ஏரியானா ஹஃபிங்க்டன்: வெற்றி பெறுவது எப்படி? நன்றாகத் தூங்குங்கள்
-
0:00 - 0:02எனது பெரிய எண்ணம்
-
0:02 - 0:04ஒரு சின்னஞ்சிறு எண்ணமே.
-
0:04 - 0:06அதன் பலம்,
-
0:06 - 0:09கோடானுகோடி பெரிய எண்ணங்களை,
-
0:09 - 0:12தற்போது நம்முள் உறங்கிக்கொண்டு இருக்கும் அவைகளை தட்டி எழுப்ப வல்லது.
-
0:12 - 0:14அதனைச் செய்ய வல்ல என்னுடைய சிறிய எண்ணம் என்னவென்றால்,
-
0:14 - 0:16"தூக்கம்"
-
0:16 - 0:18(சிரிப்பு)
-
0:18 - 0:22(கைதட்டல்)
-
0:22 - 0:25இது "அ"-வகை மகளிரை கொண்ட ஒரு அறை.
-
0:26 - 0:28இந்த அறையில்
-
0:28 - 0:31தூக்கம் கெட்ட மகளிரே நிறைந்துள்ளனர்.
-
0:31 - 0:33மேலும் நான் கடினமான வழியிலேயே,
-
0:33 - 0:35தூக்கத்தின் மதிப்பினை கற்றுக்கொள்ள நேர்ந்தது.
-
0:35 - 0:37இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு,
-
0:37 - 0:39முழுச்சோர்வுற்று மயங்கியதில்,
-
0:39 - 0:42என் தலையை மேஜையில் தட்டியதால், என் கன்ன எலும்புகள் முறிந்து,
-
0:42 - 0:45எனது வலது கண்களின் கீழ் ஐந்து தையல்களை போட நேர்ந்தது.
-
0:45 - 0:47அன்று தொடங்கிய என் பயணத்தில்,
-
0:47 - 0:50தூக்கத்தின் மதிப்பினை திரும்ப கண்டுபிடித்தேன்.
-
0:50 - 0:52அந்த பயணத்தின் ஊடாக,
-
0:52 - 0:54நான் படித்த பாடங்கள்,
-
0:54 - 0:56நான் சந்தித்த மருத்துவர்கள், அறிவியலாளர்கள்,
-
0:56 - 0:58அனைத்து வகையிலும் கற்ற பாடங்கள என்று நான் உங்களுக்கு இங்கே சொல்ல விழைவது,
-
0:58 - 1:01ஆக்கப்பூர்வமான,
-
1:01 - 1:03ஊக்கம் மிகுந்த, இனிமையான வாழ்க்கை முறை வேண்டுமென்றால்,
-
1:03 - 1:06போதுமான அளவுக்கு தூங்கவேண்டும்.
-
1:06 - 1:11(கைதட்டல்)
-
1:11 - 1:14பெண்களாகிய நாம் தான் இதனை முன்னெடுத்துச் செல்லப் போகிறோம்.
-
1:14 - 1:17நாம் இந்த புதிய புரட்சியையும், புதிய பெண்மையினையும் முன்னெடுத்துச் செல்லப்போகிறோம்.
-
1:18 - 1:21குறிப்பாக, நாம் உறங்கி எழுந்தே மேலே செல்லப்போகிறோம்.
-
1:21 - 1:23(சிரிப்பொலி)
-
1:23 - 1:28(கைதட்டல்)
-
1:28 - 1:30ஆனால் துரதிர்ஷ்டவசமாக
-
1:30 - 1:32ஆண்களுக்கு
-
1:32 - 1:35தூக்கமின்மை ஆண்மைக்குரிய லட்சனமாகி விட்டது.
-
1:36 - 1:38நான் சமீபத்தில் ஒரு மனிதரோடு விருந்துக்கு சென்றிருந்தேன்.
-
1:38 - 1:40அவர் மிகவும் பெருமையாக
-
1:40 - 1:42சென்ற இரவு வெறும் நான்கு மணிநேரம் தூங்கியதாக சொன்னார்.
-
1:42 - 1:45அவரிடம் நான் சொல்ல எத்தனித்தது என்னவென்றால் - ஆனால் நான் சொல்லவில்லை --
-
1:45 - 1:47அவரிடம் நான் சொல்ல நினைத்தது, "உங்களுக்கு ஒன்று தெரியுமா?"
-
1:47 - 1:49நீங்கள் ஒருவேளை ஐந்து மணிநேரம் தூங்கியிருந்தால்,
-
1:49 - 1:52இந்த விருந்து இன்னும் ஆர்வமுடையதாக இருந்திருக்கும் என்று.
-
1:52 - 1:55(சிரிப்பொலி)
-
1:55 - 1:57இப்போதெல்லாம் தூக்கம் இழப்பதில்,
-
1:57 - 1:59யார் வல்லவர் என்ற நிலை உள்ளது.
-
1:59 - 2:02குறிப்பாக, இங்கு வாஷிங்டனில், பகல் சிற்றுண்டி சந்திப்புக்கு ஏற்பாடு செய்து,
-
2:02 - 2:04"எட்டு மணிக்கு சரியாக இருக்குமா" என்று கேட்டீர்கள் என்றால்,
-
2:04 - 2:06அழைக்கப்பட்டவர்கள் அநேகமாக, "எட்டு மணி என்பது எனக்கு ரொம்ப தாமதமாகப் படுகிறது" என்று சொல்லிவிட்டு,
-
2:06 - 2:08சரி பரவாயில்லை, ஒரு ஆட்டம் டென்னிஸ் ஆடி விட்டு,
-
2:08 - 2:11ஒரு சில கலந்தழைப்புகளை முடித்துவிட்டு, உங்களை எட்டு மணிக்கு சந்திக்கிறேன் என்று கூறுவார்கள்.
-
2:11 - 2:13அவர்களைப் பொறுத்தவரை அதன் பொருள்,
-
2:13 - 2:16அவர்கள் மிகவும் ஓய்வில்லாமல் வேலை செய்து அதனால் மிகவும் ஆக்கப்பூர்வமானவர்கள் என்றும் தங்களை நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
-
2:16 - 2:19அனால் உண்மையில் அவர்கள் அப்படி இல்லை.
-
2:19 - 2:21ஏனென்றால் இந்த கட்டத்தில்,
-
2:21 - 2:23நமக்கு அறிவார்ந்த தலைவர்கள் பலர்,
-
2:23 - 2:26தொழில் துறையிலும், நிதித்துறையிலும், அரசியல் துறையிலும்,
-
2:26 - 2:29மோசமான முடிவுகளை எடுப்பவர்களாக கிட்டியிருக்கிரார்கள்.
-
2:29 - 2:31ஆக மிகுதியான நுண்ணறிவு ஈவு இருப்பதால்,
-
2:31 - 2:34அவர்கள் நல்ல தலைவர்கள் என்று பொருளல்ல.
-
2:34 - 2:36ஏனென்றால் தலைமைப் பண்பு என்பது,
-
2:36 - 2:38இடுக்கண் வருவதை வருமுன் யூகித்து,
-
2:38 - 2:41அதற்கு தக்கவாறு ஏற்பாடுகளைச் செய்வதே ஆகும்.
-
2:41 - 2:44ஆனால் நமக்கு இன்று பல இடர்களும், இடுக்கண்ணும்,
-
2:44 - 2:46வந்த வண்ணமே உள்ளன.
-
2:46 - 2:48நான் என்ன உணருகிறேன் என்றால்,
-
2:48 - 2:50லேமன் சகோதரர்கள் ஒருவேளை,
-
2:50 - 2:52"லேமன் சகோதர்கள் மற்றும் சகோதரிகள்" என்று இருந்திருக்குமேயானால்,
-
2:52 - 2:54அவர்கள் இன்னும் நம்மிடையே இருந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
-
2:54 - 2:57(கைதட்டல்)
-
2:57 - 2:59எல்லா சகோதரர்களும் வேலையே கதியென்று,
-
2:59 - 3:02வாரத்தின் ஏழு நாட்களில் 24 மணிநேரமும் மிகையிணைப்புடன் இருந்தபோது,
-
3:02 - 3:05ஒருக்கால் சகோதரியால் வரப்போகும் ஆபத்தை யூகிக்க முடிந்திருக்கலாம்.
-
3:05 - 3:09ஏனென்றால் ஏழரை அல்லது எட்டு மணிநேர நிறைவான தூக்கத்திலிருந்து விழித்து,
-
3:09 - 3:11அவளால், நடக்கப்போகும்
-
3:11 - 3:13பெரிய சங்கதிகளை கணித்திருக்க முடியும்.
-
3:13 - 3:15ஆக, நாம் சந்திக்கும்,
-
3:15 - 3:17பலவித இடர்பாடுகளும்,
-
3:17 - 3:20இவ்வுலகில் ஒரே நேரத்தில் நமக்கு நேரும் போது,
-
3:20 - 3:23நமது சொந்த மட்டத்தில் எவை நமக்கு நன்மை பயப்பனவோ,
-
3:23 - 3:26எவை நமக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், நிறைவையும்,
-
3:26 - 3:28வாழ்வின் செயல்பாட்டையும் அளித்து,
-
3:28 - 3:31நமது வாழ்நாள் தொழிலுக்கு உகந்து விளங்குகிறதோ,
-
3:31 - 3:34அதுவே நம் உலகிற்கும் உகந்ததாக விளங்குகிறது.
-
3:34 - 3:37நான் உங்களிடம் கேட்டுக்கொள்வதெல்லாம்,
-
3:37 - 3:39நன்றாக கண்ணை மூடிக்கொண்டு,
-
3:39 - 3:41சிறந்த சிந்தனைகள்
-
3:41 - 3:43நம்முள் நிறைந்து கிடப்பதை கண்டறிந்து,
-
3:43 - 3:46உங்கள் உடல் என்னும் பொறிக்கு ஒய்வு கொடுக்கும் வண்ணம், தூக்கத்தின் ஆற்றலை கண்டறிய முற்படுங்கள் என்பதே.
-
3:46 - 3:48நன்றி
-
3:48 - 3:50(கைதட்டல்)
- Title:
- ஏரியானா ஹஃபிங்க்டன்: வெற்றி பெறுவது எப்படி? நன்றாகத் தூங்குங்கள்
- Speaker:
- Arianna Huffington
- Description:
-
இந்த சிறிய பேச்சில், ஏரியானா ஹஃபிங்க்டன் அவர்கள் ஒரு சிறிய எண்ணத்தை பகிரும் இடத்தே எப்படி அது பெரிய எண்ணங்களை நம்முள் எழுப்பும் என்பதை உணர்த்துகிறார்: நல்ல இராத்தூக்கத்தின் ஆற்றல் விவரிக்கப்படுகிறது. குறைவாகவே தூங்குகிறேன் என்று பெருமை பட்டுக்கொள்வோரை, கண் அயரத் தூங்கி பெரிய பலனைக் காண நம்மை கேட்டுக்கொள்கிறார். நாம் நன்றாகத் தூங்கினால் நம் திறனும், மகிழ்ச்சியும் பன்மடங்கு உயர்வது உறுதி. அதுமட்டுமல்ல நமது தீர்வு காணும் திறனும் பன்மடங்கு உயரும் என உணர்த்துகிறார்.
- Video Language:
- English
- Team:
closed TED
- Project:
- TEDTalks
- Duration:
- 03:50