< Return to Video

மில்லியன் சுறாக்கள்

  • 0:12 - 0:18
    கடலில் வாழும் பயங்கரமான விலங்கு சுறா.அதனால் அதைச் சாப்பிடுவதற்கு எதற்கும் தைரியம் இருக்காது.
  • 0:18 - 0:22
    அப்படியானால், கடல், சுறாவால் நிறைந்திருக்குமே.அப்படி ஏன் இல்லை?
  • 0:22 - 0:26
    அந்தக் கேள்விக்குப் பதில்" உணவுச் சங்கிலி".
  • 0:26 - 0:30
    உணவுச் சங்கிலியைப் புரிந்து கொள்ள முதலில் நாம் உணவு,சக்தி இவைகளைப் புரிந்து கொள்ளவேண்டும்.
  • 0:30 - 0:33
    நாம் சக்தியைப் பெறுவதற்கு உணவை,காலை,மதிய இரவு உணவுகளாக உண்கிறோம்.
  • 0:33 - 0:34
    கிடைக்கும் சக்தியை என்ன செய்கிறோம்?
  • 0:34 - 0:38
    வேலை செய்யப் பயன்படுத்துகிறோம்.
  • 0:38 - 0:41
    நம் வளர்ச்சிக்குத் தேவைப்படுகிறது.
  • 0:41 - 0:42
    உன் மேல் எப்படியுள்ளது
  • 0:42 - 0:43
    கொஞ்சம் சூடாக உள்ளதா?
  • 0:43 - 0:48
    உணவுப் பொருட்கள் பிரிபடும்பொழுது உண்டாகும்
  • 0:48 - 0:51
    சக்தியில் கொஞ்ச பாகம் வெப்பமாகி வீணாகிறது.உணவில் உள்ள சக்தியை நம் உடல் வளர்ச்சிக்கும்
  • 0:51 - 0:56
    வேலை செய்வதற்கும்மற்றும் வெப்பம்,கழிவுகள் உண்டாவதற்கும் பயன்படுத்துகிறோம்.
  • 0:56 - 1:02
    கடல் தாவரங்களும் அவைகளுக்கு வேண்டிய சக்தியை உணவிலிருந்து பெறுகின்றன.அவை சாப்பிடும் உணவுகளை வைத்து அவற்றைப் பிரிக்கலாம்.
  • 1:02 - 1:06
    உணவை உற்பத்தி செய்யும் உயிரினங்கள் தொழிற்சாலை போன்று தங்கள் உணவை தாங்களே தயாரிக்கின்றன.
  • 1:06 - 1:18
    உதாரணத்திற்கு கடற்பாசிகள்,நுண்ணிய மிதவைத் தாவரநுண்ணுயிர்கள் இவைகள் சூரிய வெளிச்சம் மற்றும் தங்கள் சூழலில் கிடைக்கும் சக்திகளைக் கொண்டுஉணவைத் தயாரிக்கின்றன.
  • 1:18 - 1:22
    நுகர்வோர் பங்கில் உணவு தயாரிப்பதில்லை.மற்ற உயிரினங்களை அழித்து சாப்பிடப்படுகிறது.
  • 1:22 - 1:28
    நுகர்வோர் பக்கம் மனிதர்கள்.அதே போல் நீர் நாய்.சுறா,மீன்.நீர்க்கீரி,கடல் முள்ளெலி போன்றவையும் மற்ற உயிரினங்களை உண்ணுகிறது.
  • 1:28 - 1:33
    சில உயிரினங்கள் கழிவுகள்,இறந்த உயிரினங்களின் உடல்கள் போன்றவற்றை உண்கிறது.
  • 1:33 - 1:36
    இவைகள் சிதைப்பிகள் ஆகும்.உதாரணம் இறால்மீன்,பாக்டீரியா.
  • 1:36 - 1:39
    இவ்வாறு வெவ்வேறு குழுக்கள் உணவுச் சங்கிலியால் இணைக்கப்படுகிறது.
  • 1:39 - 1:42
    உணவுச்சங்கிலியின் மூலம் சுற்றுச்சூழலில் எது எதை உண்கிறது என்பது தெரியும்.
  • 1:42 - 1:45
    உணவைத் தயாரிக்கும் உற்பத்தியாளரிடமிருந்து ஆரம்பிக்கிறது உணவுச்சங்கிலி.உற்பத்தியாளர்கள், முதல் குரூப் நுகர்வோரால் உண்ணப்படுகிறது
  • 1:45 - 1:53
    .முதல் குரூப் இரண்டாவது குரூப் நுகர்வோரால் உண்ணப்படுகிறது.பின் மூன்றாவது நான்காவதால் உண்ணப்படுகிறது.
  • 1:53 - 1:59
    (உ.ம்) கடற்பாசி>கடல்முள்ளெலி>நீர்க்கீரி > சுறா என்ற ரீதியில் உணவுச் சங்கிலி தொடர்கிறது.
  • 1:59 - 2:04
    அல்லது தாவரமிதவை நுண்ணுயிர்கள் > மீன்> கடல்நாய் > சுறா
  • 2:04 - 2:08
    விலங்குகள் வித்தியாசமாக இருந்தாலும் கருத்து ஒன்றாக உள்ளது.
  • 2:08 - 2:12
    உணவுச்சங்கிலி, உற்பத்தியாளரில் ஆரம்பித்து நுகர்வோரில் முடிகிறது.
  • 2:12 - 2:12
    ஏன் அப்படி?
  • 2:12 - 2:15
    உணவுச்சங்கிலி யார் யாரைச் சாப்பிடுகிறார்கள் என்பதை மட்டும் தெரிவிக்காது.
  • 2:15 - 2:21
    சக்தியை நாம் சாப்பிடும் உணவிலிருந்து பெறுகிறோம்.உணவுச் சங்கிலி உணவுத் தொடரைக் காட்டுகிறது.
  • 2:21 - 2:26
    உணவுச் சங்கிலி உற்பத்தியாளரிடமிருந்து ஆரம்பிக்கக் காரணம் அவைதான் சூரிய வெளிச்சத்தைப் பயன்படுத்தி முதலில் உணவைத் தயாரிக்கிறது.
  • 2:26 - 2:30
    இந்த உணவுதான் உணவுச் சங்கிலியில் வரும் மற்ற உணவுகளுக்கு மூலகாரணம்.
  • 2:30 - 2:38
    உணவை உயிரினங்கள் வளர்ச்சிக்கும் உடல் பருமனுக்கு மட்டும் உபயோகப்படுத்துவதில்லை.வேலை செய்வதற்கும் மற்ற கழிவுகள் வெப்பத்தை ஏற்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.
  • 2:38 - 2:44
    நுகர்வோர் பங்கில் வளர்ச்சிக்கான சக்தியை மட்டும்தான் பெறமுடியும்.
  • 2:44 - 2:48
    ஆகவே பத்து சதவிகித அளவு சக்திதான் உணவுச் சங்கிலியில் அடுத்ததிற்கு மாற்றப்படுகிறது.
  • 2:48 - 2:56
    சக்தி மாற்றம் எவ்வளவு என்று கணக்கிட்டால் பிரமிட் அளவு ஆகும்.
  • 2:56 - 3:01
    உற்பத்தியாளர்கள் பிரமிடின் அடித்தளம்.ஏனெனில் உணவைத் தயாரிப்பதால்.
  • 3:01 - 3:08
    உணவுத் தொடரில் கீழுள்ள நுகர்வோர் வேலை,வெப்பம்,கழிவு இவற்றிற்காக சக்தியை செலவிட்டுவிடுவதால் பிரமிடின் மேலுள்ள நுகர்வோர்க்கு சக்தி அதிகம் கிடைப்பதில்லை.
  • 3:08 - 3:14
    உணவுத் தொடர் மாதிரியில் முதல்,இரண்டாவது,மூன்றாவது நுகர்வோர் மட்டும் உள்ளனர்.
  • 3:14 - 3:18
    நான்கு ,ஐந்து இல்லை.
  • 3:18 - 3:20
    ஏனெனில் அவைகளுக்கு அதிகஉணவுச் சக்திகிடைப்பது இல்லை.
  • 3:20 - 3:28
    சுறாவைச் சாப்பிட ஆள்இல்லை என்றாலும் ஏன் அதன் தொகை கடலில் அதிகமாவதில்லை என்பது புரிந்திருக்கும்
  • 3:28 - 3:32
    அதன் தொகை அதிகமானால் தேவையான உணவும்
  • 3:32 - 3:33
    சக்தியும் அவைகளுக்குக் கிடைக்காது.
  • 3:33 - 3:37
    உணவுச் சங்கிலியில் சுறாதான் நுகர்வோரில் அதிக பங்கு வகிக்கிறது.
  • 3:37 - 3:44
    ஏனென்றால் நீ கேரட்,மாட்டிரைச்சி என பலவகையான உணவுகளை உண்பதுபோல் மற்ற விலங்குகளும் பலவிதமான உணவுகளை உண்கின்றன.
  • 3:44 - 3:48
    நீர்நாய், சிப்பிமீன்கள்,பென்குவின் இவைகளைச் சாப்பிடுகிறது.மீன்,நத்தைகள் கடற்பாசிகளைச் சாப்பிடுகின்றன.
  • 3:48 - 3:52
    இவ்வாறு சுற்றுச் சூழல் உணவுச் சங்கிலியில் வித்தியாசங்கள் உள்ளது.
  • 3:52 - 3:55
    உணவுச் சங்கிலிகளை இணைத்து உணவுவலை உண்டுபண்ணலாம்.
  • 3:55 - 4:03
    சுற்றுச் சூழலின் நிலையை படம்பிடித்தாற்போல் உணவுவலை காட்டுகிறது.
  • 4:03 - 4:09
    துரதிஷ்டமாக கடல் சார்ந்த உணவுவலையைப் பொறுத்தவரை மனிதனின் தாக்கம் அதிகம்.
  • 4:09 - 4:11
    ஒரு விதத்தில் நாம் சுறாவின் தொகையைக் குறைத்துவிட்டோம்.
  • 4:11 - 4:18
    சுறா மீன்களை அதன் சிறகுகளுக்காக (சூப் தயாரிக்க)அல்லது சூரை மீன்களை பிடிக்கும்பொழுது தவறுதலாக வலையில் மாட்டி அழிகின்றன.
  • 4:18 - 4:22
    இவ்வாற நூறு மில்லியன் சுறாக்கள்வரை ஒவ்வொரு வருடமும் கொல்லப்படுகின்றன.
  • 4:22 - 4:29
    சுவிட்சர்லேண்ட்,கனடா,கம்போடியா,டென்மார்க்,ஆஸ்ட்ரேலியா,ஜிம்பாவே ஆகிய நாடுகளின் மக்கட்தொகைக்கு சமம் அதன் இறப்புத் தொகை.
  • 4:29 - 4:33
    நுகர்வோர் பக்கம் சுறாக்கள்தான் அதிகம்.இது நல்லதில்லை.
  • 4:33 - 4:36
    அப்படியென்றால் சுறாக்கள் மற்ற உயிரினங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
  • 4:36 - 4:43
    உதாரணத்திற்கு எல்லா சுறாக்களையும் அழித்துவிட்டால் நீர்நாய்கள் பெருகி மீன்கள் இனத்தை அழித்துவிடும்
  • 4:43 - 4:46
    சுற்றுச் சூழல் பாழாகிவிடும்.
  • 4:46 - 4:47
    ஆகவே சுறாக்களைப் பாதுகாக்க நீ என்ன செய்யவேண்டும்?
  • 4:47 - 4:50
    முதலில் சுறாக்களின் சிறகு சூப்புகளைக் குடிக்காதே.
  • 4:50 - 4:53
    மீன்களை மட்டுமே பிடிக்கும் வலைகளில் உள்ள மீன்களை வாங்கி உண்.
  • 4:53 - 4:58
    சுறாக்கள் நுகர்வோர் பங்கில் அதிகம் இருந்தாலும் அவைகளும் மனிதர்களைப் போல்தான்.
  • 4:58 - 5:02
    உணவுச் சங்கிலியை அழிக்கக் கூடாது என விரும்பினால் உண்பதில் நாம் பொறுப்பாக இருக்க வேண்டும்.
Title:
மில்லியன் சுறாக்கள்
Description:

உற்பத்தியாளர்கள் + சிதைப்பிகள் + நுகர்வோர்=உணவுச்சங்கிலி

more » « less
Video Language:
English
Duration:
05:13
Om Prakaash Pandiyaraju edited Tamil subtitles for A Million Sharks
Om Prakaash Pandiyaraju edited Tamil subtitles for A Million Sharks
Om Prakaash Pandiyaraju edited Tamil subtitles for A Million Sharks
Om Prakaash Pandiyaraju edited Tamil subtitles for A Million Sharks
Om Prakaash Pandiyaraju edited Tamil subtitles for A Million Sharks
Om Prakaash Pandiyaraju edited Tamil subtitles for A Million Sharks
Om Prakaash Pandiyaraju edited Tamil subtitles for A Million Sharks
Om Prakaash Pandiyaraju edited Tamil subtitles for A Million Sharks
Show all

Tamil subtitles

Revisions