Return to Video

Quadrilateral Properties

  • 0:01 - 0:06
    கீழே உள்ள வடிவம் எது?
  • 0:06 - 0:09
    இது ஒரு நாற்கரமா?
  • 0:09 - 0:21
    நாற்கரம் என்பது 4 பக்கங்களைக் கொண்ட,
    மூடப்பட்ட வடிவம், இது நாற்கரம்தான்
  • 0:21 - 0:24
    அடுத்து, இது இணைகரமா?
  • 0:24 - 0:32
    இணைகரம் என்பது எதிரெதிரே 2 ஜோடி
    இணைப் பக்கங்களைக் கொண்ட நாற்கரம்
  • 0:32 - 0:38
    இங்கே இந்தப் பக்கமும் இந்தக் கோடும்
    செங்கோணமாக உள்ளது
  • 0:38 - 0:42
    அந்தப் பக்கமும் அந்தக் கோடும்
    செங்கோணமாக உள்ளது
  • 0:42 - 0:46
    ஆகவே, இந்த இரு பக்கங்களும் இணை,
  • 0:46 - 0:48
    அடுத்த இரு பக்கங்களும் அதேபோல் இணை
  • 0:48 - 0:52
    இங்கே இந்தப் பக்கமும் இந்தக் கோடும்
    செங்கோணமாக உள்ளது
  • 0:52 - 0:59
    அந்தப் பக்கமும் அந்தக் கோடும்
    செங்கோணமாக உள்ளது
  • 0:59 - 1:03
    ஆகவே, இந்த இரு பக்கங்களும் இணை,
  • 1:03 - 1:09
    இதன் அர்த்தம், இது ஓர் இணைகரமும்கூட
  • 1:09 - 1:14
    அடுத்த கேள்வி, இது ஒரு சரிவகமா?
  • 1:14 - 1:22
    சரிவகம் என்பது, குறைந்தது 2 இணைப் பக்கம்
    கொண்ட நாற்கரம் என்பார்கள் சிலர்
  • 1:22 - 1:26
    வேறு சிலர், 2 இணைப் பக்கம்மட்டும்
    கொண்ட நாற்கரம் என்பார்கள்
  • 1:26 - 1:33
    இதில் எது சரி என்று சொல்ல இயலாது,
    சிலர் இப்படி, சிலர் அப்படி
  • 1:33 - 1:42
    சிலர் குறைந்தபட்சம் 2 இணைப் பக்கங்கள் தேவை
    என்று சொல்கிறார்கள்
  • 1:42 - 1:46
    அது ஒரு வரையறை
  • 1:46 - 1:56
    சிலர் சரியாக 2 இணைப் பக்கங்கள் தேவை
    என்று சொல்கிறார்கள்
  • 1:56 - 2:02
    இதில் எந்த வரையறையை நீங்கள்
    தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து
  • 2:02 - 2:06
    இந்தக் கேள்விக்குப் பதில் மாறும்
  • 2:06 - 2:10
    மக்கள் பொதுவாகப் பயன்படுத்துவது,
    இந்த வரையறையைதான்
  • 2:10 - 2:15
    அதாவது, சரியாக 2 இணைப் பக்கங்கள்
  • 2:15 - 2:20
    சரிவகம் என்று சொன்னால், அவர்கள்
    பெரும்பாலும் இதைதான் சிந்திப்பார்கள்
  • 2:20 - 2:23
    இந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் இணை
  • 2:23 - 2:26
    மற்ற இரு பக்கங்கள் இணை இல்லை
  • 2:26 - 2:30
    சிலர் குறைந்தது 2 இணைப் பக்கங்கள்
    என்று சொல்வார்கள்
  • 2:30 - 2:35
    ஆகவே, 2 ஜோடி இணைப் பக்கங்களைக் கொண்ட
    இணைகரங்களும் இதில் வரும்
  • 2:35 - 2:38
    நான் இந்த வரையறையைப் பயன்படுத்தப்போகிறேன்
  • 2:38 - 2:41
    அதாவது, சரியாக 2 இணைப் பக்கங்கள்
  • 2:41 - 2:44
    இதில் 2 ஜோடி இணைப் பக்கங்கள் உள்ளன
  • 2:44 - 2:48
    ஆகவே, நான் இதைச் சரிவகம் என சொல்லமாட்டேன்
  • 2:48 - 2:53
    அதேசமயம், சிலர் இதைச்
    சரிவகம் என்று சொல்லலாம்
  • 2:53 - 2:57
    அவர்கள் குறைந்தது 2 பக்கங்கள் இணையாக உள்ள
    நாற்கரங்களைச் சரிவகம் என்பார்கள்
  • 2:57 - 3:00
    அந்த வரையறைப்படி பார்த்தால்,
    இது ஒரு சரிவகம்தான்
  • 3:00 - 3:02
    எல்லாம் நீங்கள் பயன்படுத்தும்
    வரையறையைப் பொறுத்தது
  • 3:02 - 3:05
    அடுத்து, சாய்சதுரம்
  • 3:05 - 3:14
    சாய்சதுரம் என்பது 4 ஒத்த பக்கங்களைக்
    கொண்ட நாற்கரம்
  • 3:14 - 3:18
    ஒரு சாய்சதுரம் இப்படி இருக்கும்
  • 3:18 - 3:22
    நான்கு பக்கங்களும் ஒரே நீளம்
  • 3:22 - 3:26
    அவை செங்கோணங்களாக இருக்கவேண்டியதில்லை
  • 3:26 - 3:29
    இந்தப் படத்தில்
    இரண்டு ஜோடிப் பக்கங்கள் உள்ளன
  • 3:29 - 3:34
    ஆனால் இவை எல்லாம் சமம் என்று சொல்ல இயலாது
  • 3:34 - 3:39
    ஆகவே, இதைச் சாய்சதுரம் என அழைக்க இயலாது
  • 3:39 - 3:43
    ஒருவேளை யாராவது இந்தப் பக்கங்கள் சமம்
    என்று சொன்னால் இதை நாம் மாற்றலாம்
  • 3:43 - 3:47
    ஆக, இது சாய்சதுரம் இல்லை
  • 3:47 - 3:50
    அடுத்து, செவ்வகம்
  • 3:50 - 3:54
    செவ்வகம் என்பது
    4 செங்கோணங்களைக் கொண்ட இணைகரம்
  • 3:54 - 3:58
    இது இணைகரம் என்று ஏற்கெனவே பார்த்தோம்
  • 3:58 - 4:01
    இதில் 4 செங்கோணங்களும் உள்ளன,
    1, 2, 3, 4
  • 4:01 - 4:02
    ஆக, இது ஒரு செவ்வகம்தான்
  • 4:02 - 4:04
    செவ்வகத்தைச் சிந்திக்க இன்னொரு முறை
  • 4:04 - 4:07
    எதிரெதிர்ப் பக்கங்கள் சமம், மற்றும்
  • 4:07 - 4:09
    நான்கு செங்கோணங்கள்
  • 4:09 - 4:11
    இது கண்டிப்பாகச் செங்கோணம்தான்
  • 4:11 - 4:12
    இது ஒரு சதுரமா?
  • 4:12 - 4:15
    இதைப் பலவிதமாகச் சிந்திக்கலாம்
  • 4:15 - 4:18
    சதுரம் என்பது,
    நான்கு செங்கோணங்களைக் கொண்ட சாய்சதுரம்
  • 4:18 - 4:24
    சதுரம் என்பது,
    நான்கு செங்கோணங்களைக் கொண்ட சாய்சதுரம்
  • 4:24 - 4:26
    சதுரத்தைப்பற்றிச் சிந்திக்க இது ஒரு வழி
  • 4:26 - 4:30
    அல்லது, நான்கு பக்கமும் ஒத்த செவ்வகம்
    என்று சொல்லலாம்
  • 4:30 - 4:35
    எப்படிப் பார்த்தாலும் சரி, 4 பக்கங்களும்
    ஒரேமாதிரி இருக்கவேண்டும்
  • 4:35 - 4:39
    இது சாய்சதுரம் அல்ல என்று
    ஏற்கெனவே பார்த்தோம்
  • 4:39 - 4:43
    நான்கு பக்கங்களும் சமமா என்று தெரியவில்லை
  • 4:43 - 4:47
    ஆனால் இதுவும் இதுவும் சமமா என தெரியவில்லை
  • 4:47 - 4:51
    ஆகவே, இது சதுரம் என்று சொல்ல இயலாது
  • 4:51 - 5:01
    இது சதுரமில்லை, சாய்சதுரமில்லை,
    நாம் எடுத்துக்கொண்ட வரையறைப்படி சரிவகம் இல்லை
  • 5:01 - 5:07
    இது ஒரு நாற்கரம், இது ஒரு இணைகரம்,
    இது ஒரு செவ்வகம்
Title:
Quadrilateral Properties
Description:

more » « less
Video Language:
English
Duration:
05:07

Tamil subtitles

Revisions