-
கழித்தல் கணக்கில் ஒரு எளிய வழி முறையை இந்தக் காணொளியில் பார்க்கவிருக்கிறோம்.
-
இதனை மனதில் வைத்துக் கொண்டால் எப்போதும் பயனுள்ளதாக இருக்கும்.
-
இந்த முறையில் கணக்கை செய்ய நாம் அவசரமாக காகிதத்தைத் தேட வேண்டியதில்லை.
-
ஞாபகத்தில் வைத்துக் கொள்ளக் கூடிய அளவிற்கு எளிதாகத் தான் இருக்கும்.
-
ஏனென்றால், கழித்தலில் கடன் வாங்கும் முறையை
-
ஞாபகத்தில் வைத்திருப்பது கடினம் ஆகும்.
-
எடுத்துக் காட்டாக சில கணக்குகளைச் செய்து பார்ப்போம்
-
"ஒன்பதாயிரத்தி நானூற்றி ஐம்பத்தி ஆறு கழித்தல் ஏழாயிரத்தி ஐநூற்றி எண்பத்தி ஒன்பது" (9456 - 7589) என்ற கணக்கை செய்வோம்.
-
இதை மனக் கணக்காக எப்படிச் செய்வது....
-
நமக்குக் கொடுக்கப்பட்ட இரண்டு எண்களையும்
-
இரண்டு எண்களையும் நாம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
-
சரி, முதலில், "ஒன்பதாயிரத்தி நானூற்றி ஐம்பத்தி ஆறு
-
கழித்தல் ஏழாயிரம்" எவ்வளவு என்பதை மட்டும் பார்ப்போம்.
-
இது எளிமையானதுதான்- நாம் "ஒன்பதாயிரத்தில் இருந்து
-
ஏழாயிரத்தைக் கழித்து விட வேண்டும்.
-
அப்பொழுது பெரிய எண்ணில் இருந்து
-
இரண்டாயிரத்தி நானூற்றி ஐம்பத்தி ஆறு நமக்கு மீதமாகக் கிடைக்கிறது.
-
"9456 கழித்தல் 7589" என்பது
-
இரண்டாயிரத்து நானூற்றி ஐம்பத்தாறில் இருந்து
-
ஐநூற்றி எண்பத்து ஒன்பதைக் கழிப்பதற்குச் சமம் என்று வைத்துக் கொள்ளலாம்.
-
ஏனென்றால் நாம் முன்னரே ஏழாயிரத்தைக் கணக்கிலிருந்து எடுத்து விட்டோம்.
-
நமக்குக் கொடுக்கப்பட்ட எண்ணில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைப்பது கணக்கிட உதவியாக இருக்கும்.
-
அடுத்து நாம் செய்ய வேண்டியது
-
"2456 லிருந்து 589 " என்ற எண்ணைக் கழித்தல் ஆகும்.
-
கீழிருக்கும் எண்ணிலிருந்து ஐநூற்றை கழித்தால்,
-
இந்த ஐந்து நீங்கி விடும்.
-
மேலேயிருக்கும் எண்ணிலிருந்து
-
அதாவது இரண்டாயிரத்து நானூற்றி ஐம்பத்தி ஆறில் இருந்து ஐநூற்றை கழித்தால், என்ன கிடைக்கும்?
-
அல்லது இதனைச் செய்வதற்கு வேறு முறை இருக்கிறதா...?
-
இருபத்தி நான்கில் ஐந்தைக் கழித்தால் எவ்வளவு கிடைக்கும்?
-
அது, பத்தொன்பதுதான்.
-
ஆகவே மேலிருக்கும் எண் "1956"ஆக மாறும்.
-
தொடர்ந்து செய்வோம்.
-
நம்மிடம் இருப்பது "1956".
-
இந்தக் கழித்தலில் எஞ்சியிருப்பது 1956 கழித்தல் 89
-
இப்போது இரண்டு எண்களிலிருந்தும் நாம் எண்பதைக் கழித்து விடுவோம்.
-
கீழிருக்கும் எண்ணில் எட்டு மறைந்து விடும்.
-
எண்பத்து ஒன்பதில் ஒன்பதைக் கழித்தால் கிடைப்பது ஒன்பது.
-
மேலே உள்ள எண்ணில் இருந்து எண்பதைக் கழிக்கலாமா....?
-
சரி நூற்றித் தொண்ணூற்றி ஐந்தில் இருந்து எட்டைக் கழித்து விடுவோம்.
-
159 கழித்தல் எட்டு.
-
பதினைந்து கழித்தல் எட்டு என்றால் ஏழு.
-
அதனால், 195 கழித்தல் எட்டு என்றால் நூற்றி எண்பத்து ஏழு.
-
இங்கே ஆறு மிச்சமிருக்கிறது.
-
அதனால், 1956 இல் எண்பதைக் கழித்து விட்டால் 1876 தான்.
-
ஆக இறுதியாக நமது கணக்கு "1876 கழித்தல் ஒன்பது என்ற அளவிற்குச் சுருங்கி விட்டது.
-
இது எளிது தானே....?
-
எழுபத்தி ஆறு கழித்தல் ஒன்பது என்றால்.....
-
என்றால் என்ன?
-
அறுபத்தி ஏழு.
-
எனவே நம்முடைய இறுதியான விடை 1876.
-
மனக்கணக்காகப் போடும் இந்த முறை
-
காகிதத்தில் செய்வதைக் காட்டிலும் விரைவாக இருக்க வேண்டும் என்பதில்லை.
-
ஆனால், எந்த நிலையிலும் ஒரு எண்ணை நினைவில் வைத்திருப்பதற்கு
-
இந்த மனக் கணக்கு முறை உதவியாக இருக்கும்.
-
இங்கு புதிதாகப் பெறும் மேலுள்ள எண்ணையும்
-
கீழ்ப்பகுதி எண்ணையும் நாம் நினைவில் வைத்துக் கொண்டால் தான் இந்த முறையில் கணக்கிட முடியும்.
-
அடிப்பகுதியில் மிச்சமாகும் எண் தான்
-
எப்போதும் கீழ் நிலையில் உள்ள எண்ணாக இருக்கும்.
-
அதற்காகத் தான் இந்தக் கணக்கை மனதிலேயே போட நமக்குப் பிடித்தமாக இருக்கிறது.
-
காணொளியின் உதவியின்றி போட்ட இந்தக் கணக்கு சரியாக இருக்கிறதா என்பதை
-
ஒருமுறை உறுதிப்படுத்திக் கொள்வோம்.
-
சரி பார்க்க வழக்கமான முறை தான் சிறந்தது.
-
எனவே 9456 கழித்தல் 7589 என்ன என்று பார்ப்போம்.
-
கடன் வாங்கிக் கழித்தலைத் தானே எப்போதும் செய்கிறோம்.
-
அதனால்
-
கடன் வாங்க தயாராகி விடுவோம்.
-
மேலுள்ள எண்கள் எல்லாம்
-
கீழுள்ள எண்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
-
வலது பக்கத்தில் இருந்து தொடங்குவோம்.
-
ஆறு ஒன்பதை விட பெரிதல்ல. அதனால் பக்கத்தில் உள்ள எண்ணில் இருந்து கடன் பெற்றுக் கொள்வோம்.
-
பத்தின் இடத்தில் உள்ள ஒரு எண்ணை கடன் பெறுவோம்.
-
-
அதனால், இந்த ஆறு பதினாறாக மாறுகிறது. பத்தின் இடத்திலுள்ள ஐந்து, நான்காகி விடுகிறது.
-
அப்புறம், பத்துகளின் இடத்திற்குச் செல்வோம்.
-
நான்கு எட்டைவிட பெரிதல்ல, அதனால் நூறுகளின் இடத்திலிருந்து ஒரு நூறினை பத்தின் இடத்தற்குக் கொண்டு வருவோம்.
-
நான்கு எட்டைவிட பெரிதல்ல, அதனால் நூறுகளின் இடத்திலிருந்து ஒரு நூற்றை பத்து பத்துகளாக இனமாற்றம் செய்வேன்.
-
எனவே, இங்குள்ள நான்கு பதிநான்காக மாறுகிறது.
-
பத்துகளின் இடத்தில் நாம் இருப்பதால், அது பதினான்கு பத்துகளாக மாறுகிறது.
-
நூறின் இடத்தில் உள்ள நான்கு மூன்றாக மாறுகிறது.
-
இங்கே நாம் மூன்று வைத்திருக்கிறோம். இது ஐந்தை விட பெரிதல்ல.
-
-
ஆகவே மீண்டும் ஒரு முறை கடன் வாங்குவோம்.
-
அந்த மூன்று பதிமூன்றாக மாறுகிறது. ஒன்பது எட்டாக ஆகி விடுகிறது.
-
இப்பொழுது நாம் கழிக்கத் துவங்கலாம்.
-
பதினாறு கழித்தல் ஒன்பது என்றால் ஏழு.
-
பதினான்கு கழித்தல் எட்டு என்றால் ஆறு.
-
பதின்மூன்று கழித்தல் ஐந்து என்றால் எட்டு.
-
எட்டு கழித்தல் ஏழு என்றால் ஒன்று.
-
நாம் மனக் கணக்காகப் போட்டதும் சரியான விடை தான்.
-
இங்கே ஒன்றை நாம் தெளிவுபடுத்திக் கொள்வோம்.
-
இதுபோன்ற கழித்தல் கணக்கைச் செய்வதற்கு இதைக் காட்டிலும் சிறப்பான வழி ஒன்று இல்லை.
-
இந்த முறை நீளமானது, சற்றே அதிக நேரத்தையும் எடுக்கக் கூடியது.
-
-
ஆனால் முதலில் கணக்கிட்ட முறைக்கு நல்ல நினைவுத் திறன் அவசியமாக இருக்கிறது.
-
கடன் வாங்கிக் கழித்தல் முறையில்
-
அருகில் உள்ள இடத்தில் இருந்து கடன் வாங்கிய தொகையை தினைவில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.
-
-
-
இரண்டு எண்களை நினைவில் வைத்திருப்பது எளிது தான்.
-
இந்த இரண்டு எண்களும் ஒவ்வொரு கழித்தலுக்கு பிறகு மேலும் எளிமையாக மாறும்.
-
அதனால்தான் முதல் வழி கழித்தல் மனதில் செய்வதற்கு எளியதாக இருக்கலாம்.
-
-
ஆனால் இரண்டாம் வழியானது காகிதத்தில் எழுதி செய்யும்பொழுது எளிமையாக இருக்கும்.
-
ஆனால், முதல் வழியில் கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை.
-
எப்படியானாலும் புதிய கணக்கு முறை ஒன்றைக் கற்றுக் கொள்வது பயனுள்ளது தானே.....