ஃபிபோனாச்சி எண்களின் மாயாஜாலம்
-
0:01 - 0:04நாம் ஏன் கணிதத்தைக் கற்கிறோம்?
-
0:04 - 0:06முக்கியமாக மூன்று காரணங்களுக்காக:
-
0:06 - 0:08மதிப்பிடுவதற்காக,
-
0:08 - 0:10பயன்படுத்துவதற்காக,
-
0:10 - 0:12கடைசியாக,
-
0:12 - 0:15காலத்தின் அடிப்படையில்,
-
0:15 - 0:16உத்வேகத்திற்காக.
-
0:16 - 0:19கணிதம் என்பது மாதிரிகளின் அறிவியல்.
-
0:19 - 0:22நாம் அதைக் கற்பது தர்க்கரீதியாகவும்,
-
0:22 - 0:25ஆக்கப்பூர்வமாகவும், நெருக்கடியான சூழலில் சிந்திக்கவுமே ஆகும்.
-
0:25 - 0:28ஆனால் பள்ளிகளில் நாம் கற்கும் கணிதம்
-
0:28 - 0:30நமக்கு உத்வேகம் தருவதாக இல்லை.
-
0:30 - 0:31நம் மாணவர்கள் நம்மிடம்,
-
0:31 - 0:33"ஏன் கணிதத்தைக் கற்க வேண்டும்?" என்று வினவுகின்றனர்.
-
0:33 - 0:35மாணவர்கள் கற்கும் கணிதத்தின் தேவை
-
0:35 - 0:38எதிர்வரும் கணித வகுப்புக்கும், தேர்வுக்குமே ஆகும்.
-
0:38 - 0:40ஆனால் என்றேனும் நாம் நினைத்ததுண்டா,
-
0:40 - 0:42நாம் கணிதத்தை கற்கும் நோக்கம் என்பது
-
0:42 - 0:45அது அழகானது, மகிழ்ச்சி தரக் கூடியது என்றும்
-
0:45 - 0:48மேலும் நம் அறிவை உற்சாகப் படுத்தக்கூடியது என்றும்?
-
0:48 - 0:49எனக்குத் தெரியும். பெரும்பாலானோருக்கு
-
0:49 - 0:52இது எப்படி சாத்தியமென்று உணரும் வாய்ப்பில்லை.
-
0:52 - 0:53மிக எளிய உதாரணம் கூறுகிறேன்.
-
0:53 - 0:56எனக்கு மிக விருப்பமான
-
0:56 - 0:58ஃபிபோனசி (Fibonacci) எண்களின் வாயிலாக. (கைத்தட்டல்).
-
0:58 - 1:01நீங்கள் ஃபிபோனசி எண்களின் ரசிகரா?
-
1:01 - 1:02இது பெருமைக்குரியது.
-
1:02 - 1:04இது பல வழிகளில்
-
1:04 - 1:06பாராட்டுக்குரியது.
-
1:06 - 1:09மதிப்பீடுகளின் அடிப்படையில் பார்க்கையில்,
-
1:09 - 1:10அவை எளிதாக புரிந்து கொள்ளத்தக்கது.
-
1:10 - 1:13ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பதைப் போல.
-
1:13 - 1:15ஒன்றும் இரண்டும் மூன்று என்பதைப் போல,
-
1:15 - 1:18இரண்டும் மூன்றும் ஐந்து, மூன்றும் ஐந்தும் எட்டு
-
1:18 - 1:19என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
-
1:19 - 1:21ஃபிபோனசி என்று நம்மால் அழைக்கப்படுவது,
-
1:21 - 1:25உண்மையில் பிசா லியானார்டோ என்பவர் ஆவார்.
-
1:25 - 1:28இந்த எண்கள் அவருடைய "லிபெர் அபாசி" என்ற நூலில் உள்ளது.
-
1:28 - 1:29இதுவே மேற்கு உலகத்தின் நம்பிக்கையின்படி
-
1:29 - 1:32நாம் இன்று கற்கும் எண்கணித முறையாகும்.
-
1:32 - 1:34பயன்பாடுகளின் அடிப்படையில்,
-
1:34 - 1:36ஃபிபோனசி எண்கள் பல இடங்களில் காட்சியளிப்பது
-
1:36 - 1:38ஆச்சர்யத்தை உண்டாக்குகின்றது.
-
1:38 - 1:40பூக்களின் இதழ்களின் எண்ணிக்கை
-
1:40 - 1:42ஒரு ஃபிபோனசி எண்ணே.
-
1:42 - 1:44சூரியகாந்தியில் அல்லது
-
1:44 - 1:46அன்னாசிப் பழத்தில் உள்ள சுருள் வட்டம்
-
1:46 - 1:48ஒரு ஃபிபோனசி எண்ணே ஆகும்.
-
1:48 - 1:52சொல்லப்போனால் ஃபிபோனசி எண்ணை நாம் பல வகைகளில் பயன்படுத்துகிறோம்,
-
1:52 - 1:54எனக்கு ஆச்சர்யம் தருவது என்னவென்றால்
-
1:54 - 1:57அவற்றின் அழகான எண் அமைப்பு முறை ஆகும்.
-
1:57 - 1:59எனக்கு விருப்பமான ஒரு அமைப்பைக் கூறுகிறேன்.
-
1:59 - 2:01நீங்கள் ஒரு எண்ணின் வர்க்கத்தைக் காண விரும்பினால்,
-
2:01 - 2:04யார் விரும்ப மாட்டார்கள்? (சிரிப்பொலி)
-
2:04 - 2:06சில ஃபிபோனசி எண்களின்
-
2:06 - 2:08வர்க்கங்களை இப்போது பார்ப்போம்.
-
2:08 - 2:10ஒன்றின் வர்க்கம் ஒன்று,
-
2:10 - 2:12இரண்டின் வர்க்கம் நான்கு. மூன்றின் வர்க்கம் ஒன்பது.
-
2:12 - 2:16ஐந்தின் வர்க்கம் இருபத்தைந்து.
-
2:16 - 2:18உங்களுக்குத் தெரியும்
-
2:18 - 2:20அடுத்தடுத்த ஃபிபோனசி எண்களை கூட்டினால்,
-
2:20 - 2:22அதற்கடுத்த ஃபிபோனசி எண் வரும் என்று. அல்லவா?
-
2:22 - 2:24அப்படிதான் அவை உருவாக்கப்பட்டிருக்கிறது.
-
2:24 - 2:26அவற்றின் வர்க்கங்களைக் கூட்டுவதில் என்ன சிறப்பு
-
2:26 - 2:29என்பதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்.
-
2:29 - 2:30இதைப் பாருங்கள்.
-
2:30 - 2:32ஒன்றும் ஒன்றும் இரண்டு.
-
2:32 - 2:35ஒன்றும் நான்கும் ஐந்து.
-
2:35 - 2:37நான்கும் ஒன்பதும் பதிமூன்று.
-
2:37 - 2:40ஒன்பதும் இருபத்தைந்தும் முப்பத்தி நான்கு.
-
2:40 - 2:43இந்த எண் அமைப்பு முறை இவ்வாறு தொடரும்.
-
2:43 - 2:44இதோ இன்னும் ஒரு மாதிரி.
-
2:44 - 2:46ஃபிபோனசி எண்களின் முதல்
-
2:46 - 2:49சில எண்களைக் கூட்டினால் என்ன
-
2:49 - 2:50நிகழும் என்பதைப் பார்க்கலாம்.
-
2:50 - 2:53ஒன்றையும் ஒன்றையும் நான்கையும் கூட்டினால் ஆறு.
-
2:53 - 2:56அதனுடன் ஒன்பதைக் கூடினால் பதினைந்து.
-
2:56 - 2:58அதனுடன் இருபத்தைந்தைக் கூடினால் நாற்பது.
-
2:58 - 3:01அதனுடன் அருபத்தினான்கைக் கூட்டினால் நூற்றி நான்கு.
-
3:01 - 3:02இந்த எண்களைப் பாருங்கள்.
-
3:02 - 3:05இவை ஃபிபோனசி எண்கள் அல்ல,
-
3:05 - 3:06இவற்றை உற்று நோக்கினால்,
-
3:06 - 3:08இவற்றினூடே ஃபிபோனசி எண்கள்
-
3:08 - 3:11புதைந்திருப்பதைக் காணலாம்.
-
3:11 - 3:13நீங்கள் இதைக் காண்கிறீர்களா? இதோ,
-
3:13 - 3:16இரண்டு முறை மூன்று, ஆறு. மூன்று முறை ஐந்து, 15.
-
3:16 - 3:18ஐந்து முறை எட்டு, 40.
-
3:18 - 3:21இரண்டு, மூன்று, ஐந்து, எட்டு, யாரைப் பாராட்டுவது?
-
3:21 - 3:23(சிரிப்பொலி)
-
3:23 - 3:25நிச்சயமாக, ஃபிபோனசியைத்தான்.
-
3:25 - 3:28இவ்வகை எண் முறையை வெளிப்படுத்தி வேடிக்கை காட்டுகிறது.
-
3:28 - 3:31இதை நுட்பமாக அறிந்து கொள்வது நமக்கு
-
3:31 - 3:33மேலும் திருப்தியளிக்கும்.
-
3:33 - 3:35கடைசியாக ஒரு சமன்பாட்டைப் பார்க்கலாம்.
-
3:35 - 3:39ஏன் ஒன்று, இரண்டு, மூன்று, ஐந்து மற்றும் எட்டின் இருபடி மூலத்தின்
-
3:39 - 3:41கூட்டுத் தொகை 13?
-
3:41 - 3:44எளிய ஒரு வரைபடத்தின் மூலம் இதை விளக்குகிறேன்.
-
3:44 - 3:47முதலில் ஒன்றின் இருபடி ஒன்று.
-
3:47 - 3:51அடுத்த ஒன்றின் இருபடி ஒன்று.
-
3:51 - 3:54அவை 1 X 2 செவ்வகத்தை உருவாக்கும்.
-
3:54 - 3:57இதன் கீழ் இரண்டின் இருபடியையும்,
-
3:57 - 4:00அருகில் மூன்றின் இருபடியையும்,
-
4:00 - 4:02அதன் கீழ் ஐந்தின் இருபடியையும்,
-
4:02 - 4:04பின் எட்டின் இருபடியையும் சேர்த்தால்,
-
4:04 - 4:06பெரிய செவ்வகத்தை உருவாக்கும் அல்லவா?
-
4:06 - 4:08உங்களிடையே ஒரு கேள்வி கேட்கிறேன்:
-
4:08 - 4:12செவ்வகத்தின் பரப்பளவு என்ன?
-
4:12 - 4:14ஒருவகையில், அதனுள் இருக்கும்
-
4:14 - 4:16சதுரங்களின் பரப்பளவின்
-
4:16 - 4:18கூட்டுத்தொகை அல்லவா?
-
4:18 - 4:20இது நம் எல்லோருக்கும் தெரிந்ததே.
-
4:20 - 4:22இது, ஒன்று, மற்றும் ஒன்று
-
4:22 - 4:24இரண்டு, மூன்று, ஐந்து, எட்டின்
-
4:24 - 4:27இருபடிகளின் கூட்டுத் தொகை அல்லவா?
-
4:27 - 4:28இதுவே, செவ்வகத்தின் பரப்பளவு.
-
4:28 - 4:31மற்றொரு வகையில் செவ்வகத்தின் பரப்பளவு
-
4:31 - 4:34உயரத்தின் மடங்கு அகலத்திற்கு சமம்.
-
4:34 - 4:36இந்த செவ்வகத்தின் உயரம் எட்டு.
-
4:36 - 4:39அகலம் ஐந்து மற்றும் எட்டின் கூட்டு பதிமூன்று.
-
4:39 - 4:43இதுவும் ஒரு Fibonacci எண் ஆகும்.
-
4:43 - 4:47ஆகையால் பரப்பளவு 8 மடங்கு பதிமூன்று.
-
4:47 - 4:49நாம் இரு வழிகளில்
-
4:49 - 4:51செவ்வகத்தின் பரப்பளவைக் கண்டறிந்தோம்.
-
4:51 - 4:53இரண்டு விடைகளும் ஒன்றாகவே இருக்க வேண்டும்.
-
4:53 - 4:56அதனால் தான் ஒன்று, இரண்டு, மூன்று, ஐந்து, எட்டின் இருமடன்கின் கூட்டு
-
4:56 - 4:58எட்டின் மடங்கு பதிமூன்றுக்கு சமம்.
-
4:58 - 5:01இந்த நடைமுறையை பின்பற்றி
-
5:01 - 5:0513 X 21 அளவுள்ள செவ்வகத்தையும்
-
5:05 - 5:0721 X 34 அளவுள்ள செவ்வகத்தையும் உருவாக்கலாம்.
-
5:07 - 5:09இதைப் பாருங்கள்.
-
5:09 - 5:11பதிமூன்றை எட்டால் வகுத்தால்,
-
5:11 - 5:131.625 கிடைக்கும்.
-
5:13 - 5:16பெரிய எண்ணை சிறிய எண்ணால் வகுத்தால்
-
5:16 - 5:19விகிதம் குறைந்து கொண்டே வரும்.
-
5:19 - 5:221.618 போல ஒரு
-
5:22 - 5:25ஒரு அற்புதமான புகழ்பெற்ற எண் கிடைக்கும்.
-
5:25 - 5:28கணித மேதைகளும், அறிவியல் அறிஞர்களும், கலைஞர்களும்
-
5:28 - 5:31காலம் காலமாக கண்டு வியக்கும் அந்த எண்.
-
5:31 - 5:33இவ்வனைத்தையும் உங்களுக்கு இங்கே
-
5:33 - 5:35கூறியதின் நோக்கம், கணித மேதைகள் வியக்கும்
-
5:35 - 5:37கணிதத்தின் இந்த அழகான ஒரு பகுதியை
-
5:37 - 5:39நம் பள்ளிகள்
-
5:39 - 5:41உணர மறந்ததை எடுத்துரைப்பதே ஆகும்.
-
5:41 - 5:44கணிதத்தை மதிப்பீடு செய்ய மட்டுமல்லாமல்
-
5:44 - 5:46பயன்பாட்டுக்கும் கற்க வேண்டும்.
-
5:46 - 5:50அதிலும் மிக முக்கியமான பயன்பாடான
-
5:50 - 5:52சிந்திப்பதற்கு அதைப் பயன்படுத்த வேண்டும்.
-
5:52 - 5:54இந்த உரையின் சாராம்சம் என்னவென்றால்,
-
5:54 - 5:55ஒரு வரியில் கூறவேண்டுமெனில்,
-
5:55 - 5:59கணிதம் என்பது X என்பதற்கு தீர்வு காண மட்டும் அல்ல.
-
5:59 - 6:02ஏன் இந்த தீர்வு என்று ஆராயவும் ஆகும்.
-
6:02 - 6:03மிக்க நன்றி, வணக்கம்.
-
6:03 - 6:08(கைத்தட்டல்)
- Title:
- ஃபிபோனாச்சி எண்களின் மாயாஜாலம்
- Speaker:
- ஆதர் பென்ஜமின்
- Description:
-
கணிதம் என்பது தர்க்கரீதியான செயல்பாட்டுக்கு உதவும் ஒரு அற்புதம் ஆகும். கணித மேதை 'ஆதர் பெஞ்ஜமின்', ஃபிபோனாச்சி எண்களில் ஒளிந்துள்ள அற்புதமான பண்புகளை ஆராய்கிறார். (கணிதம் என்பது ஊக்கமளிக்கும் ஒரு சக்தி என்பதை உணர்த்துகிறார்)
- Video Language:
- English
- Team:
closed TED
- Project:
- TEDTalks
- Duration:
- 06:24
![]() |
Tharique Azeez edited Tamil subtitles for The magic of Fibonacci numbers | |
![]() |
Tharique Azeez edited Tamil subtitles for The magic of Fibonacci numbers | |
![]() |
Tharique Azeez approved Tamil subtitles for The magic of Fibonacci numbers | |
![]() |
Vijaya Sankar N edited Tamil subtitles for The magic of Fibonacci numbers | |
![]() |
Vijaya Sankar N accepted Tamil subtitles for The magic of Fibonacci numbers | |
![]() |
Poongothai Subramanian edited Tamil subtitles for The magic of Fibonacci numbers | |
![]() |
Poongothai Subramanian edited Tamil subtitles for The magic of Fibonacci numbers | |
![]() |
Poongothai Subramanian edited Tamil subtitles for The magic of Fibonacci numbers |