-
ஒழுங்கற்ற பின்னங்களை கலப்பு எண்களாக, மற்றும்
-
எதிர்மாறாக எவ்வாறு மாற்ற வேண்டும் என்று பார்ப்போம்.
-
முதலில் இதன் பெயர்க்காரணங்களை கூறுகிறேன்.
-
கலப்பு எண்கள் என்றால் என்ன ?
-
நீங்கள் பார்த்திருக்க கூடும்,
-
உதாரணமாக, 2 மற்றும் 1/2.
-
இது ஒரு கலப்பு எண்.
-
இதை ஏன் கலப்பு எண் என்று கூறுகிறோம்?
-
ஏனென்றால், இதில் ஒரு முழு எண்ணையும் ஒரு பின்னத்தையும் கலக்கிறோம்.
-
ஆகையால், இது கலப்பு எண் எனப்படுகிறது.
-
ஒரு முழு எண், ஒரு பின்னத்துடன் கலந்துள்ளது.
-
எனவே, இது 2 மற்றும் 1/2.
-
2 1/2 என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறன்.
-
2 1/2 என்கிற எண் 2 க்கும் 3 க்கும் இடையில் இருக்கும்.
-
ஒழுங்கற்ற பின்னம் என்றால் என்ன?
-
ஒரு பின்னத்தில் தொகுதி எண் பகுதி எண்ணை
-
விட பெரியதாக இருந்தால் அது ஒரு ஒழுங்கற்ற பின்னம்.
-
ஒழுங்கற்ற பின்னத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு,
-
நான் ஒரு எண்ணை எழுதுகிறேன்.
-
என்னிடம் 23/5 உள்ளது.
-
இது ஒரு ஒழுங்கற்ற பின்னம்.
-
ஏன்?
-
ஏனென்றால் 23, 5 ஐ விட பெரிய எண்.
-
இது மிக சுலபமானது.
-
ஒழுங்கற்ற பின்னங்களை கலப்பு எண்களாகவும் , மற்றும்
-
கலப்புப் எண்களை ஒழுங்கற்ற பின்னங்களாகவும்
மாற்றலாம் .
-
முதலில் கலப்பு எண்களை ஒழுங்கற்ற பின்னங்களாக
-
மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.
-
எனவே, முதலில் இதன் செய்முறையை கூறுகிறேன்.
-
இது எப்பொழுதும் சரியான விடையை தான் தரும்.
-
அது எப்படி என்று நான் உங்களுக்கு கூறுகிறேன்.
-
2 1/2 வை ஒழுங்கற்ற பின்னமாக மாற்ற வேண்டும் என்றால்
-
அல்லது இதன் கலவையை பிரிக்க வேண்டும் எனலாம்.
-
அந்த கலப்பு எண்ணின் பகுதி எண்ணை, அதன் முழு எண்ணுடன் பெருக்க வேண்டும்.
-
பின்னர் அதை தொகுதி எண்ணுடன் கூட்டவேண்டும்
-
எனவே, அதை செய்யலாம்.
-
சில எடுத்துக்காட்டுகளுக்கு பிறகு,
-
உங்களுக்கு இது சுலபாக புரியும்.
-
எனவே, 2x2 = 4, 4+1 = 5.
-
இதை எழுதிக் கொள்ளலாம்.
-
இது 2x(2+1) ஆகும்.
-
இது தான் இதன் தொகுதியாகும்.
-
இதன் பகுதியில் மாற்றம் இருக்காது.
-
எனவே, இது 5/2 ஆகும்.
-
எனவே, 2 1/2 = 5/2 ஆகும்.
-
இன்னொரு கலப்பு எண்ணை எடுத்துக்கொள்வோம்
-
என்னிடம் 4 2/3 இருக்கிறது.
-
இதன் பகுதி எண் மூன்று ஆகும்.
-
பகுதி எண்ணில் மாற்றமில்லை.
-
இந்த புது தொகுதி (3x4)+2 என ஆகும்.
-
எனவே, இது 3 x 4, அதன்பின்பு 2 ஆல் கூட்ட வேண்டும்.
-
எனவே, இது 3x4---
-
எப்பொழுதும் பெருக்கலை, முதலில் செய்ய வேண்டும்.
-
பிறகு நான் கூறியவாறு செய்யலாம்.
-
3x4=12....12 + 2 = 14...
-
எனவே இது 4 2/3 = 14/3 ஆகும்.
-
மேலும் ஒரு எடுத்துக்காட்டு.
-
என்னிடம் 6 17/18 உள்ளது.
-
இது சற்று கடினமானது.
-
அதே போல் பகுதி எண் மாறாது.
-
18 என்ற தொகுதி எண்ணுடன் 6 ஐ பெருக்க வேண்டும்
-
அல்லது 6 x 18, கூட்டல் 17.
-
6 பெருக்கல் 18.
-
இது 60+48, எனவே இது 108 ஆகும்.
-
108 + 17,
-
அனைத்தும் 18 -ன் மேல்.
-
(108+17) / 18 = 125/18.
-
6 17/18 = 125/18.
-
மேலும் சில எடுத்துக்காட்டுகள்.
-
பிறகு, இதை மாறாக எவ்வாறு செய்வது என்று கூறுகிறேன்.
-
அதாவது, ஒழுங்கற்ற பின்னத்தை கலப்பு எண்ணாக மாற்றுவது.
-
இதற்கும் நான் உங்களுக்கு ஒரு செய்முறை தருகிறேன்.
-
2 1/4.
-
இதை எனது செய்முறையின் படி பார்த்தால்,
-
இது (4x2)+1 -ன் கீழ் நான்கு.
-
எனவே இது, 4 x 2 + 1 = 9. 9/4 ஆகும்.
-
இது ஏன் சரியாக இருக்கிறது என்றால்,
-
2 மற்றும் 1/4 என்பது, நான் இதை வரைகிறேன்,
-
இது இவ்வாறு தோற்றமளிக்கும்.
-
இதை கேக் என்று நினைக்கலாம்.
-
இது ஒரு கேக்.
-
இது இரண்டாவது.
-
இது நான்கில் ஒன்று என கூறலாம்.
-
இது நான்கில் ஒரு பங்கு.
-
இது 2 மற்றும் 1/4.
-
இது தசமப்புள்ளி இல்லை.
-
இதை அழித்து விடுகிறேன்.
-
இது கேக்-ன் துண்டுகள்.
-
எனவே, இது 2 மற்றும் 1/4 ஆகும்.
-
இப்பொழுது இது எத்தனை பகுதி கேக்குகள் உள்ளன?
-
இந்த ஒவ்வொரு கேக்-ஆயும் எடுத்துக்கொண்டால்.
-
இதன் நிறத்தை மாற்றி விடுகிறேன்.
-
இதில் ஒவ்வொரு கேக்-ஐயும் எடுத்துக்கொள்ளலாம்.
-
இதை நான்கு பகுதியாக பிரிக்கலாம்.
-
இப்பொழுது எத்தனை பகுதிகள் இருக்கிறது என்று பார்க்கலாம்.
-
நம்மிடம், 1,2,3,4,5,6,7,8,9 பகுதிகள் உள்ளன
-
புரிகிறதா?
-
2 மற்றும் 1 /4 என்பது 9/4 ஆகும்.
-
இது அனைத்து பின்னங்களுடனும், சரியாக இருக்கும்.
-
இப்பொழுது எதிர்மாறான வழியில் செல்லலாம்.
-
ஒழுங்கற்ற பின்னத்தை கலப்பு எண்ணாக
-
எவ்வாறு மாற்றவேண்டும் என்று சிந்திப்போம்.
-
என்னிடம் 23/5 இருக்கிறது.
-
இப்போதில் எதிர் வழியில் செய்ய வேண்டும்.
-
நாம் இதன் பகுதியை எடுக்க வேண்டும்.
-
இது நமது தொகுதியில் எத்தனை முறை செல்லும்?
-
பிறகு, அதன் மீதத்தை கண்டறிய வேண்டும்.
-
23, 5 ஆல் வகுபடும்.
-
5, 23 -ல் நான்கு முறை செல்லும்.
-
5x4=20
-
மீதம் 3 கிடைக்கும்
-
23/5 என்பது
-
4 + 3/5 = 4 3/5 ஆகும்.
-
எனவே இது நான்கு மற்றும் 3/5.
-
நாம் என்ன செய்தோம் என்று பார்ப்போம்.
-
பகுதி எண்ணால்,
-
தொகுதி எண்ணை வகுத்தோம்.
-
23 ÷ 5 = ஈவு = 4 ;
-
மீதம் 3.
-
23 ÷ 5 = 4 + 3/5;
-
அல்லது, இதை 4 3/5 எனலாம்.
-
மேலும் ஒரு எடுத்துக்காட்டு.
-
17/8.
-
இதனை கலப்பு எண்ணாக மாற்றுக?
-
இதை நீங்களே செய்யலாம்.
-
புரிவதற்காக, நான் இதை எழுதுகிறேன்.
-
17, 8-ல் இரு முறை செல்லும்.
-
அதாவது, 2x8=16.
-
17-16=1
-
மீதம் 1 கிடைக்கும்.
-
17 ÷ 8 = 2 + 1/8 = 2 1/8
-
1/8 ஏனென்றால் 8 இல் 1 பாகம் இன்னும் மீதம் உள்ளது
-
இதை எப்படி கற்பனை செய்து பார்க்க வேண்டும் என்று கூறுகிறேன்.
-
அப்பொழுது தான் உங்களுக்கு புரியும்.
-
நம்மிடம் ஐந்து பாதிகள் உள்ளன.
-
அதாவது ஐந்து 1/2 பகுதிகள்.
-
நாம் கேக் அல்லது பீட்சா எடுத்துக்காட்டை பயன் படுத்தலாம்.
-
நான் ஐந்து சம பாதி பீட்சா வரைகிறேன்.
-
என்னிடம், ஒரு பாதி பீட்சா உள்ளது.
-
பிறகு, என்னிடம் மேலும் ஒரு பீட்சா உள்ளது.
-
இதை திருப்பி விடுகிறேன்.
-
எனவே, இது இரண்டு.
-
இது ஒரு பாதி, இது இரண்டு பாதிகள்.
-
இது மூன்று பாதிகள்.
-
இது நாலாவது பாதி.
-
இவை அனைத்தும் பீட்சாக்களின் பாதி.
-
இது ஐந்தாவது பாதி.
-
எனவே, மொத்தம் ஐந்து பாதிகள்.
-
இதில், நாம் இந்த இரண்டு பாதிகளை ஒன்றாக்கலாம்.
-
இது ஒரு துண்டு, இது மேலும் ஒரு துண்டு.
-
பிறகு, இங்கு ஒரு பாதி இருக்கிறது.
-
எனவே, இது இரண்டரை பகுதி.
-
இது உங்களை குழப்பமடைய செய்யாது என்று நினைக்கிறன்.
-
இதை முறையாக செய்ய வேண்டுமென்றால்,
-
ஐந்தில், இரண்டு செல்லும்.
-
ஐந்தில், இரண்டு - 2 முறை செல்லும்.
-
இது இரண்டு.
-
பிறகு, 2 பெருக்கல் 2, என்பது நான்கு ஆகும்.
-
5-4=1, எனவே மீதம் ஒன்று இருக்கும்.
-
இதை தான் இங்கு செய்திருக்கிறோம்.
-
இதில் பகுதி மாறாது.
-
எனவே 5/2 என்பது 2 1/2 ஆகும்.
-
எனவே, கலப்பு எண்களை எவ்வாறு ஒழுங்கற்ற பின்னங்களாக மாற்ற வேண்டும்,
-
அதேபோல, ஒழுங்கற்ற பின்னத்தில் இருந்து கலப்பு எண்ணிற்கு
-
எப்படி மாற்றுவது என்று உங்களுக்கு புரிந்திருக்கும்.
-
இது உங்களுக்கு குழப்பமாக இருக்கிறது என்றால்,
-
மேலும் சில பாடங்களை தயார் செய்கிறேன்.
-
இந்த பயிற்சி உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நினைக்கிறன்.