ஆப்பிரிக்கா நான் எழுப்ப முயலும் ஒரு தூங்கும் அரக்கன்
-
0:01 - 0:02எப்படி இருக்கிறீர்கள், மக்களே?
-
0:02 - 0:05நான் ஒரு TED talk - இல் இருப்பதை
என்னால் நம்ப இயலவில்லை. -
0:05 - 0:07இது மிகப் பெரிய விஷயம்
-
0:07 - 0:08ஏனென்றால், இதை தற்போது
-
0:08 - 0:10என் கிராமத்தில் அனைவரும்
பார்க்கின்றனர். -
0:10 - 0:13மற்றும் இதனால், ஒரு மணமகளாக
எனது விலை உயர்ந்திருக்கிறது. -
0:13 - 0:15என் பெயர் அடியோலா ஃபயேஹுன்.
-
0:15 - 0:16நைஜீரியாவை சார்ந்தவள்
-
0:16 - 0:17அமெரிக்கவில் வாழ்கிறேன்.
-
0:17 - 0:20நான் ஒரு இதழியலாளர்,
அல்லது நகைச்சுவையாளர், -
0:20 - 0:21அல்லது ஒரு வசைக்கவிஞர்,
-
0:21 - 0:23உண்மையில், தங்கள் என்ணம் போல்
-
0:23 - 0:25நான், ஒரு பெண்ணாக,
அனைத்தும் அடங்கியவள். -
0:25 - 0:29"கீப்பிங் இட் ரியல் வித் அடியோலா"
வலையொளி நிகழ்ச்சி தொகுப்பாளர் -
0:30 - 0:35இது, ஊழல் மலிந்த
ஆப்பிரிக்கத் தலைவர்களை சுட்டிக்காட்ட -
0:35 - 0:37ஒரு கனிவான, மதிப்புக்குரிய,
மிகவும் நேரடி வழியாகும். -
0:37 - 0:40(காணொலி) குடியரசுத்தலைவர் புகாரி:
என் மனைவியின் கட்சிக்கு தெரியாது. -
0:40 - 0:42ஆனால் அவள் என் சமையலறை கட்சி.
-
0:42 - 0:44அடியோலா ஃபயேஹுன்: கடவுளே!
-
0:44 - 0:45எனக்குத் தண்ணீர் வேண்டும் --
-
0:45 - 0:47சிறிது நீர் வேண்டுமென்றேன்!
-
0:49 - 0:50பார்த்தீர்களா?
-
0:50 - 0:52அடிப்படையில் அவர்களிடம்
சுற்றி வளைப்பதில்லை! -
0:52 - 0:55குறிப்பாக, அவர்கள் தவறும்போது,
அதுவும் அடிக்கடி. -
0:55 - 0:58ஏதேனும் ஆப்பிரிக்க அலுவலர்
இதைப் பார்த்துக் கொண்டிருந்தால் -
0:58 - 1:00நான் உங்களைப் பற்றிப் பேசவில்லை, ஐயா.
-
1:00 - 1:03உங்கள் சக ஊழியர்களைப்
பற்றிப் பேசுகிறேன், ஆம். -
1:03 - 1:07ஏனெனில் ஆப்பிரிக்கா உயர
அனைத்து வளமும் கொண்டுள்ளது. -
1:07 - 1:09நான் வளரும்போது,
-
1:09 - 1:12ஆப்பிரிக்காவை
ஒரு பெரிய கண்டமாக உணர்ந்தேன். -
1:12 - 1:14எங்களிடம் செயல்திறன்கள், அறிவாளிகள்
-
1:14 - 1:18மற்ற எந்தவொரு கண்டத்தையும் விட
இயற்கை வளங்கள் கூடுதலாக உள்ளன. -
1:18 - 1:21ஆப்பிரிக்காவானது
உலகின் 31 விழுக்காடு, -
1:21 - 1:24தங்கம், மாங்கனீசு
மற்றும் யுரேனியத்தையும் -
1:24 - 1:2757 விழுக்காடு உலகின் வைரங்களையும்,
-
1:27 - 1:2913 விழுக்காடு
உலகின் எண்ணெயையும் அளிக்கிறது. -
1:29 - 1:32நாங்கள் உதவிகளையோ, சீனாவிடம்
அல்லது உலக வங்கியிடம் இருந்து -
1:32 - 1:36பணம் கடன்பெறுவதை சார்ந்திருக்க
காரணம் ஏதும் இல்லை. -
1:36 - 1:37ஆனால், நல்ல தலைவர்கள் இன்றி,
-
1:37 - 1:42தன் பறக்கும் திறனை அறியாத
ஒரு கழுகாய் இருக்கிறோம். -
1:42 - 1:43அதற்கு பின் அல்லவா உயர்வது.
-
1:43 - 1:46ஆப்பிரிக்கா ஒரு தூங்கும்
அரக்கனைப் போன்றது. -
1:46 - 1:49உண்மையில் இப்போது, நான்
அந்த அரக்கனை எழுப்ப முயல்கிறேன். -
1:49 - 1:51அதனால்தான் அந்த அரக்கனைப்
பொறுப்பில் வைத்திருப்பவரின் -
1:51 - 1:53தவறுகளை பொதுவெளியில்
அம்பலப்படுத்துகிறேன். -
1:53 - 1:56எங்கள் அரசியல்வாதிகள்,
மதத் தலைவர்கள், -
1:56 - 1:58மிகுந்த மதிப்புடன்,
உறுதியாக, -
1:58 - 2:01ஏனென்றால்,
ஆப்பிரிக்கத் தலைவர்கள் -
2:01 - 2:04அனைத்திற்கும் மேலாக
மரியாதையை விரும்புவர். -
2:04 - 2:06எனவே, அதையும்
துளித்துளியாக வழங்குகிறேன். -
2:06 - 2:08என் நிகழ்ச்சியில்.
-
2:08 - 2:09நான் தலை வணங்குதிறேன்-- ஹா! --
-
2:09 - 2:10மாமா, அத்தை,
-
2:10 - 2:14தேவனே, என பல்வேறு
உறவுமுறைகளை சொல்லி அழைக்கிறேன் -
2:14 - 2:15பிறகு --
-
2:15 - 2:19எங்கள் அறிவுத்திறனை அவமதித்ததற்காக
நான் அவர்களை அவமதிக்கிறேன். -
2:19 - 2:21அவர்களின் பாசாங்குத்தனம் மற்றும்
-
2:21 - 2:24போலி வாக்குகளால்
நாங்கள் களைப்படைந்திருக்கிறோம். -
2:24 - 2:26எடுத்துக்காட்டாக,
-
2:26 - 2:29நைஜீரிய குடியரசு தலைவரின் உறுதி
மருத்துவ சுற்றுலாவிற்கு முடிவு கட்டுவது, -
2:29 - 2:32சேதமுற்ற மருத்துவமனைகளை சரி செய்வதுடன்,
-
2:32 - 2:34புதியவற்றைக் கட்டித்தருவதும்.
-
2:34 - 2:36ஆனால் அவர் என்ன செய்தார்?
-
2:36 - 2:412017இல் இலண்டனில் மருத்துவம் பெற
மூன்று மாதங்கள் செலவழித்தார். -
2:41 - 2:44நாங்கள் மூன்று மாதங்கள்
ஒரு குடியரசுத் தலைவர் இல்லாமல் இருந்தோம். -
2:44 - 2:463 மாதங்கள் குடியரசுத்
தலைவரன்றி இருந்தோம். -
2:46 - 2:49எனவே குடியரசுத் தலைவரை விமர்சிப்பது
என் பணியாயிற்று. -
2:49 - 2:50மிக்க மதிப்புடன், கூறியது
-
2:50 - 2:54"திரு குடியரசு தலைவரே,
நான் உங்கள் பெண், அடியோலா. -
2:54 - 2:56என் நலம் அறீவீர்,
நீர் எப்படி உள்ளீர்? -
2:56 - 2:57உங்களுக்கு வெட்கமே இல்லை."
-
2:57 - 2:59"ஐயா" சேர்க்கவில்லையே
-
2:59 - 3:01"ஐயா, உங்களுக்கு வெட்கமே இல்லை"
-
3:01 - 3:03(யொருபாவில்:உங்களுக்கு இறையச்சமில்லை)
-
3:03 - 3:04உங்களுக்கு இறையச்சமே இல்லை"
-
3:04 - 3:07முப்பத்தைந்தாயிரம் நைஜீரிய மருத்துவர்கள்
தற்பொழுது -
3:07 - 3:10அமெரிக்கா, பிரித்தானியா மற்றும்
கனடாவில் பணிபுறிகின்றனர். -
3:10 - 3:12அளப்பரிய செயல்களை
செய்கின்றனர் -
3:12 - 3:15ஏனெனில் நைஜீரியாவில் அவர்களுக்கு
நல்ல ஊதியமும் அளிக்கப்படுவதில்லை, -
3:15 - 3:17மருத்துவராக இருக்கும் பணியைப் புரிவதற்கு,
-
3:17 - 3:20மற்றும் போதுமான கருவிகளும் இல்லை.
-
3:20 - 3:24இது பல ஆப்பிரிக்க நாடுகளில் நடக்கிறது.
-
3:24 - 3:26எங்களிடம் பறக்கும் திறன் இருக்கிறது.
-
3:26 - 3:31அதனால் எங்களின் நிறைய திறமைகள்
மற்ற கண்டங்களுக்கு -
3:31 - 3:33பறந்து செல்கின்றனர்.
-
3:33 - 3:34எடுத்துக்காட்டாக,
-
3:34 - 3:37இந்த நைஜீரிய மருத்துவர் கருவிலேயே
குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்தார் -
3:37 - 3:39ஆனால் டெக்சாஸில்.
-
3:39 - 3:40மேலும், இந்த நைஜீரிய மருத்துவர்
-
3:40 - 3:45தடகளர்களில் மூளைக் காயத்தினால் ஏற்படும்
நரம்பியல் விளைவுகளை கண்டறிந்தார். -
3:45 - 3:48மற்றும் பல நாடுகள் அவர்களுக்குத்
தங்கப் பதக்கம் பெற -
3:48 - 3:51ஆப்பிரிக்கத் தடகளர்களைக் கொண்டுள்ளனர்.
-
3:51 - 3:52சுவாரஸ்யம் என்னவென்றால்,
-
3:52 - 3:55ஆப்பிரிக்காவைச் கடவுளே சீராக்க
காத்திருக்கிறோம். -
3:55 - 3:58நிஜம், நகைச்சுவை அல்ல.
நாங்கள் கடவுளுக்காகக் காத்திருக்கிறோம். -
3:58 - 4:00புருண்டி குடியரசுத் தலைவரைப் பாருங்கள்.
-
4:00 - 4:02இதழியலாளர்கள், எதிர்கட்சியினரை
சிறை வைக்கிறார். -
4:02 - 4:05ஆனால் தேசிய
வழிபாட்டு நாளை அறிவிக்கிறார், -
4:05 - 4:08அதனால் மக்கள் இறைவனிடம்
நாட்டை சரிசெய்ய வேண்டலாம். -
4:08 - 4:11இவரல்லவா நாட்டைச் சரி செய்ய வேண்டும்?
-
4:11 - 4:13ஓ, இல்லை, இல்லை, இல்லை.
-
4:13 - 4:15கடவுள் தான் சரியாக்க வேண்டும்.
-
4:15 - 4:17நான் எதை எதிர்கொள்கிறேன் என்று புரிகிறதா?
-
4:17 - 4:19நான் உங்களிடம் கூறுகிறேன்.
-
4:19 - 4:22என்றேனும் ஒரு நாள் இவர்கள்
தலையில் இடி இறங்கவிருக்கிறது -
4:22 - 4:24நாம் இதைவிட சிறந்தவர்கள்
-
4:24 - 4:28நம் தலைவர்கள், கடவுளை
காரணம் காட்டுவதை நிறுத்திவிட்டு -
4:28 - 4:32தாங்களாக பொறுப்பேற்க
தொடங்க வேண்டும் -
4:32 - 4:34கடவுள் நம்
தேவை அனைத்தையும் கொடுத்துள்ளார். -
4:34 - 4:37அது இங்கேயே உள்ளது;
நாம் தான் பயன்படுத்த வேண்டும். -
4:37 - 4:40ஆனால் இதுதான்,
நான் செய்வதில் எனக்குப் பிடித்த பகுதி -
4:40 - 4:43பாமர மக்கள் மனதை தொடுவது.
அற்புதமான வேலைகளைச் செய்யும் -
4:43 - 4:45ஆப்பிரிக்கர்களை வெளிக்கொணர்வது,
-
4:45 - 4:48இந்த கென்யப் பெண், வாங்கரி மாத்தாய்,
-
4:48 - 4:52நோபல் அமைதிப் பரிசைப் பெற்ற முதல் ஆப்பிரிக்கப் பெண்
-
4:52 - 4:53மனித உரிமைகளுக்காக போராடியதுடன்
-
4:53 - 4:56பத்து இலட்சம் மரக்கன்றுகளை நட்டார்.
-
4:56 - 4:58மேலும் இந்த ஃசிம்பாப்வே பெண்,
-
4:58 - 4:59முனைவர். டெரேராய் டிரென்ட்.
-
4:59 - 5:0214 - ஆம் வயதில் திருமணம் முடிக்கப்பட்டார்
-
5:02 - 5:04அதுவும் ஒரு பசுவுக்கு ஈடாக.
-
5:04 - 5:07இருந்தும், இந்தப் பெண்
தானே எழுதப்படிக்கக் கற்று -
5:07 - 5:09ஓப்ராவின் நிகழ்ச்சி வரை
சென்றார் -
5:09 - 5:13கடவுளே, ஓப்ராவின் நிகழ்ச்சியை காண
எனக்கும் ஆசை உள்ளது -
5:13 - 5:15ஆயிரக்கணக்கான
ஃசிம்பாப்வே குழந்தைகளுக்காக. -
5:15 - 5:18இப்பெண் இன்று பள்ளிகளை கட்டியுள்ளார்.
-
5:18 - 5:21மேலும், புகழ்பெற்ற
பிரித்தானியக் கட்டிடக்கலைஞர் டேவிட் அட்ஜயே -
5:21 - 5:24உலகைச் சுற்றிலும்
கண்கவர் கட்டிடங்களை வடிவமைத்துள்ளார். -
5:24 - 5:27அவர் ஒரு கானாவியர் மற்றும் தான்சானியர்.
-
5:27 - 5:30அதற்கு நிச்சய காரணம்
அவர் உண்ட -
5:30 - 5:32கானா ஜொல்லோஃப் அரிசி தான்,
-
5:32 - 5:35அது தான், அவருக்கு வடிவமைக்க
ஊக்கமளித்தது. -
5:35 - 5:37அல்லது நைஜீரிய
ஜொல்லோஃப் அரிசியோ, -
5:37 - 5:38நைஜீரிய அரிசி தானே சிறந்தது.
-
5:38 - 5:40எப்படியோ, அவருக்கு அது தான்
-
5:40 - 5:43அவரின் வெற்றிக்கு ஊக்கம் தந்தது.
-
5:43 - 5:45உங்கள் கவனம் இருக்கையில்
-
5:45 - 5:46மேலும் ஒன்று சொல்ல விருப்பம்.
-
5:46 - 5:47சற்று அருகில் வாருங்கள்.
-
5:47 - 5:50சரி, அதிக அருகில் வேண்டாம், அது நல்லது
-
5:50 - 5:52உங்கள் சிலரின் ஆப்பிரிக்க வர்ணனை
-
5:52 - 5:53எனக்கு பிடிக்கவில்லை,.
-
5:53 - 5:55அனைவருமல்ல, உங்களில் சிலர்.
-
5:55 - 5:56குறிப்பாக நீங்கள்.
-
5:56 - 5:59முதலில், அது ஒரு நாடல்ல,
அது ஒரு கண்டம் -
5:59 - 6:01எனக்கு உகாண்டா பவுலைத் தெரியாது.
-
6:01 - 6:04ஃசிம்பாப்வே ரெபேக்காவைத் தெரியாது.
-
6:04 - 6:06நியூ யார்க் - ஃபிரான்சு
தொலைவை போன்றதே, -
6:06 - 6:08நைஜீரியாவில் ஃசிம்பாப்வேயின் தொலைவும்.
-
6:08 - 6:11குறிப்பாக மேற்கத்தியக் கருணையை வேண்டும்
நிர்வாண கூட்டம் அல்ல. -
6:11 - 6:13உங்கள் அனைவரின் புரிதலும் தவறு.
-
6:13 - 6:15சிங்கங்கள் எங்கள்
தெருக்களில் உலவவில்லை, சரியா? -
6:15 - 6:17இன்னும் சொல்லலாம்
-
6:17 - 6:19ஆனால் உங்களுக்கு
இந்நேரம் புரிந்திருக்கும். -
6:19 - 6:20அதனால் நான் என் வழியில்
-
6:20 - 6:22ஆப்பிரிக்க தூங்கும் அரக்கனை
எழுப்பி -
6:22 - 6:25உலக அரங்கில் அதன் சரியான இடத்தில்
வைக்க முயல்கையில், -
6:26 - 6:27நீங்களும் உங்கள் பங்கைச் செய்யலாம்.
-
6:27 - 6:30தயவுசெய்து அதிகமாக கவனியுங்கள்.
-
6:30 - 6:32உங்கள் ஆப்பிரிக்க நண்பர்களைக் கேளுங்கள்.
-
6:32 - 6:34கற்பனை யூகங்கள் இன்றி
-
6:34 - 6:37அவர்கள் சொல்வதை கேளுங்கள்.
-
6:37 - 6:39ஆப்பிரிக்கப் புத்தகங்களைப் படியுங்கள்.
-
6:39 - 6:41ஓ, கடவுளே,
ஆப்பிரிக்கப் படங்களைப் பாருங்கள். -
6:41 - 6:42அல்லது குறைந்த பட்சம்,
-
6:42 - 6:46எங்கள் 54 அழகிய நாடுகள்
சிலவற்றின் பெயர்களைக் கற்றுக்கொள்ளுங்கள். -
6:46 - 6:49ஆம் சரிதான். 54, குழந்தாய், ஐந்து-நான்கு.
-
6:49 - 6:51சரி மக்களே! இது எல்லாமே உண்மை.
-
6:51 - 6:52உண்மையாகவே இருக்கட்டும்.
-
6:52 - 6:54மீண்டும் உங்களை
சந்திக்கும் வரை -
6:54 - 6:55அமைதி நிலவட்டும்.
- Title:
- ஆப்பிரிக்கா நான் எழுப்ப முயலும் ஒரு தூங்கும் அரக்கன்
- Speaker:
- அடியோலா ஃபயேஹுன்
- Description:
-
"ஆப்பிரிக்கா ஒரு தூங்கும் அரக்கனைப் போன்றது" என இந்த நகைச்சுவையான, கூர்மையான பேச்சின் தொடக்கத்தில் இதழியலாளர் மற்றும் வசையாளர் அடியோலா ஃபயேஹுன் சொல்கிறார். உண்மையில் நான் இந்த அரக்கனை எழுப்ப முயலும் வேளையில், அதன் பொறுப்பில் உள்ளவர்களின் தவறுகளை பொதுவெளியில் அம்பலப்படுத்துகிறேன்". ஊழல்மலிந்த ஆப்பிரிக்க அரசியல்வாதிகளை சாடுவதுடன், அவர்கள் பொறுப்பெடுத்துக் கொள்ளத் தொடங்கினால், இந்தக் கண்டம் உலகத்தளத்தில் தனக்குரிய சரியான இடத்தைப் பெறவல்லது எனபதையும் சுட்டிக்காட்டுகிறார்.
- Video Language:
- English
- Team:
closed TED
- Project:
- TEDTalks
- Duration:
- 07:09
![]() |
TED Translators admin approved Tamil subtitles for Africa is a sleeping giant -- I'm trying to wake it up | |
![]() |
Ahamed Shyam F accepted Tamil subtitles for Africa is a sleeping giant -- I'm trying to wake it up | |
![]() |
Ahamed Shyam F edited Tamil subtitles for Africa is a sleeping giant -- I'm trying to wake it up | |
![]() |
Ahamed Shyam F edited Tamil subtitles for Africa is a sleeping giant -- I'm trying to wake it up | |
![]() |
Ahamed Shyam F edited Tamil subtitles for Africa is a sleeping giant -- I'm trying to wake it up | |
![]() |
Ahamed Shyam F edited Tamil subtitles for Africa is a sleeping giant -- I'm trying to wake it up | |
![]() |
Ahamed Shyam F edited Tamil subtitles for Africa is a sleeping giant -- I'm trying to wake it up | |
![]() |
Ahamed Shyam F edited Tamil subtitles for Africa is a sleeping giant -- I'm trying to wake it up |