காற்றை வசப்படுத்திய வில்லியம் கம்க்வம்பா
-
0:00 - 0:03நன்றி.
-
0:03 - 0:07இரண்டு வருடங்களுக்கு முன் தான்சானியாவில் உள்ள அருஷாவில் நடந்த TED நிகழ்ச்சியில் நான் பேசினேன்.
-
0:07 - 0:12மிகச் சுருக்கமாக அங்கே பேசினேன், என் பெருமைக்குரிய படைப்பு பற்றி.
-
0:12 - 0:16மிக எளிமையான, என் வாழ்க்கையையே மாற்றிய சாதனம் அது.
-
0:16 - 0:18அதற்கு முன்பு
-
0:18 - 0:21மலாவியில் உள்ள என் வீட்டை விட்டு
-
0:21 - 0:24வெளியே எங்கும் நான் சென்றதில்லை.
-
0:24 - 0:26கணினியை பயன்படுத்தியதில்லை.
-
0:26 - 0:30இணையத்தை பார்த்ததில்லை.
-
0:30 - 0:35அன்று மேடையில் மிகவும் நடுக்கமாக இருந்தது.
-
0:35 - 0:39என் ஆங்கிலம் தவறியது.
-
0:39 - 0:41வயிற்றை குமட்டியது.
-
0:41 - 0:45(சிரிப்பு)
-
0:45 - 0:49அதற்கு முன்பு அத்தனை 'அஜுங்கு'களால் நான் சூழப்பட்டதில்லை
-
0:49 - 0:51('அஜுங்கு' என்றால் வெள்ளைக்காரர்கள்)
-
0:51 - 0:54(சிரிப்பு)
-
0:54 - 0:57என் கதையைப் பற்றி அன்று உங்களிடம் சொல்ல முடியவில்லை.
-
0:57 - 1:00ஆனால் இன்று நான் நன்றாகவே உள்ளேன்.
-
1:00 - 1:03என் கதையைப் பற்றி இன்று நான் சொல்கிறேன்.
-
1:03 - 1:05குடும்பத்தின் ஏழு குழந்தைகளில் ஒருவன் நான்.
-
1:05 - 1:09என்னைத் தவிர அனைவரும் பெண்கள்.
-
1:09 - 1:14இது நான், சிறுவனாக, என் தந்தையுடன்.
-
1:14 - 1:17அறிவியல் அதிசயங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்பு,
-
1:17 - 1:19நான் ஒரு எளிய உழவன்.
-
1:19 - 1:22ஏழை உழவர்கள் வாழும் நாடு என் நாடு.
-
1:22 - 1:26அனைவரையும் போல் நாங்களும் மக்காச்சோளம் பயிர் செய்வோம்.
-
1:26 - 1:31ஒரு வருடம் எங்களுக்கு மிகப்பெரிய துரதிர்ஷ்டம் காத்திருந்தது.
-
1:31 - 1:362001ல் மிகக் கொடிய பஞ்சத்தை நாங்கள் அனுபவித்தோம்.
-
1:36 - 1:43ஐந்தே மாதங்களுக்குள் மலாவியர்கள் பட்டினியால் செத்தனர்.
-
1:43 - 1:47எங்கள் வீட்டில் ஒரு நாளைக்கு ஒரு வேளை தான் சாப்பாடு, இரவில்.
-
1:47 - 1:51இந்த 'நிசிமா'வில் ஆளுக்கு மூன்று வாய்கள், அவ்வளவு தான்.
-
1:51 - 1:53அவ்வுணவு எங்கள் உடல் வழியாகச் சென்றதோடு சரி.
-
1:53 - 1:57அடி மட்ட நிலைக்கு தள்ளப்பட்டோம்.
-
1:57 - 2:00மலாவியில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில்,
-
2:00 - 2:02பள்ளிக் கட்டணம் கட்ட வேண்டும்.
-
2:02 - 2:08பசிக் கொடுமையால் என்னால் தொடர்ந்து பள்ளி செல்ல முடியவில்லை.
-
2:08 - 2:10என் தந்தையின் நிலையைப் பார்த்தேன்.
-
2:10 - 2:12அந்த காய்ந்த வயல்களைப் பார்த்தேன்.
-
2:12 - 2:16அப்படிப்பட்ட எதிர்காலத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
-
2:16 - 2:20பள்ளியில் படித்தபோது நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தேன்.
-
2:20 - 2:25அதனால் நான் எதையும் செய்யத் தீர்மானித்தேன்
-
2:25 - 2:27கல்வி கற்பதற்காக.
-
2:27 - 2:29ஆகவே நான் நூலகத்திற்குச் சென்றேன்.
-
2:29 - 2:33நூல்களைப் படித்தேன், அறிவியல் நூல்கள், குறிப்பாக இயற்பியல் நூல்கள்.
-
2:33 - 2:35என்னால் ஆங்கிலத்தை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை.
-
2:35 - 2:38படிமங்களையும் படங்களையும் பயன்படுத்தி
-
2:38 - 2:43தொடர்பான வார்த்தைகளை புரிந்து கொண்டேன்.
-
2:43 - 2:47மற்றொரு புத்தகம் அறிவை என் கைவசம் ஆக்கியது.
-
2:47 - 2:53காற்றாலை மூலம் நீர் இறைக்கவும், மின் உற்பத்தி செய்யவும் முடியும் என்று அது சொன்னது.
-
2:53 - 2:56நீர் இறைப்பதன் மூலம் பாசனம் செய்யலாம்.
-
2:56 - 2:58நாங்கள் அச்சமயம் அனுபவித்த பட்டினியிலிருந்து
-
2:58 - 3:02எங்களை காப்பாற்றிக் கொள்ளலாம்.
-
3:02 - 3:06அப்படியாக காற்றாலை ஒன்றை சுயமாக நிறுவ முடிவு செய்தேன்.
-
3:06 - 3:09ஆனால் அதற்கு தேவையான பொருட்கள் என்னிடம் இல்லை.
-
3:09 - 3:11அதனால் குப்பைக் கிடங்குக்குச் சென்று
-
3:11 - 3:14எனக்குத் தேவையான பொருட்களை சேகரித்தேன்.
-
3:14 - 3:18பலர், என் தாய் உட்பட,
-
3:18 - 3:20என்னை கிறுக்கன் என்றார்கள்.
-
3:20 - 3:22(சிரிப்பு)
-
3:22 - 3:24ஒரு டிராக்டரின் விசிறியை பொறுக்கினேன்,
-
3:24 - 3:26அதிர்வு தாங்கி (shock absorber), PVC குழாய்கள்,
-
3:26 - 3:29ஒரு சைக்கிள் சட்டம்,
-
3:29 - 3:33மற்றும் ஒரு சைக்கிள் டைனமோ, இவற்றைப் பயன்படுத்தி
-
3:33 - 3:35என் இயந்திரத்தை உருவாக்கினேன்.
-
3:35 - 3:38முதலில் ஒரு விளக்கு.
-
3:38 - 3:41பின்னர் நான்கு விளக்குகள்,
-
3:41 - 3:46ஆளிகளுடன் (switches), சுற்றமைப்புப் பிரிகலனுடனும் (circuit breaker) கூட,
-
3:46 - 3:50ஒரு குறிப்பை பயன்படுத்தி இவற்றை வடிவமைத்தேன்.
-
3:50 - 3:54மற்றொரு இயந்திரம் நீர் இறைக்கிறது
-
3:54 - 3:57பாசனத்திற்காக.
-
3:57 - 4:00என் வீட்டு வாசலில் ஊர் மக்கள் வரிசை கட்டி நின்றார்கள்.
-
4:00 - 4:02(சிரிப்பு)
-
4:02 - 4:04தங்கள் செல்பேசிகளை சார்ஜ் செய்வதற்காக வந்தார்கள்.
-
4:04 - 4:08(கரகோஷம்)
-
4:08 - 4:10அந்த கூட்டத்தை நீக்கிவிடவே முடியவில்லை.
-
4:10 - 4:12(சிரிப்பு)
-
4:12 - 4:15அதன் பிறகு நிருபர்களும் வந்தார்கள்,
-
4:15 - 4:17பிறகு வலைப்பதிவாளர்கள் வந்தார்கள்,
-
4:17 - 4:22அப்படியாக TED என்ற ஒன்றிலிருந்து என்னை அழைத்தார்கள்.
-
4:22 - 4:24அதற்கு முன்பு நான் விமானத்தை பார்த்ததே இல்லை.
-
4:24 - 4:27விடுதிகளில் தங்கியதில்லை.
-
4:27 - 4:31இப்படியிருக்க, அன்று அருஷாவில், மேடையில்,
-
4:31 - 4:34என் ஆங்கிலம் தவறியது,
-
4:34 - 4:37நான் இவ்வாறாக ஏதோ சொன்னேன்,
-
4:37 - 4:41"நான் முயன்றேன் அதனால் சாதித்தேன்."
-
4:41 - 4:43ஆக, நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்
-
4:43 - 4:46என்னைப் போன்ற மக்கள் அனைவருக்குமாக
-
4:46 - 4:49ஆப்பிரிக்கர்களுக்காக, ஏழைகளுக்காக,
-
4:49 - 4:53கனவுகளை நனவாக்க போராடும் மக்களுக்காக,
-
4:53 - 4:55கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.
-
4:55 - 4:59ஒரு நாள் இந்த பேச்சை இணையத்தில் பார்ப்பீர்கள்.
-
4:59 - 5:04உங்களுக்கு சொல்கிறேன், உங்களை நம்புங்கள், நம்பிக்கை கொள்ளுங்கள்.
-
5:04 - 5:06என்ன தான் நடந்தாலும் முயற்சியை கைவிடாதீர்கள்.
-
5:06 - 5:08நன்றி.
-
5:08 - 5:38(கரகோஷம்)
- Title:
- காற்றை வசப்படுத்திய வில்லியம் கம்க்வம்பா
- Speaker:
- William Kamkwamba
- Description:
-
14 வயதில், வறுமையும் பஞ்சமும் பீடிக்கப்பட்ட நிலையில், மலாவியச் சிறுவன் ஒருவன் காற்றாலை ஒன்றை நிறுவினான், தன் இல்லத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக. தற்போது வளர்ந்து, 22 வயது வாலிபராகி நிற்கும் வில்லியம் கம்க்வம்பா, TEDல் இரண்டாம் முறையாக பேசுகையில் தன் வாழ்க்கையையே மாற்றிய அந்தக் கண்டுபிடிப்பு பற்றி தானே சுவைபடச் சொல்கிறார்.
- Video Language:
- English
- Team:
closed TED
- Project:
- TEDTalks
- Duration:
- 05:39