-
வகுத்தல் பற்றிப் பார்ப்போம். இங்கு 24 முக்கோணங்கள் உள்ளன.
-
முதலில் இவற்றை 3 சம குழுமங்களாகப் பிரித்துக் கொள்வோம்.
-
24 ஐ மூன்று சம குழுக்களாகப் பிரித்தால் ஒவ்வொன்றிலும் எத்தனை இருக்கும்....? அது ஒரு சம குழு...
-
இது மற்றுமொரு சம குழு
-
இது... அடுத்தது. இது இன்னொரு சம குழு.
-
24 ஐ 3 சம குழுமங்களாகப் பிரித்தால் ஒவ்வொன்றிலும் எத்தனை முக்கோணங்கள் இருக்கும்?
-
ஒவ்வொரு குழுவிலும்... 1,2,3,4,5,6,7,8.. எட்டு முக்கோணங்கள் உள்ளன.
-
எனவே 24 ஐ 3 ஆல் வகுத்தால் கிடைப்பது எட்டு ஆகும்
-
இது பெருக்கலைப் போலவே தோன்றுகிறது இல்லையா....? ஆம்... பெருக்கலின் எதிர்மறை தான் வகுத்தல்.
-
பெருக்கல் முறைப்படி "8 முக்கோணங்களை 3 குழுக்களால் பெருக்கினால் 24 கிடைத்து விடுகிறது.
-
சரியாகச் சொன்னால்......
-
24 வகுத்தல் எட்டு என்பதன் விடை மூன்று...... மூன்று பெருக்கல் எட்டு என்பது 24 ஆகும். இப்பொழுது புரிகிறதா...?
-
நம்மிடம் 24 பொருட்கள் உள்ளன, அவற்றை 3 குழுக்களாக பிரித்தால், ஒவ்வொரு பிரிவிலும் 8 இருக்கும்.
-
வேறு விதமாகச் சொன்னால் எட்டு எண்ணிக்கை கொண்ட 3 சம குழுமங்கள் 24க்குச் சமமாகிறது.
-
பெருக்கலும் வகுத்தலும் எதிர்மறையானது என்று சொல்லப்பட்டாலும்
-
பெருக்கல்,,,, வகுத்தல் வடிவத்தில் இருந்து வருகிறது. வகுத்தல் பெருக்கல் வடிவத்தினுள் உள்ளது.
-
நம்மிடமிருந்த முக்கோணங்களை மூன்று குழுக்களாகப் பிரித்தால்
-
அதாவது இது ஒரு 3ன் குழு, இது இன்னொரு 3ன் குழு, அதேப்போல் ...
-
இது மற்றொரு 3 இன் குழு. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு மூன்றின் குழு.
-
இது மற்றும் ஒரு 3ன் குழுமம் ...அது மற்றும் ஒரு 3ன் குழுமம்
-
நம்மிடம் 1 , 2, 3, 4, 5, 6, 7, எட்டுப் பொருட்களைக் கொண்ட மூன்று குழுக்கள் உள்ளன.
-
24 / 3 என்பது, 24ஐ 3ன் குழுமங்களாக பிரிப்பதாகும். நாம் 8 பொருட்களைக் கொண்ட மூன்று குழுக்களைப் பெறுகிறோம்.
-
இதுவே தான் பெருக்கலிலும் வெளிப்படுகிறது.
-
நம்மிடமுள்ள எட்டு பொருட்களைக் கொண்ட மூன்று குழுக்களானது எண் 24 க்குச் சமம் ஆகும்.
-
எட்டுகள் கொண்ட மூன்று குழுவோ அல்லது
-
மூன்றுகளைக் கொண்ட எட்டு குழுவோ எதுவானாலும் அது 24 பொருட்களைக் கொண்டிருக்கும்.
-
இதனை எப்படி சுவாரஸ்யப்படுத்துவதென்று யோசிப்போம்.
-
24 /12 என்றால் எவ்வளவு? நீங்களே யோசித்துப் பாருங்கள்.
-
24/12 என்பதை நாம் இரண்டு விதமாகப் பார்க்கலாம்.
-
24 ஐ 12 பொருட்கள் கொண்ட குழுக்களாகப் பிரிக்கலாம்.
-
அப்போது எத்தனை குழுக்கள் கிடைக்கும்.?
-
2 குழுக்கள் கிடைக்கும். எனவே 24 /12 =2 என்று கூறலாம்.
-
24ஐ 12 பொருட்கள் கொண்ட குழுக்களாகப் பிரிப்பதற்குப் பதிலாக,
-
12 சம குழுக்களாகப் பிரிக்கவும் செய்யலாம்.
-
1 சம குழுமம் , 2 சம குழுமம்... 3 ,4,5,6,7,8,9,10, 11, 12
-
எனவே 24 ஐ 12 சம குழுக்களாக பிரித்தால், ஒவ்வொரு குழுவிலும் உள்ள பொருட்கள் எத்தனை?
-
24 ஐ, 12 சம குழுக்களாகப் பிரித்தால், இரண்டு பொருட்கள் இருக்கும்.
-
ஒவ்வொரு குழுவிலும் எத்தனை பொருட்கள் கொண்ட எத்தனை குழுக்களாக நாம் பிரிக்க முடியும்.....?
-
கடந்த எடுத்துக் காட்டில் பார்த்தது போலத்தான்..... சற்று சுவாரஸ்யப்படுத்தப் போகிறோம்.
-
இதனை நாம் இரண்டு விதமாகச் செய்யலாம்.
-
24 ஐ ஆறினால் வகுத்தால் என்ன விடை கிடைக்கும்....?
-
அதேபோல 24 கீழ் 4 இன் விடை என்ன...?.
-
காணொளியின் உதவியில்லாமல் நீங்களே முக்கோணம் வரைந்து விடை காண முயற்சிக்கலாம்.
-
24 /6 மற்றும் 24/4ன் விடை என்ன?
-
முதலில் 24/6 ஐ என்ற கணக்கைத் தீர்க்கலாம்.
-
நாம் 24 ஐ 6 குழுக்களாகப் பிரிக்கலாம்.
-
இது ஒரு சம குழு, இது ஒன்று, இது மற்றொன்று
-
இது நான்கு, ஐந்து, ஆறு ....... இந்த ஆறு குழுக்கள் ஒவ்வொன்றிலும் நான்கு பொருட்கள் உள்ளன.
-
ஒவ்வொரு குழுவிலும் நான்கு பொருட்கள் உள்ளன.
-
இதையே இன்னொரு விதமாக,,,, ஆறு பொருட்கள் கொண்ட குழுக்களாகப் பிரிப்போம்.
-
24 ஐ 6ன் குழுக்களாகப் பிரித்தால்
-
ஆறு பொருட்கள் கொண்ட குழு ஒன்று, இது மற்றொன்று,,,, இது இன்னொன்று
-
ஆறு பொருட்கள் உடைய நான்கு குழுக்கள் உள்ளன.
-
24/4ன் விடையை பாப்போம். இதை, 4 சம குழுமங்கள் கொண்ட 24ஆக பார்க்கலாம்
-
இங்கு 4 சம குழுக்கள் உள்ளன, ஒவ்வொரு குழுவிலும் 6 பொருட்கள்.
-
எனவே, 24 /6 என்றால் விடை 4. 24/ 4 என்றால் விடை 6.
-
இதையே 4 x 6 = 24 என்றும் அல்லது 6 x 4 = 24 என்றும் கூறலாம். இதுதான் வகுத்தலின் அடிப்படை ஆகும்.