< Return to Video

2 digit times 1 digit example

  • 0:01 - 0:04
    இப்பொழுது நாம் 6 உடன் 37ஐ பெருக்கலாம்.
  • 0:04 - 0:07
    இதை செய்ய நான் உங்களுக்கு ஒரு வழியை காட்டுகிறேன், பிறகு அடுத்து வரும் காணொளிகளில்
  • 0:07 - 0:11
    நாம் இதை செய்ய மற்ற வழிகளை பார்க்கலாம்.
  • 0:11 - 0:16
    முதலில் பெரிய எண்ணை எடுத்துக்கொள். இதற்கு பெயர் "standard method."- தரப்படுத்தப்பட்ட வழி
  • 0:16 - 0:20
    இதை நீங்கள் 6 பெருக்கல் 37 அல்லது 37 பெருக்கல் 6 என்றும் செய்யலாம். இரண்டும் ஒன்றுதான்.
  • 0:20 - 0:23
    6 பெருக்கல் 37 மற்றும் 37 பெருக்கல் 6 ஒன்றுதான்
  • 0:23 - 0:27
    அதனால் பெரிய எண்ணை எடுத்துக்கொண்டு மேலே எழுதவும்.
  • 0:27 - 0:34
    எனவே நான் முதலில் 37 எழுதிவிட்டு பிறகு சிறிய எண்ணான 6ஐ கீழே எழுதுகிறேன்.
  • 0:34 - 0:36
    சரியான இடம்படி எழுதுகிறேன்.
  • 0:36 - 0:44
    ஆறு ஒரு ஒன்றாம் இட எண் என்கிறதால் அதனை ஒன்றாம் இடத்தில் எழுதுகிறேன்.
  • 0:44 - 0:47
    பிறகு நான் பெருக்கல் குறியை இப்படி எழுதுகிறேன்.
  • 0:47 - 0:52
    இது 37 பெருக்கல் 6 எழுதுவதற்கு இன்னொரு வழி. திரும்பவும் கூறுகிறேன், 6 பெருக்கல் 37 மற்றும் 37 பெருக்கல் 6ம் ஒன்றுதான்
  • 0:52 - 0:58
    இப்பொது 6இல் ஒன்றாம் இடத்தை பாப்போம்.
  • 0:58 - 1:00
    6றுக்கு ஒன்றாம் இடம்தான் இருக்கிறது.
  • 1:00 - 1:03
    இப்போது 6ஐ மேலே இருக்கும் எண்கள் உடன் பெருக்கலாம்
  • 1:03 - 1:11
    நாம் 6 பெருக்கல் 37 உடன் ஆரம்பிக்கலாம்.
  • 1:11 - 1:18
    6 பெருக்கல் 7, 42 என்று நீங்க வாய்ப்பாட்டில் படிதிருப்பீர்கள்.
  • 1:18 - 1:22
    ஆனால் நாம் 42 என்று இங்கே எழுத முடியாது. - தர வழி அதவாது standard method வழிப்படி செய்யும் பொழுது எழுத முடியாது.
  • 1:22 - 1:27
    எனவே நாம் 42இல் ஒன்றாம் இடத்தில் இருக்கும் 2ஐ இங்கு எழுதலாம்.
  • 1:27 - 1:32
    42இல் இருக்கும் 4, பத்தாம் இடத்துக்கு கொண்டுசெல்லாம்.
  • 1:32 - 1:37
    இப்போது நாம் 6 பெருக்கல் 3ஐ செய்யலாம்.
  • 1:37 - 1:44
    6 பெருக்கல் 3 = 18 என்பதை நாம் அறிவோம்.
  • 1:44 - 1:48
    ஆனால் நாம் 18ஐ கீழே எழுத முடியாது. நம்மிடம் இன்னும் 4 இருக்கிறது.
  • 1:48 - 1:55
    6 பெருக்கல் 3 = 18. பிறகு 18 உடன் 4ஐ கூட்டவும்
  • 1:55 - 1:57
    எனவே 6 பெருக்கல் 3 = 18; மற்றும் 18 கூட்டல் 4 = 22.
  • 1:57 - 2:03
    எனவே 6 பெருக்கல் 3இன் விடையை, 4 உடன் கூட்டுகிறோம்.
  • 2:03 - 2:07
    எனவே 6 பெருக்கல் 37 = 222
Title:
2 digit times 1 digit example
Video Language:
English
Duration:
02:09
Chockkalingam Karuppaiah edited Tamil subtitles for 2 digit times 1 digit example
Chockkalingam Karuppaiah edited Tamil subtitles for 2 digit times 1 digit example

Tamil subtitles

Revisions