Return to Video

மீயிணைப்பு எப்படி எல்லாவற்றையும் மாற்றியது

  • 0:00 - 0:02
    நான் என்னிடம் சிந்தித்தது ஞாபகம் உள்ளது:
  • 0:02 - 0:05
    "நாம் தொடர்புக்கொள்வதை இது முற்றிலுமாக
    மாற்ற போகிறது."
  • 0:05 - 0:07
    [சிறிய கருத்து.]
  • 0:07 - 0:08
    [பெரிய பொருள்.]
  • 0:09 - 0:12
    [மீயிணைப்பைப் பற்றி
    மார்கரெட் கோல்ட் ஸ்டியூவர்ட்]
  • 0:12 - 0:14
    மீயிணைப்பு என்பது ஒரு இடைமுக உறுப்பாகும்.
  • 0:14 - 0:16
    இதன் பொருள் என்னவென்றால்,
  • 0:16 - 0:19
    உங்கள் திறன்பேசியில் அல்லது கணினியில்
    மென்பொருளை நீங்கள் பயன்படுத்தும் போது
  • 0:19 - 0:21
    அதன் பின்னணியில் பெரிய நிரலாக்கம் உள்ளது.
  • 0:21 - 0:25
    இந்நிரல், மென்பொருளைக் கையாள தேவைப்படும்
    வழிமுறைகளை கணினியிடம் தருகிறது.
  • 0:25 - 0:28
    ஆனால் நபர்களாகிய நாம் செயலாற்றுவது
    இடைமுகத்தின் கூட மட்டுமே:
  • 0:28 - 0:31
    இதை அழுத்தும் போது, ஏதாவது
    விளைவாகும்.
  • 0:31 - 0:33
    முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட போது,
    இவை எளிதாக இருந்தன,
  • 0:33 - 0:36
    அழகாக இல்லை.
  • 0:36 - 0:39
    இன்று, வடிவமைப்பாளர்களிடம் பல்வேறு
    விருப்பத்தேர்வுகள் உள்ளன.
  • 0:40 - 0:44
    இம்மீயிணைப்பு குறியீட்டு மொழி எனப்படும்
    ஒன்றை பயன்படுத்துகிறது — எச்டிஎம்எல்.
  • 0:44 - 0:46
    ஒரு சிறிய நிரல் சரம் உள்ளது.
  • 0:46 - 0:50
    அதன் பிறகு, நபரை வழிகாட்ட விரும்பும்
    திசையை உள்ளிட வேண்டும்.
  • 0:50 - 0:53
    இதை செய்யக் கற்றுக்கொள்வது
    உண்மையில் மிகவும் சுலபமாகும்.
  • 0:53 - 0:58
    இதனால், இணையத்தின் மூலைகளில்
    உள்ள மேற்கோள்களே தான்
  • 0:58 - 1:00
    மீயிணைப்பின் களப்பெயராகும்.
  • 1:01 - 1:02
    நான் பள்ளியில் இருந்த போது —
  • 1:02 - 1:06
    இணைய அணுகல் பரவாலானதன் முன்பு —
  • 1:06 - 1:08
    நான் ஆராய்ச்சி கட்டுரை எழுத முயன்றால்,
  • 1:08 - 1:11
    நூலகத்தை நோக்கி நடக்க தேவைப்பட்டது.
  • 1:11 - 1:13
    அங்கு எனக்கு தேவைப்பட்ட நூல்
    உண்டதென்றால் நல்லது.
  • 1:13 - 1:15
    சில நேரங்களில், அதை முன்பதிவு செய்ய
  • 1:15 - 1:17
    வேண்டியதால், சேர பல வாரங்கள் ஆனது.
  • 1:17 - 1:19
    இன்றைய காலத்தில், இதைப் பற்றி யோசிப்பது
    பைத்தியமாக தெரிகிறது,
  • 1:20 - 1:23
    ஏனெனில், அனைத்து மாபெரும் ஆக்கங்களைப் போல்,
  • 1:23 - 1:25
    ஒன்று கையில் கிடைத்த பின்பு
    சற்று நேரத்தில்
  • 1:25 - 1:27
    அதை பெரிதாகவே கருத மாட்டோம்.
  • 1:27 - 1:29
    1945 ஆம் ஆண்டில்,
  • 1:29 - 1:31
    வண்ணேவர் புஷ் என்று ஒருவர் இருந்தார்.
  • 1:31 - 1:33
    அவர் அமெரிக்க அரசுக்கு பணிபுரிந்தார்.
  • 1:33 - 1:36
    அவர் முன்வைத்த ஒரு கருத்து என்னவென்றால்,
  • 1:36 - 1:38
    "மனிதர்களாகிய நாம் ஏராளமான
    தரவை உண்டாக்குவதால்,
  • 1:38 - 1:41
    நாம் படித்த அனைத்து நூல்களையும்
    முக்கிய கருத்துக்களின் இடையே உள்ள
  • 1:41 - 1:44
    இணைப்புகளையும் கண்காணிக்க
    இயலாமல் இருக்கின்றோம்" என்பது.
  • 1:44 - 1:46
    "மீமெக்ஸ்" என பெயரிடப்பட்ட இந்த
  • 1:46 - 1:49
    கருத்தின்படி, தங்களுக்கு அணுகலில்லாத
    நூல்களையும்
  • 1:49 - 1:53
    கட்டுரைகளையும் சேமித்து, ஒரு தனியார்
    நூலகத்தை உண்டாக்கலாம்.
  • 1:53 - 1:57
    வளங்களை இணைப்பது பலர் கற்பனைகளை
    தூண்டிவிட்ட கருத்தானது.
  • 1:57 - 1:59
    பின்பு, 1960களில்,
  • 1:59 - 2:02
    டெட் நெல்சன் அவர்கள் சானாதூ திட்டத்தை
    வெளியிட்டு,
  • 2:02 - 2:04
    அதன் பின்பு,
  • 2:04 - 2:07
    "வெறும் நான் வைத்திருப்பதால் நான்
    கட்டுப்படுத்தப்படாமல், ஒரு
  • 2:07 - 2:10
    பல கருத்துக்களை என்னால் இணைக்க இயன்றால்
    என்னவாகும்?" என்றார்.
  • 2:11 - 2:14
    1982 ஆம் ஆண்டில், மேரிலாந்து
    பல்கலைக்கழகத்தில் இருந்த
  • 2:14 - 2:16
    ஆராய்ச்சியாளர்கள் "ஹைப்பர்டைஸ்"
    எனப்பட்ட அமைப்பை
  • 2:16 - 2:20
    உருவாக்கி, வரியையே ஒரு உரலிக் காட்டியாக
    முதல்முறையாக பயன்படுத்தினர்.
  • 2:20 - 2:23
    ஒரு சாம்பல்நிற பின்னணியில் நீலநிற
    உரலியை வைத்தால்
  • 2:23 - 2:25
    நிறத்தின் முரண்பாடு நன்றாக செயல்பட்டு,
    சுலபமாக
  • 2:25 - 2:27
    தெரியப்படும் என அறிந்துகொண்டனர்.
  • 2:27 - 2:30
    1987 ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம்
    ஹைப்பர்கார்டை உருவாக்கியது.
  • 2:31 - 2:33
    பல அட்டைகள் குவித்து வைக்கப்பட்டன.
  • 2:33 - 2:35
    அட்டைகளின் இடையே இணைப்புகளை
    பயன்படுத்த இயன்றது.
  • 2:35 - 2:40
    ஒரு கதையின் ஓரிடத்தில் இருந்து இன்னொரு
    இடத்திற்கு குதிக்க ஹைப்பர்கார்ட்
  • 2:40 - 2:43
    வழிகாட்டியது. இந்த நேரிலி கதைச்சொல்லல்
    முறைகள், மீயிணைப்பின்
  • 2:43 - 2:46
    வருகையால் ஒரு மிகப்பெரிதாக
    உயரப்பட்டன.
  • 2:46 - 2:50
    ஏனெனில், ஒரு கதையை கட்டும் சக்தி
    மக்களிடம் வழங்கியது.
  • 2:50 - 2:52
    மற்றவையுடன், இக்கதைகளும் ஆக்கங்களும்,
  • 2:53 - 2:56
    உலகளாவிய வலையை உருவாக்கிய
    டிம் பர்னர்சு-லீ அவர்களை ஊக்குவித்தது.
  • 2:57 - 3:00
    மீயிணைப்பு என்பது ஒரு
    லெகோ குற்றியை போல்
  • 3:00 - 3:04
    உணரப்படுகிறது. பல இணைப்புகளை கொண்ட
    வலையை கோர்க்கும் இந்த எளிய கட்டிடக் குற்றி
  • 3:04 - 3:06
    உலகமெங்கும் இருக்கிறது.
  • 3:06 - 3:09
    முதல்முறையில் மீயிணைப்புகள்
    கட்டப்பட்ட முறையினால்,
  • 3:09 - 3:12
    பலரால் பயன்படுத்த நோக்கமிடப்பட்டவை
    மட்டும் இல்லாமல், இவை பலரால்
  • 3:12 - 3:15
    உருவாக்கப்பட்டவையாகவும் உள்ளன.
  • 3:15 - 3:19
    என்னை பொறுத்தவரை, இது மிகவும்
    ஜனநாயகமான வடிவமைப்பாகும்.
Title:
மீயிணைப்பு எப்படி எல்லாவற்றையும் மாற்றியது
Speaker:
மார்கரெட் கோல்ட் ஸ்டியூவர்ட்
Description:

மீயிணைப்பு என்பது இணையத்தின் லெகோ குற்றியாகும். இது பயனர் அனுபவ நிபுணர் மார்கரெட் கோல்ட் ஸ்டியூவர்ட் அவர்களால் தெளிவாக்கப்பட்ட மீயிணைப்பின் விசித்திர வரலாறு ஆகும்.

more » « less
Video Language:
English
Team:
closed TED
Project:
TED Series
Duration:
03:33

Tamil subtitles

Revisions