< Return to Video

Nike (Winged Victory) of Samothrace, c. 190 B.C.E.

  • 0:00 - 0:03
    இப்போது நாம் உயர்ந்த பீடங்களில் ஒன்றான லோவ்ரேயில் இருக்கிறோம்.
  • 0:03 - 0:14
    இங்கே நாம் பார்ப்பது கிபி 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமோத்ரஸின் நிக்கே.
  • 0:14 - 0:21
    இது ஹெல்லோனியக் காலத்துச் சிலை. இந்த 9 அடி உயரச் சிலை உண்மையிலேயே பிரமாண்டமாகத் தான் இருக்கிறது.
  • 0:21 - 0:27
    சமோத்ரஸ் என்று அழைக்கப்படுகிற ஏஜியன் தீவின் வட பகுதியில் இந்த நிக்கே சிலை காணப்படுகிறது.
  • 0:27 - 0:37
    ஒரு துறைமுகத்தின் ஆலயத்தில் வீசும் கடற் காற்றுக்கு எதிராக ஆடைத் தொங்கலுடன் காணப்படுகிறது.
  • 0:37 - 0:40
    அவள் நிற்குமிடம் நிஜமான படகின் முனை இல்லையா....?
  • 0:40 - 0:45
    இல்லை. ஒரு ஆலயத்தில் படகு போன்று செதுக்கப்பட்ட கல்லின் முனையில் நிற்கிறாள்.
  • 0:45 - 0:51
    தேவதையின் வெற்றிச் செய்தியை அறிவிக்கும் தூதுவரான இவளே ஒரு வெற்றித் தேவதை தான்.
  • 0:51 - 0:58
    வெற்றியை கொம்பினால் ஊதுவது போல் இருந்த சிலையை மறு சீரமைப்பு செய்திருப்பார்கள் என்று தோன்றுகிறது.
  • 0:58 - 1:02
    மேற்கத்திய கலையின் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய சிலை இது.
  • 1:02 - 1:07
    ஹல்லோனியக் காலத்துச் சிலை எனும் போது செவ்வியல் பாணியில் சிலையை அமைத்திருப்பார்கள்.
  • 1:07 - 1:15
    இந்தப் பகுதி முழு வீச்சுடன் காற்று வீசக்கூடிய பகுதி என்பதால் உணர்வெழுச்சி மிகுந்ததாக இருக்கும்.
  • 1:15 - 1:21
    இந்தச் சிலைப் பெண் ஒரே சமயத்தில் பல்வேறு கோணங்களில் திமிறிச் செல்வதைப் போலத் தோன்றுகிறது.
  • 1:21 - 1:27
    கால்கள் தரையில் பதிந்திருக்கிறது என்றாலும் முன்னோக்கி உந்திக் கொண்டுள்ளன. மார்புப் பகுதி எக்கி இருக்கிறது.
  • 1:27 - 1:31
    அடிவயிறு முறுக்கிக் கொண்டுள்ளது. இறகுகள் காற்றைப் பின்னுக்குத் தள்ளுகின்றன.
  • 1:31 - 1:39
    பின்னுக்குத் தள்ளும் காற்று அவளைத் தழுவிச் செல்வதை இங்கிருந்து உணர முடியும்.
  • 1:39 - 1:49
    பல நூற்றாண்டுகளாக கன்றிக் கனிந்த மழ மழப்பைக் கூறுகிறது அவளது இடையைச் சுற்றிச் செல்லும் காற்றுச் சுழிப்பு.
  • 1:49 - 2:01
    சரிதான். ஆனால் ஒலிம்பிய மலைத் தேவதையின் சாந்ததிற்கும் நெகிழ்விற்கும் பதிலாக, தேவதைக்குரிய உணர்வெழுச்சிக்குப் பதிலாக இந்தச் சிலையில் இயல்புந்துதலாக இருக்கிறது.
  • 2:01 - 2:02
    ஆம் முற்றிலும் சூழலுக்குப் பொருத்தமாக இருக்கிறது.
  • 2:02 - 2:06
    சற்று நேரம் நாம் அங்கு நின்றால் அந்தக் கடற்காற்று நம்மைத் தழுவிச் செல்லும்.
  • 2:06 - 2:16
    அவளது ஆடைத் தொங்கல்கள் உடலின் மீது ஒளியில் அலைந்து மடிப்புகளையும், சுருக்கங்களையும் உருவாக்குகிறது. சிறகுகளுக்கு மாறுபட்ட தன்மையை அளிக்கிறது.
  • 2:16 - 2:20
    பளிங்கின் இழைம அமைப்பு அதற்கு மாறுபட்ட தோற்றத்தை உருவாக்கி உள்ளது.
  • 2:20 - 2:31
    உடலின் அமைப்பை நுணுகிப் பார்ப்பதும், உடலைப் போற்றுவதும் அற்புதமான வெளிப்பாட்டு ஆற்றலாக்குவதும் ஒரு பண்பாகி இருக்கிறது.
  • 2:32 - 2:41
    பாட்ரிக் மசோன் அளித்த மனமுவந்த பரிசு இதனைச் சாத்தியமாக்கியுள்ளது.
Title:
Nike (Winged Victory) of Samothrace, c. 190 B.C.E.
Description:

more » « less
Video Language:
English
Duration:
02:46

Tamil subtitles

Incomplete

Revisions