< Return to Video

இயந்திரங்களிடம் நாம் இழக்க நேரிடும் --மற்றும் இழக்க நேராத பணிகள்.

  • 0:01 - 0:03
    இது என் உடன் பிறந்தாரின் மகள்
  • 0:03 - 0:04
    அவள் பெயர் யாஹ்லி
  • 0:04 - 0:06
    அவளுக்கு வயது 9 மாதங்கள் ஆகிறது
  • 0:06 - 0:09
    அவள் தாய் ஒரு மருத்துவர்,மற்றும் அவள்
    தந்தை ஒரு வழக்கறிஞர்.
  • 0:09 - 0:11
    யாஹ்லி கல்லூரி செல்வதற்குள்,
  • 0:11 - 0:15
    அவளுடைய பெற்றோர்கள் செய்யும் பணிகள்
    வியக்கத்தகு வித்தியாசமாக காணப் போகிறது.
  • 0:15 - 0:21
    2013-ல் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழக ஆய்வாளர்கள்
    பணியின் எதிர்காலம் பற்றிய ஒரு ஆய்வில்
  • 0:21 - 0:25
    அநேகமாக, 2 பணிகளில் 1 பணியை, இயந்திரங்கள்
    தானியங்கி வேலையாக ஆக்கக்கூடிய
  • 0:25 - 0:28
    பெரிய அபாயம் இருக்கிறதென்ற
    முடிவுக்கு வந்தார்கள்
  • 0:28 - 0:30
    பொறிக்கற்றல் என்ற தொழில்நுட்பம்தான்
  • 0:30 - 0:33
    இந்த இடையூறுகளுக்கு எல்லாம் காரணம்.
  • 0:33 - 0:35
    அது செயற்கை நுண்ணறிவின் மிக
    சக்தி வாய்ந்த ஒரு பிரிவாகும்,
  • 0:35 - 0:37
    இயந்திரங்களை தரவிலிருந்து
    கற்க அனுமதித்து
  • 0:37 - 0:40
    மனிதர்கள் செய்யக்கூடிய சில
    விடயங்களை அபிநயிக்கிறது
  • 0:40 - 0:43
    என் நிறுவனம் காகுல், பொறிக்கற்றலில்
    முன்னேற்றத்தின் உச்சியில் இருப்பதால்
  • 0:43 - 0:46
    ஆயிரக்கணக்கான வல்லுனர்களை நாங்கள்
    ஒருங்கிணைத்து தொழில் மற்றும்
  • 0:46 - 0:49
    கல்வி நிறுவனங்களின் முக்கிய
    பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிறோம்.
  • 0:49 - 0:53
    இது இயந்திரங்கள் செய்யக்கூடியதை செய்ய
    முடியாததைப் பற்றி ஒரு ஒப்பற்ற
  • 0:53 - 0:54
    முன்னோக்கை அளிக்கிறது
  • 0:54 - 0:57
    மேலும் எந்த வேலைகளை அவைகள் தானியங்க
    படுத்தக்கூடும் அல்லது அச்சுறுத்தும்,
  • 0:57 - 1:01
    பொறிக்கற்றல், தொழில்துறையில், 1990-ன்
    முற்பகுதியில் ஆரம்பித்தது
  • 1:01 - 1:03
    அது ஒப்பீட்டளவில் எளிய
    பணிகளுடன் தொடங்கியது
  • 1:03 - 1:08
    கடன் விண்ணப்பத்திலிருந்து கடன் மதிப்பீடு,
    கையெழுத்துடைய ஜிப்கோட் படித்து
  • 1:08 - 1:12
    அஞ்சல் வரிசைப்படுத்துதல்
    போன்றவற்றில் அது தொடங்கியது,
  • 1:12 - 1:16
    கடந்து சில வருடங்களாக, நாம் வியக்கத்தக்க
    முன்னேற்றங்கள் அடைந்திருக்கிறோம்.
  • 1:16 - 1:20
    பொறிக்கற்றல், இப்போது மிக அதிக சிக்கலான
    பணிகளை செய்யும் திறனுடையது.
  • 1:20 - 1:24
    2012-ல், காகுல் அதன் உறுப்பினர்களை
    உயர்நிலைப்பள்ளி கட்டுரைகளை தரவாரியாக
  • 1:24 - 1:26
    வரிசைப்படுத்தும் ஒரு வழிமுறை
    உருவாக்க சவால் விட்டார்கள்.
  • 1:26 - 1:29
    வென்ற வழிமுறைகள், மனித ஆசிரியர்கள்
    தரப்படுத்தியவைகளுக்கு
  • 1:29 - 1:31
    ஈடு இணையாக இருந்தது.
  • 1:31 - 1:34
    சென்ற வருடம், நாங்கள் இன்னும் அதிக
    கடினமான சவாலை முன் வைத்தோம்.



  • 1:34 - 1:37
    கண்ணின் படிமத்திலிருந்து டயாபெடிக்
    ரெடினோபதி என்ற நோயை
  • 1:37 - 1:39
    கண்டறிய முடியுமா என்று?
  • 1:39 - 1:43
    இம்முறையும், வெற்றி பெற்ற வழிமுறைகள்
    மனித கண் மருத்துவர்களால் வழங்கப்பட்ட
  • 1:43 - 1:46
    கண்டறிதலுக்கு ஈடு இணையாக இருந்தது,
  • 1:46 - 1:49
    சரியான தரவு இயந்திரங்களுக்கு கிடைத்தால்,
    இதைப் போன்ற பணிகளில், அவை
  • 1:49 - 1:50
    மனிதர்களை விஞ்சி விடும்.
  • 1:50 - 1:54
    ஒரு ஆசிரியர், 40 வருட வாழ்க்கையில் 10,000
    கட்டுரைகளைப் படிக்கலாம்.
  • 1:54 - 1:57
    ஒரு கண் மருத்துவர் 50,000 கண்களை
    பரிசீலிக்கலாம்
  • 1:57 - 2:00
    சில நிமிடங்களுக்குள், ஒரு இயந்திரம்
    பல மில்லியன் கட்டுரைகளைப்
  • 2:00 - 2:02
    படிக்கலாம் அல்லது பல மில்லியன்
    கண்களைப் பார்க்கலாம்.
  • 2:02 - 2:05
    இயந்திரங்களுக்கு எதிராக போட்டியிட
    நமக்கு வாய்ப்பே இல்லை
  • 2:05 - 2:09
    அடிக்கடி செய்ய வேண்டிய மிக அதிக அளவு
    பணிகள் உள்ள போது.
  • 2:09 - 2:13
    ஆனால், இயந்திரங்கள் செய்ய முடியாத, நாம்
    செய்யக்கூடிய விடயங்கள் இருக்கின்றன.
  • 2:13 - 2:15
    இயந்திரங்கள் மிகக் குறைவாக
    முன்னேறியது எங்கு எனில்,
  • 2:15 - 2:17
    புதுமையான சூழ் நிலைகளைக் கையாள்வதில்.
  • 2:17 - 2:21
    பலமுறை முன்னரே பார்த்திராத சூழ் நிலைகளை
    அவைகளால் கையாள முடியாது,
  • 2:21 - 2:24
    பொறிக்கற்றலின் அடிப்படை குறைபாடுகள்
    என்னவெனில்
  • 2:24 - 2:27
    கடந்தகாலத்திய அதிக அளவு தரவுகளிலிருந்து
    அவை கற்றறியவேண்டும்.
  • 2:27 - 2:29
    ஆனால், மனிதர்களுக்கு அப்படி இல்லை.
  • 2:29 - 2:32
    தோற்றத்திற்கு வித்தியாசமானதை
    இணைத்து, இதற்குமுன் பார்த்திராத
  • 2:32 - 2:35
    பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் திறமை
    நம்மிடம் இருக்கிறது.
  • 2:35 - 2:39
    பெர்சி ஸ்பென்சர் என்ற இயற்பியலாளர், 2-ம்
    உலகப்போரின் போது ராடாரில் பணி செய்தார்,
  • 2:39 - 2:43
    மாக்னெட்ரான், அவருடைய சாக்லேட் பட்டையை
    உருக்குவதை கவனித்த போது,
  • 2:43 - 2:46
    அவர், தன்மின்காந்த கதிர்வீச்சு
    புரிதலை,
  • 2:46 - 2:48
    தன்னுடைய சமையல் அறிவுடன் இணைத்து
  • 2:48 - 2:51
    கண்டுபிடித்தார்--ஏதவது யூகங்கள்?--
    மைக்ரோவேவ் அடுப்பு,
  • 2:51 - 2:55
    இது, குறிப்பாக ஒரு பிரசித்தமான
    படைப்பாற்றலுக்கு உதாரணம்.
  • 2:55 - 2:58
    ஆனால், இந்த மாதிரி எதிர்பாரா விடயங்கள்
    நம் எல்லோருக்கும் சிறிய வழிகளில்
  • 2:58 - 3:01
    ஒரு நாளுக்கு பல
    ஆயிரம் முறைகள் நடக்கிறது.
  • 3:01 - 3:02
    புதுமையான சூழ்நிலைகளைக் கையாளுவதில்
  • 3:02 - 3:04
    இயந்திரங்கள் நம்முடன் போட்டி போட முடியாது.
  • 3:04 - 3:06
    இதனால், மனிதர்கள் செய்யும் பணிகளை
  • 3:06 - 3:10
    இயந்திரங்கள் தானியங்கியாக செய்வதற்கு
    ஒரு அடிப்படை வரம்பு உண்டாகிறது.
  • 3:10 - 3:13
    எனில், பணியின் எதிர்காலம் பற்றி
    இதனால் என்ன புரிகிறது?
  • 3:13 - 3:17
    எந்த ஒரு வேலையின் எதிர்கால நிலையும் ஒரே
    ஒரு கேள்விக்கான விடையை பொருத்திருக்கிறது:
  • 3:17 - 3:22
    அடிக்கடி செய்யும் பெரிய அளவு பணியாக
    இந்தப் பணியை எந்த அளவிற்கு மாற்ற முடியும்?
  • 3:22 - 3:26
    மேலும், புதிய சூழ்நிலைகளை சமாளிப்பது
    இதனுடன் எந்த அளவிற்கு ஒன்றி இருக்கிறது?
  • 3:26 - 3:30
    அடிக்கடி செய்யும் அதிகளவான பணிகளில்
    இயந்திரங்கள் மேலும் மிடுக்காய் உள்ளன.
  • 3:30 - 3:33
    இன்று அவை கட்டுரைகளை தரப்படுத்தி சில
    நோய்களை கண்டறிகின்றன,
  • 3:33 - 3:36
    வருகிற வருடங்களில் அவை எங்கள்
    தணிக்கைகளை நடத்தப் போகின்றன,
  • 3:36 - 3:39
    அவை, சட்ட ஒப்பந்தங்களிலிருந்து
    பாய்லர்ப்ளேட்டைப் படிக்கும்
  • 3:39 - 3:41
    கணக்காளர்கள் வழக்கறிஞர்கள்
    இருப்பினும் தேவைப் படுகிறார்கள்.
  • 3:41 - 3:44
    சிக்கலான வரி கட்டமைப்பிற்கும்
    வழிகாட்டும் வழக்குகளுக்கும்,
  • 3:44 - 3:45
    அவர்கள் தேவைப்படப் போகிறார்கள்
  • 3:45 - 3:47
    இயந்திரங்கள் தங்கள் அணிகளை
    சுருக்கும்
  • 3:47 - 3:49
    இந்த பணிகள் கிடைப்பதற்கு அரிதாக
    செய்யும்,
  • 3:49 - 3:50
    முன்னர் கூறியபடி,
  • 3:50 - 3:53
    புதிய சூழ் நிலைகளை சமாளிப்பதில்
    இயந்திரங்கள் முன்னேறவில்லை.
  • 3:53 - 3:56
    விளம்பர யுக்திகளின் நகல், நுகர்வோர்
    கவனத்தை ஈர்க்க வேண்டும்,
  • 3:56 - 3:58
    கும்பலிலிருந்து அது தனித்து
    நிற்க வேண்டும்,
  • 3:58 - 4:01
    வணிக வியூகமெனில், சந்தையில்
    உள்ள இடைவெளியைக் கண்டறிவது,
  • 4:01 - 4:02
    வேறு எவரும் செய்யாத விடயங்களை.
  • 4:02 - 4:06
    மனிதர்கள் தான் விளம்பர யுக்திகளின்
    நகலை உண்டாக்குவார்கள்,
  • 4:06 - 4:10
    மேலும், வணிக வியூகத்தை உண்டாக்குவது
    மனிதர்களாகத்தான் இருக்கும்.
  • 4:10 - 4:13
    அதனால், யாஹ்லி, நீ என்ன செய்ய
    தீர்மானித்தாலும்,
  • 4:13 - 4:16
    ஒவ்வொரு நாளும் உனக்கு புதியதொரு சவாலைக்
    கொண்டு வரட்டும்
  • 4:16 - 4:19
    அவ்வாறு நிகழ்ந்தால், நீ இயந்திரங்களை விட
    முன்னனியில் இருப்பாய்.
  • 4:19 - 4:20
    நன்றி.
  • 4:20 - 4:23
    (கரவொலி)
Title:
இயந்திரங்களிடம் நாம் இழக்க நேரிடும் --மற்றும் இழக்க நேராத பணிகள்.
Speaker:
அந்தோனி கோல்ட்ப்ளூம்
Description:

பொறிக்கற்றலென்பது, இனி, கடன் அபாயத்தை மதிப்பிடுவது மற்றும் அஞ்சல்களை வரிசைப்படுத்துவது போன்ற எளிய பணிகளுக்கு-- மட்டும் அல்ல--இன்று, அது கட்டுரையை வரிசைப்படுத்துவது, நோயைக் கண்டறிவது போன்ற சிக்கலான பயன்பாடுகளை செய்யக்கூடியது. இந்த முன்னேற்றங்களுடன் ஒரு சஞ்சலமான கேள்வியும் எழுகிறது: உங்கள் பணியை எதிர்காலத்தில் ஒரு ரோபோ செய்யுமா என?

more » « less
Video Language:
English
Team:
closed TED
Project:
TEDTalks
Duration:
04:36

Tamil subtitles

Revisions