றிச்சாட் சென். ஜோன் இன் வெற்றியின் 8 இரகசியங்கள்
-
0:00 - 0:03உண்மையில் உயர்கல்லூரி மாணவர்களுக்கு நான் நிகழ்த்தும் 2 மணித்தியால செற்பொழிவு இது.
-
0:03 - 0:04இங்கு 3 நிமிடங்களுக்குள் நிகழ்த்தவுள்ளேன்.
-
0:04 - 0:07இது ஒரு நாள் நான் விமானத்தில் டெட்டுக்கு போகும் போது தொடங்கியது.
-
0:07 - 0:087 ஆண்டுகளுக்கு முன்பு.
-
0:08 - 0:09எனது இருக்கைக்கு அருகில்
-
0:09 - 0:13ஒரு உயர்கல்லூரி மாணவி, பதின்ம வயது,
-
0:13 - 0:15அவள் ஏழை குடும்பத்தை சேர்ந்தவள்.
-
0:15 - 0:18அவளுக்கு வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டியிருந்தது,
-
0:18 - 0:19அவள் எளிமையான கேள்வி ஒன்றை என்னிடம் கேட்டாள்.
-
0:19 - 0:21அவள் கேட்டாள், ”வெற்றிக்கு வழிவகுப்பது என்ன?” என்று
-
0:21 - 0:23நான் மிகவும் கூனிக்குறுகிப்போனேன்,
-
0:23 - 0:25ஏனென்றால் என்னால் நல்ல பதிலை வழங்கமுடியாமல் போய்விட்டது.
-
0:25 - 0:28நான் விமானத்தில் இருந்து இறங்கி டெட்க்கு போனேன்.
-
0:28 - 0:31அப்போது யோசித்தேன், ஜிஸ், நான் வெற்றியாளர்கள் கூடியிருக்கும் இடத்துக்கு நடுவில் அல்லவா இருக்கிறேன்.
-
0:31 - 0:34அவர்கள் வெற்றி பெற உதவியது எது என்று அவர்களிடம் கேட்டு
-
0:34 - 0:36ஏன் அந்த சிறுவர்களுக்கு சொல்லகூடாது?
-
0:36 - 0:40ஆகவே நாங்கள் இங்கே, ஏழு ஆண்டுகள், 500 நேர்காணல்களுக்கு பிறகு,
-
0:40 - 0:43வெற்றிக்கு வழியமைப்பன எவை என நான் உங்களுக்கு சொல்லுவதோடு
-
0:43 - 0:45எது டெட் ஜ சேர்ந்தவர்களை ஒருங்கிணைக்கிறது என்பதையும் சொல்கிறேன்.
-
0:45 - 0:47மிகையான ஆர்வமே முதலாவது.
-
0:47 - 0:50பிரிமான் தொமஸ் சொல்வார், ”நான் எனது மிகுந்த ஆர்வத்தினாலேயே உந்தப்பட்டுள்ளேன்”.
-
0:50 - 0:53டெட் ஜ சேர்ந்தவர்களும் ஆர்வத்தினாலேயே வேலை செய்கிறார்கள், அவர்கள் பணத்துக்காக செய்யவில்லை.
-
0:53 - 0:56கரோல் கொலேட் சொல்வார்,”நான் செய்யும் வேலையை யாராவது செய்து தருவதாயின் அவர்களுக்கு பணக்கொடுப்பனவு செய்யத்தயார்.”
-
0:56 - 0:58சுவாரசியமான விடயம் என்னவென்றால்,
-
0:58 - 1:00நீங்கள் விருப்பத்துடன் வேலை செய்வீர்களானால், பணம் எவ்வகையிலேனும் வந்து சேரும்.
-
1:00 - 1:04உழைப்பு! ருபட் முர்டொச் எனக்கு சொன்னார், ”இங்கு எல்லாமே கடின உழைப்பு தான்.
-
1:04 - 1:06சுலபமாக எதுவும் வராது. ஆனால் இதில் நான் கேளிகையடைகிறேன்.”
-
1:06 - 1:10அவர் கேளிகை எனறா சொன்னார்? ருபட்? ஆம்!
-
1:10 - 1:14டெட் ஜ சேர்ந்தவர்கள் கடினமாக உழைக்கிறார்கள் அதோடு வேலையில் கேளிகையும் கொள்கிறார்கள்.
-
1:14 - 1:17அவர்கள் வேலைக்கு அடிமையானவர்கள் அல்ல. வேலையில் ஆர்வமுள்ளவர்கள் என நான் அனுமானித்தேன்.
-
1:18 - 1:24நல்லது! அலெக்ஸ் கார்டன் சொல்வார், ”வெற்றியாளர் ஆக உங்களை ஏதாவது ஒன்றினில் ஈடுபடுத்துங்கள்
-
1:24 - 1:25அதில் நல்ல தேர்ச்சியைப் பெறுங்கள்”.
-
1:25 - 1:28அங்கு ஒரு மாயமும் இல்லை, தேவையானது பயிற்சி, பயிற்சி, பயிற்சி.
-
1:28 - 1:31மனஒருமைப்பாடு!. நோர்மன் யுவிஸன் அப்படித்தான் எனக்கு சொன்னார்,
-
1:31 - 1:34”நீங்கள் ஒரு விடயத்தில் கவனமெடுப்பதே செய்யவேண்டியது என நான் நினைக்கிறேன்.”
-
1:34 - 1:38தள்ளு! டேவிட் கால்லோ சொல்வார், ” உங்களை தள்ளுங்கள்.
-
1:38 - 1:40நீங்கள் உங்களை உடல்ரீதியாக, மனரீதியாக தள்ள வேண்டும்.”
-
1:40 - 1:43உங்களை பயந்த சுபாவம் மற்றும் சுய-சந்தேகங்களில் இருந்து தள்ளுங்கள்.
-
1:43 - 1:46கோல்டீ கவன் சொல்வார், ”எனக்கு எப்பவுமே சுய சந்தேகம் இருந்தது.
-
1:46 - 1:48நான் போதுமான அளவு நல்லாயில்லை, நான் போதுமான அளவு திறமையாகவில்லை.
-
1:48 - 1:50நான் இதை செய்திருப்பேன் என்று நினைக்கவில்லை.”
-
1:50 - 1:52இதுபோல் உங்களை எப்போதும் தள்ளுவதும் இலகுவானது அல்ல,
-
1:52 - 1:57அதுதான் அவர்கள் அம்மாவை கண்டுபிடித்துள்ளார்கள். (சிரிப்பு)
-
1:57 - 2:00”என் அம்மா என்னை தள்ளினார்.” என்று
-
2:00 - 2:01பிராங் கிகெரி எனக்கு சொன்னார்.
-
2:02 - 2:07சேவை! சேர்வின் நுலண்ட் சொல்வார், ”வைத்தியராக சேவையாற்றுவது என்பது ஒரு வரப்பிரசாதம்.”
-
2:07 - 2:10தற்போது அனேக சிறுவர்கள் தாம் கோடிஸ்வரர்களாக வேண்டும் என என்னிடம் சொல்கிறார்கள்.
-
2:10 - 2:11நான் அவர்களிடம் முதலாவதாக சொல்லும் விடயம்,
-
2:11 - 2:13”சரி, நல்லது நீங்கள் உங்களுக்காக சேவை செய்யமுடியாது,
-
2:13 - 2:15நீங்கள் மற்றவர்களுக்கு சேவையாற்றுவதினால் ஏதாவது பெறுமதியை வழங்கவேண்டும்.
-
2:15 - 2:18ஏனென்றால் உண்மையில் செல்வந்தர்கள் அப்படித்தான் உருவானார்கள்.”
-
2:19 - 2:23எண்ணங்கள். டெட் இல் உள்ளவர் பில் கேட்ஸ் சொல்வார், ”எனக்கு ஒரு எண்ணம் இருந்தது.
-
2:23 - 2:26முதலாவது மைக்ரோ-கணணி மென்பொருள் நிறுவனத்தை நிறுவுவது.”
-
2:26 - 2:28நான் சொல்வேன் அது ஒரு அழகான நல்ல எண்ணம்.
-
2:28 - 2:31படைப்பாற்றலினால் எண்ணங்களை உருவாக்குவதில் எந்த மாயமுமில்லை,
-
2:31 - 2:33இது சில சின்ன விடயங்களைச் செய்வது மட்டுமே.
-
2:33 - 2:35இதோ நிறைய சான்றுகளைத் தருகிறேன்.
-
2:35 - 2:37விடாமுயற்சி. ஜோ றூஸ் சொல்வார்,
-
2:37 - 2:40”எங்களது வெற்றிக்கு விடாமுயற்சியே முதலாவது காரணம்.” என்று
-
2:40 - 2:44தோல்வியிருந்து விடாமுயற்சியினால் மீளவேண்டும். சி.ஆர்.ஏ.பி இலிருந்து விடாமுயற்சியினால் மீளவேண்டும்.
-
2:44 - 2:47அது கருதுவது என்னெவெனில் ”குற்றச்சாட்டு, மறுக்கப்படல், அலட்சியப்படுத்தல் மற்றும் அழுத்தம்.”
-
2:47 - 2:49(சிரிப்பு)
-
2:50 - 2:54ஆகவே, அந்த பெரிய கேள்விக்கான விடை இலகுவானது:
-
2:54 - 2:574000 டொலரைக் கொடுத்து டெட்டுக்கு வாருங்கள்.
-
2:57 - 3:00அல்லது அப்படி முடியாவிட்டால், இந்த எட்டு விடயங்களையும் செய்யுங்கள் -- என்னை நம்புங்கள்,
-
3:00 - 3:04இந்த பெரிய எட்டு விடயங்களும் வெற்றிக்கு வழிவகுக்கும்.
-
3:04 - 3:06டேட்டைச் சேர்ந்தவர்களே! உங்களது நேர்காணல்களுக்கா நன்றி
- Title:
- றிச்சாட் சென். ஜோன் இன் வெற்றியின் 8 இரகசியங்கள்
- Speaker:
- Richard St. John
- Description:
-
ஏன் பலர் வெற்றியடைகிறார்கள்? அவர்கள் திறமைசாலிகள் என்பதினாலா? அல்லது அவர்கள் அதிர்டசாலி என்பதாலா? இல்லை. வெற்றியின் உண்மையான இரகசியங்களை ஆய்வாளரான றிச்சாட் சென். ஜோன்ஸ், அவர் செய்த பலவருட நேர்காணல்களை சுருக்கமாக 3 நிமிட படவில்லைக்காட்சியாக தருகிறார். இது தவிர்க்கக் முடியாத ஒன்று.
- Video Language:
- English
- Team:
closed TED
- Project:
- TEDTalks
- Duration:
- 03:13