ரோன் குட்மன்: புன்னகையில் புதைந்துள்ள சக்தி
-
0:00 - 0:03எனது சிறுவயதில், நான் எப்போதும் ஓர் உன்னத நாயகனாகவே விரும்பினேன்.
-
0:03 - 0:06உலகைக் காப்பாற்றி அனைவரையும் மகிழ்விக்கவே விரும்பினேன்.
-
0:06 - 0:08ஆனால் அதற்கு உன்னத சக்தி வேண்டுமென்று எனக்கு தெரியும்
-
0:08 - 0:10எனது கனவுகளை நனவாக்க.
-
0:10 - 0:13அதற்காக நான் கற்பனையான பயணங்களை தொடங்கினேன்
-
0:13 - 0:16க்ர்ய்ப்டோன் கோளிலுள்ள பால்வெளியிடை விண்பொருள்களை கண்டுபிடிப்பதற்காக,
-
0:16 - 0:18அத்தேடல் மிகவும் சந்தோஷமாக இருந்தது,
-
0:18 - 0:20ஆனால் உரிய பலன் கிட்டவில்லை.
-
0:20 - 0:22வளர்ந்து பெரியவனான பொழுது புரிந்தது
-
0:22 - 0:25விஞ்ஞான புனைக்கதை, உன்னத சக்திகளுக்கான சரியான மூலம் அல்ல என்பது,
-
0:25 - 0:28அதனால் உண்மையான அறிவியல் வழி பயணம் தொடங்க முடிவெடுத்தேன்,
-
0:28 - 0:30மேலும் பயனுள்ள உண்மையை கண்டறிய.
-
0:30 - 0:33எனது பயணத்தை கலிபோர்னியாவில் ஆரம்பித்தேன்
-
0:33 - 0:36யுசி பெர்க்லே-யின் ஒரு 30 ஆண்டு கால ஆய்வு
-
0:36 - 0:38பழைய ஆண்டுபுத்தகத்தில் இருக்கும் மாணவர்களின்
-
0:38 - 0:40புகைப்படங்களை ஆராய்ந்து பார்த்து
-
0:40 - 0:42வெற்றி மற்றும் நல்வாழ்வை அவர்களது வாழ்நாளில் பெற்றுக் கொண்டதை
-
0:42 - 0:44கணிக்க முயன்ற ஆய்வு.
-
0:44 - 0:46தங்களது மாணவரின் புன்னகையை அடிப்படையாகக்கொண்டு,
-
0:46 - 0:48ஆராய்ச்சியாளர்களால் எதிர்வுகூற முடிந்தது
-
0:48 - 0:50எவ்வளவு முழுமையானதாகவும் நீடூழி நிலைப்பதாகவும் இருக்கும்
-
0:50 - 0:53அம்மாணவரது திருமணம்,
-
0:53 - 0:55அவரால் எந்தளவில் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும்
-
0:55 - 0:57நல்வாழ்விற்க்கான ஆய்வு சோதனைகளில்,
-
0:57 - 1:00மற்றும் மற்றவர்க்கு எவ்வளவு ஊக்கமளிப்பவராக இருப்பார் என்பதும்.
-
1:01 - 1:04மற்றொரு ஆண்டுப்புத்தகத்தில், பாரி ஒபாமாவின் புகைப்படத்தை எதேச்சையாக காண நேரிட்டது.
-
1:04 - 1:06முதலில் நான் அவரது புகைப்படத்தைக் கண்டபோது,
-
1:06 - 1:09அவரது உன்னத கழுத்துப்பட்டையிலிருந்து தான் அதிசய சக்திகள் பிறக்கின்றன என்று எண்ணினேன்.
-
1:10 - 1:13அனால் அவை அனைத்தும் அவரது சிரிப்பிலிருந்து பிறந்தவை என்று இப்பொழுது எனக்கு தெரியும்.
-
1:13 - 1:15மற்றொரு ஆஹா! தருணம்
-
1:15 - 1:182010ம் ஆண்டின் வேய்ன் மாநில பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சித்திட்டதிலிருந்து கிடைத்தது.
-
1:18 - 1:211950க்கு முந்தைய காலகட்டத்தின் முக்கிய நிலையைச் சார்ந்த
-
1:21 - 1:23எல்லை விளையாட்டு வீரர்களின் அட்டைகளின் ஆய்வு.
-
1:23 - 1:25ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தது,
-
1:25 - 1:27ஒரு விளையாட்டு வீரரின் புன்னகையின் அளவைக்கொண்டு
-
1:27 - 1:30அவரது ஆயுளை கணிக்க முடியும், என்பதே.
-
1:30 - 1:33புகைப்படங்களில் புன்னகைக்காத விளையாட்டு வீரர்கள்
-
1:33 - 1:36சராசரியாக 72.9 வருடங்கள் வாழ்ந்திருந்தனர்.
-
1:36 - 1:38அதுவே, பெரும் புன்னகை கொண்ட விளையாட்டு வீரர்கள்
-
1:38 - 1:41சராசரியாக 80 வருடங்கள் வாழ்ந்திருந்தனர்.
-
1:41 - 1:43(சிரிப்பொலி)
-
1:43 - 1:46நற்செய்தி என்னவென்றால் நாம் புன்னகைத்துக் கொண்டு தான் பிறக்கின்றோம்.
-
1:46 - 1:48முப்பரிமாண செவியுணரா ஒலி தொழில்நுட்பம் மூலம்,
-
1:48 - 1:51உருவாகிக் கொண்டிருக்கும் சிசுகூட புன்னகைப்பதை
-
1:51 - 1:53கருவில் கூட இப்போது காணலாம்.
-
1:53 - 1:55பிறந்த பின்னரும்
-
1:55 - 1:57குழந்தைகள் புன்னகைத்துக் கொண்டிருக்கிறார்கள் ---
-
1:57 - 1:59பொதுவாக, பெரும்பாலும் தூக்கத்தில்.
-
1:59 - 2:01கண் பார்வையற்ற குழந்தைகளும் கூட புன்னகைப்பார்கள்
-
2:01 - 2:04மனித குரலைக் கேட்டு.
-
2:04 - 2:07புன்னகை மிக அடிப்படையான, உடல் ரீதியில்- சீரான
-
2:07 - 2:09மனித உணர்வு வெளிப்பாடுகளில் ஒன்றாகும்.
-
2:09 - 2:11பப்புவா நியூ கினியாவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில்,
-
2:11 - 2:13போல் ஏக்மன்,
-
2:13 - 2:16முக பாவங்கள் குறித்த உலகின் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளர்,
-
2:16 - 2:19ஃபோர் (Fore) கோத்திரத்தினரும் கூட,
-
2:19 - 2:22மேற்கத்திய கலாச்சாரத்திற்கு சற்றும் தொடர்பற்ற நிலையிலும்,
-
2:22 - 2:26அசாதாரணமான நர மாமிசம் உண்ணும் சடங்குகளை பின்பற்றிய போதும்,
-
2:26 - 2:29சூழ்நிலைக்கேற்ப புன்னகையை பிரயோகித்திருந்தனர்
-
2:29 - 2:31உங்களையும் என்னையும் போலவே, என்பதை ஆய்ந்தறிந்தார்.
-
2:31 - 2:34அப்படியாக, பப்புவா நியூ கினியாவிலிருந்து
-
2:34 - 2:36ஹாலிவுட் வரை
-
2:36 - 2:39பெய்ஜிங்கில் உள்ள நவீன கலை ஓவியம் வரை,
-
2:39 - 2:41நாம் அடிக்கடி புன்னகைக்கிறோம்,
-
2:41 - 2:43நமது சந்தோஷத்தை வெளிப்படுத்தவும் புன்னகைக்கிறோம்
-
2:43 - 2:45திருப்தியை வெளிப்படுத்தவும் புன்னகைக்கிறோம்.
-
2:45 - 2:47இந்த அறையில் உள்ள எத்தனை பேர்
-
2:47 - 2:49ஒரு நாளைக்கு 20 முறைக்கு மேல் புன்னகைக்கிறோம்?
-
2:49 - 2:52ஆம் எனில் கையைத் தூக்குங்கள். ஓ, ஆஹா.
-
2:52 - 2:54இந்த அறைக்கு வெளியே,
-
2:54 - 2:57நம்மில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு மேல் 20 முறைக்கு மேல் புன்னகைக்கின்றனர்,
-
2:57 - 3:00இதேவேளை, நம்மில் 14 சதவீதத்தினர்
-
3:00 - 3:025 முறைகளுக்கும் குறைவாகவே புன்னகைக்கின்றனர்.
-
3:02 - 3:05உண்மையில், மிகவும் அதிசயிக்கத்தக்க உன்னத சக்திகளைக் கொண்டவர்கள்
-
3:05 - 3:08குழந்தைகளே
-
3:08 - 3:11இவர்கள் ஒரு நாளைக்கு 400 முறைகளுக்கு மேல் புன்னகைக்கின்றனர்..
-
3:11 - 3:13எப்பொழுதாவது நீங்கள் எண்ணியதுண்டா, ஏன் குழந்தைகளோடு இருக்கும்பொழுது
-
3:13 - 3:15அதுவும் அடிக்கடி சிரிக்கும் குழந்தைகளோடு இருக்கும்பொழுது
-
3:15 - 3:18அடிக்கடி உங்களையும் புன்னகைக்க வைக்கிறார்கள் என்று?
-
3:19 - 3:21ஸ்வீடனின் உப்சலா பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆராய்ச்சியில்
-
3:21 - 3:24புன்னகைப்பவர் ஒருவரைப் பார்த்து
-
3:24 - 3:26சிடுசிடுப்பது கடினமாகுமென கண்டறியப்பட்டது.
-
3:26 - 3:28நீங்கள், ஏன்?, என்று கேட்கலாம்.
-
3:28 - 3:30ஏனெனில் புன்னகை என்பது பரிணமிப்பதும் தொற்றக்கூடியதும் ஆகும்,
-
3:30 - 3:32மேலும் முகத்தசைகளின் மீதான
-
3:32 - 3:35நமது ஆதிக்கத்தையும் அடக்கும்.
-
3:35 - 3:37ஒரு புன்னகையை பின்பற்றி நடித்துப் பார்ப்பதும்
-
3:37 - 3:39உடல் ரீதியாக அனுபவிப்பதும்
-
3:39 - 3:43அப்புன்னகை உண்மையானதா போலியானதா என்பதை நாம் புரிந்து கொள்ள உதவும்,
-
3:43 - 3:45இதனால் நம்மால் புன்னகைப்பவரது உண்மையான
-
3:45 - 3:47நிலையை புரிந்து கொள்ள முடியும்.
-
3:47 - 3:49சமீபத்தில் பின்பற்றி நடிக்கும் ஆய்வொன்று,
-
3:49 - 3:52ஃப்ரான்சின் க்லேர்மொன்ட்-ஃபெரன்ட் பல்கலைக்கழகத்தில் நடந்தது,
-
3:52 - 3:54அதில் ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட்டவர்களிடம்
-
3:54 - 3:56ஒரு புன்னகை உண்மையானதா போலியானதா என்று தீர்மானிக்கும்படி கூறப்பட்டது
-
3:56 - 3:58அதுவும் அவர்களது வாயில் பென்சில் பிடித்தபடி
-
3:58 - 4:00இது அவர்களது சிரிக்கும் தசைகளை அடக்கி வைப்பதற்காக.
-
4:00 - 4:03பென்சில் இல்லாத போது ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட்டவர்கள் மிகச்சிறந்த நீதிபதிகளாக இருந்தனர்,
-
4:03 - 4:05ஆனால் பென்சிலை வாயில் பிடித்திருந்த போது,
-
4:05 - 4:08அவர்கள் கண்ட அந்த புன்னகையை திரும்ப செய்து பார்க்க முடியாத போது,
-
4:08 - 4:10அவர்களது தீர்ப்பு தவறியது.
-
4:10 - 4:12(சிரிப்பொலி)
-
4:12 - 4:15"தி ஒரிஜின் ஆஃப் ஸ்பிசீஸ்" -ல் பரிணாமம் குறித்து தத்துவக்கோட்பாடு,
-
4:15 - 4:17சார்ல்ஸ் டார்வின் எழுதும் பொழுது
-
4:17 - 4:19முகபாவத்துக்கேற்ற மறுமொழி குறித்த கோட்பாட்டையும் எழுதினார்.
-
4:19 - 4:21அவரது தத்துவக்கோட்பாட்டின் படி
-
4:21 - 4:23புன்னகைத்தலே
-
4:23 - 4:25உண்மையில் நம்மை மேலும் நல்ல விதமாக உணரச்செய்யும் --
-
4:25 - 4:27மாறாக புன்னகைத்தல் என்பது வெறுமனே,
-
4:27 - 4:29நல்லபடியாக உணர்வதின் வெளிப்பாடு அல்ல.
-
4:29 - 4:31அவரது ஆய்வில்,
-
4:31 - 4:34டார்வின், கில்லாமே டுசேன்னே என்ற ஃபிரெஞ்சு நரம்பியல் மருத்துவர் பற்றி குறிப்பிட்டிருந்தார்.
-
4:34 - 4:37அவர் முகத்தசைகளில் மின்சார அதிர்வுகளை பிரயோகித்து
-
4:37 - 4:39புன்னகையை தூண்டும் ஆராய்ச்சி செய்திருந்தார்.
-
4:39 - 4:41தயவு செய்து, இதை யாரும் வீட்டில் முயற்சி செய்து பார்க்க வேண்டாம்.
-
4:41 - 4:43(சிரிப்பொலி)
-
4:43 - 4:45இது சம்பந்தப்பட்ட ஒரு ஜெர்மன் ஆய்வில்,
-
4:45 - 4:47ஆராய்ச்சியாளர்கள் எம்.ஆர்.ஐ படிமமாக்கல் முறையை பயன்படுத்தி இருந்தனர்
-
4:47 - 4:49மூளையின் செயற்பாட்டை அளப்பதற்காக
-
4:49 - 4:52போடாக்ஸ் (Botox) செலுத்துவதற்கு முன்னரும் பின்னரும்
-
4:52 - 4:55அதுவும் சிரிக்கும் தசைகளை அடக்குவதற்காக.
-
4:55 - 4:57ஆராய்ச்சியின் முடிவு டார்வினின் தத்துவக்கோட்பாட்டை ஆதரிப்பதாக இருந்தது
-
4:57 - 4:59அதாவது, முகபாவ மறுமொழி
-
4:59 - 5:01மூளையின் உணர்ச்சித்தொகுப்பின்
-
5:01 - 5:03நரம்பியல் செயலாக்கத்தை மாற்றி அமைக்கிறது
-
5:03 - 5:06அதுவும் நாம் புன்னகைக்கும் போது, நம்மை மேலும் நல்ல படியாக உணரவைக்கிறது.
-
5:07 - 5:09புன்னகைத்தல் நமது மூளையின் வெகுமதிநிலை நுட்பத்தை ஊக்குவிக்கிறது
-
5:09 - 5:11அது, மிகச் சிறந்த சந்தோஷ ஊக்கியான சாக்லேட்-ஆல்
-
5:11 - 5:14கூட ஈடசெய்ய முடியாத அளவிற்கு
-
5:14 - 5:16ஊக்குவிக்கின்றது.
-
5:16 - 5:19பிரித்தானிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தது என்னவெனில்
-
5:19 - 5:22ஒரு புன்னகை தரும் மூளையின் ஊக்கத்தின் அளவு
-
5:22 - 5:252000 சாக்லேட் பட்டைகள் தரும் மூளை ஊக்கத்திற்கு சமனானதாகும்.
-
5:25 - 5:27(சிரிப்பொலி)
-
5:27 - 5:30பொறுங்கள். அதே ஆய்வு கண்டுபிடித்தது
-
5:30 - 5:32புன்னகைத்தல் மூலம் மூளை ஊக்கமடைவது
-
5:32 - 5:3716000 ஸ்டெர்லிங் பவுண்ட்கள் பணமாக கிடைப்பது போன்றதாகும்.
-
5:37 - 5:39அதாவது ஒரு புன்னகைக்கு 25 ஆயிரம் டொலர்கள்.
-
5:39 - 5:41அது அத்தனை மோசமில்லை.
-
5:41 - 5:43இப்படி யோசித்துப்பாருங்கள்:
-
5:43 - 5:4525000 முறைகள் 400 --
-
5:45 - 5:47இங்குள்ள சில பல குழந்தைகள்
-
5:47 - 5:50தினமும் மார்க் ஜுக்கெர்பேர்க் போல உணர்கிறார்கள்.
-
5:50 - 5:52மாறாக, அதிகளவான சாக்லெட்களைப் போலல்லாது
-
5:52 - 5:55நிறைய புன்னகைத்தல் உங்களை மேலும் ஆரோக்கியம் அடையச் செய்யும்.
-
5:55 - 5:57புன்னகைத்தல் என்பது
-
5:57 - 5:59அழுத்தம் அதிகரிக்கும் சுரப்பிகளான
-
5:59 - 6:02கோர்டிசொல், அட்ரினலின், டோபமின் போன்றவற்றை குறைத்து,
-
6:02 - 6:04நல்ல மன நிலையை தூண்டும் சுரப்பிகளான
-
6:04 - 6:06எண்டோர்ஃபின் போன்றவற்றை அதிகரித்து
-
6:06 - 6:08மொத்த அளவிலான இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
-
6:08 - 6:10இது போதாதெனில்,
-
6:10 - 6:12புன்னகைத்தல் அழகாக காட்சி அளிக்கும்
-
6:12 - 6:14அடுத்தவர் பார்வையில்.
-
6:14 - 6:16பெண் (Penn) மாநில பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வில்
-
6:16 - 6:18நீங்கள் சிரிக்கும் பொழுது
-
6:18 - 6:21கூடுதல் பிடித்தமானவராகவும் பணிவானவரகவும் மட்டும் காணப்படாமல்,
-
6:21 - 6:25கூடுதல் திறமையானவராகவும் காணப்படுவீர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
-
6:25 - 6:27ஆகையால் எப்பொழுதெல்லாம் நீங்கள் திறமையானவராகவும் மேன்மையானவராகவும் தோற்றமளிக்க விரும்புகிறீர்களோ,
-
6:27 - 6:29அல்லது மன அழுத்தத்தை குறைக்க முனைகிறீர்களோ
-
6:29 - 6:31அல்லது திருமண வாழ்வை சீர்படுத்த முனைகிறீர்களோ,
-
6:31 - 6:34அல்லது மிகப்பெரிய உயர் தர சாக்லேட் உண்ட உணர்வு பெற நினைக்கிறீர்களோ --
-
6:34 - 6:37அதற்கான கலோரி விலையைக் கொடுக்காமல் --
-
6:37 - 6:39அல்லது உங்களது பல காலம் அணிந்திராத பழைய சட்டைப்பையில்
-
6:39 - 6:4225 ஆயிரம் டொலர்களைக் கண்டெடுத்ததைப் போல் உணர விரும்புகிறீர்களோ,
-
6:42 - 6:46அல்லது எப்பொழுதெல்லாம் உங்களது உன்னத சக்தியை உபயோகித்து
-
6:46 - 6:49உங்களுக்கும் உங்களை சுற்றியுள்ள மற்றவர்க்கும்
-
6:49 - 6:52நீண்ட ஆரோக்கியமான சந்தோஷமான வாழ்க்கை வாழ உதவ நினைக்கிறீர்களோ,
-
6:52 - 6:54அப்பொழுதெல்லாம் புன்னகையுங்கள்.
-
6:54 - 7:05(கைத்தட்டல்)
- Title:
- ரோன் குட்மன்: புன்னகையில் புதைந்துள்ள சக்தி
- Speaker:
- Ron Gutman
- Description:
-
ரோன் குட்மன் புன்னகை குறித்த பல ஆய்வுக்குறிப்புகளை ஆராய்ந்து, சில வியக்கத்தக்க முடிவுகளை வெளியிடுகிறார். உங்களது புன்னகையை வைத்து உங்களது ஆயுளை முன்கூட்டியே கணிக்க முடியும் என்பதும், ஒரு சிறிய புன்முறுவல் உங்களது நல வாழ்வில் ஒரு குறிப்பிடத்தக்க விளைவினை ஏற்படுத்தும் என்பதும் உங்களுக்கு தெரியுமா? பரிணமிக்கும் இந்த தொற்றக்கூடிய இயல்பினைக்குறித்து தெரிந்து கொள்ளும் பொழுதே ஒரு சில முக தசைகளை சுருக்கி விரிக்கவும் தயாராகுங்கள்.
- Video Language:
- English
- Team:
closed TED
- Project:
- TEDTalks
- Duration:
- 07:06