நீங்கள் இதுவரை பார்த்திருப்பதிலேயே மிகச் சிறந்த புள்ளிவிவரங்களை ஹான்ஸ் ரோஸ்லிங் காண்பிக்கிறார்
-
0:00 - 0:04கடந்த 10 ஆண்டுகளாக, நான் உலகளாவிய வளர்ச்சியை
-
0:04 - 0:08சுவீடிஷ் மாணவர்களுக்கு கற்பிப்பதற்கான பணியை எடுத்துக் கொண்டுள்ளேன். அது 20 ஆண்டுகள்
-
0:08 - 0:12ஆப்பிரிக்கா கல்வி நிறுவனங்களில் ஒன்றாக பசியின் கொடுமையைப் பற்றிப்
-
0:12 - 0:16படித்த பிறகாகும். எனவே, எனக்கு ஓரளவுக்கு உலகத்தைப் பற்றித் தெரியும்.
-
0:16 - 0:21பிறகு நான் நமது மருத்துவப் பல்கலைக்கழகம், கரோலின்ஸ்கா கல்வி நிறுவனத்தில்
-
0:21 - 0:25உலகளாவிய சுகாதாரம் என்கிற ஒரு இளங்கலைப் பயிற்சியை எடுத்துக் கொண்டேன். ஆனால் உங்களுக்கு அந்த
-
0:25 - 0:28வாய்ப்புக் கிடைக்கும் போது, சற்று பதற்றமடைவீர்கள்.
-
0:28 - 0:31இந்த மாணவர்கள் உண்மையில் சுவீடிஷ் கல்லூரி அமைப்பில் நீங்கள் பெறக்கூடிய
-
0:31 - 0:34உயர்ந்த கிரேடைக் கொண்டிருக்கிறார்கள் - அதனால் அவர்களுக்கு நான் கற்பிக்கப் போவது பற்றி
-
0:34 - 0:38அனைத்தையும் அறிந்திருப்பார்கள் என்று. அதனால் அவர்கள் வந்தது அவர்களுக்கு ஒரு முன் பரிசோதனையை நடத்தினேன்
-
0:38 - 0:41மேலும் நான் அதிகமாக கற்றுக்கொண்ட கேள்விகளில் இதுவும் ஒன்று.
-
0:41 - 0:45இந்த ஐந்து ஜோடி நாடுகளில் அதிகமான சிசு மரணத்தைக் கொண்ட நாடு எது?
-
0:45 - 0:49நான் அவற்றை ஒன்றாக சேர்த்தேன், அதனால் ஒவ்வொரு ஜோடி நாட்டிலும்
-
0:49 - 0:54ஒன்று மற்றொன்றைவிட இரட்டிப்பு சிசு மரணத்தைக் கொண்டிருந்தது. மேலும் இதன் பொருள்
-
0:54 - 0:59தரவின் நிலையற்றத்தன்மையைவிட மிகப் பெரிய வித்தியாசம் என்பதாகும்.
-
0:59 - 1:01நான் உங்களை சோதிக்கமாட்டேன். ஆனால் அது துருக்கியாகும்.
-
1:01 - 1:06இதில் எது உயர்ந்தது, போலாந்து, இரஷ்யா, பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா.
-
1:06 - 1:09இவையே சுவீடிஷ் மாணவர்களிடமிருந்து வந்த முடிவுகள். நான் செய்தேன், அதனால் அந்த நம்பிக்கையின் இடைவெளியை நான் பெற்றேன்.
-
1:09 - 1:12அது மிகவும் குறுகியதாக இருந்தது, மற்றும் நான் மிகவும் மகிழ்ந்தேன்.
-
1:12 - 1:16உண்மையில் ஐந்து சாத்தியங்களில் 1.8 சரியான விடை. அதன் பொருள்
-
1:16 - 1:19ஒரு சர்வதேச சுகாதாரத்தின் பேராசிரியருக்கு ஒரு இடம் இருக்கிறது --
-
1:19 - 1:21(சிரிப்புடன்) மற்றும் எனது பயிற்சிக்கும்.
-
1:21 - 1:25ஆனால் இரவு நேரம் கழிந்து, நான் எனது அறிக்கையை ஒன்றாக்கிக் கொண்டிருந்த போது
-
1:25 - 1:29நான் எனது கண்டுபிடிப்பை உணர்தேன்.நான் காட்டினேன்
-
1:29 - 1:34சிறந்த சுவீடிஷ் மாணவர்களுக்கு, சிம்பான்ஸிக்களைவிட குறிப்படத்தக்க அளவில்
-
1:34 - 1:36உலகத்தைப் பற்றிக் குறைவாகவே தெரிந்திருக்கிறது என்று.
-
1:36 - 1:38(சிரிப்பு)
-
1:38 - 1:42ஏனென்றால் நான் அவைகளுக்கு இரண்டு வாழைப்பழங்களுடன் இலங்கையையும் துருக்கியையும் கொடுத்தால்
-
1:42 - 1:45அவை பாதி மதிப்பெண்கள் பெறும். அவை நிகழ்வுகளில் பாதியை சரியாக சொல்லியிருக்கும்.
-
1:45 - 1:49ஆனால் மாணவர்கள் அதில் இல்லை. எனக்கு பிரச்சினை அறியாமை அல்ல:
-
1:49 - 1:52அது ஒரு முன்புஎண்ணப்பட்ட யோசனைகளாகும்.
-
1:52 - 1:56நான் கரோலன்ஸ்கா கல்வி நிறுவனத்தின் பேராசிரியர்கள் குறித்த ஒரு நெறிமுறையற்ற ஆய்வையும் மேற்கொண்டேன்
-
1:56 - 1:57(சிரிப்பு)
-
1:57 - 1:59- அது மருத்துவத்திற்கான நோபல் பரிசை கொடுக்கும்,
-
1:59 - 2:01மற்றும் அவர்கள் சிம்பான்ஸிக்களைவிட மேலாக இருக்கிறார்கள்.
-
2:01 - 2:04(சிரிப்பு)
-
2:04 - 2:08நான் தொடர்புபடுத்த வேண்டும் என்பதை இங்குதான் உண்மையில் உணர்ந்தேன்
-
2:08 - 2:11ஏனென்றால் உலகில் என்ன நடக்கிறது என்பதற்கான தரவு
-
2:11 - 2:14மற்றும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள குழந்தையின் ஆரோக்கியம் நன்கு அறியப்பட்டது
-
2:14 - 2:19இங்கே ஒவ்வொரு குமிழையும் ஒரு நாடு போன்று காட்டும் இந்த மென்பொருளை நாங்கள் செய்தோம்
-
2:19 - 2:25இங்கே இருக்கும் நாடு சீனா. இது இந்தியா
-
2:25 - 2:31குமிழின் அளவானது மக்கள் தொகையாகும் மற்றும் இந்த மையக் கோட்டில் நான் கருத்தரிக்கும் விகிதத்தைப் போட்டுள்ளேன்.
-
2:31 - 2:34ஏனென்றால் என்னுடைய மாணவர்கள், அது தான் அவர்கள் சொன்னது,
-
2:34 - 2:36அவர்கள் உலகத்தைப் பார்த்தபோது, மற்றும் நான் அவர்களைக் கேட்டேன்,€
-
2:36 - 2:38"உலகத்தைப் பற்றி உண்மையில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"
-
2:38 - 2:42நல்லது, முதலில் நான் அறிந்துகொண்டேன் உரைநூலாது டின்டின் என்று, முக்கியமாக.
-
2:42 - 2:43(சிரிப்பு)
-
2:43 - 2:46அவர்கள் சொன்னார்கள், "உலகம் இன்னும் 'நாம்' மற்றும் 'அவர்களும்'
-
2:46 - 2:49நாம் மேற்கத்திய உலகத்தில் இருக்கிறோம் மற்றும் அவர்கள் ஒரு மூன்றாவது உலகத்தில்"
-
2:49 - 2:52"மேற்கத்திய உலகம் என்றால் என்னவென்று நீங்கள் பொருள் கொள்கிறீர்கள்?" என்று சொன்னேன்.
-
2:52 - 2:57"நீண்ட ஆயுள் சிறிய குடும்பம் மற்றும் மூன்றாம் உலகம் குறுகிய ஆயுள் பெரிய குடும்பம்"
-
2:57 - 3:03எனவே இதைத் தான் நான் இங்கே காட்டமுடியும். நான் கருத்தரிக்கும் விகிதத்தை ஒரு பெண்ணுக்கு குழந்தைகளின் எண்ணிக்கை இங்கே போடுகிறேன்.
-
3:03 - 3:07ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு ஒரு பெண்ணுக்கு எட்டுக் குழந்தைகள் வரை
-
3:07 - 3:13அனைத்து நாடுகளிலும் உள்ள குடும்பங்களின் அளவு பற்றி நம்மிடம் ஒரு நலலாதரவு 1960 -- 1962 வரை உள்ளது.
-
3:13 - 3:16பிழை ஏற்படுவதற்கான வரம்பு குறுகியது. இங்கே நான் கடந்த 30 ஆண்டுகள் என்றும்
-
3:16 - 3:20சில நாடுகளில் 70 ஆண்டுகள் வரை என்றும், பிறப்பு முதலான ஆயுளுக்கான எதிர்பார்ப்பினைப் போடுகிறேன்.
-
3:20 - 3:231962இல், உண்மையில் நாடுகளின் குழுவொன்று இருந்தது,
-
3:23 - 3:28தொழில் மயமான நாடுகள என்று, அவைகள் சிறிய குடும்பங்கள் மற்றும நீண்ட ஆயுளைக் கொண்டிருந்தன.
-
3:28 - 3:30இவைகளே வளரும் நாடுகள்:
-
3:30 - 3:33அவைகள் பெரிய குடும்பங்களையும் பொருத்தமாக குறுகிய ஆயுளையும் கொண்டிருந்தன.
-
3:33 - 3:37இப்போது 1962 முதல் என்ன நடந்தது? நாம் மாற்றத்தைப் பார்க்க விரும்புகிறோம்.
-
3:37 - 3:40மாணவர்கள சொன்னது சரியா? இன்னும் இரண்டு வகை நாடுகள் தான் உள்ளனவா?
-
3:41 - 3:44அல்லது இந்த வளரும் நாடுகள் சிறிய குடும்பங்களைக் கொணடு அவர்கள் இங்கே வசிக்கிறார்களா?
-
3:44 - 3:46அல்லது நீண்ட ஆயுளைக் கொண்டு வசிக்கிறார்களா?
-
3:46 - 3:49இப்போது பார்க்கலாம். நாம் உலகத்தை இத்தோடு நிறுத்துவோம். இது கிடைக்கப் பெறும்
-
3:49 - 3:52ஐநாவின் புள்ளிவிவரமாகும். இதோ, உங்களால் அதைப் பார்க்கமுடிகிறதா?
-
3:52 - 3:55அங்கே இருப்பது சீனா, மேலான ஆரோக்கியத்திற்கு சென்று கொண்டிருக்கிறது, முன்னேறுகிறது.
-
3:55 - 3:58அனைத்து பச்சையான இலத்தீன் அமெரிக்க குடும்பங்கள் சிறிய குடும்பங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.
-
3:58 - 4:01இங்கே உள்ள உங்கள் மஞ்சள் அரேபிய நாடுகளாகும்,
-
4:01 - 4:05மற்றும் அவகைள் பெரிய குடும்பங்களைக் கொண்டிருக்கின்றன, ஆனால் அவர்கள் -- நீண்ட ஆயுளைக் கொண்டிருக்கவில்லை, பெரியக் குடும்பங்களைக் கொண்டுள்ளனர்.
-
4:05 - 4:08இங்கே இருக்கும் ஆப்பிரிக்கா நாடுகள் பச்சையாக உள்ளன. அவை அப்படியே உள்ளன.
-
4:08 - 4:11இது இந்தியா. இந்தோனேஷியா மிகவும் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.
-
4:11 - 4:12(சிரிப்பு)
-
4:12 - 4:15எண்பதுகளில், வங்காளதேசம் ஆப்பிரிக்க நாடுகளுடன் இன்னும் இங்கே உள்ளது.
-
4:15 - 4:18ஆனால் இப்போது, வங்காள தேசத்தில், 80களில் அது நடந்தது ஒரு அதிசயம்:
-
4:18 - 4:21இமாம்கள் குடும்பக்கட்டுப்பாட்டை ஊக்கப்படுத்தத் துவங்கியுள்ளனர்.
-
4:21 - 4:26அவர்கள் அந்த முனை நோக்கி நகர்கிறார்கள். தொண்ணூறுகளில் HIV பரவுதலை நாம் கொண்டிருந்தோம்
-
4:26 - 4:29அது வாழ்க்கையின் எதிர்பார்ப்பை ஆப்பிரிக்க நாடுகளில் குறைத்தது
-
4:29 - 4:33மற்றும் நீண்ட ஆயுளையும் சிறிய குடும்பத்தையும் நாம் கொண்டிருக்கக்கூடிய
-
4:33 - 4:37முனையை நோக்கி மற்றவைகள் எல்லாம் நகர்ந்தன, நாம் முற்றிலும் புதிய உலகினைக் கொண்டிருக்கிறோம்.
-
4:37 - 4:50(கைதட்டல்)
-
4:50 - 4:55நான் இப்போது யுனைடெட் ஸ்டேட்ஸ் அமெரிக்காவுக்கும் வியட்னாமுக்கு இடையில் உள்ள நேரடியான ஒப்பிட்டைக் காட்டுகிறேன்.
-
4:55 - 5:001964: அமெரிக்கா சிறிய குடும்பங்களையும் நீண்ட ஆயுளையும் கொண்டிருந்தது;
-
5:00 - 5:04வியட்னாம் பெரிய குடும்பங்களையும் குறுகிய ஆயுளையும் கொண்டிருந்தது. இது தான் நடந்தது:
-
5:04 - 5:10போரின் போதான தரவு அனைத்து மரணங்களுடன் சமமாக குறித்தது,
-
5:10 - 5:13வாழ்க்கைக்கான எதிர்பார்ப்பில் ஒரு முன்னேற்றம் இருந்தது. ஆண்டின் இறுதியில்,
-
5:13 - 5:16குடும்பக்கட்டுப்பாடு துவங்கியது மற்றும் அவர்கள் சிறிய குடும்பங்களுக்கு மாறினார்கள்.
-
5:16 - 5:19யுனைடெட் ஸ்டேட்ஸ் நீண்ட ஆயுளைப் பெற்றிருந்தார்கள்,
-
5:19 - 5:22குடும்பத்தினை அளவாக வைப்பதன் மூலம். இப்போது 80களில்,
-
5:22 - 5:25அவர்கள் கம்யூனிஸ்ட் திட்டமிடுதலை விட்டுவிட்டு, பொருளாதார சந்தைக்கு மாறிவிட்டார்கள்,
-
5:25 - 5:29அது சமூக வாழ்க்கையைவிட வேகமாக மாறுகிறது. இன்று நாம்,
-
5:29 - 5:342003இல், யுனைடெட் ஸ்டேட்ஸில் 1974, போரின் இறுதியில் இருந்தது போன்று,
-
5:34 - 5:41அதே ஆயுள் எதிர்பார்ப்புடன் மற்றும் அதே குடும்ப அளவுடன் வியட்னாமைப் பார்க்கிறோம்.
-
5:41 - 5:45நான் நினைக்கிறேன், நாம் எல்லோரும் - தரவினை நாம் பார்க்காவிட்டால் --
-
5:45 - 5:49பொருளாதார மாற்றத்தைவிட சமூக மாற்றடமாக இருக்கும்,
-
5:49 - 5:53ஆசியாவில் ஏற்படும் அளப்பரிய மாற்றங்களை குறைவாக எடைப் போட்டுவிடுவோம்.
-
5:53 - 5:58வருவாயின் உலகத்தில் வினியோகத்தைக் காட்டும் மற்றொரு வழிக்கு
-
5:58 - 6:05நாம் நகர்வோம். இது மக்களின் வருவாய்க்கான உலக வினியோகமாகும்.
-
6:05 - 6:10ஒரு டாலர், 10 டாலர்கள் அல்லது 100 டாலர்கள் ஒரு நாளைக்கு.
-
6:10 - 6:14இனி ஏழைப் பணக்காரர்களுக்கிடையே இடைவேளி ஏதுமில்லை. இது ஒரு கற்பனை.
-
6:14 - 6:18இதில் சிறிய மேடு உள்ளது. ஆனால் மக்கள் அங்கேயும் இருக்கிறார்கள்.
-
6:19 - 6:23வருவாய் எங்கே முடிகிறது என்பதை நாம் பார்ப்போமானால் -- வருவாய் --
-
6:23 - 6:29இதுவே உலகின் 100 சதவீத ஆண்டு வருமானமாகும். பணக்காரர்கள் 20 சதவீதம்,
-
6:29 - 6:36அவர்கள் அதை 74 சதவீதத்தை எடுத்துக் கொள்கிறார்கள். ஏழைகள் 20 சதவீதம்
-
6:36 - 6:41அவர்கள் 2 சதவீதத்தை எடுத்துக்கொள்கிறார்கள். இது வளரும் நாடுகளின் தத்துவத்தை
-
6:41 - 6:45முற்றிலும் சந்தேகத்துக்குரியதாகக் காட்டுகிறது. நாம் உதவியைப் பற்றி எண்ணுகிறோம்,
-
6:45 - 6:50இந்த மக்கள் அந்த மக்களுக்கு உதவி வழங்குகிறார்கள். ஆனால் நடுவில்,
-
6:50 - 6:54அனேக மக்கள் தொகையை நாம் பெற்றிருக்கிறோம், இவர்கள் 24 சதவீத வருவாயை எடுத்துக் கொள்கிறார்கள்.
-
6:54 - 6:58நாம் அதை மற்ற வகைகளில் கேட்டுள்ளோம். இவர்கள் யார்?
-
6:58 - 7:02வெவ்வேறு நாடுகள் எங்கே உள்ளன? நான் உங்களுக்கு ஆப்பிரிக்காவைக் காட்டலாம்.
-
7:02 - 7:07இது ஆப்பிரிக்கா. உலக மக்கள் தொகையில் 10 சதவீதம், அனேகம் பேர் வறுமையில் உள்ளனர்.
-
7:07 - 7:12இது OECD. இது பணக்கார நாடு. இது ஐநாவின் கன்ட்ரிக்ளப்.
-
7:12 - 7:17மேலும் அவைகள் இந்தப் பக்கத்தில் உள்ளன. ஆப்பிரிக்கா மற்றும் OECD நாடுகளில் சற்று ஒத்திருக்கின்றன.
-
7:17 - 7:20இது இலத்தின் அமெரிக்கா. அது உலகத்தில் அனைத்தையும் கொண்டிருக்கிறது,
-
7:20 - 7:23ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை, இலத்தின் அமெரிக்காவில்.
-
7:23 - 7:28அதற்கு மேலே, நாம் கிழக்கு ஐரோப்பாவை வைக்கலாம், கிழக்காசியாவை வைக்கலாம்,
-
7:28 - 7:33மற்றும் தெற்காசியாவை வைக்கலாம். நாம் 1970க்கு பின்னோக்கி நகர்ந்தால் இது
-
7:33 - 7:38எப்படி தோன்றும்? இன்னும் கொஞ்சம் மேடுபள்ளங்கள் இருக்கும்.
-
7:38 - 7:42நம்மில் முற்றிலும் ஏழ்மையில் வாழ்ந்தவர்கள் ஆசியர்கள்.
-
7:42 - 7:49உலகில் பிரச்சினையாக இருந்தது ஆசியாவின் வறுமையே. இப்போது நான் உலகை முன்னோக்கி நகர செய்தால்,
-
7:49 - 7:52உலகில் மக்கள் தொகை அதிகரிக்கும் போது, நூறு மில்லியன் கணக்கிலான
-
7:52 - 7:55ஆசியர்கள் வறுமையில் இருந்து வெளியேறுவதையும், வேறு சிலர்
-
7:55 - 7:58வறுமைக்குள் வருவதையும் பார்க்கலாம், இது இன்றைய நிலை.
-
7:58 - 8:02மேலும் இது நடக்கும் என்பதே உலக வங்கியின் முன்வைத்தலாகும்,
-
8:02 - 8:06நாம் இனி பிரிவினையுள்ள உலகத்தைக் கொண்டிருக்கப் போவதில்லை. நாம் அனேக மக்களை நடுவில் கொண்டிருப்போம்.
-
8:06 - 8:08உண்மையில் அது ஒரு லாகார்தமிக் அளவையாக இருக்கும்.
-
8:08 - 8:13ஆனால் நமது பொருளாதாரத்தின் தத்துவம் வளர்ச்சியுடனான சதவீதம். நாம் இப்போது அதை
-
8:13 - 8:19சதவீத அதிகரிப்பின் வாய்ப்பாக பார்க்கிறோம். இதை நான் மாற்றி,
-
8:19 - 8:23குடும்ப வருவாய்க்கு பதிலாக முதலீட்டுக்கான GDPஐ எடுத்துக் கொண்டால், இந்த
-
8:23 - 8:29தனிப்பட்ட தரவை உள்ளூர் தயாரிப்புகளின் ஒட்டுமொத்த பிராந்திய தரவாக மாற்றி,
-
8:29 - 8:33இந்த பிராந்தியங்களை எடுத்துக் கொள்கிறேன், குமிழ்களின் அளவு இன்னும் மக்கள் தொகையில் தான் உள்ளது.
-
8:33 - 8:36OECD உங்களுக்கு அங்கே உள்ளது, மற்றும் சகாரா ஆப்பிரிக்கா உள்ளது,
-
8:36 - 8:39நாம் அரபுநாடுகளை அதிலிருந்து எடுத்துவிடுவோம்,
-
8:39 - 8:43ஆப்பிரிக்கா ஆசியா என்று வரும்போது, நாம் அவற்றை தனியாக வைப்போம்,
-
8:43 - 8:48மற்றும் நாம் இந்த கோட்டினை விரிவடைய செய்வோம்,
-
8:48 - 8:51சேர்ப்பதன் மூலம், நான ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுக்கலாம்.
-
8:51 - 8:56நான் இப்போது பணத்தை அந்த கோட்டில் வைக்கிறேன், அங்கே குழந்தைகள் வாழ்வதற்கான சாத்தியங்கள் உள்ளன.
-
8:56 - 9:00சில நாடுகளில், 99.7 சதவீதம் குழந்தைகள் ஐந்து ஆண்டுகள்வரை உயிர் வாழ்கிறார்கள்:
-
9:00 - 9:04மற்றவர்கள், 70 வரை. இங்கே ஒரு இடைவெளி
-
9:04 - 9:08OECD, இலத்தின் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பா, கிழக்கு ஆசியா
-
9:08 - 9:12அரபு நாடுகள், தெற்காசியா மற்றும் துணை சகாரா ஆப்பிரிக்காவுக்கு இடையில் காணப்படுகிறது.
-
9:12 - 9:17குழந்தைகள் வாழ்க்கை மற்றும் பணத்திற்கிடையிலான இந்த கோடு மிகவும் பலமாக உள்ளது.
-
9:17 - 9:25ஆனால் நான் துணை சகாரா ஆப்பிரிக்கக் கண்டத்தை பிரித்துவிடுகிறேன். சுகாதாரம் உள்ளது மற்றும் மேலான சுகாதாரம் வந்து கொண்டிருக்கிறது.
-
9:25 - 9:30நான் இங்கே சென்று, துணை சாகாரா ஆப்பிரிக்காவை அதன் நாடுகளாக பிரித்துவிடுகிறேன்.
-
9:30 - 9:35அது வெடிக்கும் போது, இந்த நாட்டு குமிழின் அளவு மக்கள் தொகையின் அளவாக இருக்கும்.
-
9:35 - 9:39சியர்ரா லியோனே இருக்கிறது. மொரிஷியஸ் இருக்கிறது. மொரிஷியஸ் தான் முதல் நாடு
-
9:39 - 9:42வியாபாரத் தடைகளில் இருந்து மீண்டது, அவர்களால் சர்க்கரையை விற்க முடிந்தது
-
9:43 - 9:48அவர்களால் ஐரோப்பிய வடஅமெரிக்க மக்களுக்கு இணையாக துணிகளை விற்கமுடிந்தது.
-
9:48 - 9:52ஆப்பிரிக்காவுக்கு இடையே இங்கே பெரிய வித்தியாசம் இருக்கிறது. கானா நடுவில் இருக்கிறது.
-
9:52 - 9:55சியர்ரா லியோனேவில் மனிதாபிமான உதவி.
-
9:55 - 10:00இங்கே உகாண்டாவில், முன்னேற்ற உதவி. இங்கே, முதலீடு செய்வதற்கான நேரம் இது,
-
10:00 - 10:03நீங்கள் ஒரு விடுமுறைக்கும் செல்லலாம். அது ஒரு அளப்பரிய மாறுபாடாகும்.
-
10:03 - 10:08ஆப்பிரிக்காவிற்குள் நாம் மிகவும் அரிதாக செய்வது -- அது எல்லாவற்றையும் சமன்படுத்துகிறது.
-
10:08 - 10:12நான் இங்கே தெற்காசியாவைப் பிரிக்கலாம், இந்தியாவில் நடுவில் ஒரு பெரிய குமிழாகும்.
-
10:12 - 10:16ஆனால் ஆப்கானிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு உள்ளது.
-
10:16 - 10:20நான் அரபு நாடுகளைப் பிரிக்கலாம். அவை எப்படி உள்ளன? அதே வானிலை, அதே கலாச்சாரம்,
-
10:20 - 10:24அதே மதம். மிகப் பெரிய வேறுபாடு. அண்டை நாடுகளுக்கு இடையேயும்.
-
10:24 - 10:29ஏமனில், உள்நாட்டுப் போர். ஐக்கிய அரபு நாடுகளில், பணம் சமமாக உள்ளது மற்றும் நன்றாகப் பயன்படுத்தப்படுகிறது.
-
10:29 - 10:36கற்பனை போன்று அல்ல. இது இந்த நாட்டில் இருக்கும் வெளிநாட்டுப் பணியாளர்கள் குழந்தைகளையும் உள்ளிடுகிறது.
-
10:36 - 10:40தரவி நீங்கள் அடிக்கடி எண்ணுவதைவிட மேலாக உள்ளது. பலர் தரவு மோசமாக இருப்பதாக சொல்கிறார்கள்.
-
10:41 - 10:43இதில் ஒரு நிலையற்ற தன்மை உள்ளது, ஆனால் நாம் வித்தியாசத்தை இங்கே பார்க்கலாம்:
-
10:43 - 10:46கம்போடியா, சிங்கப்பூர். வித்தியாசமானது தரவின் பலவீனத்தைவிட
-
10:46 - 10:49மிகப்பெரியதாக உள்ளது. கிழக்கு ஐரோப்பா:
-
10:49 - 10:55சோவியத் பொருளாதாரம் நீண்ட காலமாக இருந்து வந்தது, ஆனால் அவை பத்தாண்டுகளுக்குப் பிறகு
-
10:55 - 10:58மிக மிக வித்தியாசமாக வெளிவந்துவிட்டது. இலத்தின் அமெரிக்கா உள்ளது,
-
10:58 - 11:02இன்று நமக்கு இலத்தின் அமெரிக்காவில் ஒரு ஆரோக்கியமான நாட்டைக் காண்பதற்கு கியூபாவிற்கு செல்ல வேண்டியதில்லை.
-
11:02 - 11:07சிலி இப்போதிருந்து இன்னும் சில ஆண்டுகளில் மிகவும் குறைவான குழந்தை இறப்பைக் கொண்டிருக்கும்.
-
11:07 - 11:10OECDஇல் நாம் உயர் வருவாய் நாடுகளைக் கொண்டுள்ளோம்.
-
11:10 - 11:14நாம் இங்கே உலகின் மொத்த வகையைப் பெறுகிறோம்.
-
11:14 - 11:19அது ஏறத்தாழ இப்படி உள்ளது. அதை நாம் பார்த்தோமானால்,
-
11:19 - 11:25அது எவ்வாறு இருக்கிறது -- உலகம், 1960இல், அது நகரத் தொடங்கியது. 1960
-
11:25 - 11:28இது மாசே துங். அவர் சீனாவிற்கு ஆரோக்கியத்தைக் கொண்டு வந்தார். அதன் பிறகு அவர் இறந்துவிட்டார்.
-
11:28 - 11:33அதன் பிறகு டென் ஸியாபிங் வந்தார், சீனாவிற்கு பணத்தைக் கொண்டு வந்தார், அவர்களை முக்கிய நீரோட்டத்திற்கு கொண்டு வந்தார்.
-
11:33 - 11:37நாம் எவ்வாறு நாடுகள் வெவ்வேறு திசைகளில் இவ்வாறு நகர்கின்றன என்பதைப் பார்த்தோம்,
-
11:37 - 11:41எனவே உலகின் வகையைக் காட்டும்
-
11:41 - 11:46உதாரண நாட்டைப் பெறுவது ஒரு வகையில் கடினமானதாகும்.
-
11:46 - 11:52நான் உங்களை மீண்டும் இங்கே 1960க்கு கொண்டு வர விரும்புகிறேன்.
-
11:52 - 12:02நான் இந்த ஒரு தென் கொரியாவை, இந்த ஒன்றான பிரேசிலுடன் ஒப்பிட விரும்புகிறேன்.
-
12:02 - 12:07லேபிள் எனக்கு இங்கே நகர்ந்துவிட்டது. நான் அங்கே உள்ள உகாண்டாவை,
-
12:07 - 12:12ஒப்பிடவிரும்புகிறேன். அதற்கான நான் இவ்வாறு அதை நகர்த்த முடியும்.
-
12:12 - 12:21நீங்கள் தென்கொரியா எவ்வாறு மிக, மிக வேகமாக எவ்வாறு மேம்பாட்டினை முன்னேற்றத்தைப் பார்க்கிறது என்பதை காணலாம்
-
12:21 - 12:24அதே சமயம் பிரேசில் மெதுவாக உள்ளது.
-
12:24 - 12:30நாம் அதை மீண்டும் பின்னோக்கி நகர்ந்தால், அவற்றின் மீது இவ்வாறு குறிகளைப் போடாலாம்,
-
12:30 - 12:34நீங்கள் முன்னேற்றத்தின் வேகம், மிக மிக வித்தியாசமாக,
-
12:34 - 12:40இருப்பதைக் காணலாம் மற்றும் இந்த நாடுகள் பணம் மற்றும் சுகாதாரத்தில் ஏறத்தாழ,
-
12:40 - 12:44ஒரே வேகத்தில் நகர்ந்துகொண்டு இருக்கின்றன, ஆனால்
-
12:44 - 12:48நீங்கள் ஆரோக்கியத்திலோ அல்லது பணத்திலோ முதலாவதாக இருந்தால் வேகமாக நகரலாம் என்று தோன்றுகிறது.
-
12:49 - 12:53இதைக் காட்டுவதற்கு, ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் வழியைக் காட்டலாம்.
-
12:53 - 12:56அவை தாதுப் பொருள் நாடாக வந்தன. அவைகள் அனைத்து எண்ணையையும் கைப்பற்றிக் கொண்டன,
-
12:56 - 13:00அதனால் அவைகளுக்கு அனைத்துப் பணமும் கிடைத்தது, ஆனால் ஆரோக்கியம் ஒரு பல்பொருள் அங்காடியில் வாங்கமுடியாது.
-
13:00 - 13:04நீங்கள் சுகாதாரத்தில் முதலீடு செய்ய வேண்டும். நீங்கள் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பச் செய்ய வேண்டும்.
-
13:04 - 13:07நீங்கள் சுகாதார ஊழியர்களைப் பயிற்றுவிக்க வேண்டும். நீங்கள் மக்களுக்கு கல்வி அளிக்க வேண்டும்.
-
13:07 - 13:10அதை ஷேக் சையது நியாயமான நல்லவழியில் அதை செய்தார்.
-
13:10 - 13:14வீழும் எண்ணை விலைகளுக்கு மத்தியில் , தன் நாட்டை மேலே கொண்டு வந்தார்.
-
13:14 - 13:18அனைத்து நாடுகளும் தாங்கள் முன்பு பயன்படுத்தியதைவிட மேலாக
-
13:18 - 13:20தற்போது பணத்தைப் பயன்படுத்த விரும்புகின்றன,
-
13:20 - 13:25நமக்கு ஒரு முதன்மையான தோற்றம் உலகத்தில் கிடைத்துள்ளது. இப்போது, இது, ஏறத்தாழ
-
13:25 - 13:32நீங்கள் நாடுகளின் சராசரித் தரவை பார்த்தால் தெரியும். அவை இப்படி இருக்கும்.
-
13:32 - 13:37சராசரி தரவைப் பயன்படுத்துவது ஆபத்தானது, ஏனென்றால், நிறைய வேறுபாடுகள்
-
13:37 - 13:43நாடுகளுக்குள் உள்ளன. எனவே நான் சென்று பார்ததால், நம்மால்
-
13:43 - 13:49தென்கொரியா 1960இல் இருந்த இடத்தில் உகாண்டாவைப் பார்க்கலாம். நான் உகாண்டாவைப் பிரித்தால்,
-
13:49 - 13:54உகாண்டாவிற்குள்ளேயே மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. இவையே உகாண்டாவின் புள்ளிவிவரம்.
-
13:54 - 13:57அங்கே 20 சதவீத பணக்கார உகாண்டன்கள் இருக்கிறார்கள்.
-
13:57 - 14:01ஏழைகளும் அங்கே இருக்கிறார்கள். நான் தென்னாப்பிரிக்காவை பிரித்தால், அது இப்படி இருக்கும்.
-
14:01 - 14:06நான் கீழே நைஜருக்கு சென்று பார்த்தால், அங்கே அத்தனை மோசமான பஞ்சம்,
-
14:06 - 14:11இறுதியாக, அது இவ்வாறு உள்ளது. நைஜரில் 20 சதவீதத்தினர் ஏழைகள்,
-
14:11 - 14:14மற்றும் தென்னாப்பிரிக்காவின் பணக்காரர்களில் 20 சதவீதத்தினர் அங்கே இருக்கிறார்கள்,
-
14:14 - 14:19மற்றும் ஆப்பிரிக்காவில் என்ன தீர்வுகள் இருக்க வேண்டும் என்பதை நாம் இன்னும் விவாதிக்க முயற்சிக்க வேண்டும்.
-
14:19 - 14:22இந்த உலகத்தில் அனைத்தும் ஆப்பிரிக்காவில் இருக்கிறது. நீங்கள்
-
14:22 - 14:26கிழேக் காணும் அதே உத்தியுடன் இந்த புள்ளிவிவரத்திற்கான ஹெச்ஐவி (மருந்து)
-
14:26 - 14:30அணுகலை விவாதிக்க முடியாது. உலகத்தின் மேம்பாடு
-
14:30 - 14:35அதிகமாக பொருளாக்கப்பட வேண்டும், மற்றும் அது பிராந்திய அளவில் கொள்வதற்கு
-
14:35 - 14:38பொருத்தமானதாக இருக்கக்கூடாது. அதை நாம் இன்னும் விவரப்படுத்த வேண்டும்.
-
14:38 - 14:42மாணவர்கள் அதைப் பயன்படுத்தும் போதும் மிகவும் ஆவலாக இருப்பதை நாம் பார்க்கலாம்.
-
14:42 - 14:47இன்னும் சொல்லப்போனால் கொள்கை இயற்றுபவர்களும், நிறுவனங்களும் உலகம் எவ்வாறு
-
14:47 - 14:51மாறுகிறது என்பதை பார்ககவிரும்புகின்றனர். இப்போது, இது ஏன் ஏற்படுவதில்லை?
-
14:51 - 14:55நாம் ஏன் நம்மிடம் இருக்கும் தரவை பயன்படுத்துவதில்லை? நம்மிடம் தரவுகள் ஐக்கிய நாடுகளில்,
-
14:55 - 14:57தேசிய புள்ளியில் நிறுவனங்களில்
-
14:57 - 15:01பல்கலைக்கழகங்களில் மற்றும் சமூகத்தொண்டு நிறுவனங்களிலும் இருக்கிறது.
-
15:01 - 15:03ஏனென்றால் தரவுகள் தரவுதளங்களில் மறைந்து இருக்கிறது.
-
15:03 - 15:08பொதுமக்கள் இருக்கிறார்கள், மற்றும் இன்டர்நெட் உள்ளது, ஆனாலும் நாம் அதை ஆற்றலுடன் பயன்படுத்தவில்லை.
-
15:08 - 15:11உலகத்தில் மாறிவரும் நாம் காணும் தகவல்கள் யாவும்
-
15:11 - 15:15பொதுமக்களால் நிதியளிக்கப்பட்ட புள்ளிவிவரங்களை உள்ளிடுவதில்லை. நீங்கள் அறிந்திருக்கக்கூடிய,
-
15:15 - 15:21இது போன்ற சில வலைப்பக்கங்கள் உள்ளன, ஆனால் அவை தரவுதளங்களில் இருந்து சில ஊட்டங்களை எடுத்துக் கொள்கின்றன,
-
15:21 - 15:26ஆனால் மக்கள் அவற்றின் மீது விலையை வைக்கிறார்கள், முட்டாள்தனமான கடவுசொற்கள் மற்றும் வெறுப்பாக்கும் புள்ளிவிவரங்கள்.
-
15:26 - 15:29(சிரிப்பு) (கைதட்டல்)
-
15:29 - 15:33இது வேலை செய்யாது. எனவே என்ன வேண்டும்? நம்மிடம் தரவுகள் உள்ளன.
-
15:33 - 15:37அது நீங்கள் விரும்பும் புதிய தரவுதளம் அல்ல. நம்மிடம் அருமையான வடிவமைக்கும் கருவிகள் உள்ளன.
-
15:37 - 15:40மேலும் மேலும் இங்கே சேர்க்கப்படுகிறது. அதனால் நாம் ஒரு
-
15:40 - 15:45ஒரு இலாபநோக்கற்ற ஒரு முயற்சி தொடங்கினோம் - வடிவமைப்பிற்கு தரவை இணைத்து -
-
15:45 - 15:48நாம் அதை கேப்மைண்டர் என்று அழைக்கிறோம், லண்டனின் மறைவுலகத்திலிருந்து, அவர்கள் நம்மை எச்சரிக்கிறார்கள்,
-
15:48 - 15:51"மைண்ட் தி கேப்" என்று. அதனால் நாம் கேப் மைண்டர் பொருத்தமானதாக இருக்கும் என்று எண்ணினோம்.
-
15:51 - 15:55இந்த தரவுகளை இவ்வாறு இணைக்கக்கூடிய மென்பொருளை எழுதத் துவங்கினோம்.
-
15:55 - 16:01அது ஒன்று கடினமானதாக இல்லை. அது சில நபர்களின் ஆண்டுகளை எடுத்துக் கொண்டது, மற்றும் நாம் அதற்கு அனிமேஷனை உருவாக்கினோம்.
-
16:01 - 16:03நீங்கள் ஒரு தரவுதொகுதியை எடுத்து அதில் போடலாம்.
-
16:03 - 16:08நாம் ஐநா தரவையும், மிகச் சில ஐநா நிறுவனங்களையும் சுதந்திரப்படுத்துகிறோம்.
-
16:08 - 16:12சிலநாடுகள் தங்களின் தரவுதளங்கள் உலகெங்கும் எடுத்துச் செல்லப்படலாம் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளன,
-
16:12 - 16:15ஆனால் நமக்குத் தேவை, உண்மையில், ஒரு தேடுதல் செயல்பாடு.
-
16:15 - 16:20ஒரு தேடுதல் செயல்பாடு, அதில் ஒரு தேடுதல் வடிவத்திற்கு தரவினை பிரதி செய்யலாம்,
-
16:20 - 16:23மற்றும் அதை உலகத்திற்கு எடுத்துச் செல்லலாம். நாம் செல்லும் வரும் போது என்ன கேள்விப்படுகிறோம்?
-
16:23 - 16:27முக்கியப் புள்ளிவிவரத் தொகுதியில் மனிதவியல் படித்துள்ளேன். அனைவரும் சொல்கிறார்கள்,
-
16:28 - 16:32"அது சாத்தியமற்றது. இதை செய்யமுடியாது. நமது தகவல்கள் விவரணையில்
-
16:32 - 16:35மிகவும் வினோதமானது, அதனால் அது மற்றவைகளை தேடுவது போலத் தேடப்படமுடியாது.
-
16:35 - 16:40நம்மால் தரவினை இலவசமாக மணவர்களுக்கும், உலகின் தொழில் முனைவோருக்கும் கொடுக்க இயலாது."
-
16:40 - 16:43ஆனால் இது தான் நாம் பார்க்கவிரும்புவது, அல்லவா?
-
16:43 - 16:46பொதுமக்களால் நிதியளிக்கப்பட்ட தரவு கீழே உள்ளது.
-
16:46 - 16:49நாம் நெட்டில் பூக்கள் வளர விரும்புகிறோம்.
-
16:49 - 16:54முக்கியமான கருத்துக்களில் ஒன்று என்னவென்றால் அவற்றை தேடக்கூடியதாக்குவது, மற்றும் மக்கள்
-
16:54 - 16:56அதை அனிமேட் செய்வதற்கு வெவ்வேறு வடிவமைப்பு கருவிகளைப் பயன்படுத்தலாம்.
-
16:56 - 17:01என்னிடம் உங்களுக்கு ஒரு மிகவும் நல்லத் தகவல் உள்ளது. என்னிடம் உள்ள நல்லத் தகவல்
-
17:01 - 17:05யுஎன் புள்ளியல்துறையின் தற்போதைய, புதிய தலைவர், அதை சாத்தியமில்லாதது என்று சொல்லவில்லை.
-
17:05 - 17:07"நம்மால் செய்ய முடியாது" என்று மட்டுமே சொல்கிறார்.
-
17:07 - 17:11(சிரிப்பு)
-
17:11 - 17:13அவர் புத்திசாலி மனிதர், ஆ?!
-
17:13 - 17:15(சிரிப்பு)
-
17:15 - 17:19வரும் ஆண்டுகளில் தரவுகளில் நிறைய நடப்பதை நாம் பார்க்கலாம்.
-
17:19 - 17:23வருவாய் வினியோகங்களை முற்றிலும் புதிய வழிகளில் நம்மால் பார்க்கமுடியும்.
-
17:23 - 17:281970இல் சீனாவின் வருவாய் வினியோகமாகும் இது.
-
17:29 - 17:341970இல் யுனைடட் ஸ்டேட்ஸின் வருவாய் வினியோகம்.
-
17:34 - 17:38அனேகமாக ஒன்று மற்றதன் மேல் படியவில்லை. ஒன்று மற்றதன் மேல் படியில்லை. என்னவாயிற்று?
-
17:38 - 17:43என்ன நடந்தது என்றால்: சீனா வளர்ந்து வருகிறது, எனவே அது இனி ஒரு போதும் சமமானது அல்ல,
-
17:43 - 17:47அது யுனைடெட் ஸ்டேட்ஸை மேற்பார்வை செய்வது போலத் தோன்றுகிறது.
-
17:47 - 17:49அனேகமாக ஒரு பூதத்தைப் போல, அல்லவா, ஆ?!
-
17:49 - 17:51(சிரிப்பு)
-
17:51 - 18:01அது நன்றாக பயமுறுத்துவதாக உள்ளது. ஆனால் இந்தத் தகவல்கள் அனைத்தையும் நான் மிகவும் முக்கியமானதாக எண்ணுகிறேன்.
-
18:01 - 18:07நமக்கு உண்மையில் அவற்றைப் பார்க்க வேண்டியுள்ளது. இதைப் பார்ப்பதற்கு பதிலாக,
-
18:07 - 18:12இன்டர்நெட் பயன்படுத்துவர்களுக்கு பிரதி 1000க்கு காட்டுவதன் மூலம் முடிக்க விரும்புவேன்.
-
18:12 - 18:17இந்த மென்பொருளில், நாம் 500 வேரியபில்களை அனைத்து நாடுகளிலிருந்து மிகவும் எளிதாக அணுக முடியும்.
-
18:17 - 18:21இதற்கு மாறுவதற்கு சிறிது காலம் எடுக்கும்,
-
18:21 - 18:26ஆனால் கோடுகளின் மீது, நீங்கள் விரும்பும் எந்தவொரு வேரியபிளையும் மிகவும் எளிதாகப் பெறலாம்.
-
18:26 - 18:31விஷயம் என்னவென்றல் தரவுதளங்களை இலவசமாக பெறுதல்,
-
18:31 - 18:34அவற்றை தேடக்கூடியதாக்குதல், மற்றும் இரண்டு க்ளிக்குகளில்,
-
18:34 - 18:39நீங்கள் அவற்றை உடனடியாக புரிந்துகொள்ளக்கூடிய, கிராஃப் ஃபார்மெட்டில் பெறுதல்.
-
18:39 - 18:42இப்போது, புள்ளியியலாளர்கள் அதை விரும்புவதில்லை, ஏனென்றால்
-
18:42 - 18:51இது உண்மையை சொல்லாது என்று சொல்கிறார்கள்; நமக்கு புள்ளியில், பகுப்பாய்வு முறைகள் வேண்டும்.
-
18:51 - 18:54ஆனால் இது காரணவிகிதத்தை உருவாக்குவதாகும்.
-
18:54 - 18:58நான் இப்போது உலகத்துடன் முடித்துக் கொள்கிறேன். இப்போது வருகிறது இன்டர்நெட்.
-
18:58 - 19:02இன்டர்நெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இவ்வாறு மேலே போய் கொண்டிருக்கிறது. இதுவே பிரதி முதலீட்டிற்கான GDP ஆகும்.
-
19:02 - 19:07இது ஒரு உள்ளே வந்துகொண்டிருக்கும் ஒரு புது தொழில்நுட்பமாகும், ஆனால் ஆச்சரியப்படத்தக்கவகையில்,
-
19:07 - 19:12எவ்வளவு பொருத்தமாக நாடுகளின் பொருளாதாரத்திற்குள் பொருந்துகிறது. அதனால் தான் 100 டாலர்
-
19:12 - 19:15கம்ப்யூட்டர் மிகவும் முக்கியமானதாகும். ஆனால் இது ஒரு நல்ல போக்கு ஆகும்.
-
19:15 - 19:18இது உலகம் தட்டையாவது போல உள்ளது அல்லவா? இந்த நாடுகள்
-
19:18 - 19:21பொருளாதாரத்தைவிட மேலே ஏற்றிக் கொண்டிருக்கின்றன மற்றும் நான் பொதுமக்களால் நிதி செய்யப்பட்ட
-
19:21 - 19:25தரவுடன் செய்யக்கூடியதை செய்யவிரும்புவதை போன்று, வரும் ஆண்டுகளில் இது
-
19:25 - 19:27பின்பற்றுவதற்கு சுவாரசியமானதாக இருக்கும். மிக்க நன்றி.
-
19:28 - 19:31(கைதட்டல்)
- Title:
- நீங்கள் இதுவரை பார்த்திருப்பதிலேயே மிகச் சிறந்த புள்ளிவிவரங்களை ஹான்ஸ் ரோஸ்லிங் காண்பிக்கிறார்
- Speaker:
- Hans Rosling
- Description:
-
இது போல் தகவல்கள் காண்பிக்கப்பட்டதை நீங்கள் ஒரு போதும் பார்த்திருக்க முடியாது. நாடகம் மற்றும் ஒரு விளையாட்டு ஒளிபரப்பின் வேகத்தோடு, புள்ளிவிவர குருவான ரோஸ்லிங் அவர்கள் “வளரும் நாடுகள்” என்றழைக்கப்படுகிறவைகளின் இரகசியங்களைக் கிளறியெடுக்கிறார்.
- Video Language:
- English
- Team:
closed TED
- Project:
- TEDTalks
- Duration:
- 19:33