< Return to Video

அடிப்படைப் பெருக்கல் 5: 2 இலக்க எண் முறை 2 இலக்க எண்

  • 0:00 - 0:03
    அடிப்படையான கணக்குகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த நாம்,
  • 0:03 - 0:06
    இந்தக் காணொளில் சற்றே பெரிய கணக்கை.....
  • 0:06 - 0:07
    இரண்டு இலக்க எண்களை மற்றொரு இரண்டு இலக்க எண் கொண்டு பெருக்கப் போகிறோம்.
  • 0:07 - 0:10
    பெருக்கலின் அடிப்படையைப் புரிந்து கொண்ட நமக்கு.
  • 0:10 - 0:13
    இரண்டு இலக்கங்களைப் பெருக்குவது கடினமான செயலல்ல.
  • 0:13 - 0:14
    இரண்டு இலக்கங்களைத் தொடர்ந்து மேலும் சில கடினமானக் கணக்குகளையும் பார்க்கலாம்.
  • 0:14 - 0:16
    சென்ற காணொளியில், ஒரு நான்கு இலக்க எண்ணை,
  • 0:16 - 0:19
    ஓரிலக்க எண்ணால் பெருக்கினோம்.
  • 0:19 - 0:23
    அதே போன்று ஐந்து இலக்க எண்ணைப் பெருக்குவது குறித்துப் பார்க்கலாம்.
  • 0:23 - 0:34
    64,329 என்ற எண்ணை
  • 0:34 - 0:37
    நாம் எதைக்கொண்டு...... எதைக் கொண்டு....
  • 0:37 - 0:41
    ம்..ம்... 4 -ஐக் கொண்டு பெருக்கிப் பார்க்கலாம்
  • 0:41 - 0:42
    முன்னர் பெருக்கிய அதே முறையில் தான்.
  • 0:42 - 0:45
  • 0:45 - 0:48
    -
  • 0:48 - 0:51
    முதலில், இறுதி எண்ணான 9 ஐ நான்கைக் கொண்டு பெருக்கினால் என்ன கிடைக்கும்.
  • 0:51 - 0:56
    விடை 36 தானே...
  • 0:56 - 0:57
    18 பெருக்கல் 2 ஐப் போல. முப்பத்து ஆறு.
  • 0:57 - 0:58
  • 0:58 - 1:02
    அதனால், 6 ஐ இங்கே வைத்துக்கொண்டு 3 -ஐ எடுத்துக் கொள்கிறோம்.
  • 1:02 - 1:06
    3 ஐ மேலே எழுதிக் கொண்டு, அடுத்து, 4 ஐ 2 ஆல் பெருக்குகிறோம்.
  • 1:06 - 1:09
  • 1:09 - 1:11
    அதனுடன் 3 ஐக் கூட்ட வேண்டும்.
  • 1:11 - 1:12
  • 1:12 - 1:17
    4 பெருக்கல் 2, கூட்டல் 3. முதலில் பெருக்கிக் கொள்வது தான் சரி.
  • 1:17 - 1:18
    இந்த செய்முறைப் பயிற்சியை நாம் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
  • 1:18 - 1:22
    எப்பொழுதும் பெருக்கல் தான் முதலில் செய்ய வேண்டியது.
  • 1:22 - 1:23
    சரி, 4 பெருக்கல் 2 என்பது 8,
  • 1:23 - 1:27
    உடன் மூன்றைக் கூட்டினால் 11.
  • 1:27 - 1:32
    ஒன்றை இங்கே வைத்து விட்டு அடுத்த ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • 1:32 - 1:35
    அடுத்து, நான்கு பெருக்கல் மூன்று
  • 1:35 - 1:39
  • 1:39 - 1:40
    நான்கு பெருக்கல் மூன்று, விடை பன்னிரண்டுடன்
  • 1:40 - 1:43
    நம்மிடம் உள்ள ஒன்றைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.
  • 1:43 - 1:44
  • 1:44 - 1:47
    இப்போது நமக்குக் கிடைத்த விடை
  • 1:47 - 1:50
    13.
  • 1:50 - 1:54
    அடுத்து, 4 பெருக்கல் நான்கு
  • 1:54 - 1:57
  • 1:57 - 1:58
    முன்பு செய்தப் பெருக்கலில் கிடைத்த
  • 1:58 - 2:00
  • 2:00 - 2:01
    ஒன்றையும் இதனுடன் சேர்த்துக் கூட்டினால் கிடைப்பது,
  • 2:01 - 2:04
    அதாவது, 4 x 4 = 16 கூட்டல் 1 என்றால்
  • 2:04 - 2:06
    அது 17 ற்குச் சமமாகும்.
  • 2:06 - 2:10
    இந்த 7 - ஐ இங்கே எழுதிக்கொண்டு, 1 எடுத்துக் கொள்ளலாம்.
  • 2:10 - 2:13
  • 2:13 - 2:16
    கடைசியாக, 4 பெருக்கல் 6. கூட்டல் 1.
  • 2:16 - 2:18
  • 2:18 - 2:22
  • 2:22 - 2:22
    விடை என்ன..?
  • 2:22 - 2:25
    4 முறை 6 என்பது, 24 கூட்டல் ஒன்று
  • 2:25 - 2:27
    இது 25 ஆகும்.
  • 2:27 - 2:28
    வழக்கம் போல 5 -ஐக் கீழே வைத்துக் கொள்வோம்.
  • 2:28 - 2:30
    பெருக்கலுக்கு வேறு எண் இல்லை என்பதால்
  • 2:30 - 2:32
    இந்த 2 -ஐ மேலே கொண்டு செல்ல வழியில்லை.
  • 2:32 - 2:34
    அதனால் இந்த 2 -ஐ நேரடியாக இங்கேயே போட்டுக் கொள்வோம்.
  • 2:34 - 2:40
    எனவே, 64,329 முறை 4 என்பது
  • 2:40 - 2:45
    257,316 ஆகும்.
  • 2:45 - 2:48
    மூன்று இலக்கத்திற்குப் பின்னால் போட்டிருக்கும் காற்புள்ளியானது
  • 2:48 - 2:49
    எண்ணுரு முறைப்படி ஆறு இலக்கத்தைச் சொல்வதற்கு உதவியாக இருக்கும்.
  • 2:49 - 2:51
    எனவே இங்கு பயன்படுத்துகிறோம்.
  • 2:51 - 2:55
    இந்த காற் புள்ளிக்கு இடது பக்கம் வருவதெல்லாம் ஆயிரங்களாகும்.
  • 2:55 - 2:56
    அதனால், இது ஏழாயிரம் ஆகும்.
  • 2:56 - 2:58
    ஒருவேளை காற்புள்ளி இங்கே இருந்திருந்தால்,
  • 2:58 - 3:01
    அது ஆயிரமாயிரம் ஆகும்.
  • 3:01 - 3:02
    இந்தக் கணக்கு நமக்குப் புரிந்து விட்டது இல்லையா...?
  • 3:02 - 3:07
    எனவே நாம் அடுத்தக் கட்டத்திற்குச் சென்று விடுவோம்.
  • 3:07 - 3:10
  • 3:10 - 3:11
    இதுவொன்றும் அவ்வளவு கடினமானதல்ல.....
  • 3:11 - 3:14
    நாம் பார்த்த கணக்கின் அடுத்த படிநிலையாகக் கருதலாம்.
  • 3:14 - 3:15
    ஒரு இலக்க எண்ணைக் கொண்டு
  • 3:15 - 3:18
    பல இலக்க எண்களைப் பெருக்கி இருக்கிறோம்.
  • 3:18 - 3:22
    அடுத்து நாம் காணப்போவது,
  • 3:22 - 3:28
    இரண்டு இலக்க எண்ணை, இரண்டு இலக்க எண் கொண்டுப் பெருக்குவது.
  • 3:28 - 3:30
  • 3:30 - 3:31
    இரண்டு இலக்க எண்களை எழுதிக் கொள்வோம்.
  • 3:31 - 3:36
    36 பெருக்கல் 23.
  • 3:36 - 3:38
    முதலில், 3 என்ற எண் மட்டும் இருப்பதாகக் கருதி,
  • 3:38 - 3:40
    இந்தக் கணக்கைத் தொடங்குவோம்.
  • 3:40 - 3:43
    இப்போதைக்கு 2 ஐ மறந்து விடுவோம்.
  • 3:43 - 3:48
    எனவே, 3 பெருக்கல் 6 என்பது 18 ஆகும்.
  • 3:48 - 3:52
    எனவே, இந்த 8 -ஐ இங்கே கீழே வைத்துக்கொண்டு, ஒன்றை எடுத்துக் கொள்வோம்.
  • 3:52 - 3:54
  • 3:54 - 3:59
    அடுத்து மூன்று பெருக்கல் மூன்று 9 ஆகும்.
  • 3:59 - 4:04
    இந்த ஒன்பதுடன் கைவசம் உள்ள ஒன்றைக் கூட்டினால்
  • 4:04 - 4:06
    9 + 1 என்பது 10 ஆகும்.
  • 4:06 - 4:08
    எனவே, அந்த 10 -ஐ அங்குப் போட்டுக் கொள்வோம்.
  • 4:08 - 4:09
    வேறு எதுவும் இல்லை.
  • 4:09 - 4:10
    0 -ஐ அங்கு போட்டுக் கொள்வோம்.
  • 4:10 - 4:13
    இந்த 1 ஐப் போடுவதற்கு வேறு எண் இல்லை ஆதலால் 10 என்றே போட்டுக் கொள்வோம்.
  • 4:13 - 4:17
    நாம் இந்தக் கணக்கை,
  • 4:17 - 4:19
    இதை வேறு நிறத்தில் எழுதிக் கொள்வோம்.
  • 4:19 - 4:23
    இந்தக் கணக்கில் ஒரு இலக்கத்தை முடித்து விட்டோம்.
  • 4:24 - 4:25
  • 4:25 - 4:27
    இன்னும் இங்குஒரு இரண்டு.... அதாவது 20 உள்ளது.
  • 4:27 - 4:28
    -
  • 4:28 - 4:31
    20 பெருக்கல் 36 என்ன என்பதைக் கணக்கிட வேண்டும்.
  • 4:31 - 4:33
  • 4:33 - 4:37
    இந்த இரண்டு பத்தின் இடத்தில் உள்ளது.
  • 4:37 - 4:39
    எனவே இதன் மதிப்பு உண்மையில் 20 ஆகும்.
  • 4:39 - 4:42
    ஆகையால் இந்த 0 -ஐக் கீழே எழுதிக் கொள்வோம்.
  • 4:42 - 4:45
  • 4:45 - 4:49
    இந்த முறையைப் பின்பற்றுவதற்கான காரணத்தைப் பின்னர் பார்ப்போம்.
  • 4:49 - 4:50
    இப்போது, நாம் முன்னர் 3 ஆல் பெருக்கியது போல்,
  • 4:50 - 4:51
    இதையும் பெருக்குவோம்.
  • 4:51 - 4:53
    இப்பொழுது 2 ஆல் பெருக்கி வரும் எண்ணை
  • 4:53 - 4:55
    இடது பக்கமிருந்து நிரப்பிக் கொண்டு செல்ல வேண்டும்.
  • 4:55 - 4:58
    இரண்டு பெருக்கல் ஆறு,
  • 4:58 - 4:59
  • 4:59 - 5:00
    தெரிந்த வாய்ப்பாடு தானே....
  • 5:00 - 5:02
    பன்னிரண்டு.
  • 5:02 - 5:04
  • 5:04 - 5:07
    இதில் கிடைத்த ஒன்றை மேலே எழுதவேண்டும்.
  • 5:07 - 5:10
    இந்த 1, நமது முந்தைய கணக்கிலிருந்து பெறப்பட்டதாகும்.
  • 5:10 - 5:11
  • 5:11 - 5:15
  • 5:15 - 5:16
  • 5:16 - 5:18
  • 5:18 - 5:20
  • 5:20 - 5:21
  • 5:21 - 5:24
    நாம் 2 பெருக்கல் 6, 12 எனப் பார்த்தோம்.
  • 5:24 - 5:25
    அந்த 2 ஐ இங்கே எழுதிக் கொள்வோம்.
  • 5:25 - 5:26
    1 மேலே எழுதலாம்.
  • 5:26 - 5:28
  • 5:28 - 5:30
  • 5:30 - 5:32
    இப்பொழுது மூன்றை இரண்டால் பெருக்க வேண்டும்.
  • 5:32 - 5:38
    இது ஆறு.
  • 5:38 - 5:41
    இதனுடன் பழைய ஒன்றைக் கூட்ட வேண்டும்.
  • 5:41 - 5:43
    நமக்குக் கிடைப்பது ஏழு.
  • 5:43 - 5:45
    இது 7 ஆகும்.
  • 5:45 - 5:47
    2 பெருக்கல் 3 கூட்டல், 1 என்பது 7.
  • 5:47 - 5:51
    நமக்குக் கிடைத்த எழுநூற்று இருபதை
  • 5:51 - 5:53
    இங்கே எழுதிக் கொள்வோம்.
  • 5:53 - 5:54
    இது எப்படிக் கிடைத்தது?
  • 5:54 - 5:58
    அதாவது, 36 பெருக்கல் 20.
  • 5:58 - 6:02
    720 ஆகும்.
  • 6:02 - 6:03
    இந்த காரணத்தால் தான்
  • 6:03 - 6:05
    நாம் இந்த 0 -ஐ இங்கு எழுதி வைத்துள்ளோம்.
  • 6:05 - 6:08
    இந்த பூஜ்ஜியத்தை இங்கு எழுதவில்லை என்றால், நமக்கு 2 மட்டுமே இருந்திருக்கும்.
  • 6:08 - 6:12
    விடை 720 -க்குப் பதிலாக 72 மட்டுமே கிடைத்திருக்கும்.
  • 6:12 - 6:15
  • 6:15 - 6:16
    ஆனால், இது 2 அல்ல.
  • 6:16 - 6:18
    இது பத்தின் இடத்தில் உள்ள 2 என்பதால்
  • 6:18 - 6:19
    20 ஆகும்.
  • 6:19 - 6:21
    எனவே நாம் 20 ஐ 36 ஆல் பெருக்க வேண்டும்.
  • 6:21 - 6:23
    அதனால் நமக்கு இங்கு 720 கிடைத்தது.
  • 6:23 - 6:27
    எனவே, 36 முறை 23
  • 6:27 - 6:28
    இதனை மாற்றி எழுதிக் கொள்வோம்.
  • 6:28 - 6:32
  • 6:32 - 6:34
  • 6:34 - 6:35
    முதலில் நாம் இந்த கணக்கை முடித்து விடுவோம்.
  • 6:35 - 6:38
    அதன் பிறகு கணக்கு செய்யும் முறையைப் பார்க்கலாம்.
  • 6:38 - 6:42
    இந்த மூன்று பெருக்கல் 36 இன் 108 ஐயும் 36 பெருக்கல் 20, 720 ஐயும் கூட்டிக் கொள்வோம்.
  • 6:42 - 6:44
    8 கூட்டல் பூஜ்ஜியம் 8.
  • 6:44 - 6:46
    பூஜ்ஜியம் கூட்டல் 2 என்பது 2
  • 6:46 - 6:49
    1 கூட்டல் 7 என்பது 8. மொத்தம் 828
  • 6:49 - 6:52
    எனவே, 36 பெருக்கல் 23 என்பது 828 ஆகும்.
  • 6:52 - 6:55
    இப்பொழுது கணக்கிடும் முறையைப் பார்க்கலாம்.
  • 6:55 - 6:59
    சற்று முன் பார்த்தோம் 36 பெருக்கல் 3 என்பது 108.
  • 6:59 - 7:00
  • 7:00 - 7:04
    அடுத்து 36 பெருக்கல் 20 என்பது 720
  • 7:04 - 7:06
    இரண்டையும் கூடினால் நமது விடை கிடைத்து விட்டது.
  • 7:06 - 7:09
    இந்தக் கணக்கை இப்படியும் மாற்றி எழுதலாம்.
  • 7:09 - 7:15
  • 7:15 - 7:16
  • 7:16 - 7:23
    இதனை நாம் 36 முறை (20+3) என்றும் எழுதலாம்.
  • 7:23 - 7:26
    கணக்குப் பகிர்வு முறையை நாம் தெரிந்திருந்தால்
  • 7:26 - 7:28
    இதை நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
  • 7:28 - 7:35
    இது, அதாவது, 36 x (20+3) என்பது,
  • 7:35 - 7:39
    (36 x 20) + (36 x 3) என்பதற்குச் சமமாகும்.
  • 7:39 - 7:41
    ஒருவேளை இது குழப்பத்தை ஏற்படுத்தினால் விட்டு விடலாம்.
  • 7:41 - 7:43
    ஆனால் புரிந்து வைத்துக் கொண்டால் நல்லது.
  • 7:43 - 7:44
    இதன் மூலமாக நாம் ஒன்றைக் கற்றுக் கொள்கிறோம்.
  • 7:44 - 7:47
    36 பெருக்கல் 20, 720 என்று பார்த்தோம்.
  • 7:47 - 7:51
    36 ஐ மூன்றால் பெருக்கினால் கிடைப்பது 108 என்பதும் நமக்குத் தெரியும்.
  • 7:51 - 7:52
    இரண்டையும் கூட்டினால் நமக்குக் கிடைப்பது என்ன?
  • 7:52 - 7:55
    828 சரியா....?
  • 7:55 - 7:56
    நமக்கு 828 கிடைத்து விட்டதா...?
  • 7:56 - 7:57
    ஆம். 828 கிடைத்து விட்டது.
  • 7:57 - 7:59
  • 7:59 - 8:00
    இதை இன்னும் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
  • 8:00 - 8:07
    இதனை நாம், (30 கூட்டல் 6) x (20 பெருக்கல் 3) என்றும் எழுதிக் கணக்கிடலாம்.
  • 8:07 - 8:09
    இதையும் செய்து பார்த்து விட்டால்
  • 8:09 - 8:11
    நமக்கு உதவியாக இருக்கும்.
  • 8:11 - 8:13
    குழப்பமாக இருந்தால் விட்டுவிடலாம்.
  • 8:13 - 8:15
    ஆனால் புரிந்து கொண்டால், நல்லது தானே.
  • 8:15 - 8:17
    சரி இப்போது நாம் ஆறை மூன்றால் பெருக்குவோம்.
  • 8:17 - 8:20
    இது பதினெட்டு.
  • 8:20 - 8:21
    18 என்பது 10 + 8 ஆகும்.
  • 8:21 - 8:25
    இங்கு 8, மற்றும் இந்த 10 -ஐ எழுதிக் கொள்வோம்.
  • 8:25 - 8:26
    இங்குள்ள மற்றவற்றை விட்டு விடுவோம்.
  • 8:26 - 8:28
    முப்பது பெருக்கல் மூன்று
  • 8:28 - 8:32
    90 ஆகும்.
  • 8:32 - 8:35
    90 கூட்டல் 10 என்பது 100 ஆகும்.
  • 8:35 - 8:41
  • 8:41 - 8:42
    இதில் ஏதும் குழப்பமில்லையே..
  • 8:42 - 8:44
  • 8:44 - 8:48
    கணக்குகளை எளிதாக்கிப் புரிந்து கொண்டால் தான் எப்போதும் நினைவில் இருக்கும்.
  • 8:48 - 8:49
    சரி, நாம் இப்போது 20 -ஐப் பெருக்கலாம்.
  • 8:49 - 8:52
  • 8:52 - 8:56
    20 முறை 6 என்பது 120 ஆகும்.
  • 8:56 - 9:02
    இதனை 20 கூட்டல் 100 என்றும் சொல்லலாம்.
  • 9:02 - 9:05
    அந்த 100 -ஐ மேலே எழுதிக் கொள்வோம்.
  • 9:05 - 9:08
    20 பெருக்கல் 30, இவை இரண்டையும் பெருக்குவது எளிது தானே.
  • 9:08 - 9:11
    இங்கே 2 லும் 3 லும் இரண்டு பூஜ்ஜியங்கள் உள்ளன.
  • 9:11 - 9:13
    இரண்டையும் மூன்றையும் பெருக்கி
  • 9:13 - 9:16
    கிடைக்கும் தொகையுடன் இரண்டு பூஜ்ஜியங்களைச் சேர்த்தால் 600 ஆகும்.
  • 9:16 - 9:19
    ஆகவே 20 பெருக்கல் 30 என்பது 600.
  • 9:19 - 9:23
    இதனுடன் முன்னர் இருக்கிற 100 ஐக் கூட்டினால் கிடைப்பது, 700 ஆகும்.
  • 9:23 - 9:24
    இவற்றை எல்லாம் கூட்டிக் கொள்வோம்.
  • 9:24 - 9:26
  • 9:26 - 9:27
    ஆக, 100 கூட்டல் 700.
  • 9:27 - 9:33
    கூட்டல் 20 கூட்டல் 8, எல்லாம் சேர்ந்துக் கிடைப்பது, 828 ஆகும்.
  • 9:33 - 9:36
    இந்த முறையில் தான் நாம் இங்கே 36 பெருக்கல் 23 க்கான விடையைக் கண்டுபிடித்தோம்.
  • 9:36 - 9:39
    நாம் முதலில் பூஜ்ஜியத்தில் ஆரம்பித்து, அடுத்தடுத்து கூட்டிக் கொண்டே சென்றோம்.
  • 9:39 - 9:41
    இப்போதைக்குக் குழப்பமாகத் தோன்றினாலும்
  • 9:41 - 9:44
    ஓரிரு கணக்குகளைச் செய்து பார்த்தால் எளிதில் புரிந்து விடும்.
  • 9:44 - 9:46
    இதே போன்று மேலும் சில உதாரணங்களைப் பார்ப்போம்.
  • 9:46 - 9:47
  • 9:47 - 9:50
  • 9:50 - 9:52
    இப்பொழுது, பெருக்குவதற்கு எடுத்துக் கொள்கிற எண் 77.
  • 9:52 - 9:53
    இது கொஞ்சம் சுவாரஸ்யமான கணக்கு.
  • 9:53 - 9:57
    77 பெருக்கல் 77 என்ன என்பதைப் பார்க்கலாம்.
  • 9:57 - 10:00
    7 முறை 7 என்பது 49.
  • 10:00 - 10:04
    4 ஐ மேலே எழுதிக் கொள்ளலாம்.
  • 10:04 - 10:06
    மீண்டும் 7 பெருக்கல் 7 என்பது, 49.
  • 10:06 - 10:10
    முன்னர் மீதமிருக்கும் நான்கைக் கூட்டினால் கிடைப்பது 53.
  • 10:10 - 10:12
    இந்த ஐந்தினை எழுத வேறெங்கும் எழுத முடியாது. எனவே இங்கேயே எழுதிக் கொள்வோம்.
  • 10:12 - 10:14
    7 முறை 7 என்பது 49 ஆகும்.
  • 10:14 - 10:16
    கூட்டல் 4 என்பது 53.
  • 10:16 - 10:18
    இங்கு ஒரு பூஜ்ஜியத்தைப் போட்டுக் கொள்வோம்.
  • 10:18 - 10:19
    இப்பொழுது இந்த 7 -ஐப் பெருக்க
  • 10:19 - 10:22
    இங்கு ஒரு பூஜ்ஜியத்தைப் போட்டுக் கொள்ளலாம்.
  • 10:22 - 10:23
    இங்கு இருப்பதை அழித்து விடுவோம்.
  • 10:23 - 10:24
    குழம்பி விடக் கூடாது.
  • 10:24 - 10:26
    7 பெருக்கல் 7 என்பது 49.
  • 10:26 - 10:28
    இங்கு 9 என்று எழுத வேண்டும்.
  • 10:28 - 10:30
    4 மேலே செல்கிறது.
  • 10:30 - 10:32
    7 முறை 7 எனது 49
  • 10:32 - 10:36
    கூட்டல் 4, மொத்தம் 53.
  • 10:36 - 10:41
    77 ஐ நாம் ஏழால் பெருக்கியபோது நமக்கு கிடைத்த விடை 539.
  • 10:41 - 10:46
    அடுத்து 77 ஐ 70 ஆல் பெருக்குகிற போது நமக்குக் கிடைப்பது 5390 ஆகும்!
  • 10:46 - 10:47
    இங்கே நாம் கவனிக்க வேண்டியது
  • 10:47 - 10:49
    இரண்டிற்கும் இடையில் உள்ள வித்தியாசமான பூஜ்ஜியத்தை.
  • 10:49 - 10:51
    இது பத்தின் கூறாகும்.
  • 10:51 - 10:54
    இறுதியாக அனைத்தையும் கூட்டினால் என்ன கிடைக்கும்.
  • 10:54 - 10:58
    9 கூட்டல் பூஜ்ஜியம் 9.
  • 10:58 - 11:01
    3 கூட்டல் 9 என்பது 12.
  • 11:01 - 11:02
    1 -ஐ மேலே கொண்டு செல்லலாம்.
  • 11:02 - 11:04
    1 கூட்டல் 5 என்பது 6. 6 கூட்டல் 3 என்பது 9 ஆகும். நம்மிடம் இங்கே 5 உள்ளது. எனவே, 5929 ஆகும்.
  • 11:04 - 11:09
    ஆக, இரண்டு இலக்க எண்ணை மற்றொரு இரண்டு இலக்க எண்ணால் பெருக்கும் முறையைத் தெரிந்து விட்டோம்.
Title:
அடிப்படைப் பெருக்கல் 5: 2 இலக்க எண் முறை 2 இலக்க எண்
Description:

2 இலக்க எண்ணை 2 இலக்க எண்ணால் பெருக்கும் முறை

more » « less
Video Language:
English
Duration:
11:15

Tamil subtitles

Revisions