5:15
    என்னை நினைத்து எனக்கு பெருமையாக இருந்தது
  • 5:15 - 5:21
    சொந்தமாக ஒரு வில்லினை உருவாக்கியதற்கு
  • 5:21 - 5:24
    தொல்பொருள் காட்சி சாலையில் இருந்து எடுக்கப்பட்ட
  • 5:24 - 5:26
    கொரியாவின் பாரம்பரிய வில்லின் படம்
  • 5:26 - 5:32
    இப்பொழுது என்னுடைய வில் எப்படி இருக்கின்றது எனப் பாருங்கள்
  • 5:32 - 5:33
    என்னுடைய உருவாக்கத்தை திருடிய
  • 5:33 - 5:39
    முனோர்களுக்கு நன்றி. (சிரிப்பொலி)
  • 5:40 - 5:41
    வில்லினை உருவாக்கும் பொழுது,
  • 5:41 - 5:44
    என் பரம்பரை பெருமையுடன் நேரடியாக தொடர்பு கொள்கிறேன்
  • 5:44 - 5:48
    என் முன்னோர்கள் சேகரித்து வைத்திருந்த தகவல்களையும் செய்திகளையும்
  • 5:48 - 5:51
    கற்றுக் கொள்கின்றேன்
  • 5:51 - 5:53
    இத்தகவல்கள் எந்த மருத்துவத்தையும் விட எனக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது
  • 5:53 - 5:58
    என்னைப்போன்றோருக்கு நான் சொல்லநினைக்கும் அறிவுரை இதுதான்
  • 5:58 - 6:01
    நான் அகலமாகவும் தூரமாகவும் தேடினேன்
  • 6:01 - 6:05
    ஆனால் என் அருகிலும் எனக்கு நெருக்கமாகவும் உள்ளதை கண்டுக்கொள்ளவில்லை
  • 6:05 - 6:07
    இந்த உணர்வு நிலையில் இருந்துதான்
  • 6:07 - 6:10
    முன்பு ஊக்கம் அளிக்காத
  • 6:10 - 6:13
    கொரிய வரலாற்றின் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது
  • 6:13 - 6:17
    இறுதியில் இக்கரையின் புல்லும்
  • 6:17 - 6:18
    பச்சையாக இருப்பதை உணர்ந்தேன்,
  • 6:18 - 6:22
    அதை பல சமயங்களில் நாம் உணர்வதில்லை.
  • 6:22 - 6:26
    இப்பொழுது இந்த வில் எப்படி இயங்குகிறது என காட்டப்போகின்றேன்.
  • 6:26 - 6:29
    வாருங்கள் பார்ப்போம்.
  • 6:32 - 6:34
    இது ஒரு மூங்கில் வில்,
  • 6:34 - 6:38
    45 பவுண்டு எடையுள்ளது
  • 6:38 - 6:40
    ( வில் பறக்கும் ஓசை)
  • 6:40 - 6:45
    ( கைத்தட்டல்)
  • 6:48 - 6:53
    வில் எளிய பொறிநுட்பத்தில் இயங்கலாம்,
  • 6:53 - 6:55
    ஆனால் ஒரு சிறந்த வில் செய்வதற்கு,
  • 6:55 - 6:59
    அதிக கூர் உணர்வு தேவை.
  • 6:59 - 7:02
    உங்களுக்கு பொறுமையும்
  • 7:02 - 7:05
    விறகுகளுடனான 'தொடர்பும்' தேவை
  • 7:05 - 7:06
    மரத்தில் நார் இருப்பதற்கு
  • 7:06 - 7:09
    காரணமும் அதன் பயனும் உண்டு
  • 7:09 - 7:12
    அவற்றின் ஒத்திசைவில்தான்
  • 7:12 - 7:16
    சிறந்த வில்லினை உருவாக்க முடியும்
  • 7:16 - 7:18
    நான் மரபு வழி ஆர்வமில்லாத
  • 7:18 - 7:20
    ஒரு (விசித்தரமான) மாணவனாக இருக்கலாம்,
  • 7:20 - 7:23
    ஆனால் நான் ஒரு பங்களிப்பினை செய்திருக்கின்றேன்
  • 7:23 - 7:27
    நான் என் கதையை உங்களுடன் பரிமாறிக்கொள்கிறேன்.
  • 7:27 - 7:29
    நான் எதிர்பார்க்கும் சிறந்த இடத்தில்
  • 7:29 - 7:31
    யாரும் விடுபடக்கூடாதுm
  • 7:31 - 7:35
    அவரவருக்கு உரிய இடம் வேண்டும்m
  • 7:35 - 7:38
    வில்லில் உள்ள நாரும் நாணும் போல,
  • 7:38 - 7:41
    இங்கு உறுதியும் நெகிழ்ச்சியும் சந்திக்கின்றன
  • 7:41 - 7:45
    உறுதியற்றவை நிலைமைக்கு தக்கப்படி மாறுதல் அடைய கூடியது
  • 7:45 - 7:47
    நான் வில்லையும்
  • 7:47 - 7:50
    வில் என்னையும் உருவக்குகிறது.
  • 7:50 - 7:55
    நான் இப்பொழுது என் எண்ணத்தை பாய்ச்சுகின்றேன்
  • 7:55 - 7:58
    இல்லை இல்லை சரியாக சொல்ல வேண்டும் என்றால் எண்ணத்தின் ஒரு பகுதியை தெரிவிக்கின்றேன்
  • 7:58 - 8:00
    இது உங்கள் எண்ணத்தில் புகுந்திருக்கும்
  • 8:00 - 8:03
    இது உங்களுக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதா?
  • 8:03 - 8:04
    நன்றி.
  • 8:04 - 8:10
    (கைத்தட்டல்)
Title:
வில் செய்வதற்கான கலை
Speaker:
Dong Woo Jang
Description:

டோங் வூ ஜாங் விசித்திரமான பொழுதுப் போக்கை கொண்டிருந்தார். இந்த உரையினை வழங்கும்பொழுது அவருக்கு 15 வயது. அவர் சியோலின் கட்டிட காடுகள் வாழும்பொழுது சிறந்த வில் செய்வதற்கு எப்படி ஊக்கம் வந்தது எனக் கூறுகின்றார். அவர் சொந்தமாக வடிவமைத்த வில்லினையும் அம்பினையும் பாருங்கள், கேளுங்கள்.

more » « less
Video Language:
English
Team:
closed TED
Project:
TEDTalks
Duration:
08:28
Dimitra Papageorgiou edited Tamil subtitles for Dong Woo Jang
Dimitra Papageorgiou edited Tamil subtitles for Dong Woo Jang
Dimitra Papageorgiou approved Tamil subtitles for Dong Woo Jang
Vijaya Sankar N accepted Tamil subtitles for Dong Woo Jang
Vijaya Sankar N edited Tamil subtitles for Dong Woo Jang
Elanttamil Maruthai edited Tamil subtitles for Dong Woo Jang
Elanttamil Maruthai edited Tamil subtitles for Dong Woo Jang
Elanttamil Maruthai edited Tamil subtitles for Dong Woo Jang
Show all

Tamil subtitles

Revisions