< Return to Video

ஹான்ஸ் ரோஸ்லிங்கின் 200 நாடுகள், 200 வருடங்கள், 4 நிமிடங்கள் - புள்ளிவிவரங்களாலான மகிழ்ச்சி - பிபிசி ப்போர்

  • 0:04 - 0:07
    காட்சிப்படுத்தல் எனது வேலையின் அடிப்படை.
  • 0:08 - 0:10
    நான் உலக சுகாதாரத்தை போதிக்கிறேன்.
  • 0:11 - 0:13
    தரவுகள் மட்டும் போதாது என்பதை நான் அறிவேன்.
  • 0:13 - 0:18
    மக்கள் விரும்பும் வண்ணமும், புரிந்துகொள்ளும்படியும், தரவுகளை நான் காட்டவேண்டும்.
  • 0:18 - 0:22
    எனவே, நான் ஒரு புது முறையை கையாளவிருக்கிறேன்.
  • 0:22 - 0:25
    தரவுகளுக்கு நிகழிடத்தில் அசைவூட்டம் தருகிறேன்,
  • 0:25 - 0:29
    என் குழு தரும் சில தொழில்நுட்ப உதவிகளுடன்.
  • 0:29 - 0:33
    முதல் அச்சு சுகாதாரத்தை பிரதிநிதிக்கிறது.
  • 0:33 - 0:39
    மனிதனின் ஆயுட்காலம் 25 முதல் 75 ஆண்டுகள் வரை.
  • 0:39 - 0:41
    கீழ் அச்சு பொருளியலைக் காட்டுகிறது.
  • 0:41 - 0:47
    தனிநபர் வருமானம்: 400, 4000 மற்றும் 40,000 டாலர்கள்.
  • 0:47 - 0:50
    எனவே, கீழே ஏழைகளும் நோயாளிகளும் இருக்கின்றனர்.
  • 0:50 - 0:52
    மேலே, பணக்காரர்களும், உடல்நலமுடையவர்களும்.
  • 0:53 - 0:59
    200 வருடங்களுக்கு முன்னர் இருந்த உலகை காட்டுகிறேன்.
  • 0:59 - 1:00
    1810-ல்.
  • 1:00 - 1:02
    நாடுகள்:
  • 1:02 - 1:08
    ஐரோப்பா பழுப்பு, ஆசியா சிவப்பு, மத்திய கிழக்கு பச்சை, ஆப்பிரிக்கா - சஹாராவின் தெற்கு நீலம்,
  • 1:08 - 1:10
    அமெரிக்கா மஞ்சள்.
  • 1:10 - 1:13
    நாடுகளை காட்டும் குமிழிகளின் அளவு அந்நாட்டின் இனத்தொகையை காட்டுகிறது.
  • 1:13 - 1:17
    1810-ல், கீழே மிகவும் நெருக்கமாக உள்ளது.
  • 1:17 - 1:19
    எல்லா நாடுகளும் நோயுற்றும், ஏழையாகவும் இருக்கின்றன.
  • 1:19 - 1:23
    ஆயுட்காலம் 40 வருடங்களுக்கும் குறைவாகவே உள்ளது.
  • 1:23 - 1:27
    பிரிட்டிஷ் கூட்டரசும் நெதர்லாந்தும் மட்டும் கொஞ்சம் நன்றாய் இருக்கின்றன,
  • 1:27 - 1:29
    ஆனாலும், அதிகம் சொல்லும் அளவில் இல்லை.
  • 1:29 - 1:30
    இன்றைய உலகு.
  • 1:32 - 1:37
    தொழிற்புரட்சி, ஐரோப்பிய மற்றும் சில நாடுகளை,
  • 1:37 - 1:39
    ஏனைய நாடுகளிலிருந்து நகர்த்துகிறது.
  • 1:39 - 1:41
    ஆனால், காலனியாதிக்கத்திற்கு உள்ளான ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகள்
  • 1:41 - 1:44
    இங்கேயே மாட்டிக் கொள்கின்றன.
  • 1:44 - 1:47
    மேற்கத்திய நாடுகள் மேன்மேலும் சுகாதாரமுடைய நாடுகளாக உருவெடுக்கின்றன.
  • 1:47 - 1:51
    இப்பொழுது,
  • 1:51 - 1:53
    முதல் உலகப்போர் மற்றும்
  • 1:53 - 1:58
    இஸ்பானிய இன்ஃபுளுவென்சா விளைவுகள். பேரழிவு.
  • 1:58 - 2:02
    1920-களையும் 1930-களையும் பார்ப்போம்.
  • 2:02 - 2:04
    பெரும் பொருளியல் வீழ்ச்சி ஏற்படினும்,
  • 2:04 - 2:06
    மேற்கத்திய நாடுகள்
  • 2:06 - 2:07
    பொருளியலையும், சுகாதாரத்தையும் நோக்கி நகர்கின்றன.
  • 2:07 - 2:10
    ஜப்பான் மற்றும் சில நாடுகள் மேற்கத்திய நாடுகளை தொடர முற்படுகின்றன.
  • 2:10 - 2:11
    இருப்பினும், பெரும்பாலான நாடுகள் கீழையே தங்கிவிடுகின்றன.
  • 2:11 - 2:15
    இரண்டாம் உலக போரின் துயரங்களுக்குப் பின்,
  • 2:15 - 2:19
    1948-ன் உலகை பார்ப்போம்.
  • 2:19 - 2:23
    1948 ஒரு நல்ல ஆண்டு: போர் முடிவுற்று இருக்கிறது,
  • 2:23 - 2:26
    ஸ்வீடன் குளிர்கால ஒலிம்பிக்ஸில் வெற்றிபெருகிறது,
  • 2:26 - 2:28
    நானும் பிறந்த ஆண்டு.
  • 2:28 - 2:31
    ஆனால், நாடுகளுக்கு இடையிலான வேறுபாடுகள்
  • 2:31 - 2:32
    முன்பைவிட அதிகமாக உள்ளன.
  • 2:32 - 2:37
    அமெரிக்கா முன்னிலையில் உள்ளது, ஜப்பான் அதனை தொடர்கிறது.
  • 2:37 - 2:39
    பிரேசில் பின்னால் இருக்கிறது,
  • 2:39 - 2:43
    ஈரானும் பெட்ரோலிய உற்பத்தியால் பொருளியல் ஈட்டுகிறது; ஆனால், குறிகிய ஆயுட்காலம் கொண்டுள்ளது.
  • 2:43 - 2:46
    ஆசிய பெருநாடுகள்:
  • 2:46 - 2:48
    சீனா, இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், மற்றும் இந்தோனேசியா,
  • 2:48 - 2:50
    இன்னும் ஏழையாகவும் நோயுற்றும் இருக்கின்றன.
  • 2:50 - 2:52
    ஆனால், என்ன நடக்க இருக்கின்றது என பாருங்கள்.
  • 2:52 - 2:54
    இதோ!
  • 2:54 - 2:57
    எனது ஆயுட்காலத்தில், காலனித்துவ நாடுகள் சுதந்திரம் அடைகின்றன.
  • 2:57 - 3:00
    அவற்றின் சுகாதாரம் அதிகரிக்கின்றது.
  • 3:00 - 3:01
    தொடரும் சுகாதார வளர்ச்சி,
  • 3:01 - 3:02
    தொடரும் சுகாதார வளர்ச்சி,
  • 3:02 - 3:06
    1970-ல், ஆசிய மற்றும் லத்தின் அமெரிக்க நாடுகள்
  • 3:06 - 3:09
    மேற்கத்திய நாடுகளின் நிலையை எட்டிப்பிடிக்க ஆரம்பிக்கின்றன.
  • 3:09 - 3:11
    அவை வளரும் பொருளாதாரங்களைக் கொண்டுள்ளன.
  • 3:11 - 3:12
    சில ஆப்பிரிக்க நாடுகளும் பின்தொடர்கின்றன.
  • 3:12 - 3:14
    சில ஆப்பிரிக்க நாடுகள் உள்நாட்டுப்போரில் அகப்பட்டுகொள்கின்றன.
  • 3:14 - 3:16
    மற்றவை எச்.ஐ.வி-யிடம்.
  • 3:16 - 3:18
    இன்றைய உலகை
  • 3:18 - 3:22
    நவீன புள்ளிவிவரங்களுடன் காண்போம்.
  • 3:23 - 3:25
    அதிகமானோர் நடுவில் வாழ்கின்றனர்.
  • 3:25 - 3:28
    அதே வேளையில், பெரிய வித்தியாசங்களும் உள்ளன.
  • 3:28 - 3:30
    நல்ல நிலையிலான நாடுகளுக்கும், மோசமான நிலையில் உள்ள நாடுகளுக்கும் இடையில்.
  • 3:30 - 3:34
    நாடுகளுக்குள் சமநிலை இல்லை.
  • 3:34 - 3:37
    இந்த குமிழிகள் நாட்டின் சராசரியை காட்டுகின்றன.
  • 3:37 - 3:38
    ஆனால், என்னால் இதனை பிரிக்க முடியும்.
  • 3:38 - 3:41
    சீனாவை எடுத்துகொள்வோம். மாநிலங்களாக பிரிக்க முடியும்.
  • 3:41 - 3:44
    இது ஷங்ஹாய்.
  • 3:44 - 3:48
    இதற்கும் இத்தாலிக்கும் சமமான பொருளியலும் சுகாதாரமும் இருக்கின்றன.
  • 3:48 - 3:51
    இது ஏழை உள்நாட்டு மாநிலமான குய்சொ,
  • 3:51 - 3:52
    இது பாகிஸ்தானைப் போன்றது.
  • 3:52 - 3:55
    மேலும் பிரிக்கையில்
  • 3:55 - 3:58
    நாட்டுபுரங்கள் ஆப்பிரிக்காவின் கானாவை போன்றன.
  • 4:01 - 4:03
    இத்தகைய பெரிய வேறுபாடுகளுக்கு இடையில்,
  • 4:05 - 4:07
    இருநூறு ஆண்டுகளுக்காண குறிப்பிடத்தக்க வளர்ச்சியினைக் கண்டோம்.
  • 4:07 - 4:09
    நீண்ட வரலாற்றுக்குரிய மேற்கத்திய-கிழக்கத்திய
  • 4:09 - 4:10
    நாடுகளுக்கிடையிலான இடைவெளி இப்பொழுது குன்றுகிறது.
  • 4:10 - 4:15
    நாம் புதிதாய் ஒருங்கிணையும் உலகை காண்கிறோம்.
  • 4:15 - 4:18
    நான் தெளிவான எதிர்காலத்தை காண்கிறேன்.
  • 4:18 - 4:20
    அது உதவி, வணிகம், பசுமை தொழில்நுட்பம் மற்றும் அமைதியால் ஆனது.
  • 4:20 - 4:23
    அனைவரும் சுகாதாரமும் பொருளியலும் கொண்ட
  • 4:24 - 4:26
    இந்த மூலையை அடைய முடியும்.
  • 4:28 - 4:31
    நீங்கள் கடந்த சில நிமிடங்களில் கண்டது
  • 4:31 - 4:34
    இருநூறு நாடுகளின்
  • 4:34 - 4:36
    இருநூறு ஆண்டுகளுக்கும் மேலான கதை.
  • 4:36 - 4:40
    120,000 எண்களை செயல்படுத்துவதன் மூலம் அமைந்தது.
  • 4:40 - 4:43
    நன்றாய் அமைந்தது தானே?
Title:
ஹான்ஸ் ரோஸ்லிங்கின் 200 நாடுகள், 200 வருடங்கள், 4 நிமிடங்கள் - புள்ளிவிவரங்களாலான மகிழ்ச்சி - பிபிசி ப்போர்
Video Language:
English
Duration:
04:48

Tamil subtitles

Revisions